பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சமூக தணிக்கை

சமூக தணிக்கை குழு என்பது பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

சமூக தணிக்கை

சமூக தணிக்கை என்பது கிராம அளவிலான ஒரு தொடர் நடவடிக்கை ஆகும். இது கிராம வறுமை ஒழிப்பு சங்கம், துணைக் குழுக்கள், சமூக தணிக்கைக் குழு, சுய உதவிக் குழுக்கள், தொழில் குழுக்கள் மற்றும் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் திட்ட உயிர் மூச்சின் படியும், திட்ட வழிகாட்டி கையேட்டின் படியும் மற்றும் கிராம சபையின் முடிவின்படியும் செயல்படுவதை உறுதி செய்கிறது.

சமூக பொறுப்புணர்விற்கு பல கருவிகள் உள்ளது, அதில் சமூக தணிக்கை முக்கியமானதாகும். மேற்கூறப்பட்ட மற்றும் மற்ற கருவிகளை பின்பற்றபடுகின்றனவா அல்லது கண்காணிக்கப்படுகின்றனவா என சமூக தணிக்கை உறுதி செய்கிறது. எனவே சமூக தணிக்கை அவசியமாகிறது. நமது கிராமத்தில் சமூக தணிக்கை குழு தொடர்ந்து எல்லா செயல்பாடுகளையும் தணிக்கை செய்கிறது.

சமூக தணிக்கையின் தேவை

 • €€ நாம் நமது தவறுகளை, மாறுபாடுகளை கண்டுபிடித்து சரிபடுதுவதற்கு.
 • €€ இலக்கு மக்கள் அனைவருக்கும் திட்டம் மற்றும் பிற துறை பயன்களை
 • பெற்றுத்தருவதற்கு.
 • €€ மக்கள் அமைப்புகளின் சிறப்பான செயல்பாட்டினையும், திட்டம் சரியாக செயல்படுவதையும் உறுதி செய்வதற்கு.
 • €€ நமது அனைத்து நடவடிக்கைகளும் சமுதாய வழிகாட்டி கையேட்டின் படியும், உயிர்மூச்சின் படியும், செயல் திட்டத்தின் படியும் கிராம சபையின் முடிவின்படியும் நடப்பதை உறுதி செய்வதற்கு.
 • €€ நமது அனைத்து மக்கள் அமைப்புகளும் இலக்கு மக்களை பிரதிநிதிகளாகக் கொண்டு உருவாகியதை உறுதி செய்வதற்கு.
 • €€ நமது கிராம நிதியில் அதிகபட்சமாக இலக்கு மக்கள் மட்டுமே பயன்களைப் பெற்றுள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு.
 • € நிதி தவறாக கையாளுவதை தவிர்த்து சிறப்பான நிதிப் பயன்பாட்டினை உறுதி செய்தவதற்கு.
 • €€ தேவையற்ற பிரச்சினைகளை நமது சமுதாயத்திற்குள் தவிர்ப்பதற்கு.
 • €€ கிராமத்திலுள்ள அனைவரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் பிற அமைப்புகளின் செயல்பாடுகளை தெரிந்திருப்பதை உறுதி செய்தவதற்கு.
 • €€ நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்தவதற்கு.
 • €€ எந்தத் தீமையும் / பேதமும் இல்லாமல் செயல்பாடுகள் இருப்பதை உறுதி செய்தவதற்கு.
 • €€ அனைத்து அமைப்புகளும் பதிவேடுகளை சரியாக பராமரிப்பதை உறுதி செய்தவதற்கு.

அ. சமூக தணிக்கை குழு என்பது

 • €€ சமூக தணிக்கைக் குழு உறுப்பினர்களை கிராம சபை நேரடியாக தேர்வு செய்கிறது.
 • €€ சமூக தணிக்கை குழுவின் உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் பிற குழுக்களின் உறுப்பினர்களின் உறவினர்களாக இருக்கக்கூடாது.
 • €€ ஊராட்சியில் செயல்படும் அனைத்துக் குழுக்களையும் சமூக தணிக்கை குழு ஆய்வு செய்யும்.
 • €€ சமூக தணிக்கைக் குழு தனது ஆய்வு முடிவுகளை கிராம சபைக்கும், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்க்கும் மற்றும் பிற அமைப்புகளுக்கும் அறிக்கையாக அளிக்கும்.

