பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உயர் கல்வித் துறை பாகம் - 3

உயர் கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு (2017 - 2018) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ஆவணக்காப்பகம்

1. சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பகம் அரசு ஆவணங்களை தன்னகத்தே கொண்டு அவைகளை பாதுகாத்து வருவதோடு, அரசின் பல்வேறு துறைகளுக்கும் முடிவுகளை எடுக்க தேவையான ஆவணங்களை வழங்கும் முக்கிய பணியையும் ஆற்றி வருகிறது. இக்காப்பகம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன்படி பொதுமக்கள் கோரும் ஆவணங்களின் நகல்களை வழங்கி வருகின்றது.

2. மெட்ராஸ் ரெக்கார்டு ஆபீஸ் என்ற பெயரால் முதலில் அழைக்கப்பட்ட தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் 1857 ஆம் ஆண்டுக்கு முந்தைய தலைமைச் செயலக ஆவணங்கள், முந்தைய வருவாய் வாரிய ஆவணங்கள், சில துறைகளின் தலைமை அலுவலக ஆவணங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆவணங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்ற ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதோடு மட்டுமல்லாமல் அரிய டச்சு, டேனிஷ் மற்றும் பாரசீகம் ஆகிய பிறமொழி ஆவணங்களும் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

3. பன்னாட்டு மற்றும் இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்து புகழ்பெற்ற நூலாசிரியர்கள், வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்திற்கு வருகை தந்து ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். இங்குள்ள ஆவணக்காப்பக நூலகம் ஆராய்ச்சியாளர்களுக்கு சிறந்த அறிவுக் களஞ்சியமாக திகழ்வதோடு அரிய புத்தகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

4. தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் செயல்பட்டு வரும் விவரச்சுவடி பிரிவு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் விவரச்சுவடிகளை தயாரித்து வெளியிட்டு வருகிறது. தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் கீழ் ஆறு மாவட்ட ஆவணக்காப்பகங்கள் கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கடலூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

5. தமிழ்நாடு ஆவணக்காப்பகம் தன்னகத்தே கொண்ட ஆவணங்களை கணினிமயமாக்கி இணையத்தில் பதிவேற்றம் செய்தல், உள்ளிணைப்பு கட்டமைப்பு ஏற்படுத்தி அலுவல் சார்ந்த ஆவணம் தொடர்பான பணிகள் தமிழ்நாடு புதுமை முயற்சிகள் நிதியத்திடமிருந்து (Tamil Nadu Innovation Initiatives Fund) பெறப்பட்ட ரூ. 67 இலட்சம் நிதியைக் கொண்டு 2015 - 16 மற்றும் 2016 -17 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை தொடர்ந்து மின் ஆளுமை செயலாக்க நிதியிலிருந்து ஒப்பளிக்கப்பட ரூ. 105 இலட்சம் நிதியுதவியில் மின் ஆவணக்காப்பகம் (digi - Archives) தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்தின் மூலம் (Tamil Nadu e - governance Agency) தோற்றுவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2017 - 18 ஆம் ஆண்டில் நிறைவடையும். இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம், இக்காப்பகத்தில் உள்ள ஆவணங்களை பொருள் விவர பட்டியலுடன் இணையத்தில் தேடும் வசதி உருவாக்கப்படும்.

6. 2016-17 ஆம் ஆண்டில் இக்காப்பக ஆவணங்களை மின்மயமாக்க, ரூ.10 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதே நிதி 2017-18 ஆம் ஆண்டிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துறையின் ஆறு மாவட்ட ஆவணக்காப்பக அலுவலகங்களுக்கு கணினி மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை வாங்குவதால், ஆவணங்களை மின்மயமாக்குதல் மற்றும் நுண்புகைப்படமாக்குதல் ஆகிய திட்டத்திற்கு தேசிய ஆவணக்காப்பகம் ஒப்புதல் அளித்து, இதற்கென ரூ. 47 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டம் 75 சதவிகிதம் மத்திய அரசின் பங்களிப்புடனும், எஞ்சிய 25 சதவிகிதம் மாநில அரசின் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்டு 2017 - 18 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்

1. மாநில அளவிலான உயர்கல்வி திட்டங்களின் மேம்பாட்டிற்கும், மாநிலத் திட்டங்கள், பல்கலைக்கழக நிதிநல்கை குழுவின் திட்டங்கள் இவற்றை ஒருங்கிணைக்க உதவும் வகையிலும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் 1992ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவையால் ஏற்றப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பெற்றது.

2. கடந்த ஐந்தாண்டுகளில், இம்மன்றம் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பின்வரும் ஆறு பல்கலைக்கழகங்களில் தொழில் நிறுவனங்களின் கூட்டிணைவு மையங்களை நிறுவும் ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட்டு வருகிறது - சென்னைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். இம்மையங்கள் கல்வியாளர்கள் மற்றும் தொழில் துறையினரிடையே இணைப்பை ஏற்படுத்தி, மாணவர்கள் தொழிற்சாலைகளில் உள்பயிற்சி, தொழில் துறை உதவியுடன் ஆராய்ச்சி திட்டங்கள், ஆலோசனை சேவைகள், பல்லுயிர்கள் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பெற ஏதுவாக உள்ளன. இந்த மையங்கள் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உள்பயிற்சி வழியாக வேலைவாய்ப்பளித்தல், வளாக தேர்வுகள் நடத்துதல் போன்றவற்றிற்கும் உறுதுணையாக உள்ளது.

3. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர்கள் பட்டபடிப்பினை முடித்த பின்பு வேலைவாய்ப்பு பெற கணினி கல்வி, பேச்சுத்திறன், ஆளுமை வளர்ச்சி, நேர்காணல் திறன் போன்ற பயிற்சிகள் அளிக்கும் பொருட்டு “மென்திறன் மையங்கள்” உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மாணாக்கர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மெதுவாக கற்கும் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு இம்மன்றத்தால் சிறப்பு கவனத் திட்டம் 6 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், 18 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலும் அமல்படுத்தப்பட்டு சிறப்பு பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் / அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் முதுநிலை பட்ட மாணவர்களுக்கு (அ) “மாணவர் சிறு திட்டத்தையும் (Student Mini Project), ஆசிரியர்களுக்கு (ஆ) "சிறு ஆராய்ச்சித் திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

4. 2014 ஆம் ஆண்டு வலையமைப்பு எண்ணிலக்க நூலகம் அமைக்க தமிழக அரசு ஒப்பளித்துள்ளது. இத்திட்டம் மூலம் தமிழகத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள நூலக தகவல்கள் அனைத்தும் எண்ணியியல் மயமாக்கப்பட்டு தமிழக மாணவர்கள் அனைவரும் பயனடைய உதவுகிறது. இத்திட்டத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு தலா ரூ. 69.50 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

5. Tamil Nadu Innovation Initiatives (TANII) திட்டத்தில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு அரசு கலை மற்றும் அறிவியல், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணாக்கர்களின் பாடத்திட்டத்துடன் இணைந்த மொழிகற்கும் திறனை வளர்க்கும் பொருட்டு CLIL: Content and Language Integrated Learning என்ற திட்டத்திற்கு ரூ. 62.4 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான காலவரையறை மூன்று ஆண்டுகளாகும் (2015 முதல் 2018 வரை). மாணாக்கர்கள் தங்களை கல்லூரி சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள உதவிடும் பொருட்டு, மொழி பரிமாற்ற மேம்பாட்டு திறனில் உள்ள இடைவெளியை நிரப்ப, சீர்மைப் பயிற்சிக்கென (Bridge Course), 19 தன்னாட்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் முதலாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு மாணாக்கர்களுக்கு, தமிழ்நாடு அரசு ரூ. 12.50 இலட்சம் செலவில் "The wor(i)d in your stride" என்ற புத்தகம் இலவசமாக வழங்க உள்ளது.

