பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / காரீஃப் பருவத்துக்கான காப்பீட்டுத் திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காரீஃப் பருவத்துக்கான காப்பீட்டுத் திட்டம்

காரீஃப் பருவத்துக்கான காப்பீட்டுத் திட்டம் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

  1. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் நிகழாண்டுக்கான (2015) காரீஃப் பருவத்துக்கான தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் இந்திய வேளாண்மைக் காப்பீடு நிறுவனத்தின் மூலம் அமல்படுத்தப்படுகிறது.
  2. காரீஃப் பருவத்தில் 20 பயிர்களுக்கு வேளாண் காப்பீடு வழங்கப்படுகிறது. கார், குறுவை, சொர்ணவாரி நெல், சம்பா, தாளடி, பிசானம் நெல் வகைகள், கம்பு, சோளம், ராகி, மக்காச் சோளம், துவரை, உளுந்து, பச்சைப் பயிறு, நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, பருத்தி, வெங்காயம், மஞ்சள், வாழை, குச்சி பயிற்சி (மர வள்ளி), உருளை, அன்னாசி, கரும்பு ஆகியவற்றுக்கு ஏக்கருக்கு பிரிமியம் செலுத்தும் வகையில் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது.
  3. அந்தப் பயிருக்கான விதைப்பு, நடவு ஒரு மாத காலத்திற்குள் இருப்பின் காப்பீடு செய்து கொள்ள முடியும். கம்பு, சோளம், ராகி, மக்காச் சோளம், துவரை, உளுந்து, பச்சைப் பயிறு, நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, பருத்தி, உருளை, வெங்காயம், அன்னாசிப்பழம், மஞ்சள், வாழை, மரவள்ளி பயிர்களுக்குக் காப்பீடு திட்டத்தில் சேர கடைசி நாள் 15.9.2015 அல்லது அப்பயிருக்கான விதைப்பு, நடவு ஒரு மாத காலத்திற்குள் இருப்பின் (எது முந்தையதோ) காப்பீடு செய்துகொள்ளலாம்.
  4. சம்பா, தாளடி பிசானம் கரும்புப் பயிர்களுக்கு காப்பீடு திட்டத்தில் சேர கடைசி நாள் 15.12.2015 அல்லது அந்தப் பயிருக்கான விதைப்பு, நடவு ஒரு மாத காலத்துக்குள் இருப்பின் (எது முந்தையதோ) காப்பீடு செய்து கொள்ளலாம். இந்தக் கூடுதல் மதிப்பீட்டுக்கான பிரிமியத் தொகையை பயிர் கடன் பெறாத விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் செலுத்தலாம்.
  5. பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் பிரிமியத்தை செலுத்த சிட்டா அடங்கல் அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் பெறப்பட்டு முன்மொழிவுப் படிவத்துடன் அவரவர் தாங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் செலுத்த வேண்டும். பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் வங்கியிலேயே இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படுவர்.
  6. முன்மொழிவு படிவங்களை அருகில் உள்ள வேளாண் துறையிலோ, கூட்டுறவு, வர்த்தக வங்கியிலோ கேட்டு பெறலாம்.
  7. இழப்பீடு வழங்கும் முறை: ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியம், பிர்காவிலும் மாநில அரசின் விவசாயத் துறையினால் பயிர் அறுவடை காலத்தில் பயிர் அறுவடை சோதனைகள் நடத்தப்பட்டு நடப்பு பருவத்தின் சாரசரி மகசூலை கடந்த 3 அல்லது 5 ஆண்டுகால உத்திரவாத மகசூலோடு ஒப்பிடும்போது நடப்பு பருவத்தின் மகசூல் எவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த விகிதப்படி வட்டாரத்தில் உள்ள காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் அவரவர் தொகைக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும்.
  8. மேலும் விவரங்களுக்கு தலைமை மண்டல மேலாளர், இந்திய வேளாண்மை காப்பீட்டு, பழைய எண்.156, புதிய எண். 323, ஆந்திரா இன்சூரன்ஸ் பில்டிங், முதள் தளம், தம்புச் செட்டித் தெரு, பாரிமுனை, சென்னை-1 என்ற முகவரி அல்லது தொலைபேசி எண் 044-43403400-ஐ தொடர்பு கொள்ளலாம்.

ஆதாரம் : இந்திய வேளாண்மை காப்பீட்டு மையம், சென்னை

3.00961538462
அபிரகாம் Nov 26, 2019 01:00 PM

வாழைக்கு காப்பீடு செய்வது எப்படி செய்வது என்று தெரியப்படுத்தவும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top