பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புது வாழ்வு திட்டம் - பாகம் 5

ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மக்கள் சாசனம் ஐந்தாம் பாகம் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பற்றி ஒரு தகவல்

• மொத்த பரப்பளவு : 1,30,058 ச.கி.மீ

• மாவட்டங்கள் : 32

* வருவாய்பிரிவு : 76

* தாலுக்கா : 215

ஊராட்சிகள் : 17,099

கிராமப்புறம்

• மாவட்டங்கள் : 31

• வட்டாரங்கள் : 385

* கிராம பஞ்சாயத்துக்கள் : 12,524

• குடியிருப்புகள் : 79,394

நகர்ப்புறம்

• மாநகராட்சிகள் : 10

• நகராட்சிகள் :152

* நகர பஞ்சாயத்துக்கள் : 529

மக்கள்தொகை : 7,21,38,958

• ஆண்கள் : 3,61,58,871 (50.12%)

• பெண்கள் : 3,59,80,087 (49.88%)

• கிராமப்புற மக்கள் தொகை : 3,71,89,229 (51.55%)

* ஆண்கள் :1,86,63,701 (50.18%)

• பெண்கள் :1,85,25,528 (49.82%)

• நகர்ப்புற மக்கள் தொகை :3,49,49,729 (48.45%)

*ஆண்கள் : 1,74,95,170 (50.05%)

*பெண்கள் : 1,74,54,559 (49.94%)

(2011 கணக்கெடுப்புப்படி)

மொத்த குழந்தைகள் : 6,894,821

• ஆண் (0-6 வயது) : 3,542,351 (51.37%)

• பெண் (0-6 வயது) : 3,352,470 (48.62%)

படிப்பறிவு சதவிகிதம் : 80.33%

*ஆண் : 86.81%

*பெண் : 73.86%

படிப்பறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை : 52,413,116

*ஆண் : 28,314,595

*பெண் : 24,098,521

பாலினவிகிதம் : 995

குழந்தைகள் பாலினவிகிதம் : 946

(2011 கணக்கெடுப்புப்படி)

புதுவாழ்வு திட்டம்

தமிழ்நாடு புதுவாழ்வுதிட்டம் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அன்றைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட திட்டமாகும். புதுவாழ்வுத்திட்டம் தமிழ்நாடு ஆற்றல் அளிப்பு மற்றும் வறுமையொழிப்பு திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சமுதாயப்பங்கேற்பு முறையில் செயல்பட்டு வறுமையை ஒழிப்பதும் இலக்கு மக்களை சமூக பொருளாதாரரீதியாக ஆற்றல் மற்றும் வளர்ச்சியடையச் செய்தலுமே ஆகும். இத்திட்டம் ஏழைமக்களை மேம்படுத்தும் வலிமைமிக்க, துடிப்புமிக்கசமுதாய அமைப்புகளை ஏற்படுத்துதல், அவர்களது தகுதி மற்றும் திறன் ஆகிய வற்றை உயர்த்துதல், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் வணிகவங்கிகளின் வாயிலாக நிதியாதாரங்களைப் பெறவழிவகை செய்தல் மற்றும் அவர்களுக்கு நிலையான வாழ்வாதாரங்களை ஏற்படுத்தி வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. ஏழைமக்கள் மேலும் வளர்ச்சியடையும் வண்ணம் சமுதாயபாதுகாப்பு திட்டங்களையும், அவர்களுக்கு உரிய உரிமைகளையும் பெறுவதற்கு இத்திட்டம் வழிவகுக்கிறது. புதுவாழ்வுத் திட்டம் செயல்படும் பகுதியில் வறுமையில்லா தமிழ்நாடு என்னும் குறிக்கோளை உருவாக்கவும் தேவையானவர்களுக்கு இலாபகரமான வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தவும் மிகவும் ஏழை, எளியோர், நலிவுற்றோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மலைவாழ் சமுதாயத்தினர் நலத்தில் உரிய அக்கறைகாட்டவும் இத்திட்டம் வழிவகுக்கிறது. புதுவாழ்வு திட்டம் மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் அவர்களின் தொலை நோக்குப் பார்வையான "தமிழகத்தை இந்தியாவிலேயே ஏழ்மை இல்லாத வளர்ச்சி அடைந்த வளமான மாநிலமாக உருவாக்க வேண்டும்” என்ற இலட்சியத்தை நனவாக்கும் வண்ணம் செயல்படுத்தப் பட்டுவருகிறது.

புதுவாழ்வு திட்டம் சுயஉதவிக்குழுக்கள், கிராமவறுமை ஒழிப்புசங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், ஒத்த தொழில் குழுக்கள், ஒத்ததொழில் கூட்டமைப்புகள் மற்றும் மக்கள் கற்றல் மையங்கள் போன்ற வலுவான, துடிப்பான செயல்பாடுகள் கொண்ட சமுதாய அமைப்புகளை உருவாக்குவதிலும் அதனை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. இவ்வமைப்புகள் கிராம சபையின் ஒப்புதலுக்குட்பட்ட வையாகும். இச்சமுதாய அமைப்புகளின் மூலமாக அனைத்து திட்ட செயல்பாடுகளும் மேற்கொள்ளப் படுகின்றன. இலக்கு மக்களின் திறன் வளர்த்து, நீடித்த நிலைத்த வாழ்வாதாரங்களை உருவாக்கவும், வெளிப்படையான நிர்வாக செயல் பாடுகள் மற்றும் சமுதாய பங்கேற்பினை உறுதிபடுத்து வதிலும் இச்சமுதாய அமைப்புகள் மிகவும் முக்கியப் பங்காற்றுகின்றன.

திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்

*வலுவான மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய சமுதாய அமைப்புகள் மூலம் ஏழை மற்றும் நலிவுற்றோரின் வாழ்க்கைத்தர மேம்பாடு மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சி அடைய வழிவகை செய்தல்.

*ஏழை, எளிய, நலிவுற்ற மக்களின் ஆற்றலை மேம்படுத்தி அவர்களின் நிலைத்த வாழ்வாதார வளர்ச்சிக்குத் தேவையான நிதி உதவியினை "மாறாகோட்பாடு அணுகு முறையினை" பின்பற்றி வழங்குதல்.

*ஏழைமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் நலிவுற்றோர் தகுதி மற்றும் திறன் மேம்பாட்டினை உயர்த்துதல்.

திட்ட செயலாக்கப் பகுதி விவரம்

பிரிவுகள்

வட்டாரங்களின் எண்ணிக்கை

கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை

தொடங்கப்பட்ட

மாதம்

திட்டம் நடைமுறையில் உள்ள பகுதிகள்

I

15

578

நவம்பர் 2005

II

15

584

ஏப்ரல் 2007

III

20

635

பிப்ரவரி 2008

IV

20

712

பிப்ரவரி 2009

மொத்தம்

70

2509

 

திட்டம் நடைமுறையில் உள்ள இரண்டாவது கட்ட பகுதிகள்

I

26

874

ஜூன் 2011

II

24

791

அக்டோபர் 2011

மொத்தம்

50

1665

 

மொத்தம்

120

4174

 

(ரூபாய் கோடியில்)

5. நிதி விவரம்

விவரம்

திட்டம் நடைமுறையில் உள்ள பகுதிகள்

மொத்த நிதி விவரம்

முதற்கட்ட பகுதிகள்

இரண்டாம் கட்ட பகுதிகள்

1. கிராம அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் வலுப்படுத்துதல்

136.24

 

172. 38

308.62

2. அ. கிராம நிதி

546.18

782, 16

1,328.34

ஆ. கிராமப்புற வாழ்வாதார அமைப்புகளுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவிலான உதவிகள்

