பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

புதுவாழ்வு திட்டத்தில் உதவி புரியும் நிறுவனங்கள்

புதுவாழ்வு திட்டத்தில், இந்த நிறுவனங்கள் எவ்வாறு உதவி புரியும் என்பதனை இப்பகுதியில் பார்ப்போம்.

கிராம சபை

கிராம சபை என்பது நமது கிராம மக்களுக்காக ஊராட்சி அளவில் செயல்படும் ஒரு மக்கள் அமைப்பாகும். இதில் வாக்களிக்க தகுதியுள்ள, அனைவரும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த கிராம சபை, நமது திட்டத்திற்கு ஒரு தாய் நிறுவனமாகும். கிராம சபைக்கு நமது திட்டத்தில் கீழ்கண்ட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கிராம சபையில் ஒப்புதல் பெறவேண்டிய செயல்பாடுகள்

 • திட்டத்தை உயிர் மூச்சின்படி செயல்படுத்துவதாக, தீர்மானம் நிறைவேற்றி புதுவாழ்வு திட்டத்தை கிராமத்திற்கு கொண்டுவர உதவ வேண்டும்.
 • இலக்கு மக்கள் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சமூக தணிக்கை குழு மற்றும் துணைக்குழுக்களை ஏற்படுத்த தேவையான உறுப்பினர்களை தேர்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம் தயாரிக்கபட்ட கிராம வாழ்வாதார திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
 • கணக்காளர், கிராம மாற்றுத்திறனாளி பணியாளர், சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர் மற்றும் சமூக வல்லுநர்கள் போன்றவர்களை நியமனம் செய்ய கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு வழிகாட்டி ஒப்புதல் தர வேண்டும்.
 • புதுவாழ்வு திட்டத்திலிருந்து நிதி வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்.
 • புதுவாழ்வு திட்டத்தின் மூலம் பெறப்பட்ட அனைத்து நிதிகளுக்கான பயன்பாட்டு சான்றிதழ் விவரங்களை பொதுமக்களிடம் தெரிவித்து அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
 • புதுவாழ்வு திட்டப்பணியின் காலாண்டு அறிக்கையினை பொதுமக்களுக்கு தெரிவித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.
 • ஊராட்சி ஊக்க நிதியினை பெறுவதற்காக பரிந்துரை செய்வது, போன்றவைகளாகும்.

கிராம சபைக்கூட்டம்

ஆண்டிற்கு நான்கு முறை கிராம சபைக்கூட்டம் நடைபெற்றாலும், நமது திட்டத்தின் தேவைக்கேற்ப மாவட்ட ஆட்சியாளரின் ஒப்புதல் மாவட்ட அலுவலகத்தின் வழிகாட்டுதலுடன் பெற்று நாம் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை கூட்டலாம்.

கிராம சபைக் கூட்டத்தில் குறைந்தது 50 சதவிகித பெண்கள் பங்கேற்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் / மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் பெரும்பான்மையாக கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கிராம சபையில் இலக்கு மக்கள் அதிகம் கலந்து கொள்வது நல்லது.(மக்களின் பங்கேற்பு கீழ்கண்ட அளவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்)

வ.எண் கிராம ஊராட்சியின் மக்கள் தொகை குறைந்த பட்சம் கலந்து கொள்ள வேண்டியவர்கள்
1 500 வரை 50
2 501-3000 வரை 100
3 3001-10000 வரை 200
4 10000க்கு மேல் 300

ஊர்க்கூட்டம்

ஊர்க்கூட்டம் என்பது ஒரு கிராமம் அல்லது குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து இலக்கு மக்களையும் கொண்டு நடத்தப்படும் கூட்டம் தான் ஊர்க்கூட்டம்.

கிராம சபை ஒரு பெரிய அமைப்பு என்பதாலும் நம் தேவைக்கேற்ப அவ்வப்போது நாம் கிராம சபையினை கூட்ட முடியாது என்பதாலும், திட்ட செயல்பாட்டினை தேவைக்கேற்ப மக்களிடம் எடுத்து சென்று முடிவுகள் எடுக்க நாம் தேவைக்கேற்ப ஊர்க்கூட்டத்தினைக் கூட்டலாம்.

