பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கிராம மக்களின் தொலை நோக்குப் பார்வை

வறுமை நீங்கி கல்வி, பொருளாதார, சமூக மற்றும் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெற்ற கிராமத்தை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

“வறுமை நீங்கி கல்வி, பொருளாதார, சமூக மற்றும் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெற்ற கிராமத்தை உருவாக்குவதே“ இன்றைய கிராம மக்களின் தொலை நோக்குப் பார்வையாக இருக்கிறது. இதனை அடைவதற்கான செயல்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தொலை நோக்கினை அடைவதற்கான செயல்பாடுகள்

 • இலக்கு மக்களின் வறுமைக்கான காரணங்கள் மற்றும் பிரச்சனைகளைப் பற்றி பேசுதல்.
 • வறுமையிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளைப் பற்றி கலந்தாய்வு செய்தல்.
 • வறுமையிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் மற்றும் செய்ய வேண்டிய செயல்பாடுகளை கலந்து ஆலோசித்தல்.
 • வறுமையை ஒழித்து அனைவரும் நல்ல முறையில் வாழ கிராம வறுமை ஒழிப்புசங்கம் என்னென்ன செய்ய வேண்டுமென முடிவு செய்ய வேண்டும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்

 • ƒƒசுய உதவிக் குழுவில் சேராத இலக்கு மக்களை குழுவாக சேர்த்தல், குழுக்கள் மூலம் அவர்கள் வாழ்க்கை தரம் உயர பயிற்சி கொடுத்தல், தொழில் குழுக்களை உருவாக்கி நிலையான நீட்டித்த வருமானம் பெற செய்வது.
 • ƒƒமாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களை குழுவில் இணைத்து அவர்களின் சமூகத்திறன் மற்றும் தலைமைப்பண்பை வளர்த்து வறுமையை ஒழிக்க பாடுபட வைப்பது.
 • ƒƒதொழில் வாய்ப்பு இல்லாதோருக்கு தொழில் பயிற்சி அளிப்பது ƒƒ
 • ஏழை எளியோருக்கு நிலையான வருமானம் பெற வாழ்வாதார உதவிகளை செய்வது.
 • ƒƒமாற்றுத்திறனாளிகளின் திறமையை வளர்த்து, அவர்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற தகுந்த செயல்களை மேற்கொள்வது.
 • ƒƒநலிவுற்றோரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் மற்றும் சமுக பாதுகாப்பிற்கும் உரிய செயல்களை மேற்கொள்ள உதவி அளிப்பது.
 • ƒƒஇளைஞர்களின் திறனை வளர்த்து, ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட வைப்பது.
 • ƒƒஇலக்கு மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, வீடு, சாலை வசதி, சுகாதார வசதி போன்றவற்றை அரசு மற்றும் சேவை நிறுவனங்களின் உதவியுடன் நிறைவேற்றுவது.

கிராம வறுமை ஒழிப்புத் சங்கத்திற்கான திட்டம் தீட்டுதல்

 • கிராம வறுமை ஒழிப்பு சங்க திறன் வளர்ப்புத் திட்டம்
 • சுய உதவிக்குழு, தொழிற்குழு மற்றும் கூட்டமைப்பு வளர்ச்சித் திட்டம் (சமூக ஒருங்கிணைப்பு திட்டம்)
 • தொழில் பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புத் திட்டம் (திறன் வளர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு திட்டம்)
 • மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் திட்டம்
 • நலிவுற்றோர் மேம்பாட்டுத் திட்டம்
 • இளைஞர் மேம்பாட்டுத் திட்டம்
 • வாழ்வாதாரத்திட்டம் மற்றும்
 • கிராமத்தின் அடிப்படை தேவைகளுக்கானத் திட்டம்.

ஒவ்வொரு திட்டத்தின் கீழ், செய்ய வேண்டிய செயல்களை வரிசைப்படுத்தியப் பிறகு அவைகளை எவ்வாறு செய்யலாம் என கலந்தாலோசித்து தெளிவாக திட்டமிடுவதற்கு ஒவ்வொரு செயலினையும் கீழ்க்கண்ட 5 தலைப்புகளில் பேசி திட்டத்தினை நிறைவு செய்தல் வேண்டும்.

