பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆளுமை மற்றும் பொறுப்புணர்வு செயல் திட்டம் (GAAP)

ஆளுமை மற்றும் பொறுப்புணர்வு செயல் திட்ட தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆளுமை குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிதலும் மதிப்பீடு செய்தலும்

தவறான ஆளுமையின் செயல்பாட்டினால் ஏற்படும் விளைவுகளை கண்டறிந்து, பாதிப்பின் நிலையை மதிப்பீடு செய்வது எவ்வாறு என்பதைத் தெரிந்து கொள்வதன் மூலம் சிறந்த ஆளுமை செய்ய முடியும்.

அ) ஆபத்துகள் அல்லது பாதிப்புகளை கண்டறிதல்

படி: 1 - ஆபத்துகளைக் கண்டறிதல்

1. புதுவாழ்வு திட்டத்தையும், அதன் செயல்பாடுகளையும் ஊறுவிளைவிக்கக் கூடிய அனைத்துக் காரணிகளையும் கண்டறிய வேண்டும்,

உதாரணமாக,

 • €€ முறையற்ற நிதி பயன்பாடு.
 • €€ முறையான கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளை பின்பற்றாமல், கொள்முதல் செய்தல்.
 • €€ நிர்வாகப் பொறுப்பிலுள்ளவர்களின் அதிகார துஷ்பிரயோகம்.

படி: 2 - பாதிப்பு / ஆபத்துக்களை மதிப்பிடுதல்

வாய்ப்புகள் * விளைவு = பாதிப்பு / ஆபத்திற்கான மதிப்பீடு

ஒரு செயல்பாட்டின் மூலம் அதிக பாதிப்புகள் ஏற்படுமானால் அது பலவீனமான ஆளுமைக்கு எடுத்துக்காட்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகளை நான்கு வகையாக மதிப்பீடு செய்யலாம்.

1. குறைவான பாதிப்பு / ஆபத்து

2. நடுத்தரமான பாதிப்பு / ஆபத்து

3. அதிகமான பாதிப்பு / ஆபத்து

4. மிக அதிகமான பாதிப்பு / ஆபத்து

படி : 3 - பிரச்சனை சரிசெய்தல்

விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை முறையாக தெரிவித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதின் மூலம் பிரச்சினை ஏற்படாமல் தடுத்தல் அல்லது பிரச்சினை ஏற்படும்போது அதை சீர்செய்தல்.

உதாரணம் :

உயர் வகுப்பு உறுப்பினர்களால் வறுமை ஒழிப்பு சங்கம் கையகப்படுத்தப்படுவதை தடுக்க,

 • €€ கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் விதிமுறைகளை பின்பற்றுதல்.
 • €€ மக்கள் நிலை ஆய்வு முறைகள் சரியாக பின்பற்றுதல்.
 • சமூக தணிக்கைக் குழுவின் தொடர்ச்சியான கண்காணிப்பு.
 • €€ சக அல்லது அருகில் உள்ள கிராமங்கள் ஆய்வு செய்தல்.

நமது திட்டத்தின் சிறந்த ஆளுமையினை மேற்கொள்வதற்கான பல வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன இருந்தும், ஏதேனும் ஒரு சில செயல்பாடுகளில் தவறான ஆளுமை மேற்கொள்ளப்பட்டால், அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து நிறுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், சரியான தீர்வுகளும் திட்ட வடிவமைப்பிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணம்: தகவல் பலகை, சமூக தணிக்கைக் குழு, கிராம சபை.

ஆயினும் தொடர்ந்து நடைபெறும் திட்ட செயல்பாடுகள் எதிர்காலத்தில் ஆளுமை குறைவின் மூலம் பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால் திட்ட செயலாக்கத்தில் முடக்கம் ஏற்பட்டு இலக்கு மக்களுக்கான பயன்கள் உரிய நேரத்தில் சென்றடையாமல் இருக்கக் கூடும். எனவே, அப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் பகுதிகள் எவை என கண்டறியப்பட்டு அவை ஐந்து தலைப்புகளாக பின்வருமாரு கொடுக்கப்பட்டுள்ளன. அவைகள் மூலம் சிறந்த ஆளுமையை பாதிக்கும் காரணிகள் மற்றும் இடர்களை கண்டறிந்து அதற்கான தடுப்பு முறைகளை நடைமுறைபடுத்தி சிறந்த ஆளுமையை உறுதி செய்யலாம்.

1. வெளிப்படைத்தன்மை

திட்டத்தின் அனைத்து செயல்பாடுகளையும் மக்களுக்கு எளிதில் புரியும்படி, மக்கள் அறிந்து கொள்ளும்படி பல்வேறு முறைகளில் தெரியப்படுத்துவது வெளிப்படைத் தன்மையாகும். அவ்வாறு செய்யும்போது சிறந்த ஆளுமையினை உறுதிசெய்யலாம்.

வெளிப்படைத் தன்மையினை ஆளுமை குறைவின் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கான காரணிகள், அதனால் ஏற்படும் விளைவுகள், அதற்கான தீர்வுகள் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வ. எண்

காரணிகள்

விளைவுகள்

தீர்வுகள்

1

தகவல் தொடர்பு

அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டம் பற்றிய விழிப்புணர்வு முழுமையாக இருக்காது.