24. 43

40,72

65. 15

இ. திட்ட பராமரிப்பு செலவினங்கள்

53.75

115.99

169.74

மொத்தம்

760.60

1,111.25

1,871.85

6. முக்கிய நிகழ்வுகள்

முதல் கட்டம் இரண்டாம் கட்டம் திட்டம்

பொருள்

திட்டம் நடைமுறையில் உள்ள பகுதிகள்

முதற்கட்ட பகுதிகள்

இரண்டாம் கட்ட பகுதிகள்

கடன் ஒப்புதல்

12.07.2005

18.11.2010

கையொப்பமானது

14.09.2005

23.12.2010

நடைமுறைபடுத்தப்பட்டது

24.10.2005

22.02.2011

முடிவு பெறும் தேதி

30.06.2017

30.06.2017

புது வாழ்வு திட்டம் சமூக நலத்துறையிலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு மாற்றப்பட்ட தேதி : 20.07.2006

சமுதாயம் சார்ந்த வளர்ச்சி அணுகுமுறை

புது வாழ்வு திட்டம் ஏழை மக்களின் தேவைகளை கண்டறிந்து மக்களுக்காக மக்களே திட்டமிட்டு செயலாற்றும் சமுதாயம் சார்ந்த வளர்ச்சி அணுகுமுறையைப் பின்பற்றி, நிலையான வாழ்வாதாரம் மூலம் வருவாய் பெருகிட முனைப்புடன் செயல்படுகிறது. மேலும், இத்திட்டம் இலக்கு மக்களை பல்வேறு அரசு திட்டங்களின் மூலம் வழங்கப்படும் பயன்களை மற்றும் தங்கள் உரிமைகளை பெற்றிட ஆற்றல்படுத்தவும் பிற துறைகளுடன் சீரிய முறையில் இணைந்து செயலாற்றவும் வழிவகை செய்கிறது.

புதுவாழ்வு திட்ட நோக்கங்களை அடைந்திட கீழ்க்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

• சமூக அமைப்புகளின் வாயிலாக சமுதாய ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார உயர்வு

* திறன் வளர்ப்பு பயிற்சிகள்

* நிதி சேவை

* இளைஞர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சிகள்

• வாழ்வாதார மேம்பாடு

* நலிவடைவு நீக்கம்

* நீர், சுத்தம், சுகாதார வளர்ச்சித் திட்டங்கள் மூலம் சுத்தம், ஆரோக்கிய வாழ்வு மற்றும் சுற்றுச் சூழல் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு அளித்தல்.

செயற்பாட்டு அமைப்பு முறை

1 மாநில திட்ட மேலாண்மை அலகு

மாநில புதுவாழ்வு சங்கம் தமிழ்நாடு சங்க பதிவுச் சட்டம், 1975 ன் படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சங்கம் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அவர்களின் தலைமையின் கீழ் செயல்படுகிறது. மாநில திட்ட அலகு திட்ட இயக்குநர் தலைமையில் கூடுதல் திட்ட இயக்குநர்கள் மற்றும் பலதரப்பட்ட வல்லுநர்கள் உதவியுடன் செயல்படுகிறது. மாநில அளவிலான சங்கம் திட்ட வழிகாட்டல் மற்றும் கண்காணிப்புப் பணியை மேற்கொள்கிறது. மாவட்ட அளவில் மாவட்ட திட்ட செயலாக்க அலகு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு மாவட்ட திட்ட மேலாளர், உதவித் திட்ட மேலாளர்கள் மற்றும் திட்ட செயலாக்க குழு திட்டத்தினை செயல்படுத்துகிறது.

2. பகுதி அலகு

கிராம மக்கள் அமைப்புகளுக்கு உறுதுணையாக செயல்பட 10 முதல் 15 கிராம் ஊராட்சிகள் இணைத்து களப்பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்களப்பகுதி அமைப்புகளை ஒரு அணித்தலைவர் மற்றும் 4 ஒருங்கிணைப்பாளர்கள் கொண்ட திட்ட ஒருங்கிணைப்பு குழு நிர்வகிக்கிறது.

திட்ட செயலாக்கத்திற்குரிய நிறுவன அமைப்புகள்

சமூக அளவிலான அமைப்புகளின் திறன் வளர்ப்பு பயிற்சி

அனைத்து கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ஒத்த தொழில் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

கிராம வறுமை ஒழிப்புச் சங்கம்

* திட்டக் கையேடு புத்தகம் - 1

* திட்டக் கையேடு புத்தகம் - II

* ஆளுமை (ம) பொறுப்புணர்வு

சமூக தணிக்கைக் குழு

* திட்டக் கையேடு புத்தகம் -1 & II

* ஆளுமை (ம) பொறுப்புணர்வு

* ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் கொள்கை

சுய உதவிக் குழு

* உறுப்பினர் பயிற்சி கையேடு I, II & III

* நிர்வாகப் பயிற்சி

* புத்தக பராமரிப்புப் பயிற்சி

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு

* ஆளுமை

* நிதி மேலாண்மை

* புத்தக பராமரிப்பு

ஒத்த தொழில் குழு (அ) பொருளாதார தொழில் கூட்டமைப்பு

* ஆளுமை

* நிதி மேலாண்மை

* புத்தக பராமரிப்பு

* தொழில் திட்டம்

கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள்

கிராம வறுமை ஒழிப்பு சங்கமானது இலக்கு மக்களின் அனைத்துப் பிரிவு உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட சுய சார்பு மிக்க சமூக அமைப்பாகும். 11 முதல் 19 உறுப்பினர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பானது திட்ட செயல்பாடுகளைக் நிறைவேற்றவும் கண்காணிக்கவும் திட்டப் பயன்களை கடைநிலை ஏழை எளிய மக்களுக்கு கொண்டு சேர்ப்பதை உறுதி செய்யவும் கிராம் அளவில் உறுதுணையாக உள்ளது. இச்சங்கத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அலுவல்சாரா மரபுவழித் தலைவராக செயல்படுவார்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம், கிராம கற்றல் மையமாகவும் செயல்பட்டு மின் அழுகை சேவை மற்றும் மின் வணிக சேவை வழியாக மக்கள் தங்களுக்கு உரியவற்றைப் பெறுவதற்கும் பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவதற்கும் உதவி வருகிறது.

திட்ட நிதி கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றது. சராசரியாக ரூ.15 இலட்சம் நிதி 3 தவணைகளில் விடுவிக்கப்படுகிறது. இந்நிதியில் 40 விழுக்காடு திறன் மேம்பாட்டிற்காகவும், 40 விழுக்காடு மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் சிறப்பு உதவிக்கும், 20 விழுக்காடு இளைஞர்கள் திறன் வளர்ப்புகளுக்கும் திட்ட இலக்குகளின் படி பயன்படுத்தப்படுகிறது.

ஊராட்சிகளின் எண்ணிக்கை

கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் எண்ணிக்கை

கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கான நிதி செலவினம்

31.05.2017 வரை

எண்ணிக்கை

நிதி செலவினம் (ரூ. கோடியில்)

4,174

4,465

4,465

711.67

சமூகத் தணிக்கை குழுக்கள்

திட்டத்தின் உயிர் மூச்சு கொள்கைகளான அனைவரும் சேர்ந்து முடிவு எடுத்தல், நலிவுற்றோருக்கு முன்னுரிமை அளித்தல், பொறுப்புணர்வுடன் நடத்தல் மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை பின்பற்றி மக்கள் அமைப்புகள் செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதற்காக 5 முதல் 7 உறுப்பினர்கள் கொண்ட 'காவல் குழுவாக' சமூகத் தணிக்கை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திட்டப்பகுதிகளில் 4,465 சமூக தணிக்கை குழுக்கள் உருவாக்கப்பட்டு திட்ட செயலாக்கம் கண்காணிக்கப்படுகிறது.

