பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகை, உதவிகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உடல் குறைபாடு இருந்தாலும் உள்ளத்தில் உறுதியுடன் இருக்கும் மாற்றுத் திறனாளிகள் தங்களது சுய முயற்சியால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக நிதியுதவி, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இடஒதுக்கீடு போன்றவற்றை  அரசு வழங்கி வருகிறது.

அந்த வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு என்னென்ன சலுகைகள் வழங்குகிறது. அவற்றை எவ்வாறு பெறுவது என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் துறை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

அந்தந்த மாவட்டத்தில் இயங்கி வரும் சமூகநலத் துறையின் ஓர் அங்கமாக ஊனமுற்றோர் துறை செயல்பட்டு வந்தது. 1995-ம் ஆண்டு ஊனமுற்றோர் துறை தனியாகப் பிரிக்கப்பட்டது. இத்துறை 2010-ம் ஆண்டில் ‘மாற்றுத் திறனாளிகள் துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாற்றுத் திறனாளிகள் துறை செயல்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகள் பிரிவுகள்

மாற்றுத்திறனாளிகள் 8 பிரிவுகளாக வகைப்படுத்தப் படுகின்றனர்.

 • கை, கால் பாதிக்கப்பட்டவர்கள்,
 • காது கேளாதோர்,
 • வாய் பேச முடியாதோர்,
 • பார்வையற்றோர்,
 • மன வளர்ச்சி குன்றியோர்,
 • மூளை முடக்குவாதம்,
 • புற உலகு சிந்தனையற்றோர் (ஆட்டிசம்),
 • பல்வகை ஊனம்,
 • தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர்

உடல் குறைபாட்டில் அளவு நிர்ணயம்

 • ஆம். உடலில் 40 சதவீதம் உடல் குறைபாடு இருந்தால் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் என குறிப்பிடப்படுகின்றனர்.
 • அவர்கள் பேருந்து, ரயிலில் பயணம் செய்வதற்கான சலுகை அட்டை, தேசிய அடையாள அட்டை போன்ற அரசின் சலுகைகளைப் பெற தகுதி உடையவர்கள்.

அரசு வழங்கும் சலுகையில் இட ஒதுக்கீடு

அரசின் அனைத்து சலுகைகளையும் மாற்றுத் திறனாளிகள் பெற முடிவதுடன், அவர்களுக்கு அனைத்து சலுகையிலும் 3 சதவீதம் இடஒதுக்கீடு உண்டு. அதன்படி அரசின் சலுகையில் 3 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் - சான்றிதழ்

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வாரத்தின் குறிப்பிட்ட நாளில் 4 வகை மருத்துவர்கள் அந்த அலுவலகத்துக்கு வருவார்கள். அப்போது அங்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பரிசோதனை செய்து சான்று வழங்குவார்கள். அரசு மருத்துவர்களிடமும் சான்று பெறலாம்.

ஆதாரம் : மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

2.96
மணி Sep 16, 2019 07:38 AM

மிக மிக நன்று

வேல்முருகன் Jul 27, 2019 07:57 AM

பார்வையற்றவர் தான் மாற்றுத்திறனாளியா ? பார்வை குறைவானவர்களும் மாற்று திறனாளியா ? விளக்கவும்

சரவணன் Jul 01, 2019 01:36 PM

தொழு நோயால் பாதிக்கப்பட்டு குனம் அடைந்தவர் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெர முடியுமா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top