பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / நன்னெறி மேலாண்மை முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நன்னெறி மேலாண்மை முறைகள்

சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நன்னெறி மேலாண்மை முறைகள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

நன்னெறி மேலாண்மை முறைகள் விளக்கம்

நன்னெறி மேலாண்மை முறைகள் என்பது, நீர், நிலம் மற்றும் இராசயன பொருட்களை சரியாக கையாண்டு சுற்றுப்புறச்சூழல் மாசுபடாமல், இயற்கை வளத்தை காக்க உழவர்களுக்கான சிறந்த வழிகாட்டியாகும். நன்னெறி மேலாண்மை முறைகள், 1999 ஆம் ஆண்டு, ஃபுளோரிடா நீர்ப்பிடிப்புப் பகுதி பாதுகாப்பு சட்டம் அமுலாக்கப்பட்ட போது உருவாக்கப்பட்டது. வேளாண்மை செயல் முறைகளால் தாதுப் பொருட்கள் (நைட்ரஜன், பாஸ்பரஸ்) இரசாயனப் பொருட்கள் மற்றும் வண்டல் மண் மற்றும் நீர் வெளியேற்றத்தால் நீர் ஆதாரங்களும் நீர்ப்பிடிப்பு பகுதிகளும் மாசுபடுவதற்கு காரணமாகின்றதால் நன்னெறி மேலாண்மை முறைகள் உருவாக்கப்பட்டது. ஏனெனில் நிர்ப்பிடிப்பு பகுதிகளின் கட்டிடங்கள் அனைத்தும் சுண்ணாம்பினால் செய்ததால், அருகாமையிலுள்ள நிலத்திலிருந்து வழிந்து வரும் நீரில் நச்சுப் பொருள் கலந்து நீர் நிலைகளை மாசுப்படுத்தி மனித இனத்திற்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும்.

பயிர் அறுவடையில் நன்னெறி மேலாண்மை முறைகள்

1. நீர்வழிப் பாசன மூலம் ஈடுபொருள் இடுதல்

உரம், பூச்சிக்கொல்லி மற்றம் இதர ஈடு பொருட்களை நீர்வழி பாசன மூலம் அளித்தால், வேலை சுலபமாக முடிவதோடு, மண்ணில் இழுவை இயந்திரம் பயன்படுத்துவதால் வரும் மண் இறுக்கத்தை தவிர்க்கலாம். நீர்வழி ஈடுபொருள் இடும்போது சரியான அளவினை பயன்படுத்த வேண்டும்.

2. இழுவை இயந்திரத்துடன் பிற வேலைகளையும் சேர்ந்து செய்தல்

டிராக்டர் உழவு செய்யும் போது, கரும்பு நடவு செய்தல் போன்றவற்றையும் இணைத்து செய்யும் போது நிலத்தல் டிராக்டர் அதிகம் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.

சில ஆலோசனைகள்

உரம் மற்றும் கலைக்கொல்லியினை ஒரு சேர இடுதல்

இடைச்சாகுபடியினை செய்யும் போது உரமிடுவதையும் ஒன்றாகச் செய்தல்.

3. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்பது பாரம்பரிய, அங்கக மற்றும் உயிரி முறையில் பயிர்ப் பாதுகாப்பு செய்தலாகும். இம்முறையில் நன்மை தரும் பூச்சியினை அதிகரித்து, பூச்சிக்கொல்லி தெளிப்பதைத் தவிர்க்கலாம். அதோடு மண் இறுக்கத்தையும் தவிர்க்கலாம்.

4. செயற்கை காற்றுத் தடுப்புச் சுவர்

அதிவேக காற்றினை தடுத்து பயிர் பாதிக்காமல் காப்பதாகும்.

உதாரணம்

தடுப்பு சுவர்களை, கம்பிகள் அல்லது சிமெண்ட் தூண்கள் ஆகியவற்றை நிலத்தின் ஓரத்தைச் சுற்றிலும் நட்டு வைத்தல் அல்லது மரங்களை வளர்த்தல், அதிவேக காற்றினை தடுப்பதோடு பயிர் சேதமடையாமல் காக்கிறது.

5. பல்லாண்டுப் பயிர்

தானியப்பயிர், தீவனப்பயிர் மற்றும் பழப்பயிர்களை, பல்லாண்டுகள் சாகுபடி செய்வதாகும். அவ்வாறு செய்யும் போது மண் அரிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

6. மண் ஈரப்பரததிற்கேற்ப பயிர் சாகுபடி

மண்ணின் ஈரப்பதத்திற்கேற்பப் பயிர் சாகுபடி செய்வது ஓர் மிகச்சிறந்த தொழில்நுட்பமாகும். இம்முறையில் நடவு செய்யும் நேரம் குறைவதோடு பயிர் நன்கு ஊன்றி வளரவும் வழிவகுக்கும். பயிர் நடுவதற்கும், நட்டப் பயிர் விரைவில் முளைப்பதற்கும் இடையே உள்ள கால இடைவெளியை குறைக்கவும் உதவுகிறது. மண்ணின் ஈரப்பதத்தால் மேல் பரப்பில் கடினமாகாமல், நட்ட நாற்றுக்கள் காற்றினால் குலைந்துப் போகாமலிருக்க உதவுகிறது.

நடைமுறைப்படுத்த சில ஆலோசனைகள்

மண் அழுத்தம் அதிகமாகாமல் காக்கவேண்டும். இதனால் அதிக உழவு செய்வதைத் தடுக்கலாம். நடவு செய்ய நிலம் தயார் செய்தவுடன் பாசனம் செய்யவேண்டும். நீர்ப் பாசனத்திற்கு பின், மெல்லிய கடினமான புரணி மண்ணின் மேற்பரப்பில் உருவாகும். நாற்று மேடை, நீர்ப்பாசனம் மற்றம் நடவு ஆகியவற்றிற்கிடையே உள்ள நேரத்தை குறைக்கவேண்டும்.