சுய உதவிக் குழுக்கள்

இத்திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களை கொண்டு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்போது இலக்கு மக்கள் அனைவரையும் குழுக்களில் இணைக்கப்படுவதில் கவனம் செலுத்தப்படுகிறது. சுய உதவிக் குழுக்களை பொறுத்தவரை 12 முதல் 20 நபர்களைக் கொண்டு அமைக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கென குழுக்கள் அமைக்கும்பொழுது உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு தளர்த்தப்படுகிறது. சேமிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கவும் உறுப்பினர்களின் திறனை வளர்க்கவும் கடன் இணைப்பு பெற்று உறுப்பினர்கள் வாழ்வாதாரம் மேம்படவும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. புது வாழ்வுத் திட்டம் புதிய குழுக்களை அமைப்பதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே செயல்படும் குழுக்களையும் ஒருங்கிணைத்து வலுப்படுத்தி வருகிறது. திட்டப்பகுதியில் 1,07,436 சுய உதவிக் குழுக்கள் செயல்படுகிறது. இதில் 3,709 பழங்குடியினர் குழுக்களும் அடங்கும்.

சுய உதவிக்குழுக்களின் விவரம் 31.05.2017 வரை

விவரம்

31.03.2017 வரை சாதனை

அ.புதிய குழுக்கள்

பெண்களுக்கான சுய உதவிக்குழுக்கள்

22,861

மாற்றுத் திறனாளிகளுக்கான சுய உதவிக்குழுக்கள்

13,286

திட்டத்தினால் உருவாக்கப்பட்ட மொத்த சுய உதவிக் குழுக்கள்

36,147

ஆ. ஏற்கனவே செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள்

71,289

ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள்

ஒரு ஊராட்சியில் உள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களையும் உள்ளடக்கிய அமைப்பான ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுய உதவி குழுக்களுக்கான நிதி மற்றும் பிற சேவைகளை பெற்றுத்தரும் இடைநிலை அமைப்பாக செயலாற்றுகிறது. திட்ட இலக்கீடுகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கும் சராசரியாக ரூ.12 இலட்சம் அமுத சுரபி நிதியாக திட்டத்திலிருந்து இரண்டு தவணைகளில் விடுவிக்கப்படுகிறது. இந்த அமைப்பு உறுதியான மற்றும் சிறப்பான சேவையின் மூலம் வட்டிக் கடைக்காரர்கள் மற்றும் நுண்நிதிக்கடன் நிறுவனங்களது பிடியிலிருந்து மிகவும் ஏழ்மையில் உள்ளவர்களை விடுவிப்பது இத்திட்டத்தின் பெருமைமிக்க சாதனைகளுள் ஒன்றாகும். குழுக்களை வலுப்படுத்தி அதன் செயல்பாடுகளை கண்காணிப்பதுடன் இதுவரை இக்கூட்டமைப்புகளுக்கு விடுவிக்கப்பட்ட திட்ட நிதி ரூ.519.40 கோடி சுழற்சி முறையில் 7,75,378 உறுப்பினர்களுக்கு கடனாக வழங்கப்பட்டு, அத்தொகை ரூ.1693.49 கோடியாக சுழற்சி பெற்றுள்ளது. கூட்டமைப்புகள் புதுவாழ்வ திட்டத்தின் வாயிலாக தான் பெற்ற நிதியை 3.26 மடங்கு சுழற்சி செய்துள்ளன.

சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு

சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு முக்கிய நிதி ஆதாரமாகும். சுய உதவிக் குழுக்களின் நிதி தேவை அதிகமாக இருப்பதனால் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் வங்கியிலிருந்து பெருங்கடன் பெற்று உறுப்பினர்களின் நிதி தேவையைப் பூர்த்தி செய்கின்றன. சுய உதவிக் குழு எளிதாக தொடர்ந்து கடன் இணைப்பு பெறுவதற்கு சுய உதவிக் குழுக்கள் தங்களது தரத்தையும் நம்பகத் தன்மையையும் தொடர்ந்து நிலைநிறுத்தி கடன் பெறும் தகுதி நிலையை அடைய இத்திட்டத்தின் கீழ் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வங்கி கடன் உதவிகளை சுய உதவிக் குழு உறுப்பினர்கள் வருமானம் தரக்கூடிய வாழ்வாதார தொழில்களை மேற்கொள்ளவும் தங்களுடைய நுகர்வு தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். வங்கிக் கடன்கள், சுய உதவிக் குழுக்கள் வலுவாக செயல்படவும், நிலைத்த வாழ்வாதார தொழில்களில் ஈடுபடுவதற்கும் ஒரு உறுதியான தளத்தினை ஏற்படுத்துகின்றன.

சுய உதவிக் குழுக்கள் வங்கி கடன் இணைப்பு 31.05.2017 வரை

விவரம்

31.03.2017 வரை சாதனை

எண்ணிக்கை

நிதி செலவினம் (ரூ. கோடியில்)

அ. முதல் வங்கி கடன் இணைப்பு பெற்ற சுய உதவிக் குழுக்கள்

1,06,211

696.20

ஆ. இரண்டாம் வங்கி கடன் இணைப்பு பெற்ற சுய உதவிக் குழுக்கள்

98,376

4789.73

சுய உதவி குழுக்கள் வங்கி கடன் இணைப்பு (அ+ஆ)

2,00,583

5485.93

கூட்டமைப்பு பெருங்கடன்

847

234.19

மொத்த பெறப்பட்ட கடன் அளவு

 

5720.12

2016-2017 ம் ஆண்டிற்க்கான வங்கிக் கடன் இணைப்பு இலக்கு ரூ.1211.61 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ரூ. 1376.36 கோடி சாதனை எய்தப்பட்டது. சாதனை சதவீதம் 122.

ஒத்த தொழில் குழுக்கள்

ஒரே மாதிரியான அல்லது அதைப் போலவே உள்ள வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோரை ஊராட்சி அளவில் ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவைப்படும் பொது உட்கட்டமைப்பு, பொதுவான கொள்முதல், சந்தைபடுத்துதல் மற்றும் திறன் வளர்ப்பு ஆகிய தேவைகளை பெற்று தருவதற்காக புதிய முயற்சியாக ஒத்த தொழில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒத்த தொழில் குழுக்கள், உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மற்றும் வருமானத்தை உயர்த்துவதன் மூலம் பொருளாதார மேம்பாட்டிற்கு வழி வகுக்கின்றன. இவ்வகையில் திட்ட நிதியிலிருந்து பொது உட்கட்டமைப்பு வசதியை உருவாக்கவும் பிற ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காகவும் ஒவ்வொரு குழுவிற்கும் அதிக பட்சமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

ஒத்த தொழில் கூட்டமைப்பு

இத்திட்டத்தில் ஒரே மாதிரியான தொழிலில் ஈடுபடுகின்ற ஒத்த தொழில் குழுக்களை வட்டாரம், மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து நிறுவனங்களாக ஒத்த தொழில் கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. இக்கூட்டமைப்பின் கீழ் உள்ள குழுக்களுக்கு மூலப்பொருட்கள் கொள்முதல், உற்பத்தி வளர்ச்சி, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான மேல் நிலை ஆலோசனைகள், கூட்டமைப்பின் மூலம் வழங்கப்படுகிறது. ஒத்த தொழில் கூட்டமைப்புகள் சங்கங்களின் சட்டப்படி அமைக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றனர்.