 • ஒவ்வொரு குக்கிராமம் வாரியாக நேரிடையாக சென்று கூட்டம் நடத்த வேண்டும் மற்றும் தகவல் பலகையில் எழுத வேண்டும்.
 • குடியிருப்பு பிரதிநிதிகள் மக்களை நேரிடையாக சென்று சந்தித்து தகவல் தெரிவித்தல் வேண்டும்.
 • சுய உதவி குழு கூட்டங்கள் மற்றும் கூட்டமைப்பின் மூலம் தகவல் தெரிவித்தல் ஆட்டோ மற்றும் தண்டோரா மூலம் விளம்பரம் செய்தல் வேண்டும்.

2

இலக்கு மக்கள் தேர்வு

மக்கள் பங்கேற்பு இல்லாததால் சரியான இலக்கு மக்களை தேர்ந்தெடுக்க இயலாது.

மக்கள் பங்கேற்புடன் மக்கள் நிலை ஆய்வு நடத்தி இலக்கு மக்களை தேர்வு செய்ய வேண்டும்.

3

மக்கள் அமைப்புகளுக்கான நிர்வாகிகள் தேர்வு

 • மக்கள் பங்கேற்புடன் குடியிருப்பு பிரதிநிதி, நிர்வாகிகள் தேர்வு செய்யப்படமாட்டார்கள்.
 • அதிகாரம் படைத்தவர்கள் தனக்கு சாதகமான நபர்களை நிர்வாகிகளாக நியமிப்பர்.
 • ஆதிக்க உணர்வு உடையவர்களை நிர்வாகியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
 • குடியிருப்பு பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் பற்றி மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
 • மக்கள் பங்கேற்புடன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு தேவையான விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்.
 • பாரபட்சமின்றி தகுதியான நபர்களை தேர்வு செய்ய மக்களை தயார்படுத்த வேண்டும்.

4

பயனாளிகள் தேர்வு

 • சரியான பயனாளிகளை தேர்வு செய்ய முடியாது.
 • பயனாளிகளை முன்னுரிமைப்படுத்தி அதன்படி பயன்களை வழங்கமுடியாது.
 • சரியான பயனாளிகளை தேர்வு செய்யாமல் தவறான பயனாளிகளை தேர்வு செய்யப்படுவர்.
 • பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று பரிசீலனை செய்து முன்னுரிமைப்படுத்தி குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் பயனை வழங்குதல் வேண்டும்.
 • பயனாளிகள் தேர்வினை தகவல் பலகையின் மூலம் தெரிவிக்க வேண்டும்.
 • இலக்கு மக்கள் பட்டியலில் விடுபட்ட குடும்பங்கள் சேர்க்க வேண்டுமெனில், அவர்களிடம் மனுக்களைப் பெற்று முறையாக (மற்ற குடியிருப்பு பிரதிநிதிகள் அல்லது மற்றொரு VPRC, SAC மூலம்) நேரிடையாக ஆய்வு செய்து அறிக்கை அளித்து கிராம சபையில் பரிந்துரை செய்து ஒப்புதல் பெறலாம்.

2. ஆதிக்கம்

ஆதிக்கம் என்பது சில குறிப்பிட்ட நபர்கள் அல்லது சில அமைப்புகள் மக்கள் அமைப்புகளை கையகப்படுத்தி அவற்றின் நிர்வாகத்தில் தலையிட்டு சுதந்திரமாக செயல்படவிடாமல் அதன் ஆளுமையை பாதிக்க வைக்கும் நிகழ்வாகும். கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் செயல்பாடுகள் சரியாக செயல்படாமல் இருப்பதற்கு சிலரின் ஆதிக்கம் தான் காரணம்.

அ. தலைவர் (ஊராட்சி மன்ற தலைவர்) (தன் உள்ளுணர்வு பேசுதல்)

 • €€ எனக்கு வேண்டியர்களை இலக்கு மக்கள் பட்டியலில் சேர்த்து விட வேண்டும்.
 • €€ எனக்கு வேண்டியவர்கள் பொறுப்புகளில் வந்து நான் சொல்வதை கேட்க வேண்டும்.
 • €€ நான் சொல்லும் நபர்களுக்கு தான் தனி நபர்கடன் கொடுக்க வேண்டும்.
 • €€ நான் வந்த பிறகுதான் VPRC கூட்டம் நடத்த வேண்டும்.
 • €€ இப்படி VPRC என் ஆதிக்கத்தில் இருந்தால் தான் அடுத்த முறையும் நான் தலைவராக வரமுடியும்.
 • €€ தலைவர்ன்னா சும்மாவா?

ஆ. VPRC நிர்வாகிகள் (செயலாளர் / பொருளாளர்) (தனியாக வந்து தன் அடிமனதில் உள்ள உணர்வுகள் பேசுதல்)

 • €€ நான் கையெழுத்து இட்டால் தான் எல்லா வேலையும் நடக்கும், “செக் பவர்” நமக்கு தான் கொடுத்திருக்கிறார்கள்.
 • €€ நாங்கள் இன்றி எதுவும் நடக்காது. அதனால் எனது உறவினர்களுக்கு முதலில் உதவிகள் செய்யவேண்டும்.
 • €€ எனக்கு தேவையான உதவிகளை முதலில் எடுத்து கொண்டு மீதமுள்ளதை தான் மக்களுக்கு கொடுக்க முடியும்.

