பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இடம்பெயர்தல்

இந்தியாவில் மக்கள் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம்பெயர்வது குறித்து இங்கு விவரித்துள்ளனர்.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம்பெயர்தல்

இந்திய நாட்டில் வறுமையில் வாடும் தொழிலாளர்கள் ஓரிடத்திலருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்வது அதிகரித்து வருகிறது. வறுமையிலிருக்கும் இம்மக்கள் பெரும்பாலும் ஒழுங்குமுறையற்ற பகுதிகளில் சாதாரண தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர். நோய்களுக்கும், போதுமான மருத்துவ வசதியின்மைக்கும் இம்மக்கள் அதிகமாக ஆளாகின்றனர்.

இந்திய நாட்டில் 2001இல் 14.4 மில்லியன் மக்கள், அதிகமான பொருளாதார ஆதாயத்திற்காக நகரத்திற்கோ அல்லது நகரம் சார்ந்த பகுதிகளுக்கோ இடம் பெயர்ந்துள்ளனர். இடம் பெயர்ந்துள்ளோரில் 25 லட்சம் பேர் பயிரிடுதல், பண்ணைத்தொழில், செங்கல் சூளைத்தொழில், கல்குவாரி, கட்டிடத்தொழில், மீன்பிடித்தல் (NCRL, 2001) போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்தோரில் பெரும் பகுதியினர், நகரங்களில் ஒழுங்குமுறையற்ற, கட்டுமானப் பணிபுரிபவர்களாகவும், போக்குவரத்துத் துறையில் பணிசெய்பவர்களாகவும், சாதாரணப் பணியாளர்களாகவும், தலைச்சுமை சுமப்பவர்களாகவும், ரிக்சா இழுப்பவர்களாகவும், பொருட்களைத் தலையில் சுமந்து சென்று விற்பவர்களாகவும் வேலை செய்கிறார்கள்.

வேலை தன்மையின் காரணமாக அடிக்கடி குடியிருப்பு மாறுவதால் நோய்தடுப்பு முறைகளின் பயன்களை இம்மக்கள் அடைய முடிவதில்லை. மேலும் நகரத்திலுள்ள முறையற்ற வேலை நிலை, அரசாங்கத்தால் தரப்படும் தேவையான குணபடுத்தக்கூடிய மருத்துவ வசதிகளை இம்மக்கள் அடைவதைத் தடுக்கிறது.

நலிவடைந்த இடம் பெயர்ந்தோரில் உள்நாட்டினுள்ளேயே இடம் பெயர்ந்தோர் (Internally Displaced People (IDPs)) குறிப்பிடத் தகுந்தவர்கள் இந்திய நாட்டில் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தோர் ஏறக்குறைய 6 லட்சம் பேர் இருக்கிறார்கள் (IDMC, 2006) மக்கள் சண்டை, மதச் சண்டை, அரசியல் காரணங்கள், முன்னேற்றத்திற்கான திட்டங்கள், இயற்கைச் சீற்றம் போன்றன உள்நாட்டிலேயே மக்கள் இடம்பெயர்தலுக்குக் காரணங்களாக அமைகின்றன.

மேலும் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தோருக்கு அரசாங்கத்தின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பலன்கள் முழுமையாகச் சென்றடைவதில்லை.

மூலம் :இந்திய நலிவடைந்த பிரிவினர் (by Chandrima Chatterjee an Gunjan Sheoran, CEHAT, mumbai)

3.05454545455
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top