ஓவ்வொரு கூட்டமைப்பிற்கும் அவற்றின் செயல் திட்ட அறிக்கை அடிப்படையில் திட்டத்தில் இருந்து நிதி வழங்கப்படுகிறது. இதில் 75 விழுக்காடு திட்ட நிதி, 20 விழுக்காடு இதர ஒருங்கிணைப்பு நிதி மற்றும் 5 விழுக்காடு உறுப்பினர்கள் பங்களிப்பு என்ற வகையில் நிதி ஆதாரம் ஏற்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தின் கீழ் விவசாயம், பால் பண்ணை தொழில், வெள்ளாடு வளர்ப்பு, காபி, ஆயத்த ஆடை தயாரிப்பு போன்ற 23 ஒத்த தொழில் கூட்டமைப்புகள் இதுவரை அமைக்கப்பட்டு ரூ.5.39 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

திறன் மேம்பாடு

புது வாழ்வு திட்ட பணியாளர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள் அளித்து ஆற்றலை மேம்படுத்தி வறுமையொழிப்பு பணிகளை செய்வது திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். திட்ட பணியாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு தகுந்த திட்ட வழிகாட்டி பயிற்சிகள், கருத்துரு பயிற்சிகள், தேவையின் அடிப்படையிலான பயிற்சிகள் சரியான கால இடைவெளியில் வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிகள் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றவும் இலக்கு மக்களுக்கான சேவைகளை சமுதாய அமைப்புகள் மூலம் வழங்கவும் உதவுகின்றன. திறன் மேம்பாடு பரிமாற்றம் மற்றும் அறிவுப் பகிர்வு முறைகள் மூலம் கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுய உதவிக் குழுக்கள், ஒத்த தொழில் குழுக்கள், ஒத்த தொழில் கூட்டமைப்புகள் மற்றும் மகமை ஆகிய சமூக அமைப்புகள் திறம்பட சுயமாகச் செயல்படும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இலக்கு மக்களைக் கண்டறிந்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி சமூக வல்லுநர்களாக உருவாக்கி வலிமையான சமூக சொத்துகளாக அவர்களை உருவாக்குதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் குறிக்கோள்களில் ஒன்றாகும். அவ்வாறு உருவாக்கப்பட்ட சமூக வல்லுநர்கள், தற்போது திட்டத்தில் சமுதாய வள பயிற்றுநர்களாகப் செயல்பட்டு வருகின்றனர்.

இச்சமூக வல்லுநர்கள் சமூக அமைப்புகளுக்கு வழிகாட்டுபவர்களாவும் உறுதுணை மிக்கவர்களாகவும் அவ்வமைப்புகள் பொறுப்புணர்வுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் திறம்பட செயல்பட உதவுகின்றனர்.

மக்கள் கற்றல் மையங்கள் (மகமை)

மக்கள் கற்றல் மையம், தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தின் மூலம் முதற்கட்ட 16 மாவட்டங்களில், சமூகம் சார்ந்த அமைப்புகளான கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், ஒத்த தொழில் குழுக்கள் மற்றும் ஒத்த தொழில் கூட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக திறன்மிக்க சமுதாய வல்லுநர்களை கொண்ட உயர்நிலை மையமாக விளங்குகிறது. மகமை, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் பதிவு சட்டம் 1975ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகமை பிற அரசு துறைகளுக்கும் சேவை புரிந்து வருகிறது. 5,068 சமுக வல்லுநர்களுக்கு, மகமையின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நிறுவன கட்டமைப்பு, வாழ்வாதார மேம்பாடு, கணக்கு மற்றும் தணிக்கை, வரவு செலவு கணக்கு பயிற்சி (Tally), நிதி இணைப்பு, உடல்நலம் மற்றும் சுகாதாரம் ஆகியவை குறித்த பயிற்சிகள் மகமையைச் சார்ந்துள்ள சமூக வல்லுநர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. மகமை வட்டார மற்றும் மாவட்ட அளவில் செயல்பட்டு வருகிறது. மேலும் தேவையின் அடிப்படையில், கருத்தாக்க சிறப்பு பயிற்சியும் சமூக வல்லுநர்களுக்கு அளிக்கப்பட்டு, அவர்கள் பிற மாநிலங்களில் உள்ள மாநில ஊரக வாழ்வாதார இயக்கங்களுக்கு சேவை புரிய இத்திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு புதுவாழ்வு திட்டம், முதற்கட்ட மாவட்ட மகமைகளுக்கு இதுவரை ரூ.7.56 கோடி நிறுவன வளர்ச்சி திட்ட நிதியில் இருந்து விடுவித்துள்ளது. திட்டம் துவங்கப்பட்ட இரண்டாம் கட்ட 10 மாவட்டங்களிலும், 9 மக்கள் கற்றல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோருக்கான உதவிகள்

கிராம வறுமை ஒழிப்பு சங்கமானது, நலிவுற்ற தன்மை குறைப்பு மற்றும் சமூக பாதுகாப்பினை உறுதி செய்ய முனைப்புடன் கூடிய சிறப்பான சேவைகளை மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்ற நபர்களுக்கு வழங்குகின்றது. கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியில் இருந்து 40 விழுக்காடு நிதி நலிவுற்ற தன்மை குறைப்பு மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாழ்வாதார நலம் பேணுவதற்கும் உடனடி தேவைகளுக்கும் செலவிடப்படுகிறது. காப்பீடுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டைகள், ஓய்வூதியங்கள் போன்ற சேவைகளைப் பெற்றுத் தருதல் மற்றும் மருத்துவ உதவி, உணவு பாதுகாப்பு போன்ற இதர தேவைகளை பிற துறைகளுடன் இணைந்து பெற்றுத் தருவதன் வாயிலாக இலக்கு மக்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் நிர்வாக பங்கேற்றலையும் உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோருக்கான திட்டம் மற்றும் பிற துறை உதவிகள் 31.05.2017 வரை

விவரம்

31.052017 வரை சாதனை

எண்ணிக்கை

நிதி செலவினம்

( ரூ. கோடியில்) நிதி

நிதி உதவி

3,59,179

216.89

உபகரணங்கள்

43,837

16.24

பராமரிப்பு நிதி

22,471

3.37

ஓய்வூதியம்

1,72,045

145.46

சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உதவி

12,185

77.55

திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் முனைவோராக மாற்றுவதற்காக 76 வட்டார அளவிலான தொழில் நுட்ப மையங்களை ரூ.1,50,000 துவக்க நிதியாக ஒரு மையத்திற்கு வழங்கி வழிநடத்துகிறது. பயிற்சியளிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் இந்த மையத்தில் இருந்து கிராம கற்றல் மையம் உட்பட உள்ளூரில் உள்ள கணினி, கைபேசி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை பழுது நீக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

புது வாழ்வு மன நலத் திட்டம்

ஜப்பான் நாட்டின் மனிதவள மேம்பாட்டு திட்ட நிதியுதவியுடன் புது வாழ்வு மனநலத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர் மற்றும் அவர்கள் குடும்பத்தார் பயன்பெறும் விதமாக மக்கள் பங்கேற்பு முறையில் செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் 15 மாவட்டங்களில் 15 வட்டாரங்களில் 578 கிராம ஊராட்சிகளில் உள்ள 609 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களின் வாயிலாக அக்டோபர் 2012ம் ஆண்டு முதல் செப்டம்பர் 2016 வரை செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம், சமூகம் சார்ந்த நடவடிக்கைகள் மூலமாக மனநலம் பேணுதலின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தனிநபர் தகவல் தொடர்பு மூலம் தானாக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் செயல், தொடர்ந்து மருந்து உட்கொள்ளுதல் மற்றும் சிகிச்சை பெறுதல் ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டோர், பாதிப்பிலிருந்து விடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டது. முழுமையாக குணம் அடைந்தவர்கள் சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டதன் மூலம் தங்களுடைய வாழ்வை பொருள் பொதிந்த வாழ்வாக வளர்ச்சி அடைய வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனநலம் குன்றிவர்களுக்கான உதவிகள் 31.05.2017 வரை

வ.

