பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

செய்தி - மக்கள் தொடர்புத் துறையின் மக்கள் சாசனம்

செய்தி - மக்கள் தொடர்புத்துறையின் மக்கள் சாசனம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

குறிக்கோள்கள்

 • அரசின் குறிக்கோள்களையும், கோட்பாடுகளையும் மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளச் செய்தல்.
 • அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை, மக்களுக்கு, அவர்கள் இருக்கும் இடங்களுக்கே எடுத்துச் செல்லுதல், மேலும் அரசுத் திட்டங்கள், செயல்பாடு குறித்து பொது மக்களின் உணர்வுகளை அரசுக்கு எடுத்துச் செல்லுதல், நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் வெளிவரும் விமர்சனங்கள், செய்திகள் உடனுக்குடன் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுதல்.
 • பத்திரிகையாளர்கள் நலன்காக்கும் பலவகை நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.
 • மாவட்டங்களில் செய்தியாளர் பயணங்கள்/செய்தியாளர் சந்திப்புகள் ஏற்பாடு செய்து, அரசுநலத் திட்ட உதவிகளை பொதுமக்கள் அறியும் வகையில்,
 • செய்திகளாகவும்புகைப்படங்களாகவும் நாளேடுகளில் வெளியிடச் செய்தல்.
 • திரைப்படம் மற்றும் வீடியோ மூலமாகவும், பிற மக்கள் தொடர்பு சாதனங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் மக்களிடையே பரவிடச் செய்தல்.
 • அரசின் நலத் திட்டங்கள் குறித்த விவரங்களைப் பொதுமக்களுக்கு, குறிப்பாகக் கிராமப்புற மக்களுக்கு எடுத்துச் சென்று, அவைகள் குறித்து விழிப்புணர்ச்சியை உருவாக்குதல்.
 • அவ்வப்பொழுது நடத்தப்படும் அரசுப் பொருட்காட்சிகளின் வாயிலாகவும் பல்துறைப் பணிவிளக்க முகாம்கள் வாயிலாகவும் அரசின் கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றைப் பொதுமக்களிடம் பரவிடச் செய்தல்.
 • அரசின் பல்வேறு துறைகள், அரசு சார் நிறுவனங்கள் - ஆகியவற்றின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களை வெளியிடும் மையமாக செயல்படுதல். மக்களுக்குப் பயன்தரத்தக்க வகையில், அரசின் திட்டங்கள் குறித்த செய்திகளை விளக்கிடும் வண்ணம் தமிழரசு இதழ்களை அச்சிட்டு வெளியிடுதல்.
 • புகழ்வாய்ந்த தலைவர்கள், சுகந்திரப் போராட்டத் தியாகிகளைச் சிறப்பித்தல், அவர்தம் நினைவினைப் போற்றிடும் வகையில் நினைவகங்கள்/சிலைகள் ஏற்படுத்தி பராமரித்தல் மற்றும் விழாக்கள் ஏற்பாடு செய்தல்.
 • திரைப்படத் தொழில் வளர்ந்திட, குறைந்த செலவிலான சிறந்த திரைப்படங்களுக்கு மானியம் அளித்தல் மற்றும் சிறந்த திரைக் கலைஞர்களுக்குப் பரிசளித்து ஊக்குவித்தல்.

வள்ளுவர் கோட்டம், சென்னை

அனுமதிக்கப்படும் நிகழ்ச்சிகள்விண்ணப்பிக்க வேண்டிய அலுவலர்அனுமதி வழங்கும் அலுவலர்வாடகைமேல் முறையீட்டு அலுவலர்
அரசு நிகழ்ச்சிகள், இலக்கிய நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கவியரங்குகள், அரசு மற்றும் தனியார் விழாக்கள், பொருட்காட்சிகள், அரசின் ஒப்புதல் பெற்ற ஏனைய நிகழ்ச்சிகள் செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர், வள்ளுவர்கோட்டம், சென்னை - 34.
அலுவலக தொலைபேசி எண். 044-28172177 / 94980 42416
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச்செயலகம், சென்னை-600009.
அலுவலகம்:044-25671300
துணை இயக்குநர் (நினைவகங்கள்) வழியாக அலுவலகம்: 044-25672336
நாள் ஒன்றுக்கு ரூ.15,000/- (முழு நாள்)
மின்கட்டண வைப்புத்தொகை ரூ.6,000/-
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நுழைவுக்கட்டணம்
இல்லையெனில்ரூ.3,000/-மும் நுழைவுக்கட்டணம் வசூலித்தால் ரூ.5,000/-மும் செலுத்த வேண்டும்
செயலாளர், தமிழ்வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்திதுறை, தலைமைச்செயலகம், சென்னை-600009.
அலுவலகம்:044-25672887
 • ஒதுக்கீடு அரங்கத்திற்கு மட்டுமே செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்படும். மற்ற ஏற்பாடுகளை நிகழ்ச்சி அமைப்பாளர்களே செய்து கொள்ள வேண்டும் (ஜெனரேட்டர் வசதி, மின் அலங்காரம், நாற்காலிகள், அலங்காரங்கள் உட்பட)
 • வள்ளுவர் கோட்டம் அனைத்து நாட்களும் திறந்திருக்கும். பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம்.
 • நுழைவுச்சீட்டுக் கட்டணம் : பெரியவர்களுக்கு ரூ.3/- சிறியவர்களுக்கு ரூ.2/-
 • தனியார் நடத்தும் பொருட்காட்சி மற்றும் நிகழ்ச்சிகளின் போது பொதுமக்களிடம் நுழைவுச்சீட்டுக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

இராஜாஜி மண்டபம் (உள்ளரங்கம்), சென்னை

அனுமதிக்கப்படும் நிகழ்ச்சிகள்விண்ணப்பிக்க வேண்டிய அலுவலர்அனுமதி வழங்கும் அலுவலர்வாடகைமேல் முறையீட்டு அலுவலர்

1. அரசுத்துறைகள், அரசு சார்ந்த துறைகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள்


2. தனியார் கருத்தரங்குகள், மாநாடு இலக்கிய கூட்டம், கவியரங்கம் (மதசார்பற்றது)


3. திரைப்பட படப்பிடிப்பு நடத்திட


4. சின்னத்திரை படப்பிடிப்பு நடத்திட

செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர், இராஜாஜி மண்டபம், ஓமந்தூரார், அரசினர் தோட்டம், சென்னை 600002
அலுவலகம்: 044-25365635 / 94980 42415
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச்செயலகம், சென்னை-600009.
அலுவலகம்:044-25671300
துணை இயக்குநர் (நினைவகங்கள்) வழியாக அலுவலகம்: 044-25672336
நாள் ஒன்றுக்கு ரூ.2,500/- மின்கட்டண வைப்புத்தொகை ரூ.5,000/-
நாள் ஒன்றுக்கு ரூ.5,000/- மின்கட்டண வைப்புத்தொகை ரூ.5,000/-
நாள் ஒன்றுக்கு ரூ.10,000/-
நாள் ஒன்றுக்கு ரூ.5,000/-
செயலாளர், தமிழ்வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்திதுறை, தலைமைச்செயலகம், சென்னை-600009.
அலுவலகம்:044-25672887
 • ஒதுக்கீடு இடத்திற்கு மட்டும் மற்ற ஏற்பாடுகளை நிகழ்ச்சி அமைப்பாளர்களே செய்து கொள்ள வேண்டும் (மின்வசதி , துப்புரவு பணிகள் மற்றும் அனைத்து வசதிக

இராஜாஜி மண்டப வளாகம், சென்னை

அனுமதிக்கப்படும் நிகழ்ச்சிகள்விண்ணப்பிக்க வேண்டிய அலுவலர்அனுமதி வழங்கும் அலுவலர்வாடகைமேல் முறையீட்டு அலுவலர்
பொருட்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர், இராஜாஜி மண்டபம், ஓமந்தூரார், அரசினர் தோட்டம், சென்னை 600002
அலுவலகம்: 044-25365635 / 94980 42415
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச்செயலகம், சென்னை-600009.
அலுவலகம்:044-25671300
துணை இயக்குநர் (நினைவகங்கள்) வழியாக அலுவலகம்: 044-25672336
நாள் ஒன்றுக்கு ரூ.25,000/- பத்து. நாட்களுக்கு ஒதுக்கீடு எனில் மூன்று நாள் இலவசம் (விழா முன்னேற்பாடு பணிகளுக்காக)
பத்து நாட்களுக்கு மேல் ஒதுக்கீடு எனில் நான்கு நாள் இலவசம் (விழா முன்னேற்பாடு பணிகளுக்காக)
செயலாளர், தமிழ்வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்திதுறை, தலைமைச்செயலகம், சென்னை-600009.
அலுவலகம்:044-25672887
 • ஒதுக்கீடு இடத்திற்கு மட்டும் மற்ற ஏற்பாடுகளை நிகழ்ச்சி அமைப்பாளர்களே செய்து கொள்ள வேண்டும் ( மின்வசதி , துப்புரவு பணிகள் மற்றும் அனைத்து வசதிகள் )

காந்தி மண்டபம், சென்னை

அனுமதிக்கப்படும் நிகழ்ச்சிகள்விண்ணப்பிக்க வேண்டிய அலுவலர்அனுமதி வழங்கும் அலுவலர்வாடகைமேல் முறையீட்டு அலுவலர்

