பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

திரவ நுண்ணுயிர் உரம் (பிபிஎப்எம்)

திரவ நுண்ணுயிர் உரம் (பிபிஎப்எம்) பற்றிய குறிப்புகள்

திரவ நுண்ணுயிர் உரம் (பிபிஎப்எம்)

பாக்டீரியாக்கள் பல்வேறு சூழலில் வாழ்கின்றன. மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா (PINK PIGMENTED FACULTATIVE METHYLOTROPS - PPFM)  ஏராளமாக இலைகளை சுற்றி மற்றும் மேற்புறத்தில்  காணப்படும்.   மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா மெத்தைலோ பாக்டீரியா பேரினத்தைச் சேர்ந்தவை. மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா வளர்சிதை மாற்றத்தினால் மெத்தனால், கரிம அமிலங்கள் மற்றும் ஆல்கஹால் போன்ற  குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாற்று கார்பன் மூலக்கூறுகள் உருவாக்கப்படுகின்றன. தாவர இலை பரப்பில் மைக்ரோமீட்டர் வரம்பில், பல்வேறு கார்பன் மூலங்கள், முக்கியமாக சர்க்கரை மற்றும் கரிம அமிலங்களை இலைத்துளை வழியாக வெளியிடுகிறது. மேலும், ஆவியாகும் கார்பன் மூலக்கூறுகள், குறிப்பாக தாவர செல் சுவர் வளர்சிதை மாற்ற விளைபொருளான மெத்தனால், இலைத்துளை வழியாக வெளியிடப்படுகிறது.

மெத்தைலோ பாக்டீரியத்தால் மெத்தனால் உட்கொள்ளப்படுகிறது. மேலும் காலையில் மெத்தனால் உமிழ்வு அதிகமாக இருக்கும், மெத்தைலோ பாக்டீரியம் அதனுடைய  வளர்சிதை மாற்றத்திற்கு ஏற்ப மாறிக் கொள்ள,  கூடுதல் கார்பன் ஆதாரங்களை இரவு நேரத்தில் பயன்படுத்துகிறது, மெத்தனால் உமிழ்வு  இரவு நேரத்தில் இலைத்துளை மூடியிருக்கும் போது குறைவாக இருக்கும்.

மெத்தைலோ பாக்டீரியாவின் நன்மைகள்

பயிர்களுக்கு பயிர் வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனின் மற்றும் ஆக்ஸின்களை அளிக்கிறது.

பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள்

அனைத்துப் பயிர்கள், மரங்கள் மற்றும் பூச்செடிகள்

அளவு

1சதவிகிதம் (1 லிட்டர் நீரில் 10 மில்லி லிட்டர்) முதல் 2 சதவிகிதம் (1 லிட்டர் நீரில் 20 மில்லி லிட்டர்) வரை திரவ நுண்ணுயிர் உரம் பரிந்துரைக்கப்படுகிறது.

பயன்படுத்தும் முறை

விதை நேர்த்தி

பரிந்துரைக்கப்பட்ட விதை அளவை 50 மிலி திரவ நுண்ணுயிரில் நன்கு கலந்து 5 முதல்10 நிமிடம் நிழலில் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும்.

இலைகளில் தெளித்தல்

காலை அல்லது மாலை நேரங்களில் 1 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் திரவ நுண்ணுயிரைத் தண்ணீரில் கலந்து (10 லிட்டர் நீரில் 100 முதல் 200 மில்லி லிட்டர்) இலைகள் நன்கு நனையும்படி தெளிக்கவும்.பயன்படுத்தும் காலம்

பயிர்களின் முக்கிய வளர்ச்சிக் காலங்கள்

பூ மற்றும் காய் பிடிக்கும் தருணம் (அல்லது) 30 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தவும்

பயன்கள்

  • விதை முளைப்புத் திறன் அதிகரிக்கிறது
  • நாற்றுக்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது
  • பூக்கும் காலம் மற்றும் காய்களின் அறுவடை காலத்தைக் குறைக்கிறது
  • பழங்கள், காய்கள் மற்றும் விதைகளின் நிறம் மற்றும் தரம் அதிரிக்கிறது
  • மகசூல் 10 சதவிகிதம் அதிகரிக்கிறது
  • வறட்சி தாங்கும் திறனை பயிர்களுக்கு அளிக்கிறது

குறிப்பு

  • இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளுடன் கலந்து தெளிக்கக் கூடாது.
  • இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்பு (அ) பின்பு இந்த நுண்ணுயிர் திரவ உரத்தைத் தெளித்தல் வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

3.09302325581
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
ஷாஜஹான் Aug 25, 2017 10:19 AM

ஒரு ஏக்கருக்கு ஏவ்வளவு மிலி பயன்படுத்த வேண்டும்? எங்கு கிடைக்கும்? எவ்வளவு விலை? என தெறிவிக்கவும்.

சம்பத் குமார் Feb 20, 2017 10:24 AM

பிபிம் எங்கு கிடைக்கும் விலை மற்ற விவரம் தரவும்

benny Jan 25, 2017 04:49 PM

இதை பற்றிய முழு விவரங்கள் தேவை , பிபிஎம் விலை , பயன் ,பயன் படுத்தும் முறை .

Anonymous Jun 27, 2016 12:29 PM

திரவ நுண்ணுயிர் உரம் (பிபிஎப்எம்) எங்கு கிடைக்கும்?

krishna Jun 26, 2016 07:43 AM

liquid manure என்றால் என்ன? அதன் பயன்பாடு என்ன?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top