7. அறுவடை வேலை குறைப்பு

அறுவடை கருவிகளை நிலத்தில் பயிரை அறுவடை செய்வதை அகற்ற பயன்படுத்தப்படுகிறது. அவ்வியந்திரத்தின் உபயோகத்தை குறைக்கும் போது மண்ணின் தன்மை மாறாமல் பாதுகாக்கப்படுகிறது.

8. குறைந்த உழவு முறை

குறைந்த உழவு முறை என்பது, பயிர் சாகுபடிக்கு செய்யப்படும் உழவு எண்ணிக்கையை குறைத்தலாகும். அதிக முறை உழவு செய்தல் மண்ணின் தன்மையை மாற்றிவிடும். ஆகையால், மண்ணின் தன்மை மாறாமல் பாதுகாக்க உழவு முறையில் மாற்றம் தேவை.

ஆலோசனைகள்

குறைந்த உழவு முறை, நிலப்போர்வை உழவு முறை.

9. மண்ணின் ஈரப்பத்திற்கேற்ப உழவு செய்தல்

மண்ணின் ஈரப்பதத்திற்கேற்ப உழவு செய்தல் என்பது உழவு செய்வதற்கு முன்பு அல்லது செய்யும் போது அல்லது மழை வரும் போது உழவு செய்தலாகும். நீர், மண்ணின் துகள்களை ஒன்றாக இணையச் செய்து, மண்ணின் ஆக்சிஜன் குறைந்து காற்று சென்றடையாமல் தடுக்கிறது. நன்கு காய்ந்த மணல், மேற்பரப்பிலிருந்து காற்றினான் அரித்துச் சென்றுவிடும். தேவையான அளவு ஈரப்பதத்தை காக்க உழவு செய்வதற்கு முன் நீர்ப் பாசனம் செய்தல் அல்லது மழைக்குப் பின் உழவு செய்தல்வேண்டும். உழவுக்குப் பின் பெரிய மணல் கட்டி உருவாகும், இவை மண் அரிப்பை தடுக்கிறது.

சில ஆலோசனைகள்

தேவையான ஆழம் வரை நீர்ப்பாசனம் செய்யவேண்டும். மழைப்பொழிவும், உழவும் ஒன்றே நேரத்தில் நடைபெற திட்டமிட வேண்டும்.

10. உழவு முறை செய்யும் காலம்

மண் அரிப்பு ஏற்படும் நேரத்திற்கு முன் உழவு செய்தலே சிறந்த உழவு செய்யும் நேரமாகும். உழவு செய்யும் நேரத்தை சரி செய்யும் போது மண் அரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

பயிர் நிலங்களில் நன்னெறி மேலாண்மை முறைகள்

விளை நிலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நன்னொறி மேலாண்மை முறைகள்

1. செயற்க்கை காற்றுத் தடுப்பான்

செயற்க்கை காற்றுத் தடுப்பான் என்பது காற்றின் வேகத்தைத் தடுக்கும் தடுப்பான். இத்தடுப்பான்கள் வேகமாக வீசும் காற்றின் வேகத்தைத் தனித்துப் பயிர் சேதமடையாமல் பாதுகாக்கும்.

நடைமுறைப்படுத்தப்படுத்த சில ஆலோசனைகள்

தொடர் மரப்பலகை வேலி, வைக்கோல் போர் மற்றும் இது போன்ற சாதனங்களால், காற்றின் வேகத்தைத் தடுக்க பயன்படுத்தலாம்.

தடுப்பான்கள் காற்றின் திசைக்கு எதிர்மறை திசை அல்லது குறுக்கு வாட்டமாக அமைக்கவேண்டும். தடுப்பான்கள் செங்குத்தாக அல்லது 90 டிகிரி கோணத்தில் இருக்குமாறு அமைத்தால் பயிர் சேதமடையாமல் தடுக்கும்.

தடுப்பான்களில் உயரத்தில் பத்து மடங்கு தூரமுள்ள இடங்கள், பாதுகாப்பான பகுதியாகும்.

2. மூடுப்பயிர்கள்

மூடுப்பயிர்கள் என்பது பசுந்தாள் செடிகளை மண் அரிப்பை தடுப்பதற்கோ அல்லது மண்வள மேம்பாட்டிற்கோ பயிரிடுவதாகும்.

நடைமுறைக்கு சில ஆலோசனைகள்

மூடுபயிர்கள், 60 சதவிகிதத்திற்கு மேல் மண்ணை மூடத்தக்க அளவிற்கு அடர்த்தியான வளர்ச்சியுடைய தாவரங்களைத் தெரிவு செய்யவேண்டும்.

குறுகிய காலப் பயிர்களை இரண்டு முக்கிய பயிர்களுக்கிடையே பயிரிடலாம்.

அப்பயிர்கள் அடுத்தப்பயிர் செய்வதற்கு முன் நிலத்தில் மடக்கி உழவேண்டும். நீண்ட கால மூடுப்பயிரை 60 சதவிகிதம் மூடும் வரை விட்டுப் பிறகு, அதிக அடர்த்தியான பாகங்களை கழித்துவிடவேண்டும்.

3. பாளங்களில் பயிரிடுதல்

குறுக்கு வட்டத்தில் அமைக்கப்பட்ட மண் மேடுகள் அல்லது பார்கள் உழவு செய்யும் போது அமைத்தல் மண் அரிப்பை தடுக்க, காற்றுத் தடுப்பான்களாக பயன்படுகிறது.