6. தமிழக அரசின் தொலைநோக்கு பார்வை 2023 இன் படி உயர்கல்வித்துறையில் 5 தனிச்சிறப்பு மையங்களை ஏற்படுத்த இம்மன்றம் ஒருங்கிணைத்து வருகிறது - சூரிய மற்றும் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பம் (அண்ணா பல்கலைக்கழகம்), விண்வெளி (அண்ணா பல்கலைக்கழகம்), அடிப்படை அறிவியல் (சென்னைப் பல்கலைக்கழகம்), தானியங்கி மற்றும் வாகன தொழில்நுட்பம் (அண்ணா பல்கலைக்கழகம்) மற்றும் உயிரி தொழில்நுட்பம் (சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்).

தேசிய உயர்கல்வித் திட்டத்திற்கான (RUSA) மாநில இயக்குநரகம்

1. தேசிய உயர்கல்வித் திட்டம் (RASHTRIYA UCHCHATAR SHIKSHA ABHIYAN) மைய அரசின் நிதியுதவியுடன் மாநிலத்தின் அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் உயர்கல்வி தரத்தை உயர்த்த செயல்படுத்தப்படும் முக்கிய திட்டமாகும். இத்திட்டத்தின் மத்திய, மாநில அரசு நிதி பங்களிப்பு 60:40 ஆகும்.

2. இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட தயார்படுத்துதல் நிதி ரூ.5 கோடியைக் கொண்டு உயர்கல்விக்கான மாநில திட்டமும், தேசிய உயர்கல்வித் திட்ட இயக்ககமும் நிறுவப்பட்டு திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

3. இத்திட்ட வரைவு வழிகாட்டுதலின் பல்வேறு கூறுகளின் படி மாநில திட்டம் (STATE HIGHER EDUCATION PLAN) உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் தரமான உயர்கல்வி அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ள வேண்டியவைகளின் அடிப்படையிலேயே மாநில திட்டம் உருவாக்கப்பட்டது.

4. இத்திட்டத்தின் திட்ட அனுமதி வாரியம் (Project Approval Board) நம் மாநில திட்டத்தை நன்கு ஆய்வு செய்து, தேசிய தரமதிப்பீட்டு குழுவின் அங்கீகாரம் பெற்ற 10 பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பினை மேம்படுத்த ரூ. 200 கோடி நிதி வழங்கி உள்ளது. மேலும், இரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மாதிரி கல்லுாரிகளாக மேம்படுத்த ரூ. 8 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, 44 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 21 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மொத்தம் ரூ. 130 கோடி ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

5. மேலும், நாமக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் தலா ரூ. 21 கோடி செலவில் இரு அரசு பொறியியல் கல்லூரிகள் நிறுவுவதற்கு இத்திட்டத்தின் அனுமதி வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளது. நிதி ஒப்பளிப்பு பெற்றபிறகு கட்டடிடப் பணி துவங்கப்படும். மேலும் தொழிற்கல்விக்காக ரூ. 13.3 கோடியும், உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் புது கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் நிதியாக ரூ. 15 கோடியும் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ. 423.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் அதிகமாக பயனடைந்த மாநிலங்களில் நம் மாநிலமும் ஒன்றாகும்.

6. 10 பல்கலைக்கழகங்கள் மற்றும் 55 அரசு கல்லூரிகளுக்கு இத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி புதிய கல்லூரி வகுப்பறைகள், மாணவ மாணவியர் விடுதிகள், கழிப்பறைகள் மற்றும் சோதனைக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மேலும் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் நிர்வாக கட்டடங்கள், வகுப்பறைகள், விடுதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் நவீன முறையில் கல்வி கற்பிக்க கணினிகள், புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் பெறப்பட்டுள்ளன.

7. ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வழங்கப்பட்ட நிதி ரூ.15 கோடியை பயன்படுத்தி தமிழ்நாட்டின் அரசு பல்கலைக்கழகங்களில் நிலையான ஆற்றல் தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

8. தமிழக அரசும் தேசிய உயர் கல்வி திட்டமும் இணைந்து நம் மாநிலத்தை உயர் கல்வி கற்றல், பயிற்றுவித்தல் மற்றும் ஆராய்ச்சியில் முக்கிய மையமாக விளங்க அனைத்து சிறப்பு முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

அறிவியல் நகரம்

1. சென்னை நகரில் கிண்டி மற்றும் தரமணி பகுதியில் அமைந்துள்ள மத்திய மற்றும் மாநில அரசினை சேர்ந்த இந்திய தொழில்நுட்ப நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம், மைய தோல் ஆராய்ச்சி நிறுவனம், கணித நிறுவனம், புற்றுநோய் மையம் போன்ற சுமார் 60 ஆராய்ச்சி நிறுவனங்களை உள்ளடக்கிய இவ்வளாகத்தை "அறிவியல் நகரம்" என அழைக்கிறோம். இவ்வறிவியல் நகரத்தின் நோக்கம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதாகும். அறிவியல் நகரத்தில் அமைந்துள்ள உறுப்பினர் நிறுவனங்களில் 1,500க்கும் மேற்பட்ட முனைவர்கள் மற்றும் 3,500 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். இந்த அறிவியல் நகரத்தில் அமைந்துள்ள நிறுவனங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஆய்வுகள் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அறிவியல் நகரத்தில் உள்ள நிறுவனங்களில் சுமார் ரூ. 500 கோடி மதிப்புள்ள அறிவியல் தொழில்நுட்ப சோதனை மற்றும் பரிசோதனை உபகரணங்களும் கருவிகளும் உள்ளன.

2. அறிவியல் நகரம் லாபம் ஈட்டாத நிறுவனமாக தமிழ்நாடு சங்கங்களின் சட்டம் 1975 கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பற்பல அறிவியல் நிகழ்வுகளை நடத்தி பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களிடையே அறிவியலை மேம்படுத்துவதே அறிவியல் நகரத்தின் முக்கிய நோக்கமாகும்.

3. அறிவியல் நகர செயல்பாடுகள்

அறிவியல் நகரத்தில் 2016-17 ஆம் ஆண்டில் கீழ்க்கண்ட அறிவியல் நிகழ்வுகள் நடைபெற்றன:

3.1. அறிவியலை பரப்புதல் நிகழ்ச்சியில், விரிவுரைகள், முக்கிய தலைப்புகளில் பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுவதோடு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறைகளில் தற்கால முன்னேற்றங்கள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

3.2. அறிவியல் நகரத்தின் செய்தி மடல் மாதந்தோறும் வெளிவருகிறது. இதில் தற்கால அறிவியல் கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம் பெற்றுள்ளன.

