பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஸ்வச் பாரத் இயக்கம் (தூய்மை இந்தியா இயக்கம்)

ஸ்வச் பாரத் இயக்கம் (தூய்மை இந்தியா இயக்கம்) குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

ஸ்வச்பாரத் இயக்கம் எனப்படும் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு பாதி தூரம் கடந்துள்ள நிலையில், இந்த இயக்கத்தின் செயல்பாடுகளில் வேகம் ஏற்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2014 அக்டோபர் மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல், நாட்டின் கிராமப்புறங்களில் துப்புரவு உள்ளடக்கம் 42% முதல் 63 சதவிகிதமாக அதிகரித்திருப்பதுடன், இந்திய கிராமப்புறங்களில் திறந்த வெளியில் இயற்கை உபாதையைக் கழிப்பவர்களின் எண்ணிக்கை 550 மில்லியனில் இருந்து 330 மில்லியனாக குறைந்திருப்பதுடன், 190,000 கிராமங்கள், 130 மாவட்டங்கள் மற்றும் மூன்று மாநிலங்கள் திறந்த வெளி கழிப்பிடங்கள் அற்றவையாக மாறியுள்ளன. 2019 அக்டோபர் 2ஆம் தேதி திறந்தவெளி கழிப்பிடங்கள் அற்ற இந்தியா என்ற நிலையை அடையும் வகையில் இந்தத் திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

செயல்பாடுகள்

துப்புரவுக்கு முன்னுரிமை அளிப்பது பல்வேறு காரணங்களால் முக்கியமாகிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயிற்றுப் போக்கு பாதிப்பால் அவதிப்படுவதற்கு போதிய கழிவறைகள் இல்லாததே காரணமாக அமைகிறது. துப்புரவு என்பது பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். ஒரு பெரும் பொருளாதாரமாகத் திகழ திறந்த வெளிக் கழிப்பிடங்களை அகற்றுவது முக்கியமானதாக உள்ளது.

முந்தைய துப்புரவுத் திட்டங்களைப் போல் இன்றி தூய்மை இந்தியா இயக்கம் என்பது வெறும் கழிவறை கட்டும் திட்டமாக மட்டுமல்லாமல், மக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு திட்டமாக உள்ளது. சாலை அமைப்பது, பாலம் கட்டுவது அல்லது விமான நிலையம் அமைப்பது போன்ற பணிகள் மனிதர்களின் பழக்க வழக்கத்தை மாற்றுவதற்கான முயற்சியுடன் ஒப்பிடுகையில் எளிதான பணியாகவே இருக்கும். 50 கோடிக்கும் அதிகமான மக்கள் பிறந்தது முதல் தங்களது வாழ்நாள் முழுவதும் செய்து வரும் ஒரு பழக்கமான திறந்த வெளியில் கழிப்பதை விட்டு விட்டு கழிவறைகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறி அவர்களை சம்மதிக்க வைப்பது ஒரு இமாலயப் பணியாகும். மக்களை சென்றடைவதற்கான ஊடக இயக்கங்கள் பயன் தரக்கூடியவை என்ற போதிலும், அடிமட்டத்தில் பழக்க வழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது பயிற்சி பெற்ற ஊக்கம் பெற்ற நபர்களின் தனிப்பட்ட முறையிலான கலந்துரையாடல்கள் மூலம் மட்டுமே சாத்தியமாகும். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இத்தகைய ஊக்கமளிக்கும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்ற போதிலும் இது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதுடன், நாடு முழுவதும் ஒரு கிராமத்திற்கு ஒருவர் என்ற அளவிலாவது இது இருக்க வேண்டும்.

தூய்மை இந்தியா இயக்கம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு திறன் மேம்பாடு, மனித ஆதாரங்கள், பழக்க வழக்க மாற்றத்திற்கான தொடர்பு, அறிவாற்றல் பகிர்வு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு உள்ளிட்டவை மூலம் மாநில அரசுகளுக்கு குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் ஆதரவு அளித்து வருகிறது. சிறந்த நடைமுறைகளை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் பகிர்ந்து கொள்ள, பல்வேறு இடங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க இணைய வகுப்புகள் ஆகியவற்றுக்காக ஸ்வச்சங்கரஹ் எனப்படும் தூய்மை இந்தியா இயக்கத்திற்கான இணையதளம் போன்ற முயற்சிகள், இத்திட்டத்தில் தொழில்நுட்பம் உரிய முறையில் பயன்படுத்தப்படுவதற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும். மேலும் ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்றுக்கொள்ளவும், ஊக்கமளிக்கவும் பல்வேறு தேசிய மற்றும் மாநில அளவிலான பயிலரங்குகளும், நிகழ்ச்சிகளும் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. உள்ளாட்சி நிர்வாகிகள், குறிப்பாக பெண் நிர்வாகிகள் போன்ற அடிமட்ட பிரமுகர்கள் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் கூடுதல் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சி

