பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஓய்வூதியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ உதவி

ஓய்வூதியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ உதவி குறித்த தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஓய்வூதியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ உதவி

1. அடையாள அட்டை வழங்குவது.

வாரிய தணிக்கைக் கிளையினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் மூலம் வாரிய மருந்தகத்தின் மூலம் அலுவலக ஓய்வூதியருக்கு மருத்துவ வசதி விரிவு படுத்தப்பட்டுள்ளது. மருந்தக அடையாள அட்டை நகல் ஓய்வூதயருக்கு அளிக்கப்படும், நகலினை மருந்துகத்தில் அளித்து அசலினை பெற்று மருத்துவ வசதியை பெற்றுக் கொள்ளலாம்,

2. குறிப்பாணை எண். 2 / 668 - P2 / 82 – தேதி. 31.12.82) இதன் மூலம் ஓய்வூதியர் மற்றும் அவரை சார்ந்தவர்கள் இவ்வசதி பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

3. அரசு மருத்துவ மனையில், அடையாள அட்டை காண்பித்து இலவச மருத்துவம் பெற்றுக் கொள்ளலாம். (K.Dis. No.826272 / all / 43 / 86, dt.29.12.86 of the director of Medical services and Family Welfare)

4. மருத்துவப்படி பெற்று வரும் அனைத்து குடும்ப ஓய்வூதியருக்கும் இந்த இலவச மருத்துவ வசதி அரசு மருத்துவ மனையில் கொடுக்கப்படுகிறது, (B.P.No.94, dt.2.3.87)

5. மாநிலத்தில் அடையாள அட்டை பெற்றுள்ள குடும்ப ஓய்வூதியர்கள் தலைமை அகநிலை தணிக்கை அலுவலகத்திலிருந்து, செயற் பொறியாளர்-இயக்குதல் & பராமரித்தல் அலுவலகத்தில் நேரடியாகவோ. தபால் மூலமாகவோ வழங்கப்படும்.  மருத்துவ அடையாள அட்டை காலாவதியாகிவிட்டால் செயற் பொறியாளர் - இயக்குதல் & பராமரித்தல் அவர்கள், தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு தலைமை அகநிலை தணிக்கை அலுவலரிடம் பரிந்துரை செய்வார் (குறிப்பாணை எண், 14236 / N-1 / 90 / 3, தேதி. 7.4.90.)

6. குடும்ப ஓய்வூதியரைப் பொருத்த வரையில் மருத்துவ அடையாள அட்டையானது வாரிய தணிக்கைப் பிரிவினால் மட்டுமே வழங்கப்படும், ஓய்வூதியர் விபத்தில் இறக்க நேரிட்டால் வாரிசுகளை பொருத்த மட்டில் அவர் எங்கு பணியாற்றி ஊதியம் பெற்று வந்தாரோ அந்த அலுவலக அதிகாரி அடையாள அட்டை வழங்குவார். (குறிப்பாணை எண், 64975 / P.2 / 83 -2, தேதி. 3.1.84).

7. தேவையான மருத்துவபடி அளிக்கப்படுவதால் மருத்துவ அடையாள அட்டை வழங்குவது நிறுத்தலாம், (க.எண். 34397 ,/N-1 / 87-6 / நாள்.  23.1.88.

8. பணியில் இருக்கும் போது இறக்கும் பணியாளருக்க மருத்துவ அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அவரது குடும்ப அங்கத்தினருக்கு வாரிய தணிக்கை பிரிவு மூலம் அளிக்கப்படுகிறது. (குறிப்பாணை எண். 64973 - P.2 / 83-2, நாள். 3.1.84).

9. 16.4.88 லிருந்து நிரந்தர பணியாளருக்க இணையாக காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊழியரை சார்நதவருக்கும். தற்காலிக ஊழியருக்கும் இலவச மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது,

10. இலவச மருத்துவ உதவி பணியாளர் அல்லாத குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் மற்றவருக்கும் அவரது காலம் வரை இவ்வசதி அளிக்கப்படுகிறது. (அரசு ஆணை எண். 535, நாள். 8.3.72).

11. பணியாளர் பணியிலிருக்கும் போது இறந்துவிட்டால் அவரது ஆண் வாரிசுதாரருக்கு மருத்துவ உதவி அளிப்பதின் மூலம் அவரை சார்ந்த அனைவருக்கும் அளிக்கப்படுகிறது.  பெண் வாரிசுதாருக்கு அளிக்கப்படும் மருத்துவ உதவியானது அவர் திருமணம் செய்யும் வரையிலோ அல்லது அவர் பணி மூப்பு அடையும் வரையிலோ இதில் எதில் முதலிலோ அதுவரை அளிக்கப்படுகிறது. (அரசு ஆணை 459 / A & FW / தேதி. 20.3.80)

மாதந்திர மருத்துவபடி

12. மாதந்திர மருத்துவபடி 1.12.95 முதல் ரூபாய். 50/- பி.மா உயர்த்தப்படுகிறது (வா.உ.எண். 256, நாள்.  30.8.95).

