பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

ஆம் ஆத்மி பீமா யோஜனா

ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

 • சமூகப் பாதுகாப்புத் திட்டங்களான ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY), ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) இரண்டையும் ஓன்றிணைக்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
 • ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் ஆம் ஆத்மி பீமா யோஜனா என்ற பெயரில் 2013 ஜனவரி முதல் தேதியிலிருந்து செயல்பட்டு வருகிறது

பயன்பெறுவதற்கான தகுதிகள்

 • 18 வயது நிரம்பியவராகவும், 59 வயதுக்கு மேற்பட்டாமலும் இருக்க வேண்டும்.
 • பொதுவாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அல்லது, சில குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள – நிலமற்ற குடும்பங்களின் தலைவர் அல்லது சம்பாதிக்கின்ற ஒரு நபர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

ஒப்புதல் அளிக்கும் முகமைகள்

இந்த திட்டத்தை நிர்வகிப்பதற்கென அறிவிக்கப்படும் மத்திய – மாநில – யூனியன் பிரதேச அரசுத்துறைகள் அல்லது பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் அல்லது நிறுவன பூர்வ ஏற்பாடுகள் ஒப்புதல் அளிக்கும் முகமைகளாகும். கிராமப்புற நிலமற்ற ஏழைகள் என்ற விஷயத்தை பொறுத்த மட்டில் அதனை நிர்வகிப்பதற்கான அமைப்பு மாநில அரசு – யூனியன் பிரதேச அரசைக் குறிக்கும்.

வயதுச்சான்று

கீழக்கண்டவை வயதுக்கான சான்றுகளாக ஏற்கப்படும்.

 1. குடும்ப அட்டை
 2. பிறப்புப் பதிவேட்டுச் சான்று
 3. பள்ளிச் சான்றிதழ்கள்
 4. வாக்காளப் அடையாள அட்டை
 5. அரச்சுத்துறை – அந்தஸ்தான தனியார் நிறுவனத்தின் அடையாள அட்டை
 6. ஆதார் அட்டை

பிரிமியம்

இத்திட்டத்தில் ரூ. 30 ஆயிரம் காப்பீடு பெற, ஆண்டொன்றுக்கு ரூ. 20 பிரிமியம் செலுத்த வேண்டும். பிரிமியத்தில் பாதித்தொகை சமூகப்பாதுகாப்பு நிதியத்தில் இருந்து வழங்கப்படும். கிராமப்புற நிலமற்ற ஏழைகள் எனில் எஞ்சிய பாதியை மாநில அரசு – யூனியன் பிரதேச அரசுகள் செலுத்தும் குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களைப் பொறுத்த மட்டில் எஞ்சிய பாதி பிரிமியத்தை ஓப்புதல் அளிக்கும் முகமை அல்லது மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு செலுத்திவிடும்.

இயற்கை மரணம்

ஆம் ஆத்மி யோஜனாவில் உறுப்பினராக உள்ளவருக்கு இயற்கையாக மரணம் ஏற்பட்டால் அவருடைய வாரிசுதாரருக்கு ரூ. 30,000 ஆயிரம் வழங்கப்படும்.

விபத்தினால் மரணம்

விபத்தினால் மரணம் ஏற்பட்டாலும், உடல் ஊனம் ஏற்பட்டாலும் கீழ்க்கண்டவாறு பயன்கள் கிடைக்கும்.

விபத்தினால் மரணம் ஏற்பட்டால்

ரூ. 75,000

விபத்தினால் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் (இரண்டு கைகள், அல்லது இரண்டு கால்கள் அல்லது இரண்டு கண்கள் இழந்தாலும்)

ரூ. 75,000

விபத்தினால் ஓரளவுக்கு ஊனம் ஏற்பட்டால் (ஒரு கண் அல்லது ஒரு கை அல்லது ஒருகால் இழந்தால்

ரூ. 37,500

உதவித்தொகையின் பயன்கள்

இதைத்தவிர, ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டப்பயனாளியின் இரண்டு குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும் பெறலாம். ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தால் மாதம் ரூ. 100 என்று கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டு ஜீலை முதல் தேதி அன்றும், ஜனவரி முதல் தேதியன்றும் உதவித்தொகை வழங்கப்படும்.

