பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மக்கள் நலத்துறைகள் / நலிவடைந்த பிரிவினர் / நலிவடைந்த பிரிவினரின் நலன் மற்றும் மேம்பாடு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நலிவடைந்த பிரிவினரின் நலன் மற்றும் மேம்பாடு

நலிவடைந்த பிரிவினரின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி சார்ந்த தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

மத்திய பட்ஜெட் (2017 – 2018)

2017 - 18 மத்திய பட்ஜெட்டில் சமூதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு நம்பிக்கைத் தரும் நிலைமை உள்ளது. பட்ஜெட்டின் ஒட்டுமொத்த அணுகுமுறை கிராமப்புற பகுதி, உள் கட்டமைப்பு வசதி மற்றும் ஏழ்மையைக் குறைப்பது ஆகியவற்றில் உள்ளது. பட்ஜெட்டின் அடிப்படைத் தத்துவம். “மாற்றியமை, சக்தியூட்டு, சுத்தமான இந்தியா” என்பதுதான். மாற்றியமை, சக்தியூட்டு, சுத்தமான இந்தியா என்ற இந்த மூன்று சொற்களும் சமுதாயத்தில் நலிந்த மக்களுக்கு மிகவும் சம்மந்தப்பட்ட சொற்களாகும். மக்களின் வாழ்வுத் தரத்தை மாற்றியமைக்கும் வண்ணம் ஆளுமைத் தரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று பட்ஜெட் விழைகிறது. நலிவுற்ற மக்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை பெருக்கிக் கொள்ளும் வண்ணம் அவர்களுக்கும், அவர்களைப் போன்ற பிற பிரிவினர்களுக்கும் சக்தி அளிக்க பட்ஜெட் முயல்கிறது.

ஷெட்யூல்டு வகுப்பினர், ஷெட்யூல்டு பழங்குடி வகுப்பினர், பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு கவனிப்பு தேவை. இப்படிப்பட்ட மக்களுக்கு சமூகப் பொருளாதார அதிகாரமளித்து, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பட்ஜெட் வலியுறுத்துகிறது. எல்லா அமைச்சகங்களிலும், துறைகளிலும் இப்படிப்பட்ட மக்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான பட்ஜெட் ஒதுக்கீடு

சில பெரிய கூடுதல் ஒதுக்கீடுகள் பின்வருமாறு:

 1. ஷெட்யூல்டு வகுப்பினருக்கான ஒதுக்கீடு 2016 – 17 பட்ஜெட் மதிப்பீட்டில் 38,833 கோடியாக இருந்தது. 2017 – 18 பட்ஜெட் மதிப்பீட்டில் 35 சதவிகிதம் உயர்ந்து ரூ.52,393 கோடியாக உள்ளது.
 2. ஷெட்யூல்டு வகுப்பினருக்கான ஒதுக்கீடு 2017 – 18ல் பட்ஜெட் மதிப்பீடாக இருந்த ரூ.24005 கோடியிலிருந்து 33 சதவிகிதம் அதிகரித்து ரூ.31920 கோடியாக ஆக உயர்ந்துள்ளது.
 3. பெண்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு 2016 – 17 பட்ஜெட் மதிப்பீட்டான ரூ. 90,770 கோடியிலிருந்து 2017 – 18 பட்ஜெட் மதிப்பீட்டில் 8.44 % உயர்ந்து ரூ.71,305 கோடியாக உள்ளது.
 4. சிறார் நலனுக்கான ஒதுக்கீடு 2016 – 17 பட்ஜெட் மதிப்பீடான 65,758 கோடியிலிருந்து 2017 – 18ல் 8.44 சதவிகிதம் உயர்ந்து 71,305 கோடியாக உள்ளது.
 5. சிறுபான்மை மக்கள் நலனுக்காக 2016 – 17ல் ஒதுக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டுத் தொகையான 3,827 கோடியிலிருந்து 8.76 சதவிகிதம் உயர்ந்து 2017 – 18 பட்ஜெட் மதிப்பீட்டில் 4,195 கோடியாக உள்ளது.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலன்களுக்கான ஒதுக்கீடுகளை 26 மத்திய அமைச்சகங்களும், துறைகளும் செய்துள்ளன. ஷெட்யூல்டு பழங்குடி மக்களுக்காக 32 மத்திய அமைச்சகங்களும், துறைகளும் ஒதுக்கீடுகளை செய்துள்ளன. மேல்மட்ட ஒதுக்கீடுகளில் பெரிய அளவு உயர்வுகள் பாணப்படுகின்றன. குறிப்பாக விவசாயம், குடிநீர் வழங்கல், வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி ஆகியவற்றிற்கு ஷெட்யூல்டு வகுப்பினருக்கும், ஷெட்யூல்டு பழங்குடி வகுப்பினருக்கும் ஒதுக்கப்பட்டவைகள் அட்டவனை 1 மற்றும் 2ல் தனியாகக் காட்டப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டம் ஆகியவற்றிற்று 2016 – 17 ஐக் காட்டிலும் 2017 – 18 இல் உயர்வு முறையே 61 சதவிகிதமாகவும் 41 சதவிதமாகவும் உள்ளது. குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு வட்டி மானியம் என்ற புதிய திட்டத்திற்கு 2017 – 18 ஆம் ஆண்டில் ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு ஒதுக்கீடு ரூ.2430 கோடியாகும். ஷெட்யூல்டு வகுப்பினருக்கு ஒதுக்கீட்டில் மிக அதிக உயர்வு பெறும் மற்ற திட்டங்களாக கிராமங்களில் சுத்தமான பாரதம் இயக்கம் (55 %) பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் (55%) பிரதம மந்திரி திறன் மேம்பாடு திட்டம் (51%) ஆகியவை உள்ளன.