1. எவ்வாறு செயலினை நடைமுறைப்படுத்துவது?

2. எப்போது நடத்துவது?

3. யாரெல்லாம் பொறுப்பாக இருப்பார்கள்?

4. தேவைப்படும் நிதி?

5. நிதிக்கான ஆதாரம்?

நிதி மற்றும் வள ஆதாரத்தொடர்பு

திட்டத்தினை செயல்படுத்துவதற்கு தேவையான நிதியினைக் குறித்து ஆலோசனை செய்யும் போது புது வாழ்வு திட்ட நிதியிலிருந்து மட்டும் அனைத்து செயல்களையும் செய்ய முடியாது என புரியும். ஆகையால், தேவைப்படும் நிதியினை பிற அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து பெறுவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

உதாரணமாக, எந்தெந்த செயலினை எந்த துறையின் நிதி மூலம் செயல்படுத்தலாம் என திட்டமிடும்போது, அதனை கீழ்கண்டவாறு வகைப்படுத்திக் கொள்ளலாம்

வ.எண்

செயல்பாடுகள்

நிதி ஆதாரம்

1

குழுக்கள் உருவாக்கம் மற்றும் அதன் திறன் மேம்பாட்டிற்கான செலவு

புது வாழ்வு நிதி

2

தொழில் பயிற்சிக்கான செலவு

மகளிர் திட்டம், புது வாழ்வு நிதி, தாட்கோ

3

மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர் திட்டம்

புது வாழ்வு நிதி, ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை, வருவாய்த்துறை

4

கிராம அடிப்படை வசதிகள்

ஊரக வளர்ச்சித் துறை

கிராம அடிப்படை தேவைக்கான திட்டம்

கிராம அடிப்படை தேவைக்கான திட்டத்தினை ஒவ்வொரு குடியிருப்பு மக்களின் முன்னுரிமைப்படி தீட்ட வேண்டும்.

இதில் முக்கியமாக குடிநீர், சாலை வசதி, வீடு, சுகாதார வசதி மற்றும் பள்ளிக் கட்டிடம் போன்றவைகள் அடங்கும்.

இவைகளை செயல்படுத்துவதற்கான நிதி, செயல்படுத்தும் காலம் உறுதியாக நிர்ணயம் செய்ய முடியவில்லை எனில் ஊராட்சி மற்றும் பிற அரசு துறைகளான இந்திரா குடியிருப்புத் திட்டம், இதாய் திட்டம் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திலிருந்தும் அவ்வப்போது மக்களுக்கு பெற்றுத்தரலாம்.

வாழ்வாதாரத் திட்டம்

குடியிருப்புவாரியாக யார், யார், எந்தெந்த குழு? என்னென்ன தொழில்கள் செய்யலாம்? என ஒரு தோராயத் திட்டத்தினை தீட்ட வேண்டும். இது இலக்கு மக்கள் மற்றும் இளைஞர்கள் என்னென்ன தொழில் பயிற்சி பெறலாம் என்பதை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். மேலும், ஒரு சில மாதங்களில் தொழில் வள ஆய்வு நிபுணர்களின் உதவியுடன் மேற்கொள்ளவிருப்பதால் இந்த திட்டத்தினை அதற்கேற்ப மாற்றி கொள்ளலாம்.

பின்னர், முழுமையான வாழ்வாதார திட்டத்தினை தீட்டி, அதற்கான நிதியினை புதுவாழ்வு திட்ட அலுவலகத்திலிருந்து பெறலாம், வங்கி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, தாட்கோ மற்றும் பிற துறைகளிலிருந்தும் உதவி பெறலாம்.

கிராம மக்களின் பார்வைக்கு...

இறுதியாக தயாரித்த திட்டத்தினை எல்லோருக்கும் புரியும்படி குடியிருப்பின் பல்வேறு பகுதிகளில் ஒட்ட வேண்டும். மக்களின் கருத்துக்காக 7 நாட்கள் காத்திருந்து, தேவையின் அடிப்படையில் மாற்றங்களை செய்ய வேண்டும்.

