பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் சீரமைப்பு

ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் சீரமைப்பு பற்றிய தகவல்

ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் சீரமைப்பு

துவக்கம்

•2001 -ஆம் ஆண்டில் பெண்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதிகளை ஏற்படுத்த இத்திட்டம் துவக்கப்பட்டது.

நோக்கம்

•பொது சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் கிராமப்புற பெண்களின் தனித்துவம், பாதுகாப்பை உறுதி செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

திட்ட செயலாக்கம்

சுகாதார வளாகங்கள் அமைத்தல்

•2001-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் 12,618 கிராம ஊராட்சிகளில் சுமார் 750 சதுர அடி பரப்பளவில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன.

•ஒவ்வொரு வளாகத்திலும், 14 கழிவறைகள், 2 குளியலறைகள், மின்மோட்டாருடன் நீரேற்று அறை, தண்ணீர் தொட்டி மற்றும் துணி துவைக்கத் தேவையான கல் ஆகியவற்றுடன் தேவையான தண்ணீர் விநியோகத்தினை வளாகத்தில் உறுதி செய்யப்பட்டது.

•மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க 2011-12 ஆம் ஆண்டில், பயனற்றுப்போய் மற்றும் பழுதடைந்த நிலையிலிருந்த 12,796 ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்களை ரூ.170 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

•தண்ணீர் விநியோகம் மற்றும் விளக்குகளுக்குத் தேவையான மின் வசதி கிராம ஊராட்சிகளின் மூலம் பராமரிக்கப்படுகிறது.

•மகளிர் வசதிக்காக வளாகங்களில் எரியூட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

•வளாகத்தின் உபயோகிப்பாளர்கள் கண்டறியப்பட்டு பயன்படுத்துவோர் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பயன்படுத்துவோர் குழுக்கள் அமைத்தல்

•புனரமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகங்களை முறையாக பயன்படுத்தவும், பராமரிக்கவும் ஒவ்வொரு வளாகத்திற்கும் பயன்படுத்துவோர் குழு ஒன்றினை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

•ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை முறையாக பயன்படுத்தவும், பராமரிக்கவும், பயன்படுத்துவோர் குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

•பயன்பாடு மற்றும் பராமரிப்பிற்கான வழிகாட்டி புத்தகம் தயாரிக்கப்பட்டு அனைத்து பயன்படுத்துவோர் குழுக்களுக்கும் கையேடாக வழங்கப்பட்டுள்ளது.

கண்காணிப்புக் குழுக்கள் அமைத்தல்

•மகளிர் சுகாதார வளாகத்தின் பராமரிப்பை கண்காணிக்க மாவட்ட அளவில் மற்றும் வட்டார அளவில், கண்காணிப்புக் குழுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரால் அமைக்கப்பட்டுள்ளது.

•குழுக் கூட்டத்தில் விவாதிக்க (வேண்டியவை) ப்படுபவை

ஒவ்வொரு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தின் பயன்பாட்டு நிலை

மகளிர் சுகாதார வளாகத்தினை பயன்படுத்துவோர் குழுக்கள் பராமரிக்கும் முறை

வளாகங்களை கிராம ஊராட்சி கால முறையில் பராமரிக்கும் விதம்

பயன்படுத்துவோர் குழுக்களின் கருத்துக்கள்/ஆலோசனைகள்

கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் அல்லது மண்டல அலுவலர்கள் ஆய்வின் போது தெரிவிக்கப்படும் கருத்துக்கள் / ஆலோசனைகள்

திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்

மாநில அளவில்    : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15.

மாவட்ட அளவில்  :  மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

வட்டார அளவில்   :     வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)

கிராம அளவில்     : ஊராட்சி மன்றத் தலைவர்

ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள்

துவக்கம்

•2012-13ம் ஆண்டில் ஆண்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தரும் பொருட்டு இத்திட்டம் துவக்கப்பட்டது.

நோக்கம்

•பொது சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த கிராமப்புற பெண்களுக்கு உறுதி செய்து தரபட்டது போன்று ஆண்களுக்கும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தருவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

திட்ட செயலாக்கம்

சுகாதார வளாகங்கள் அமைத்தல்

•2012-13ம் ஆண்டில் முதல் கட்டமாக ஒரு வட்டாரத்திற்கு இரண்டு ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள் வீதம் தமிழகத்திலுள்ள 385 வட்டாரங்களில் தலா ரூபாய் 4,00,000/- மதிப்பீட்டில் 570 சதுர அடி பரப்பளவில் 770 ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

•ஒவ்வொரு வளாகமும் 8 கழிப்பறைகளை உள்ளடக்கியதாக இருக்கும். தண்ணீர் வசதியுடன் கூடிய குளிக்கும் இடம், துணி துவைக்கும் கல் ஆகியவையும் இருக்கும்.

•இதன் தொடர் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு வளாகத்திலும் தனியாக தண்ணீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

•தண்ணீர் விநியோகம் மற்றும் விளக்குகளுக்கு தேவையான மின் வசதி கிராம ஊராட்சிகளின் மூலம் பராமரிக்கப்படுகிறது.

பயன்படுத்துவோர் குழுக்கள் அமைத்தல்

•வளாகத்தின் உபயோகிப்பாளர்கள் கண்டறியப்பட்டு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது

•இதற்கென அமைக்கப்பட்ட பயன்படுத்துவோர் குழுக்கள், வளாக கட்டுமானப் பணியின் துவக்கத்திலிருந்தே ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் பராமரிக்கப்படுவதுபோல, இந்த வளாகங்களின் தினசரி பராமரிப்பினை பயன்படுத்துவோர் குழுக்களே எடுத்துச் செய்வதுடன், இதன் தொடர்பராமரிப்பு சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியால் மேற்கொள்ளப்படும்.

• இந்த வளாகங்களின் பராமரிப்பு பணியில் பயன்படுத்துவோர் குழுக்களுடன், கூட்டாண்மை அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களும் பங்கேற்க ஊக்கப்படுத்தப்படும்.

கண்காணிப்பு குழுக்கள் அமைத்தல்

•ஆண்கள் சுகாதார வளாகத்தின் பராமரிப்பை கண்காணிக்க மாவட்ட அளவில் மற்றும் வட்டார அளவில், கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரால் அமைக்கப்பட்டுள்ளது.

•குழுக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவை

சுகாதார வளாகத்தினை பயன்படுத்துவோர் குழுக்கள் பராமரிக்கும் முறை

சுகாதார வளாகங்களை கிராம ஊராட்சி கால முறையில் பராமரிக்கும் விதம்

பயன்படுத்துவோர் குழுக்களின் கருத்துக்கள் / ஆலோசனைகள்

கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் அல்லது மண்டல அலுவலர்கள் ஆய்வின் போது தெரிவிக்கப்படும் கருத்துக்கள் / ஆலோசனைகள்.

திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்

மாநில அளவில்    : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15.

மாவட்ட அளவில்  :     மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

வட்டார அளவில்   :     வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

2.96666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top