3.3. தேசிய அளவில் கருத்தரங்குகள், பயிலரங்குகள் ஆகியன நடத்தப்படுகின்றன.

3.4. அறிவியல் நகரம், வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது, இளம் அறிவியலாளர் விருது மற்றும் இளம் மாணவ அறிவியல் அகாடமி விருது ஆகிய விருதுகளை வருடந்தோறும் வழங்கி வருகிறது.

3.5. இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய துறைகளில் முதுகலை மாணவர்களுக்காக ஒரு மாத கோடை கால பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இப்பயிற்சி முகாமில் 90 மாணாக்கர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

3.6 . இயற்பியல் அறிவியல் ஆய்வுகள் மற்றும் ஆய்வறிக்கையினை எப்படி எழுத வேண்டும் என்ற பயிற்சிப் பட்டறை முதுகலை மாணாக்கர்களுக்கு நடத்தப்பட்டது. இப்பயிற்சி பட்டறையில் 100 மாணாக்கர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

3.7. அறிவியலில் செயல்முறை விளக்கம் என்ற பயிற்சிப் பட்டறை சென்னை பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்டது. இப்பயிற்சி பட்டறையில் 250 மாணாக்கர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

3.8. அறிவியல் நகரம், நோய் தடுப்பு மற்றும் தடுப்பூசிகள் என்ற விழிப்புணர்வு முகாமை பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்காக நடத்தியது. இவ்விழிப்புணர்வு முகாமில் 200 மாணாக்கர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

3.9. "கிராமப்புற ஏழை மக்களின் முன்னேற்றத்தில் அறிவியல்" என்ற தலைப்பில் 3 ஒரு நாள் பயிற்சிப் பட்டறைகள், மதிப்பூட்டிய பால் பொருட்களின் உற்பத்தியில் நவீன அறிவியல் நுட்பங்கள், சுகாதார முறையில் மதிப்பூட்டிய இறைச்சிப் பொருட்களை தயாரித்தல் மற்றும் பண்ணைக் கழிவுப் பொருட்களின் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து நடத்தப்பட்டன. இம்மூன்று பயிற்சி பட்டறைகளில் 100 விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

3. 10. சென்னை அறிவியல் விழா பிப்ரவரி மாதம் 2017 ல் நடத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கிடையே அறிவியலில் ஆர்வம் ஏற்படுத்துவதே இவ்விழாவின் நோக்கமாகும். இவ்விழாவில் மாபெரும் அறிவியல் கண்காட்சி, குழு விவாதங்கள், விரிவுரைகள், அறிவியல் பொழுதுபோக்குகளான அறிவியல் செயல் முறை விளக்கங்கள், பொம்மலாட்டம், கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கிடையேயான வினாடி வினாப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, அறிவியல் மாதிரிகள் தயார் செய்தல் ஆகியன இடம்பெற்றன.

3.11. அதிநுண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்காக 4 நாட்கள் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இப்பயிற்சி பட்டறையில் 100 மாணாக்கர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

3.12. உயிரியல் மேற்படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்காக மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் மார்ச் - 2017ல் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டது. இப்பயிற்சி பட்டறையில் 30 மாணாக்கர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

4 அறிவியியல் நகரம் 2017-18 ஆம் நிதியாண்டில் கீழ்க்காணும் திட்டங்களை செயல்படுத்த உள்ளது:

i) அடிப்படை அறிவியலில் கோடைக்கால பயிற்சி முகாம்.

ii) கல்லூரி மாணாக்கர்களுக்கான நுண் அறிவியல் மற்றும் நுண் தொழில்நுட்பப் பட்டறை.

iii) கல்லூரி மாணாக்கர்களுக்கான மூலக்கூறு உயிரியல் நுட்பங்கள் பற்றிய பயிற்சிப் பட்டறை.

iv) பால், மாமிசம், மீன் பொருட்களை பதப்படுத்துதல் பற்றிய பயிற்சிப் பட்டறை.

v) கல்லூரி மாணாக்கர்களுக்கான ஏரோ மாடலிங் பற்றிய பயிற்சிப் பட்டறை.

vi) தகவல் மற்றும் தொடர்பியல் தொழில் நுட்பம் - அண்மைக்கால போக்குகள் [மேகக் கணினியம் (Cloud computing), திறந்த நிலை கணினி வளம் (Open Source), செயற்கை நுண்ண றிவு (Artificial intelligence)] பற்றிய கருத்தரங்கு.

vii) கிராமப்புற மாணாக்கர்களுக்கான பொருளாதார மேம்பாட்டிற்காக அறிவியல் சார்ந்த கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து அறிவியல் பயிற்சிப் பட்டறை.

vii) கிராமப்புற மாணவர்களுக்காக அறிவியல் நிகழ்ச்சிகள்.

ix) தேவையின் அடிப்படையில் கிராமப்புற கண்டுபிடிப்புகளை கண்டறிந்து, விருது வழங்கி ஊக்குவித்தல்.

x) இல்லத்தரசிகளுக்கான கழிவிலிருந்து செல்வம் என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறை.

xi) உயிர் தொழில்நுட்பம் மற்றும் மரபணு பொறியியலில் பயிற்சிப் பட்டறைகள்.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம்

1. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், தமிழக அரசால் 1983-ல் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி பெற்ற மையமாக நிறுவப்பட்டது. அறிவியல் தொழில்நுட்பக் கருத்துக்களை பொதுமக்களிடையேயும் குறிப்பாக மாணவர்களிடையேயும் பரவலாக்குவது இம்மையத்தின் முக்கிய நோக்கமாகும். பொது மக்களின் அனைத்து வயதினருக்கும் அறிவியல் கற்றல் என்பதை மகிழ்வளிப்பதாகவும், உற்சாகமளிக்கும் அனுபவமாகவும் இருக்கும்படி தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் செய்து வருகிறது என்பதில் இம்மையம் பெருமை கொள்கிறது.

2. சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் மிகவும் புகழ்பெற்ற பி.எம்.பிர்லா கோளரங்கம் மற்றும் டாக்டர் சாலமன் விக்டரின் - இதயங்களின் காட்சிக்கூடத்தையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம், வேடிக்கைக் கண்ணாடிகள் காட்சிக்கூடம், பெரியார் காட்சிக்கூடம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், ராமானுஜன் கணிதக்காட்சிக்கூடம், இந்திய விண்வெளி ஆய்வுக்காட்சிக்கூடம், உயிர் அறிவியல், கடல்சார் காட்சிக் கூடம், பாதுகாப்பு ஆராய்ச்சிக்காட்சிக்கூடம், அணுக்கரு ஆற்றல் காட்சிக்கூடம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் காட்சிக்கூடம் ஆகிய காட்சிக்கூடங்களை உள்ளடக்கியுள்ளது.

3. இந்த மையத்தில் ஆர்வம் ஊட்டும் வகையில் வெளிப்புறப் பரப்பளவில் வானவியல், அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் ஆகிய துறைகளில் அறிவியல் பூங்காக்கள், முப்பரிமாணத்திரையரங்கம், பரிணாம வளர்ச்சி பூங்கா மற்றும் மாநில அளவிலான ஆற்றல் பூங்கா ஆகியன பல்வேறு செய்திகளை உள்ளடக்கியவையாக அமைக்கப்பட்டுள்ளன.

