பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எங்களை பற்றி
பகிருங்கள்

எங்களைப் பற்றி

விகாஸ்பீடியா, சமூக மேம்பாட்டிற்கான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் மக்கள் பகிர்ந்துகொள்வதற்காக, தேசிய அளவில் செயல்படும் ஒரு பன்மொழி தளம். தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சமுதாய மேம்பாட்டில் பங்கேற்றுள்ள முக்கிய அங்கத்தினரான தன்னார்வளர்கள், அரசு, அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகளை ஒருங்கிணைத்து, சமூக மேம்பாடு பற்றிய தகவல்கள் மற்றும் அனுபவங்களை மக்களுடன் பரிமாறிக்கொள்ளும் நோக்கத்துடன் இத்தளம் செயல்பட்டு வருகிறது.

விகாஸ்பீடியா, தேர்ந்தெடுத்த துறைகளில், சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும், அவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த, ஆக்கப்பூர்வமான மற்றும் நம்பகமான தகவல்கள் மற்றும் தகவல் சார்ந்த சேவைகளை, அவர்களது சொந்த மொழிகளில் அளிக்கிறது. மேலும், இந்த தளம், பலரின் பங்கேற்பால் ஒருமித்த தகவல்களை உருவாக்கவும், கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் தேவைதான கட்டமைப்பை வழங்குகிறது.

நோக்கம்

 • சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் தகவல் சேவைகள்
 • தேர்ந்தெடுத்த தகவல் மற்றும் தகவல் சேவைகளை அளிப்பதன் மூலம், மக்கள் பணியாளர்களின் செயல்திறனை மேம்படுத்தி, அவர்கள் சிறப்பாக பணியாற்ற வழிவகை செய்தல்
 • தேர்ந்தெடுத்துள்ள ஆறு துறைகள் சம்பந்தமான கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களின் வாயிலாக, மக்களிடையே சிறப்பான தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகை செய்தல்.

தகவல் வழங்கப்படும் துறைகள்

 1. வேளாண்மை
 2. உடல்நலம்
 3. கல்வி
 4. சமூக நலம்
 5. எரிசக்தி
 6. மின்னாட்சி

அணுகுமுறை

 • பலரின் பங்கேற்புடன் தகவல் மற்றும் கருத்து சேகரிப்பு
 • தகவல் சேவைகளை முடிந்தவரையில் அவரவர் தாய்மொழியிலேயே அளித்தல்
 • சமுதாய மேம்பாட்டில் தொடர்புடைய முக்கிய நிறுவனங்களுடன் கூட்டாக செயலாற்றுதல்
 • இதே நோக்கத்துடன் செயல்படும் மற்ற இணையதளங்கள் மற்றும் திட்டங்களுடன் இணைந்து செயல்படுதல்
 • பல்வேறு அங்கத்தினர் மற்றும் ஊடகங்களை ஒருங்கிணைத்து, பயனுள்ள ஒரு தகவல் பரிமாற்றத்திற்கான சூழலை உருவாக்குதல்

சேவைகள்

 1. தகவல்கள் மற்றும் கருத்துக்கள் - தமிழிலேயே !
 2. மல்டிமீடியா பாடங்கள்
 3. இணையவழி பாடங்கள்
 4. கருத்து பகிர்வு மேடைகள்
 5. மதிப்புக்கூட்டு சேவைகள்
 6. அலைபேசி சேவைகள் (மொபைல் ஆப்ஸ்)

இந்த இணையதளம்,  தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.

உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (சி. டாக்), இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால், 1988-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒர் ஆராய்ச்சி மையம் ஆகும். மின்னியல் மற்றும் மேம்பட்ட தகவல் நுண்பொறி சம்பந்தமான துறையில், உருவாக்கம், மேம்பாடு மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகமாக சி. டாக் செயல்பட்டு வருகிறது. தகவல் நுண்பொறி துறையில் இந்தியாவின் பெருமைகளில் ஒன்றான ‘பரம்’ அதிநவீன கணினிகள் சி. டாக்-ஆல் உருவாக்கப்பட்டவை.

சி.டாக்கின் ஐதராபாத் மையம், மென்பொருள்-பாதுகாப்பு, மின்வழிக்கல்வி, பண்டமாற்று மேலாண்மை, இலவச மென்பொருள்கள் மற்றும் மென்பொருள் பொருந்திய கருவிகளின் பயன்பாடுகள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

Back to top