இ. PLF செயலாளர் (நிர்வாகிகள்) (தன் மன உணர்வுகள் பேசுதல்)

 • €€ காலம் காலமாய் PLF செயலாளராய் இருக்கேன் எனக்கு தான் எல்லாம் தெரியும். அதிகாரிகள் வந்தால் நான் தான் நல்லா பேசுவேன்.
 • €€ நான் சொல்வதை தான் எல்லா குழுவும் கேட்க வேண்டும். என்னை யாரும் எதிர்த்து கேள்வி கேட்க கூடாது.
 • €€ நான் சொல்லும் குழுவுக்கு தான் கடன் உதவி கொடுக்க வேண்டும்.
 • €€ இலக்கு மக்கள் இல்லாத குழுக்களுக்கு அமுதசுரபி நிதி வழங்கி அவர்களிடம் உதவி பெறுவேன்.

ஈ. கணக்காளர் (தனியாக பேசுதல்)

 • €€ இந்த சங்கத்தில் நான் தான் அதிகம் படித்தவர்.
 • €€ எல்லா வரவு செலவு கணக்குகளையும் நான் தான் எழுதுகிறேன். ரூ.200 என்று எழுதும் போது ஒரு ஜீரோ (0) சேர்த்து 2000 என்று எழுதினால் இவர்களுக்கு என்ன புரியவா போகின்றது.
 • €€ இவர்கள் எல்லோரையும் விட அதிக நேரம் நான்தான் VPRCயில் இருக்கிறேன். எல்லா விவரமும் எனக்குதான் தெரியும்.
 • €€ நான் சொல்வதை தான் இவர்கள் கேட்க வேண்டும்.
 • €€ எனக்கு வேண்டிய பட்டவர்கள் முதலில் உதவி பெற வேண்டும்.
 • €€ எந்த ஒரு நிதி வந்தாலும் சரியான முறையில் செலவு செய்தார்கள் என்று நான் சொன்னால் தான் அடுத்த தவணை நிதி வரும், இல்லை என்றால் வராது.
 • €€ எனக்கு மட்டும் தான் கேள்விக்கேட்கும் அதிகாரம் உண்டு.
 • €€ சகல மரியாதையையும் எனக்கு தான் எல்லோரும் தரவேண்டும்.
 • €€ எனக்கு வேண்டியவர்களுக்கு முதலில் உதவிகள் தரவேண்டும்.

உ. அரசியல்வாதி (துண்டுகாரர் உள் உணர்வு பேசுதல்)

 • €€ என் கட்சிக்காரரை இந்த சங்கத்தில் சேர்க்க வேண்டும்.
 • €€ என் கட்சிக்காரர்களுக்கு முதலில் உதவிகள் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் இதில் சதி நடப்பதாக போராட்டம் நடத்துவேன்.
 • €€ என் பகுதியில் நடக்கின்ற VPRC – PLF நிகழ்ச்சிகளுக்கு எனக்கு தான் முதல் மரியாதை செய்ய வேண்டும்.
 • €€ இப்படி நாலு பேருக்கு உதவி வாங்கி கொடுத்தால்தான் அதில் கொஞ்சம் தேத்தி வீடு வாசல் வாங்கலாமுல்ல.

ஊ. சாதிய அமைப்புகள்

 • €€ என் சாதிக்காரங்க தான் பொறுப்புகளில் வரவேண்டும்.
 • €€ என் சாதி தான் பழம்பெருமையானது. அதனால் எங்க சாதிக்காரர்களுக்கு தான் முதலில் உதவிகள் கிடைக்க வேண்டும்.
 • €€ அப்படி இவங்க செய்யலின்னா நம் ஊரில் இந்த சங்கம் இருந்திடுமா, கொளித்திட மாட்டோம்.

இப்படிப்பட்ட எண்ணங்கள் VPECயில் இருக்கின்ற வரை நல்ல சங்கமாக இது இருக்காது.

ஆளுமை குறைவினால் ஏற்படும் விளைவுகளும் அதன் தீர்வுகளும்

வ.எண்

காரணிகள்

விளைவுகள்

தீர்வுகள்

1

 • VPRC கையகப்படுத்துதல்:
 • ஊராட்சி மன்ற தலைவர். VPRCயில் உள்ள உறுப்பினர்கள்
 • கணக்காளர்
 • சமூக தணிக்கை குழு
 • குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள்
 • PLF செயலாளர்
 • ஜனநாயகம் பாதிக்கப்படும்
 • தவறான முடிவுகள் எடுக்கப்படும்
 • தன்னை சார்ந்தவர்களுக்கு பொறுப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும்
 • நிதி தவறாக பயன்படுத்தப்படும்
 • தனக்கு வேண்டியவர்களை பயனாளிகளாக தேர்வு செய்யப்படும்
 • பாரபட்சமான முடிவுகள் எடுக்கப்படும்
 • திட்ட செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும்
 • தவறான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்
 • பங்கேற்பின்றி முடிவுகள் எடுக்கப்படும்
 • நிதி கையாடல் செய்யப்படும்
 • உரிய நபர்களுக்கு பயன்கள் சென்றடையாது
 • குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் திட்டப் பயனை பெறுவதிலிருந்து புறக்கணிக்கப்படுவார்கள்
 • உயிர் மூச்சு கோட்பாடுகள் மீறப்படும்
 • பதிவேடுகள் பராமரிப்பதில் குறைபாடுகள் ஏற்படும்
 • திட்ட விதிகளின் படி வெளிப்படையாக VPRC உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
 • முறையான பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
 • சிறந்த VPRC-க்கு களப்பயணம் செல்ல வேண்டும்.
 • பொறுப்புகளையும், கடமைகளையும் உணரச் செய்ய வேண்டும்.
 • SAC, PFT மூலம் தொடர் கண்காணிப்பு மேற்க்கொள்ள வேண்டும்.

