பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மூத்த குடிமக்கள் நலம் / முதியோர்களை பாதுகாக்க சிறப்புத் திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

முதியோர்களை பாதுகாக்க சிறப்புத் திட்டம்

முதியோர்களை பாதுகாக்க அமல்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

முதியோர்களை காப்பாற்றுவதற்காக சிறப்பு திட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டது. செல்போன் எண். 2-ஐ அழுத்தி பேசினால் போலீசார் வீடு தேடி வந்து உதவி செய்வார்கள்.

முதியோர்கள் பாதுகாப்பு

  • வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். தனியாக இருக்கும் முதியோர்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்களை தாக்கி விட்டு நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து செல்கிறார்கள். தாக்குதல் நடத்தும் போது முதியோர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடக்கிறது.
  • சில நேரங்களில் தனியாக இருக்கும் முதியோர்கள் மாரடைப்பு போன்ற நோயினால் தீடீரென்று பாதிக்கப்படும் போது உதவிக்கு ஆள்  இல்லாமல் மடிந்து போகும் பரிதாபமான சம்பவங்களும் நடக்கின்றன. எனவே வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு போலீசார் வீடு தேடிச் சென்று உதவி செய்யும் ஒரு சிறப்பான திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இந்த சிறப்பு திட்டம் ஏற்கனவே நீலாங்கரை, கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் அமலில் உள்ளது.

செல்போன் எண். 2

  • செல்போன் எண்-2 ஐ அழுத்தினால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் தொலைபேசி ஒலிக்கும். உடனே போலீசார் போனை எடுத்து பேசுவார்கள்.
  • அப்போது முதியோர்கள் போலீசாரிடம் தங்களுக்கு வேண்டிய உதவிகளை கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.
  • தேவைப்பட்டால் வீட்டுக்கு அழைத்தும் தேவையான உதவிகளை பெறலாம். ஆபத்தான நேரத்தில் கூட செல்பேன். எண்.2 –ஐ அழுத்தி போலீசாரை உதவிக்கு கூப்பிடலாம்.

ஆதாரம் : தினத்தந்தி

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top