பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பொது விநியோக திட்டம்

தமிழக அரசின் பொது விநியோக திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் குறிக்கோள், எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் ஆகும். பொது விநியோக திட்டம், அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது.

1. பொது விநியோக திட்டத்தின் நோக்கங்கள்

  • தமிழ்நாட்டில் உள்ள நீடித்த பட்டினி மற்றும் உணவு பற்றாக்குறையை நீக்க
  • அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து குடிமக்களை பாதுகாக்க
  • அத்தியாவசியமான பொருட்கள் வழங்குதல் மூலம், நுண் ஊட்டச்சத்து குறைப்பாட்டை குறைக்க
  • உள்நாட்டு எரிபொருள்களை (மண்ணெண்ணை மற்றும் எல்பிஜி) மலிவாக வழங்க
  • பயனாளிகள், நியாய விலைக் கடைகளை எளிதாக அணுக
  • ஏழை மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் வழங்க
  • ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில், அத்தியாவசியமான பொருட்களை வழங்க

2. பொது விநியோக திட்டத்தின் செயல்திறன்களை அமலாக்கம் செய்யும் முக்கிய உத்திகள்

  • அட்டைதாரர்கள் கொடுக்கும் புகார்களை திறம்பட கையாளும் முறைகள் செயல்படுகின்றது
  • ஏற்கனவே இருக்கும் நியாய விலைக் கடைகளுக்கு செல்ல சிரமம் உள்ள கிராமங்களுக்கு பகுதி நேர கடைகள் திறக்கப்பட்டுள்ளது
  • தற்காலிகமான மற்றும் பாதை வரைபடங்கள் மூலம் அத்தியாவசியமான பொருட்களை சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்புடன் ஒரு இடத்தில் இருந்து கடைகளுக்கு பரிமாற்றம் செய்யும் முறைகள்
  • மேம்படுத்தப்பட்ட முறைகள், வலுவான சட்ட அமலாக்கம் மற்றும் குற்றவியல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் முறைகேடுகளை தடுக்கும் முறைகள்
  • மின்னாளுகை மூலம் நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியமான பொருட்களை பிழை இல்லாத மற்றும் சரியான அளவுகளை ஒதுக்கீடு மற்றும் பரிமாற்றம் செய்யும் முறைகள்

3. பொது விநியோக திட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைகள்

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்திற்குறிய கொள்கைகளை, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வகுத்திருக்கிறது. இந்த கொள்கைகள், மாண்புமிகு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் தலைமையின் கீழ் மற்றும் அரசு செயலாளர் தலைமையின் கீழ் உள்ளது. பின்வரும் துறைகள், தமிழ்நாட்டின் பொது விநியோக திட்டத்தின் முக்கிய பங்குதாரர்கள்:

உணவு வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை (CS&CPD)

  • ஆணையரை தலைவராகக் கொண்டு 33 மாவட்ட அலுவலகங்கள் மற்றும் 285 தாலுக- மண்டல அலுவலங்களுடன் செயல்படுகிறது.

தமிழ் நாடு உணவு வழங்குதல் கழகம் (TNCSC)

  • பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள அத்தியாவசியமான பொருட்களை கொள்முதல், பரிமாற்றம் மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்புக்களை பெற்றுள்ளது. இக்கழகம் நிர்வாக இயக்குனர் தலைமையின் கீழ் செயல்படுகிறது.

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவகம் (RCS)

  • எல்லா மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நியாய விலைக் கடைகளை நடத்த பொறுப்பை பெற்றுள்ளது.
  • இச்சங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கூட்டுப் பதிவாளரின் துணையுடன் உள்ள பதிவாளரின் தலைமையின் கீழ் செயல்படுகிறது.

உணவு வழங்கல் முறையின் குற்றப் புலனாய்வுப் துறை

  • கடத்தல், பதுக்கல், கள்ளச் சந்தை போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு எதிராக வலுவான சட்ட அமலாக்கம் மற்றும் குற்றவியல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்றுள்ளது.

உணவு, நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது விநியோக அமைச்சரகம்

  • இந்திய அரசாங்கத்திற்கு கீழ், உணவுப் பொருட்களின் கொள்முதல் விலையை நிர்ணம் செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள மாநில அரசாங்கத்திற்கு மானிய உணவுப் பொருட்களை ஒதுக்கீடு செய்யும் பொறுப்புக்களை பெற்றுள்ளது.

இந்திய உணவு கழகம்

இது ஒரு இந்திய அரசாங்கத்தின் அமைப்பு. இந்த அமைப்பு அரிசி, கோதுமை மற்றும் மற்ற அத்தியாவசியமான பொருட்களை பல்வேறு மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள உணவு ஒதுக்கீடு அமைச்சரகத்தின் ஆணைகள் படி மாநிலங்களுக்கு பரிமாற்றம் செய்கிறது.