அட்டவனை 1: பெரிய திட்டங்களில் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான (SC) – நலத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு

ரூ. கோடியில்

அமைச்சகங்கள் / துறைகள்

திட்டங்கள்

பட்ஜெட் ஒதுக்கீடு 2016 – 17

பட்ஜெட் ஒதுக்கீடு 2017 – 18

% உயர்வு

விவசாயம், கூட்டுறவு, விவசாயிகளின் நலன்

பிரதம மந்திரி பயிர்காப்பு திட்டம்

921.00

1487.67

61.20

விவசாயம், கூட்டுறவு விவசாயிகளின் நலன்

குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு வட்டி மானியம்

 

2430.00

புதிய திட்டம்

விவசாயம், கூட்டுறவு, விவசாயிகளின் நலன்

பிரதம மந்திரி நீர்ப்பாசனத் திட்டம் (PMKSY)

391.31

550.80

40.75

குடிநீர், வடிகால்

சுத்தமான பாரதம் கிராமப்புறம்

1980.00

3068.62

54.98

குடிநீர் வடிகால்

தேசிய கிராமப்புறக் குடிநீர்த் திட்டம்

1100.00

1331.00

21

சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்

தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம்

3931.02

4272.93

8.69

கிராமப்புற வளர்ச்சி

பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம் கிராமப்புறம் (PMAY)

5116.74

7652.72

49.56

திறன் மேம்பாடு

பிரதம மந்திரி திறன் மேம்பாடுத் திட்டம்

311.00

470.00

51.12

பள்ளிக் கல்வி மற்றும் படிப்பறிவு

நவோதயா பள்ளிக்குழு

380.00

418.27

10.07

இதைப்போலவே ஷெட்யூல்டு பழங்குடி வகுப்பினருக்கான நலத்திட்டங்களுக்குமான ஒதுக்கீடுகிளலும் உயர்வு காணப்படுகிறது. 2016 -17 ஐ விட 2017 -18 இல் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு 83 % உயர்வும், பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டத்திற்கு 45 % உயர்வும் பிரதம மந்திரி கிராமப்புற சுத்தம் திட்டத்திற்கு 55 % உயர்வும், பிரதமந்திரி கிராமப்புற வீட்டுவசதி திட்டத்திற்கு 39 % உயர்வும் பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 51 % உயர்வும் அளிக்கப்பட்டுள்ளன. 2017 – 18 இல் முதன் முதலாக துவக்கப்பட்டுள்ள குறுகிய கால விவசாக கடன் மானியத் தொகைக்கான திட்டத்திற்கு ஷெட்யூல்டு வகுப்பினருக்கு ரூ.1200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதை அட்டவணை 2 இல் காணலாம்.

