பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் இடுபொருட்கள் / HDPE/PP பைகள் தயாரிப்பதற்கான வரம்பு உயர்த்தப்பட்டது
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

HDPE/PP பைகள் தயாரிப்பதற்கான வரம்பு உயர்த்தப்பட்டது

முடக்கநிலை காரணமாக சணல் ஆலைகள் மூடப்பட்டதை அடுத்து உணவு தானியங்களை மூட்டைகளில் நிரப்புவதற்கான பிரச்சினையை சமாளிக்க HDPE/PP பைகள் தயாரிப்பதற்கான வரம்பை 1.80 லட்சம் பேல்களில் இருந்து 2.62 லட்சம் பேல்களாக ஜவுளி அமைச்சகம் உயர்த்தியது.

முடக்கநிலை காரணமாக சணல் ஆலைகள் மூடப்பட்டதை அடுத்து உணவு தானியங்களை மூட்டைகளில் நிரப்புவதற்கான பிரச்சினையை சமாளிக்கவும், கோதுமை விவசாயிகளின் தேவைகளுக்கு என மாற்று பைகள் தந்து பாதுகாக்கும் நோக்கிலும், உயர் அடர்த்தி பாலி புரொபைலீன் (High density polypropylene- HDPE), புரொபைலீன் பாலிமர் (PP ) ஆகியவற்றால் ஆன நெகிழி சாக்குப்பைகளைத் தயாரிப்பதற்கான வரம்பை 1.80 லட்சம் பேல்கள் என 2020 மார்ச் 26ல் நிர்ணயித்த நிலையில், கூடுதலாக 0.82 லட்சம் வரை உற்பத்தி செய்ய 2020 ஏப்ரல் 6-ல் ஜவுளி அமைச்சகம் அனுமதி அளித்தது.

கோதுமை அறுவடை முடிந்து ஏப்ரல் மத்தியில் மூட்டைகளில் நிரப்ப வேண்டிய நிலைக்குத் தயாராகிவிடும் என்பதால், கோதுமை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொடர்பான முடக்கநிலை காரணமாக சணல் ஆலைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால், சணல் பைகள் தயாரிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் துறை சேவையில் ஈடுபட்டுள்ள இந்திய உணவுக் கார்ப்பரேஷன், அரசுக் கொள்முதல் நிலையங்களின் தேவைகளுக்கு ஏற்ற எண்ணிக்கையில் சணல் பைகளை அந்த மில்களால் தயாரிக்க முடியவில்லை. எனவே இதில் ஆக்கபூர்வமாக அரசு தலையிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்காக, இடைக்காலத் தீர்வு அளிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

3.24137931034
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top