நியாய விலைக் கடைகள்

நிர்ணயிக்கப்பட்ட அட்டை எண்ணிக்கையை விட குறைந்த அளவு அட்டைகள் நியாய விலைக் கடையுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் அந்த கடைகளை பகுதி நேர கடைகளாக மாற்ற கோரிக்கை செய்யப்பட்டால், குறிப்பிட்ட காரணங்கள் (தொலைப் பகுதி, மலைப் பகுதி, நிலப்பகுதி – சட்டம் ஒழுங்கு பிரச்சினை) இருந்தால், அந்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். வாடகையற்ற இடம் வழங்குதல் மற்றும் ஏதாவது நிதி பொறுப்பை கிராம மக்கள் அரசுக்காக ஏற்றுக்கொண்டால், பகுதி நேர கடைகளை அரசு திறக்க அனுமதி வழங்கும். ஓவ்வொரு நியாய விலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள அட்டை எண்ணிக்கையை குறைத்து, பயனாளிகளுக்கு சிறந்த சேவையை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் எளிதாக நியாய விலைக் கடைகளை அடையாம் காணவும் மற்றும் நியாய விலைக் கடைகளை ஒரேசிராக அமைக்கவும், கடையின் வெளிப்புற மற்றும் உட்புற சுவர்களை ஒரே நிறத்தில் வண்ணம் பூசவும் மற்றும் விளக்குகளுடன் வினைல் பலகைகளை வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் எல்லா கடையிலும் சீராக அமைக்கவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றும் கண்ணாடி முகப்பு மேசை, எடையிடும் எந்திரம், அலமாரிகள், பொருட்களை காண்பிக்க எஃகு பாத்திரங்கள் எல்லா கடையிலும் சீராக அமைக்கவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உணவு வழங்குதல் கழகம் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளுக்கு மின்னனு எடையிடும் எந்திரங்கள் வழங்கப்படும். இதனால், பயனாளிகளுக்கு சரியான அத்தியாவசியமான பொருட்களின் அளவு கிடைக்கும். கடைகளில் மின்னனு எடையிடும் எந்திரங்கள் அறிமுகப்படுத்திய பின்னர், பொருட்களின் எடை தொடர்பாக உள்ள புகார்கள் குறைந்துவிட்டது.

நியாய விலைக் கடைகளில் அன்றாடம் நடைப்பெறும் பரிவர்த்தனைகள் நிகழ்நேரத்தில் காட்ட, கடைகளுக்கு விற்பனை முனையம் வழங்கப்படும். இந்த விற்பனை முனையத்தால் இரண்டு விலை பட்டியல், அதிகமான விலை, அதிகமான பொருட்களின் அளவு மற்றும் அதிக உரிம அளவு போன்ற செயல்முறைகள் நீக்கப்படும்.

நியாய விலைக் கடையின் சிறந்த செயல்பாட்டிற்காக, கடைகளை தவறாமல் ஆய்வு செய்ய, அதிகாரிகளுக்கு இலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை நகரில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு துணை ஆணையாளர்களால் கண்காணிக்கப்படும். ஏதாவது ஒரு கடைக்காரர் ஆய்வு செய்தவை தடுத்தால், அந்த கடையை அமலாக்க அதிகாரிகள் தமிழ்நாடு உணவு வழங்குதல் கழகம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவகம் அதிகாரிகள் (நியாய விலைக் கடைகளை இயக்கும் முகவர்கள்) உதவியுடன் கடையை திறந்து கடையில் உள்ள பொருட்கள் மற்றும் கடையின் பதிவுகளை ஆய்வுசெய்ய முடியும். கடையில் முறைகேடுகள் இருந்தால், கடை ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிகைகள் எடுக்கப்படும்.

அத்தியாவசியமான பொருட்களை கண்காணித்தல்

முந்தைய மாதத்தில் கடையில் மீதமுள்ள பொருட்களின் 60 சதவீதப் பொருட்கள், கடைக்கு முன்கூட்டிய பொருட்களாக ஒவ்வொரு மாதம் 6 ஆம் தேதி முன் பதிவுசெய்யப்பட வேண்டும் என விதிமுறைகள் உள்ளது. மேலும் மீதமுள்ள பொருட்களின் 75 சதவீதப் பொருட்கள்; 15 ஆம் தேதி முன் மற்றும் 100 சதவீதப் பொருட்கள் 20 ஆம் தேதி முன் கடைக்கு முன்கூட்டிய பொருட்களாக பதிவுசெய்யப்பட வேண்டும். இந்த செயல்முறைகள் கண்காணிக்கப்படும். முன்கூட்டிய பொருட்களின் பதிவு சரியாக இல்லை என்பது கண்டறியப்பட்டால், அதற்குறிய காரணங்களை மண்டல இணைப் பதிவாளர்கள் விளக்கி மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து அதை சரிசெய்ய வேண்டும். இந்த சரிசெய்தல் செயல்முறை தமிழ்நாடு உணவு வழங்குதல் கழக அதிகாரிகளால் தாமதமாக செய்யப்பட்டால், வாரந்தோறும் செய்யப்படும் பொது விநியோக திட்டத்தின் கூட்டத்தில் அந்த மாவட்டத்தின் ஆட்சியர் இதை சரிபார்த்து தமிழ்நாடு உணவு வழங்குதல் கழகத்தின் மண்டல மேலாளர்கள் சரிசெய்ய உத்திரவுவிடுவார்