ஆ. சமூக தணிக்கைக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகள்

சமூக தணிக்கைக் குழு உறுப்பினர்களை கீழ்க்கண்ட தகுதிகளுடன் தேர்வு செய்ய வேண்டும்.

 • €€ அவர் அனுபவமிக்கவர்களாகவும், பொறுப்புகளை தன்னார்வத்துடன் செய்பவராகவும் இருக்க வேண்டும்.
 • €€ நல்ல குணங்களைப் பெற்றவராக இருக்க வேண்டும். நேர்மையானவராக, ஒழுக்கமானவராக, ஜாதி மத பேதமற்றவராகவும், இருத்தல் வேண்டும்.
 • €€ சமுதாயத்தால் மதிக்கப்படுவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருக்க வேண்டும்.
 • €€ மக்களுக்காக நேரத்தை செலவிடுபவராகவும், சேவை செய்பவராகவும் இருக்க வேண்டும்.
 • €€ பணியாற்ற எவ்வித பலனும் எதிர்பாராதவராக இருத்தல் வேண்டும். எந்தக் குழுவிலும் உறுப்பினபினராகவோ அல்லது அவர்களது நெருங்கிய உறவினர்களாகவோ இருக்கக் கூடாது. (கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் இதர முடிவு செய்யும் துணை குழுக்கள்) எழுத படிக்க தெரிந்தவர்களாக இருத்தல் நல்லது.

இ. சமூக தணிக்கைக் குழுவின் அமைப்பு

கிராம சபைக் கூட்டத்தில் பின்வரும் விதிமுறைகளைப் பின்பற்றி சமூக தணிக்கைக் குழுவினை உருவாக்கலாம்.

 • €€ நமது சமூக தணிக்கைக் குழு குறைந்தது 5 உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்படும். குடியிருப்புகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் 7 நபர்கள் வரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
 • €€ 5 நபர்களை கொண்ட சமூக தணிக்கைக் குழுவில் 4 நபர்கள் இலக்கு மக்களாகவும், 7 நபர்களைக் கொண்ட சமூக தணிக்கைக் குழுவில் 5 நபர்கள் இலக்கு மக்களாக இருக்கலாம். இலக்கு மக்கள் அல்லாத ஒரு நபர் கட்டாயமாக குழுவில் இடம் பெற வேண்டும்.
 • €€ சமூக தணிக்கைக் குழுவில் குறைந்தபட்சம் 50ரூ மகளிர் இருக்க வேண்டும்.
 • €€ நமது சமூக தணிக்கைக் குழுவில் இளைஞர் பிரதிநிதி ஒருவரும், மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதி ஒருவரும் இடம் பெற்றிருக்க வேண்டும்.
 • €€ நமது சமூக தணிக்கை குழுவில் ஒரு உறுப்பினராவது எழுத படிக்கவும், கணக்கறிவும் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

ஈ. சமூக தணிக்கைகுழு உறுப்பினர்களுக்கான அங்கீகாரம்

 • €€ நமது சமூக தணிக்கை குழு உறுப்பினர்களுக்கு முக்கியத்துவமும் அங்கீகாரமும் அளிக்கும் வகையில் அவர்களின் முழு விபரம் அடங்கிய அடையாள அட்டை வழங்கப்படலாம்.
 • €€ நமது சமூக தணிக்கை குழுவிற்கு தலைவர் மற்றும் துணை தலைவர் பெயரில் முத்திரை (ரப்பர் ஸ்டாம்ப்) தயார் செய்து கொள்ளலாம். தீர்மானம் மற்றும் முக்கிய அறிக்கைகளில் முத்திரை இட்டு கையொப்பம் இடலாம்.