ஸ்வச் பாரத் இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவதுடன், கழிப்பறைத் தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டியதும் முக்கியமாகும். செலவும் மறுபயன்பாடு மற்றும் நீடித்திருப்பது ஆகியவற்றில் கிராமப்புறப் பகுதிகளுக்கு இரட்டை குழி மாதிரி ஏற்ற தொழில்நுட்பமாக இருக்கும். கிராமப்புற இந்தியாவில் இந்த மாதிரி முன்னுதாரனமாக உள்ளது என்ற போதிலும், இதனை கிராமப்புற வீடுகள் ஏற்றுக்கொள்வதற்கு அதிக சந்தைப்படுத்துதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பழக்க வழக்க மாற்றம் மற்றும் உரிய தொழில்நுட்ப முறைகள் கடைப்பிடிக்கப்படுவதுடன் தூய்மை என்பது ஒவ்வொரு தனிப்பட்ட கடமையாக வேண்டும். இதில் தனியார் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஈடுபாடு காட்ட வேண்டும். தனியார் பங்களிப்பு அதிகரிப்பதை எடுத்துக்காட்டும் வகையில் டாடா டிரஸ்ட் நிறுவனம் மாவட்டம் ஒன்றுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 600 பேரை நியமித்து அவர்களுக்கு நிதி உதவி அளிக்கிறது.

பிரதமரின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பொதுத் துறையும் செயல்படுகிறது. ஒவ்வொரு மத்திய அமைச்சகமும் தூய்மைக்கான செயல் திட்டத்தை உருவாக்கி அதற்கு நிதி ஒதுக்கீடும் செய்து வருகிறது. 2017-18இல் அனைத்து அமைச்சகங்களும் இணைந்து தூய்மை தொடர்பான பணிகளுக்காக ரூ. 5000 கோடி செலவிட திட்டமிட்டுள்ளன. பொற்கோயில், திருமலை திருப்பதி கோயில் போன்ற முக்கியமான இடங்களைத் தூய்மைப்படுத்த பணிகள் நடத்தப்பட்டு வருவது அனைத்து துறைகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு உதாரணமாகும்.

தூய்மைப் பணியின் முடிவுகளை ஆய்வு செய்வதும் அவற்றைத் தக்க வைத்துக் கொள்வதும் இந்த இயக்கத்தின் மிகவும் முக்கியமான அம்சமாகும். இது இந்தத் திட்டத்தின் நம்பகத்தன்மைக்கு மிகவும் முக்கியமானதாகும். தற்போது மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் மூன்றாவது நபர் ஆய்வு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் இந்த முயற்சிகள் வலுப்படுத்தப்பட வேண்டும். திறந்தவெளிக் கழிப்பிடங்கள் நீக்கப்படுவது நீடிக்க வேண்டும் என்பதும் முக்கியமானதாகும். இதனை அடைவது முக்கியம் என்ற போதிலும் இது உள்ளூர் நுணுக்கங்கள் மற்றும் ஊக்கங்கள் மூலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்பது மற்றொரு முக்கியமான தேவையாகும்.

திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை

திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை என்பதும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகும். திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லை என்ற மாநிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். கிராமத் தூய்மைக்கான குறியீடு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கிராம மக்கள் தாங்களாகவே குறியீட்டை நிர்ணயித்துக்கொள்வார்கள்.

ஸ்வச் பாரத் இயக்கம் பாதி நிலையை அடைந்துள்ள போதிலும் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள குழுக்கள் இன்னும் கடக்க வேண்டிய தொலைவு மற்றும் சவால்கள் அதிகம் என்பதை உணர்ந்துள்ளனர். பிரதமரின் தலைமையில் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் முக்கியமாக அடிமட்டத்தில் உள்ள உள்ளாட்சி நிர்வாகிகள் குறிப்பாக மகளிர் உள்ளாட்சி நிர்வாகிகள் ஆதரவுடன் இந்த மாபெரும் மக்கள் இயக்கம் நாடு தழுவிய அளவில் பெரும் வெற்றியைப் பெறும்.


திறந்த வெளியில் மலம் கழிக்கக்கூடாது

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

2.91836734694
மோகன் Jun 23, 2017 12:47 PM

இந்த புள்ளி விவரங்கள் உண்மையா?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top