பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

எழுக இந்தியா திட்டம்

எழுக இந்தியா திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோரைத் தொழில் தொடங்க ஊக்குவித்து ஆதவரளிப்பதுதான் எழுக இந்தியா திட்டத்தின் நோக்கமாகும். மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவைகள் துறையினால் இத்திட்டம் ஒருங்கிணைப்படுகிறது.

ஒவ்வொரு வங்கிக் கிளையில் இருந்தும் குறைந்த பட்சம் ஒரு ஆதிதிராவிடர் அல்லது பழங்குடி இனத்தவர் பெண்ணுக்கு பத்த லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி வரை கடன் வழங்கி அவர்கள் புதிதாக ஒரு தொழிலைத் தொடங்க எழுக இந்தியா திட்டம் உதவுகிறது. புதிய தொழில் என்பது உற்பத்தி சார்ந்தோ, சேவைகள் துறையாகவோ, வணிமாகவே இருக்கலாம். தனிநபர் அல்லது கூட்டு - நிறுவனத் தொழில் முனைவோராக இருந்தால், அத்தகையை நிறுவனத்தில் குறைந்தது 51% உரிமை ஆதிதிராவிடர் – பழங்குடியினர் பெண்களிடம் இருக்க வேண்டும்.

தகுதிகள்

 • 18 வயதுக்கு மேற்பட்ட ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / பெண்கள்
 • புதிய தொழில் தொடங்கப்படவேண்டும். புதிய தொழில் என்பது கடன் பெறுவோர் புதிதாகத் தொடங்கும் உற்பத்தி / சேவை / வணிகம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.
 • கடன்பெறுவோர், ஏற்கனவே எந்த வங்கியிலாவது அல்லது நிதிநிறுவனத்திலாவது கடன்பெற்று திரும்பச் செலுத்தத் தவறியவராக இருக்க கூடாது.

கடன் விபரங்கள்

 • நீண்ட காலக்கடன் மற்றும் செயல்முறை மூலதனக்கடன் என்று மொத்தமாக ரூ. 10 லட்சம் முதல் ரூ. 100 லட்சம் வரை பெறலாம்.
 • புதிய தொழிலுக்கான திட்டமதிப்பீட்டில் 75 சதவீதம் கடன் பெறலாம். ஆனால் கடன்பெறுபவரின் சொந்தப் பங்களிப்பு மற்றும் பிற திட்டங்கள் ஆதரவு திட்ட மதிப்பில் 25 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும்போது, கடனுகக்கான உச்சவரம்பு 75 சதவீதம் என்பது தளர்த்தப்படும்.
 • வங்கிகள் இந்தக் குறிப்பிட்டபிரிவில் விதிக்கும் குறைந்த பட்ச வட்டியே இந்தக்கடனுக்கும் விதிக்கப்படும். அதாவது, அடிப்படை கடன் விகிதம் + 3% + நீண்ட காலக்கடனுக்கு உரிய பிரிமியம் எனற கணக்கில் வட்டி நிர்ணயிக்கப்படும்.
 • முதல்நிலை உத்தரவாதத்தோடு, கடன் பெற்று வாங்கப்படும் பொருள்கள் / சாதனங்கள் / சொத்துக்கள் மீதும் பிணைய உத்தரவாதம் தரவேண்டும் அல்லது வங்கிகள் விரும்பினால். எழுக இந்தியா திட்டக்கடன்களுக்கான உத்தரவாத நிதியத்தில் இருந்தும் உத்தரவாதம் பெற்றுக் கொள்ளலாம்.
 • இத்திட்டக் கடன்களை ஏழு ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். கடனைச் திருப்பிச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். சலுகை காலம் அதிகபட்சம் 18 மாதங்கள்
 • நடைமுறை : மூலதனச் செலவுகளுக்காக ரூ. 10 லட்சம் வரை அதிகப்பற்று முறையில் கடனாக வழங்கப்படும். இதற்கென ரூபே கடன் அட்டை வழங்கப்படும். பத்துலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மூலக்கடன் ரொக்க கடன் வரம்பு முறைப்படி தரப்படும்.
 • விளிம்புத்தொகையாக 25 % செலுத்த வேண்டும். இதனை மத்திய – மாநில அரசுகளின் மற்ற திட்டங்களின் மூலமும் செலுத்தலாம். அந்தத்திட்டங்கள், அனுமதிக்கப்படும் மானியத்தை விளிம்புத்தொகையையும் கணக்கிட எடுத்துக்கொள்ளப்படும். எவ்வாறு இருந்தாலும் கடன்பெறுகிறவர், திட்டமதிப்பீட்டில் பத்து சதவீதம் தனது சொந்த பணத்தை, போட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

