பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறு மற்றும் குறுந்தொழில்கள் மானியம்

சிறு மற்றும் குறுந்தொழில்கள் மானியம் பற்றிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

சுயதொழில்

படித்துவிட்டு ஏதாவது ஒரு வேலைக்குச் சென்றுவிடவேண்டும் என்று இன்றைய இளைஞர்கள் துடிக்கிறார்கள். ஆனால், இளைஞர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசாங்கங்கள் பலவகையிலும் மானியம் தருகிறது. ஆனால், அதுகுறித்த தகவல்கள் இன்றைய இளைஞர்களுக்கு தெரியவே இல்லை. சொந்தமாகத் தொழில் தொடங்க நினைக்கிறவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் என்னென்ன மானியங்களை அளிக்கிறது, இந்த மானியங்கள் யாருக்கு கிடைக்கும், இதைப் பெற என்ன தகுதி வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லவே இந்தக் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (ஜிமிமிசி) உள்ளது.

மானியங்கள்

முதலீட்டுக்கான மானியம்

தகுதியுள்ள தொழில்கள்: லாபகரமாக செயல்படுத்தத்தக்க அனைத்து உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் மற்றும் அனைத்து வகையான குறுந்தொழில்களுக்கும் கிடைக்கும்.

வழங்கப்படும் மானியம்

கட்டடம் மற்றும் இயந்திரங்கள் வாங்க திட்ட மதிப்பில் 15%-30%.

கூடுதல் முதலீட்டு மானியம்

தகுதியான நபர்கள்

தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்று பாலினத்தவர்கள்.

மானியம்

முதலீட்டு மானியம் கூடுதலாக 2% அல்லது ரூ.2 லட்சம்.

தொழில் ஊக்க மானியம்

தகுதியான நபர்கள்

25 தொழிலாளர்களுடன் இயங்கும் தொழில் நிறுவனங்கள்.

மானியம்

முதல் மூன்று வருடங்களிலிருந்து ஐந்து வருடங்களுக்கு உற்பத்தியிலிருந்து 5% அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை.

தகுதியுள்ள தொழில்கள்

பின்தங்கிய பகுதிகள் மற்றும் விவசாயத் துறை சார்ந்த தொழில்கள்.

மானியம்

முதலீட்டு மானியம், கூடுதல் முதலீட்டு மானியம், தொழில் ஊக்க மானியம் என மூன்று வகைகளிலும் பெறலாம்.

புதிய வகை தொழில்களுக்கான மானியம்

தகுதியான தொழில்கள்

பின்தங்கிய பகுதிகளில் மாநில அரசு ஊக்குவிக்கும் தொழில்கள்.

வழங்கப்படும் மானியம்

திட்டமதிப்பிலிருந்து கட்டடம் மற்றும் இயந்திரங்கள் வாங்க 15%  அல்லது அதிகபட்சமாக ரூ.30 லட்சம்.

வட்டி மானியம்

தகுதியான நபர்கள்

மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மூலம் கடனுதவி பெற்ற தொழில் முனைவோர்.

வழங்கப்படும் மானியம்

தொழில் தொடங்கிய பிறகு வங்கிக் கடனுக்குச் செலுத்தும் வட்டியிலிருந்து 3% அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை. தொழில் தொடங்கிய முதல் ஐந்து வருடங்களுக்குள் அல்லது கடன் தொகை ரூ.100 கோடியாக இருக்க வேண்டும்.

அணுகவேண்டிய அலுவலகம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்,

692, அண்ணாசாலை,

நந்தனம், சென்னை - 600 035.

தமிழ்நாடு அரசு தொழில் வணிகத் துறை அளிக்கும் மானியங்கள்

புதியத் தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்

தகுதி

முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள்.

திட்ட மதிப்பு

ரூ.5 லட்சத்திலிருந்து 1 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி

பட்டப் படிப்பு/ பட்டயப் படிப்பு/ அங்கீகரிக்கபட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் கல்வி மற்றும் ஐ.டி.ஐ.

தகுதியுள்ள தொழில்கள்

லாபகரமாக செயல்படுத்தத்தக்க அனைத்து உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள்.