2

 • PLF கையகப்படுத்துதல்
 • முன்னாள் PLF நிர்வாகிகள்
 • சில குடியிருப்பு அளவிலான அமைப்புகள்
 • சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஊக்குனர்கள் பிரதிநிதிகள்
 • வெளிநபர்கள் மற்றும் சில தொண்டு நிறுவனங்கள்
 • இலக்கு மக்களுக்கு முழுமையாக கடன் சென்றடையாது
 • தவறான முடிவுகள் மேற்கொள்ளப்படும்
 • தனக்கு வேண்டிய குழுவில் உள்ளவர்களுக்கு கடன் கொடுக்கப்படும்
 • தனிப்பட்ட முறையில் முடிவுகள் ஏற்படும்
 • தவறான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்
 • பதிவேடுகள் பராமரித்தலில் குறைபாடு ஏற்படும்
 • மக்கள் பங்கேற்புடன் நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும்.
 • முறையான பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும்.
 • சிறப்பாக செயல்படும் PLF க்கு களப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.
 • PLF நிர்வாகிகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
 • பதிவேடுகள் பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி அறிக்கைகளை உரிய நேரத்தில் தர வேண்டும்.

3

 • தலையீடு
 • இலக்கு மக்கள் இல்லாதவர்கள் VPRC செயல்பாடுகளில் தலையீடு
 • SHG அமைத்தலில் NGO தலையீடு
 • அரசியல் பிரமுகர்களின் தலையீடு
 • VPRC நிர்வாகிகள் தேர்வில் அதிகாரம் படைத்தவர்களின் தலையீடு
 • VPRC செயல்பாடுகள் தடைபடுதல்
 • நிதி தவறான முறையில் கையாளப்படுதல்
 • தவறான நிர்வாகிகள் தேர்வினால் அனைவரின் கருத்துகளுக்கும் மதிப்பு கிடைப்பதில்லை
 • குழு செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும்

 

 • திட்டம் பற்றிய விழிப்புணர்வு அனைத்து மக்களும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் விளக்குதல்
 • திட்ட செயல்பாடுகளை வெளிப்படையாக செய்தல்

3. நிதி நிர்வாகம்

நிதி நிர்வாகம் என்பது மக்கள் அமைப்புகளாகிய கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு போன்றவற்றிற்கு வழங்கப்பட்ட நிதியை அந்த அமைப்புகள் உயிர் மூச்சு விதிகளை பின்பற்றி இலக்கு மக்கள் முழுமையாக பயனடைய செய்வதே சிறந்த நிதி நிர்வாகம் ஆகும்.

நிதி நிர்வாகத்தில் குறைபாடுகளோ, தவறுகளோ நடைபெறும் பொழுது பின் வரும் விளைவுகள் ஏற்படும்.

காரணிகள்

விளைவுகள்

தீர்வுகள்

 • நிதி நிர்வாகம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை.
 • நிதியை தவறாக பயன்படுத்துதல்.
 • நிதியை அபகரித்தல்.
 • நிதி பராமரிப்பை முழுமையாக கண்காணிப்பது இல்லை.
 • முறையான பதிவேடுகள் பராமரிப்பு இல்லை.
 • திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நிதியை பயன்படுத்தாமலிருத்தல்.
 • பயிற்சி நிறுவனங்களுக்கு பணம் கொடுப்பதில் காலதாமதம்.
 • தவறான அறிக்கை சமர்ப்பித்தல்.
 • திட்ட அளவில் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு நிதியை விடுவிப்பதில் கால தாமதம்.
 • ஒப்பந்தகாரர்களுக்கு பணம் செலுத்துவதில் / தருவதில் கால தாமதம்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் தவணை நிதியை பெறுவதற்கான முறையான வழிகாட்டுதல் இல்லை.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திடமிருந்து நிதி அறிக்கை பெறுவதில் உள்ள குறைபாடு மற்றும் கால தாமதம்.