இணைப்பு - கிராம வறுமை ஒழிப்பு சங்க தொலைநோக்கு திட்டம்

கிராம ஊராட்சி பற்றி அடிப்படை தகவல்கள்

1. கிராம ஊராட்சியின் பெயர்

2. பகுதி

3. வட்டாரம்

4. மாவட்டம்

5. கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் முகவரி

6. ஊராட்சியிலுள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை

7. ஊராட்சியிலுள்ள இலக்கு மக்கள் குடும்பங்களின் எண்ணிக்கை:

மிகவும் ஏழை :

ஏழை :

நலிவுற்றோர் ;

மாற்றுதிறனாளிகள் :

8. அ) இளைஞர்கள் (இலக்கு மக்கள் குடும்பம்)

1. ஆண்கள் :

2. பெண்கள் :

ஆ) இளைஞர்கள்; இலக்கு மக்கள் அல்லாதவர் குடும்பம்) 1. ஆண்கள் :

2. பெண்கள் :

9. கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகளின் பெயர்கள்

தலைவர்

செயலாளர்

பொருளாளர்

மற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை

குடும்ப தொலை நோக்கு திட்டம்

நமது இலக்கு மக்கள் அனைவரும் தினமும் வேலை செய்து அதன் மூலம் பெறும் வருமானத்தை கொண்டு அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் மருத்துவம், கல்வி போன்றவற்றிக்கு திட்டமிடுதல் இன்றி செலவிடுகின்றனர், மேலும் தங்களின் எதிர்காலத்திற்கு தேவையான அளவிற்கு சேமிக்க முடியாமல், வருகின்ற வருமானத்தை முழுவதும் செலவிடுகின்றனர். இதனால் இவர்கள் தொடர்ந்து வறுமையின் பிடியிலே உள்ளனர். எனவே இந்த நிலை மாறவும், வறுமையின் பிடியிலிருந்து விடுபடவும், வாழ்வில், சமுதாயத்தில் ஒர் உயர்ந்த சமுக பொருளாதார நிலையை அடைய ஒவ்வொரு இலக்கு மக்கள் குடும்பத்திற்கும் குடும்ப தொலைநோக்கு திட்டம் அவசியமாகிறது.

விளக்கம்

குடும்ப தொலைநோக்கு திட்டம் என்பது இலக்கு மக்கள் குடும்பம் தனது குடும்ப உறுப்பினர்களின் தற்போதைய வறுமை நிலை ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்குள் நீங்கி சமூக பொருளாதார ரீதியாக (அடிப்படை உரிமைகளான கல்வி, சுகாதாரம் வேலைவாய்ப்பு. தொழில், காப்பீடு, விவசாயம் வீடு, வாகனம் ஆகியவற்றை) தங்கள் வாழ்வாதார மேம்பாடு மற்றும் அரசு திட்டங்கள் மூலம் பெறுதல் ஆகும்.

குடும்ப தொலை நோக்கு திட்டம் தயாரித்தல்

படி: 1 குடும்ப தொலைநோக்கு திட்டம் குறித்து இலக்கு மக்களுக்கு ஊர் கூட்டம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

படி: 2 இலக்கு மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்தல்.

படி: 3 இலக்கு மக்கள் ஒன்றாக கூடி தங்கள் குடும்ப தொலை நோக்கு திட்டத்தினை திட்ட பணியாளர்கள் மற்றும் சமூக வல்லுநர்கள் உதவியோடு குடும்ப தொலைநோக்கு அட்டையில் பதிவு செய்தல்.

படி: 4 கிராம வாரியாக தயாரிக்கப்பட்ட குடும்ப தொலை நோக்கு அட்டையின் விவரங்களை ஊராட்சி தொகுத்தல்.

படி: தொகுத்தல் தொலைநோக்கு திட்ட அறிக்கையின் கிராம சபாவில் ஒப்புதல் பெற்று தொடர்புடைய அரசு சாரா நிறுவனங்களுக்கு அனுப்பி படிப்படியாக பெற்று தருதல்.

படி: தொடர் கண்காணித்தல்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

2.98412698413
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top