1. பல்கலைக்கழக விழாக்கள் பட்டமளிப்பு விழா மற்றும் பிற நிகழ்ச்சிகள்

2. கல்லூரி நிகழ்ச்சிகள், அரிமா சங்கம், சுழற் சங்கம், பிரம்ம குமாரிகளின் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம், அரவிந்தர் ஆசிரமம் மற்றும் பிற நிகழ்ச்சிகள் (மதச்சார்புள்ளவை)

3. பள்ளிகள் மற்றும் இதைப்போன்ற அரசு சார்பு நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள்

4. காந்திய நிறுவனங் களுக்கான, காந்திய கல்விக்கான இளைஞர் அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிகள்

செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர், இராஜாஜி மண்டபம், சென்னை 600002
அலுவலகம்: 044-25365635 / 94980 42415
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச்செயலகம், சென்னை-600009.
அலுவலகம்:044-25671300
துணை இயக்குநர் (நினைவகங்கள்) வழியாக அலுவலகம்: 044-25672336
1. ரூ.5,000/- மற்றும் ரூ.2,000/- (மின்கட்டண வைப்புத்தொகை) 2. ரூ.2,000/- மற்றும் ரூ.2,000/- (மின்கட்டண வைப்புத்தொகை) 3. ரூ.1,000/- மற்றும் ரூ.2,000/- (மின்கட்டண வைப்புத்தொகை) 4. ரூ.500/- மற்றும் ரூ.2,000/- (மின்கட்டண வைப்புத்தொகை) செயலாளர், தமிழ்வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்திதுறை, தலைமைச்செயலகம், சென்னை-600009.
அலுவலகம்:044-25672887
 • விண்ணப்பம் மீதான நடவடிக்கை - காவல் துறை ஆணையரிடமிருந்து அனுமதிக் கடிதம் பெற்று இராஜாஜி மண்டப அலுவலகத்தில் அளித்த பிறகு தான் காந்தி மண்டப ஒதுக்கீடு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
 • இட அனுமதி மட்டும் செய்திதுறையால் அளிக்கப்படுகிறது.
 • காவல்துறை, பிற துறைகளின் அனுமதியினை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

காயிதேமில்லத் முகமது இஸ்மாயில் மணிமண்டபம், சென்னை

அனுமதிக்கப்படும் நிகழ்ச்சிகள்விண்ணப்பிக்க வேண்டிய அலுவலர்அனுமதி வழங்கும் அலுவலர்வாடகைமேல் முறையீட்டு அலுவலர்
அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பெறும் கருத்தரங்கம் மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர், அண்ணா சதுக்கம், சென்னை 600005
அலுவலகம்: 9498042414
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச்செயலகம், சென்னை-600009.
அலுவலகம்:044-25671300
துணை இயக்குநர் (நினைவகங்கள்) வழியாக அலுவலகம்: 044-25672336
நாள் ஒன்றுக்கு ரூ.3,000/-
மின்கட்டண வைப்புத்தொகை ரூ.1,000/-
மணி மண்டபத்தின் பொருட்கள் சேதாரம் தவிர்க்கும் பொருட்டு முன் வைப்புத்தொகை ரூ. 1000/-
செயலாளர், தமிழ்வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்திதுறை, தலைமைச்செயலகம், சென்னை-600009.
அலுவலகம்:044-25672887
 • ஒதுக்கீடு இடத்திற்கு மட்டும் மற்ற ஏற்பாடுகளை நிகழ்ச்சி அமைப்பாளர்களே செய்து கொள்ள வேண்டும்

மகாகவி பாரதியார் நினைவு இல்லம், சென்னை

அனுமதிக்கப்படும் நிகழ்ச்சிகள்விண்ணப்பிக்க வேண்டிய அலுவலர்அனுமதி வழங்கும் அலுவலர்வாடகைமேல் முறையீட்டு அலுவலர்
பாரதியார் பற்றி கருத்தரங்குகள், இலக்கிய நிகழ்ச்சிகள், கவியரங்குகள், அரசு நிகழ்ச்சிகள்,நூல் வெளியீட்டு விழா மற்றும் அரசின் ஒப்புதல் பெற்ற ஏனைய நிகழ்ச்சிகள் செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர், மாநில செய்தி நிலையம், எண்:83, துளசிங்கப் பெருமாள் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600005
அலுவலகம்: 044-28442423
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச்செயலகம், சென்னை-600009.
அலுவலகம்:044-25671300
துணை இயக்குநர் (நினைவகங்கள்) வழியாக அலுவலகம்: 044-25672336
நாள் ஒன்றுக்கு ரூ.500/- (முழு நாள்)
மின்கட்டணம் ரூ.250/- (முதல் 20 யூனிட்க்கு)
கூடுதல் மின் உபயோகத்திற்கு ரூ.10 / யூனிட்
செயலாளர், தமிழ்வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்திதுறை, தலைமைச்செயலகம், சென்னை-600009.
அலுவலகம்:044-25672887

அண்ணா கலையரங்கம், வேலூர்

அனுமதிக்கப்படும் நிகழ்ச்சிகள்விண்ணப்பிக்க வேண்டிய அலுவலர்அனுமதி வழங்கும் அலுவலர்வாடகைமேல் முறையீட்டு அலுவலர்
அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் (அரசு விதிகளுக்குட்பட்டு) மேலாளர், அண்ணா கலையரங்கம், வேலூர்
அலுவலகம்: 0416-2221326
மாவட்ட ஆட்சித்தலைவர், வேலூர் மாவட்டம்
(செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர் மாவட்டம் வழியாக)
அலுவலகம்: 9498042453
1.அரசுத்துறைகளுக்கு ரூ.1,000/-
தனியார்
காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ரூ.3,000/-
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ரூ.2,500/-
பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை ரூ.1,250/-
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ரூ.1,750/-
நிகழ்ச்சி ரத்துக்கட்டணம் ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.1,500/-
மின்கட்டண வைப்புத் தொகை ரூ.1,000/- (மீதத்தொகை திரும்ப வழங்கப்படும்)
இருக்கை சேத வைப்புத்தொகை ரூ.1,500/- (தொகை திரும்ப வழங்கப்படும்)
ஒவ்வொறு திரைப்படக்காட்சி இரத்துக்கட்டணம் ரூ.1,500/- (அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு பொதுவானது)
செயலாளர், தமிழ்வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்திதுறை, தலைமைச்செயலகம், சென்னை-600009.
அலுவலகம்:044-25672887
 • நிகழ்ச்சிகளின் போது படக்காட்சிகள் ரத்து செய்யப்படும்
 • மற்ற நாட்களில் தமிழ் சினிமா 3 காட்சிகள் நடைபெறும்
 • படக்காட்சிக்கான நுழைவுக்கட்டணம் - முதல் வகுப்பு ரூ.10/-, இரண்டாம் வகுப்பு ரூ.7/-, மூன்றாம் வகுப்பு ரூ.4/- ஆகும்.

மாநில செய்தி நிலையம், சென்னை-600 005.

மாநில செய்தி நிலையம், சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள எண்:83, துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்தில், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் சுமார் 13,164 புத்தகங்கள் உள்ளன. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை இயங்கி வருகிறது. வாழ்க்கை வரலாற்று நூல்கள்,அறிவியல், சரித்திரம், தத்துவம், புதினங்கள், அகராதிகள், கலைக் களஞ்சியங்கள் போன்ற பல்வேறு வகைப்படும் புத்தகங்களும், மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம், வணிகவியல், கணக்கு, கணினி போன்ற தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் இங்கு புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், பள்ளி, மாணவ மாணவியர், கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரது மேற்கோளுக்கு பயன்படும் புத்தகங்களும்,நாளிதழ்கள், வார-மாத இதழ்களும் வைக்கப்பட்டுள்ளன. வேலை தேடும் இளைஞர்களது நலனுக்காக வேலைவாய்ப்புச் செய்தி, போட்டித் தேர்வுகளுக்காக தயார் செய்ய உதவும் மேற்கோள் புத்தகங்களும் உள்ளன.

அரசின் பல்வேறு துறைகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் பயன்பாட்டிற்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இதழ்களும், காலமுறை வெளியீடுகளும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த கையேடுகளும், வெளியீடுகளும் இங்கு தகவலுக்காக வைக்கப்படுகின்றன.

பொறுப்பு அலுவலர்: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,மாநில செய்தி நிலையம், தொலைபேசி: 044-28442423

தமிழரசு

தமிழ்நாடு அரசின் திட்டங்கள், மக்கள் நலப்பணிகள், நலத்திட்டச் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் அறிவிப்புகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அச்சு ஊடகமாக 'தமிழரசு' இதழ் திகழ்ந்து வருகிறது.