4. பாதுகாப்பு ஆராய்ச்சிக் காட்சிக்கூடம் மற்றும் அணுக்கரு ஆற்றல் காட்சிக்கூடம் ஆகிய இரண்டு புதிய வசதிகள் அந்தந்தத்துறைகள் பற்றிய சிறப்பான செய்திகளை உள்ளடக்கியவையாக அமைக்கப்பட்டு, மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் அவர்களால் ஆகஸ்ட் 5, 2016 அன்று திறந்து வைக்கப்பட்டது.

5. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையமானது திருச்சியில் அண்ணா அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தையும், கோவையில் மண்டல அறிவியல் மையத்தையும், வேலூரில் மாவட்ட அறிவியல் மையத்தையும் நிறுவியுள்ளது.

6. செயல்பாடுகள்

* தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மாணாக்கர்களுக்கு பல்வேறுபட்ட வகைகளில் அறிவியல் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி முறையான அறிவியல் கல்வி கற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. அறிவியல் திறன் போட்டிகள், பயிலரங்குகள், சொற்பொழிவுகள், மாநில அளவிலான திறனறி மற்றும் ஊக்கமளித்தல் போட்டிகள், அறிவியல் மையத்தில் ஒரு நாள் நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர், ஆசிரியர் மற்றும் பொதுமக்களுக்கான பிற அறிவியல் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

* தற்காலிகக் கண்காட்சிகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் குறுகிய கால அறிவியல் வகுப்புகள், வானவியல் பயிலரங்குகள், வினாடி வினா போட்டிகள் ஆகியனவும் அறிவியல் தொழில்நுட்ப மையத்தினால் தொடர்ந்து நடத்தப்பட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபை அந்த ஆண்டிற்கான அறிவியல் தலைப்பை அறிவியல் பரப்புரை நிகழ்வுகளுக்காக வெளியிடுகிறது. இதனையடுத்து, அந்தந்தத் துறைகளில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் பல்வேறு நிகழ்ச்சிகளை மாணாக்கர்களின் நலனிற்காக நடத்துகிறது.

* வானவியல் நிகழ்வுகளின்போதும் மற்றும் தொடர் நிகழ்வாக இரவு நேர வானியல் நிகழ்வின் போதும் சிறந்த தொலை நோக்கிகளின் உதவியுடன் வான்நோக்கும் நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்காக இம்மையம் நடத்துகிறது. இது மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

*நடமாடும் அறிவியல் கண்காட்சி மற்றும் நடமாடும் கணிதக் கண்காட்சி ஆகியன தமிழகத்தின் அனைத்து உட்புறப் பகுதிகளுக்கும் சென்றடையும் வண்ணம் இயக்கப்படுகின்றன.

*தமிழகப் பள்ளி மாணாக்கர்களிடையே அறிவியல்பால் ஈர்ப்பு ஏற்படும் விதமாக, புத்தாக்க அறிவியல் பயிற்சி மற்றும் ஊக்கத் தொகை அளிக்கப்பட்டு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்புவரை பயிலும் மாணாக்கர்கள் பங்குபெற்று பயனடைந்து வருகின்றனர். இதுவரை 73,473 மாணாக்கர்களுக்கு தலா ரூ.5000 உடன், விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 10 மாணாக்கர்கள் ஜப்பானுக்கு அறிவியல் தொழில்நுட்ப கருத்துக்களையும் ஆராய்ச்சி நிலைகளையும் அறிந்துவர தேர்ந்தெடுக்கப்பட்டு ஜப்பானுக்கு சென்று வந்துள்ளனர்.

7.அறிவியல் தொழில்நுட்பப் கருத்துகளைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டுள்ள வசதிகள்

அறிவியல் தொழில்நுட்ப கருத்துகளைப் பரப்புவதற்காக கீழ்க்கண்ட வசதிகள் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அவர்களால் ஆகஸ்ட் 5, 2016 அன்று துவக்கி வைக்கப்பட்டன :

7.1. பரிணாம வளர்ச்சிப் பூங்கா, அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கம் திருச்சிராப்பள்ளி

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையமானது பரிணாம வளர்ச்சிப் பூங்கா ஒன்றினை அண்ணா அறிவியல் மையம், திருச்சிராப்பள்ளியில் ரூ. 70 இலட்சம் மதிப்பீட்டில் சென்னையில் உள்ள பரிணாம வளர்ச்சி பூங்கா அமைப்பினை போன்று அமைந்துள்ளது. இந்த பூங்கா ஆர்வமுள்ள பார்வையாளர்கள் பரிணாம வளர்ச்சி பற்றி தெரிந்துக்கொள்ள உதவுகிறது. இதுவரை சுமார் 29,250 பார்வையாளர்கள் இந்த வசதியை பார்வையிட்டு பயன் பெற்றுள்ளனர்.

7.2. புதுமைகாண் மையம், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை

சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் ஒரு புதுமைகாண் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு பயன்பாட்டுக் கருவிகளை மாணவர்கள் இயக்கவும், அவற்றைப் பிரித்து பின்னர் மீண்டும் இணைக்கவும் கற்றுக்கொள்வார்கள். புதுமையான கருத்துக்களை உருவாக்கி செயல்வடிவம் தர அவர்களுக்கு உதவும் வண்ணம் இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 530 மாணாக்கர்கள் பயிற்றுவிக்கப்பட்டு பயன் பெற்றுள்ளனர். பல மாணாக்கர்கள் இந்த வசதியை பயன்படுத்தி அறிவியல் தொழில்நுட்பக் கருத்துக்களை கற்று அறிவை வளர்த்துக் கொள்கின்றனர்.

7.3. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி காட்சிக்கூடம், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை

நாட்டின் பாதுகாப்பு படைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சி விவரங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மைய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (Defence Research and Development Organisation) மூலமாக “இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி” காட்சிக்கூடம் சென்னையிலுள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 1,55,000 பார்வையாளர்கள் இக்காட்சிக்கூடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

7.4. அணுக்கரு ஆற்றல் காட்சிக்கூடம், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை

அணு ஆற்றல் மீதான தவறான எண்ணங்களை நீக்கி ஆதாரமற்ற அச்சத்தைப் போக்கும் பொருட்டு, அணு ஆற்றலை சமுதாயத்தின் ஆக்கபூர்வமான பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படும் வழிமுறைகள் அடங்கிய அணுக்கரு ஆற்றல்காட்சிக்கூடம் (Hall of Nuclear Energy) ஒன்று, மத்திய அரசின் அணுக்கரு ஆற்றல் கழகத்தின் (Nuclear Power Corporation of India Limited) நிதி உதவியுடன் ரூ. 2.4 கோடி மதிப்பீட்டில் சென்னையிலுள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 1,55,000 பார்வையாளர்கள் இக்காட்சிக்கூடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

