பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் துவக்க நிலை செயல்பாடுகள்

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் துவக்க நிலை செயல்பாடுகள் பற்றிய குறிப்புகள்

நோக்கம்

புதுவாழ்வு திட்டம் நமது கிராமத்தில் செயல்படுவதற்கு நமது ஊராட்சியால் திட்ட துவக்க நிலை செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பின்னர் முதல் தவணை நிதி பெறுவதற்காக நமது கிராம வறுமை ஒழிப்பு சங்கம் கீழ்க்கண்ட சில செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றை நாம் திட்ட துவக்க நிலை செயல்பாடுகள் என்று அழைக்கின்றோம்.

ஊராட்சி துவக்க நிதி

பகுதி இரண்டில் குறிப்பிட்டுள்ளது போல மாவட்ட புதுவாழ்வு சங்கம், ஊராட்சிகள் தோறும் செய்தி தொடர்பு முகாம்கள் நடத்தி திட்டத்தின் நோக்கம் குறிக்கோள் போன்றவற்றினை நமக்கு எடுத்துரைப்பர். திட்டத்தின் உயிர்மூச்சின்படி செயல்பட நமக்கு விருப்பம் இருப்பின், திட்டத்தின் துவக்க நிதியை பெறுவதற்காக நாம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ள படிநிலைகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

ஊராட்சி துவக்க நிதி
மாவட்ட அலுவலகத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளுதல்
ஊராட்சி துவக்க நிதி என்ற பெயரில் தனி வங்கி கணக்கு துவங்குதல்
புதுவாடிநவு திட்ட உயிர் மூச்சின்படி நடக்க கிராம சபை ஒப்புதல் பெறுதல்

படிக்கட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை நாம் நிறைவேற்றிய பின் ஊராட்சி துவக்க நிதியாக ரூபாய் 35,000 பெறுவதற்கு மாவட்ட அலுவலகத்திடம் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

ஊராட்சியும் மாவட்ட புதுவாழ்வு சங்கமும் ஒப்பந்தம் ஒன்றினை கையொப்பமிடுவர். ஒப்பந்தத்திற்கான மாதிரி படிவம் இணைப்பு ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின் நமது ஊராட்சிக்கு திட்ட துவக்க நிதியாக ரூபாய் 35,000 (ஊராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு) வழங்கப்படும்.

நமது ஊராட்சி துவக்க நிதி முலம் செயல்படுத்த வேண்டிய அனைத்தையும் பகுதி இரண்டில் குறிப்பிட்டுள்ளவாறு செய்து முடித்த பின் நமது கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் செயல்பாடுகள் துவங்குகின்றது.

கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதியில் நாம் செய்ய வேண்டிய செயல்பாடுகள்

 • குடியிருப்பு வாரியாக திட்டம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் மற்றும் சமூக தணிக்கை குழு உறுப்பினர்களுக்கு புதுவாழ்வு திட்ட கையேடு பற்றி பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் துணை குழுக்களை உருவாக்குதல்.
 • ஏழை, மிகவும் ஏழை இளைஞர்கள், தகுதியான மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோரை சுய உதவி குழுக்களாக உருவாக்குதல்.
 • மாற்றுத்திறனாளி, நலிவுற்றோர்களுக்கான மறுவாழ்வு ஆய்வு முகாம் நடத்துதல்
 • தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுத்தருதல்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் செயலாளர், பொருளாளர், புத்தக காப்பாளர் மற்றும் சமூக தணிக்கை குழுவில் இருந்து ஒரு உறுப்பினர் ஆகியோருக்கு கணக்கு புத்தகங்கள்
 • பராமரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
 • மாதிரி கிராமங்களுக்கு கள பயணம் செல்லுதல்.
 • தொலை நோக்குப் பார்வையுடன் கிராம வளர்ச்சி திட்டத்தினை உருவாக்குதல்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்திற்கு தேவையான அடிப்படை பொருள்கள், பதிவேடுகள் ஆகியவற்றை வாங்குதல்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் துவக்க நிதிக்கான பயன்பாட்டு சான்றிதடிநகளை சமர்ப்பித்தல்

குடியிருப்பு வாரியாக திட்டத்தை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்

குழு விவாதங்கள்

குடியிருப்பு வாரியாக திட்டப்பயனாளிகளுடன் சிறு குழு விவாதங்கள் நடத்தி அவற்றின் வாயிலாக

 • மக்கள் அமைப்புகள் ஏன் உருவாக வேண்டும், அவற்றின் முக்கியத்துவம் அறிதல்.
 • புதுவாழ்வு திட்டம் மற்றத் திட்டங்களில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது.
 • திட்டத்தின் உயிர்மூச்சினை கடைபிடிக்க எவ்வாறு அவர்கள் பங்களிக்க முடியும்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் முக்கிய செயல்பாடுகள்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் சமூக தணிக்கை குழுவின் பொறுப்புகள்
 • திட்டத்தின் வாயிலாக கிடைக்க இருக்கும் பயன்கள் ஆகியவற்றினை நாம் விளக்க வேண்டும்.