தமிழரசு (தமிழ்) மாத இதழ் - சந்தா விவரம்

* தனி மாத இதழ் விலை ரூ.20/-
* ஆண்டு சந்தா விலை...ரூ.240/-
* ஆயுள் சந்தா விலை.... ரூ.2,000/- (10 ஆண்டுகள்)

தமிழரசு (ஆங்கிலம்) காலாண்டு இதழ் - சந்தா விவரம்

* தனி இதழ் விலை....... ரூ.20/-
* ஆண்டு சந்தா விலை ரூ.240/-
* ஆயுள் சந்தா விலை . ரூ.2,400/- (10 ஆண்டுகள்)

தமிழரசு இதழ்களுக்கான சந்தாத் தொகைகளை, தமிழரசு அலுவலகம், 110, அண்ணா சாலை, (எழுதுபொருள் அச்சுத்துறை ஆணையரக வளாகம்), சென்னை- 2-லும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகங்களிலும், துணை இயக்குநர் (வெளியீடுகள்), தமிழரசு, சென்னை - 2, (Deputy Director (Publications), Tamil Arasu, Chennai-2) என்ற பெயரில் வங்கி கேட்பு வரைவோலையாகவோ அல்லது பணவிடை மூலமாகவோ தமிழரசு அலுவலகத்தில் ரொக்கமாகச் செலுத்தலாம்.

தமிழரசு தமிழ் மாத இதழ் மற்றும் ஆங்கில காலாண்டு இதழ்களில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள விளம்பரக் கட்டணங்கள்:

தமிழரசு இதழின் பக்க அளவு : 27.7 x 20.5 செ.மீ.

விளம்பரங்கள் அளவு : 23 x 17 செ.மீ.

விளம்பர விவரம் மாதம் ஒரு முறை வெளியிடப்படும் தமிழரசு தமிழ் இதழ் தற்போதைய விளம்பரக் கட்டணம் (ரூ.) மூன்று மாதம் ஒரு முறை வெளியிடப்படும் தமிழரசு ஆங்கில இதழ் தற்போதைய விளம்பரக் கட்டணம் (ரூ.)
நான்காவது அட்டை 12000 8000
மூன்றாவது அட்டை 8000 5000
இரண்டாவது அட்டை 8000 5000
முழுப்பக்கம் (கருப்பு-வெள்ளை) 4000 2000
அரைப்பக்கம் (கருப்பு-வெள்ளை) 2000 1000

சிறப்பு வெளியீடுகள்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகள் அடங்கிய சிறப்பு வெளியீடுகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. தமிழரசு இதழ்கள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் அரசின் சாதனைகளை துறை வாரியாகத் தொகுத்து சாதனை மலர் பல வண்ணங்களில் வெளியிடப்படுவதுடன், தலைவர்கள் மற்றும் சான்றோர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய மடிப்பேடுகள், சிறப்புக் கையேடுகள், சிறு தொலைபேசிக் கையேடு, அரசு விழா அழைப்பிதழ்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றையும் எழிலார்ந்த முறையில் வடிவமைக்கப்பட்டு, தமிழரசு அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன. மேலும், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இதரப் பிரிவுகளுக்குரிய விண்ணப்பங்கள் மற்றும் படிவங்கள் போன்றவையும் அச்சிடப்படுகின்றன.

தமிழரசு அச்சகம்

செய்தி - மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநரின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழரசு அச்சகம், நவீன தொழில்நுட்ப வசதிகளைக்கொண்ட அச்சு இயந்திரங்களைக் கொண்டு கணினியில் வடிவமைத்தும் அச்சுப் பணிகளைத் திறம்பட அச்சிடும் வகையில் சிறப்புற இயங்கி வருகிறது. இவ்வச்சகத்தில் தமிழரசு (தமிழ்) மாத இதழ், தமிழரசு (ஆங்கிலம்) மாத இதழ்கள் அச்சிடப்படுகின்றன. மேலும் அரசின் சிறப்பு வெளியீடுகள், அரசு விழா அழைப்பிதழ்கள், தலைவர்கள் பற்றிய மடிப்பேடுகள், சுவரொட்டிகள் மற்றும் துறை தொடர்பான அச்சுப் பணிகளை பல வண்ணங்களில் அச்சிடும் பணி நடைபெறுகின்றது.

சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு விருதுகள் மற்றும் கலைவித்தகர் விருதுகள்

1968 ஆம் ஆண்டு முதல், சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு, தமிழ்நாடு அரசால் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குப் பின்வரும் விருதுகள் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

 1. சிறந்த நடிகர்
 2. சிறந்த நடிகை
 3. சிறந்த ஒளிப்பதிவாளர்
 4. சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு)
 5. சிறந்த ஒலிப்பதிவாளர்
 6. சிறந்த நடிகை (சிறப்புப் பரிசு)
 7. சிறந்த படத்தொகுப்பாளர்
 8. சிறந்த குழந்தை நட்சத்திரம்
 9. சிறந்த கலை இயக்குநர்
 10. சிறந்த நகைச்சுவை நடிகர்
 11. சிறந்த நடன ஆசிரியர்
 12. சிறந்த நகைச்சுவை நடிகை
 13. சிறந்த சண்டைப் பயிற்சியாளர்
 14. சிறந்த வில்லன் நடிகர்
 15. சிறந்த ஒப்பனைக் கலைஞர்
 16. சிறந்த இயக்குநர்
 17. சிறந்த தையற் கலைஞர்
 18. சிறந்த கதையாசிரியர்
 19. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்)
 20. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்)
 21. சிறந்த உரையாடலாசிரியர்
 22. சிறந்த இசையமைப்பாளர்
 23. சிறந்த பாடலாசிரியர்
 24. சிறந்த பின்னணிப் பாடகி
 25. சிறந்த குணச்சித்திர நடிகர்
 26. சிறந்த குணச்சித்திர நடிகை

விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும், 5 பவுன் எடையுள்ள தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்

சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கான விருது பெற நிபந்தனைகள்

தகுதிகள்

1. 3,000 மீட்டர் நீளத்திற்குக் குறையாமல் உள்ள 35 மிமீ/சினிமாஸ்கோப் படங்கள்

2. மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களும், பிறமொழிப் படங்களும் ஏற்கப்பட மாட்டாது.

3. செய்திப் படங்களும், கல்விப் படங்களும் ஏற்கப்படமாட்டாது.

4. சம்பந்தப்பட்ட ஆண்டின் ஆரம்பம் முதல் இறுதிக்குள் (காலண்டர் ஆண்டு - ஜன.1 முதல் டிச.31க்குள்) மத்திய தணிக்கைக் குழுவின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

1. விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.10

2. திரையீட்டுக் கட்டணம் ரூ.1000

3. பதிவுக் கட்டணம் ரூ.100

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை:

இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விருதுக்குரியோருக்கு பரிசு விவரம்:

 • முதல் பரிசு ரூ. 2,00,000 ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்
 • இரண்டாம் பரிசு ரூ. 1,00,000 ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்
 • மூன்றாம் பரிசு ரூ. 75,000 ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்
 • சிறப்புப் பரிசு ரூ. 75,000 ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்
 • பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் திரைப்படத்திற்கு சிறப்புப் பரிசாக ரூ.1.25 இலட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அளவான குடும்பம், திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற திரைப்படம்

 • முதல் பரிசு ரூ. 50,000 ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்
 • இரண்டாம் பரிசு ரூ.25,000 ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்
 • மூன்றாம் பரிசு ரூ. 10,000 ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்

விருதுகளுக்குரியவர்களை அரசினால் அமைக்கப்படும் குழு தேர்வு செய்யும்.

மேலும், அறிஞர் அண்ணா விருது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் விருது, ராஜா சாண்டோ விருது, எம்.ஜி.ஆர். விருது, கவிஞர் கண்ணதாசன் விருது, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் விருது, தியாகராஜ பாகவதர் விருது ஆகிய பெயர்களால் கலை வித்தகர்களுக்கான விருதுகள் அரசால் வழங்கப்படுகின்றன.

குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்படும் தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம்

தகுதிகள்

1. ஆபாசம், தரக்குறைவு, ஆட்சேபகரம் ஆகியவை காட்சிகளிலோ, வசனங்களிலோ இடம் பெற்றிருத்தல் கூடாது.

2. 3,000 மீட்டருக்குக் குறையாத (35மிமீ/ சினிமாஸ்கோப்) முழுநீளத் திரைப்படம் 8 பிரதிகளுக்குக் குறையாமலும், 25 பிரதிகளுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

3. பிறமொழிகளிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள் ஏற்கப்படமாட்டாது.

4. செய்திப்படங்கள், கல்வி குறித்த படங்கள் ஆகியவை ஏற்கப்படமாட்டாது.

