பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழக அரசு இலவச 104 மருத்துவ ஆலோசனை சேவை திட்டம்

தமிழக அரசு இலவச 104 மருத்துவ ஆலோசனை சேவை திட்டம் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

நோக்கம்

104 தொலைபேசி மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறும் புதிய சேவையை இதன்மூலம் 104 என்ற எண்ணுக்கு கட்டணமின்றி போன்செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்.

மருத்து சேவைகள்

  • பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள்
  • மருத்துவ ஆலோசனைகள்
  • தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள்
  • ரத்த தானம்
  • கண்தானம் பற்றிய தகவல்கள்,
  • தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள்,
  • ஊட்டச்சத்து குறித்த தகவல்கள்,

முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை இனி இலவசமாக பெறலாம்.

குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற முடியும்.

திட்டங்கள்

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முக்கியமான திட்டங்களை முன்னின்று நிறைவேற்று வதிலும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பற்றிய விவரங்களைக் கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்காக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தினைக் குறைத்திடும் வகையிலும், அவர்கள் பணி மேம்பாடு அடையும் வகையிலும் செயல்படுகிறது.

ஆதாரம்: மாவட்ட மருத்துவபணிகள் கழகம்

3.0
பிரபாகரன். ப Mar 16, 2019 03:45 PM

தமிழக அரசுக்கு எனது வாழ்த்துக்கள் இது போன்ற நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று நான் தமிழக அரசிடம் பணிவுடன் கேட்டு கொள்கிறேன்...

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top