நியாய விலைக் கடையில் மின்னனு எடையிடும் எந்திரங்கள்

மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு, அத்தியாவசியமான பொருட்கள் குறைந்த அளவில் வழங்கப்படுகின்றது என்று புகார் கூறியுள்ளனர். இதனால், அரசு மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் இருபுறமும் இருந்து பார்க்கும் வண்ணம் உள்ள டிஜிட்டல் காட்சிப் பலகையுடன் அமைந்துள்ள மின்னனு எடையிடும் எந்திரங்களை வழங்கியது. இதனால், பயனாளிகள் பொருட்களை எடையிடும் போது காட்சிப் பலகையில் சரியான அளவு எடையிடப்படுகிறதா என்பதை பார்த்து உறுதி செய்ய முடியும். அனைத்து நியாய விலைக் கடைகளில் மின்னணு எடையிடும் எந்திரங்கள் அறிமுகப்படுத்திய பின்னர், குறைந்த அளவு பெரருட்கள் வழங்கப்படுகிறது என்று கூறப்படும் புகார்கள் குறைந்துவிட்டது.

குடும்ப அட்டைகள்

தமிழ்நாட்டில், குடிமக்கள் தங்களுக்கு விருப்பமான குடும்ப அட்டை வகைகளை தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். குடும்ப அட்டை வகைகள், வருமானம் அடிப்படையில் வழங்கப்படாது. குடும்ப அட்டை வகைகள் மற்றும் அந்த வகைகளுக்கு உரிமம் பெற்ற பொருட்கள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளது:

வரிசை எண்

அட்டை வகை

உரிமம் பெற்ற பொருட்கள்

1

பச்சை அட்டைகள் (அரிசி தேர்வு செய்த அட்டைகள்)

அனைத்து பொருட்களும்

2

வெள்ளை அட்டைகள் (சர்க்கரை தேர்வு செய்த அட்டைகள்)

அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும்

3

காக்கி அட்டைகள் (காவல் துறை மற்றும் சிறைச்சாலை துறையின் பணியாளர்களுக்குறிய அட்டைகள்)

அனைத்து பொருட்களும்

4

நீல அட்டைகள் (வனத்துறை அதிகாரிகளுக்குறிய அட்டைகள்)

அனைத்து பொருட்களும்

5

வெள்ளை நிற அட்டை

பொருட்கள் இல்லை

AAY குடும்ப அட்டைகள்

  • ஏழைக் குடும்பங்களில் இருந்து மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த குடும்பங்களின் குடும்ப அட்டைகளில் அந்யோதையா அண்ணா யோஜனா முத்திரை இடப்படும்.
  • அந்யோதையா அண்ணா யோஜனா திட்டத்தில் இருந்து, தகுதியற்ற குடும்பங்களை அகற்ற குறிப்பிட்ட காலத்தில் குடும்பங்கள் மாவட்ட ஆட்சியர்களால் ஆய்வு செய்யப்படும். தகுதியற்ற குடும்பங்கள் கண்டறியப்பட்டால், அந்த குடும்ப அட்டைகளில் அந்யோதையா அண்ணா யோஜனா முத்திரை அகற்றப்பட்டு, புதிய தகுதி உள்ள குடும்பங்களுக்கு அந்த முத்திரை வழங்கப்படும். இந்திய உச்ச நீதி மன்றத்ததால், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மிகவும் ஏழ்மையான மாவட்டங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில், அதிகபடியான ஏழ்மையான பயனாளிகள் உள்ளனர்.