7.5. முப்பரிமாண அறிவியல் அரங்கு, மாவட்ட அறிவியல் மையம், வேலூர்

ஆழ்ந்து உணரும் வகையில் அறிவியல் கருத்துக்களை வழங்கினால் அவற்றை எளிதாகத் தெரிவித்துவிடலாம். மனதைக் கவரும் வகையில் அறிவியல் கருத்துக்களை வழங்க முப்பரிமாண ஒளிப்படக்காட்சியரங்கு உதவும். மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு ரூ. 23 இலட்சம் செலவில் ஒரு முப்பரிமாண அரங்கு வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

8. அறிவியல் தொழில்நுட்பக் கருத்துகளைப் பரவலாக்க 2017 - 18 -ஆம் ஆண்டில் கீழ்க்காணும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் :

8.1. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் எண்ணிலக்கக் கோளரங்கம் புதிதாக அமைத்தல்

வானவியல் மற்றும் வான் இயற்பியல் குறித்த செய்திகளை சிறப்புற வழங்கும் பொருட்டு நவீன தொழில்நுட்ப எண்ணிலக்க மின்னணு கருவியுடன் கூடிய கோளரங்கம் ஒன்று தற்போதுள்ள கோளரங்கத்தில் புதிதாக அமைக்கப்படும். இது வானவியல் கோட்பாடுகளை சிறந்த செயலாற்றலுடன் தெளிவாக விளக்கும் தன்மையுடையது. இந்த எண்ணிலக்கக் கோளரங்க அமைப்பு ரூ. 10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.

8.2. கோயம்புத்தூர், மண்டல அறிவியல் மையத்தில் புதுமைகாண் மையம் நிறுவுதல்

கோயம்புத்தூரில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் ரூ. 180 இலட்சம் மதிப்பீட்டில் புதுமைகாண் மையம் ஒன்று அமைக்கப்படும். இங்கு கண்டுபிடிப்புக்கூடம், கருத்து ஆய்வுக் கூடம், பிரித்து மீண்டும் உருவாக்கும் பகுதி, பயனற்றவை என ஒதுக்கும் பொருள்களிலிருந்து புதியன உருவாக்கும் பகுதி, கருத்துப் பெட்டி பகுதி என பல்வேறு பகுதிகள் அமைக்கப்படும். அறிவியல் கோட்பாடுகளைப் புரிந்து கொள்வதற்கும், தங்களுடைய புத்தாக்கத் திறமைகளை வளர்ப்பதற்கும் மாணவர்களுக்கான வாய்ப்புகளை இவை வழங்கும். இந்திய அரசின் பண்பாட்டு வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள தேசிய அறிவியல் அருங்காட்சியகம் (NCSM) மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஆகியவை இணைந்து 50:50 என்ற விகிதத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

8.3. திருச்சிராப்பள்ளி, அண்ணா அறிவியல் மையத்தில் புதுமைகாண் மையம் நிறுவுதல்

நவீன தொழில்நுட்பங்கள், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் வாய்ப்பை வழங்குவது புதுமைகாண் மையத்தின் முக்கிய நோக்கமாகும். திருச்சிராப்பள்ளி, அண்ணா அறிவியல் மையத்தில் ரூ. 150 இலட்சம் மதிப்பீட்டில் புதிய புதுமைகாண் மையம் (Innovation Hub) நிறுவப்படவுள்ளது.

இந்த புதுமைகாண் மையம் மாணவர்களிடையே புதிய கண்டுப்பிடிப்புகளை மேற்கொள்வதற்கு ஊக்குவித்து எதிர்காலத்தில் அறிவியல் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்குவதற்கு உதவுகிறது. இந்திய அரசின் பண்பாட்டு வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள தேசிய அறிவியல் அருங்காட்சியகம் (NCSM) மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஆகியவை இணைந்து 50:50 என்ற விகிதத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

8.4. சென்னை , திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் அறிவியல் மையங்களில் குறுங்கோளரங்கங்கள் நிறுவுதல்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையமானது, சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் அமையப் பெற்றுள்ள கோளரங்கங்களின் மூலமாக வானவியல் கருத்துக்களை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பரப்பி வருகின்றது. மாணவச் செல்வங்கள் பயனுறும் வகையில் நான்கு குறுங்கோளரங்கங்கள் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும் (சென்னையில் இரண்டு, திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூரில் ஒன்று).

8.5. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் வான் ஆய்வுக்கூடம் நிறுவுதல்

வான் ஆய்வுக்கூடம் என்பது மிகச் சிறந்த தொலைநோக்கிகள், பிம்பங்களைப் பெறுவதற்கான கருவிகள், பகுப்பாய்வு செய்யப் பயன்படும் கருவிகள் முதலியவை பொருத்தப்பட்ட ஓரிடமாகும். விண்வெளியில் காணப்படும் பொருள்களை பொதுமக்கள் உற்று நோக்கவும், வான் இயற்பியலில் ஆய்வுகளை மேற்கொள்ளவும் இக்கூடம் பயன்படும்.

நகரக்கூடிய குவியமைப்புடைய கூரையுடன் வடிவமைக்கப்பட்ட கட்டிடத்தில் இத்தொலைநோக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த குவியமைப்புடைய கூரையானது வானை நோக்கி திரும்புவதற்கும் மற்றும் திறப்பதற்குமான வசதியைப் பெற்றுள்ளது. இத்தகைய வான் ஆய்வுக்கூடம் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம்

1. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தமிழக அரசால் ஒரு தன்னாட்சி நிறுவனமாக 1984 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இம்மன்றம் பல்வேறு அறிவியல் துறைகளின் ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான தலைமை நிறுவனமாகும். நமது மாநிலத்தின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க பல அறிவியல் தொழில்நுட்ப திட்டங்களை இம்மன்றம் நிறைவேற்றி வருகிறது.

2. அறிவியல் தொழில்நுட்ப திட்டங்களின் பரவலாக்கத்திற்காக கடந்த 2011 - 12 ஆம் ஆண்டு முதல் 2016 - 17 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ரூ. 1200.70 இலட்சம் தொகையும் மற்றும் 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ. 194.61 இலட்சம் தொகையும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதன் மூலம் இம்மன்றத்தின் செயல்பாடுகள் அதிகரிக்கப்படுவதோடு, ஆய்வுகள் மற்றும் விரிவாக்க திட்டங்களின் வாயிலாக அதிகப்படியான பயன்களை பெற முடியும்.

3. மாணவர் ஆராய்ச்சித் திட்டம்

இத்திட்டத்தின் கீழ், பி.இ./பி.டெக்./பி.ஆர்க் மற்றும் முதுநிலை அறிவியல், மருத்துவயியல், வேளாண்மையியல், கால்நடை மருத்துவயியல் மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் இறுதியாண்டில் பயின்றுவரும் மாணாக்கர்களுக்கு ஒரு ஆய்வு திட்டத்திற்கு அதிகபட்சமாக ரூ. 10,000 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

சமூக பயன்பாடு கொண்ட மற்றும் நமது மாநிலத்திற்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. 2011 - 12 ஆம் ஆண்டு முதல் 2016 - 17 ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ. 110.92 இலட்சங்கள் செலவில் 1,550 திட்டங்களை இம்மன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனால் 3,650 மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர். 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ. 20 இலட்சம் செலவில் 250 மாணவர் ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

4. அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுத் திட்டங்கள்

அறிவியலறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உயிரியல், வேளாண்மை , சுற்றுப்புறச் சூழல், மருத்துவவியல், சமூகவியல் மற்றும் பொறியியல்/ தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் ஆய்வுகள் மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்படுகிறது. 2011 - 12 ஆம் ஆண்டு முதல் 2016 - 17 ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ. 193.15 இலட்சம் செலவில் 90 திட்டங்களை இம்மன்றம் நிறை வேற்றியுள்ளது. இதனால் 175 ஆய்வாளர்கள் பயனடைந்துள்ளனர். 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ. 35 இலட்சம் செலவில் 15 திட்டங்களை தொடர் திட்டமிடப்பட்டுள்ளது.