நடைமுறைக்கு சில ஆலோசனைகள்

உழவு செய்யும் போது அமைக்கும் பார்கள் காற்றின் திசைக்கு எதிர்த்திசையில் / குறுக்காக அமைக்கவேண்டும். பார்கள் சேதமடைந்தாலோ, திறன் குறைந்தாலோ, சீரமைக்கவேண்டும், இல்லாவிடில் பயிர் சேதமடைய வாய்ப்புகள் அதிகம். களிமண், வண்டல் மண், மணல் கலந்த இருபொறை மண் ஆகிய மண் வகைகளில் தடுப்புப் பார்கள் அமைப்பது மிகச் சிறந்த பலனளிக்கும் மற்ற வகை மண்ணில் (மணல் சாரி மற்றும் அங்ககப் பொருள் அதிகமுள்ள மண்) தடுப்புப் பார் அமைத்தல் பலன் அளிக்காது.

குறுக்கு வாட்டத்தில் பயிரினால் அமைக்கப்பட்ட காற்றுத் தடுப்பான்

பயிர்களுக்கிடையே, பாலங்களில் பயிர் செய்வதே இதன் பொருளாகும். பயிரின் அடர்த்தி 25 அடி முதல் 330 அடி வரை இருக்கலாம். இவ்வகை காற்றுத் தடுப்பான்கள், காற்றின் வேகத்திற்கு குறுக்காக 90 டிகிரி கோணத்தில் இருக்குமாறு அமைத்தல் நல்ல பலன் தரும். இவ்வகை தடுப்பான்கள், பயிரை பாதிக்காத வண்ணம் இருக்கவேண்டும்.

4. குறுக்கு - தாவர காற்றுத் தடுப்பான்

காற்றின் வேகத்தைக் குறைக்க தாவரத்தை ஒரு வரிசையோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட வரிசைகளில் அமைப்பதாகும். இவ்வகைத் தடுப்பான் காற்றின் வேகத்தைக் குறைத்து, மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

நடைமுறைக்கு சில ஆலோசனைகள்

தாவரங்கள், ஒரு ஆண்டு தாவரங்களோ அல்லது பல்லாண்டு தாவரங்களோ எதுவானாலும் தெரிவு செய்யலாம். ஒரு வரியுள்ள தடுப்பான்களில் காற்றோட்டம் அதிகமாக இருக்கும், ஆனால் பல வரிசைகள் உள்ளவற்றில் காற்றோட்டம் இராது. எனவே பல்வரிசையில் அமைக்கும் போது, 36 அங்குலம் இடைவெளிவிட்டு அமைத்தல் அவசியம். ஓர் ஆண்டுத் தாவரங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட வரிசைகளில் 2 அடி உயரம் வரை அமைக்கலாம். இவ்வகை தடுப்பான்களில் 40-50 சதவீத காற்றோட்டம் இருக்கும். வரிகளின் இடைவெளி தாவரத்தின் உயரத்தை விட 12 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.

5. எருவிடுதல்

கால்நடைக் கழிவுகள் / இயற்கை திடப்பொருள்கள் ஆகியவற்றை உரமாக நிலத்திலிடுதல் மண்வளம் மேம்பாடு மற்றும் பராமரிப்பு செய்து மண்ணின் உயிரித்தன்மையை அதிகரிப்பதோடு, மண் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்க எருவிடவேண்டும்.

நடைமுறைக்கு சில ஆலோசனைகள்

எரு சேமிப்பு குழிகள் நீர் நிலைகளுக்கு அருகில் இல்லாமல், கசிவு ஏற்படாத வண்ணம் தடுக்கவேண்டும். இல்லையேல் நீர் வழிந்தோடல் மூலம், தேவையில்லாத பகுதிகளில், நீரிலோ அல்லது தாவரங்களையோ பாதிக்க நேரிடும்.

உள்ளூர் மற்றும் மாநில விதிமுறைகளுக்கு மீராத வண்ணம், எரு உபயோகிக்க வேண்டும்.

சிலவகை எருக்களிலிருந்து சத்துக்கள் துரிதமாக ஆவியாக வாய்ப்புள்ளது. அவ்வாறு நேரிட்டால், துர்நாற்றமும் அமோனியா வெளியேற்றமும் ஆகும்.

எருக்களை நிலத்தில் இட்டவுடன் விரைவில் அவற்றை மண்ணில் புதையுமாறு மடக்கி உழவேண்டும். இதன் மூலம் ஆவியாதலை தடுக்கலாம்.

6. நிலப்போர்வை

நிலப்போர்வை என்பது, பயிரின் கழிவுகளை மண்ணில் மேல் போர்வையாக பரப்பி வைத்தல். நிலப்போர்வை மண் அரிப்பை தடுப்பதோடு, வேகமாக காற்று வீசும் போது மண்ணின் ஈரப்பதத்தையும் பாதுகாக்கிறது.

நடைமுறைக்கு சில ஆலோசனைகள்

கழிவுப் பொருட்கள் அங்ககத் தன்மையுடையதாய் இருக்கவேண்டும்.

தொழிற்சாலை கழிவுகளிலிருந்து வரும் பொருட்களையும் பயன்படுத்தலாம்.

வைக்கோல், மரத்தூள், உணவுப் பதனக் கழிவுகள் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

வைக்கோல் பயன்படுத்தும் போது குறைந்த பட்சம் ஏக்கருக்கு 450 கிலோவை சீராக பரப்பி சற்று மண்ணில் புதைக்குமாறு செய்யவேண்டும்.