அட்டவனை 2: பெரிய திட்டங்களில் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான (SC) – நலத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு

ரூ. கோடியில்

அமைச்சகங்கள் / துறைகள்

திட்டங்கள்

பட்ஜெட் ஒதுக்கீடு 2016 – 17

பட்ஜெட் ஒதுக்கீடு 2017 – 18

% உயர்வு

விவசாயம், கூட்டுறவு, விவசாயிகளின் நலன்

பிரதம மந்திரி பயிர்காப்பு திட்டம்

392.86

719.04

83.02

விவசாயம், கூட்டுறவு விவசாயிகளின் நலன்

குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு வட்டி மானியம்

 

1200.00

புதிய திட்டம்

விவசாயம், கூட்டுறவு, விவசாயிகளின் நலன்

பிரதம மந்திரி நீர்ப்பாசனத் திட்டம் (PMKSY)

187.20

270.00

45.29

குடிநீர், வடிகால்

சுத்தமான பாரதம் கிராமப்புறம்

900.00

1394.83

54.98

குடிநீர் வடிகால்

தேசிய கிராமப்புறக் குடிநீர்த் திட்டம்

500.00

605.00

21

சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்

தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம்

2125.22

2332.28

9.74

கிராமப்புற வளர்ச்சி

பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம் கிராமப்புறம் (PMAY)

3823.43

5318.28

39.09

திறன் மேம்பாடு

பிரதம மந்திரி திறன் மேம்பாடுத் திட்டம்

157.75

238.15

50.96

பள்ளிக் கல்வி மற்றும் படிப்பறிவு

நவோதயா பள்ளிக்குழு

203.00

223.81

10.25

ஷெட்யூல்டு வகுப்பினர், ஷெட்யூல்டு பழங்குடி மக்கள், பிற பின்தங்கிய வகுப்பினர் (OBC), சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கா குறிப்பிட்ட அமைச்சகங்களும், துறைகளும்கூட அதிக நிதியை ஒதுக்கியுள்ளன. இவ்வகையான மக்களுக்கு இவ்வகையான அமைச்சங்கள் / துறைகள் ஒதுக்கியுள்ள நிதி அட்டவணை 3ல் உள்ளது.

அட்டவனை 3 : சமூகநல அமைச்சகங்கள் துறைகள் ஆகியவற்றின் செலவு விளக்கம் 2017 – 18

ரூ. கோடியில்

அமைச்சகங்கள் / துறைகள்

பட்ஜெட் ஒதுக்கீடு 2016 – 17

பட்ஜெட் ஒதுக்கீடு 2017 – 18

% உயர்வு

சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை

6566.95

6908.00

5.20

பழங்குடி மக்கள் நல அமைச்சகம்

4827.00

5329.00

10.39

சிறுபான்மையினர் நல அமைச்சகம்

3827.00

4195.00

9.61

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் துறை

784.00

855.00

9.05

கல்வி துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு

ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் ஷெட்யூல்டு பழங்குடி மக்களின் பின்தங்கிய நிலைக்கு கல்வியின்மையே முக்கிய காரணமாகும். கல்வியை இடையிலேயே கைவிடுபவர்களின் விகிதம் ஷெட்யூல்டு வகுப்பினரிடையே தேசிய சராசரியைவிட அதிகமாகும். இம்மாதிரியான மாணவர்கள் அதிக அளவில் படிப்பை இடையிலேயே கைவிடுவதற்கான முக்கிய காரணம் அவர்களுடைய பெற்றோர் அவர்களின் கல்விச்செலவை ஏற்க முடியாத நிலைமை அல்லது அவர்களின் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்ல வேண்டியுள்ள நிலைமை. இதனால் இந்த பட்ஜெட்டில் சிறப்பு கவனிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நலிவுற்ற மக்களுக்கான கல்வி ஊக்கத் தொகையில் மிகுந்த ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. 2017 – 18 இல் மெட்ரிக் படிப்புக்கு மேற்பட்ட படிப்புகளுக்கு ஷெட்யூல்டு வகுப்பினருக்கான கல்வி உதவித்தொகை ரூ. 3348 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2016 – 17 ஒதுக்கப்பட்ட ரூ. 2791 கோடியைவிட 20 % அதிகம்.