மானியம்

திட்ட மதிப்பில் 25 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை.

வேலையற்ற இளைஞர்களுக்கான  வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டம்

தகுதி

8-ம் வகுப்பு தேர்ச்சி

திட்ட மதிப்பு

வியாபாரம் சார்ந்த தொழில்கள் - ரூ.1 லட்சம்; சேவை தொழில்கள்: ரூ.3 லட்சம்

உற்பத்தி தொழில்கள்

ரூ.5 லட்சம்

தகுதியான நபர்கள்

பொதுப்பிரிவினர்

18 வயதுக்குள்ளும் 35 வயது மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

சிறப்புப் பிரிவினர்

பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்று பாலினத்தவர்கள் 45 வயது வரை இருக்கலாம்.

குடும்ப ஆண்டு வருமானம்

ஆண்டிற்கு ரூ.1,50,000 மிகாமல் இருக்க வேண்டும்.

வழங்கப்படும் மானியம்

திட்ட மதிப்பீட்டில் 15%.

அணுக வேண்டிய அலுவலகம்:

மண்டல இணை இயக்குநர்,

தொழில் வணிகத் துறை,

திரு.வி.க, தொழிற்பேட்டை, கிண்டி,

சென்னை - 600 032

தாட்கோ நிறுவனம் அளிக்கும் மானியங்கள்

மரபுசாரா தொழில்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள்

தகுதியான நபர்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்.

கல்வித் தகுதி

பெட்ரோல், டீசல், எரிவாயு விற்பனை நிலையங்கள் அமைக்க 12-ம் வகுப்பு தேர்ச்சி.

திட்ட மதிப்பு

ரூ.1.50 - ரூ.7.5 லட்சம் வரை

வழங்கப்படும் மானியம்

திட்ட மதிப்பில் 30% அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம்.

குடும்ப ஆண்டு வருமானம்

ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல், எரிவாயு விற்பனை நிலையங்கள் அமைக்க மற்றும் மருத்துவமனை அமைக்கும் திட்டங்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அணுக வேண்டிய அலுவலகம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை

அனைத்து மாவட்ட ஆட்சியரகம்.

மத்திய அரசு வழக்கும் மானியத் திட்டங்கள்

பாரதப் பிரதமர் வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம்: கிராமப்புறங்களில் சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தகுதியான நபர்கள்

பொதுப்பிரிவினர் 18 வயது முடிந்த நகர்ப்புறம் சார்ந்த தொழில்முனைவோர்கள்.

சிறப்புப் பிரிவினர்

பெண்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், எல்லைப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் தொழில் முனைவோர்கள்.

வழங்கப்படும் மானியம்

நகர்ப்புற பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பில் 15 சதவிகிதம், கிராமப்புற பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பில் 25 சதவிகிதம். நகர்ப்புற சிறப்புப் பிரிவினருக்கு திட்டமதிப்பில் 25 சதவிகிதம், கிராமப்புற சிறப்புப் பிரிவினருக்கு 35 சதவிகிதம்.

திட்ட மதிப்பு

உற்பத்தித் துறை சார்ந்த தொழில்கள் அதிகபட்சம் ரூ.25 லட்சம், சேவை மற்றும் வியாபாரத் துறைகளுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம்.

கல்வித் தகுதி

8-ம் வகுப்பு தேர்ச்சி.

சி.எல்.சி.எஸ்.எஸ். திட்டம்! (Credit Linked Capital Subsidy Scheme)

சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு இந்த மானியம் கிடைக்கிறது.

தகுதியான நபர்கள்

லாபகரமாக இயங்கும் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள்.

மானியம்

கடன் தொகையிலிருந்து 15% அல்லது ரூ.15 லட்சம் வரை. (இயந்திரம் வாங்க ரூ.1 கோடி வரை கடன் கிடைக்கும்.)

தொடர்பு அலுவலகம்

இயக்குநர், எம்.எஸ்.எம்.இ. மேம்பாட்டு நிறுவனம், 65, ஜி.எஸ்.டி, சாலை, கிண்டி, சென்னை- 600 032

ஆர்.டி.யூ.எஃப். (Restructured Technology Upgradation Fund)

ஜவுளி உற்பத்தித் துறைகளில் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவே இந்த மானியம். இது ஜவுளித் துறை அமைச்சகத்தின் வழி  வழங்கப்படுகிறது.

