பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மூத்த குடிமக்கள் நலம் / ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி

ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி பற்றிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வயது முதிர்வின் காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெறும் அலுவலர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பயனாக ஓய்வூதியம் பெற்று வருவோர் திடீரென மரணம் அடையும் நிகழ்வில் அவர்களது குடும்பத்திற்கு உதவிபுரிய உருவாக்கப்பட்டத் திட்டமே ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதிதிட்டம் ஆகும்.

தகுதியுடையவர்கள்

 1. இத்திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் மட்டுமே சேர்ந்து பயன்பெற இயலும். குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் சேர்ந்து பயன்பெற இயலாது.(அரசாணை எண் 762 நிதித்துறை நாள் 31.12.1996 )
 2. தமிழக அரசின் நிதிஉதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் அலுவலர்களும் இத்திட்டத்தில் சேரலாம்.
 3. தமிழகத்தில் பணிபுரியும் அகில இந்திய பணியினரும் அவர்கள் விரும்பினால் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். (அரசாணை எண் 315 மற்றும் 639 நிதித்துறை நாள் 12.06.1997 மற்றும் 26.12.1997)
 4. தற்காலிக ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் தமிழக அரசின் ஓய்வூதியம் பெறும் போக்குவரத்து கழகத்தால் ஈர்க்கப்பட்ட ஊழியர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.
 5. இத்திட்டத்தில் சேர விருப்பமில்லை என்று எழுத்து மூலமாக தெரிவித்துவிட்ட ஓய்வூதியரும் பின்னர் எப்போதுமே இத்திட்டத்தில் சேர முடியாது.

நடைமுறைகள்

 • இத்திட்டத்தில் சேர விரும்பும் ஓய்வூதியர்களிடமிருந்து சந்தா தொகையை அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் பிடித்தம் செய்வார். (அரசாணை எண் 639 நிதித்துறை நாள் 26.12.1997)
 • ஓய்வூதியர்கள் இத்திட்டத்தில் சேர்ந்துகொள்ள விருப்பப்படவில்லை என்றால், ஓய்வூதியம் பெறும் அலுவலகத்தில் அவர்களின் முதல் ஓய்வூதியத்தைப் பெறும்போது நான் இத்திட்டத்தில் சேரத் தயாராக இல்லை என்று எழுதி கொடுக்க வேண்டும். இத்திட்டத்தில் சேர்ந்து சந்தா செலுத்திவரும் ஒரு ஓய்வூதியர் விருப்பப்பட்டால் இடையிலும் இத்திட்டத்திலிருந்து விலகிக்கொள்ளலாம். அவ்வாறு அவர் விலகிக்கொள்வதாக எழுத்துமூலமாக அறிவிக்கும் தேதிவரை அவர் செலுத்திய சந்தா தொகை மட்டும் மீள அவருக்கு அளிக்கப்படும். ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் பரிந்துரையின் பேரில் ஓய்வூதிய இயக்குனர் அவர்கள் இத்தொகையை வழங்குகிறது.
 • கணவன்/மனைவி உயிருடன் இருக்கும் பட்சத்தில் இத்தொகை அவர்களுக்கு இயற்கையாகவே கிடைத்துவிடும். அவர்கள் உயிருடன் இல்லாதபோது அவர்கள் உயிருடன் இருந்தபோது நியமனம் செய்த ஒருவருக்கு இத்தொகை கிடைக்கும். ஒருவேளை ஓய்வூதியர் யாரையும் நியமனம் செய்யாமல் இறந்துவிட்டார் எனில் அவருடைய வாரிசுகளுக்கு இத்தொகை சமமாகப் பகிர்ந்து வழங்கப்படும்.
 • கணவன்/ மனைவி உயிருடன் இருக்கும் பட்சத்தில் ஓய்வூதியர், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் நியமனப் படிவம் எதுவும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. கணவன்/ மனைவி உயிருடன் இல்லாத பட்சத்தில் ஓய்வூதியர் கண்டிப்பாக நியமனப் படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.
 • கணவன்/மனைவி உயிருடன் இல்லாத ஓய்வூதியர்கள் இத்திட்டத் தொகையை தான் விரும்பும் வாரிசு அல்லது வாரிசுகளுக்கு வழங்கச் சொல்லி ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நியமனப் படிவம் தாக்கல் செய்யலாம்.
 • ஓய்வூதியர் நியமனப் படிவத்தைப் பூர்த்தி செய்து இரண்டு நகல்களை ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும். அலுவலக கோப்பிற்காக ஒரு நகலைப் பெற்றுக்கொண்டு மற்றொரு நகலை ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் ஓய்வூதியரிடம் திரும்ப வழங்குவார்.
 • இவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர் அசம்பாவிதமாக இறக்க நேரிட்டால் ஓய்வூதியர் வேறு ஒருவரை புதியதாக நியம்னம் செய்து கொள்ளலாம்.
 • குடும்பமே இல்லாதவர் இத்திட்டத்திற்கு சந்தா தொகை செலுத்தியிருப்பின் அவர் தான் விரும்பும் எவரை வேண்டுமானாலும் நியமனம் செய்யலாம்.

