பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புதிய வீரியரக நெல்விதை

புதிய வீரியரக நெல்விதை பற்றிய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.

அறிமுகம்

விதை உற்பத்தியை அதிகரிக்க நெல் விதையை கிலோ ஒன்றுக்கு 110 ரூபாய் வீதம் வேளாண் பல்கலை கொள்முதல் செய்வதால், விவசாயிக்கு 1,48,000 ரூபாய் நிகர லாபம் கிடைத்துள்ளது.

புதிய வீரிய ரக நெல்

தமிழகத்தில் நெல் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் புதிய வீரிய நெல் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் 2006ஆம் ஆண்டு கோ.ஆர்.ஹெச்.,3 என்ற குறுகிய காலவீரிய ஒட்டு ரகம் வெளியிட்டது. இதன் விதைகளை அதிகரிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள 5 ஹெக்டேர் பரப்பளவிலான வயல்களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் கோ.ஆர்.ஹெச்.,3 பயிரிடப்பட்டது. நிலத்தில் மட்டும் 1400 கிலோ வீரிய ரக பெண் நெல்விதையும் 3000 கிலோ ஆண் நெல் விதையும் விளைச்சல் கிடைத்துள்ளது. இவற்றை பயிரிட மொத்தம் 40 ஆயிரம் ரூபாய் மட்டும் லாபமாக 1, 48, 000 ரூபாயை பெறலாம்.

செயற்கை மகரந்த சேர்க்கை

இந்த புதிய முறையிலான விவசாய முறை குறித்து வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். அதன்படி இரண்டு ஆண் நெற்பயிர் வரிசைக்கு இடையில் ஒரு பெண் நாற்று வரிசை நடவு செய்யப்பட்டது. நடவு செய்த 65 நாட்களுக்கு பிறகு நெற்பயிர் கதிர் பூவிட்ட சமயத்தில் ஆண், பெண் பயிர்களை செயற்கையான முறையில் மகரந்த சேர்க்கை செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து 110 நாளில் நெல் அறுவடை செய்யப்பட்டது. பழனிச்சாமியின் நிலத்தில் முதலில் ஆண் நெல் மட்டும் அறுவடை செய்யப்பட்டது. அடுத்த நாள் பெண் நெல் அறுவடை செய்யப்பட்டது. பெண் நெல் 1400 கிலோவும், ஆண் நெல் 3000 கிலோவும் கிடைத்தது. ஒரு கிலோ பெண் நெல் 110 ரூபாய் வீதம் கோவை வேளாண் பல்கலை எடுத்து கொண்டது. ஆண் நெல் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

நோய் தாங்கும் நெல் விதைகள்

கே.ஆர்.ஹெச்.,3 ரக வீரிய ஒட்டு ரக நெல், உயர் விளைச்சல் ரகங்களை விட 24 சதவீதம் அதிக மகசூல் கொடுக்ககூடியது. குலை நோய், துங்ரோ வைரஸ் நோய்களை தாங்கி வளரும் தன்மை கொண்டது. பச்சை தத்துப் பூச்சி, வெண்முதுகு தத்துப்பூச்சி, புகையானையன் நோய் தாங்கும் சக்தி கொண்டது. மேலும், கே.ஆர்.ஹெச்.,3 வீரிய ஒட்டு ரக நெல் சமையலுக்கு மிகவும் உகந்தது.

கோ.ஆர்.ஹெச்.,1 வீரிய ஒட்டு ரகம் 1994 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஏ.டி.டி.ஆர்.ஹெச்.,1 என்ற குறுகிய கால வீரிய ஒட்டு ரகம், கோ.ஆர்.ஹெச்.,2 என்ற மத்திய கால வீரிய ஒட்டு ரகம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட கோ.ஆர்.ஹெச்.,3 ரக விதை நெல் பற்றி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு பல்கலைக்கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆதாரம் : பசுமை தாயகம்

கேள்வி பதில்கள்

1. நெல்லில் மொத்தம் எத்தனை இரகங்கள் உள்ளன?

தற்போது பயிரிடப்படும் நெல் இரகங்கள் 1,40,000 மேல் வழக்கில் உள்ளதாக (ஒரைசா சட்டைவா குடும்ப வகை புல்) கருதப்படுகிறது. ஆயினும் துல்லியமான எண்ணிக்கை ஒரு புதிராகவே உள்ளது.

2. மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் எத்தனை இரகங்களை வெளியிட்டுள்ளது

எழுபது இரகங்கள்

3. மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் கலப்பு வகை இரகங்கள் உள்ளதா? இருப்பின், கால அளவு மற்றும் மகசூல் என்ன?

அஜய் மற்றும் ராஜ்லக்ஷ்மி ஆகிய இரண்டு கலப்பின இரகங்கள் உள்ளன. இரண்டிற்கும் கால அளவு 135 நாட்கள் மற்றும் மகசூல் ஆற்றல் முறையே 7.5 டன்/எக்டர் மற்றும் 7.0 டன்/எக்டர் ஆகும்.

4. மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நறுமண இரக வகைகள் உள்ளதா? இருப்பின் அதன் கால அளவு மற்றும் மகசூல் என்ன?

இரண்டு நறுமண இரகங்களான கீதாஞ்சலி மற்றும் கெட்டெக்கிஜோஹா ஆகியவை மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இரகங்கள் ஆகும். மேலும் அதன் கால அளவு முறையே 135 மற்றும் 145 நாட்கள் ஆகும். இதன் மகசூல் ஆற்றல் முறையே 5.0 டன்/எக்டர் மற்றும் 4.0 டன்/எக்டர் ஆகும்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

3.01459854015
சரவணன் Jan 29, 2020 07:33 PM

இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட நெல் பயிர்கான உர வகைகள் யாவை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top