திருநங்கைகளுக்கான குடும்ப அட்டைகள்

  • திருநங்கைகள், சமூக தொல்லைகளில் இருந்து பாதிக்கப்படுவதாலும், மற்றும் தங்கள் குடும்பங்களில் இருந்து விலகி மற்ற திருநங்கைகளுடன் வாழ்வதாலும், அவர்களுக்கு வழங்கும் குடும்ப அட்டைகளின் விதிமுறைகள் மாற்றப்பட்டது. அவர்களின் இக்கட்டான நிலையினால் தமிழ்நாடு அரசு, அவர்களுக்காக நல வாரியம் உருவாக்கி அடையாள அட்டைகளை வழங்குகிறது. மாவட்ட ஆட்சியர்கள், திருநங்கைகளின் அடையாள அட்டைகளை சரிபார்த்து, சரியானவர்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்க அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

வீடற்றவர்களுக்கான குடும்ப அட்டைகள்

  • மாநில அரசு, மாநிலங்களில் உள்ள வீடற்ற ஏழ்மையான நகர்ப்புற குடும்பங்களை பாதுகாக்க வழிமுறைகளை செயல்படுத்துகிறது. ஆட்சியர்களுக்கு, வீடற்ற நபர்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்க வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. நடைமேடை மற்றும் தெரு ஓரத்தில் வாழும் வீடற்ற நபர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்தின் அடுத்துள்ள வீட்டின் எண் பயன்படுத்தி அவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம்

தமிழ் நாடு அனைவருக்குமான பொது விநியோகத் திட்ட செயல்முறையைப் பின்பற்றுகிறது. அதில் வறுமைக் கோட்டிற்கு கீழ் மற்றும் வறுமைக் கோட்டிற்கு மேல் என்ற பாகுபாடு இல்லை. இருப்பினும் இம்மாநிலம் அந்தயோதயா அண்ணா யோஜனாவை (AAY) செயல்படுத்துகிறது மற்றும் தற்போது 18,63,185 அந்தயோதயா அண்ணா யோஜனா பயனாளர்கள் உள்ளனர். பிழை இல்லாக் கணக்கெடுப்பு முறை இல்லாததாலும் தற்போதைய குறியீட்டு முறையும் குறைபாட்டுடன் இருப்பதாலும் வறுமையை ஒழிக்க இத்திட்டம் தொடங்கப்பட்டது.

பொது விநியோகத் திட்ட அமைப்புமுறை

தமிழ் நாட்டின் பொது விநியோகத் திட்ட அமைப்புமுறை கொள்முதல், சேமிப்பு, உணவு தானிய வழங்கல் மற்றும் பரந்த நியாய விலைக் கடைப் பிணையம் மூலம் நுகர்வோர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பரிமாற்ற செயல்பாட்டைக் கண்காணித்தல், வழிமுறை, செயல்பாட்டு மீறல் அல்லது முறைக்கேட்டிற்க்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் போன்ற செயல்பாட்டு முறையைப் பின்பற்றுகிறது.

பொது விநியோகத் திட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள்:

  • உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
  • தமிழ் நாடு உணவுப் பொருள் கழகம்
  • இந்திய உணவுக் கழகம்
  • கூட்டுறவு சங்கங்கள்
  • மகளிர் சுய உதவிக் குழு

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை பொது விநியோகத் திட்ட ஒழுங்குமுறை பணிகளில் ஈடுபட்டுள்ளது. தமிழ் நாடு உணவுப் பொருள் கழகம் உணவுப் பொருட்களின் கொள்முதல் மற்றும் சேமிப்பு மற்றும் அதை நியாய விலைக் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்வது போன்ற பொறுப்புக்களை ஏற்றுள்ளது. கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை பணிகள் மாநில அளவிலான ஆய்வுக் குழு, மாவட்ட அளவிலான பறக்கும் படை மற்றும் பொருட்கள் வழங்கல் குற்றவியல் விசாரணைப் படைகளால் மேற்கொள்ளப்படுகிறது. இந்திய உணவுக் கழக கிடங்குகள் மற்றும் தமிழ் நாடு உணவுப் பொருள் கழக கிடங்குகளுக்கு இடையேயான உணவுப் பொருள் பரிமாற்ற செயல்முறையை மாவட்டக் கூட்டுறவு அமலாக்கப் பணி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிக்கிறது. திடீர் சோதனை மற்றும் குறைதீர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

நான்கு வகை அட்டைகள்

  • அரிசி அட்டை இள பச்சை நிறத்தில் உள்ள இவ்வட்டை அரிசியை நியாய விலைக் கடைகளிலிருந்து பெற விருப்புவோர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இவர்கள் மற்ற பொருட்களையும் பெறலாம்.
  • அடுத்த வகையான வெள்ளை அட்டை மூலம் நுகர்வோர்கள் அரிசியைத் தவிர சாதா ஒதுக்கீட்டை விட 3 கிலோ அதிக சர்க்கரை மற்றும் மற்ற பொருட்களை பெறலாம்.
  • மூன்றாவது வகையான பொருட்கள் இல்லா அட்டை மூலம் நுகர்வோர்கள் எந்த பொருளையும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பெற முடியாது. இந்த அட்டை முகவரி அடையாள அட்டையாக உபயோகப்படுத்தப்படுகிறது.
  • நான்காவது வகையான காக்கி அட்டை காவல் துறையில் மேலாளர் நிலை வரை உள்ள பணியாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இந்த அட்டை மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, சமையல் எண்ணெய், து.பருப்பு மற்றும் உ.பருப்பு பொது விநியோகத் திட்டத்தின் வழங்கும் விலையில் 50% இல் வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெய் பொது விநியோகத் திட்டத்தின் விலையில் வழங்கப்படுகிறது.

