பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

முதியோர்கள் நலம்

இந்தியாவில் முதியோரின் சமுதாயம், பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முதியோர்கள் நலம்

இந்தியநாட்டு முதிய ஆண்களில் மூன்றில் இரண்டு பங்கும், 90 முதல் 95 சதவிகிதம் வரை முதிய பெண்களும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மேலும் பெரும்பான்மையான பெண்கள் தனித்து வாழ்கின்றனர். இதனால் அப்பெண்களின் பொருளாதாரச் சார்பு மிக அதிகமாக உள்ளது.

பெரும்பான்மை முதியோர்கள் பார்வையற்றவர்களாக, வேலை செய்ய இயலாதவர்களாக இருப்பதால், பொருளாதார ரீதியாக அவர்கள் மற்றவர்களைச் சார்ந்திருப்பார்கள். குடும்பத்தினரின் ஆதரவு இல்லாதபோது, அரசாங்கத்தின் உதவியை அவர்கள் எதிர்நோக்கி இருக்கவேண்டிய சூழல் உருவாகிறது.

மாநில அரசும், யூனியன் பிரதேசங்களும், ஊனமுற்றோருக்கும், ஆதரவற்றோருக்கும் பொருளாதார ரீதியாக உதவுவதற்காக ஏற்படுத்திய போதும், மாதம் ஒன்றிற்கு ஓய்வூதியத்தொகை (அ) உதவித்தொகையாக ரூ.30 முதல் ரூ.60 வரை மட்டுமே பெறுகிறார்கள். மேலும் போதுமான நிதியின்மையால் தகுதியானவர்களில் சிறுபான்மையினரே இத்தகைய உதவியினைப் பெறுகிறார்கள்.

இந்தியாவில் முதியோர்களை, பலமான குடும்பப் பாசம் மிகவும் வலிமையாகக் கட்டி வைத்திருக்கிறது. குடும்பத்திலுள்ள முதிய உறுப்பினர்களைப் பேணிப் பாதுகாக்காதவர்களைச் சமுதாயம் மதிப்பதில்லை. ஆதலினால் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களைப் பாதுகாத்து அவர்களது துன்பங்களைத் தீர்க்கும் வகையில் குடும்பத்தின் தன்மையை அமைத்துக் கொள்ளுதல் இன்றியமையாதது. முதியோர்களை மனிதவளம் என்று கொள்ளல் வேண்டும்.

அவர்களது உயர்ந்த அனுபவ அறிவினையும், மிச்சமுள்ள ஆற்றலையும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக உபயோகித்துக் கொள்ளவேண்டும். முதியோர்களின் ஆரோக்கியமான பயனுள்ள வாழ்வினுக்கு அரசாங்கம் ஆவன செய்தல் வேண்டும்.

தேசிய சமுதாய உதவித்திட்டம்

தேசிய சமுதாய உதவித்திட்டம் 1995 ஆம் ஆண்டு 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இத்திட்டம் அரசியல் அமைப்பின் செய்முறைக்கொள்கை ஆணை - சட்டம் 41 மற்றும் 42  (Directive Principles in Article 41 and 42 of the Constitution) -ஐ நோக்கி, ஒரு குறிப்பிடத்தகுந்த அடியினை எடுத்து வைத்துள்ளது. முதுமை, குடும்பத்தலைவரின் மரணம் மற்றும் பேறுகாலம் போன்ற சமயங்களில், ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு, உதவுவதற்காக ஒரு தேசிய சமுதாய நல உதவித்திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டம் மூன்று பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.
1.    தேசிய முதியோர் ஓய்வூதியத்திட்டம் (National Old Age Pension Scheme (NOAPS))
2.    தேசிய குடும்ப நலத்திட்டம் (National Family Benefit Scheme (NFBS))
3.    தேசிய பேறுகால நலத்திட்டம் (National Maternity Benefit Scheme (NMBS))
பல்வேறு இடங்களில் இருந்து வந்த ஆலோசனைகள் மற்றும் மாநில அரசின் கருத்துகளின் அடிப்படையில் இத்திட்டங்கள் அனைத்தும் 1998 ஆம் ஆண்டு ஓரளவு திருத்தபட்டது. திருத்தப்பட்ட இத்திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு.
இத்திட்டத்திலுள்ள தேசிய முதியோர் உதவித்தொகைத் திட்டத்திற்கு மத்திய அரசின் உதவியும் உள்ளது. இவ்வுதவியினைப் பெற வேண்டிய தகுதிகள்:

  • விண்ணப்பதாரரின் வயது (ஆண் அல்லது பெண்) 60 அல்லது அதற்குமேல்.
  • விண்ணப்பதாரர், ஆதரவற்றவராகவோ, ஏழ்மையில் இருப்பவராகவோ, பொருளாதார ரீதியில் உதவ யாரும் இல்லாதவராகவோ இருத்தல் வேண்டும்.
  • முதியோர் உதவித்தொகை மாதத்திற்கு ரூ.200/-.(Rs. 500 for above 80 Years)

மூலம்: Aging in India: Its Socioeconomic and Health: By H.B. Chanana and P.P. Talwar, ImplicationsAsia-Pacific Population Journal, Vol. 2, No. 3 37

2.92592592593
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top