உ. சமூக தணிக்கைக் குழுவின் காலம்

 • €€ நமது சமூக தணிக்கைக் குழு உறுப்பினர்கள் 2 வருடங்களுக்கு நியமிக்கப்படுவார்கள்.
 • €€ பழைய சமூக தணிக்கைக் குழு உறுப்பினரே மீண்டும் அடுத்த முறைக்கு கிராம சபையில் தேர்ந்தெடுக்கப்படலாம். தொடர்ந்து 2 முறைகளுக்கு மேல் தேர்ந்தெடுக்க முடியாது.

ஊ. சமூக தணிக்கைக் குழு உறுப்பினர்களை நீக்குதல்

நமது சமூக தணிக்கைக் குழு உறுப்பினர்கள் கீழ்க்கண்ட இரண்டு காரணங்களால் நீக்கப்படுவார்கள்.

 • €€ அவர்கள் சொந்த பிரச்சினைகளால் தாமாகவே முன் வந்து விடுவிக்க கோருதல்.
 • €€ கிராம சபை முடிவு செய்து அவர்களை நீக்குவது.

(i). பின் வரும் காரணங்களுக்காக சமூக தணிக்கைக் குழு உறுப்பினர் தாமாகவே வந்து விடுவிக்க கோருதல்

 • €€ உறுப்பினருக்கு நீண்ட கால உடல் நலக் குறைவு.
 • €€ உறுப்பினர் நீண்ட தூரத்தில் நீண்ட நாட்களுக்கு குடியேறி செல்வதால்.
 • €€ அவர்களது குடும்பத்தினர் அவர்களை சமூக தணிக்கைக் குழு உறுப்பினராக செயல்படுவதற்கு அனுமதிக்கவில்லையென்றால் விலகலாம்.

உறுப்பினர் விலகும் முறை

ஓரு உறுப்பினர் தாமாக விலக முன்வந்தால் அவர்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திடம், தான் சமூக தணிக்கைக் குழு உறுப்பினராக செயல்பட இயலாது என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும். கிராம சபை கூட்டத்திற்கு ஒரு வாரம் முன்பே தெரிவிக்க வேண்டும். கிராம வறுமை ஒழிப்பு சங்கம் இந்தத் தகவலை பொது மக்களுக்கு தகவல் பலகை மூலமாக அறிவிக்கும். பிறகு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் இதைக் கிராம சபையின் கவனத்திற்கு கொண்டு சென்று அங்கீகாரம் பெறும்.

(ii). கிராம சபை முடிவு செய்து அவர்களை பின்வரும் சூழ்நிலைகளால் நீக்குவது

 • €€ உறுப்பினர் தனது கடமையை சரியாக செய்யாமல் இருத்தல்.
 • €€ கிராம சபைக்கு தொடர்ந்து அறிக்கைகளை சமர்ப்பிக்காமல் இருத்தல்.
 • €€ உறுப்பினர்கள் உயிர்மூச்சுக் கொள்கையினை மீறும்பட்சத்தில்.
 • €€ திட்ட வழிகாட்டிக் கையேட்டு வழி முறைகளை ஏதேனும் ஒரு சமூக தணிக்கைக் குழு உறுப்பினர் பின்பற்றாமல் இருத்தல்.

ஏதேனும் ஒரு சமூக தணிக்கைக் குழு உறுப்பினர் நீக்கப்பட்டால், அந்த இடத்திற்கு உடனே தகுதியான பொருத்தமான மற்ற ஒரு நபரை தொடர்ந்து வரும் கிராம சபையில் நியமிக்க வேண்டும்.