துறை விவர அமைப்பு

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் துறை விவர விளக்கப்படம்

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மாநில அளவில் கீழ்காணும் அமைப்புகளை கொண்டுள்ளது. மாநிலத்தின் தலைமை அலுவலகம், சென்னை - 5, சேப்பாக்கத்தில், எழிலகம் கட்டிடத்தில் உள்ளது. துணை ஆணையாளர்கள் தலைமையில் சென்னை நகரத்தில் 2 அலுவலகங்களுடன், 33 மாவட்ட அலுவலகங்கள் உள்ளது. 30 மாவட்ட வழங்கல் அலுவலகங்கள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் தலைமையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்ட வழங்கல் அலுவலகங்கள் ஒரு வட்டத்திற்கு ஒன்று வீதம் செயல்படுகின்றன. தற்போது 269 வட்ட வழங்கல் அலுவலகங்கள் உள்ளன.

அமலாக்கம்

பொது விநியோக திட்டம், அத்தியாவசியமான பொருட்களை மானிய விலையில் வழங்குவதாலும் மற்றும் அரிசியை இலவசமாக வழங்குவதாலும், சமூக விரோத கும்பல்கள் பொருட்களை பதுக்கி அதை கள்ளச் சந்தையில் விற்க முனைகின்றனர். எனவே, அரசு முயற்சிகள் எடுத்து இந்த சமூக விரோத குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை சட்டப்படி தண்டிக்க முயற்சிகள் எடுக்கின்றனர்.

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினரால், அமலாக்கம் செயல்முறைகள் செயல்படுகின்றன. மாநில அளவில், உதவி ஆணையாளர் மற்றும் பறக்கும் படை கண்காணிப்பாளர் உதவியுடன் உணவு பொருள் வழங்கல் ஆணையாளர், அமலாக்கம் செயல்முறைகளை செயல்படுத்துவார். மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் அமலாக்கம் செயல்முறைகளை செயல்படுத்துவார். ஓவ்வொரு மாவட்டத்திலும், பறக்கும் படை கண்காணிப்பாளர்கள் பொது விநியோக திட்டத்தின் செயல்முறைகளை கண்காணித்து அத்தியாவசியமான பொருட்களின் கடத்தலை தடுக்கின்றனர்.

பொது விநியோக திட்டத்தின் செயல்முறைகளில் செய்யப்படும் தவறான செயல்களை கண்டறிய, உணவு பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) பிரிவு மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு 1991 ஆண்டில் இருந்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றது.

உணவுப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி), சென்னை மற்றும் மதுரையில் ஒரு பொது ஆய்வாளர் மற்றும் இரண்டு காவல்துறை கண்காணிப்பாளர்கள் உதவியுடன் காவல்துறை தலைமை இயக்குனர் தலைமையின் கீழ் இயங்குகிறது. 21 பிரிவுகளை கண்காணிக்க சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் நான்கு காவல்துறை துணை ஆணையர்கள் உள்ளனர். இந்த பிரிவுகள் காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையின் கீழ் செயல்படுகின்றது. ஒவ்வொரு பிரிவின் ஆய்வாளருக்கும் உதவிக்கு ஒரு துணை நிலைப் பணியாளர் மற்றும் வாகனம் மற்றும் தொலைபேசி வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அமலாக்கம் குழு

உணவு பொருள் வழங்கல், தமிழ்நாடு உணவு வழங்குதல் கழகம், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவகம், மற்றும் உணவு பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) துறைகளில் உள்ள அதிகாரிகள்

மாவட்டங்களில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள்

  • பறக்கும் படை அதிகாரிகள்
  • ரயில்வே அதிகாரிகள்
  • உள்ளூர் காவல் துறை அதிகாரிகள்

அமலாக்கம் குழு அதிகாரிகளின் கடமைகள்

  • பொது விநியோக திட்டத்தின் கீழ் உள்ள அரிசி மற்றும் மண்ணெண்ணை பதுக்கல் மற்றும் கடத்தல் எதிராக தடுப்பு நடவடிக்கை
  • பொது விநியோக திட்டத்தின் கீழ் உள்ள பொருட்களை கள்ள சந்தையில் இருந்து பாதுகாப்பு
  • உள்நாட்டு சிலிண்டர்கள் கடத்தப்படுவதை கண்டுபிடித்தல்
  • நியாய விலைக் கடையில் நடக்கும் தவறான செயல்களை கண்டறிந்தல் மற்றும் பண மோசடி இருந்தால் குற்றவாளிகள் மேல் குற்றவியல் வழக்கு தொடங்கப்படும்
  • போலி கடைகளை கண்டுபிடித்து அவற்றை நீக்குதல்
  • பெட்ரோலியம் பொருட்களின் கலப்படத்தை தடுத்தல்