சமூக நிகழ்ச்சிகள்

புதுமையாக நிகழ்ச்சிகள் மற்றும் மக்களின் கவனத்தினை ஈர்க்கக்கூடிய நிகழ்ச்சிகளை நாம் நடத்துவதன் மூலம் திட்ட பயனாளிகளுக்கு நமது திட்டத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தலாம்.

சில கிராமங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 • மக்கள் அமைப்பின் முக்கியத்துவம் போன்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள்.
 • மக்களால் இயக்கப்படும் திட்டம், சமூக வல்லுநர்களால் இயக்கப்படும் திட்டம் போன்ற தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்துதல்.
 • புதுவாழ்வு திட்டம் சம்பந்தப்பட்ட தலைப்புகளை தேர்வு செய்து தெருக்களின் இடையே நாடகப்போட்டி, கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தலாம்.
 • கோலப் போட்டிகள்
 • பள்ளி கூட சிறுவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டிகள்.

மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய மேற்கண்ட நிகழ்ச்சிகளை நடத்தி திட்ட செயல்பாடுகளில் மக்களின் பங்கேற்பை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

 1. தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுத்தருதல்.
 2. கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் செயலாளர், பொருளாளர், புத்தக காப்பாளர் மற்றும் சமூக தணிக்கை குழுவில் இருந்து ஒரு உறுப்பினர் ஆகியோருக்கு கணக்கு புத்தகங்கள் பராமரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
 3. மாதிரி கிராமங்களுக்கு கள பயணம் செல்லுதல்.
 4. தொலை நோக்குப் பார்வையுடன் கிராம வளர்ச்சி திட்டத்தினை உருவாக்குதல்.
 5. கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்திற்கு தேவையான அடிப்படை பொருள்கள், பதிவேடுகள் ஆகியவற்றை வாங்குதல்.
 6. கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் துவக்க நிதிக்கான பயன்பாட்டு சான்றிதழ்களை சமர்ப்பித்தல்.

புதுவாழ்வு திட்ட கையேடு பயிற்சி

புதுவாழ்வு திட்டத்திணை நமது ஊராட்சியில் சிறப்பாக செயல்படுத்த வேண்டுமென்றால் முதலில், திட்டத்தைப் பற்றிய முழு விவரத்தை நாம் தெளிவாக புரிந்திருக்க வேண்டும்.

திட்ட கோட்பாடுகள், நிதி விவரங்கள், நாம் செயலாற்ற வேண்டிய செயல்பாடுகள், நமது பொறுப்புகள் போன்றவைகள் குறித்து தெளிவாக நமக்கு புதுவாழ்வு திட்ட கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்து அதில் புதுவாழ்வு திட்ட கையேட்டில் உள்ள தகவல்களை, திட்ட ஒருங்கிணைப்பு அணி மற்றும் சமூக பயிற்சியாளர்களின் உதவியுடன் கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களுக்கு விளக்கி சொல்லுதல் வேண்டும்.

திட்ட பகுதிகளில் உள்ள சமூக பயிற்சியாளர்கள் பட்டியல் திட்ட ஒருங்கிணைப்பு அணியிடம் உள்ளது. இந்த பட்டியலில் உள்ள பயிற்றுநர்களில் ஒன்று (அ) இரண்டு நபர்களை நமது தேவைக்கேற்ப தேர்வு செய்து மேற்குறித்த பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்கான ஊதியத்தை நமது கிராம வறுமை ஒழிப்பு சங்கம் வழங்குதல் வேண்டும். பயிற்சி மூன்றிலிருந்து ஐந்து நபர்கள் வரை நமது தேவைக்கேற்ப நடத்துதல் வேண்டும்.