மரத்தின் நாரை பயன்படுத்தும் போது 900 கி எடையுள்ள பொருட்களை ஒரு ஏக்கருக்கு உபயோகித்தால் 80 சதவிகிதம் மண் மூட ஏதுவாகும்.

7. நிரந்தர மூடாக்கு

நிரந்தர மூடாக்கு என்பது பல்லாண்டு தாவரங்களை நிரந்தரமாக நிலத்தில் மூடாக்காக உபயோகித்தல் நீண்ட நாள் தாவரங்களை நிலத்தில் பயிரிடுதல் மண் அரிப்பை தடுக்க உதவும். பல்லாண்டு இனங்களான புல் மற்றும் பயறு வகைத் தாவரங்களை 60 சதவிகிதம் நில மூடாக்கு ஏற்படும் வகையில் வளர்க்கலாம். பல்லாண்டு தாவரங்களை அதிகம் வளர்ந்து இருக்கும் போது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வெட்டி / கிளைகளை தரித்துவிடவேண்டும்.

8. பயிர்க்கழிவு மேலாண்மை

பயிர்க்கழிவு மேலாண்மை என்பது மண்ணில், பயிர் மற்றும் பயிர்க்கழிவுகளை தேவையான அளவு பராமரித்தல். நிலத்தில் பயிர் / பயிர்க்கழிவுகளை பராமரித்தல், ஒரு பயிரின் அறுவடைக்கும் அடுத்தப் பயிரின் வளர்ச்சிக்கு இடையேயுள்ள காலங்களில் மண் அரிப்பை தடுக்க உதவும்.

நடைமுறைக்கு சில ஆலோசனை

பல்வேறு விதமான முறைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவையாவன:

 • குறைந்த உழவு முறை நிலப்போர்வை உழவு போன்ற முறைகளில், பயிர்க் கழிவுகள் மண்ணில் சேர்த்து உழவேண்டும்.
 • உழவு தவிர்த்தல் முறையில் உழவு செய்யாமல் நேரடியாக நிலத்தில் விதைகளை ஊன்றுதல். எ.கா நெல் தாளில் உளுந்து விதைத்தல்.
 • மண் பாதுகாப்பிற்கு முடிந்த வரை பயிர்க் கழிவுகளை நிலத்திலேயே வைத்து வைத்தல் (எ.கா. பயிர் நடுவதற்கு முன்பு வரை, உழவு செய்தலை காலம் தாழ்த்தல்)
 • 6 அடி அங்குலமுள்ள நெற்தாள்கள் நிலத்திலேயே விட்டு விடுதல்.
 • அறுவடைக்குப் பின் கழிவுகளை நிலத்திலேயே சீராக பரப்பி வைக்கவேண்டும்.
 • உழவு எண்ணிக்கைகளை குறைக்க வேண்டும்.
 • முன் பருவப் பயிரின் கழிவுகளை 60 சதவிகிதம் மண் மூடாக்காக போடவேண்டும்.

9. தொடர் சாகுபடி முறை

தொடர் சாகுபடி முறை என்பது தொடர்ச்சியாக அடுத்தடுத்து பயிர் சாகுபடி செய்து, நிலம் வெறுமையாயிராமல் (பயிரிடாத காலத்தை) தவிர்த்தலாகும். இவ்வாறு தொடர் சாகுபடி முறையில் மண் அரிப்புக்கு ஏதுவாகாமல் தடுக்கலாம். இரண்டு பருத்திப் பயிர்களுக்கு இடையே ஒரு பணப்பயிர் சாகுபடி செய்தல் / அல்லது காய்கறிப் பயிர் சாகுபடி செய்தல், நில வெற்றிடங்களைத் தவிர்க்கலாம்.

நடைமுறைக்கு சில ஆலோசனை

நிலம் வெறுமையாயிருக்கும் காலம் 30 நாட்களுக்கு குறைவாக இருக்கவேண்டும். மோசமான தட்பவெப்பத்தினால் பயிர் பாதிப்படைந்ததால் பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்கலாம்.

நில மேற்பரப்பை கடினப்படுத்துதல்

நில மேற்பரப்பை கடினப்படுத்துதல் என்பது மண் கட்டிகள் உருவாகுதலை மண் கட்டிகள் காற்றினால் ஏற்படும் மண் அரிப்பைத் தவிர்க்கவும் உதவுகிறது. உழவுக் கருவிகளால் போதிய ஈரப்பதமுள்ள நிலங்களில் மண் கட்டிகள் உருவாக்கலாம்.

நடைமுறைக்கு சில ஆலோசனை

எல்லாவகை மண் நிலங்களும் மண் கட்டி உருவாக்க வாய்ப்பில்லை. அருகிலுள்ள மண் பரிசோதனை நிலையம் / மண் ஆய்வு நிலையங்களின் உதவியுடன் மண்ணை பரிசோதித்து பின் கடைப்பிடிக்கலாம்.

மண் கட்டிகள் உருவாக சரியான நேரத்தில் உழவு செய்து நடவு செய்வதற்கு இடையூறாக இல்லாத நேரத்தில் கடைப்பிடிக்கலாம் ஏனெனில், சாதாரண மண்ணை விட இம்மண் கடினப்படுவதால் மண் அதி சீக்கிரத்தில் உலர்ந்து இறுகிவிடும்.

10.மரபணு மாற்றப்பட்டப் பயிர்கள்

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உழவுகளின் எண்ணிக்கை மற்றும் சாகுபடி முறைகளைக் குறைத்து, மண் கிளர்ச்சியை வெகுவாக குறைக்கிறது.