பட்டியலிட்ப்பட்ட அனைத்து வணிக வங்கிக்கிளைகள் மூலமாக இந்தத் திட்டம் செயல்படுவதால்,

 • நேரடியாக வங்கிக்கிளையை அணுகுதல்
 • எழுக இந்தியா இணையதளம் (www.standupmitra.in) மூலம் அணுகுதல்
 • மாவட்ட முன்னோடி வங்கி மூலம் அணுகுதல்

என ஏதேனும் ஒரு வகையில் அணுகலாம்.

எழுக இந்தியா – கடன் திட்ட விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

 1. அடையாளச் சான்று : வாக்காளர் அட்டை / பாஸ்போர்ட் / ஓட்டுநர் உரிமம் / வருமானவரி நிரந்தரக் கணக்கு எண். (PAN) அட்டை/ நிறுவனம் என்றால், பங்குதாரர் இயக்குநர் போன்றவர்களின் கையொப்ப அடையாளத்தை உறுதி செய்யும் வங்கியின் சான்று
 2. வசிப்பிடச்சான்று : சமீபத்திய தொலைபேசி கட்டண ரசீது / மின்கட்டண ரசீது / சொத்துவரி / பாஸ்போர்ட் / நிறுவனம் எனில் வாக்காளர் அடையாள அட்டை (உரிமையாளர்கள்) / பங்குதாரர்கள் / இயக்குநர் உடையது)
 3. தொழில் நிறுவனம் அமைந்துள்ள முகவரிச் சான்று
 4. நிறுவனம் எனில், பங்குதாரர் ஒப்பந்த பத்திரம், நிறுவனத்தின் நோக்கம் பற்றிய ஷரத்துகள் கொண்ட ஆவணம்.
 5. நிறுவனத்தை ஏற்படுத்தியவர்கள் மற்றும் வங்கிக் கடனுக்கு உத்தரவாதம் அளிப்பவர்களின் சொத்துக்கள் மற்றும் கடன் விபரங்கள், அவர்களுடைய சமீபத்திய வருமான வரி ரிடர்ன்கள்.
 6. தொழில் நடத்தும் இடம் / கட்டிடம் வாடகையாகப் பெறப்பட்டிருந்தால் வாடகை ஒப்பந்தம் ஆவணம், தேவையான இனங்களில் மாசுக்கப்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று.
 7. சிறு, குறு, நடுத்துர தொழில் ஆணையிரிடம் பதிவு செய்திருந்தால் அந்த ஆவணம்.
 8. செயல்முறை மூலதனக்கடனுக்கான, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான உத்தேச வரவு செலவு விவரங்கள் கொண்ட பாலன்ஸ்ஷீட், நீண்ட காலக்கடன் எனில், கடன்திருப்பிச் செலுத்த வேண்டிய ஆண்டுகளுக்கான உத்தேச பாலன்ஸ்ஷீட்
 9. வங்கிக்கடனுக்காக அளிக்கப்படும் முதல்நிலை உத்தரவாதம் / கூட்டு உத்திரவாதம் ஆகக் காட்டப்படும் சொத்துக்களின் பத்திரங்கள், குத்தைக்குப் பெற்றிருந்தால் குத்தகை ஒப்பந்தப் பந்திரங்கள்.
 10. விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் வகுப்பைச் சோர்ந்தவர் என்றால் அதற்கான சாதிச்சான்று
 11. நிறுவனம் என்றால், அதன் பெரும்பான்மை உரிமை ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / பெண்கள் வசம் உள்ளது என்று நிருபீக்க, கம்பனி பதிவாளரிடம் இருந்து சான்று
 12. ரூ. 25 லட்சத்திற்கு மேல் கடன் பெறும் பட்சத்தில்
  • நிறுவனத்தை ஏற்படுத்திய அனைவருடைய பெயர்கள், நிறுவனத்தின் அனைத்து இயக்குநர்கள், நிறுவனம் செயல்படும் எல்லா இடங்கள் பற்றிய விவரங்களுடன், ஒவ்வொரு இடத்திலும் நடைபெறும் தொழில் விவரங்கள், நிறுவனத்தில் ஒவ்வொருவருக்கும் உள்ள பங்கு உள்ளிட்ட நிறுவனத்தைப் பற்றிய முழுமையான விவரம்
  • நிறுவனங்களின் குழுமத்தைச் சேர்ந்த வேறு நிறுவனங்ளோ அல்லது இணைநிறுவனங்களே இருந்தால், அவற்றின் கடந்த மூன்றாண்டு கால பாலன்ஸ்ஷீட்
  • நீண்ட காலக்கடன் பெறுவதென்றால், வாங்கப்பட உள்ள எந்திரங்கள் விவரங்கள், யாரிடம் இருந்து வாங்கப்படுகிறது, விலைவிபரம், எந்திரங்களின் உற்பத்திறன், எந்த அளவுக்கு அவற்றைப் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கும் உற்பத்தி, விற்பனை, லாப நட்டம் தொழிலாளா’ விபரங்கள், ஆகியவற்றோடு எந்த அடிப்படை எந்த அடிப்படையில் உத்தேச விவரங்கள் தயாரிக்கப்பட்டன என்றும் தெரிவிக்க வேண்டும்.
  • உற்பத்திச் செயல்முறைகள், நிறுவன நிர்வாகிகள் விவரக் குறிப்புகள், கச்சாப்பொருள்களை வழங்கும் நிறுவனங்கள், உறபத்தியான பொருள்களை வாங்குவோர், இதற்கென ஏற்பட்டுள்ள கூட்டு/ ஒப்பந்தங்கள், போட்டியாக உள்ள நிறுவனங்கள் பலம் – பல வீனம் பற்றிய ஒப்பீட்டு விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பற்றிய இந்த விவரங்கள் ஒரு மாதிரிக்காக சொல்லப்பட்டன. கடன் வழங்கப்படும் இடத்திற்கு ஏற்ப, இந்த ஆவணங்களில் மாறுதல்கள் இருக்கலாம்.

கடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான நடைமுறை

 1. கடன் கோருபவரின் இருப்பிடம்
 2. ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மகளிர் இவற்றில் எந்தப்பிரிவு?
 3. தொடங்க உள்ள தொழிலின் விவரம்?
 4. தொழிலை நடத்துவதற்கு உள்ள இடவசதி விபரம்?
 5. தொழில் திட்டத்தைத் தயாரிக்க தேவைப்படும் உதவி?
 6. திறன் / பயிற்சிகள் (தொழில்நுட்பம் மற்றும் நிதிசம்மந்தப்பட்டது) தேவையா?
 7. தற்போதைய வங்கிக் கணக்கு விவரங்கள்?
 8. முதலீடு செய்ய உள்ள சொந்தப்பணம் எவ்வளவு?
 9. விளிம்புத் தொகையைத் திரட்ட உதவி வேண்டுமா?
 10. தொழிலில் ஏதேனும் முன் அனுபவம் இருந்தால் விவரம்.

இவை போன்ற கேள்விகளுக்குத் தரும் பதில்களைக்கொண்டு, உடனடி கடன் கோருபவர் என்றும் பயிற்சியாளராக கடன் கோருபவர் என்றும் இருவகையான விண்ணப்பதாரர்கள் பிரிக்கப்படுவர்.

உடனடி கடன் கோருபவர்

கைப்பிடித்து ஆதரவு அளிக்க வேண்டியதில்லை என்ற நிலையில் உள்ள இவர்களின் விண்ணப்பங்கள் www.standupmitra.in என்ற இணையதளம் வாயிலாக தேர்ந்தெடுத்த வங்கியில் பரிசீலிக்கப்படும். இந்தக் கட்டத்தில் விண்ணப்ப எண் வழங்கப்பட்டு, கடன் கோருபவரின் விவரங்கள் யாவும் சம்பந்தப்பட்ட வங்கியிடம் அளிக்கப்படும். மேலும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளிடம் சம்பந்தப்பட்ட இணைப்பு அலுவலகமான நபார்ட் அல்லது சிட்பி (NABRD / SIDBI ) வழங்கப்படும். சிறுதொழில் வளர்ச்சி வங்கி என்ற சிட்பியும், தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி என்ற நபார்டும், எழுக இந்தியா திட்டத்திற்கான இணைப்பு மையங்களை அறிவிக்கும். இந்தி நிலையில் இணையதளம் வாயிலாக கடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றிவிட்டு, அது எந்த நிலையில் உள்ளது என்று தொடர்ந்து தெரிந்து கொள்ள முடியும்.

