பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பிரதமரின் திறன் மேம்பாட்டுத்திட்டம்

பிரதமரின் திறன் மேம்பாட்டுத்திட்டம் (பிரதான் மந்திரி கெளஷல் விகாஸ் யோஜனா) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

திட்டத்தைப் பற்றிய விளக்கம்

 • மத்திய அரசு புதிதாக ஏற்படுத்தியுள்ள திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தினால், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) மூலமாக இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கும் முன்னோடித் திட்டம் இதுவாகும். இத்திட்டத்தின் கீழ் சுமார் 24 லட்சம் இளையஞர்கள் பயன் பெறுவார்கள்.
 • தேசிய திறன்தகுதி கட்டமைப்பு (NSQF) மற்றும் தொழில்துறையின் நிர்ணயித்துள்ள தரத்திற்கு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
 • இத்திட்டத்தின் கீழ் திறன்பயிற்சி பெறுவோரின் திறன்களை மூன்றாம் தரப்பினரைக் கொண்டு மதிப்பிட்டு வெகுமதியும் அளிக்கப்படும்.
 • ஒவ்வொரு திறன்பயிற்சியாளருக்கும் ரூ. 8000 அளவிற்கு வெகுமதிகள் கிடைக்கும்.

தகுதியானவர்கள்

இத்திட்டத்தின் நோக்கத்திற்கு ஏற்ப, இந்தியக் குடிமகனான கீழ்க்காணும் நிபந்தனைகள் நிறைவு செய்கிறவர் திறன் பயிற்சி வெகுமதியைப் பெறலாம்.

 1. தகுதியுள்ள ஒரு துறையில் தகுதியுள்ள ஒரு பயிற்றுநரிடம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெறுகிறவர்கள்.
 2. திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்றவர்களின் மேம்பாட்டுத்திறனை. சான்றளிக்கப்பட்ட மதிப்பிடும் நிறுவனங்கள் ஓராண்டு காலத்திற்குள் மதிப்பிட்டுச் சான்று பெறுகிறவர்கள்.
 3. இத்திட்டம் செயல்படும் காலத்தில் ஒருவருக்கு ஒருமுறை மட்டும் வெகுமதி கிடைக்கும்.

சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளருக்குப் பணப்பரிமாற்றம் செயல்முறை

 1. திறன்பயிற்சி பெறுகிறவர் தனக்கு விருப்பமான திறனுக்காக ஒரு பயிற்சி மையத்தில், ஒரு பயிற்று நபரிடம் பதிவு செய்ய கொள்ள வேண்டும்.
 2. திறன்பயிற்சி பெறுகிறவர் தனக்குப் பயிற்றுவிக்கும் நபரிடம் தக்கப்பயிற்சிகளிக்க ஏதுவாக தன்னைப்பற்றிய முழு விபரங்களையும் அளிக்க வேண்டும்.
 3. பயிற்சி முடிவில் பயிற்சி மையத்தில் தன்னை மதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டும்.
 4. வெற்றிகரமாக மதிப்பீட்டை முடித்தபின் பயிற்றுநர் தரும் சான்றிதழைப் பெற வேண்டும்.
 5. பயிற்சி முடி;தது மதிப்பீட்டுச் சான்றிதழ் பெற்றவர்களின் ஆதார் எண் சரிபார்க்கப்பட்டு தேசியத்திறன் மேம்பாட்டுக்கழகம் வெகுமதி பணத்தை தரும்.

இது பற்றி மேலும் விபரங்களுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை அழைப்பு மையத்தை 088000-55555 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது pmproy@nsdc.india.org என்ற மின்னஞ்சல் முகவரியில் எழுதிப்பெறலாம்.

நிதி ஒதுக்கீடு

 1. பதினான்கு லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்காக ரூ. 1120 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏதேனும் திறன் பயிற்சி பெற்றவர்களுக்கு சிறப்பான கவனம் செலுத்தப்படும். அதற்கென ரூ. 220 கோடி செலவிடப்படும்.
 2. திறன்பயிற்சி அளிக்கப்படுவது பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தவும், கவனத்தை ஒரு முகப்படுத்தவும் ரூ. 67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 3. மாநில அரசுகள், முனிசிபல் கழகங்கள், பஞ்சாயத்துராஜ் அமைப்புகள், சமுதாய சங்கங்கள் ஆகியவற்றின் பங்களிப்போடு உள்ளுர் அளவில் திறன் மேளாக்கள் நடத்தி, இளைஞர்கள் திறன் பயிற்சிக்கு ஈர்க்கப்படுவார்கள்.
 4. திறன்பயிற்சி அளிக்கும் பயிற்றறுநர்களுக்கும் ஆதரவு அளிப்பதும் இத்திட்டத்தில் முக்கிய கவனம் பெறும். பயிற்சி பெற்றவர்களுக்கு தக்க வேலை கிடைக்கப்பதற்கும் உதவி செய்யப்படும். இவற்றுக்காக ரூ. 67 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திறன் தேவையை மதிப்பிடுதல்