11. மரம், புதர் செடி / காட்டுத் தடுப்பான் நடுதல்

மரங்கள் மூலம் காற்றுத் தடுப்பான் அமைத்தல், தடுப்பான்கள், காற்றின் திசைக்கு செங்குத்தாக தடுப்பான்கள் அமைத்தல் காற்றின் வேகத்தைக் குறைத்து, நிலத்தின் மேல் வீசும் காற்றின் தன்மையை மாற்றுகிறது, இதனால் மண் அரிப்பும் குறைகிறது.

சில ஆலோசனைகள்

தடுப்பானின், 10 மடங்கு உயரத்தின் தூரம் பாதுகாப்பு பகுதியாகும்.

ஓர் வரிசை தடுப்பான்களே விளைநிலங்களுக்கு உகந்தது ஏனெனில் இவற்றிற்கு குறைந்த நீர் போதுமானது.

எளிதில் கிடைக்கக்கூடிய இரகங்களையே பரிந்துரை செய்யவேண்டும்.

ஈரப்பதம் பாதுகாத்தல் மற்றும் நீர்ப்பாசனமும் தாவரங்கள் வேர் ஊன்றி வளரும் வரை அளிக்கலாம். வறட்சியைத் தாங்க கூடிய இரகங்களையும் உபயோகிக்கலாம்.

உரம் உபயோகம்

உரம் உபயோகித்தலில் நன்னெறி மேலாண்மை

தழைச்சத்து நிர்வாகம்

பயிருக்கு தழைச்சத்து இடுவதில் உழவர் பல்வேறு முறைகளைக் கையாளுகின்றனர். தழைச்சத்திடும் நேரம், வீதம் மற்றும் முறைகள், தழைச்சத்தின் மூல ஆதாரம் ஆகியவை, ஒவ்வொரு மாநிலத்திலும், ஏன் இடத்துக்கிடம் மாறுபடும். சில சூழ்நிலைகளில், தட்பவெப்பநிலைகளில், தழைச்சத்துப் பயிர் கிரகிக்கும் முன்பே இழந்துவிடும். சிரமமான தழைச்சத்து நிர்வாகத்தை வெற்றிகரமான பயிர்ச் சாகுபடி முறைகளுக்கு சில வழிமுறைகள்.

தழைச்சத்து மேலாண்மை பயிருக்குத் தேவையான தழைச்சத்தை அளித்து நல்ல மகசூல் பெறவும், நீர் மற்றும் காற்றினால் சேதப்படுதலை குறைக்கவும் உதவுகிறது.

வழிமுறைக் கொள்கைகள்

பயிரின் வளர்ச்சியை அதிகரித்து நீரின் தரம் குறையாமல் மகசூல் பெற தழைச்சத்து நிர்வாகம் மிகவும் முக்கியம். நன்னெறி வேளாண் முறை தழைச்சத்து நிர்வாகத்திற்கு கவனிக்க வேண்டியவை, கசிவு ஏற்படக்கூடிய அபாயகரத்தன்மை, முழு வரவு செலவுகள், குறுகிய கால மற்றும் நீண்ட கால பண்ணை மேலாண்மை திட்டம்.