எண்

விவரம்

மனநோய்

மனநலம் குன்றியவர்கள்

மொத்தம்

1.

கண்டறியப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர்கள்

2,741

4,336

7,077

2.

மனநல ஆலோசனை பெற்றவர்கள்

2,690

3,954

6,644

3.

மருத்துவ உதவி பெற்றவர்கள்

2,633

1,734

4,367

4.

வாழ்வாதார உதவி பெற்றவர்கள்

2,612

3,502

6,114

5.

மருத்துவமனை சிகிச்சை பெற்றவர்கள்

810

602

1,116

6.

சிகிச்சை பெற்று நல்வாழ்விற்கு கொண்டுவரப்பட்டவர்கள்

810

_

810

மொத்த நிதி செலவினம்

ரூ.18.06 கோடி

 

புதுவாழ்வுத் திட்டத்தில் பழங்குடியினர்களுக்கான மேம்பாட்டு பணிகள்

புது வாழ்வு திட்டமானது 26 மாவங்ங்ங்களில் வாழும் பழங்குடியினர்களுக்கும் பல வகையான முன்னேற்றம் மற்றும் ஆற்றல்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் 212 ஊராட்சி ஒன்றியங்களில் 351 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களும் 3,613 சுய உதவிக் குழுக்களும், 351 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் (வாழ்வாதார துணைக் குழுக்கள் உட்பட) 259 ஒத்த தொழில் குழுக்களும், 6 ஒத்த தொழில் கூட்டமைப்புகளும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 106 பழங்குடியினர் ஊராட்சிகளில் கிராம கற்றல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு மின் ஆளுமை திட்டத்தில் உள்ள பயன்களை பழங்குடியினர் பெற்ற வருகின்றனர். இத்திட்டத்தில் ரூ.29.77 கோடி நிதி உதவியின் மூலம் 84,343 குடும்ப உறுப்பினர்கள் பயன் பெற்றுள்ளனர்.

இளைஞர்கள் திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு, இந்தியாவில் தொழிற் துறையில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இருப்பினும் வறுமை மற்றும் போதிய திறன் பயிற்சியின்மையும் இளைஞர்களின் வாழ்க்கையில் முன்னேற தடையாக உள்ளது. ஆகையால், வேலைவாய்ப்பு மற்றும் சந்தையின் அடிப்படையில் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதும் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் புதுவாழ்வுத்திட்டத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறது. இதற்காக, அனைத்து ஊராட்சிகளிலும் வேலைவாய்ப்பற்ற மற்றும் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பினை பெற இயலாத 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களின் சொந்த விபரங்களை சேகரித்து இளைஞர் புள்ளி விபரப்பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இளைஞர்களின் விருப்பம், தேவை மற்றும் அவர்களின் ஆர்வத்திற்கேற்ப பல்வேறு துறைகளில் அடிப்படை மற்றும் மேல்நிலை பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

மேலும், புதுவாழ்வுத்திட்டம், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவதன் மூலம் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கும் சிறந்த தொழில் நிறுவனங்களிகளுக்கம் இடையேவேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் பாலமாக செயல்படுகிறது. பிரபல தொழில் நிறுவனங்களான எல்&ட்டி, ஹூண்டாய், டி.வி.எஸ், செயின்ட் கோபெயின், இன்டிமெட் பேஷன், ட்ரயம்ப், நிஸ்சான் போன்ற நிறுவனங்களை, வேலைவாய்ப்பு முகாம்களில் பங்குகொள்ள செய்து இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் தன்னார்வமுள்ள குறைந்தது ஒரு நபரை தேர்வு செய்து அவர்களுக்குப் பயிற்சி அளித்து சமூக வல்லுநராக்கி (வேலைவாய்ப்பு) இளைஞர்களை திறன் வளர்ப்பு பயிற்சிக்கு அனுப்புதல், வேலைவாய்ப்புப் பெற்றுத் தருதல் போன்றவற்றில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

2016-17 ஆம் நிதியாண்டில், 30,326 இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு 27,074 வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள்.

மகளிர் ஆட்டோ ஓட்டுநர் திட்டம்

மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அவர்கள் 2016 ம் ஆண்டு மே மாதம் 100 மகளிர்க்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி வழங்கி, ஆட்டோ வாங்குவதற்கு தேவையான நிதியுதவியை மானியத்துடன் கூடிய வங்கி கடனாக வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் 100 மகளிர்க்கு பயிற்சி அளிக்கப்பட்டு இதுவரை 60 மகளிர்க்கு ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது.

கிராம கற்றல் மையம்

புது வாழ்வுத் திட்டப் பகுதியில் உள்ள 4,174 ஊராட்சிகளிலும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் கிராம கற்றல் மையங்களாகவும் செயல்பட வலுப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து கிராம கற்றல் மையங்களுக்கும் இணையதள வசதியுடன் கூடிய கணினி, வலைத்தள புகைப்படக் கருவி, பயோமெட்ரிக் கருவி, கல்வி கற்பதற்கான குறுந்தகடுகள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், புத்தகங்கள் ஆகியன மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கடைநிலை மக்களும் சந்தை நிலவரம், தொலைதூர மருத்துவ வசதி, இளைஞர்களுக்கான தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டல் மற்றும் மாணவர்களுக்கான உயர்கல்வி பற்றிய தகவல்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கிராம கற்றல் மையங்கள் மின் ஆளுமை மையங்களாக செயல்பட்டு. மக்கள் சாதி, வருமானம், பிறப்பு, இறப்பு மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் உதவித் தொகை மற்றும் நலத்திட்டப் பயன்களைக் பெற ஏதுவாக இந்திய அரசின் மின் வணிக செயல்பாடுகளை மேற்கொள்ளவும் வழிவகை செய்கின்றன. இதுவரை 6,05,654 மின் ஆளுமைச் சயெல்பாடுகள் மக்களைச் சென்றடைந்து பயனளித்துள்ளன. மேலும், அலைபேசி கட்டணம் செலுத்துதல், ஆதார் அட்டை அச்சடித்தல் ஆதார் வழி பணம் வழங்கும் முறை மற்றும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் செலுத்துதல் போன்ற மின் வணிக பரிவர்த்தனைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு இதுவரை 44,133 நபர்கள் சேவைகளைப் பெற்றுள்ளனர். ஆதார் அட்டை பணப்பரிவர்த்தனை மூலம் எளிய முறையில் 5,815 மக்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் பெறுவதற்கான சேவை மூலம் பயனடைந்துள்ளனர். கிராமப்புற மக்கள் தங்களின் மின் கட்டணத்தை எளிய முறையில் செலுத்துவதற்காக தமிழக அரசின் மின் சேவை வாயிலாக 81,947 மின் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை கிராம கற்றல் மையம் வாயிலாக சுமார் ரூ.1.76 கோடி கிராம வறுமை ஒழிப்புச்சங்கங்களுக்கு வருவாயாக கிடைக்கப்பெற்றுள்ளது.

சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரம்

அ) சுற்றுச் சூழல்

தமிழ் நாடு புது வாழ்வுத் திட்டம் வறுமை ஒழிப்பு மற்றும் ஆற்றலளிப்புக்கு வழங்கும் அதே முக்கியதுவத்தை சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரத்துக்கும் வழங்குகிறது. இத்திட்டம் பயனாளிகளுடையவீடு, அதன் சுற்றுப்புறம் மற்றும் கிராமங்களை சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்திருக்க ஊக்கம் அளிக்கிறது.