துணைக்குழுக்கள் உருவாக்குதல் மற்றும் பயிற்சி அளித்தல்

மேற்குறித்த பயிற்சியின் போது நமது கிராம வறுமை ஒழிப்பு சங்கம் நமது ஊராட்சியில் செயல்படுத்த வேண்டிய செயல்பாடுகளை நாம் புரிந்து கொண்டிருப்போம். இந்நிலையில் கிராம வறுமை ஒழிப்பு சங்க செயல்பாடுகளுக்கு துணைபுரிய சில பொறுப்புள்ளவர்களை நாம் தேர்ந்தெடுத்து துணைக்குழுக்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதற்காக சங்க உறுப்பினர்களையே தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

 1. தொழில் மற்றும் கண்காணிப்பு துணைக் குழு
 2. நிதி மற்றும் கொள்முதல் குழு
 3. இளைஞர்கள் மேம்பாட்டுக்குழு

பழங்குடியினர் துணைக்குழு (குறைந்த பட்சம் 49 பழங்குடியினர் குடும்பங்கள் இருத்தல் வேண்டும்)

துணைக்குழுக்களில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தினர் பெண்களாக இருத்தல் வேண்டும்.

1. தொழில் மற்றும் கண்காணிப்புத் துணைக் குழு

வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களிலிருந்து தேர்வு செய்யப்படும் இத் துணைக்குழுவில் மூன்று நபர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

வறுமை ஒழிப்பு சங்கமானது தாங்கள் மேற்கொள்ளவுள்ள தொழில் திட்டத்திற்கு ஏற்ப

தொழில் சார்ந்த புலமை அனுபவம் பெற்ற இரண்டு நபர்களை தங்கள் கிராமத்திலிருந்து அவ்வப்போது தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வு செய்யப்படும் இரண்டு வல்லுநர்களும் துணைக்குழுவின் நிரந்தர உறுப்பினர்கள் இல்லை.

வறுமை ஒழிப்பு சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் இலக்கு மக்களில் ஒருவர் இத்துணைக்குழுவிற்கு தலைமை ஏற்று நடத்திச் செல்வார்.

செயல்பாடுகள்

வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு இத்துணைக்குழு தொழில் சம்மந்தப்பட்ட உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும்.

சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், சமூகப் பயிற்றுநர் தேர்வு நிதி மேலாண்மைப் பயிற்சி கூட்டமைப்பு உருவாக்கம் போன்ற பணிகளை கண்காணிக்கும்.

வாழ்வாதார வள ஆய்வு நடத்தி உகந்த தொழில் வாய்ப்பினை கண்டறியும் முயற்சிகளை மேற்கொள்ளும்.

அமுத சுரபி நிதியினை செயல்படுத்தும் அமைப்பில் பிரதிநிதித்துவம் செய்து, தொழில் மேம்பாட்டிற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும்.

தொழில் கூட்டமைப்பு உருவாக்கவும், தொழில் திட்டம் வடிவமைக்கவும், நிதி ஆதாரத்தினை பெற்றுத்தருவதற்கும் கி.வ.ஒ.சங்கத்திற்கு உறுதுணையாக இருக்கும்

வறுமை ஒழிப்பு சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தொழில் முயற்சிகளை கண்காணித்து முறையாக ஆலோசனைகள் வழங்கும்.

2. நிதி மற்றும் கொள்முதல் துணைக் குழு

கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு நிதி மற்றும் கொள்முதல் துணைக்குழுவில் மூன்று நபர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம், கொள்முதல் சம்மந்தப்பட்ட அனுபவமுள்ள இரண்டு நபர்களை தங்களது கிராமத்திலிருந்து அவ்வப்போது தேவைக்கேற்ப தேர்வு செய்யலாம். இவர்கள் கொள்முதல் துணைக்குழுவின் நிரந்தர உறுப்பினர்கள் இல்லை.

இந்த துணைக்குழுவிற்கு வறுமை ஒழிப்பு சங்கத்தில் உறுப்பினராக உள்ள, இலக்கு மக்கள் பிரிவைச் சார்ந்த ஒருவர் தலைமை ஏற்று வழி நடத்த வேண்டும்.

செயல்பாடுகள்

இத்துணைக்குழு பின்வரும் செயல்பாடுகளில் வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு உதவியும், ஆலோசனையும் வழங்கும்.

நிதி சார்ந்த தகவல்களை இலக்கு மக்கள் மற்றும் அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்துவது.

வெளிப்படையான கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது.