5. மத்திய தணிக்கைக் குழுவின் சான்றிதழ் பெற்றிருத்தலோடு, குறிப்பிட்ட ஆண்டு இறுதிக்குள் (டிசம்பர் 31) திரையிடப்பட்டிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

1. விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.10

2. திரையீட்டுக் கட்டணம் ரூ.1000

3. விண்ணப்பங்களை இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்

4. பதிவுக் கட்டணமாக, இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை அவர்களின் பெயரில் ரூ. 100-க்கான வங்கி வரைவோலையுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

குறைந்த செலவிலான, தகுதி பெற்ற, ஒவ்வொரு தமிழ்த் திரைப்படத்திற்கும் அரசு மானியமாக தலா ரூ. 7 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

அரசினால் அமைக்கப்படும் தேர்வுக்குழுவின் பரிந்துரையின் பேரில் மானியம் வழங்கப்படும

திரைப்படப் படப்பிடிப்புக்கான அனுமதி

அரசுக்குச் சொந்தமான இடங்கிளில் தனியார்கள் படப்பிடிப்பு நடத்த, செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் அவர்களால் ஒரே இடத்தில் அனுமதி வழங்கும் முறை (Single Window System) நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு, அரசுக்குச் சொந்தமான இடங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டு, அவை சில முக்கிய இடங்களுக்கு ஒரு நாள் படப்பிடிப்புக் கட்டணமாக ரூ.5,000 (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) எனவும், பிற வகை இடங்களுக்கு ஒரு நாள் படப்பிடிப்புக் கட்டணங்கள் ரூ.3000 ரூபாய் மூன்றாயிரம் மட்டும்) வசூலிக்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட இடங்களில் தொலைக்காட்சிப் படப்பிடிப்புக்கு 50 சதவிகித கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன.

இராஜாஜி மண்டபம்

 • திரைப்படப்பிடிப்பிற்கு - ரூ. 10,000 (ஒரு நாள்)
 • தொலைக்காட்சிப் படப்பிடிப்புக்கு ரூ. 5,000 (ஒரு நாள்)

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், தரமணி, சென்னை-113. தொலைபேசி: 22542212

மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் என்ற பெயர் அரசாணை எண்.436 செய்தி மற்றும் சுற்றுலா (திதொ.1)த்துறை, நாள்.16.11.2007-இன்படி எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் திரைப்படத் தயாரிப்புக்கான பட்டயப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

பாடப்பிரிவுகள் குறித்த விவரங்கள், தகுதிகள், மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள் பின்வருமாறு:

வ.எண்

பட்டயப் படிப்பு விவரம்

காலம்

தகுதி

மாணவர் எண்ணிக்கை

1

இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்

3 ஆண்டுகள்

பட்டம்

14

2

திரைப்பட ஒளிப்பதிவு

3 ஆண்டுகள்

+2

14

3

ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல்

3 ஆண்டுகள்

+2

14

4

படம் பதனிடுதல்

3 ஆண்டுகள்

+2

14

5

படத் தொகுப்பு

3 ஆண்டுகள்

+2

14

 • அனைத்துப் பட்டயப் படிப்புகளிலும் ஒரு இடம் வெளிமாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 • அனைத்துப் பட்டயப் படிப்புகளிலும் ஒரு இடம், தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அவர்களின் பரிந்துரைப்படி திரைப்படத் துறையை சார்ந்த பணியாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
 • மாணவர் சேர்க்கை, அறிவிப்புகள் மே/ஜூன் மாதங்களில் நாளிதழ்களில் வெளியிடப்படும்.
 • மாணவர் சேர்க்கை, ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும்.
 1. கற்பிப்புக் கட்டணம் ரூ.15,000 (ஆண்டுக்கு)
 2. சிறப்புக் கட்டணம் ரூ.2,000 (ஆண்டுக்கு)
 3. வளர்ச்சிக் கட்டணம் ரூ.1,000 (ஆண்டுக்கு)
 4. பினையத் தொகை ரூ.500 (ஆண்டுக்கு)

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்

எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களில், அவர்களது செயல்முறைத் தேர்வுக்கென தயாரிக்கும் குறும்படங்களின் சிறந்த இயக்குநர், ஒலிப்பதிவாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் படம் பதனிடுபவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, விருதாக ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் ரூ.5,000 ரொக்கப்பரிசு ஆகியவற்றை வழங்க அரசால் ஆணையிடப்பட்டுளளது. விருதுகளுக்குரியவர்களை அரசினால் அமைக்கப்படும் குழு தேர்வு செய்யும்.

தமிழ்நாடு திரைப்படப் பிரிவு, தரமணி, சென்னை - 600 113.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நலத்திட்டங்கள் தொடர்பான வீடியோ செய்தி மலர்கள் மக்களை சென்றடையும் வகையில் தயாரிக்கப்படுகிறது. அவை திரைப்படங்களாக மாற்றம் செய்யப்பட்டு மைய அரசின் தணிக்கை குழுவிடம் தணிக்கை பெற்று 147 பிரதிகள் எடுத்து தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் மைய அரசின் திரைப்படப்பிரிவு வழியாக திரையிடப்பட்டு வருகிறது. மேலும் மைய அரசு திரைப்படப்பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் வராத டிஜிட்டல் திரையரங்குகளிலும் நவீன தொழில்நுட்பமான க்யூப் முறையில் செய்தி மலர்கள் வெளியிடப்பட்டு வருகிறது. மேற்கண்ட வீடியோ செய்தி மலர்கள் 350 பிரதிகள் எடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் வீடியோ வேன்கள் மூலமாக கள விளம்பரப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

திரைப்படத் துறையினர் நலவாரியம்

திரைப்படத்துறையின் 41 - சங்கங்களை சேர்ந்த திரைப்படப் பணியாளர்கள் இந்த திரைப்படத்துறையினர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேரத் தகுதியுடையவர்கள்.

திரைப்படத்துறையின் பல்வேறு சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

வ.எண்

உறுப்பினர்கள் பயன் பெறும் நலத்திட்டங்கள் பற்றிய விவரம்

உதவித்தொகை (ரூபாய்)

1

விபத்து ஈட்டுறுதித் திட்டம்

(அ) விபத்தினால் ஏற்படும் மரணம்

(ஆ) விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப

 

ரூ.1,00,000

ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரை

2

இயற்கை மரணத்திற்கான உதவித் தொக

ரூ.15,000

3

ஈமச் சடங்கு உதவி

ரூ.2,000

4

கல்வி உதவித் தொகை

(அ) 10 ஆம் வகுப்பு படித்துவரும் பெண் குழந்தைகளுக்கு –

(ஆ) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு –

(இ) ஐ.டி.ஐ. அல்லது பல்தொழில் பயிற்சிப் படிப்புக்கு –

ரூ.1,000

 

அ) 12 ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு –

ஆ) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு –

இ) முறையான பட்டப்படிப்புக்கு -

ரூ.1500

 

அ) முறையான பட்டப்படிப்புக்கு மாணவர் இல்ல சயடைன்

ரூ.1750

 

அ) முறையான பட்ட மேற்படிப்புக்கு –

ஆ) தொழிற்கல்வி பட்டப் படிப்புக்கு -

ரூ.2000

 

அ) முறையான மேற்படிப்புக்கு மாணவர் இல்ல சயடைன் -

ரூ.3000

 

அ) தொழிற்கல்வி பட்டப் படிப்புக்கு மாணவர் இல்ல சயடைன் –

ஆ) தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பு -

ரூ.4000

 

அ) தொழிற்கல்வி மாணவர் இல்ல சயடைன் பட்டமேற்படிப்புக்கு-

ரூ.6000

 

அ) ஐ.டி.ஐ அல்லது பல்தொழில் பயிற்சிப் படிப்புக்கு மாணவர் இல்ல சயடைன் -

ரூ.1200

5

திருமண உதவித் தொகை -

ரூ.2000

6

மகப்பேறு உதவித் தொகை -

ரூ.6000

7

கருச்சிதைவு/கருக்கலைப்பு -

ரூ.3000

8

மூக்குகண்ணாடி செலவுத் தொகையை ஈடுசெய்தல்

ரூ.500

9

முதியோர் ஓய்வூதியம் (மாதமொன்றுக்கு) -

ரூ.400

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பும் உறுப்பினர்கள் தங்களது விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட திரைப்படத்துறையினர் சங்க தலைமையகத்திலோ அல்லது உதவி இயக்குநர் / நிர்வாக அலுவலர், திரைப்படத்துறையினர் நலவாரியம், எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகம், தரமணி, சென்னை – 113 என்ற முகவரியில் பெற்று கொண்டு பயன்பெறலாம்.

பத்திரிகையாளர் அங்கீகார அட்டை

தகுதிகள்

1.பத்திரிகையாளராக குறைந்தபட்சம் மூன்றாண்டுகளாவது பணிபுரிந்திருத்தல் வேண்டும்.

2. உழைக்கும் பத்திரிகையாளர் சட்டத்தின் கீழ் முழுநேரப் பணியாளராக இருத்தல் வேண்டும்

3. தனியார் தொலைக்காட்சிகை ள சார்ந்த நிருபர்கள் மற்றும் ஒளிப்பதிவாளராக மூன்றாண்டுகளாவது பணிபுரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப மனுவுடன்

1.முன் அனுபவச் சான்றிதழ்

2. பணி நியமனச் சான்றிதழ்

3. ஊதியச் சான்றிதழ்

4. இதழ் ஆசிரியரின் பரிந்துரை.

5. தபால் தலை அளவில் 2 வண்ணப் புகைப்படங்கள்

விண்ணப்பிக்க வேண்டிய அலுவலர் :

1. இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9.