பயிற்சியாளராக கடன் கோருபவர்

கைப்பிடித்து வழிகாட்டி நடத்த வேண்டிய நிலையில் உள்ள கடன் கோருபவரான இவர்கள் www.standupmitra.in என்ற இணையதளம் பயிற்சியாளரான கடன் கோருபவர் என்று பதிவு செய்யபடுவார்கள். அப்படியே முன்னோடி வங்கிகளை, சம்பந்தப்பட்ட நபார்ட் அல்லது சிட்பி அலுவலகத்துடன் இணைக்கப்படுவார்கள். மின்னணு செயல் முறையான இதனைக் கடன் கோருபவரே செய்து விடலாம்.

எழுக இந்தியா தொடர்பு மையங்களான சிட்பி / நபார்டு ஆகியவை பயிற்சியாளரான கடன் கோருபவருக்குக் கீழ்கண்ட விதங்களில் தேவையான பயிற்சிகளை அளிக்கும்.

1.

நிதிப்பயிற்சி

நிதி சம்பந்தமான விஷயங்களில் பயிற்சி தரும் மையங்களில்

2

திறன்பயிற்சி

தொழில்பயிற்சி மையங்கள் போன்ற திறன் பயிற்சி மையங்களில்

3.

தொழில்முனைவோர் பயிற்சி

குறு, சிறு நடுத்துர தொழில் சேவைமையம் அல்லது மாவட்டத் தொழில் மையங்கள் அல்லது கிராமப்புற சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையங்களில்.

4.

தொழில் கூடம் அமைத்தல்

மாவட்ட தொழில் மையங்களில்

5.

விளிம்புத் தொகைக்கு

மாநிலங்களின் ஆதிதிராவிடர் நிதி வசதிக் கழங்கள் (தமிழ்நாட்டில் தாட்கோ) மகளிர் மேம்பாட்டுக் கழகங்கள், மாநில காதி- கிராமத் தொழில் வாரியங்கள், குறு,சிறு, நடுத்தரத் தொழில் சேவைமையங்கள் மூலமாக.

6.

ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழில்முனைவோரிடம் வழிகாட்டல் பயிற்சி

மாவட்டங்களில் உள்ள தொழில் –வணிக சபைகள், மகளிர் தொழில் முனைவோர் சங்கங்கள், வாணிக நிறுவனங்கள், நம்பகமான தொண்டு நிறுவனங்கள் போன்றவை மூலமாக.

7.

மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகளுக்கு

சம்பந்தப்பட்ட அமைப்புகளின் மூலம்

8.

திட்ட விரைவு தயாரிக்க

மாவட்ட தொழில் மையங்கள் / நபார்டு / சிட்பி போன்றவற்றிடம் உள்ள தொழில் திட்ட அறிக்கைகள் மூலமாக

மாவட்ட முன்னோடி வங்கியானது, சிட்பி மற்றும் நபார்டின் உள்ளுர் அலுவலங்களுடன் தொடர்பு கொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புள்ளவர்களை இனங்கண்டு சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். சிட்பி / நபார்டு வங்கிகளும் கடன் வழங்கப்படும் வங்கியோடு தொடர்பு கொண்டு நடைமுறைகளை முடுக்கி விடும். தேவைப்பட்டால், தலித் இந்திய தொழில் வணிகச்சங்கம், மகளிர் தொழில் முனைவோர்கள் சங்கம் ஆகியவற்றோடும் தொடர்பு கொள்ளப்படும்.

மாவட்ட முன்னோடி வங்கி, பயிற்சியாளரான கடன் கோருபவரின் தேவைகள் திருப்திகரமாக நிறைவு செய்யப்பட்டதாகக் கருதினால், இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றலாம்.

ஆதாரம் : எழுக இந்தியா வலைதளம்

Filed under:
2.91428571429
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top