பெட்ரோலியம் பொருட்களின் சட்டவிரோதமான விற்பனையை தடுத்தல் மேலும் உள்ள பணிகள்

  • பொது விநியோக திட்டத்தின் கீழ உள்ள பொருட்களின் திருட்டை தடுக்க, சென்னை உட்பட்டு மற்ற மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்கள் பொதுவாக வெளியிடப்பட்டுள்ளது.
  • பொருட்கள் பறிமுதல் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 1000 வழங்கும், வெகுமதி திட்டம் உள்ளது. மற்றும் போலி அட்டை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 250 வழங்கும், வெகுமதி திட்டம் உள்ளது.
  • பொது விநியோக திட்டத்தின் கீழ உள்ள பொருட்களின் திருட்டிற்கு உதவும் வாகனம் மற்றும் ஓட்டுனர்களுக்கு, வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
  • மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் கடத்தலை தடுக்க, சிறப்பு திடிர் சோதனைகள் செய்யப்படும்.
  • அண்டை மாநிலங்களின் எல்லைகளில் உள்ள பகுதிகளில் தீவிர சிறப்பு திடிர் சோதனைகள் நடத்தப்படும். மற்றும் அரிசியை கடத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குகள் தொடங்கப்பட்டடும். இதனால், பொருட்களை கடத்தும் சமூக விரோத கும்பல்கள் மனதில் பயம் ஏற்படுத்தியுள்ளது.

பொது விநியோக திட்டத்தின் குறையுற்றோர் குறை தீர்த்தல் செயல்முறை

தமிழ்நாடு அரசு, நுகர்வோர் குறைகளை தீற்க்க மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளது. குடியிருப்பாளர்கள், குறைகளை இணையத்தளம் அல்லது மின்னஞ்சல் முறை மூலம் தீர்க்கலாம். மாநில அளவில், பொது விநியோகத் திட்டத்தின் கட்டணமில்லா உதவித் தொலைபேசி எண்: 1967 மற்றும் 1800-425-5901. தமிழ்நாட்டில் குடியிருப்பவர்கள், இந்த எண்கள் மூலம் ஏதேனும் சந்தேகங்கள்-புகார்கள்-ஆலோசனைகளை பெறலாம். மேலும் www.tnpds.com என்ற பொது இணையத்தளம் மூலம் புகார்களை பதிவு செய்யலாம். இதனால், குறையுற்றோர் குறை தீர்த்தல் செயல்முறை ஒருங்கிணைக்கப்பட்டு மாநிலங்களில் ஒரு ஒற்றைச் சாளர முறையாக அமைந்துள்ளது. இதன் மூலம் புகார்கள் மற்றும் குறைகள் எளிதாக பதிவு செய்ய முடியும்.

சமூக தணிக்கை

தமிழ்நாட்டில் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள நியாய விலைக் கடைகளில், சமூக தணிக்கை வருடத்தில் இரண்டு முறை (சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள்) நடத்தப்படுகிறது. இந்த அமைப்பின் கீழ், கிராமப்புற பகுதிகளில் செயல்படும் நியாய விலைக் கடைகளின் பதிவுகள், கிராம பஞ்சாயத்துகளில் உள்ள கிராம சாபா முன் சமூக தணிக்கைக்காக வைக்கப்படும். சமூக தணிக்கை மூலம் பெற்ற கருத்துகள் அடிப்படையில், பயனாளிகளுக்கு மண்ணெண்ணை வழங்க டோக்கன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை மூலம், மாத இறுதியில் கடையில் மண்ணெண்ணை கிடைக்க பெறாத பயனாளிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் அடுத்த மாதம் மண்ணெண்ணை வழங்க, டோக்கன்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் மாத இறுதியில், கடைகளில் பருப்பு வகைகள் கிடைக்க பெறாத பயனாளிகளின் பெயர்களை பதிவேட்டில் பதிவு செய்து அந்த பதிவேடு பராமரிக்கப்படுகிறது. இத்தகைய பயனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அதற்கு அடுத்த மாதம் பருப்பு வகைகள் வழங்கப்படும்

ஆய்வு மற்றும் கண்காணிப்பு அமைப்பு

 