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் ஒரு பகுதியாக அனைத்து ஒத்த தொழில் குழுக்களின் மூலம் மேற்கொள்ளப்படும் தொழில்களுக்கான உட்கட்டமைப்பு நிதியினை விடுவிக்கும் முன் இத்தொழில்கள் சுற்றுப்புறச் சூழலுக்கு தகுதியானதா என்று ஆய்வு செய்யப்பட்ட பின்னரே விடுவிக்கப்படுகிறது. அதன்படி 5,264 ஒத்த தொழில் குழுக்கள் நெறிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆ) நீர், சுத்தம் மற்றும் சுகாதார முயற்சிகள்

1. இத்திட்டம் ரூ.8 கோடி செலவில் 2,524 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களில் நீர், சுகாதாரம் மற்றும் தூய்மை செயல் விளக்க மாதிரிகளை நிறுவி மக்களிடம் சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வினை 4,465 வறுமை ஒழிப்பு சங்கங்களிலும் ஏற்படுத்தி வருகிறது.

2. மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அவர்கள் மே மாதம் 2016 ம் ஆண்டில் அறிவித்ததன்படி சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்படுள்ளன. இத்திட்டத்தின் கீழ் இதுவரை மேம்பாட்டிற்கான பினாயில், சோப்பு, பிளீச்சிங் பவுடர் போன்ற பொருட்களை தயாரிக்க 796 மகளிர்க்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களில் 315 உறுப்பினர்களுக்கு ரூ.53.52 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டு 397 சுகாதாரம் சார்ந்த சிறு தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன. இவர்கள் தயாரிக்கும் பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளின் தேவைக்கேற்ப வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேசிய வள மையம்

தமிழக அரசின் புது வாழ்வு திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தி, அதன் பயனாக கிடைக்கப் பெற்ற அனுபவத்தாலும், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்திட ஏதுவாக முன் மாதிரிகளை ஏற்படுத்தியதன் விளைவாகவும் தேசிய வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அமைச்சகத்தின் மூலம் புது வாழ்வு திட்டத்தினை தேசிய வள நிறுவனமாக 2012 ஆம் ஆண்டு அங்கீகரித்தது. இதன் பின்பு உலக வங்கி நிதியுதவி பெறும் பிற மாநில திட்டப் பயனாளிகளுக்கும் பணியாளர்களுக்கு பிற மாநில ஊரக வாழ்வாதார இயக்கப் பணியாளர்களுக்கும் பல்வேறு கட்ட புத்தாக்கப்பயிற்சிகள் மற்றும் களப்பயணம் மூலம் பட்டறிவு நிகழ்வுகளையும் தேசிய வள நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

நாளது வரை புது வாழ்வு திட்ட தேசிய வள நிறுவனம் புதுச்சேரி, மேற்கு வங்களாம் மற்றும் பீகார் ஆகிய 3 மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு நிறுவனங்களை அமைத்தல், திறன் வளர்த்தல், நிறுவனக் கூட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தேசிய வள நிறுவன அமைப்புக்கும் பராமரிப்புக்கும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ரூ.1 கோடி நிதியினை பெறப்பட்டு மேற்கண்ட பணிகள் அனுமதித்துள்ளது.

நிதி செயலாக்கம்

அமெரிக்க டாலர்- இந்திய ரூபாய் இடையிலான மதிப்புகளில் ஏற்பட்ட மற்றத்தின் விளைவாக ரூ.204.75 கோடி கூடுதலாக கிடைத்ததின் விளைவாக திட்டத்தின் ஆரம்ப மதிப்பீடு ரூ.1667.10 கோடியிலிருந்து ரூ.1871.85 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய திட்ட ஒதுக்கீடான தொகை ரூ.1871.85 கோடியில் 2017 மே மாதம் வரை ரூ.1818.16 கோடி அளவிற்கு திட்டம் செலவினம் மேற்கொண்டுள்ளது.

திட்டம் நிறைவடைதல்

நவம்பர் திங்கள் 2005 ம் ஆண்டு, உலக வங்கி நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட புது வாழ்வுத் திட்டம் இலக்கு ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் 11 ஆண்டுகளாக செயல்பட்டு,

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்திடம் ஒப்படைதல் மூலம் 30.06.2017 உடன் நிறைவடைய உள்ளது.

திட்ட சாதனைகள் 31.05.2017 வரை சமூக அளவிலான அமைப்புகள் அமைத்தல்

* 4,465 கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்கப்பட்ட ரூ.71.67 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

* அமைக்கப்பட்ட சமூக தணிக்கை குழுக்களின் எண்ணிக்கை : 4,465

*அமைக்கப்பட்ட சுய உதவிக்குழுக்களின் எண்ணிக்கை மகளிர்: 22,861 0

மாற்று திறனாளிகள்:13,286

* கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் இணைக்கப்பட் ட பழைய குழுக்கள் : 71,189

* மறுசீரமைக்கப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் எண்ணிக்கை :4,464

* ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு வாழ்வாதார செயல்பட்டுக்காக ரூ.519.40 கோடி அமுத சுரபி நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

ஒத்த தொழில் குழுக்கள்

* இது வரை 5,264 ஒத்த தொழிற் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

* 23 ஒத்த தொழில் கூட்டமைப்பு அமைக்கப்பட்டு விவசாயம், பால் வளம், ஆடு மற்றும் ஆடைத் தொழில்களுக்காக ரூ.5.39 கோடி நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி

* 4,63,687 இளைஞர்கள் பயிற்சி முடித்துள்ளனர்

* 3,96,441 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளது

மக்கள் கற்றல் மையம் (மகமை)

* 16 முதற்கட்ட மாவட்டங்களில் 16 மக்கள் கற்றல் மையங்கள் (மகமை) அமைக்கப்பட்டுள்ளன.

* 10 இரண்டாம் கட்ட மாவட்டங்களில் 9 மக்கள் கற்றல் மையங்கள் (மகமை) ஏற்படுத்தப்பட்டுள்ளன.

* முதற்கட்ட மாவட்ட மகமைகளுக்கு இதுவரை ரூ.756 கோடி நிறுவன வளர்ச்சி திட்ட நிதியில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கீழ்கண்ட துறைகளுடன் புதுவாழ்வு திட்டம் இணைந்து செயல்படுகிறது

* கால்நடைத்துறை (பால் உற்பத்தி)

• ஆதி திராவிடர் நலத்துறை (தாட்கோ கடன் மற்றும் சாதி சான்றிதழ்) *

* வருவாய்த்துறை (உதவித்தொகை)

* வனம் மற்றும் சுற்றுச்சூழல்

* ஆணையரகம், மாநில மாற்றுத்திறனாளிகள் (தேசிய அடையாள அட்டை)

• சமூக நலத்துறை (பராமரிப்பு தொகை)

• தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டுக் கழகம் (இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி)

• அனைவருக்கும் கல்வி இயக்கம்

• தேசிய அளவிலான ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனம் (உபகரணங்கள்)

* மாவட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர் திட்டம்

* மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (தொகுப்பு வீடு)

• தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் (சுய உதவிக் குழுக்களுக்காக)

விவசாயத்துறை (தீவனப் பயிர்)

வறுமைக் குறைப்பில் உள்ள அடிப்படை வழிமுறைகள்

முகவரி:

மாநில அலுவலகம் (சென்னை)