பொதுவான நன்னெறி மேலாண்மை முறைகள்

 • அடியுர தழைச்சத்தின் விகிதம், மண் பரிசோதனை, பாசன நீர் மற்றும் பயிர்ப் பரிசோதனை முடிவுகளைப் பொருத்து இடவேண்டும்.
 • மண் பரிசோதனை ஒவ்வொரு நிலத்திலும் தனித் தனியாக செய்யவேண்டும்.
 • மண் பரிசோதனை செய்ய, மண் மாதிரி 2-3 அடி ஆழத்தில் அல்லது வேரின் மண்டல ஆழத்திலிருந்து எடுக்கவேண்டும்.
 • ஒவ்வொரு பயிருக்கும் நிச்சயமான பயிர் மகசூல் கணிப்புகள், மண்ணின் தரம், ஈரப்பதம், முந்தைய மகசூல் விவரம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றை நிர்ணயிக்கவேண்டும். நன்னெறி முறையினைக் கையாளும் போது மகசூல் 5 சதவிகிதம் அதிகரிக்கும்.
 • பாசன முறை நன்னெறி மேலாண்மையில், நீரின் உபயோகத்தை அதிகரித்து, கசிவினால் ஏற்படும் இழப்பினை தவிர்க்கலாம்.
 • அதிக கசிவு ஏற்படும் நிலங்களைக் கண்டறிந்து எல்லாவித நன்னெறி முறைகளையும் பின்பற்றி தழைச்சத்தை (நைட்ரஜன்) நீரில் கலந்திடாமல் தடுக்கவேண்டும்.
 • வருடாந்திர நிலம் மற்றும் பயிர்களுக்கான நைட்ரஜன் மேலாண்மை திட்டத்தை உருவாக்கவேண்டும்.
 • முன்போகப் பயிர், இரகம் மற்றும் மகசூல்
 • நிகழ்காலப் பயிர், இரகம் மற்றும் எதிர்பார்க்கப்படும் மகசூல்
 • மண் பரிசோதனை விவரம் (தழைச்சத்தின் அளவு குறிப்பிடப்பட்ட)
 • மண்ணின் அங்ககச் சத்து, உரம் மற்றும் முன்போகத்திலிருந்த பயறு வகைப் பயறுகளின் நைட்ரஜனின் அளவு.
 • எதிர்பார்க்கப்படும் மகசூல் அளவை சந்திக்கத் தேவையான நைட்ரஜன் அளவு.
 • நைட்ரஜன் கசிவைத் தடுக்கக்கூடிய மேலாண்மை முறைகள், (உரமிடும் நேரம், அளவு, பக்க முறை, இலைவழி, மண்வழி, நீர்வழி, நிலைத்து நிற்கும் தன்மை, நைட்ரஜன் இழப்பினைத் தடுப்பான், பயிர் சாகுபடி முறையில் தேவைப்படும் மாற்றங்கள்).
 • இந்தப் பதிவேட்டை குறைந்தபட்சம் மூன்று ஆண்டும் பராமரித்து நிர்வகிக்க வேண்டும்.
 • நைட்ரஜன் தழைச்சத்திடுவதில் நன்னெறி மேலாண்மை முறைகள்
 • பயிருக்குத் தேவையான நேரத்தில் கிரகிக்கக்கூடிய வகையில் தழைச்சத்திடவேண்டும்.
 • பக்கவாட்டில் தழைச்சத்திடவேண்டும்.
 • அதிகக் கசிவு ஏற்படும் வயலில், முழு அளவு நைட்ரஜன் உரமிடுவதைத் தவிர்க்கவேண்டும்.
 • பயிர் நன்றாக கிரகிக்கும் இடங்களில் உரமிடுதல்
 • ஓரு வரிசை விட்டு மறு வரிசைப் பாசனம் செய்யும் இடங்களில் கீழ் நோக்கி கசிவு ஏற்படாமல் தடுக்க மேல் வரப்புகளில் நைட்ரஜன் இடலாம்.
 • தெளிப்பு நீர்ப் பாசனத்தின் மூலம், சிறிது சிறிதாக உரமிடுதல், உர அளவைக் குறைப்பதோடு, திறனையும் அதிகரிக்கலாம்.
 • நீர்ப்பாசன நிலங்களில், நைட்ரஜன் மேற்பரப்பில் இட்டால் இழப்பு அதிகமாகும் நிலங்களில் உரமிட்டவுடன் மண்ணில் உடனே சேர்த்து கலந்துவிடவேண்டும்.
 • நீர்வழி உரமிட்ட நைட்ரஜன் சத்தை உகந்த சாதனத்தின் மூலம் கணக்கிடவேண்டும்.
 • பாரம்பரிய முறையில் நீர் கசிவினாலும், நீர் வழிந்தோடலிலும் அதிக உர இழப்பு ஏற்படுவதால், இம்முறை பரிந்துரைக்கப்படுவதில்லை.
 • நைட்ரஜன் உரம் கையாளுவதிலும் சேமிப்பிலும் நன்னெறி மேலாண்மை முறைகள்
 • நைட்ரஜன் உரங்களை (100 அடி தள்ளி) கிணறு மற்றும் நீர் நிலைகள் உள்ள இடங்களிலிருந்து சேமித்து வைக்கவேண்டும்.
 • நிரந்தர உர சேமிப்புக் கிடங்குகளை, வடிகால் பகுதி, கசிவு ஏற்படும் இடம் மற்றும் புயல் காற்று ஆகியவற்றில் சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும்.
 • உரங்களை நிலத்தடியில் உள்ள பாத்திரங்களிலோ, குழிகளிலோ சேமிக்கக்கூடாது.
 • உரச் சேமிப்புப் பாத்திரங்களை காற்றுப்புகா வண்ணம் சேமித்து வைக்கவேண்டும்.
 • நீர்வழி உரமிடும் அமைப்பை நீர்க்கசிவினாலோ நீர் வடிகாலினால் பாதிப்படையாமல் பாதுகாக்க வேண்டும்.
 • வருடம் ஒரு முறை உரமிடும் கருவியை பரிசோதித்து சரி செய்யவும்.
 • உரமிடும் கருவியை சுத்தம் செய்யும் போது எஞ்சியுள்ள உரங்களை அகற்றி, சுத்தம் செய்யவும்.
 • சுத்தம் செய்ய உபயோகித்த நீரை மீண்டும் விளைநிலங்களில் பயன்படுத்தலாம்
 • பூமி வெப்பமயமாதலின் சாத்தியக்கூறு மற்றும் நைட்ரஜன் உபயோகம்

தட்பவெப்ப மாற்றமும் உலக வெப்ப மயமாதலுமே தற்பொழுது நிலவும் அறிவியல்பூர்வ தற்கமும் பொதுவான கவலையும் ஆகும். வேளாண்மையே, பசுமைக் கூடார புகைக்கு முக்கியக் காரணமாகவும், உலக வெப்பமயமாதலுக்கும் வழிவகுக்கிறது, அதில் நைட்ரஜன் உபயோகம் பெரும் பங்கு வகிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வேளாண்மை மூலம் வெப்பமயமாதலுக்கு மூன்று முக்கியக் காரணிகளான கார்பன்டைஆக்சைடு (CO2) நைட்ரஸ் ஆக்சைடு (N2o) மற்றும் மீத்தேன் (CH4) ஆகியவை அதிக அளவில் வெளியேற்றமாகிறது. இவற்றுள் நைட்ரஸ் ஆக்சைடு (N2o) என்ற வாயு உரத்திலிருந்து வெளியாகிறது. இந்த வாயு வெப்பமயமாதலுக்கு பெரும் பங்கு வகிக்கிறது.