மாநில அளவில், ஒவ்வொரு மாதமும் மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் பொது விநியோக திட்டத்தின் செயல்களை ஆய்வு செய்வார். கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அரசு செயலாளர், ஒவ்வொரு வாரமும் (திங்கட்கிழமை) தமிழ்நாடு மாநகராட்சி உணவு பொருள் வழங்கல் கிடங்குகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியமான பொருட்களை ஆய்வு செய்வார். மேலும், ஒவ்வொரு மாதமும், அரசு செயலாளர் உணவு பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) துறைகளில் செய்யும் அமலாக்க செயல்முறைகள் மற்றும் அத்தியாவசியமான பொருட்களின் பற்றுகை மற்றும் முறைகேடுகளுக்காக காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களை ஆய்வு செய்வார். மாநில அளவில், உணவு பொருள் வழங்கல் ஆணையாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒவ்வொரு மாதமும் பொது விநியோக திட்டத்தின் செயல்களை ஆய்வு செய்வார். மேலும் மாவட்ட குற்றவியல் நீதிபதிகள் தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மாநகராட்சி மற்றும் உணவு பொருள் வழங்கல் கூட்டுறவுகளின் மாவட்ட அதிகாரிகளுடன், ஒவ்வொரு வாரமும் (திங்கட்கிழமை) விநியோக திட்டத்தின் செயல்முறைகளின் தொடர்பாக உள்ள வட்ட கிடங்குகள் மற்றும் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதற்காக நியாய விலைக் கடைக்கு செல்லும் அத்தியாவசியமான பொருட்களை ஆய்வு செய்வார்கள்.

விலை கண்காணிப்பு அமைப்பு

விலை கண்காணிப்பு அமைப்பு, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் உள்ள மூன்று அமைப்புகளில் ஒரு அமைப்பாக செயல்படுகிறது.

விலை கண்காணிப்பு அமைப்பின் முக்கிய செயல்பாடுகள்:

பல நிறுவனங்கள் மூலம் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலை பட்டியல் விவரங்களை சேகரித்து அதை ஒப்பிட்டு பார்த்து, விலையில் மாற்றங்கள் இருந்தால் அரசிடம் பரிந்துரைகளை செய்ய வேண்டும்.

விலை கண்காணிப்பு அமைப்பு 1963 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, பெருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இணை இயக்குநர் பிரிவில் உள்ள சிறப்பு அதிகாரி தலைமையிலும் மற்றும் உணவு பொருள் வழங்கல் ஆணையாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.

சிறப்பு அதிகாரி, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் உள்ள பணியாளர்கள் உதவியுடன் செயல்படுகிறார் (ஒரு புள்ளியியல் அதிகாரி, மூன்று புள்ளியியல் ஆய்வாளர்கள், இரண்டு உதவி புள்ளியியல் விசாரணையாளர்கள் மற்றும் ஒரு மூத்த வரையாளர்).

32 மாவட்டங்களில், (சென்னை மாவட்டத்தை தவிர்த்து) 20 மாவட்டங்களில், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் இருந்து ஒரு புள்ளியியல் கண்காணிப்பாளர் அத்தியாவசிய பொருட்களின் விற்பனை மற்றும் விலைகளின் விவரங்களை சேகரிக்க, மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

விலை கண்காணிப்பு அமைப்பு மூலம் தரவுகள் சேகரிக்கப்படும் முறை

மாவட்டங்களில் புள்ளியியல் ஆய்வாளர்கள், மாவட்டத் தலைமையகம் மற்றும் மற்ற முக்கிய சந்தை நிலையங்களில் இருந்து அத்தியாவசியமான பொருட்களின் விலை விவரங்களை சேகரிப்பார்கள். அவர்கள், நாள் அடிப்படையில், 60 அத்தியாவசியமான பொருட்களின் விலை விவரங்கள், வாராந்திர அடிப்படையில் 146 அத்தியாவசியமான பொருட்கள்; மற்றும் மாநில எல்லை பகுதியின் விலை விவரங்கள், மற்றும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாத அடிப்படையில் 36 அத்தியாவசியமான பொருட்களின் விலை விவரங்களை உணவு வழங்கல் ஆணையர் அலுவலகத்தின் விலை கண்காணிப்பு அமைப்பிடம் வழங்குவார்கள்.

கூடுதலாக, விடுதிகளில் விற்கப்படும் பல்வேறு உணவு பொருட்களின் விலை விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் விலை விவரங்களை சரிபார்க்க, இந்த விவரங்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் அறிவிக்கப்பட்டும். மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விலை விவரங்கள் கண்காணிக்கப்படும்.

தலைமை அலுவலகத்தில், அத்தியாவசியமான பொருட்களின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விலை விவரங்கள், விலை கண்காணிப்பு அமைப்பு மூலம் முக்கியமான சந்தை நிலயங்களில் இருந்து சென்னை மாநகரில் தினசரி சேகரிக்கப்பட்டு அதின் சுருக்கமான குறிப்பு அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்.

மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கைகள் அடிப்படையில், பல்வேறு பொருட்களின் காலமுறை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு, இந்திய அரசு மற்றும் அண்டை மாநிலங்களில் அனுப்பப்படும்.

ஆவணங்கள் முக்கியமான மற்றும் அத்தியாவசிய ஒன்றாக இருப்பதால், மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட விலை விவரங்கள் இணைய இணைப்பு (ஆன்லைன்) மூலம் பெறப்படுகின்றன. மற்றும் அனைத்து காலமுறை அறிக்கைகள் இணைய இணைப்பு மூலம் உருவாக்கப்படுகின்றன.

இந்திய அரசின் ஆன்லைன் அறிக்கை நிலையங்களுக்காக உள்ள விலை சேகரிப்பு அமைப்பு:

24 அத்தியாவசியமான பொருட்களின் தினசரி மொத்த மற்றும் சில்லறை விலை விவரங்கள், சென்னை, திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மையங்களில் இருந்து ஆன்லைன் மூலம் இந்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் விவகார துறையிடம் அறிக்கை செய்யப்படும்.

விலை கண்காணிக்கும் குழு

தமிழ்நாடு அரசு, அத்தியாவசியமான பொருட்களின் விலைகளை சீரான அடிப்படையில், கண்காணிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது. இத்தகைய கண்காணிப்பு, அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வை முன்கூட்டியே அரசு அறிய உதவுகிறது.

அறிக்கைகள்

தினசரி, வாராந்திர, மாதாந்திர அறிக்கைகள் அரசுக்கு அனுப்பப்படுகின்றது. சந்தைகளில் இருந்து விலை விவரங்களை சேகரிக்கும் செயல்முறைகளை தவிர, சேகரிக்கப்பட்ட விலை விவரங்களை உறுதிப்படுத்த சங்கங்கள் தொடர்பு கொள்ளப்படும். இதனால், அத்தியாவசியமான பொருட்களின் தேவை மற்றும் வருகை விதம் கண்டறியப்படும். அத்தியாவசியமான பொருட்களின் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால், சந்தை நிலவரங்கள் மாற்றப்படும் போது, அவசர அறிக்கைகள் சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் மூலம் தயார் செய்யப்பட்டு, விலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக அரசிடம் அனுப்பப்படும்.

நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு

இந்த அமைப்பு, உணவு பாதுகாப்பை மட்டுமே செய்யாமல், நுகர்வோர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள விலை மற்றும் தரத்தின் நிபந்தனைகளின் படி சேவைகள் மற்றும் பொருட்கள் கிடைக்க வழிசெய்கிறது. நம்பிக்கையுடன் நவீன வணிக உலகின் சவால்களை எதிர்கொள்ள, நுகர்வோர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். எளிதில் ஏமாறக்கூடிய நுகர்வோர்களை ஏமாற்றுபவரை தடுக்க மற்றும் நுகர்வோர்களை நல்ல நிலைமையில் வைக்க, வர்த்தக நடைமுறைகள் அடையாளம் காணப்பட்டு ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும். மேலும் மாவட்ட கருத்தரங்கம் மற்றும் மாநில ஆணையம் மூலம் நுகர்வோர்களின் குறைகள் நிவிர்த்தி செய்யப்படுகிறது. மேலும் மாநில நுகர்வோர் உதவி தொலைபேசி மூலம் மாற்று தகராருகளின் குறைகளை திர்க்கும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. ஒழுங்குநெறி முறையில் செய்யப்படும் வர்த்தக நடைமுறைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் பற்றி நுகர்வோர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது. இதனால், நியாயமற்ற மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகள் கண்டறியப்பட்டு நீக்கப்படும்.

ஆதாரம் : உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு அரசு

3.07317073171
ஜோதி Sep 07, 2019 11:52 AM

எங்கள் பகுதியில் நியாயவிலை கடையில் வெளி பொருட்கள் கட்டாயமாக வாங்க வற்புறுத்துகின்றனர். சரியான விலையும் கூறுவது இல்லை. தகவல் பலகையிலும் சரியான விவரம் இல்லை

sakthivel.M May 18, 2019 04:54 PM

எங்கள் பகுதியில் நியாவிலைகடையில் அனைத்து பொருட்கள் அளவை விட மிக மிக மிக குறைந்த அளவு வழங்குகிறார் கேட்டால் அரசாங்கம் குறைவாகதான் தருகின்றது என்று கூறிவருகிறார்.இவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி......

Srinivasan Srinivasan Jan 06, 2019 05:32 PM

தமிழ் நாடு அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கின்றது. இந்திய மாநிலங்களில் தமிழ் நாடு சிறந்த முனனோடியாக திகழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top