5. இளம் மாணவ அறிவியலறிஞர்கள் செயல் திட்டம்

இத்திட்டத்தின் மூலம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் ஆராய்ச்சிகளில் ஈடுபட ஊக்கமளிக்கப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணாக்கர்களுக்கு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் திறமை வாய்ந்த பேராசிரியர்களால் மே திங்களில் பல்வேறு அறிவியல் தொழில்நுட்பங்கள் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 2011 - 12 ஆம் ஆண்டு முதல் 2016 - 17 ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ. 132.10 இலட்சம் செலவில் 65 திட்டங்களை இம்மன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனால் 2,800 மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர். 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ. 15 இலட்சம் செலவில் 10 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

6. இளம் அறிவியலறிஞர்களுக்கு ஆதரவு ஊதியம் அளித்தல்

இத்திட்டத்தின் வாயிலாக 40 வயதுக்குட்பட்ட இளம் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொழில் நுட்பங்களின் நுணுக்கங்களை நன்கு கற்றுக் கொள்வதற்காக, ஒரு முதுநிலை அறிவியலறிஞருடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்யவும் அதிநவீன கருவிகளின் செயல்முறை தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளவும் ஊக்கப்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்படி அவர்களுக்கு தாங்கள் பணிபுரியும் தாயக நிறுவனங்களில் பெற்றுவரும் மாதச் சம்பளத்துடன் கூடுதலாக ஆதரவு ஊதியம் மாதந்தோறும் ரூ. 10,000 இரண்டு முதல் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும். 2011 - 12 ஆம் ஆண்டு முதல் 2016 - 17 ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ. 16.45 இலட்சம் செலவில் 135 ஆய்வாளர்களுக்கு இம்மன்றம் நிதியுதவி வழங்கி பயனடையச் செய்துள்ளது. இத்திட்டத்தை 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ. 3 இலட்சம் செலவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

7. கருத்தரங்கு மற்றும் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்கு பகுதி நிதியுதவி அளித்தல்

நமது மாநிலத்திலுள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அறிவியல் ஆய்வு குறித்து பரிமாற்றங்கள் செய்யவும், கலந்துரையாடவும் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நடத்த பகுதி நிதியுதவி வழங்கப்படுகிறது.

2011 - 12 ஆம் ஆண்டு முதல் 2016 - 17 ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ. 53.59 இலட்சம் செலவில் 215 திட்டங்களை இம்மன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனால் 1,000 மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பயனடைந்துள்ளனர். 2017 - 18 ஆம் ஆண்டில் இத்திட்டத்தில் ரூ. 10 இலட்சம் செலவில் 50 கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளுக்கு நிதியுதவி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

8 அறிவியல் தொழில்நுட்பத்தைப் பிரபலப்படுத்துதல்

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளிடையே பிரபலப்படுத்துவதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. அறிவியல் கண்காட்சிகள், பயிற்சி முகாம்கள், விரிவுரைகள் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறது. 2011 - 12 ஆம் ஆண்டு முதல் 2016 - 17 ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ. 50.79 இலட்சம் செலவில் 460 திட்டங்களை இம்மன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனால் 23,000 மாணாக்கர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பயனடைந்துள்ளனர். 2017 - 18 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் மூலம் ரூ. 7.50 இலட்சம் செலவில் 50 நிகழ்வுகளுக்கு நிதியுதவி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

9. இளம் அறிவியலறிஞர்களுக்கு பயண நிதி உதவி அளித்தல்

தமிழகத்திலுள்ள 40 வயதுக்கு கீழ் உள்ள இளம் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பன்னாட்டு மாநாடுகளில் கலந்து கொள்வதற்கு தேவையான விமான பயணத்தொகையில் 50 விழுக்காடு வரை நிதி உதவியும் மற்றும் அத்தகைய உள்நாட்டு மாநாடுகளில் பங்கு கொள்வதற்கு 100 விழுக்காடு இரயில் பயணக்கட்டணமும் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. 2011 - 12 ஆம் ஆண்டு முதல் 2016 - 17 ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ. 16.03 இலட்சம் செலவில் 92 அறிவியலறிஞர்களுக்கு இம்மன்றம் நிதியுதவி வழங்கி ஊக்குவித்துள்ளது. 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ. 2.50 இலட்சம் செலவில் ஆய்வாளர்களுக்கு தங்களுடைய ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகளைச் சமர்ப்பிக்க செல்வதற்கு உதவி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

10. அறிவியல் தொழில்நுட்ப வெளியீடுகளுக்கு நிதியுதவி அளித்தல்

இத்திட்டத்தின் நோக்கம், பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் நிறுவனங்கள்/அறிவியலறிஞர்கள் ஆசிரியர்கள் போன்றோரை தமிழில் அறிவியல் வெளியீடுகளை வெளிக்கொணர் ஊக்குவிப்பதாகும். 2011 - 12 ஆம் ஆண்டு முதல் 2016 - 17 ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ. 2.76 இலட்சம் செலவில் 24 வெளியீடுகளுக்கு இம்மன்றம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதனால் 24,000 மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ. 0.50 இலட்சம் செலவில் அறிவியல் வெளியீடுகளுக்கு நிதியுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

11. தமிழக அறிவியலறிஞர்கள் விருது

அறிவியல் தொழில்நுட்ப துறையில் குறிப்பிடத்தக்க அளவில் பணிகள் செய்த அறிவியலாளர்களை 'தமிழக அறிவியலறிஞர்கள் விருது' என்ற பெயரில் ரூ.50,000/- ரொக்கமும், சான்றிதழும் வழங்கி ஊக்குவிப்பது மற்றும் பெருமைப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் 1) வேளாண்மை 2) உயிரியல் 3) வேதியியல் 4) பொறியியல் தொழில் நுட்பம் 5) சுற்றுப்புறச் சூழலியல் 6) மருத்துவம் 7) கணிதவியல் 8) இயற்பியல் 9) சமூகவியல் 10) கால்நடை மருத்துவயியல் போன்ற துறைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2011 - 12 ஆம் ஆண்டு முதல் 2016 - 2017 ஆம் ஆண்டு வரை இம்மன்றம், மொத்தம் ரூ. 23.32 இலட்சம் செலவில் 50 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்துள்ளது. 2016 - 17 ஆம் ஆண்டில் ஆய்வாளர்களை ரூ. 7 இலட்சம் செலவில் கெளரவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வரும் 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ. 7 இலட்சம் செலவில் தொடர் திட்டமிடப்பட்டுள்ளது.

12. அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

நமது மாநிலத்திலுள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் கிராமப்புற மாணாக்கர்கள், விவசாயிகள் மற்றும் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 2011-12 ஆம் ஆண்டு முதல் 2016 - 17ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ. 38.55 இலட்சம் செலவில் 70 திட்டங்களை இம்மன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனால் 10,750 மக்கள் பயனடைந்துள்ளனர். 2017 - 18ஆம் ஆண்டில் ரூ. 6.50 இலட்சம் செலவில் 10 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

13 கிராமப்புற பள்ளிகளில் அறிவியல் கல்வியின் தரத்தை உயர்த்துதல்

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை அறிவியல் பாடங்களை நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களின் கற்பிக்கும் திறனை மேம்படுத்த, நமது மாநிலத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 5 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 2011-12ஆம் ஆண்டு முதல் 2016 -17ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ 55.68 இலட்சம் செலவில் 70 திட்டங்களை இம்மன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனால் 3,500 ஆசிரியர்கள் பயனடைந்துள்ளனர். 2017 - 18ஆம் ஆண்டில் ரூ. 9 இலட்சம் செலவில் 10 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

14. புதுமைத் தொழில்நுட்பமும் பரவலாக்கமும்

புதிய மற்றும் பயனுள்ள வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை கல்வியாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் மூலம் உரிய பயனாளிகளுக்கு எடுத்துச் செல்ல தேவையான பயிற்சி மற்றும் பட்டறைகள் இத்திட்டத்தின் வாயிலாக ஏற்பாடு செய்யப்படுகின்றன. 2011 - 12ஆம் ஆண்டு முதல் 2016 - 17ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ 51.05 இலட்சம் செலவில் 98 திட்டங்களை இம்மன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனால் 3,000 மாணவர்கள் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ. 9 இலட்சம் செலவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

15. கிராமப்புற மேம்பாட்டிற்கு அறிவியல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு

கிராமப்புற மக்களுக்கு அறிவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளின் பயன்களை தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் எளிதில் கொண்டு சேர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 2011 - 12 ஆம் ஆண்டு முதல் 2016 - 17ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ 66.10 இலட்சம் செலவில் 60 திட்டங்களை இம்மன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனால் 17,000 கிராமப்புற மக்கள் பயனடைந்துள்ளனர். 2017 - 18ஆம் ஆண்டில் ரூ. 10.00 இலட்சம் செலவில் 10 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

16. தொழில்துறைக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் வளர்த்தல்

தொழில்துறைக்கேற்றவாறு பட்டதாரிகளின் திறமைகளை மேம்படுத்துவதற்கும், அவர்கள் தாங்களாகவே சுயதொழில் தொடங்குவதற்கு ஊக்கப்படுத்தவும் பயிற்சி அளிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் (பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் உட்பட) இணைந்து இப்பயிற்சியினை அளிக்கின்றன.

2011 - 12ஆம் ஆண்டு முதல் 2016 - 17ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ 66.10 இலட்சம் செலவில் 60 திட்டங்களை இம்மன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனால் 14,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ. 10 இலட்சம் செலவில் 10 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

17. கல்லூரிகளின் ஆய்வு மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வு நிதியுதவி பற்றாக் குறையை களையும் திட்டம்

கல்லூரி ஆய்வு மாணவர்களின் ஆய்வுத் திட்ட வரைவுகளை கல்லூரிகளிலிருந்து பெற்று அவற்றுள் தேர்வு செய்யப்பட்ட ஆய்வுத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. 2011-12ஆம் ஆண்டு முதல் 2016 - 17ஆம் ஆண்டு வரை ரூ. 75 இலட்சம் செலவில் 25 மாணவர்கள் பயனுறும் வகையில் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ. 15 இலட்சம் செலவில் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

18. அரசு கல்லூரிகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கட்டமைப்பை மேம்படுத்துதல்

ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உகந்த அறிவியல் ஆய்வு கட்டமைப்புகளை அரசு கல்லூரிகளில் மேம்படுத்துவதன் மூலம் உயர்கல்வி மாணவர்களின் ஆய்வுத்திறனை உயர்த்துவதே இத்திட்டமாகும். இதற்காக அரசு அறிவியல் கல்லூரிகளில் அறிவியல் ஆய்வுக் கட்டமைப்புகளான ஆய்வுக் கூட வசதி மற்றும் ஆய்வு உபகரண வசதி ஆகியவை மேம்படுத்தப்பட்ட நிதியுதவி வழங்கப்படுகிறது. 2011-12ஆம் ஆண்டு முதல் 2016 -17ஆம் ஆண்டு வரை ரூ. 60 இலட்சம் செலவில் 13 அரசு கல்லூரிகள் பயனுறும் வகையில் நிதியுதவி அளிக்கப்பட்டது. 2017 - 18 ஆம் ஆண்டில் மேலும் ரூ. 15 இலட்சம் செலவில் இத்திட்டத்தை தொடர் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி மன்றம்

1. பல்கலைக் கழகங்களின் மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி மன்றம் ஆகியவற்றுக்கு தொழில்நுட்பக் கல்வியின் தரம் மற்றும் நியமங்களை பேணுவதற்கு உதவிடவும், மாநிலத்தில் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சிக்காக தொலைநோக்கு திட்டங்கள் தயாரிக்கவும், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மேன்மை மையங்களை அடையாளம் காணவும், தேர்வுகளில் தேவையான சீர்திருத்தங்கள் செய்யவும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இன்றைய அளவிலான வளர்ச்சிகளுக்கேற்றப்படி பாடத்திட்டதைத் திருத்தி அமைக்கவும், 2010 ஆம் ஆண்டு தமிழ் நாடு சட்டத்தின்படி தமிழ் நாடு மாநில தொழில் நுட்பக் கல்வி மன்றம் நிறுவப்பட்டது.

2 . 2011 - 12 முதல் 2016 - 17 முடிய உள்ள ஆண்டுகளில் செய்த முக்கிய சாதனைகள்

i) தேசிய தர அங்கீகார வாரியத்தின் ஒருங்கிணைப்புடன், தரச் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக வாஷிங்டன் ஒப்பந்தம் மற்றும் 'அபெட்' முடிவுகள் (ABET - Accreditation Board of Engineering and Technology) அடிப்படையில் சென்னையில் 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் பன்னாட்டு மாநாடு நடத்தப்பட்டது.

ii) ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்கட்கும் புதிதாக பொறியியல் கல்வி பயில சேர்ந்த மாணவர்கட்கும் ஆங்கிலம் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த பிரிட்டிஷ் கவுன்சிலின் ஒத்துழைப்புடன் ஜூலை 2012ல் ஆங்கில மொழியில் இணைப்புப் பாதை கல்விப் பயிற்சி) சிறப்புப் பயிற்சி திட்டங்களை அண்ணா பல்கலைக் கழகம், சென்னை உடன் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்டது.

iii) அ) தொழில் நுட்ப ஆங்கிலம், ஆ) பொறியியல் பெளதிகம், இ) கணிதவியல் பாடங்கள் குறித்த கல்வி ஆதார ஏடுகள் இம்மன்றத்தால் பல்வேறு பொறியியல் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டன.