2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை நம் நாட்டில் தேசிய. திறன் மேம்பாட்டுக் கழகம் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ள திறன் இடைவெளிகளை நிரப்புகின்ற வகையில் திறன்பயிற்சிகள் அளிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். எத்தகைய திறன் பெற்ற தொழிலாளர்கள் தேவை என்று அறிந்துகொள்ள மத்திய – மாநில அரசுகளின் அமைச்சங்களும் தொழில் துறையினருடனும் வணிகத் துறையினருடனும் கலந்தாலோசிக்கப்படும். எத்தகைய திறன் தேவைப்படுகிறது என்று அனைத்துத் தரப்பினரும் தமது தேவைகளைத் தெரிவிக்க ஏதுவாக. விரைவிலேயே ஒரு பொதவான தளம் ஏற்படுத்தப்படும்.

அண்மையில் இந்திய அரசு தொடங்கியுள்ள இந்தியாவில் தயாரிப்போம், டிஜிட்டல் இந்தியா, தேசிய சூரிய சக்தி இயக்கம், தூய்மை பாரத இயக்கம் போன்ற திட்டங்களுக்குத் தேவைப்படும் திறன்களை உருவாக்குவதாகவும் பயிற்சிகள் அமையும். தொழிலாளர் சந்தையில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கும் இளைஞர்களை – குறிப்பாக, பத்தாம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்புப் படிப்புகளைப் பாதியில் நிறுத்திவிடும் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளிப்பதாக இத்திட்டம் இருக்கும்.

திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்துதல்

 • தேசிய மேம்பாட்டு திறன் மேம்பாடுக்கழகத்தின் பயிற்சி பங்காளர்கள் மூலமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இக்கழகத்தில் தற்போது 187 பயிற்சிப் பங்காளர்கள் உள்ளனர். 2300க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உள்ளன.
 • இதைத்தவிர மத்திய / மாநில அரசுகளின் இணைவு பெற்ற பயிற்சி மையங்களும். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
 • பயிற்சி அளிக்கும் மையங்கள் யாவும், இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும்.
 • திறன்பயிற்சிக்காக மேம்பட்ட பாடத்திட்டங்கள், சிரிய பயிற்சி முறைகள், சிறப்பான பயிற்றுனர்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துசம் அளிக்கப்படும்.
 • மென்திறன், தனிமனித ஆளுமை வளர்ச்சி, தூய்மையைப் பேணுகின்ற நன்னடத்தை, சிறந்த பணிப் பண்பாடு போன்றவையும் பயிற்சிகளில் இடம்பெறும்.
 • அளிக்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மாநில அரசுகளும், மண்டலத் திறன் கவுன்சில்களும் உன்னிப்பாக கண்காணிக்கும்.


PMKVY

ஆதாரம் : http://pmkvyofficial.org/

3.11111111111
மணிமொழி Jul 08, 2019 10:52 AM

திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பள்ளி மற்றும் பயிற்சி மையம் ‌‌‌தொடங்க என்ன செய்ய வேண்டும்
98*****68

வீரமணி.மு Jun 30, 2019 01:01 AM

நான் இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல விருப்பப்படுகிறேன்.. இந்த வகுப்புகளை நடத்த எனக்கு தகவல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். வீரமணி- 98*****20

B.Thirugnanam Feb 15, 2019 12:40 PM

திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பள்ளி மற்றும் பயிற்சி மையம் ‌‌‌தொடங்க என்ன செய்ய வேண்டும்

Rev.S.R.Dhanapal Nov 19, 2017 12:27 PM

நாங்கள் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் சேலம் ரூரல் டெவலப்மென்ட் டிரஸ்ட் சார்பில் சமூக நல பணியில் ஈடுபட்டு வருகின்றோம். எனவே எமது பகுதியில் இத்தகைய திட்டத்திற்கு வழிகாட்டுங்கள்.

B.J.பாலாஜி பொதுசெயலாளர்ஆவடி bjp Nov 07, 2017 08:15 AM

ஆவடி பெறுநகராட்சிக்குட்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்கள் எந்த விதமான ஊக்கத்தொகையும் பயிற்சிபெறுபவர்களுக்கு வழங்குவதில்லை பயிற்சிபெறுபவர்களின்வங்கிக/எண் ஐ விண்ணப்பத்தில் பதிவு செய்வதில்லை

ரமேஷ் Apr 02, 2017 01:26 PM

பயிற்சி மையம் தொடங்க விருப்பம் உதவுங்கள் செல்:90*****56

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top