2. விண்ணப்பம் நேரில் பெற : உதவி இயக்குநர், (பத்திரிகைத் தொடர்பு) செய்தி-மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9, தொ.பே.25674876

மேல் முறையீட்டு அலுவலர் : செயலாளர், தமிழ் வளர்ச்சி, அறநிலையம் மற்றும் செய்தித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9, தொ.பே.256728 87

சென்னையில், ஒரு நாளிதழுக்கு அதிகபட்சமாக 9 செய்தியாளர்கள் - 2 புகைப்படக்காரர்கள், பிற மாவட்டங்களில் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர், வெளி மாநிலங்களிலிருந்து வெளியாகும் நாளிதழ்களின் 2 பத்திரிகையாளர்கள் ஆகியோருக்குப் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை வழங்கப்படும். செய்தி நிகழ்ச்சிகளை வழங்கும் தனியார் தொலைக்காட்சிகளைச் சார்ந்த 10 பேர்களுக்கு அங்கீகார அட்டைகள் பத்திரிகையாளர்கள் அங்கீகார அட்டை வழங்கும் குழுவின் பரிசீலனைக்குப்பின் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் செய்தியாளர் அங்கீகார அட்டை பெறுபவர்களுக்கு கீழ்க்கண்ட சலுகைகள் அரசால் அளிக்கப்படுகின்றன.

 • அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்.
 • இரயில் பயணங்களில் 50% கட்டணச் சலுகை.
 • தொலைபேசி இணைப்புப் பெற முன்னுரிமை.
 • வீட்டுவசதி வாரிய வாடகைக் குடியிருப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீடு.
 • அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு சுலபத் தவணையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடு/ அடுக்குமாடி வீடு வாங்க ஒதுக்கீடு.

செய்தியாளர் அட்டை

தகுதிகள்

1. பருவ இதழ்களின் விற்பனை எண்ணிக்கை குறைந்தபட்சம் 10,000 ஆக இருத்தல் வேண்டும்.

2. புதிய பருவ இதழ்கள் தொடர்ந்து 6 மாத காலம் வெளிவந்திருக்க வேண்டும்.

3. குறைந்த பட்சம் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

4.முழுநேர ஊழியராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப மனுவுடன்

1. முன் அனுபவச் சான்றிதழ்

2. பணி நியமனச் சான்றிதழ்

3. ஊதியச் சான்றிதழ்

4. பத்திரிகையின் விற்பனை குறித்த சான்றிதழ்

5. தபால் தலை அளவில் 2 வண்ணப் புகைப்படங்கள்

விண்ணப்பிக்க வேண்டிய அலுவலர்

இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச்செயலகம், சென்னை-9.

விண்ணப்பம் நேரில் பெற: உதவி இயக்குநர் (பத்திரிகைத் தொடர்பு) செய்தி-மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9, தொ.பே.25674876

மேல் முறையீட்டு அலுவலர் : செயலாளர், தமிழ் வளர்ச்சி, அறநிலையம் மற்றும் செய்தித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9, தொ.பே.25672887

ஒவ்வொரு பருவ இதழ் நிறுவனத்திற்கும், 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் என செய்தியாளர் அட்டைகள் அதற்கென உள்ள குழுவின் ஒப்புதல் பெற்று வழங்கப்படும்.

பத்திரிகையாளர் ஓய்வூதியம்

தகுதிகள்

1. 58 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

2. நாளிதழ்/பருவ இதழ்! செய்தி நிறுவனம் ஆகியவற்றில் முழுநேர ஆசிரியர்/ துணை ஆசிரியர் . / செய்தியாளர் / நிருபர்/ புகைப்படக்காரர்/ அச்சு பிழைத்திருத்துபவராக 20 ஆண்டுகள் முழுநேரப் பத்திரிகையாளராகப் பணியாற்றியிருக்க வேண்டும். [ஊனமுற்றிருந்தாலோ அல்லது குணப்படுத்த இயலாத கொடிய நோயினால் பாதிக்கப்பட்டாலோ -10 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் போதுமானது)

3. குடும்பத்தின் தற்போதைய வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும்.

4.பணியிலிருந்து ஓய்வு . பெறும்போது மனுதாரர் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து பெறும் பணிக்கொடை போன்ற பணி ஓய்வு நிதி ஆகியவை ரூ.1,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

5. மனுதாரரின் பணிக்காலத்தில் எந்த ஒரு ஆண்டிலும், ரூ.1,20,000 க்கு மேற்பட்ட எந்த ஒரு தொகையையும் பெற்றிருக்கக் கூடாது.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப மனுவுடன்

1. வயது குறித்த கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்ற சான்றிதழ்.

2. பணியாற்றிய பதவி, நிறுவனம் மற்றும் இடம் தொடர்பான சான்றிதழ்.

3. விண்ணப்பதாரர் மத்திய, மாநில அரசின் ஓய்வூதியம் பெற்றிருந்தால் அதற்கான சான்றிதழ்.

4. ஊனமுற்றிருந்தாலோ அல்லது குணப்படுத்த இயலாத நோயில் அவதியுற்றாலோ அதற்கான மருத்துவச் சான்றிதழ்.

5. பிற சான்றிதழ்கள்

 • அ. பணி ஒய்வு நாள்
 • ஆ. குடும்பத்தின் ஆண்டுக்கு வருமானம்
 • இ. பணிக்கொடை
 • ஈ. ஆண்டின் அதிகபட்ச ஊதியம்

6. விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

பத்திரிகையாளர் ஒய்வூதியம் பெறுவதற்கு இருபது ஆண்டுகள் பணி அனுபவத்தை நிரூபிக்க பணியாற்றிய நிறுவனத்திலிருந்து அனுபவச் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. பல்வேறு காரணங்களால் அனுபவச் சான்றிதழ்கள் பெற முடியாதவர்கள், அதனைக் குறிப்பிட்டுச் சான்றளித்து அதற்கு ஈடாக பின்வரும் ஆவணங்களை, இருபது ஆண்டுகள் தாடர்ச்சியாகப் பணிபுரிந்ததைத் தெரிவிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட வண்டும்.

 • பணி நியமன ஆணை
 • பத்திரிகையாளர் அங்கீகார அட்டை
 • செய்தியாளர் அட்டை
 • மாவட்ட ஆட்சித் தலைவரால் வழங்கப்படும் அடையாள அட்டை
 • பணியாற்றிய நிறுவனத்திலிருந்து பாராட்டுச் சான்றிதழ்
 • தொழிலாளர் சேம நல நிதியத்திற்கு ஆண்டுதோறும் தொகை செலுத்தப்பட்டதற்கான இரசீது.

விண்ணப்பிக்க வேண்டிய அலுவலர்

இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை, தலைமைச்செயலகம், சென்னை-9

விண்ணப்பம் நேரில் பெற: உதவி இயக்குநர், (பத்திரிகைத் தொடர்பு) செய்தி-மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9, தொ.பே.25674876

மேல் முறையீட்டு அலுவலர் : செயலாளர், தமிழ் வளர்ச்சி, அறநிலையம் மற்றும் செய்தித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9, தொ.பே.- 25672887

இத்திட்டத்தின்கீழ், வறுமையில் வாடும், ஒய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு ரூ.6,000 மாதாந்திர ஒய்வூதியமாக வழங்கப்படும்.

பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதிய திட்டம்

தகுதிகள்

ஓய்வூதியம் பெற பத்திரிகையாளர் மறைவிற்குப் பின்னர் அவரது துணைவியாளர் உயிரோடிருப்பின் வழங்குதல்

விண்ணப்பிக்கும்முறை

விண்ணப்ப மனுவுடன்

1. பத்திரிகையாளர் இறப்புச் சான்றிதழ்

2. மனைவி என்பதற்கான வாரிசுச் சான்றிதழ்

3. இரண்டு பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள்

விண்ணப்பிக்க வேண்டிய அலுவலர் :

இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9.

விண்ணப்பம் நேரில் பெற: உதவி இயக்குநர் (பத்திரிகைத்தொடர்பு) செய்தி-மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9, தொ.பே.25674876

மேல் முறையீட்டு அலுவலர் : செயலாளர், தமிழ் வளர்ச்சி,அறநிலையம் மற்றும் செய்தித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9, தொ.பே.25672887

இத்திட்டத்தின்கீழ், ஒய்வூதியம் பெற்று மறைந்த பத்திரிகையாளரின் துணைவியாருக்கு ரூ.3,000 மாதாந்திர குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித்திட்டம்

தகுதிகள்

தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் நாளிதழ் / பருவ இதழ்களில் ஆசிரியர்/துணை ஆசிரியர்/ செய்தியாளர் / புகைப்படக்காரர் பதவிகளில் முழுநேரப் பணியாளராக தமிழ்நாட்டில் பணியாற்றி பணியிலிருக்கும் போது இறக்க நேரிடுபவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. 20 ஆண்டுகள் பணிபுரிந்தவராயின், ரூபாய் இரண்டு லட்சமும், 15 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தவராயின், ரூபாய் ஒன்றரை லட்சமும், 10 ஆண்டுகள் பணிபுரிந்தவராயின், ரூபாய் ஒரு லட்சமும், 5 ஆண்டுகள் பணிபுரிந்தவராயின், ரூபாய் ஐம்பதாயிரமும் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப மனுவுடன்

1. இறப்புச் சான்றிதழ்

2. வாரிசுச் சான்றிதழ்

3. பணியாற்றிய நிறுவனம் பதவி மற்றம் முழுநேரப் பணியாளருக்கானப் பணிச் சான்றிதழ்

4. இறந்த பத்திரிகையாளரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

5.இருப்பிடச் சான்றிதழ்

6. பத்திரிகையாளர் சங்கம் ஏதாவது ஒன்றிலிருந்து பரிந்துரை

"பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி பெறுவதற்குத் தேவைப்படும் அனுபவச் சான்றிதழ் பெற .முடியாதவர்கள் பின்வரும் ஆவணங்களை, பணிபுரிந்த ஆண்டுகளைத் தொடர்ச்சியாக தெரிவிக்கும் வகையில் சமர்ப்பிக்க வேண்டும்"

* பணி நியமன ஆணை

* பத்திரிகையாளர் அங்கீகார அட்டை

* செய்தியாளர் அட்டை

* மாவட்ட ஆட்சித் தலைவரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை

* பணியாற்றிய நிறுவனத்திலிருந்து பாராட்டுச் சான்றிதழ்

* தொழிலாளர் சேமநல நிதியத்திற்கு ஆண்டுதோறும் தொகை செலுத்தப்பட்டதற்கான இரசீது.