தீவிர பயிர்ச்சாகுபடி அமைப்பின் உலக வெப்பமயமாதலின் சாத்தியக்கூறுகள்

பசுமைக்கூடார வாய்வு வெளியிடுதலில் வேளாண்மை பங்கு வகித்தாலும், சில சமயங்களில், அவை கார்பன்டை ஆக்சைடு (CO2) வாய்வு சேமிப்புக்கும், அதை நிலைப்படுத்தி உலக வெப்பமயமாக்குதலை குறைக்கவும் வழி வகுக்கின்றது. போதிய உரமிடுதல், மண்ணின் அங்ககச் சத்தை அதிகரிப்பதோடு, அவை குறையாமல் தடுக்கிறது. தேவையான அளவு உரமிடாத போது பயிரின் வளர்ச்சி குன்றி, கார்பன் நிலைநிறுத்தும் தன்மையும் குறைகிறது, மட்டுமல்லாது மண்ணின் அங்ககச் சத்தும் குறைந்து, நீண்ட நாள் உற்பத்தித் திறனும் பாதிப்படைகிறது.

தேவையான அளவு நைட்ரஜன் இடுபொருள் பயிரின் உற்பத்திக்கும், மண்ணின் அங்கக சத்தை நிலைப்படுத்தவும், மிகவும் இன்றியமையாதது. சிறந்த பயிர் மகசூலுக்குத் தேவையான உர ஆதாரம், வீதம், உரமிடும் காலம் மற்றும் இடம் ஆகியவை உலக வெப்பமயமாதலை குறைப்பதோடு, வேளாண்மைக்காக காடுகள் அழிக்கப்படுவதும், குறைக்கப்படுகிறது.

பயிர்ச்சாகுபடியின் மூலம் வெளியாகும் வாய்வுகளை வெகுவாக குறைக்க, தாது சத்துக்களின் கிரகிப்புத் தன்மை அதிகரித்து உயர் விளைச்சல் பெறுவதே சிறந்த வழியாகும். உயர் விளைச்சல் தரும் பயிர்கள் மண்ணின் கார்பன் சேமிப்பை அதிகரிக்கும்.

நிகர உலக வெப்பமயமாதலின் காரணிகளைக்குறைக்க பயிர், மண் மற்றும் உர மேலாண்மை

இரகம் / வீரிய இரகம், நடவு தேதி மற்றும் பயிர் அடர்த்தி ஆகியவற்றில் அதிக விளைச்சல் தரக்கூடிய சிறந்தக் கலவையை தேர்ந்தெடுத்தல்.

சீரான நீர் மற்றும் நைட்ரஜன் மேலாண்மை, அதாவது நைட்ரஸ் ஆக்சைடு வெளியாவதை குறைக்கக்கூடிய வகையில் தேவையான பருவத்தில் நைட்ரஜனை பிரித்திடுத்தல்.

பயிர்க் கழவு மேலாண்மை மூலம் மண்ணின் அங்கக பொருளை அதிகரித்தல்.

உர மேலாண்மை

மண்ணின் அங்ககச் சத்து (SOM) அதிகரித்து பராமரிக்க, சரியான அளவு நைட்ரஜன் உரமிட்டுப் பயிர் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும்.

மண்ணில் எஞ்சி நிற்கும் நைட்டிரேட்டை குறைத்து நைட்ரஸ் ஆக்சைடு வாய்வு வெளியாதலை தடுக்க நைட்ரஜன் உரத்தின் நன்னெறி மேலாண்மை முறைகள் பெரும் பங்கு வகிக்கிறது.

பயிர்க் கழிவுகளை மண்ணில் பராமரித்து அங்ககப் பொருளை அதிகரிக்க சரியான உழவு முறையை கடைப்பிடிக்கவேண்டும்.

வெவ்வேறான நைட்ரஜன் உரத்தின் ஆதாரப் பொருளிலிருந்து நைட்ரஸ் ஆக்சைடு வெளியாதல், நிலத்தையும் தட்பவெப்பத்தையும் பொறுத்தது.

தீவிரப் பயிர் சாகுபடி, பசுமைக் கூடார வாய்வு அதிகரிப்புக்கு காரணமாகாமல், வணங்கள் அழிக்கப்படாமலும், தற்பொழுதுள்ள விளை நிலத்திலிருந்து அதிக உற்பத்தி செய்து உலக, உணவு, நார்ப்பொருள் மற்றும் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, வனப்பகுதியை அதிகரித்து உலக வெப்பமயமாதலை குறைக்கலாம்.

வேளாண்மை தொழில் செய்வோருக்காக குறுகிய கால கல்வி

நீடித்த பயிர்ச்சாகுபடி மேலாண்மை அமைப்பின் அடிப்படை கொள்கைகள்.

பயிர்ச்சத்துக்கள், காற்றிலும், நீரிலும் விரயமாகும் வழிகள்

பசுமைக்கூடார வாய்வு வெளியாதலை தடுக்க உதவும் நன்னெறி மேலாண்மை முறைகள்.

உழவியல் அறிஞர்கள் மற்றும் சுற்றுச்சூழலியல் அறிஞர்களிடையே நிலவும் சுமுகமான புரிந்துக் கொள்ளுதல் மற்றும் ஒத்துழைப்பும் பசுமைக்கூடார வாய்வு வெளியேற்றத்தை தவிர்க்கும் வகையில் உள்ளது.

பசுமைக்கூடார வாய்வு வெளியேற்றம் அதிகரிப்பு, பயிர் உற்பத்தியில் நன்னெறி உர மேலாண்மையின் தேவையை வலியுறுத்துகிறது.

பாஸ்பரஸ் உரமிடுதலில் நன்னெறி மேலாண்மை முறைகள்

உரமிடும் காலமும் இடமும், உர உபயோகத்திறன் மற்றும் பயிர் உற்பத்தியை நிர்ணயிக்கிறது. உரமிடுதலின் முக்கிய நோக்கம் என்னவெனில், உரங்கள் சரியாகப் பயிர் கிரகித்து நல்ல விளைச்சல் தருவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்காமல் தவிர்த்தலேயாகும். சிறந்தப் பயிர் சத்து மேலாண்மை என்பது அதிக அளவு உரமிடுதல் அல்லது பயிர் அல்லாத இடங்களில் உரமிட்டு சேதமடையாமல் தவிர்ப்பதாகும்.

