பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பிரதம மந்திரியின் ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டம் (இந்தியா)

பிரதம மந்திரியின் ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டம் (இந்தியா) பற்றிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

பிரதான் மந்திரி ஸ்வாஸ்த்ய சுரக்ஷ யோஜனா (Pradhan Mantri Swasthya Suraksha Yojana) அல்லது பிரதம மந்திரியின் ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டம் ) என்பது இந்தியாவில் உள்ள மக்களுக்கு உச்சபட்ச மருத்துவ சேவை (tertiary level healthcare) கிடைப்பதில் உள்ள சமச்சீரின்மையைச் சரிக்கட்டும் நோக்கில் இந்திய நடுவண் அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமாகும். இத்திட்டம் மார்ச் 2006 ஆம் ஆண்டு ஒப்புதல் பெற்றது.

இத்திட்டத்தின் படி,

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிலையம் போன்ற நிறுவனங்கள் பின்வரும் ஆறு மாநிலங்களிலும் துவங்கப்படும்.

 1. பீகார் (பாட்னா)
 2. மத்தியப் பிரதேசம் (போபால்)
 3. ஒரிசா (புவனேஸ்வர்)
 4. இராஜஸ்தான் (ஜோத்பூர்)
 5. சட்டீஸ்கர் (இராஜ்பூர்)
 6. உத்தராஞ்சல் (ரிசிகேசம்)

முன்னமே துவங்கப்பட்டுள்ள பின்வரும் 13 மருத்துவக் கல்லூரிகள் 120 கோடி செலவில் மேம்படுத்தப்படும் (100 கோடி மத்திய அரசு தரும். மாநில அரசுகள் 20 கோடி செலவு செய்ய வேண்டும்)

 1. அரசு மருத்துவமனை, ஜம்மு
 2. அரசு மருத்துவமனை, சிறீநகர்
 3. கொல்கத்தா மருத்துவக்கல்லூரி, கொல்கத்தா
 4. சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் பட்ட மேற்படிப்பு நிறுவனம், லக்னோ
 5. மருத்துவ அறிவியல் நிறுவனம், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசி
 6. நிசாம் மருத்துவ அறிவியல்நிறவனம், ஐதராபாத்
 7. ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனம், திருப்பதி (பாதிச் செலவை திருப்பதி தேவஸ்தானமே ஏற்றுக் கொள்ளும்)
 8. அரசு மருத்துவக் கல்லூரி, சேலம்
 9. இராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனம், ராஞ்சி
 10. பெங்களு;ரு மருத்தவக் கல்லூரி, பெங்களுரு
 11. பி.ஜே. மருத்துவக்கல்லூரி, அகமதாபாத்
 12. கிராண்ட் மருத்துவக் கல்லூரி மற்றும் சர் ஜே.ஜே. மருத்துவமனைகள் குழுமம், மும்பை
 13. மருத்துவக் கல்லூரி, திருவனந்தபுரம்

2009 முதல் 2010 ஆம் ஆண்டு வாக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : இந்திய அரசு

2.94339622642
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top