விண்ணப்பிக்க வேண்டிய அலுவலர்

1. இயக்குநர், செய்தி- மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9

2. விண்ணப்பம் நேரில் பெற: உதவி இயக்குநர் (பத்திரிகைத்தொடர்பு) செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9, தொ.பே.25674876

மேல் முறையீட்டு அலுவலர் : செயலாளர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9, தொ.பே.25672887

*இத்திட்டத்தின்படி, தகுதியானவர்களுக்கு, குடும்ப உதவி நிதியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.

பத்திரிகையாளர் நல நிதியம்

தகுதிகள்

1.மனுதாரர் முழுநேரம் உழைக்கும் பத்திரிகையாளராக பணிபுரிய வேண்டும்.

2.குறைந்தது 5 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்

3.மாவட்டங்களில் (சென்னையை தவிர்த்து) மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வழியாக மனுவினை விண்ணப்பிக்க வேண்டும்.

4.மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு அசல் பட்டியல்களுடன், மருத்துவ சிகிச்சை முடிந்த அறிக்கை அனுப்பிவைக்க வேண்டும்.

5.மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட மூன்று மாதத்திற்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டும்

6.பத்திரிகையாளர்கள் மருத்துவ உதவி நிதி பெறுவதற்கு ஆண்டு வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

7.அரசு ஓய்வூதியம் பெற்றுவரும் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ உதவி நிதி, தற்பொழுது முழுநேரம் பணியாற்றும்

8.பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் உதவி நிதித் தொகையிலிருந்து 50 சதவிகிதத்தில் வழங்கப்படும்.

9.எந்தெந்த மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளலாம் மற்றும் எந்தெந்த நோய்களுக்கு மருத்துவ உதவி நிதி அளிக்கலாம் என்பதனை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் தமிழ்நாடு மாநில நோயாளர் அமைப்பு அவ்வப்போது வெளியிடும் அரசாணைகளின்படி பின்பற்றிவருவதையே பத்திரிகையாளர் மருத்துவ உதவி நிதி அளிப்பதற்கும் பின்பற்றபடும்.

நோயின் தன்மை மற்றும் சிகிச்சையின் செலவினத்திற்கு ஏற்றவாறு மருத்துவ உதவி நிதி ரூ. 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) க்கு மிகாமல் வழங்குவது குறித்து, பத்திரிகையாளர் நல நிதிய பரிந்துரைக்குழு முடிவு செய்யும்.

விண்ணப்பிக்கும் முறை

பணி சான்றிதழ் / ஓய்வூதியம் பெறுவதற்கு ஆணையிடப்பட்ட அரசாணையின் நகல் | (ஓய்வூதியம் பெறுபவராக இருந்தால் மட்டும்) வருமானச் சான்றிதழ் அனுபவ சான்றிதழ் இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகல் வாக்காளர் அடையாள அட்டை இரண்டு புகைப்படங்கள் மனுதாரர் எந்த நோயல் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை பற்றியும், அவருக்கு எத்தகைய சிகிச்சை / அறுவை சிகிச்சை தேவை என்பது பற்றியும் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை சார்ந்த மருத்துவரிடம் தோராய மதிப்பீட்டுடன் சான்றினை பெற்று மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் முத்திரையுடன் பெற்று (Round seal of the Hospital) மனுவுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய அலுவலர்

1. இயக்குநர், செய்தி- மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9

2.விண்ணப்பம் நேரில் பெற: உதவி இயக்குநர் (பத்திரிகைத்தொடர்பு) செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9, தொ.பே.25674876

மேல் முறையீட்டு அலுவலர் : செயலாளர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9, தொ.பே.25672887

விண்ணப்பப் படிவங்கள் அரசு இணையதளத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

அரசு விளம்பரங்கள்

அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் அனைத்து விளம்பரங்கள் வெளியிடுவது மையப்படுத்தப்பட்டு, நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறை வழியாக வெளியிடப்படுகின்றன.

பெருமளவில் விற்பனையாகும் பத்திரிகைகளுக்கு மட்டுமின்றி சிறிய மற்றும் நடுத்தர பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் அளித்து அவை ஊக்குவிக்கப்படுகின்றன.

விளம்பரத்தின் தன்மை, அவை சென்றடைய வேண்டிய பகுதி, மக்கள் ஆகியவற்றின் தன்மைக்கேற்ப அரசு விளம்பரங்களை வெளியிட பத்திரிகைகள் தேர்வு செய்யப்படுகின்றன.

நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி கூடுதல் செலவு ஏதுமின்றி அனைத்து அரசு விளம்பரங்களும் மக்களை எளிதில் சென்றடையும் வகையில் ஒப்பந்தப்புள்ளி மற்றும் வரைகலை விளம்பரங்கள் மத்திய அரசின் தேசிய தகவல் மையத்தின் வழியாக தமிழக அரசின் www.tn.gov.in என்ற வலைதளத்தில் இலவசமாக வெளியிடப்படுவதுடன், தனியார் இணையதளத்திலும் இலவசமாக வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை இணையதளம் மூலமாக மேற்கொள்ள வகைசெய்யும் மின்னணு ஒப்பந்தப்புள்ளி முறையை (e-tendering) அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அரசின் பல்வேறு துறைகளிலும், அரசு நிறுவனங்களிலும் படிப்படியாக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்.

மாநில / மாவட்ட ஒப்பந்தப்புள்ளி செய்தி மலர்

1) ஒப்பந்தப்புள்ளி அழைப்பு விளம்பர அறிவிப்புகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களின் விவரங்கள் ஆகியவை அடங்கிய மாநில / மாவட்ட ஒப்பந்தப்புள்ளி செய்தி மலர்கள் 13.10.2000 முதல் வெளியிடப்படுகின்றன. தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநரை பதிப்பாளராகக் கொண்டு மாநில ஒப்பந்தப்புள்ளி செய்தி மலர் வெளிவருகிறது. மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களை பதிப்பாளராகக் கொண்டு மாவட்ட ஒப்பந்தப்புள்ளி செய்தி மலர்கள் வெளிவருகின்றன. இந்த செய்தி மலர்கள் வாரந்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெளியிடப்படுகின்றன.

2) ரூ.10 இலட்சத்திற்கு மேல் மதிப்புடைய பொருள்கள் கொள்முதல் செய்தல் மற்றும் ரூ.25 இலட்சத்திற்கு மேல் மதிப்புடைய பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பான ஒப்பந்தப்புள்ளி அழைப்பு விளம்பரங்கள், அது தொடர்பான முடிவுகள் மாநில ஒப்பந்தப்புள்ளி செய்தி மலரில் வெளியிடப்படுகின்றன. ரூ.5 இலட்சத்திற்கு மேல் ரூ.10 இலட்சம் வரை மதிப்புடைய பொருட்கள் கொள்முதல் செய்தல் மற்றும் ரூ.25 இலட்சம் வரை மதிப்புள்ள பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பான ஒப்பந்தப்புள்ளி அழைப்பு விளம்பரங்கள், அது தொடர்பான முடிவுகள் மாவட்ட ஒப்பந்தப்புள்ளி செய்தி மலர்களில் வெளியிடப்படுகின்றன.

3) மாநில/மாவட்ட ஒப்பந்தப்புள்ளி செய்தி மலர்களில் ஒப்பந்தப்புள்ளி அழைப்பு விளம்பரங்களையும், முடிவுகளையும் வெளியிடும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் செய்தி மலர்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தனி நபர்கள், நிறுவனங்கள் ஆண்டு சந்தா தொகை ரூ.1000/- செலுத்தி மாநில ஒப்பந்தப்புள்ளி செய்தி மலரையும், ஆண்டு சந்தா தொகை ரூ.600/- செலுத்தி, மாவட்ட ஒப்பந்தப்புள்ளி செய்தி மலரையும் பெற்றுக்கொள்ளலாம்.

பொருட்காட்சி

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பொருட்காட்சிப் பிரிவால் நடத்தப்படும் அரசுப் பொருட்காட்சிகள், அரசின் கொள்கைகள், நலத் திட்டங்கள், சமூக விழிப்புணர்ச்சி மற்றும் சாதனைகள் குறித்த உரிய விளக்கங்களைப் பொதுமக்கள் எளிதில் அறிந்திடும் வகையில் நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் மதுரை, கோயம்புத்தூர் தூத்துக்குடி, சேலம், திருநெல்வேலி, திருச்சி வேலூர், திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் மாநகரங்களில் அரசு பொருட்காட்சிகளை 45 நாட்கள் நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.