திட்ட இயக்குநர்
தமிழ்நாடு மாநில புதுவாழ்வு
அன்னை தெரசா மகளிர் வளாகம். வள்ளுவர்கோட்டம் சென்னை-60003
தொலைபேசி : 044 - 43443200
நிகரி : 044 - 2817 3717
மின்னஞ்சல் : pvpstate@gmail.com
tneprp@yahoogroups.com www.pudhuvaazhvu.org

அரியலூர்

மாவட்ட திட்ட மேலாளர்
2ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
ஜெயங்கொண்டம் ரோடு, அரியலூர்-621704
கைபேசி : 9750975333
தொலைபேசி : 04329-228044
மின்னஞ்சல் : aripvds@yahoo.in

கோயம்புத்தூர்

மாவட்ட திட்ட மேலாளர்
3ம் தளம், CDCC பேங்க்,
SBI சாலை (ரயில்வே ஸ்டேஷன் ரோடு எதிரில்), கோயம்புத்தூர்-18
கைபேசி : 94884 4123219442615606
தொலைபேசி: 0422-2300633
மின்னஞ்சல் : cbdpvds@yahoo.in

விருத்தாசலம்

மாவட்ட திட்ட மேலாளர்
2, மகாலட்சுமி ராயல் நகர்
ஆண்கள் அரசினர் மேல்நிலை பள்ளி (எதிரில்)
விருத்தாசலம்-606 001.
கைபேசி : 8903636408
தொலைபேசி : 04143-238811/263210
மின்னஞ்சல் : cdlpvds@yahoo.in

திண்டுக்கல்

மாவட்ட திட்ட மேலாளர்
பூமாலை வணிக வளாகம்,
கோபால சமுத்திரம் கிழக்கு கரை அரசு மருத்துவமனை பின்புரம் திண்டுக்கல்-624 001.
கைபேசி: 9489052662
தொலைபேசி : 0451-2434356
மின்னஞ்சல் : dg|pvds@yahoo.in

செங்கல்பட்டு

மாவட்ட திட்ட மேலாளர்
பழைய எண்B.36, புது எண்.27,
அழகேசன் நகர்
செங்கல்பட்டு-603001,
காஞ்சிபுரம் மாவட்டம்
தொலைபேசி : 044-27429835 / 27429837
கைபேசி : 97509 75352
மின்னஞ்சல் : kpmpvds@yahoo.in

கரூர்

மாவட்ட திட்ட மேலாளர்
11611, பாலா ஏர்காடு ,
முதல் தளம் தண்தோணிமலை,
திண்டுக்கல் ரோடு கரூர்-636 705.
கைபேசி: 9442584025
தொலைபேசி : 04324-255265
மின்னஞ்சல் : karpvds@yahoo.in

கிருஷ்ணகிரி

மாவட்ட திட்ட மேலாளர்
எண்.1, 158, MIG முதல் தளம்.
புது TNHB கிருஷ்ணகிரி.
கைபேசி : 94880 31164
தொலைபேசி : 04343-225331
மின்னஞ்சல் : kgipvds@yahoo.in

மதுரை

மாவட்ட திட்ட மேலாளர்
183/D/1A/1, திருமுருகன் காலனி,
திருநகர், மதுரை-600 006.
கைபேசி : 9600380018
தொலைபேசி : 0452 – 2487117
மின்னஞ்சல் : mdupvds@yahoo.in

நாகப்பட்டினம்

மாவட்ட திட்ட மேலாளர்
1298, பப்ளிக் ஆபிஸ் ரோடு,
ராஜா கல்யாண மண்டபம் பின்புறம்,
கடம்பாடி,
நாகப்பட்டினம்-611 003
கைபேசி : 9423049357
தொலைபேசி : 04365-248010/221010
மின்னஞ்சல்: nagpvds@yahoo.in

நாமக்கல்

மாவட்ட திட்ட மேலாளர்
5/243-3, PVK அவின்யூ,
(முத்துலஷ்மி மருத்துவமனை எதிரில்),
மோகனூர் ரோடு,
நாமக்கல்-637 001.
கைபேசி : 73737 38101
தொலைபேசி : 04286 - 230622
மின்னஞ்சல் : nklpvds@yahoo.in

பெரம்பலூர்

மாவட்ட திட்ட மேலாளர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
பெரம்பலூர்-621212.
கைபேசி : 74026 10745
தொலைபேசி : 04328 - 270299
மின்னஞ்சல் : pmbpvds@yahoo.in

புதுக்கோட்டை

மாவட்ட திட்ட மேலாளர்
வி.கோ.ராஜன் பில்டிங்,
பின்புறம் பேருந்து நிறுத்தம் அருகில்,
மனோகரன் சாலை,
வட்டார அலுவலம்,
புதுக்கோட்டை - 622004
தொலைபேசி : 04322 - 230229
மின்னஞ்சல் : pdkpvds@yahoo.in

ராமநாதபுரம்

மாவட்ட திட்ட மேலாளர்
237/2-421, வசந்தபுரம்,
ஒட்டபாலம் அருகில்,
மதுரை மெயின் ரோடு,
பரமக்குடி-623707,
ராமநாதபுரம் மாவட்டம்
கைபேசி: 9442122123
தொலைபேசி : 04564 - 225530
மின்னஞ்சல் : ramnadpvds@yahoo.in

சேலம்

மாவட்ட திட்ட மேலாளர்
207/174, செல்வவிநாயகர் தெரு,
ராஜன் ஸ்டுடியோ பில்டிங்,
வாழப்பாடி, சேலம்-636 115.
கைபேசி : 9487659877
தொலைபேசி : 04292 – 222211
மின்னஞ்சல் : salempvds@yahoo.in

சிவகங்கை

மாவட்ட திட்ட மேலாளர்
47, கொல்லி ஹால் தெரு,
மேலூர் ரோடு சிவகங்கை - 630 562
கைபேசி : 98474 52702/7373738103
தொலைபேசி : 04575-243803
மின்னஞ்சல் : svgpvds@yahoo.in

தேனி

மாவட்ட திட்ட மேலாளர்
10, பழைய எண்.264, டாக்டர் குமரன் இல்லம்,
TWAD அலுவலகம் எதிரில்,
GH ரோடு, தேனி-625 531
கைபேசி : 9488031161
தொலைபேசி : 04546-252283
மின்னஞ்சல் : thenipvds@yahoo.in

திருவள்ளூர்

மாவட்ட திட்ட மேலாளர்
46, ஆவடி பைபாஸ் ரோடு,
பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருவள்ளூர். கைபேசி : 99620 22250
தொலைபேசி : 27665252
மின்னஞ்சல் : tvallurpvds@yahoo.in

திருவாரூர்

மாவட்ட திட்ட மேலாளர்
10A, கோவில்துரை தெரு,
அண்ணா சிலை அருகில்,
ஆண்டவர் திருமண மண்டபம்,
கைபேசி: 9688555444/9349494270
தொலைபேசி : 04366 - 244654
மின்னஞ்சல் : tvarurpvds@yahoo.in

திருநெல்வேலி

மாவட்ட திட்ட மேலாளர்
765 E, NGO காலனி, அேராஜபாளையம் மெயின் ரோடு,
சங்கரன் கோயில்,
திருநெல்வேலி மாவட்டம்-627756.
கைபேசி : 9489523982
தொலைபேசி : 04636 - 223984
மின்னஞ்சல் : tvelipvds@yahoo.in

திருவண்ணாமலை

மாவட்ட திட்ட மேலாளர்
521 ஹ, அசோக் நகர்
வேங்கைகல்,
சிவா ரெசிடென்சி
திருவண்ணாமலை-606 601.
கைபேசி : 9626139322
தொலைபேசி : 04175-224676 / 233467
மின்னஞ்சல் : tvmalaipvds@yahoo.in

