பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

‘ஜன்தன்’-ல் இருந்து ஜன் சுரக்ஷாவிற்கு

ஜன்தன் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் நன்மைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

மிகப் பெரிய எண்ணிக்கையில் வங்கிக் கணக்குகள் தொடங்குதல் மற்றும் மிகப்பெரிய ரொக்கம் கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்துதல் போன்ற உலக சாதனைகளை நிகழ்த்தி வருகிறது இந்தியா.

நோக்கம்

சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் பெரும்பாலான மக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்காதிருந்தது. அதாவது அவர்களுக்கு சேமிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை; நிறுவனக் கடன்கள் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் இல்லை. இந்த அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ஜன்தன் திட்டத்தை 2014 ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி தொடங்கினார்.

திட்டத்தின் வளர்ச்சி

தொடங்கிய சில மாதங்களிலேயே இது லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் மாற்றி அமைத்துவிட்டது. இதுவரை 28.76 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 64,163.27 கோடி ரூபாய் அளவுக்கு டெபாசிட்டுகள் பெறப்பட்டுள்ளன. சாதனை அளவாக 1.26 லட்சம் வங்கி நண்பர்கள் (வங்கி எழுத்தாளர்கள்) நியமிக்கப்பட்டனர். இத்திட்டத்தின் வளர்ச்சி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.

இந்த மாபெரும் பணி, மக்கள் இயக்கம், அடிப்படையில் உதாரணம் காட்டக்கூடிய அளவிலான அரசு, பொதுமக்களின் மாபெரும் பங்களிப்பு மற்றும் பங்கேற்பு மனப்பான்மையுடன் நடைபெற்றுள்ளது.

நன்மைகள்

  • வங்கிக் கணக்குகள் பல லட்சக்கணக்கான மக்களுக்கு வங்கிச் சேவை கிடைக்கச் செய்துள்ளதுடன், ஊழலைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
  • தற்போது மானியங்கள் நேரடியாக உரியவரின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகின்றன. இதனால் இடையில் இருப்போர் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் இழப்பு நின்றுபோனது. தேர்ந்தெடுத்த நடவடிக்கைக்கும் வழி பிறந்திருக்கிறது.
  • பஹல் (PAHAL) திட்டத்தின்படி சமையல் எரிவாயு மானியம் நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி 10 கோடிக்கும் மேற்பட்டோர் நேரடியாக ரொக்க மானியம் பெறுகின்றனர். இதனால் சுமார் 4000 கோடி ரூபாய் சேமிப்பில் சேருகிறது.
  • வங்கி வசதிகள் அளிக்கப்பட்ட பின்னர் அரசு காப்பீடு மற்றும் ஓய்வூதியம் அளிக்கவும் எளிமையாக்கப்பட்டுள்ளது.
  • பிரதம மந்திரி சுரக்ஷா பீமா திட்டம் கொண்டுவரப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 12 வீதம் செலவில் ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு வசதி கொண்டுவரப்பட்டது.
  • பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டத்தின்படி ஆண்டு ஒன்றுக்கு ரூ.330 பிரீமியத் தொகையில் ஆயுள் காப்பீடு வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அடல் ஓய்வூதியத் திட்டத்தின்படி ஆண்டுக்கு அளிக்கப்படும் தொகையின் அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இதைத்தவிர செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் அவர்களுக்கான சேமிப்புக்காகவும் கொண்டுவரப்பட்டது.

ஆதாரம் : http://www.pmindia.gov.in/ta/

2.86363636364
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top