இப்பொருட்காட்சிகளில், அரசுத் துறைகள், அரசுச் சார்பு நிறுவனங்கள், மைய அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை கலந்துகொள்கின்றன. அரசுப் பொருட்காட்சிகள் மக்களுக்கு பொழுதுபோக்காக அமைவதோடு, நேரிடையாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகின்றன. மேலும், இவ்பொருட்காட்சிகளில் நலிவடைந்த திரைப்படக் கலைஞர்களைக் கொண்டு பல்சுவை நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு அரசுப் பொருட்காட்சிகளிலும், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை செய்ய கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு அரசுப் பொருட்காட்சியிலும் ஒரு நடுவர் குழு அமைக்கப்பபட்டு, அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த அரசுத்துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆண்டுதோறும் 32 மாவட்டங்களில் அரசு சாதனைகள், திட்டங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சியும், ஊராட்சி ஒன்றிய அளவில் சிறு புகைப்பட கண்காட்சியும் நடைப்பெற்று வருகிறது.

அரசு விழாக்கள்

இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட, தன்னிகரில்லாத் தலைவர்களையும், தமிழ்மொழி வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த அறிஞர் பெருமக்களைப் போற்றிப் புகழ்ந்திடவும், அவர்களது தியாகங்களையும், அருமை பெருமைகளையும் நாட்டு மக்கள் அறிந்திடச் செய்திடும் நோக்கோடும், அவர்களது பிறந்த நாள் விழாக்கள் மற்றும் நினைவுநாள் நிகழ்ச்சிகள் அரசினால் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகரில் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போது அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு தமிழக அரசின் சார்பில் மாலைகள் அணிவித்தும் சிலைகளுக்கு அருகே அமைக்கப்படும் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவியும் மரியாதை செய்யப்படுகின்றது.

 1. ஜனவரி 17 -பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் பிறந்த நாள் விழா
 2. ஜனவரி 23 -நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா
 3. ஜனவரி 30 -மகாத்மா காந்தியடிகள் நினைவு நாள்
 4. பிப்ரவரி 18 - சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள் விழா
 5. ஏப்ரல் 14 - டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
 6. ஏப்ரல் 17-சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா
 7. ஏப்ரல் 27 -சர்.பிட்டி.தியாகராயர் பிறந்த நாள் விழா
 8. ஏப்ரல் 29- பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா
 9. மே 5 -கற்புக்கரசி கண்ணகி அவர்களின் நினைவை போற்றும் வகையில் சித்திரை முழு நிலவு நாள்
 10. ஜூன் 5 -கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் பிறந்த நாள் விழா
 11. ஜூன் 24 - கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் விழா
 12. ஜூலை 7 -இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா
 13. ஜூலை 15 - பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா
 14. ஜூலை 17 - தியாகிகள் தினம்
  1. தியாகி ஆர்யா (எ) பாஷ்யம்
  2. தியாகி சங்கரலிங்கனார்
  3. தியாகி செண்பகராமன்
 15. செப்டம்பர் 5 -கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா
 16. செப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா
 17. செப்டம்பர் 17 - தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
 18. ,செப்டம்பர் 29 - முன்னாள் மேயர் சிவராஜ் பிறந்த நாள் விழா
 19. அக்டோபர் 2 -மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் விழா
 20. அக்டோபர் 30 - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் விழா
 21. நவம்பர் 8 -இத்தாலி தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் பிறந்த நாள் விழா
 22. நவம்பர் 14-- பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா
 23. நவம்பர் 23 -கவிஞர் சுரதா பிறந்த நாள் விழா
 24. டிசம்பர் 10 - மூதறிஞர் இராஜாஜி பிறந்த நாள் விழா
 25. டிசம்பர் 11 -மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா

மாவட்டங்களில் உள்ள தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போது, தமிழக அரசின் சார்பில் மாலைகள் அணிவித்தும் விழா எடுத்தும் மரியாதை செய்யப்படுகின்றது.

 1. மார்ச் 30 - ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாள் விழா - இராமநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டம்.
 2. மார்ச் 31 - வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா - கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.
 3. ஏப்ரல் 16 - வீரன் சுந்தரலிங்கனார் - கவர்ணகிரி, தூத்துக்குடி மாவட்டம்.
 4. மே 4 - வீரபாண்டிய கட்டபொம்மன்பிறந்த நாள் விழா - பாஞ்சாலங்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம்.
 5. மே 23 - பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா - திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
 6. ஜூலை 31- சதாவதானி செய்குத்தம்பி பாவலர் பிறந்தநாள் விழா - கன்னியாகுமரி மாவட்டம்.
 7. ஆகஸ்ட் 02 - மற்றும் 03 வல்வில் ஓரி பிறந்த நாள் விழா - கொல்லிமலை, நாமக்கல் மாவட்டம்.
 8. ஆகஸ்டு 2(ஆடி 18)- தீரன் சின்னமலை நினைவு நாள் - ஓடாநிலை, அரச்சலூர், ஈரோடு மாவட்டம்.
 9. செப்டம்பர் 5 - கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்விழா - ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி மாவட்டம்
 10. செப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா - ஈரோடு மாவட்டம்
 11. செப்டம்பர் 17 - தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, ஈரோடு மாவட்டம்
 12. அக்டோபர் 2- மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள் விழா, அனைத்து மாவட்டங்கள்.
 13. அக்டோபர் 4 - தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழா – பாப்பாரப்பட்டி, தருமபுரி மாவட்டம்
 14. அக்டோபர் 24 - மருதுபாண்டியர் நினைவுநாள் திருப்பத்தூர்,சிவகங்கை மாவட்டம்.
 15. அக்டோபர் 30 - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழா - பசும்பொன், இராமநாதபுரம் மாவட்டம்
 16. டிசம்பர் 10 - மூதறிஞர் இராஜாஜி பிறந்தநாள் விழா - தொரப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்.
 17. டிசம்பர் 11 - மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா - எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம்.

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்கள்

அரசின் கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றை விளம்பரப்படுத்திடும் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ளும் வகையில், 32 மாவட்டங்களிலும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுடைய முகவரியும் தொலைபேசி எண்களும்

மாவட்டம்

அலுவலகம்

சென்னை (044)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்னை-600 001.

அலுவலகம் : 25268103

நிகரி : 25268103

செல் : 9498042422

கோயம்புத்தூர் (0422)

செய்திமக்கள்தொடர்பு அலுவலர

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கோயம்புத்தூர்-641018.

அலுவலகம் : 2301060

நிகரி : 2301060

செல் : 9498042423

கடலூர் (04142)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடலூர்-607 001.

அலுவலகம் : 233887

நிகரி : 233887

செல் : 9498042425

தருமபுரி (04342)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தருமபுரி - 636 705.

அலுவலகம் : 230052

நிகரி : 230052

செல் : 9498042426

திண்டுக்கல் (0451)

செய்திமக்கள்தொடர்புஅலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திண்டுக்கல் - 624 004.

அலுவலகம் : 2460093

நிகரி : 2460093

செல் : 9498042427

ஈரோடு (0424)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

ஈரோடு - 638 001

அலுவலகம் : 2266266

நிகரி : 2266266

செல் : 9498042428

காஞ்சிபுரம் (044)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

காஞ்சிபுரம் - 631501.

அலுவலகம் : 27237919

நிகரி : 27237919

செல் : 9498042429

கன்னியாகுமரி (04652)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கன்னியாகுமரி - 629 001.

அலுவலகம் :279262

நிகரி : 279262

செல் : 9498042430

கரூர் (04324)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பாலையம் சாலை

கரூர் - 639 005.

அலுவலகம் : 257142

நிகரி : 257142

செல் : 9498042431

கிருஷ்ணகிரி (04343)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கிருஷ்ணகிரி - 635 001.

அலுவலகம் : 238777

நிகரி : 238777

செல் : 9498042433

மதுரை (0452)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மதுரை - 625 020.

அலுவலகம் : 2532066

நிகரி : 2532066

செல் : 9498042434

நாகப்பட்டினம் (04365)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

நாகப்பட்டினம் - 611 003.

அலுவலகம் : 253040

நிகரி : 253040

செல்: 9498042435

நாமக்கல் (04286)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

நாமக்கல் - 637 003.

அலுவலகம் : 281011

நிகரி : 281106

செல் : 9498042436

பெரம்பலூர் (04328)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

பெரம்பலூர் - 621212.

அலுவலகம் : 224749

நிகரி : 224555

செல் : 9498042437

புதுக்கோட்டை (04322)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

புதுக்கோட்டை - 622 001.

அலுவலகம் : 221454

நிகரி : 221454

செல் : 9498042438

இராமநாதபுரம் (04567)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இராமநாதபுரம் - 623 503.

அலுவலகம்: 230034

செல் : 9498042439

சேலம் (0427)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்டஆட்சியர் அலுவலகம்

சேலம் - 636 001.