 

 • வங்கி கணக்கு குறித்த தெளிவு இருக்காது.
 • VPRC யின் தீர்மானம் இன்றி பணம் எடுப்பது மற்றும் கொடுப்பது.
 • கணக்காளர், PLF செயலாளர், மற்றும் VPRC நிர்வாகிகள் போன்றவர்களால், பிற உறுப்பினர்கள் ஏமாற்றப்படுவார்கள்.
 • நிதி நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தகவல் பலகையில் தெரிவிக்காமலிருத்தல்.
 • தனக்கு சாதகமான நபர்களுக்கு நிதி உதவி செய்தல்.
 • நடப்பு தேதியில் உள்ள கையிருப்பு மற்றும் வங்கி இருப்பை அறிய முடியாது.
 • புதிய செயல்பாடுகளை செய்வது கடினமாகிறது.
 • நிதி சார்ந்த செயல்பாடுகளை கணக்கில் கொண்டுவர மாட்டார்கள்.
 • குறைவாக செலவு செய்து கணக்கில் அதிகமாக செலவை எழுதுவது.
 • செலவின சீட்டுகளை திருத்துவது.
 • உரிய நேரத்தில் தேவையான உதவியினை பெற இயலாது.
 • VPRC திட்டத்தின் அடிப்படையில் செயல்படாததால் அடுத்த தவணைகளை பெறுவதில் காலதாமதம்.
 • பெரும்பாலான வேலைகள்/ சேவைக்கு காசோலையாக வழங்காமல் பணமாக வழங்குவது, அதன் மூலம் கையூட்டு பெறுவது.
 • முறையாக தொடர் கண்காணிப்பு இல்லாததால் நிதி நடவடிக்கைகளில் தவறுகள் ஏற்படுவது.
 • தவறான அறிக்கையால் VPRC-ன் நிதி நடவடிக்கைகளை பற்றிய உண்மை நிலையை அறிய முடியாது.
 • தவறான அறிக்கையால் எதிர்காலம் திட்டமிடுதலில் குளறுபடி / தாமதம் ஏற்படுகிறது.
 • லஞ்சம், ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
 • உரிய நேரத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு நிதி சென்றடையாததால் இலக்கு மக்களுக்கு பயன்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை.
 • ஒப்பந்தகாரர்களிடமிருந்து சேவையை / வேலையை குறித்த நேரத்தில் பெற இயலாது.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் இலக்குகள் அடைவதில் கால தாமதம் / செயல்பாட்டில் தொய்வு ஏற்படும்.
 • வறுமை ஒழிப்பு சங்கத்தின் உண்மையான நிதி விபரங்களை, நிதி நிலையினை அறிய முடிவதில்லை.

1. நிதி நிர்வாகம் குறித்த பயிற்சிகளை முறையாக, முழுமையாக மற்றும் தொடச்சியாக அளிப்பது.

2. களப்பயணம் மேற்கொள்வது.

3. கணக்காளருக்கு, VPRC செயலாளருக்கு, பொருளாருக்கு பதிவேடுகள் பராமரிப்பு குறித்த பயிற்சி தருவது.

4. தகவல் பலகையில் நிதி செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு நிலையிலும் தெரிவிப்பது.

5. VPRC ஒப்புதலின்றி, தீர்மானமின்றி எந்த நிதி நடவடிக்கையும் செய்யாமலிருப்பது.

6. குடியிருப்பு வாரியாக பயனாளிகள் பயனடைந்த விவரத்தினை தகவல் பலகையில் தொடர்ந்து எழுதுவது.

7. அனைத்து செலவுகளையும் காசோலைகளின் மூலம் மட்டுமே மேற்கொள்வது.

8. அறிக்கைகள் தயாரிப்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிப்பது, மேலும் உரிய நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க செய்வது.

9. சமூக தணிக்கை குழுவிற்கு தணிக்கை குறித்த பயிற்சி, பதிவேடுகள் பராமரிப்பு பயிற்சி மற்றும் நிதி நிர்வாகம் குறித்த பயிற்சி தருவது.

10. ஆண்டிற்கொரு முறை தணிக்கை செய்வது, தணிக்கையாளரின் அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுப்பது.

11. ஒவ்வொரு கிராம சபையிலும், நிதி அறிக்கையை சமர்பித்து ஒப்புதல் பெறுவது.

12. நிதி திட்டத்தின் அடிப்படையில் செலவுகளை மேற்கொண்டு இலக்குகளை அடைந்து, அடுத்தடுத்த தவணை நிதியை பெறுவது. நிதி நிர்வாகத்தில் குறைபாடுகளோ, தவறுகளோ நடைபெறும் பொழுது பின் வரும் விளைவுகள் ஏற்படும்.

 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் இலக்குகளை அடைந்து விட்டதை சரிபார்த்து ஆவணங்களை பெற்றவுடன் நிதியை வழங்கிட வேண்டும்.
 • ஒப்பந்தப்படி ஆவணங்களை பெற்று உடனடியாக காசோலையை விடுவிக்க வேண்டும்.
 • குறித்த நேரத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்க இலக்குகளை அடைய வழி காட்ட வேண்டும்.
 • திட்ட அளவில் ஒரு தேதியை நிர்ணயித்து அறிக்கையை பெற வேண்டும்.

4. சமுதாய கொள்முதல்

கொள்முதல் என்பது நமக்கு தேவையான பொருட்கள், சேவைகள் மற்றும் வேலைகளை பெறுதல் ஆகும். நமது புதுவாழ்வு திட்டத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மாவட்ட திட்ட அலுவலகம் ஆகியவற்றில் கொள்முதல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

இதில் சமுதாய கொள்முதல் என்பது மக்களுக்கு புதிய செயல்பாடாகும். இதுவரை அரசு அலுவலகங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட சில விதிமுறைகளை இங்கு பயன்படுத்தும் போது மக்களால் எளிதில் புரிந்து கொள்ள சிரமம் உள்ளது.

