பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பிற நிதிகள்

புதுவாழ்வு திட்டத்தின் பிற நிதிகள் பெறுவதற்கான இலக்குகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பிற நிதிகள்

மேற்கூறிய கிராம நிதியை தவிர, சிறப்பாக செயல்படுகின்ற கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு மட்டுமே கிராம வறுமை ஒழிப்பு சங்க ஊக்க நிதி மற்றும் கிராம ஊராட்சி ஊக்க நிதி பெற இயலும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க ஊக்க நிதி

ஏழை மக்களுக்கான அமைப்பாக, சிறப்பாக செயல்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களை ஊக்கப்படுத்த கிராம வறுமை ஒழிப்பு சங்க ஊக்க நிதி அளிக்கப்படுகிறது.

கிராம வறுமை ஒழிப்பு சங்க ஊக்க நிதி பெறுவதற்கான விதிமுறைகள்

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்கப்பட்டு இரண்டு வருடம் பூர்த்தி செய்துள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களே இந்த நிதியை பெற தகுதியுடைய அமைப்புகளாகும்.

நிதி பயன்பாட்டினை கண்காணித்தல்

 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஒவ்வொரு நடவடிக்கையிலும் உயிர்மூச்சு கொள்கைகளின்படி நிதி செலவிடப்படுவதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.
 • இந்நிதி கிராம தணிக்கைக் குழு மற்றும் சமூக தணிக்கைக்குழு தணிக்கைக்கு உட்பட்டதாகும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க ஊக்க நிதி

இரண்டு தவணைகளில் விடுவிக்கப்படும்

முதல் தவணை நிதி

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் இரண்டாம் வருட முடிவில் மொத்த ஊக்க நிதியில் 50% - முதல் தரம் (ஹ-ழுசயனந) பெற்ற அனைத்து கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களும் ஊக்க நிதி பெற தகுதி உடையதாகும்.

இரண்டாம் தவணை நிதி

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூன்றாம் வருட முடிவில் மொத்த ஊக்க நிதியில் 50% -     கிராம வறுமை ஒழிப்பு சங்க ஊக்க நிதியின் முதல் தவணைக்கான பயன்பாட்டுச் சான்றிதழ் சமூகத் தணிக்கை குழுவிடம் பெற்றிருக்க வேண்டும்.

கிராம ஊராட்சி ஊக்க நிதி

ஏழை மக்களுக்கான அமைப்பாக, சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளை ஊக்கப்படுத்த ஊராட்சி ஊக்க நிதி அளிக்கப்படுகிறது. மேலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை உயிர்மூச்சு கொள்கைகளின்படி சரியாக செயல்படுத்த கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு தேவையான உதவிகளை செய்யும் ஊராட்சி அமைப்புகளுக்கு இந்நிதி வழங்கப்படும். ஊராட்சிகளுக்கு இந்த ஊக்கநிதி மூன்று தவணைகளாக திட்டத்தின் காலத்திற்குள் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும்.

இந்நிதி ஊராட்சி பொதுக் கணக்கின் மூலமாக செயல்படுத்தப்படும்.

ஊராட்சி ஊக்க நிதி

முதல் ஆண்டின் இறுதியில் மொத்த ஊக்க நிதியில் 30%

இரண்டாம் ஆண்டில் இறுதியில் மொத்த ஊக்க நிதியில் 40%

மூன்றாம் ஆண்டின் இறுதியில் மொத்த ஊக்க நிதியில் 30%

முதல் தரம் (A - Grade) பெற்ற கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் ஊராட்சி மட்டுமே ஊராட்சி ஊக்க நிதி பெற தகுதியுடையதாகும்.

ஊராட்சிகளுக்கு ஊக்கநிதி பின்வரும் அடிப்படையில் கணக்கிடப்படும்.

 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் தர மதிப்பீட்டில் பெற்ற மதிப்பெண்கள்.
 • ஊராட்சி ஏழை மக்களுக்கான அமைப்பாகவும், பிற திட்ட ஒருங்கிணைப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும், பிற விருதுகள் பெற்றிருப்பதன் அடிப்படையில்.