அலுவலகம்: 2421077

நிகரி : 2421077

செல் : 9498042440

சிவகங்கை (04575)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

சிவகங்கை - 630 561.

அலுவலகம்: 240370

நிகரி : 240370

செல் : 9498042440

தஞ்சாவூர் (04362)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நீதிமன்ற சாலை

தஞ்சாவூர் - 631 001.

அலுவலகம்: 230843

நிகரி : 230843

செல் : 9498042441

தேனி (04546)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மதுரை சாலை

தேனி - 625 531.

அலுவலகம் : 251997

நிகரி : 251997

செல்: 9498042443

நீலகிரி (0423)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

உதகமண்டலம்

நீலகிரி - 643 001.

அலுவலகம் :2443820

நிகரி : 2443820

செல் : 9498042445

திருவள்ளூர் (044)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

அலுவலர் மாவட்ட ஆட்சியர

திருவள்ளூர் - 602 001.

அலுவலகம் : 27662865

நிகரி : 27662865

செல் : 9498042449

திருவாரூர் (04366)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திருவாரூர்.

அலுவலகம் : 221352

செல் : 9498042451

திருச்சிராப்பள்ளி (0431)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திருச்சி - 620 001.

அலுவலகம்: 2460351

நிகரி : 2460351

செல் : 9498042446

திருநெல்வேலி (0462)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திருச்சி - 627 009.

அலுவலகம்: 2500455

செல் : 9498042447

திருவண்ணாமலை (04175)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திருவண்ணாமலை - 606 604.

அலுவலகம் : 232194

நிகரி : 232194

செல் : 9498042450

தூத்துக்குடி (0461)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கோரம்பாலம்,

தூத்துக்குடி - 628 101.

அலுவலகம் : 2340571

நிகரி : 2340571

செல்: 9498042452

வேலூர் (0461)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

வேலூர் - 632 001.

 

மேலாளர் அண்ணா கலை அரங்கம்,

வேலூர்

அலுவலகம் : 2252633

நிகரி : 2252633

செல் : 9498042453

2221326

விழுப்புரம் (04146)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விழுப்புரம் - 605 602.

அலுவலகம் : 223660

நிகரி : 223660

செல் : 9498042454

விருதுநகர் (04562)

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விருதுநகர் - 626 002

அலுவலகம் : 252028

நிகரி : 252028

செல் : 9498042455

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - முக்கிய அம்சங்கள்

இந்திய அரசின் அரசிதழ் எண் 25, சட்டம் மற்றும் நீதித் துறை, நாள் 21.6.2005-இல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, வெளியிடப்பட்டது. இச்சட்டம், 2005-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 12-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது. தகவல் அறியும் உரிமை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உள்ள ஓர் அடிப்படை உரிமையாகும்.

அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல் திறனிலும், வெளிப்படையான நிலை, செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடைமையை மேம்படுத்துதல் மற்றும் அரசு/அரசு சார்ந்த அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள தகவல்களை குடிமக்கள் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ள வழி செய்யும் சட்டமே தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ஆகும்.

மாநில தகவல் ஆணையம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 15- இன்படி தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டு, அவ்வாணையம், ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீழ் 7.10.2005 முதல் இயங்கி வந்தது. தற்போது ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் ஒரு மாநில தகவல் ஆணையர் கீழ் இயங்கி வருகிறது.

தலைமை தகவல் ஆணையர் - திரு கே. எஸ். ஸ்ரீபதி, இஆப (ஓய்வு)

தகவல் ஆணையர்கள்

 • திரு. டி. சீனிவாசன், டாக்டர் வி. சரோஜா,
 • திரு. கிறிஸ்டோபர் நெல்சன், இ.கா.ப. (ஓய்வு
 • திரு.பி. தமிழ்செல்வன், திருமதி. பி. நீலாம்பிகை,
 • திரு.எஸ்.எப். அக்பர்

முகவரி

தமிழ்நாடு தகவல் ஆணையம்,
2, தியாகராயா சாலை,
ஆலையம்மன் கோயில் அருகில்
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018
தொலைபேசி எண் 24312841 முதல் 24312845 முடிய
தொலை அச்சு எண் 044 24357580
மின் அஞ்சல் sic@tn.nic.in
இணையதளம் www.tnsic.gov.in

தகவல் வழங்கும் அலுவலர்கள்

பொது தகவல் அலுவலர்

உதவி இயக்குநர் (பணி) மற்றும் பொது தகவல் அலுவலர்
செய்தி மக்கள் தொடர்புத் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009
தொலைபேசி எண் 25665228

உதவி பொது தகவல் அலுவலர்

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் சென்னையில் உள்ள 8 அலகு அலுவலகங்களின் தலைமை அலுவலர்கள்

மேல் முறையீட்டு அலுவலர்

இணை இயக்குநர் (நிர்வாகம்) மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்
செய்தி மக்கள் தொடர்புத் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009
தொலைபேசி எண் 25672880

தகவல்கள் பெற செலுத்த வேண்டிய கட்டணம்

தகவல் கோரும் மனுதாரர்கள், விண்ணப்பக் கட்டணமாக ரூ. 10/-ம், தகவல் அளிப்பதற்கான கட்டணமாக பின்வருமாறு தெரிவித்துள்ள தொகையினையும் செலுத்த வேண்டும்.

1) ஏ-4 அல்லது ஏ-3 அளவுள்ள தாள் ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ2/-

2) பெரிய அளவுள்ள தாளின் உண்மையான கட்டணம் அல்லது நகலின் விலை

3) மாதிரிகளுக்கான உண்மையான செலவுத் தொகை அல்லது விலை.

4) பதிவேடுகளை பார்வையிடுவதற்கு முதல் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் எதுவுமில்லை. அதன் பிறகு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ. 5/- கட்டணம்

5) குறுந்தகடு அல்லது பிளாப்பியில் அளிக்கப்படும் தகவலுக்கு ரூ. 50/- கட்டணம்

6) தகவலை அச்சு வடிவத்தில் கொடுப்பதற்கு, அத்தகைய வெளியீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை

இத்தொகையினை கீழ்க்குறிப்பிட்டுள்ள முறைகளில் செலுத்தலாம்

1) வங்கி கேட்பு வரைவு - Public Information Officer, Information and Public Relations Department, Secretariat, Chennai -9

(அல்லது)

2) மாநில பாரத வங்கி (அல்லது) கருவூலத்தின் சலான் மூலம் பின்வரும் கணக்குத் தலைப்பில் செலுத்தி அசல் சலான் அனுப்பலாம்.

"0075.00 Miscellaneous General Services - 800. Other receipts - BK. Collections of fees under Tamilnadu Right to Information (Fees) Rules 2005” (DPC No. 0075 00 800 BK 0006)

(அல்லது)

3) ரூ.10/-க்கான நீதிமன்ற வில்லை பெற்றும் அனுப்பலாம் (தகவல் கோரும் விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணமாக அனுப்புவதற்கு மட்டும்)

(அல்லது)

4) நேரில் பணமாகவும் கீழ்க்குறிப்பிட்டுள்ள இயக்குநரக அலுவலகத்தில் செலுத்தலாம்.

கணக்கு அலுவலர் (செய்தி),
செய்தி மக்கள் தொடர்புத்துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை,
8-வது மாடி,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009
தொலைபேசி எண் 25665454

மாவட்டங்களில் அந்தந்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்களிலும் பணமாக செலுத்தலாம்.

தகவல் பெறுவதற்கான மாதிரி விண்ணப்பம்

நாள்

அனுப்புநர்
விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, மற்றும்
தொலைபேசி / செல்பேசி எண்கள்)

பெறுநர்
உதவி இயக்குநர் (பணி)மற்றும்
பொது தகவல் அலுவலர்
செய்தி மக்கள் தொடர்புத் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009

(அல்லது)

உதவி பொது தகவல் அலுவலர்
தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் சென்னையில் உள்ள அலகு அலுவலகங்கள்.

ஐயா,

பொருள்: செய்தி மக்கள் தொடர்புத் துறை - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 -இன் கீழ் தகவல்கள் கோருதல் - குறித்து

----------

தயவு செய்து கீழ்க்குறிப்பிட்டுள்ள தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

(தகவல் விவரம்)

2) கீழ்க்குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் நகல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதற்குண்டான கட்டணம் செலுத்தவும் சம்மதிக்கிறேன்.

(ஆவணங்களின் விவரம்)

3) கீழ்க்குறிப்பிட்டுள்ள ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டுகிறேன் அதற்குண்டான கட்டணம் செலுத்தவும் சம்மதிக்கிறேன்.

(பார்வையிட விரும்பும் ஆவணங்கள்)

4) தகவல் அறியும் கட்டணமாக ரூ. 10/- (ரூபாய் பத்து மட்டும்) கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு செலுத்தியுள்ளேன்.

நீதி மன்ற வில்லை
அல்லது)
வங்கி கேட்போலை
(அல்லது)
மாநில பாரத வங்கி அரசுக் கருவூலத்தின் செலுத்துச் சீட்டு (சலான்)
(அல்லது)
நேரடியாக தொகை செலுத்திய ரசீது

விண்ணப்பதாரர் கையொப்பம்

ஆதாரம் : செய்தி - மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு

2.73913043478
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top