வீட்டிலிருந்து பள்ளி நெடுந்தூரம் உள்ள நிலையில் நலிவுற்ற மக்களின் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் இடையிலேயே கல்வியை விட்டுவிடுகிறார்கள். 2017 – 18 இல் இதுவும் கவனிக்கப்பட்டுள்ளது. 2016 – 17 இல் ஷெட்யூல்டு வகுப்பு குழந்தைகளுக்குக் கட்டப்படும் பள்ளி ஹாஸ்டல்களுக்கான ஒதுக்கீடு ரூ.45 கோடியாக இருந்த நிலையில் 2017 – 18 இல் ரூ. 155 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது அல்லாமல் ஷெட்யூல்டு வகுப்பினரின் உயர்கல்விக்காக, குறிப்பாக தேசிய கல்வி உதவி திட்டத்திற்கு 2016 – 17 இல் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் 2017 – 18 இல் ரூ.230 கோடி பட்ஜெட் மதிப்பீடாக உயர்த்தப் பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் ஆய்வு உதவி நிதி என்ற திட்டத்தை உயர்கல்வி துறை புதிய திட்டமாக செயல்படுத்த உள்ளது. ஷெட்யூல்டு வகுப்பினரின் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு அவர்களை உயர் ஜாதி மக்களின் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் வண்ணம், இதற்கான ஒதுக்கீடும் 2017 – 18 பட்ஜெட்டில் கணிசமாக செய்யப்பட்டுள்ளது. சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1995 மற்றும் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் 1989 ஆகியவற்றின் செயல்பாட்டு முறைகளைப் பலப்படுத்துவதற்கு 2016 – 17 பட்ஜெட் மதிப்பீட்டில் இருந்த ரூ. 150 கோடி 2017 – 18 பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.300 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஷெட்யூல்டு பழங்குடி வகுப்பினருக்கான நிதி ஒதுக்கீடு

இதைப்போலவே ஷெட்யூல்டு பழங்குடி வகுப்பினருக்கான மேம்பாட்டிற்கான திட்டங்களுக்கான மெட்ரிக்குக்கு மேற்பட்ட கல்வி உதவித் திட்டத்திற்கு 2016 – 17 ல் ரூ. 1200 கோடியாக இருந்தது. 12.25 % உயர்ந்து 2017 – 18 பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.1347 கோடியாக உயர்ந்துள்ளது. ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2016 – 17 இல் இருந்த ரூ.50 கோடியை காட்டிலும் 2017 – 18ல் 140 % உயர்ந்து ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக கொள்கைகள் வகுப்பதற்கு ஏற்ப அடிப்படைத் தகவல் பெறப்படும் வண்ணம் பழங்குடி மக்கள்சார் ஆய்வுக் கழகங்களை அமைக்க அரசின் அக்கறையை இந்த பட்ஜெட்டில் காணலாம். இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2016-17 இல் ரூ.21 கோடியாக இருந்தது கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உயர்ந்து 2017 – 18 பட்ஜெட்டில் ரூ.80 கோடியாக உள்ளது.

சிறுபான்மையினருக்கான நிதி ஒதுக்கீடு

சிறுபான்மையினருக்கு அவர்களின் கல்விக்காகவும் மேம்பாட்டிற்காகவும் 2017 – 18 பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலத்துறைக்கு 2016 – 1 இல் ஒதுக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீடான ரூ.3827 கோடியைவிட 9.6 சதவிகிதம் உயர்ந்தது 2017 – 18 இல் ரூ. 4195 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்களுக்கான ஒட்டு மொத்த ஒதுக்கீடு 2016 – 17 இல் ரூ. 1949 கோடியாக இருந்தது. 2017 – 18 இல் ரூ.105 கோடி உயர்ந்து ரூ.2054 கோடியாக உள்ளது. இது போலவே திறன் மற்றும் வாழ்க்கைத் தர மேம்பாடு திட்டங்களுக்கான ஒதுக்கீடு 2016 – 17 இல் இருந்த ரூ. 542 கோடி, 17 சதவிகிதம் உயர்ந்து 2017 – 18 இல் ரூ.635 கோடியாக உள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி ஒதுக்கீடு

இந்த அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதன் திட்டததிற்கு தனி கவனம் செலுத்தியுள்ளது. இந்தத் துறைக்கான ஒதுக்கீடு 10 சதவிகிதம் உயர்ந்து 2016 – 1 இல் இருந்த ரூ.784 கோடியைவிட 2017 – 1 இல் ரூ.855 கோடியாக உயர்ந்துள்ளது.

வீட்டு வசதி மற்றும் சமையல் எரிவாயுக்கான நிதி ஒதுக்கீடு

நாட்டிலுள்ள அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது அரசின் கொள்கையாகும். இந்தத் திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களுக்கான பிரதம மந்திரி வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் வேலைகள் ஏற்கனவே நடைபெற்று கொண்டு வருகின்றன. மேற்கூறப்பட்ட அட்டவணை 1, 2 இல் விளக்கியுள்ளது போல இந்த திட்டத்தின் கீழ் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான ஒதுக்கீடு 50 சதவிகிதமாகவும் ஷெட்யூல்டு பழங்குடி மக்களுக்கு ஒதுக்கீடு 39 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் கொடுக்கப்படுவது அரசின் மிக முக்கியமான வெற்றிகரமான திட்டமாகும். இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த பிரதம மந்திரி உஜ்வலா திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.20 கோடி உயர்ந்து. 2016 – 17 இல் இருந்த ரூ. 500 கோடிக்கு பதிலாக 2017 – 18 இல் ரூ.570 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 5 கோடி மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் கொடுப்பது அரசின் இலக்காகும்.

