பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சியளிக்கும் இலவச மையம்
பகிருங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சியளிக்கும் இலவச மையம்

மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சியளிக்கும் இலவச மையம்

தேசிய பார்வையற்றோர் இணையமும், அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையமும் இணைந்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளித்து வருகின்றன. இவர்களுக்கு, போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே பயிற்சியளிப்பது, விழியிழந்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சிக்கு பேருதவியாக அமைந்துள்ளது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக, கோவை வரதராஜபுரத்தில் தேசிய பார்வையற்றோர் இணையத்தைச் சேர்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பு நடத்தி வருகின்றனர்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சமூக, பொருளாதார ரீதியில் மேம்பாடு அடைய வேண்டும். சரியான வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் மட்டுமே இது சாத்தியம் ஆகும். நாடு முழுவதும் 42 அரசுத் துறைகளில் உள்ள காலி இடங்கள் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு நிரப்பப்பட உள்ளன.

அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் அவர்களுக்கு இலவசமாக கற்றுத் தர முன் வந்தது. இதில், சிறப்பு என்ன வென்றால் அந்த மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயின்று வரும் பட்டதாரிகளும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற பட்டதாரிகளும், இங்கு வந்து பார்வையற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வருகின்றனர்.

இந்த பயிற்சியில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்த பார்வையற்ற பட்டதாரிகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பயிற்சி, தங்குமிடம், உணவு ஆகியவற்றை இவர்களே கொடுக்கின்றனர். தற்போது 35 பேர் வந்து பயின்று வருகின்றனர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராக விரும்பும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் .

‘பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி கொடுத்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் எங்களிடம் பயிற்சி பெற்ற 103 பேர் தேர்ச்சி பெற்று வங்கி, பொதுத் துறை காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட வற்றில் பணியில் உள்ளனர்.

பொதுவாக, சாதாரண மாணவர்கள், வகுப்பில் பாடத்தை கவனிக்கிறார்களா என்பதை அவர்களின் கண்ணை பார்த்து அறிவோம். ஆனால், இங்கு கற்றுத் தருவதை கேட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் காட்டும் முகபாவனைகள் கற்றுத் தருபவர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கிறது. இந்த முயற்சிக்கு இந்த மையத்தில் பயின்ற மாணவ, மாணவிகளும் மனப்பூர்வமான ஒத்துழைப்பு தருவதால்தான் இந்த முயற்சி சாத்தியம் ஆகியுள்ளது’.

ஆதாரம் : ம.சரவணன்

2.97368421053
Vinothuni Jun 10, 2018 02:14 AM

மாற்றுத்திறனாளி காப்பகம் எங்கு உள்ளது திருநெல்வேலி யில்

ஜெயகிருஷ்ணன் Oct 31, 2016 05:36 PM

மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் ஈடுபடுத்தலாமா,

M. Saroja, Madurai Apr 08, 2016 05:10 PM

மாற்றுத் திறாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே பயிற்சிகள் கொடுத்தால் அது அவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் . குறிப்பாக காது கோளத வாய் பேச இயலாதவர்களுக்கு பயிற்சி நிறவனங்கள் பயிற்சி கொடுக்க தயங்குகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் எப்படி புரிய வைப்பது என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு தையல்இ கணிணி ஸ்கிரீன் பிரிண்டி பைண்டிங் ழுககளநவ pசiniபெ இது மாதிரியான பயிற்சிகள் கொடுத்து அவர்கள் தொழில் துவங்க உதவலாம். நான் ஒருமாற்றறுத் திறனாளி பையனின் தாய்.

TASNA Nov 19, 2015 11:04 AM

மத்திய அரசு சார்ந்த வேலைவாய்ப்புகள் http://www.ssc.nic.in/ என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 23.11.2015-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

vinoth Nov 18, 2015 07:49 PM

ஏதும் வேலை வாய்பு இருக்கஆ

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top