13. ஓய்வூதியதாரர்கள் (அ) பணிக்காலத்திற்கான ஓய்வூதியம் மற்றும் (ஆ) குடும்ப ஓய்வூதியம் சேர்த்து பெருவார்களே ஆனால், அவர்களுக்கு உண்டான மருத்துவப்படி பணிக்காலத்திற்கான ஓய்வூதியத்தோடு மருத்துவப்படி சேர்த்து வழங்கப்படும், ஓய்வூதியதாரர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்களே ஆனால் மருத்துவப்படி ஒய்வூதியத்தோடு வழங்க இயலாது.

14. கருணை தொகை பெருபவர்களுக்கு மருத்துவப்படி பெற தகுதி இல்லை.

15. பணி இறுதி நிலையில் ஈட்டிய விடுப்பை காசாக்கி கொள்ளும் காலத்திற்கு மாதந்திர மருத்துவபடி தரபடுவதில்லை (க.எண். 3507, நாள். 1.2.91).

16. ஓய்வூதியத்தை பங்கிட்டு தரும்பொழுது மாதாந்திர படியும் பகிர்ந்து அளிக்கப்படும்,

17. தற்காலிக பணி நீக்க காலம் ஈட்டிய விடுப்பு காசாக்கி கொள்ளும் காலம். மற்றும் சம்பளமில்லா விடுப்பு ஆகிய காலத்திற்கு மருத்துவப்படி வழங்கப்படமாட்டாது. (குறிப்பாணை எண். 76552 / நா.89-7 - 18.12.90).

18. ஓய்வூதியம் பெறுபவர் இறந்த பிறகு, குடும்ப ஓய்வூதிய பெறுபவர்க்கு மாதாந்திர படி வழங்கப்படும். (க.எண். 65264, நாள். 1.7.88).

19. தற்காலிக ஓய்வூதியம் பெறுபவர்களை மாதாந்திர மருத்துவபடி பெற தகுதி உண்டு. (வா.ஆ.எண். 6, நாள். 31.1.97).

மருத்துவ செலவு ஈடுசெய்தல்

20. பணியாளர் பணியில் இருக்கும்பொழுது இறந்து விட்டால், அவர்கள் ஓய்வு பெறும் நாள் வரை அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ செலவு ஈடு செய்யப்படும். மருத்துவபடி இறந்துவிட்ட பணியாளரின் ஓய்வு பெறும் நாளிலிருந்து வழங்கப்படும். மருத்துவ செலவு ஈடுகட்டுவதற்கு பதிலாக, குடும்பத்தினர் மாதாந்தில மருத்துவபடிக்கு விண்ணப்பித்தால் அனுமதிக்கப்படும். (குறிப்பாணை எண். 64026 . ந1 /  86-1 / நாள். 11.5.87). குடும்ப ஓய்வூதியதாரர்கள் மருத்துவப்படி கேட்டு மூன்று மாதத்திற்குள் விருப்பம் தெரிவிக்க வேண்டும். (வா.ஆ.எண். 246, நாள். 30.8.96) விருப்பம் தெரிவித்தபிறகு அதனை மாற்ற இயலாது. (க.எண். 63069,  நாள். 28.11.90) வாரிய பணியாளர்க்கு குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் என்ற முறையில் மாதாந்திர மற்றும் படியும் பணியாளர் என்ற முறையில் மருத்துவ செலவு ஈடுகட்டும் வசதி பெற முடியாது, பணியாளர் மருந்து ஈடு கட்டும் செலவுக்கு விண்ணப்பித்தால் அது மட்டுமே வழங்கப்படும். மாதாந்திர மருத்துவபடி வழங்கப்படமாட்டாது, மாதாந்திர மற்றும் படி பெறும் பணியாளர்கள். பணியாளர் என்ற முறையில் மற்றும் படி மட்டும் வழங்கப்படும். (க.எண். 54556, நாள். 20.3.95).

வெளி மாநிலங்களில் வசிக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்தவ செலவினை ஈடு கட்டும் செலவிற்கு பதிலாக, 1.2.88 முதல் மருத்துவபடி வழங்கப்படும்.

ஆதாரம் : தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

2.86956521739
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top