உரிய நேரத்தில் நிதி உதவி அளித்திட, வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு துணை நிற்பது.

பதிவேடுகள் மற்றும் வங்கி கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வது.

நிதி அறிக்கை சமர்ப்பிக்க வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு உதவி புரிவது.

தனிநபர் வாழ்வாதார கடன் மூலம் உரிய கொள்முதல் செய்வதை உறுதி செய்தல்.

3. இளைஞர் மேம்பாட்டு துணைக்குழு

குடியிருப்பு மற்றும் ஊராட்சி அளவில் உள்ள 18 வயதுக்கு மேல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து இளைஞர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து இளைஞர்களையும் ஒன்று திரட்டி, இளைஞர் அமைப்பினை முன்னின்று செயல்படுத்த 10-15 பேர்கள் கொண்ட ஒரு துணைக்குழுவை உருவாக்க வேண்டும். இவர்கள் ஊராட்சியின் ஒவ்வொரு குடியிருப்பின் பிரதிநிதியாக செயல்படும் வகையில் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த துணைக் குழுவில் குறைந்தது 50ரூ பேர் இலக்கு மக்களைச் சார்ந்த இளைஞர்களாகவும், குறைந்தது 50ரூ பேர் பெண்களாகவும் இருக்க வேண்டும்.

இந்த துணைக்குழுவிலிருந்து இலக்கு மக்களைச் சார்ந்த 1 ஆணும், 1 பெண்ணும் கிராம சபையின் ஒப்புதலோடு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் பிரதிநிதிகளாக செயல்படுவார்கள். இவர்களில் ஒருவர் இளைஞர் அமைப்பின் பொறுப்பாளராகவும் மற்றவர் துணைப் பொறுப்பாளராகவும் செயல்படுவார்கள்.

இளைஞர் துணைக்குழு உறுப்பினர்கள் உள்ளூரிலேயே இருப்பவர்களாக இருக்க வேண்டும். மேலும், இவர்கள் மற்ற இளைஞர்களுடன் நன்கு பழகுபவர்களாகவும், சமூக மேம்பாட்டில் தன்னார்வமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

4. கிராம வறுமை ஒழிப்பு சங்க பழங்குடியினர் துணைக்குழு

நமது ஊராட்சியில், குறைந்தது 10 லிருந்து 49க்கு மிகாமல் பழங்குடியினர் குடும்பங்கள் இருக்கும் பட்சத்தில், நாம் பழங்குடியினர் துணைக்குழுவினை அமைக்க வேண்டும்.

பழங்குடியினர் துணைக்குழுவில், வறுமை ஒழிப்பு சங்கத்தில் உள்ள பழங்குடியினர் குடியிருப்பு பிரதிநிதி ஒருவரும், பழங்குடியினர் இலக்கு மக்களாகத் தேர்வு செய்யப்பட்ட இரண்டு நபர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

வறுமை ஒழிப்பு சங்கத்தில் உள்ள பழங்குடியினர் பிரதிநிதி, பழங்குடியினர் துணைக்குழுக்கள் தலைவராக இருப்பார்.

சுய உதவிக்குழுக்கள் அமைத்தல்

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு“ என்பது நாம் அனைவரும் அறிந்த பழமொழி. நமது புதுவாழ்வு திட்டத்தின் இலக்கு மக்களாகிய மிகவும் ஏழை, ஏழை, நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஆகியோரை குழுக்களாக இணைப்பது நமது கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் முதன்மையான செயல்பாடாகும். சுய உதவிக் குழுக்கள் குறித்த அனைத்து செயல்பாடுகளையும் செயல்படுத்துவது கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் பொறுப்பு ஆகும். இதில், தொழில் மற்றும் கண்காணிப்பு துணைக்குழு முக்கிய பொறுப்பு வகிக்கும். விடுபட்ட இலக்கு மக்கள் அனைவரையும் குழுவில் இணைப்பதை பற்றிய விவரங்கள் தெளிவாக திட்ட விளக்கப் புத்தகம் நான்கில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தக பராமரிப்பு மற்றும் கணக்கு பயிற்சி