பலன்களை பெறும் வழிமுறை

ஆம் ஆத்மி பீமா யோஜனாவின் படி மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டவருக்கான பணப் பலன்கள் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் (LIC) வழங்கப்படும். அவை பயனாளி அல்லது வாரிசுதாரரின் வங்கிக் கணக்கில் நேடரியடையாக வரவு வைக்கப்படும்.

மரணம் ஏற்பட்டால் கிடைக்கும் பலனைப்பெற, இறந்தவர் ஏற்கனவே நியமித்துள்ள வாரிசுதாரர் இறப்புச் சான்றிதழோடு, ஒப்புதல் அளிக்கும் முகமையின் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த அலுவலர் கோரிக்கை மனுவைச் சரிபார்த்து இறந்தவர் வறுமை கீழ் வாழ்ந்த குடும்பந்தலைவர் அல்லது குறிப்பிட்ட தொழிலைச் செய்து வந்தவர் என்று சான்றளித்துச் சமர்ப்பிப்பார்.

ஒப்புதல் அளிக்கும் முகமைகள் விண்ணப்பத்தோடு கீழ்கண்டவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்

 • முழுமையாக அனைத்து விபரங்களும் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம்
 • அசல் இறப்புச் சான்று மற்றும் சான்றளிக்கப்பட்ட ஒரு நகல் சான்று ஆகியவற்றை ஒப்புதல் அளிக்கும் முகமை சமர்ப்பிக்க வேண்டும்.

விபத்தினால் மரணம் ஏற்பட்டால் இறப்புச் சான்றிதழோடு சேர்த்து கீழ்கண்ட ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்

 • முதல் தகவல் அறிக்கையின் நகல்
 • பிணக்கூறு ஆய்வறிக்கை (போஸ்மாடம் சான்று)
 • காவல் துறை விசாரணை அறிக்கை
 • காவல் துறையின் முடிவு – இறுதி அறிக்கை

ஆகியவற்றையும் சேர்த்து அளிக்க வேண்டும்.

நிரந்தரமான முழு ஊனம் - பயன்கள்

 • அரசு மருத்துவர் (சிவில் சர்ஜன்) அல்லது முடநீக்கியல் மருத்துவரிடம் இருந்து, தனக்கு விபத்தால் ஏற்பட்டுள்ள உறுப்பு இழப்பு களைக்குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள முழுமையான ஊனத்தின் அளவைக் குறித்தும் சான்றிதழ் பெற்று, விபத்து குறித்த ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
 • ஆம் ஆத்மி யோஜனாவில் சேரும் ஒவ்வொருவரும், தன்னுடைய இறப்புக்கு பிறகு பணப்பலன்களைப் பெறுவதற்கான ஒரு வாரிசு தாரரை நியமிக்க வேண்டும். இந்தக்காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பித்தின் ஒரு பகுதியாகவே வாரிசுதாரர் நியமனப்படிவமும் இருக்கும். அதனைச் சரியாகப் பூர்த்தி செய்து ஆரம்பத்திலேயே அளித்து விட்டால் பின்னர் பிரச்சினைகள் வராது. வாரிசு நியமனப் படிவங்கள் பஞ்சாயத்து அல்லது ஒப்புதல் அளிக்கும் முகமை அலுவலகத்தில் பராமரிக்கப்படும். திட்டத்தின் பயனாளி எவரேனும் இறந்துவிடும் பட்சத்தில், பலன்கோரும் விண்ணப்பத்துடன் வாரிசு நியமனப்படிவமும் சேர்த்து, ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு அனுப்பப்படும்.