நமது திட்டத்தில் சமுதாய கொள்முதல் விதிமுறைகளை முறையாக பின்பற்றி ஆளுமை மற்றும் பொறுப்புணர்வுடன் கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு நாம் செய்ய தவறினால் மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் அல்லது ஆபத்துகளை சந்திக்க நேரிடலாம்.

சமுதாய கொள்முதலில் உள்ள ஆளுமை குறைவினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதற்கான தீர்வுகள்.

காரணிகள்

விளைவுகள்

தீர்வுகள்

கிராம அளவில் கொள்முதல் பற்றி போதிய தெளிவின்மை

 • கொள்முதல் விதிமுறைகள் மீறப்படுதல்.
 • விலைபுள்ளி பெறுதலில் பிரச்சினை.
 • தரமான பொருட்கள் உரிய விலை கொடுத்து வாங்குவதில்லை.
 • இடைதரகர்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
 • தரமற்ற பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.
 • கொள்முதல் செய்வதில் ஊழல் ஏற்படுகிறது.
 • கொள்முதல் வகைகளையும் விதிமுறைகளை மக்களுக்கு உணர்த்துதல்.
 • தேவையான, முறையான பயிற்சி அளித்தல்.
 • களப்பயணத்தின் மூலம் அனுபவத்தினை பெற வைத்தல்.
 • கொள்முதல் பற்றிய விழிப்புணர்வினை படங்கள், சுவர் விளம்பரங்கள் மூலம் ஏற்படுத்துதல்.

கொள்முதல் குறித்த சரியான திட்டமிடாமல் இருத்தல்

 • உரிய காலகட்டங்களில் தேவையான கொள்முதல் செய்வதில் பாதிப்பு.
 • விலை ஏற்ற தாடிநவு.
 • பயனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
 • முன்கூட்டியே திட்டமிட்டு உரிய காலங்களில் கொள்முதல் செய்ய VPRCக்கு, கொள்முதல் குழுவிற்கு பயிற்சியினை அளித்தல்.

தவறான சமுதாய கொள்முதல்

 • விலைபுள்ளியினை திருத்தம் செய்ய வாய்ப்பு உண்டாகும்.
 • விலைபுள்ளியில் தரம், அளவு, தேதி குறிப்பிடாமல் இருக்கும்.
 • தரமற்ற பொருட்கள் கொள்முதல் செய்யப்படும்.
 • இடைத்தரகர்களால், பணம் கையாடல் நடைபேற வாய்ப்பு ஏற்படும்.
 • சமுதாய கொள்முதலின் விதிமுறைகள் மீறப்படும்.
 • கொள்முதல் விவரங்கள் முறையாக பதிவேட்டில் எழுதப்படாமல் இருத்தல்.
 • விலை வங்கி பட்டியலை ஒப்பிடும் முறையை உணர்த்துதல்.
 • கொள்முதல் விதிமுறைகளின் அவசியத்தினை துணைக்குழு உறுப்பினர்களுக்கு உணர்த்துதல்.
 • விலை வங்கியினை மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதுப்பித்தல்.
 • நேரடிக் கொள்முதலின் அவசியத்தினை உணர்த்துதல்.
 • சமூக தணிக்கை குழு, திட்டப் பணியாளர்களால் முறையான தொடர்ச்சியான கண்காணிப்பினை அளித்தல்

கொள்முதல் குழு செயல்பாடுகளில் குறைபாடு

 • சரியான கொள்முதல் நடைபெறாது
 • தேவையற்ற பொருட்களை வாங்குவதால் வீண் செலவு ஏற்படும்.
 • தகுதியான, நேர்மையான மற்றும் விவரம் தெரிந்த உறுப்பினர்களை கொள்முதல் குழுவில் சேர்த்தல்.
 • தேவையான சிக்கன வழிமுறைகளை உணர்த்துதல்.
 • போதிய பயிற்சிகளை அவ்வப்போது அளித்தல்.
 • பொருள் வாங்கும் பொழுது அந்த பொருள் குறித்த அனுபவம் வாய்ந்த உறுப்பினரை கொள்முதலில் சேர்த்தல்.

சரியான சேவை நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படாமை

 • தரமற்ற நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும்
 • தரமான சேவை (பயிற்சி) கிடைக்காது.
 • அடிப்படை வசதிகள் இருக்காது.
 • பயிற்சிக்கு பின் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் கிடைக்காது.
 • பயனாளிகளின் திறமைகள் பாதிக்கப்படும்.
 • உற்பத்தி பொருட்களுக்கு விற்பனை செய்ய சந்தை வாய்ப்பு கிடைக்காது.
 • அப்பகுதியில் உள்ள சேவை அளிக்கும் நிறுவனங்களின் விவரங்களை சேகரித்தல்.
 • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமா என்று ஆய்வு செய்தல்.
 • நிறுவனத்தின் கடந்த கால சாதனைகளை ஆய்வு செய்தல்.
 • சேவை அளிக்கும் நிறுவனத்தின் அடிப்படை வசதிகள், பயிற்சியாளர் எண்ணிக்கை போன்றவற்றினை நேரடியாக ஆய்வு செய்தல்.
 • சேவைக் கொள்முதலில் சரியான வல்லுநர் இணைக்கப்படுதலை உறுதி செய்தல்.
 • குறைந்தபட்சம் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருவதற்கான உத்திரவாதத்தினை பெறுதல்.
 • மக்களின் தேவைக்கேற்ப பயிற்சி அளித்தல்.