iv) ஆங்கில மொழி போதனையில் பிறமொழிச் சொல் பயன்பாட்டு முறைமைகள் குறித்து ஒரு பன்னாட்டு கருத்தரங்கம் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர்களைக் கொண்டு நவம்பர் 2014ல் அண்ணா பல்கலைக் கழகம், மற்றும் தொழில்நுட்பக் கல்வி தர மேம்பாடு திட்ட ஏதுவாக்கல் அலகின் ஒத்துழைப்புடனும் நடத்தப்பட்டது.

v) மார்ச் 2016 இல் நாஸ்காம் (NASSCOM) இன் ஒருங்கிணைந்த உற்பத்தி வளர்ச்சியில் அடிப்படைத் திறன் எனும் பயிற்சி இம்மன்றம், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மேம்பாட்டு மையம் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் 180 ஆசிரியர்களுக்கு சென்னை, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.

vi) மாநிலத்தில் தொழில் நுட்பக் கல்வியின் தரத்தினை மேம்படுத்த திருத்தப்பட்ட தொலைநோக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாநில உருது கழகம்

1. தமிழ்நாடு மாநில உருது கழகம் 2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் இக்கழகத்தின் தலைவர் ஆவார். தமிழ்நாட்டில் 20 கல்லூரிகளில் உருது மொழி பாடப்பிரிவும், 5 கல்லூரிகளில் அரபு மொழி பாடப்பிரிவும் நடத்தப்படுகிறது.

2. தேசிய வணிகர் கூட்டமைப்புடன் இணைந்து அகில இந்திய அளவில் தமிழ்நாடு மாநில உருது கழகத்தால் கவியரங்கம் நடத்தப்படுகிறது. இக்கழகம் உருது மொழியில் சிறந்து விளங்கும் இலக்கியத்திற்காக ரூ. 25,000 பரிசுத் தொகையுடன் கூடிய 'டாக்டர் அப்துல் ஹக்' விருதினை ஆறு கவிஞர்களுக்கும், உருது மொழி தேர்வுகளில் மாநில அளவில் இடம் பிடித்த மாணவர்களுக்கு தகுதிப் பரிசு மற்றும் பணப் பரிசுகளும் வழங்கப்படுகிறது.

2016-17ஆம் ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மாணாக்கர்கள் சேர்க்கை

கல்லூரிகளின் வகைகள்

சேர்க்கை விவரம்

இளநிலை

முதுநிலை

படிப்பு

கல்வியியல்

ஆராய்ச்சி மேற்படிப்பு

மொத்தம்

அரசு கல்லூரிகள்

64165

14499

2207

1281

699

82851

அரசு உதவிபெறும் கல்லூரிகள்

98507

23347

2106

2140

526

126626

பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்

12819

408

20

0

27

13274

சுயநிதி கல்லூரிகள்

105623

17949

1373

69122

252

194319

மொத்தம்

281114

56203

5706

72543

1504

417070

2016-17 ஆம் ஆண்டில் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பட்டய வகுப்பு

மாணாக்கர்கள் சேர்க்கை விவரம்

கல்லூரிகளின் வகைகள்

கல்லூரிகளின் எண்ணிக்கை

பொது

பிற்பட்ட வகுப்பினர் (மற்றவர்)

பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)

மிகவும் பிற்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர்

ஆண்

பெண்

ஆண்

பெண்

ஆண்

பெண்

ஆண்

பெண்

அரசுக் கல்லூரிகள்

46

146

25

4294

696

493

43

4229

633

அரசு உதவிபெறும் கல்லூரிகள்

34

431

51

4705

517

651

28

2768

278

இணைப்புப் பயிலகங்கள்

5

15

1

92

0

8

0

63

0

சுயநிதி கல்லூரிகள்

418

6721

690

23366

1576

3656

116

19411

1160

பொறியியல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் நடத்தப்படும் |பட்டய நிலை வகுப்புகள்

*

137

12

72

5

3

1

35

4

உணவு மேலாண்மை பயிலகங்கள்

15

6

1

29

4

1

0

12

1

மொத்தம்

518

7456

780

32558

2798

4812

188

26518

2076

கல்லூரிகளின் வகைகள்

ஆதிதிராவிடர்

ஆதிதிராவிடர் (அருந்ததியர்)

பழங்குடியினர்

மொத்தம்

மொத்த சேர்க்கை

ஆண்

பெண்

ஆண்

பெண்

ஆண்

பெண்

ஆண்

பெண்

அரசுக் கல்லூரிகள்

2204

498

251

79

82

15

11699

1989

13688

அரசு உதவிபெறும் கல்லூரிகள்

1189

194

207

23

52

2

10003

1093

11096

இணைப்புப் பயிலகங்கள்

72

0

2

0

1

0

253

1

254

சுயநிதி கல்லூரிகள்

24262

3886

1678

347

887

159

79981

7934

87915

பொறியியல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் நடத்தப்படும் |பட்டய நிலை வகுப்புகள்

116

7

30

11

2

0

395

40

435

உணவு மேலாண்மை பயிலகங்கள்

12

0

0

0

0

0

60

6

66

மொத்தம்

27855

4585

2168

460

1024

176

102391

11063

113454

* பட்டய நிலை வகுப்புகள் சுழற்சி முறையில் ஐந்து பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன.

2016-17ஆம் ஆண்டில் பல்கலைக்கழக வளாகத்தில் பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை

வ.

எண்.

பல்கலைக்கழகத்தின் பெயர்

மாணவர்களின் எண்ணிக்கை

மொத்தம்

ஆண்

பெண்

1

சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை

522

661

1,183

2

அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்

11,113

10,205

21,318

3

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

953

924

1,877

4

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

9,550

6,457

16,007

5

பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்துார்

1,225

2,099

3,324

6

பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி

726

1,098

1,824

7

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்

-

766

766

8

அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி

1,486

3,244

4,730

9

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி

366

1,006

1,372

10

பெரியார் பல்கலைக்கழகம், சேலம்

1,549

2,254

3,803

11

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை

88

57

145

12

திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலுார்

106

168

274

13

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை

66

34

100

மொத்தம்

27750

 

28973

56723

2016-17ஆம் ஆண்டில் தொலைதூரக் கல்வி வாயிலாக பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை

வ. எண்

பல்கலைக்கழகத்தின் பெயர்

மாணாக்கர்களின் எண்ணிக்கை

மொத்தம்

ஆண்

பெண்

1

சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை

11,410

14,105

25,515

2

அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்

95,203

1,19,700

2,14,903

3

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

-

-

-

4

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

2,996

2,994

5,990

5

பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்துார்

47,236

66,544

1,13,780

6

பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி

5,797

9,331

15,128

7

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்

-

2796

2796

8

அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி

26,734

29232

55,966

9

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி

7,755

10,211

17,966

10

பெரியார் பல்கலைக்கழகம், சேலம்

37,000

30,000

67,361

11

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை

13,082

13,279

26,361

12

திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலுார்

-

-

-

13

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை

-

-

-

ஆதாரம் : கல்வித்துறை, தமிழ்நாடு அரசு

3.10526315789
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top