புதுவாழ்வு திட்டத்தில் மக்களாகிய நாமே திட்டமிட்டு, செயல்படுத்தி நாமே கண்காணிக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். இவற்றை நாம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு நம்மிடம் நிதி தேவை. இதற்கு புதுவாழ்வு திட்டத்திலிருந்து கிராம வறுமை ஒழிப்பு சங்கம் நேரடியாக பெறும் நிதியினை “கிராம நிதி“ என்று அழைக்கின்றோம். அதை நாம் மக்களின் தேவைக்கேற்ப சிக்கனமாகவும், நாணயத்துடனும் பயன்படுத்த வேண்டும். நிதி செலவினம் பற்றிய விவரங்கள் அனைத்தும் தெளிவாக பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு நமக்கு தகுந்த பயிற்சிகள் தேவைப்படும் என்பதால் திட்ட ஒருங்கிணைப்பு அணியின் உதவியுடன் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் செயலாளர், பொருளாளர், கணக்காளர் மற்றும் சமூக தணிக்கை குழுவிலிருந்து ஒரு உறுப்பினர் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டும்.

மறுவாழ்வு ஆய்வு முகாம்

நமது கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோரின் மறுவாழ்வுக்கான வாய்ப்புகளை கண்டறிவதற்காக மறுவாழ்வு ஆய்வுமுகாம் ஒன்றினை ஊராட்சி அளவில் நடத்தப்பட வேண்டும். இம்முகாமினை வட்டார மாற்றுத்திறனாளிகள் வழிகாட்டும் நிறுவனத்தின் உதவியுடன் நடத்த வேண்டும். இம்முகாமின்போது துறைவாரியான மருத்துவ வல்லுநர்கள் அழைக்கப்பட வேண்டும். இவர்கள் குடியிருப்பு வாரியாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களின் மறுவாழ்விற்கான வாய்ப்புகளை கண்டறிவார்கள். இதனடிப்படையில் வட்டார மாற்றுத்திறனாளிகள் வழிகாட்டுதல் நிறுவனம் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துடன் இணைந்து “மறுவாழ்விற்கான செயல்திட்டம்” ஒன்றினை தயார் செய்ய வேண்டும். இம்முகாமிற்கான அனைத்து செலவுகளும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் செய்ய வேண்டும்.

மாதிரி கிராமங்களுக்கு களப்பயணம்

கேட்பதை விட பார்ப்பது மனதில் நம்பிக்கை ஏற்படுத்தும் என்பதால் சிறப்பாக செயல்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு நாம் சென்று பார்ப்பது, நமக்கு மேலும் சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கும். ஆகவே, ஏதேனும் அருகில் இருக்கும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் சென்று பார்த்து வருவது நன்று.

தொலை நோக்கு பார்வை

ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்கள் முதலாவதாக குறிப்பிட்ட இடத்தை அடைய வேண்டும் என்ற இலக்குடன் ஓடுவார்கள். எங்கே ஓட வேண்டும் என்று அறியாமல் ஓடுபவர்கள் வெற்றியடைய வாய்ப்பில்லை. அதேபோன்று நம் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் எதனை நோக்கி செயல்படுகின்றோம் என்பதை அறிந்து கொண்டு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயிக்க வேண்டும். இதையே நாம் “தொலைநோக்கு பார்வை“ என்று அழைக்கின்றோம். இந்த இலக்கினை நாம் குடியிருப்பு வாரியாக இலக்கு மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு நிர்ணயிக்க வேண்டும். இதனை எவ்வாறு செய்வது? என்பதை தெளிவாக திட்ட விளக்கப் புத்தகம் இரண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராம வளர்ச்சி திட்டம்

தொலைநோக்கு பார்வையில் குறிப்பிடப்பட்ட இலக்கினை நாம் அடைய நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக விளக்குவதே கிராம வளர்ச்சி திட்டமாகும். கிராம வளர்ச்சி திட்டத்திற்கான மாதிரி படிவம் இணைப்பு 2ல் கொடுக்கப்பட்டுள்ளது. கிராம வளர்ச்சித் திட்டத்தினை தயார் செய்த பின் அதை நாம் ஊர் பொது இடங்களில் மக்களுக்கு புரியும் வகையில் தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும்.

7 நாட்களுக்குப்பின் கிராம சபையில் ஒப்புதல் பெறவேண்டும். இந்த கிராம சபை கூட்டங்களில் 70 சதவீதம் இலக்கு மக்கள் குடும்பங்களிலிருந்து பிரதிநிதி கலந்து கொண்டிருக்க வேண்டும். இதில் 50 சதவீதம் பெண்களாக இருக்க வேண்டும். இது பற்றிய விபரங்கள் திட்ட விளக்கப் புத்தக எண் நான்கில்-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

2.88888888889
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top