தூத்துக்குடி

மாவட்ட திட்ட மேலாளர்
58 C, ராமய்யா நகர்
முதல் தெரு, மந்தி தோப்பு ரோடு,
கோவில்பட்டி-628 501,
தூத்துக்குடி.
கைபேசி : 94864 90874
தொலைபேசி : 04632-220027
மின்னஞ்சல் : tutpvds@yahoo.in

வேலூர்

மாவட்ட திட்ட மேலாளர்
14 பாலாஜி நகர்
முதல் தெரு காட்பாடி,
வேலூர்-632006
கைபேசி : 8754384978
தொலைபேசி : 0416-2242071 / 2249530
மின்னஞ்சல் : vIrpvds@yahoo.in

விழுப்புரம்

மாவட்ட திட்ட மேலாளர்
15/1, பவானி தெரு,
அலமேலுபுரம்,
திருக்கோவிலூர் மெயின் ரோடு,
விழுப்புரம்-605 602
கைபேசி : 94426 03312
தொலைபேசி : 04146-250357 / 222481
மின்னஞ்சல் : vpmpvds@yahoo.in

விருதுநகர்

மாவட்ட திட்ட மேலாளர்
சுகாதார அலுவலக பில்டிங்,
கீழ்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
விருதுநகர்-626 002.
கைபேசி: 9445327750
தொலைபேசி : 04562 - 252627
மின்னஞ்சல் : vnrpvds@yahoo.in

பன்னாட்டு வேளாண் வளர்ச்சி நிதியத்தின் (IFAD) உதவியுடன் கூடிய சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டம் (PTSLP)

திட்டக் குறிக்கோள் மற்றும் நோக்கம்

நிலைத்த தன்மையுடன் கூடிய வாழ்வாதாரங்களை ஏற்படுத்தி அவற்றை சீரிய முறையில் நிர்வகிக்கத் தக்க திறமையான தற்சார்பான கடலோர சமுதாயத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் குறிக்கோள் ஆகும். சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களால் குறிப்பாக பெண்களால் செயல்படுத்தப்படும் வாழ்வாதார தொழில்கள் மற்றும் வள ஆதார அமைப்புகள் நிலைத்து செயல்படுத்துவதை இத்திட்டம் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது

திட்டக் கூறு

விபரம்

பயனாளிகள்

அணுகப்பட வேண்டிய அலுவலர்

1. கடலோர பகுதி வள ஆதார மேலாண்மை

சமுதாய உட்கட்டமைப்பு வசதி

மக்களின் பங்கேற்புடன உட்கட்டமைப்பு வசதிகள் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது

திட்டப் பகுதியிலுள்ள கிராம மக்கள்

மாவட்ட திட்ட செயலாக்க அலுவலர், சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டம்

மீன்வள ஆதார் மேலாண்மை

மீன் வளத்தினை அதிகரிக்கும் பொருட்டு செயற்கை பவள உறைவிடங்களை

உருவாக்குதல்.

திட்டப் பகுதியில் கடலோர

கிராமங்களில் மீன் பிடி படகுகள் மூலம்

கடலில் மீன

பிடிப்பவர்கள்

மாவட்ட திட்ட செயலாக்க அலுவலர், சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டம்

2. ஊரக நிதி மற்றும் இடர்பாடு நீக்கும் உபகரணங்கள

நலிவுற்ற தொழில் முனைவோர் மூலதன நிதி

திட்ட மதிப்பீட்டுத் தொகையில்70 சதவீதம் தொகை நாபின்ஸ் நிறுவன நிதி, 25 சதவீதத் தொகை நலிவுற்ற தொழில் முனைவோர் மூலதன நிதி மற்றும் 5 சதவீதத் தொகை பயனாளிகளின் பங்களிப்பு

கூட்டு பொறுப்புக் குழுக்களால் தொடங்கப்படும் புதிய தொழில் திட்டங்கள்

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம்

கூட்டு வளமேம்பாட்டு மையங்கள்

மற்றும் மாவட்ட

திட்ட செயலாக்க அலுவலர், சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டம்

காப்பீடு திட்டங்கள் (ஆயுள் மற்றும் பொது)

குறைவான சந்தா தொகையில் ஆயுள் காப்பீடு மற்றும் பொது காப்பீடு

திட்டப் பகுதியில் குடியிருக்கும் அனைத்து தரப்பினர்

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம் கூட்டு வள மேம்பாட்டு மையங்கள் மற்றும் மாவட்ட திட்ட செயலாக்க அலுவலர், சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டம்

பொருள் உருவாக்கம் மற்றும் புதிய உத்திகளுக்கான நிதி

சமையலறை கழிவுகளிலிருந்து எரிவாயு உற்பத்தி செய்யும் கலன் அமைத்தல்.

ஊராட்சி அளவிலான

கூட்டமைப்பு, மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள்

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கிராம் கூட்டு வள மேம்பாட்டு மையங்கள் மற்றும் மாவட்ட திட்ட செயலாக்க அலுவலர்

3. வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி

மீன விற் பனை சங்கங்கள்

திட்டப் பகுதியிலுள்ள கடலோர மீனவ கிராமங்களில் படகுகள் மற்றும் இயந்திரம் பொருத்தப்படாத படகுகள் மூலம் மீன பிடிக்க செல்லும் மீனவர்களை ஒருங்கிணைத்து சங்கங்களை ஏற்படுத்துதல்.

மீன் பிடி படகுகள் மூலம் கடலில் மீன

பிடிக்க செல்லும் மீனவர்கள்.

மாவட்ட திட்ட செயலாக்க அலுவலர், சுனாமிக்குப் பின் நிலைத்த

வாழ்வாதாரத்

திட்டம்

கடன் மீட்புத் தொகை

திட்டப் பகுதியில் கடலோர மீனவ கிராமங்களிலுள்ள

சங்கங்களில் இணைந்துள்ள மீனவர்களின் கடன் மீட்புத் தொகையை

மீளக் கொடுத்து கடனிலிருந்து விடுவித்தல்.

திட்டப் பகுதியில் கடலோர மீனவ கிராமங்களிலுள்ள மீனவ சங்கங்களில் இணைந்துள்ள மீனவர்கள்.

மாவட்ட திட்ட செயலாக்க அலுவலர், சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டம்

குறுந்தொழில் வளர்ச்சி

வேலை வாய்ப்பிற்கான தொழிற் பயிற்சி

திட்டப் பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து

வேலை வாய்ப்பினை அளித்தல்.

திட்டப் பகுதியிலுள்ள வேலையற்ற இளைஞர்கள்

(ஆண்கள் மற்றும்

பெண்கள்).

கிராம் கூட்டு வள மேம்பாட்டு மையங்கள்

மற்றும்

மாவட்ட திட்ட செயலாக்க அலுவலர், சுனாமிக்குப் பின்

நிலைத்த வாழ்வாதாரத் திட்டம்

ஆதாரம் : ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

3.04761904762
Ranjitha Mar 06, 2019 10:24 AM

Puthuvaazhvu திட்டத்தில் குழு அமைப்பில் திட்டத்தில் வேலை செய்பவர் அவரே தாமாக குழுவில் உள்ள ஒருவரை நிக்க முடியுமா எந்த வித காரணம் இன்றி ?

RAVICHANDIRAN T Dec 24, 2018 10:55 AM

இதில் உள்ள ஆட்கள் மட்டும் பயனடைகிறார்கள். புது வாழ்வு திட்டத்தை பற்றி என்னவென்று இன்னும் இளைஞர்களுக்கே தெரியவில்லை.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top