விண்ணப்பிக்கும் முறை

ஓய்வூதியர் இறக்க நேரிட்டால் தகுதியுடைய நியமனதாரர் ஓய்வுதியம் வழங்கும் அலுவலருக்கு விண்ணப்பம் அளிக்கவேண்டும். விண்ணப்பத்துடன் இறப்புச் சான்றிதழ், ஓய்வூதியக் கொடுப்பானையின் முதல் பக்க நகல், மாதிரிக் கையொப்பத்துடன் கூடிய ஆளறிச் சான்றிதழ், புகைப்படம், நியமனப் படிவம், தொகை பெற்றுக் கொண்டதற்கான முன் ஒப்புகை இரசீது ஆகிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

நியமனதாரர் நியமிக்கப்படவில்லை என்றால் மேற்கண்ட ஆவணங்களுடன் வாரிசுச் சான்றிதழ் இணைத்து விண்னப்பம் செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுதாரர்கள் இருப்பின் யாராவது ஒருவருக்கு வழங்க விருப்பம் தெரிவித்து கடிதம் அளிக்க வேண்டும். இக்கடிதம் ’அ’ அல்லது ’ஆ’ பிரிவு அலுவலரால் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

விண்னப்பம் பெறப்பட்டவுடன் ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் ஒப்புதல் வழங்கி அவ்வாணையை ஓய்வூதிய இயக்குனருக்கு அனுப்பி வைப்பார். ஒப்புதல் ஆணை பெறப்பட்டவுடன், ஓய்வூதிய இயக்குனர், தகுதியானவரின் பெயரில் காசோலை தயாரித்து நேரடியாக அஞ்சல் மூலமாக விண்னப்பதாரருக்கு அனுப்பி வைப்பார். நியமனப் படிவம் இல்லாத நிகழ்வில் வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில் உயிருடன் உள்ள அனைத்து குடும்ப வாரிசுகளுக்கும் சமமாக இத்தொகை பகிர்ந்து அளிக்கப்படுகிறது

ஆதாரம் : தமிழ்நாடு அரசு ஓய்வூதியத் துறை இயக்குனரின் இணையதளம்

2.72093023256
நாத்தான்வேல் Dec 14, 2019 10:33 AM

எனது பெற்றோர் அம்மா ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற்று வந்தார். எது அப்பாவின் குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தார் இவர்கள் தற்போது உயிருடன் இல்லை.. எனது சகோதரர் மனநலம் பாதிப்பினால் கடந்த30ஆண்டு களாக சிகிச்சை பெற்று வருகிறார்.. எனது பெற்றோரின் ஓய்வூதியத்தை எனது சகோதரர் பெறுவதற்கு விண்ணப்பிப்பது எப்படி ... கல்வித்துறை மூலமாக வா அல்லது கரூவூலகம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டுமா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top