சேவைகளின் தரங்கள்

முறை / செயல்பாடு

ஒப்புதல் அளிப்பு

சேவைத்தரம்

ஊராட்சி தொடக்க செயல்பாட்டு நிதியினை விடுவிப்பது

மாவட்ட அலுவலகம்

ஊராட்சி மற்றும் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு 14 நாட்களுக்குள்

கிராம நிதிக்கான வழிகாட்டு நெறிகளுக்கு ஒப்புதல்

கிராம சபை

கிராம வறுமை ஒழிப்பு சங்கத் திட்டத்தினை இறுதி செய்வதற்கு முன்

நிதி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவது

மாவட்ட அலுவலகம்

ஊராட்சி தொடக்க செயல்பாட்டு நிதி பயன்பாட்டு சான்றுக்கு கிராம சபை ஒப்புதல் அளித்த 15 நாட்களுக்குள்

நிதி ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவது

மாவட்ட அலுவலகம்

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திட்டத்திற்கு கிராம சபை ஒப்புதல் அளித்த 15 நாட்களுக்குள்

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி மற்றும் வாழ்வாதார நிதியின் மூலம் தவணையினை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு விடுவிப்பது

மாவட்ட அலுவலகம்

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி ஒப்பந்தம் ஏற்பட்ட 15 நாட்களுக்குள்

அடையப்பட்ட இலக்குகளுக்கு சான்றளிப்பது

மதிப்பீட்டுக்குழு/சமூக தணிக்கைக் குழு

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திலிருந்து கோரிக்கை வந்த 15 நாட்களுக்குள்

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியின் மீதத்தவணையினை விடுவிப்பது

மாவட்ட அலுவலகம்

விண்ணப்பம் அளிக்கப்பட்ட 7 நாட்களுக்குள்

வாழ்வாதார நிதியின் முதல் தவணையினை ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பிற்கு விடுவிப்பது

கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

விண்ணப்பம் அளிக்கப்பட்ட 15 நாட்களுக்குள்

சுய உதவிக்குழுக்களுக்கு ஆதார நிதியினை விடுவிப்பது

கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

சுய உதவிக்குழுக்களை சமூக தர மதிப்பீடு செய்யப்பட்ட 15 நாட்களுக்குள்

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு உதவி மற்றும் இளைஞர் மேம்பாடு நிதியினை விடுவிப்பது

கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

விண்ணப்பம் அளிக்கப்பட்ட 15 நாட்களுக்குள்

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வாழ்வாதார அடிப்படை நிதியினை விடுவிப்பது

ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு

விண்ணப்பம் அளிக்கப்பட்ட 15 நாட்களுக்குள்

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வாழ்வாதார அடிப்படை நிதியினை விடுவிப்பது

சுய உதவிக்குழு

விண்ணப்பம் அளிக்கப்பட்ட 7 நாட்களுக்குள்

 

கிராம வறுமை ஒழிப்பு சங்க வளர்ச்சி நிதி கணக்கு

ஒரு குழந்தை வளரும் பருவம் வரை தாயின் பராமரிப்பில் வளருகிறது. வளர்ச்சி அடைந்த பிறகு தானாகவே தன்னுடைய வேலைகளை செய்கிறது. அது போல கிராம வறுமை ஒழிப்பு சங்கமும் தன்னிறைவு பெற்று செயல்படுவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்க வளர்ச்சி நிதி தேவைப்படுகிறது. இதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியில் கொடுக்கப்பட்ட தனிநபர் கடன் திரும்பப் பெற்ற தொகையை தனியாக (ஊராட்சியின் பெயர்) கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி என்ற பெயரில் வங்கிக் கணக்கு துவங்கி பராமரிக்க வேண்டும். இந்த வங்கி கணக்கினை கிராம வறுமை ஒழிப்பு சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் இணைந்து செயல்படுத்த வேண்டும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் செய்ய வேண்டிய பணிகள்

 • தனி நபர் கடன் திரும்பப் பெறும் அசல் மற்றும் வட்டித் தொகை அனைத்தும் உடனடியாக வங்கிக் கணக்கில் செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
 • வளர்ச்சி நிதி கணக்கிற்கு தனியாக பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்
 • வளர்ச்சி நிதி கணக்கின் விபரத்தினை மாவட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் (வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், கிளை).
 • மேலும் வளர்ச்சி நிதி கணக்கின் மாதாந்திர அறிக்கையினை மாவட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க வளர்ச்சி நிதி கணக்கில் செய்ய வேண்டியவை

 • கிராம வறுமை ஒழிப்பு சங்க வளர்ச்சி நிதியை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் மட்டுமே செலவுகள் மேற்கொள்ள வேண்டும்.
 • திறன் வளர்ப்பு செலவினங்களுக்காக மட்டும் பயன்படுத்தலாம்.
 • இந்நிதியில் மேற்கொள்ளப்படும் செலவுகள் அடுத்தடுத்த தவணை பெறுவதற்கான பயன்பாட்டு சதவிதத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

வளர்ச்சி நிதி கணக்கிற்கு தனியாக பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்

1. வரவு ரசீது

2. செலவினச் சீட்டு

3. ரொக்க புத்தகம்

4. பொதுப் பேரேடு

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top