திட்ட அளவில் ஏலம் விடுவதில் பிரச்சனை. சேவை அளிக்கும் நிறுவனங்கள் தேர்வு, சரியான வல்லுநர்களை தேர்வு செய்வதில் குறைபாடு.

 • சரியான நிறுவனங்கள், நபர்கள், வல்லுநர்கள் தேர்வு செய்யப்படாமை.
 • தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்தல்.
 • ஊழல் ஏற்பட பிரச்சனை.
 • விலைப்புள்ளி பெறுதலில் பிரச்சினை.
 • ஏலத்தினை அடிக்கடி ரத்து செய்ய வேண்டிய நிலை.
 • நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் பொருட்கள் கிடைக்காது.
 • உரிய காலகட்டத்தில் கொள்முதல் செய்வதில்லை.
 • போட்டியுடன் கூடிய ஏலமுறையினை பின்பற்ற வேண்டும்.
 • வெளிப்படையான கொள்முதல் உறுதி செய்தல்.
 • விலைபுள்ளிகளை சரிபார்த்தப்பின் சேவை அளிப்போரை தேர்வு செய்ய வேண்டும்.
 • பட்டய கணக்காளரால் வருடத்திற்கு ஒரு முறை தணிக்கை செய்தல்.
 • தொடர்ச்சியான கண்காணிப்பு இருந்ததை உறுதி செய்தல்.

5. பிரச்சினைகளுக்கான தீர்வு

நமது திட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களின் எல்லா செயல்பாடுகளிலும் திட்ட உயிர் மூச்சின்படி செயல்படுத்தும் போது ஏற்படுகின்ற இடர்பாடுகளும், தடைகளும் பிரச்சினைகளாகும். இந்த பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவது, அதற்கான தீர்வுகள் மற்றும் கால நிர்ணயங்கள் பற்றி இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

வ. எண்

காரணிகள்

விளைவுகள்

தீர்வுகள்

1

கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகம் அமைப்பதில் உள்ள பிரச்சினை

 • சிறிய பிரச்சினைகளும் பெரிய அளவில் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
 • அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய இடமாக இருத்தல் வேண்டும்.
 • மனு சம்பந்தமான கோப்புகள் பராமரிக்க வேண்டும்.

2

குக்கிராமங்களிடையே உள்ள தூரம் அதிகமாக இருத்தல்.

 • பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவது என்பது பற்றி தெரியாது இருத்தல்.
 • அவரவர் பொறுப்பு பற்றி பயிற்சி அளித்தல்.

3

உறுப்பினர்களுக்கு அவர்கள் பொறுப்பு பற்றி தெரிவதில்லை.

 • VPRC கூட்டங்கள் முறையாக நடைபெறாது.
 • தகவல் தொடர்பு படி நிலை உறுதி செய்தல் (குடியிருப்புகளில்).

4

பயனாளிகளை முன்னுரிமைபடுத்துவதில் பிரச்சினை.

 • அனைவருக்கும் பயன் சென்று சேராது.
 • சரியான நேரத்தில் உள் கற்றல் நிகடிநவு நடத்துதல்.

5

பிற துறைகளின் பயன்களை இலக்கு மக்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம்.

 • அனைத்து மக்களுக்கும் பயன்களும், தகவல்களும் கிடைக்காது.
 • தேவையான தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தபட்டதை உறுதி செய்தல்.

6

பிரச்சினைகள் மீது எடுக்கப்பட்ட தீர்வுகள் பற்றி பராமரிக்கபடாமல் இருப்பது மற்றும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது.

 • VPRC மூலம் எந்தவிதமான பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்பட்டது என தெரிய வாய்ப்பில்லை.
 • பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் பற்றிய பதிவேடுகள் பராமரித்தல் (உள் கற்றல்).

7

கிராம சபையில் குறைவான மக்கள் பங்கேற்பு.

 • தொடர்சியாக திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
 • கிராம சபையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, இலக்கு மக்களின் பங்கேற்பை உறுதி செய்தல்.

வழிகாட்டுதலில் உள்ள பிரச்சினைகள் (திட்ட அளவில்)

காரணிகள்

விளைவுகள்

தீர்வுகள்

 • வழி நடத்துநர்களுக்கு போதிய வழி நடத்தும் திறமை இல்லை.
 • உரிய நேரத்தில் வழிகாட்டுதல் செய்யாமை.
 • வழி நடத்துநர்களுக்கு போதிய தகவல் தெளிவின்மை. (Knowledge Updation).
 • சரியான தகவல் உரிய நேரத்தில் போய் சேராது.
 • திட்ட பணியாளர்கள் வழிகாட்டுதலை விட அறிவுறுத்துதல் (instructions) செய்வர்.
 • ஒருங்கிணைப்பாளர்களுக்கு தொடர் பயிற்சி அளித்தல்.
 • திட்ட செயல்பாடுகளை குறிப்பிட்ட காலகெடுவிற்குள் செய்ய நிர்பந்தித்தல்.
 • ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வதால் கால விரயம் ஏற்படும்.
 • உரிய நேரத்தில் சரியான தகவலை கொண்டு செல்லுதல்.
 • ஒருங்கிணைப்பாளர்களிடையே அவரவர் துறைகளில் (Specialisation) ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை.
 • ஒருங்கிணைப்பாளர்களிடையே, ஒருங்கிணைப்பு இல்லாததால் வறுமை ஒழிப்பு சங்கத்தினரிடையே தெளிவின்மை.
 • ஒருங்கிணைப்பாளர்களிடையே குழுவாக (Team) இணைந்து செயல்பட ஆர்வத்தை தூண்டுதல்.
 • திட்ட செயல்பாடுகளை குறைவான காலத்திற்குள் செய்து முடிக்க அவசரம் காட்டுதல்.
 • திட்ட செயல்பாட்டின் தரம் குறையும்.
 • திட்ட செயல்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்துதல்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் உள்ள சில ஆபத்துகள் அல்லது பாதிப்புகளை கண்டறிதல் மற்றும் மதிப்பீடு செய்தல்