சமூக தணிக்கைக் குழு உறுப்பினர்களை நீக்கும் முறை

€€ ஓரு உறுப்பினர் தாமாக விலக முன்வந்தால் அவர்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திடம்,

தான் சமூக தணிக்கைக் குழு உறுப்பினராக செயல்பட இயலாது என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும். கிராம சபை கூட்டத்திற்கு ஒரு வாரம் முன்பே தெரிவிக்க வேண்டும். கிராம வறுமை ஒழிப்பு சங்கம் இந்தத் தகவலை பொது மக்களுக்கு தகவல் பலகை மூலமாக அறிவிக்கும். பிறகு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் இதைக் கிராம சபையின் கவனத்திற்கு கொண்டு சென்று அங்கீகாரம் பெறும்.

€€ கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அல்லது சமூக தணிக்கைக் குழு உறுப்பினரைப் பற்றிய குறையிருந்தால் அறிக்கையாக கிராம சபை கூட்டத்திற்கு ஒரு வாரம் முன்பு ஊராட்சித் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையினை சம்மந்தப்பட்ட உறுப்பினருக்கு ஒரு நகல் அளிக்க வேண்டும்.

சமூக தணிக்கைக் குழு உறுப்பினருக்கு எதிரான பிரச்சினைகள் குறைந்த பட்சம் 10 இலக்கு மக்களால் முன்மொழியப்பட்டால் மட்டுமே தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும்.

€€ கிராம சபையும் இலக்கு மக்களை விசாரித்த பின்பே முடிவு செய்ய வேண்டும்.

€€ சம்மந்தப்பட்ட நபர் தன்னைப் பற்றி கிராம சபையில் விளக்கமளிக்க தகுந்த வாய்ப்பளிக்க வேண்டும். சமூக தணிக்கைக் குழு உறுப்பினரின் விளக்கத்திற்கு பின் கிராம சபை அந்த நபரை உறுப்பினராக இருக்க அனுமதிக்கலாம் அல்லது நீக்கம் செய்யலாம்.

சமூக தணிக்கைக் குழுவின் பொறுப்புகள்

€€ ஐந்து நபர்களை கொண்ட நமது சமூக தணிக்கைக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு தலைவர், துணைத் தலைவர், செயலாளர், அறிக்கையாளர் மற்றும் ஆலோசகர் என்று ஒவ்வொருவருக்கும் பொறுப்புகளை பகிர்ந்தளிக்கலாம். மேலும் 7 நபர்ளை கொண்டு உருவாக்கப்படும் சமூக தணிக்கை குழுவில் கூடுதலாக துணைபதிவாளர் மற்றும் துணை அறிக்கையாளர் போன்ற பொறுப்புகளை வழங்கலாம்.

1. தலைவர்

 • €€ கூட்டத்திற்க்கு தலைமையேற்று வழிநடத்த வேண்டும்.
 • €€ அனைவருக்கும் பேச வாய்பளிக்க வேண்டும்.
 • €€ அனைவரின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
 • €€ பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
 • €€ சிறப்பு கூட்டம் நடத்துவதற்க்கும், கூட்டத்தை ஒத்தி வைப்பதற்க்கும் அதிகாரம் உண்டு.

2. துணைத்தலைவர்

€€ தலைவர் பங்கேற்காத நிலையில் துணைத்தலைவர் பொறுப்பேற்று கூட்டத்தை நடத்த வேண்டும்.

3. செயலாளர்

 • €€ நிகழ்ச்சி நிரல் தயாரித்தல்.
 • €€ அனைவருக்கும் கூட்டம் நடத்துவது பற்றிய தகவல் தெரிவித்தல்.
 • €€ தீர்மானம் எழுதுதல்.
 • €€ கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு பரிந்துரை அறிக்கை சமர்பித்தல்.

4. அறிக்கையாளர்

 • €€ பதிவேடுகள் சரிபார்த்தல்
 • €€ கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்க்கு அறிக்கை அளித்தல்.
 • €€ கிராம சபைக்குஅறிக்கை சமர்பித்தல்.
 • €€ கிராம சபையில் அறிக்கை வாசித்தல்.

5. பதிவாளர்

 • €€ சமூக தணிக்கை குழு பதிவேடுகள் பராமரித்தல்.
 • €€ சமூக தணிக்கை குழு செயல்பாடுகள் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவு செய்தல்.