கல்வி உதவித்தொகை பெறும் வழிமுறை

 1. கல்வி உதவித்தொகை பெறத் தகுதியுள்ள மாணவரின் பெற்றோர். ஒப்புதல் அளிக்கும் முகமையிடம் ஆறுமாதங்களுக்கு ஒரு முறை விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். முகமையின், மாணவர் குறித்த விபரங்களைச் சரிபார்பர்கள்.
 2. சரிபார்த்த பின்னர், மாணவரின் பெயர், பள்ளியின் பெயர், படிக்கும் வகுப்பு, பயனாளியின் (பெற்றோர்) பெயர், பாலிஸி எண், உறுப்பினர் எண், பணத்தை நேரிடையாக செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை ஆயுள் காப்பீட்டுக்கழகத்திடம் அளிக்கும்.
 3. ஆயுள் காப்பீட்டுக் கழகம், ஜீலை முதல் தேதி மற்றும் ஜனவரி முதல் தேதி ஆகிய நாள்களில், கல்வி உதவித்தொகையை நேரடியாக சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்கில் செலுத்தி விடும்.

ஆம் ஆத்மி பீமா யோஜனாவின் கீழ் பயன்பெற இனம்காணப்பட்ட வேலைகள்- தொழில்கள்

 1. பீடித் தொழிலாளர்கள்
 2. செங்கல் சூளைத் தொழிலாளர்கள்
 3. தச்சு வேலை செய்பவர்கள்
 4. செருப்பு – காலணி தைத்தல்
 5. மீன் பிடித்தல்
 6. ஹமால் (சுமைதூக்குதல்)
 7. கைவினைக் கலைஞர்கள்
 8. கைத்தறி நெசவாளர்கள்
 9. கைத்தறி காகித் தொழிலாளர்கள்
 10. பெண் தையற்காரர்கள்
 11. தோல் மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள்
 12. சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த அப்பளம் – வடாம் தயாரிப்பவர்பகள்
 13. சுய தொழில் புரியும் உடல் ஊனமுற்றோர்
 14. பால் உற்பத்தியாளர்கள்
 15. ரிக்‌ஷா – ஆட்டோ ஓட்டுநர்கள்
 16. துப்பரவுத் தொழிலாளர்கள்
 17. உப்பளத் தொழிலாளர்கள்
 18. டெண்டு இலை சேகரிப்பவர்கள்
 19. நகர்ப்புறத்து ஏழைகள் (சிலபிரிவு)
 20. காடுகளில் வேலைசெய்வோர்
 21. பட்டுப்புழு வளர்ப்போர்
 22. கள் இறக்குபவர்கள்
 23. விசைத்தறி தொழிலாளர்கள்
 24. மலைப்பகுதி வாழ் பெண்கள்
 25. வெல்லம் – கண்டசாரி தயாரிப்பவர்கள்
 26. நெசவுத்தொழில்
 27. மரச்சாமான் தயாரித்தல்
 28. காகிதம் பொருள் தயாரித்தல்
 29. தோல் பொருள் தயாரித்தல்
 30. அச்சுத் தொழில்
 31. ரப்பர் & நிலக்கரி பொருள்கள்
 32. மெழுகுவர்த்தி போன்ற ரசாயணத் தயாரிப்புகள்
 33. மண்பொம்மை மற்றும் மண்பாண்டம் போன்ற தயாரிப்புகள்
 34. விவசாயிகள்
 35. போக்குவரத்துத் தொழிலாளர்கள்
 36. கிராமப்புறத்து ஏழை மக்கள்
 37. கட்டுமானத் தொழிலாளர்கள்
 38. பட்டாசுத் தொழிலாளர்கள்
 39. தேங்காய் மற்றும் தென்னை நார் தொழிலாளர்கள்
 40. அங்கன் வாடி ஆசிரியைகள்
 41. தலையாரி (கோட்வால்)
 42. தோட்டத் தொழிலாளர்கள்
 43. சுய உதவிக்குழுவைச் சார்ந்த பெண்கள்
 44. ஆடு வளர்ப்போர்
 45. வெளிநாடுகளில் வேலைசெய்யும் இந்தியத் தொழிலாளர்கள்
 46. கிராமப்புறத்து நிலமற்ற மக்கள்
 47. ராஷ்ட்ரீய ஸ்வாஸ்த பீமா யோஜனாவில் பயன்பெறும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள்
Filed under:
3.07407407407
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top