பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / கொள்கை விளக்கக் குறிப்பு / சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் - 7
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் - 7

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்கள்

தமிழ்நாடு அரசு, சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களான ஆதரவற்ற மற்றும் ஏழை, வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், வேளாண் தொழிலாளர்கள், விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் 50 வயது மற்றும் அதற்குமேல் வயதுடைய திருமணமாகாத பெண்கள் ஆகியோர்களைப் பாதுகாப்பதற்காக சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் வகையில் மாதாந்திர ஓய்வூதியத் தொகையாக ரூ1,000/- ஆக வழங்கி வருகிறது.

மத்திய அரசு கீழ்காணும் ஓய்வூதிய திட்டங்களுக்கு பகுதியாக நிதி வழங்குகிறது:-

வ எண்.

திட்டத்தின் பெயர்

தகுதிக்கான நிர்ணயம்

மத்திய அரசின் பங்களிப்பு

1

இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம்

60 முதல் 79

வயது வரை

ரூ200

 

80 வயது. மற்றும் அதற்கு மேல்

ரூ500

2

இந்திராகாந்தி மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய தேசியத் திட்டம்

18 முதல் 79 வயது வரை

ரூ300

3

இந்திராகாந்தி விதவைகள் ஓய்வூதிய தேசியத் திட்டம்

40 முதல் 79 வயது வரை

ரூ300

பயனாளிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, தகுதியான ஆதரவற்ற ஏழைகள் அனைவரும் பயனடையும் வகையில், 1962-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் படியான ஆதரவற்றோருக்கான நிபந்தனைகளை 2015-2016 ஆம் ஆண்டு அரசு தளர்த்தி வயது வந்த மகன் / மகள் இருந்தாலும் அவர்கள் ஒரே குடும்பமாக வசித்து வரும் பட்சத்தில் அவர்களும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்தால் ஓய்வூதியம் பெறும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும், அவர்களின் அசையா சொத்தின் மதிப்பு ரூ5,000 மிகாமல் இருத்தல் வேண்டும் என்கிற விதியும் தளர்த்தப்பட்டு அதனை ரூ50,000 ஆக உயர்த்தியுள்ளது. மாற்றுத் திறனாளிகள் ஒய்வூதியம் பெற ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கியும் ஊனத்தின் தன்மை 60 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக குறைத்தும் அரசு ஆணையிட்டுள்ளது. தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மூன்று ஒய்வூதிய திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெற கீழ்கண்டவாறு தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:-

வ. எண்

திட்டத்தின் பெயர்

தகுதிக்கான நிர்ணயம்

1

இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம்.

* ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.

* வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

* 60 வயது அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.

2

இந்திராகாந்தி விதவைகள் ஓய்வூதிய தேசியத் திட்டம்

* ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.

* வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

* 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.

* விதவையாக இருத்தல் வேண்டும்.

3

இந்திராகாந்தி மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதிய தேசியத் திட்டம்

* வறுமைக் கோட்டிற்கு கீழ்

உள்ளவராக இருத்தல் வேண்டும்.

* 18 வயது மற்றும் அதற்கு

மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.

* ஊனம் நிலை 80% மற்றும் அதற்கு மேல் இருத்தல் வேண்டும்.

தமிழ்நாடு அரசின் முழு நிதி ஆதாரத்துடன் செயல்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயன்பெற கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்: -

வ. எண்

திட்டத்தின் பெயர்

தகுதிக்கான நிர்ணயம்

1

மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்

* 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.

* ஊனத்தின் நிலை 40% மற்றும் அதற்கு மேல் இருத்தல் வேண்டும்.

* அசையா சொத்தின் மதிப்பு ரூ50,000க்குள் இருத்தல் வேண்டும்.

2

ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம்

* ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.

* 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.

* அசையா சொத்தின் மதிப்பு ரூ50,000க்குள் இருத்தல் வேண்டும்.

* விதவையாக இருத்தல் வேண்டும்.

3

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்.

* ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.

* 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.

* நிலமற்ற விவசாயத் தொழிலாளியாக இருத்தல் வேண்டும்.

* அசையா சொத்தின் மதிப்பு ரூ50,000க்குள் இருத்தல் வேண்டும்.

4

ஆதரவற்ற/ கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்

* ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.

* 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.

* சட்ட பூர்வமாக விவாகரத்து அல்லது குறைந்தது 5 ஆண்டுகள் கணவரால் கைவிடப்பட்டவராக இருத்தல் வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் இருந்து சட்டப்பூர்வமாக பிரிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

* அசையா சொத்தின் மதிப்பு ரூ50,000க்குள் இருத்தல் வேண்டும்.

5

50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட திருமணமாகாத உழைக்கும் திறனற்ற ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்

* ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.

* 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.

* திருமணமாகாத பெண்ணாக இருத்தல் வேண்டும்.

* அசையா சொத்தின் மதிப்பு ரூ50,000க்குள் இருத்தல் வேண்டும்.

உயிர்ப்புள்ளி அட்டையைப் (Bio-metric Smart Card) பயன்படுத்தி, பயனாளிகளை உறுதி செய்து வங்கிகள் மூலம் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களை வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. ஆண்டுக்கு இரு முறை பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளில் ஆண் ஒருவருக்கு ஒரு வேட்டியும், பெண் ஒருவருக்கு ஒரு சேலையும் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு கீழ்க்கண்டவாறு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது.

* அங்கன்வாடி மையங்களில் உணவு உட்கொள்ளாதவர்களுக்கு மாதம் ஒரு முறை 4 கிலோ வீதம் சன்ன ரக அரிசி.

* அங்கன்வாடி மையங்களில் உணவு உட்கொள்பவர்களுக்கு மாதம் ஒரு முறை 2 கிலோ வீதம் சன்ன ரக அரிசி.

விபத்து நிவாரணத் திட்டம்

44 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தைச் சார்ந்த வருமானம் ஈட்டும் பிரதான நபர் விபத்தின் மூலம் மரணமடையும் போது வாரிசுதாரருக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த நிவாரணத் தொகையினை ரூ15,000லிருந்து ரூ20,000ஆக , 31 டிசம்பர், 2015 முதல் உயர்த்தி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

நலிந்தோர் நிவாரணத் திட்டம்

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களில் இயற்கை மரணமடையும் பொருளீட்டக்கூடிய குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணத் தொகை ரூ10,000த்திலிருந்து ரூ20,000 ஆக, 31 டிசம்பர், 2015 முதல் உயர்த்தி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

ஆதாரம் : சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை

3.02564102564
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top