நாம் ஏற்கனவே தெரிந்து கொண்ட தலைப்புகளின் கீழ் உள்ள காரணிகளில் ஒன்றை மட்டும் எடுத்து கொண்டு அதற்கான பாதிப்பு அல்லது இடர்பாடு குறைவானதா, நடுத்தரமானதா அல்லது அதிகமானதா என்பதை தெரிந்து கொள்வோம்.

வெளிப்படைத்தன்மை

தகவல் பலகையில் நடவடிக்கைகள் உடனுக்குடன் எழுதப்படாமை

வாய்ப்பு * விளைவு = இடர்பாடு/பாதிப்பு; 2*4= 8 நடுத்தரம்

தகவல் பலகையில் தகவல் எழுதப்படாமல் இருத்தலுக்கான வாய்ப்பு ஒரளவு இருப்பதால் அதற்கு 2 மதிப்பெண் தரப்படுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் விளைவிற்கு அதிகபட்சம் 4 மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு / இடர்பாடு 8 மதிப்பெண்கள் பெறுவதால் இது நடுத்தர வகையினை சார்ந்ததாக இருக்கும்.

ஆதிக்கம்

VPRC-யில் தனிநபர் ஆதிக்கம்

வாய்ப்பு * விளைவு = பாதிப்பு (நிலை); 3 * 5 = 15 நடுத்தரம் (அதிகபட்சமான நிலை)

VPRCயில் தனிநபர் ஆதிக்கத்திற்கான வாய்ப்பு நடுத்தரமான அளவில் இருப்பதால் அதற்கு மதிப்பெண் 3 தரப்படுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் அதிகமாக இருப்பதால் அதற்கு அதிகபட்ச மதிப்பெண் 5 தரப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பானது 15 மதிப்பெண்கள் பெறுவதால் இந்த பாதிப்பானது அதிகபட்சமான / உயர்மட்டமான பாதிப்பு வகையினை சார்ந்ததாக இருக்கும்.

நிதி நிர்வாகம்

கணக்கு பராமரிப்பதில் உள்ள குறைபாடு மற்றும் நிதி கையாடல்

வாய்ப்பு * விளைவு = பாதிப்பு (நிலை); 2 * 5 = 10 நடுத்தரம்

கணக்கு பராமரிப்பதில் உள்ள குறைபாடு மற்றும் நிதி கையாடல் என்பது நிகழ ஓரளவிற்கு வாய்ப்பு இருப்பதால் அதற்கு 2 மதிப்பெண் தரப்படுகிறது. அதனால் ஏற்படும் விளைவு அதிகமாக இருப்பதால் விளைவிற்கு அதிகபட்ச மதிப்பெண் 5 தரப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு 10 மதிப்பெண்கள் பெறுவதால் இது நடுத்தர வகை பாதிப்பினை சார்ந்ததாக இருக்கும்.

சமுதாய கொள்முதல்

முறையற்ற கொள்முதல் வாய்ப்பு * விளைவு = பாதிப்பு (நிலை)

3 * 5 = 15 அதிகபட்சமான நிலை

முறையற்ற கொள்முதலுக்கான வாய்ப்புகள் நடுத்தரமாக உள்ளதால் வாய்ப்பிற்காக

3 மதிப்பெண் தரப்படுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் அதிகமாக இருப்பதால் விளைவிற்காக அதிகபட்ச மதிப்பெண் 5 தரப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பானது 15 மதிப்பெண் பெறுகிறது. எனவே, இந்த பாதிப்பானது உயர்மட்ட / அதிகமான வகையினை சார்ந்த பாதிப்பாக இருக்கும்.

பிரச்சனைகளுக்கான தீர்வு

இலக்கு மக்கள் கூறும் குறைகளுக்கு VPRC சரியான மதிப்பு கொடுக்காதது

வாய்ப்பு * விளைவு =பாதிப்பு (நிலை); 1 * 4 = 4 குறைவான நிலை

இலக்கு மக்கள் கூறும் குறைகளுக்கு VPRC சரியான மதிப்பு கொடுப்பதில்லை என்ற காரணிக்கு வாய்ப்பு குறைவாக உள்ளதால் வாய்ப்பிற்காக மதிப்பெண் 1-ம் விளைவு நடுத்தரமாக உள்ளதாக விளைவிற்கு மதிப்பெண் 4 தரப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு 4 மதிப்பெண் பெறுவதால் குறைவான பாதிப்பு வகையினை சார்ந்ததாக இருக்கும்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

2.86956521739
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top