பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் திட்டங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் திட்டங்கள்

தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் திட்டங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

தொழில்கள்

தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்திடமிருந்து மாநில முகமையாக இக்கழகம் நியமிக்கப்பட்டு ஊனமுற்றோர்களுக்கு கீழ்கண்ட தொழிலகளுக்காக கடனுதவி அளிக்கிறது.

 1. அனைத்து வகை கடை மற்றும் பண்டகசாலை
 2. கனிணி மையம் பயிற்சி மற்றும் தொழில்
 3. கைவினை பொருள் தயாரித்தல்
 4. மீன் பிடித்தல்
 5. உணவு பதனிடும் தொழில்
 6. மரசாமான்கள் தயாரித்தல்
 7. மரம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள்
 8. விவசாய இயந்திரம் வாங்குதல்
 9. மின் அச்சகம்
 10. பணிமனை மற்றும் பழுது பார்த்தல்
 11. தையல் தொழில்
 12. தோல் பொருள்கள் தொழில்
 13. பால் பண்ணை
 14. ஆயத்த ஆடைகள் தயாரித்தல்
 15. விவசாயம் சார்ந்த தொழில்கள்
 16. உதிரி பாகங்கள் தயாரித்தல் மற்றும் இதர தொழில்கள்

கடன் உச்சவரம்பு

 • சிறு தொழில் மற்றும் வியாபாரம் செய்ய - ரூ.3.00 லட்சம் வரை
 • சிறு தொழிற்சாலை அமைக்க - ரூ.5.00 இலட்சம்
 • விவசாய தொழில்கள் - ரூ.5.00 இலட்சம்
 • மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு சுய தொழில் செய்ய கடன் தொகை - ரூ.3.00 இலட்சம் வரை

பங்கு முறை

 • கடன் தொகை - ரூ.50,000/- குறைவாக அல்லது ரூ.50,001/-க்கு மேல் ரூ.1,00,000/- வரை
 • 95% தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழக பங்கு + 5% மகளிர் மற்றும் ஊனமுற்றோர் மேம்பாட்டுக்கழகத்தின் பங்கு - ரூ.1,00,001/-க்கு மேல் ரூ.5,00,000/- வரை
 • 90% தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழக பங்கு + 5% மகளிர் மற்றும் ஊனமுற்றோர் மேம்பாட்டுக்கழகத்தின் பங்கு + 5% விண்ணப்பதாரரின் பங்கு  வட்டி விகிதம் - ரூ.50,000/- வரை 5%, ரூ.50,001/- மேல் ரூ.5,00,000/- வரை  6%

வட்டி தள்ளுபடி சலுகை

ஊனமுற்றோர் மகளிர்க்கு 1%, கழிவு உண்டு, கடனை முழுமையாகவும் உரிய காலத்துடன் செலுத்துபவர்களுக்கு 0.5% கழிவு அளிக்கப்படுகிறது. முறையாக தவணையை செலுத்தாதவர்களுக்கு 3% அபராத வட்டி செலுத்த வேண்டும். ஒவ்வொரு திட்டத்திற்கும் 3 மாதம் கடன் தவணை உரிமை வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்

 1. மாநிலம் அல்லது மத்திய அரசு மருத்துவரிடமிருந்து 40% மேல் ஊன தன்மை கொண்ட மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
 2. ஆண்டு வருமான சான்றிதழ் (நகர்புறம் ரூ.1,00,000/- மற்றும் கிராமபுறம் ரூ.80,000/-)
 3. பிறப்பு / வயது - சான்றிதழ் : பஞ்சாயத்து/நகராட்சி மற்றும் பள்ளி பதிவேடுகளிலிருந்து பெற வேண்டும் (வயது வரம்பு 18 முதல் 55 வரை இருக்க வேண்டும்)
 4. கல்வி சான்றிதழ்
 5. தொழில்நுட்ப சான்றிதழ்
 6. அனுபவ சான்றிதழ்
 7. திட்ட அறிக்கை மற்றும் விலைப்பட்டியல்
 8. சாதி சான்றிதழ் (SC/ST/OBC)
 9. ஒரு முழு அளவு புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம்
 10. அரசாங்கத்திடமிருந்து எந்த வகையிலும் கடன் வாங்கவில்லை என்று சான்றுறுதி அலுவலரிடமிருந்து (நோட்டரி) பெறப்பட்ட உறுதிமொழி சமர்ப்பிக்க வேண்டும்
 11. மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உட்பட இதர கழகத்தால்  கொடுக்கப்பட்ட தடை நீக்க சான்றிதழ்.

ஆதாரம் : புதுச்சேரி அரசு வலைதளம்

3.04347826087
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top