தகுதியான நபர்கள்

ஜவுளி உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர்கள்

வழங்கப்படும் மானியம்

தொழில் கடனுக்கான வட்டியிலிருந்து 4-5% வரை திரும்பப் பெறமுடியும்

முதல் ஏழு வருடங்களுக்கு இச்சலுகை பெற முடியும். கடனைத் திரும்பச் செலுத்துவதில் இரண்டு வருடங்கள் சலுகை.

தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியின் கீழ் மார்ஜின் மணி மானியம்

திட்டம் - 1

தகுதியான நபர்கள்

ஜவுளி உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர்கள்.

வழங்கப்படும் மானியம்

இதில் ரூ.45 லட்சத்திற்கு உட்பட்ட இயந்திரங்கள் வாங்கும்போது 15% மானியம்.

திட்டம் - 2

வழங்கப்படும் மானியம்: ரூ.60 லட்சம் அல்லது ஒரு கோடி வரை இயந்திரங்கள் வாங்கும்போது 20% மானியம்.

ஆயத்த ஆடை தொழில்

வழங்கப்படும் மானியம்

5% வட்டி திரும்பப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் முதலீட்டிலிருந்து 10% மானியம். (இயந்திரங்கள் வாங்கும்போது)

எம்.ஓ.எஃப்.பி.ஐ. (Ministry of Food Processing Industries)

மத்திய உணவுத் துறை அமைச்சகம் வழங்கும் திட்டங்கள்

தகுதியான தொழில்கள்

உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் தொழில்களுக்கு வழங்கப்படும்.

மானியம்

இயந்திரங்கள், கட்டடம் மற்றும் டெக்னிக்கல் சிவில் வேலைகளுக்கு ஆகும் செலவில் 25% அல்லது ரூ.50 லட்சம் வரை.

எந்த வகை தொழில்கள்

ரைஸ் மில், ஆயில் மில், மற்றும் மாவு மில்கள் அமைக்க, பால், பழம், மற்றும் காய்கறிகள் பதப்படுத்தும் தொழிலகங்கள் அமைக்க.

அணுகவேண்டிய அலுவலகம்:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்

692, அண்ணாசாலை, நந்தனம், சென்னை 600 035.

ஆதாரம் : தாட்கோ நிறுவனம்.

3.05405405405
முனியசாமி Apr 29, 2017 10:27 AM

நான் தமிழ் இலக்கிய த்தில் முதுகலை பட்டம் பெற்று ள்ளேன் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறேன் எனக்கு பெட்ரோல் டீசல் சில்லறை விற்பனை நிலையம் தொடங்க ஆலோசனை கூறுங்கள் நான் ஆதிதிராவிடர் வகுப்பினை சேர்ந்தவன் எனக்கு அரசு மானியம் கிடைக்குமா

வெ. அருஞ்சுனைச்செல்வன் Apr 24, 2017 07:44 PM

ஐயா நான் ஆடு மற்றும் மீன் வளர்க்க பழகினேன் இதற்கு மானியம் வழங்க யாரை அனுக வேண்டும்

appu balan Jan 15, 2017 04:22 PM

வணக்கம். நான் பி.எஸ்.சி முடித்துள்ளேன்.எனக்கு பரண் மேல் ஆடு வளர்ப்பு தொழில் தொடங்க வேண்டும். அதற்கான பயிற்சியை வேளாண் அறிவியல் நிலையம் மேற்கொண்டேன். மேலும் ஆதி திராவிட வகுப்பை சேர்ந்த எனக்கு தாட்கோ லோன் கிடைக்குமா?

தங்கராஜ் Jan 09, 2017 09:31 AM

ஒட்டல் தொடங்க லோன் கிடைக்குமா ஆதி திராவிடர் கடனுதவி

பழனிசாமி Dec 24, 2016 10:49 AM

அரசு கொடுத்தாலும் வங்கிகள் கொடுப்பதில்லை.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top