ஊர்க் கூட்டத்தின் செயல்பாடுகள்

 • திட்ட விளக்கம் மற்றும் மக்கள் நிலை ஆய்வு நடத்த உதவி அளித்தல்
 • குடியிருப்பு பிரதிநிதிகளை தேர்வு செய்தல்
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் திட்டம் தீட்ட குடியிருப்பிலுள்ள இலக்கு மக்களுடன் கூட்டம் நடத்துதல்
 • வாழ்வாதார வள ஆய்வினை குடியிருப்பு வாரியாக நடத்தி, இலக்கு மக்களுடன் இணைந்து தொழில் திட்டங்களைத் தயாரிக்க உதவுதல்
 • பிரச்சனைகள் ஏற்படும் போது குடியிருப்பு பகுதியில் கூட்டம் போட்டு அதற்கு தீர்வு காணுதல்.

ஊர்க்கூட்ட விதிமுறைகள்

 • ஊர்க் கூட்டங்களின்போது இலக்கு மக்கள் குடும்பங்களிலிருந்து மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பங்கேற்க வேண்டும்.
 • 50ரூ விழுக்காடு பெண்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
 • ஊர்க் கூட்டங்கள் நடத்தியதற்கான பதிவேடுகள், தீர்மானப் புத்தகங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.

ஊராட்சி மன்றம்

நமது கிராம ஊராட்சிக்கு ஏற்கனவே ஜனநாயக முறையில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். “புதுவாழ்வு” திட்டத்தினை திறமையாக செயல்படுத்துவதில் நமது கிராம ஊராட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஊராட்சி மன்றம் புதுவாழ்வு ஏற்று செயல்படுத்தவும், திட்ட உயிர்மூச்சினை பின்பற்றவும், ஒப்புதல் தெரிவித்து திட்ட அலுவலகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறது.

ஊராட்சி மன்றத்தின் பொறுப்புகள்

 • திட்டம் குறித்து மக்களுக்கு தெரிவித்தல்.
 • மக்கள் நிலை ஆய்வு நடத்தி இலக்கு மக்களை அடையாளம் காணுதல்.
 • இலக்கு மக்களை உள்ளடக்கிய சுய சார்புடைய கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சமூக தணிக்கை குழுவினை அமைத்தல்.
 • பயிற்சி மற்றும் களப்பயணங்கள் வாயிலாக கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் சமூக தணிக்கை குழு ஆகியவற்றின் திறனை வளர்த்தல்.
 • ஊராட்சி நிதிக்கான பயன்பாட்டுச் சான்றிதழ் சமர்ப்பித்தல்.
 • புதுவாழ்வு திட்டத்தினை செயல்படுத்த, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு, நமது கிராம ஊராட்சி கீழ்கண்ட வழிகளில் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
 • தேவையான போது கிராம சபா கூட்டம் நடத்துதல்.
 • அமுலிலுள்ள மற்ற அரசாங்க திட்டங்களை ஒருங்கிணைத்தல்
 • கிராமத்திலுள்ள மிகவும் ஏழைகள், நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொலைநோக்குத் திட்டம் தீட்ட ஒத்துழைப்பு தருதல்.
 • தேவையான வாழ்வாதார வளங்களை கண்டறிதலும், வாழ்வாதார திட்டங்களை தயார் செய்தல்.
 • பொருளாதார வளர்ச்சிக்காக தொழில் குழு அமைத்து, தொழில் திட்டங்களை செயல்படுத்த உதவுதல்.
 • ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் திட்ட செயல்பாடுகள் சரிவர நடைபெறுவதை உறுதி செய்தல்.
 • கிராமத்தில் ஏற்படும் முரண்பாடுகள் களைய உதவுதல்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

2.86206896552
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top