சமூக தணிக்கை குழு செயல்பாடுகளை கண்காணிக்கும் வகை

சமூக தணிக்கை குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் ஒவ்வொருவரும்

1. கணக்கு புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் சரிபார்த்தல்

2. கடன் திருப்பம் கண்காணித்தல் (தனிநபர் கடன்)

3. இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி கண்காணித்தல்

4. கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் சுய உதவிக் குழு பயிற்சி கண்கானித்தல். சமூக வல்லுநர்கள், சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர் (ஊளுகூ) மற்றும் சமுதாய மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்பாளர் (ஊனுகு) ஆகியோர் பணியை கண்காணித்தல்

5. வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய கண்காணித்தல் (தகவல் பலகையை குடியிருப்பு அளவில் உள்ளதா என கண்காணித்தல், கூட்டங்கள் நடத்துதல் மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என கண்காணித்தல்)

சமூக தணிக்கைக் குழு கூட்டங்கள்

 • சமூக தணிக்கைக் குழு அனைத்து மக்கள் அமைப்புகளின் நடவடிக்கைகளையும் கண்காணித்து தங்களது கூட்டங்களில் விவாதிக்கும்.
 • €€ கூட்டம் மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்படும். எனினும் தேவை ஏற்படின் குறுகிய கால அறிவிப்புடன் சிறப்பு கூட்டம் நடத்தப்படும்.
 • €€ கூட்டம் பற்றிய தகவலை செயலாளர் 3 நாள் முன்னறிவிப்புடன் கூட்டத்தை நடத்த வேண்டும்.
 • €€ சமூக தணிக்கை குழு உறுப்பினர்களின் கூட்ட செலவு மற்றும் பயண செலவு போன்றவைகள் கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டும்

ஓ. கூட்டத் தீர்மானம்

அனைவரும் ஏற்றுக்கொண்ட முடிவுகள் தீர்மான புத்தகத்தில் எழுதப்பட்டு கூட்டத்தில் பங்கேற்ற அனைவராலும் தீர்மான புத்தகத்தில் கையொப்பம்மிடப்பட வேண்டும்.

ஒள. சமூக தணிக்கை செய்யும் வழிமுறைகள்

சமூக தணிக்கை குழுவின் பொறுப்பானது திட்ட செயல்பாடுகள் கோட்பாடுகளின்படி வழிகாட்டுதல்கள் எதையும் மீறாமல் செயல்படுவதை உறுதி செய்வதாகும்.

ஃ. கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி செயல்பாட்டில் சமூக தணிக்கை குழுவின் பங்கு

கிராம நிதி இலக்கு மக்களை வலுப்படுத்தி வறுமையை குறைக்கும் நோக்கத்தோடு வழங்கப்படுகிறது. கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி பின்வருமாறு வகைப் படுத்தப்படுகிறது.

அ. திறன் வளர்ப்பு நிதி

ஆ. சிறப்பு நிதி

இ. இளைஞர் மேம்பாட்டு நிதி

ஈ. வாழ்வாதார நிதி

உ. கிராம வறுமை ஒழிப்பு சங்க கூடுதல் நிதி

இந்த கணக்கு தலைப்புகளின் கீழ் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் பல்வேறு நடவடிக்கைகளுக்கான சமுதாய வழிகாட்டியின்படி நிதியைப் பயன்படுத்துகிறது. சமூக தணிக்கைக் குழுவின் கடமை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து திட்டக் கொள்கையின்படி தவறாது நடப்பதை உறுதி செய்வதாகும்.

ஒவ்வொரு நிதியின் கீழ் தணிக்கை செய்யப்பட வேண்டிய தகுதியான செயல்பாடுகளையும் தணிக்கை செய்யும் முறையினையும், சரிபார்க்கும் முறைகளையும் இனிக் காண்போம்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
3.06060606061
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top