பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வேப்பங்கொட்டை கரைசல் தயாரித்தல்

வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள், செய்முறை குறிப்பு ஆகியன இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்

நூறு லிட்டர் 5 % வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பதற்கு

 1. நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் - 5 கிலோ
 2. தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர்
 3. சோப்பு - 200 கிராம்
 4. மெல்லிய மஸ்லின் வகை துணி - வடிகட்டுவதற்காக

செய்முறை

 1. தேவையான அளவு வேப்பங்கொட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் (5 கிலோ).
 2. நன்றாக பவுடராகும் வரை வேப்பங்கொட்டைகளை கவனமாக அரைக்க வெண்டும்.
 3. இரவு முழுவதும் அரைத்த கொட்டைகளை பத்து லிட்டர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
 4. மரத்தாலான கரண்டியைக் கொண்டு காலை நேரத்தில், கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாகக் கலக்கி விட வேண்டும்.
 5. இரண்டு அடுக்கு மெல்லிய மஸ்லீன் துணியைக் கொண்டு கரைசலை வடிகட்டி அதன் அளவை நூறு லிட்டராக ஆக்க வேண்டும்.
 6. இதனுடன் 1 சதவிகிதம் சோப்பு சேர்க்க வேண்டும் (முதலில் சோப்பை ஒரு பசையைப் போலாக்கி பின்பு கரைசலுடன் கலக்க வேண்டும்)
 7. பின்பு கரைசலை நன்கு கலக்கிவிட்டு உபயோகிக்க வேண்டும்.

குறிப்பு

 • வேப்பம் கொட்டைகள் அதிகமாகக் கிடைக்கும் காலத்தில் ஒன்று சேர்த்து காற்றுபட நிழலில் உலர்த்த வேண்டும்.
 • எட்டு மாதத்திற்கும் மேற்பட்ட வேப்பம் விதைகளை உபயோகித்தல் கூடாது. எட்டு மாதத்திற்கும் மேல் சேமித்து வைக்கப்பட்ட வேப்பம் விதைகள் தங்களுடைய செயல்படும் திறனை இழக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால், அவைகள் வேப்பங்கொட்டை சாறு தயாரிப்பதற்கு ஏற்றதாய் இருக்காது.
 • எப்பொழுதும் புதிதாக தயாரித்த வேப்பங்கொட்டை கரைசலையே பயன்படுத்த வேண்டும்.
 • மதியம் 3.30 மணிக்கு பின்பு வேப்பங்கொட்டை கரைசலை தெளிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.

மூலம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் இணைய தளம்

3.31707317073
நௌஷாத் Jul 25, 2015 01:28 PM

இளம் தென்னங் கன்றுகளுக்கு வேப்பம் புண்ணாக்கு எவ்வளவு இடலாம் எத்தனை நாட்கள் இடைவளி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top