திறன் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு

ஷெட்யூல்டு வகுப்பினர், ஷெட்யூல்டு பழங்குடி மக்கள் மற்றும் இதர சமூக வகுப்பு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவு வாய்ப்பினை வழங்குவது இந்த பட்ஜெட்டின் ஒரு நோக்கமாகும். வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் பின்வருமாறு.

 • நிமிர்ந்து நில் இந்தியா என்ற திட்டத்தின்கீழ் ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் ஷெட்யூல்டு பழங்குடி தொழில் முனைவோருக்கான திறமைகளை வழங்குவது.
 • ஐடிஐகளில் தரமான மற்றும் சந்தைக்கு தேவையான தொழில் பயிற்சிகளை வழங்கவும், தொழிற்சாலைகளில் பயிற்சித் தொழிலாளர்களின் திட்டங்களை மேம்படுத்தவும், அடுத்த கட்டத் தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தவும் 2017 -18 பட்ஜெட்டில் ரூ.2200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • மூன்றறை கோடி இளைஞர்களுக்கு வாழ்க்கைத் தரம் உயர திறன் மற்றும் அறிவு வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்த 2017 – 18 இல் மூலத்தொகையாக ரூ.4000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • பால்வள மேம்பாட்டிற்கான உள்கட்டமைப்பு வசதிகளை தோற்றுவிக்க பால்பொருட்கள் தயாரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு நிதியத்திற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான மொத்தத் தொகையாக நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.8000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் இந்த திட்டம் ரூ.2000 கோடி நிதியத்தில் செயல்படும்.

நலிவடைந்த மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கியமான திட்டங்கள்

 • 2017 – 18 ல் ஒரு மாதிரித் திட்டமாக 18 மாவட்டங்களில் மூத்த குடிமக்களின் உடல்நலக் குறிப்புகள் கொண்ட ஆதார் சார்ந்த சிறப்பு அட்டைகள் வழங்குவது.
 • அந்தயோத்யா இயக்கத்தை மேற்கொண்டு 2019 க்குள் ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து மீட்பது மற்றும் 50,000 கிராமப் பஞ்சாயத்துக்களை ஏழ்மையிலிருந்து மீட்பது என்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும். மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த ஆண்டு நிறைவைக் குறிக்கும் வண்ணம் செயல்படும் இந்த திட்டத்தில் நலிவுற்ற ஒவ்வொரு குடும்பத்திற்கான வாழ்வாதாரங்கள் வலுப்படுத்தப்படும்.
 • பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின்கீழ் தலித் மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும், பின் தங்கிய மக்களுக்கும், சிறுபான்மையினருக்கு மற்றும் பெண்களுக்கும் சிறு தொழில் முனைவுகளை மேற்கொள்ள கடன் வசதி அளிக்க 2015 – 16 இல் இருந்த தொகையை இரட்டிப்பாக்கி 2017 – 18 இல் 2.44 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • முடிவாக 2017 – 18 யூனியன் பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவங்கள் கல்வி, மலிவான வீடு, திறன் மேம்பாடு, நிதி உதவி ஆகியவைகள் சார்ந்தவையாகும். பட்ஜெட் ஒதுக்கீடு என்பது அரசின் கொள்கைகளை எடுத்துக் காட்டுவதாகும். இந்தத் திட்டங்கிளனால் ஏற்படும் விளைவுகளைத் தொடர்ந்து கண்காணிக்க அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டிருப்பதால் நலிந்த மக்களுக்கு மிகப் பெரிய அளவிலான மேம்பாடும், வாழ்கைத்தர உயர்வும் கிடைக்கும்.

ஆசிரியர் : ஶ்ரீகரா நாயக்

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.03846153846
இரா.ஜோசப் Jun 13, 2017 04:11 PM

பெண்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு 2016 – 17 பட்ஜெட் மதிப்பீட்டான ரூ. 90,770 கோடியிலிருந்து 2017 – 18 பட்ஜெட் மதிப்பீட்டில் 8.44 % உயர்ந்து ரூ.71,305 கோடியாக உள்ளது.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top