பாஸ்பரஸ் உரத்தை பொருத்தவரை, அதிக அளவு அல்லது தவறான முறை கடைப்பிடித்தல், விளைநிலத்திலிருந்து வெளியேறும் நீரில் பாஸ்பரஸின் அடர்த்தி எதிர் மறையான விளைவை ஏற்படுத்தும்.

கட்டுப்பாட்டான பாஸ்பரஸ் உரமிடுதல்

உரம் வைத்தல் என்பது, வயல் முழுவதும் உரத்தை சீராக வீசுவதற்கு பதிலாக, பயிரின் வேர்ப்பகுதியில் வைப்பதாகும். உரமிடும் முறை பாஸ்பரஸ் கிரகிப்புத் திறன் மற்றும் நீர் வழி விரயம் ஆகியவற்றை நிர்ணயிக்கும். பாஸ்பரஸ் வீதமும், உரமிடும் முறையும், உபரி நீர் வழிந்தோடலில் சேரக்கூடிய பாஸ்பரசின் அளவில் நேரடித் தொடர்புடையது. நன்னெறி வேளாண்மை முறையின், பயிர் கிரகிப்பு நிலையில் உள்ள பாஸ்பரஸின் அளவை அறிதலும் மண்ணில் சேரக்கூடிய பாஸ்பரஸ் அளவைக் குறைக்க உதவும். இதன் விளைவாக விளைநிலத்திலிருந்து கழிவு நீரை சென்றடையும் பாஸ்பரஸின் அளவு மற்ற முறையைக் காட்டிலும் மிகவும் குறைவாக காணப்படும்.

பாஸ்பரஸ் உரம் வைத்தலுக்கான காரணங்கள்

பாஸ்பரஸ் உரம் செடியின் வேர்ப்பகுதியில் வைத்தல் முறை நல்ல விளைச்சல் ஏற்படுத்தியுள்ளது. பாஸ்பரஸ் சத்துக் குறைந்த நிலங்களில் வேர்ப்பகுதியில் வைக்கும் போது பயிர் எளிதில் கிரகித்து பயன்பாட்டு திறனும் அதிகரிக்கிறது.

குறைந்த உரப் பரிந்துரையில், பாஸ்பரஸ் கிரகிப்புத் திறன் பரவலாக வீசும் முறையை விட வேர்ப்பகுதியில் வைக்கும் முறையில் அதிகம், அதிலும் குறிப்பாக பாஸ்பரஸ் நிலைப்படுத்தும் தன்மை அதிகம் இருக்கும். அங்கக மண்ணில், வேர்ப்பகுதியில் வைத்தல் மிகவும் சிறந்தது.

வேர்ப்பகுதியில் வைக்கும் போது பாஸ்பரஸ் மண்ணில் நிலையாக ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பு குறைகிறது.

இம்முறை உரமிடுதல் ஒன்றிற்கொன்று முரண்படாமல், உரமிட்ட இடத்தைத் தவிர்த்து உரமிடாது இடங்களில் வைக்க உதவும்.

வேர்ப்பகுதியில் உரம் வைத்தல் முறையின் முக்கியப் பயன், என்னவெனில், பாஸ்பரஸ் உரத்தின் அளவை வெகுவாகக் குறைக்கலாம்.

தவறான முறையில் பாஸ்பரஸ் உரமிடுதலைத் தவிர்த்தல்

அதிக பாஸ்பரஸ் தன்மையுள்ள மண் மற்றும் அதிக அளவு பாஸ்பரஸ் உரமிடப்பட்ட நிலங்களில் மண் பரிசோதனையில், பாஸ்பரஸின் அளவு அதிகமாக காணப்படும். இப்பரிசோதனை முடிவைக் கொண்டு நிலத்தில் பாஸ்பரஸ் உரம் பரிந்துரை செய்யும் போது, நீரில் பாஸ்பரஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிக உரமிடுதல் அல்லது தவறான முறையில் தேவையில்லாத இடங்களில் இடுவதைக் குறைத்து நீர் கழிவு நீரில் சேர்வதைத் தவிர்க்கலாம்.

சில நடைமுறையில் கடைப்பிடிக்கவேண்டிய யுத்திகள்

பாஸ்பரஸ் உரமிட வேண்டிய அட்டவணையை சரியாகப் பதிவு செய்து மண் பரிசோதனை முடிவிற்கேற்ப உழவியல் மற்றும் பொருளாதார ரீதியில் பரிந்துரை செய்யவேண்டும்.

சரியான அளவைக் கணக்கீடு செய்து, பயிர் சாகுபடி செய்ய ஆரம்பிக்குமுன் சரிபார்க்கவும்.

கால்வாய், சாக்கடை ஆகிய இடங்களின் அருகில் உரம் பரவலாக வீசுவதைத் தவிர்க்கவும்.

வேளாண் பூச்சிக்கொல்லி உபயோகத்திற்கான நன்னெறி மேலாண்மை முறைகள்

பூச்சி, களை மற்றும் நோயிலிருந்து பயிரையும் கால்நடைகளையும் பாதுகாக்க, பூச்சிக்கொல்லிகள் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சக, கணக்கெடுப்பின்படி, 70 சதவிகிதம் பூச்சிக்கொல்லி, வேளாண்மையிலும் மீதமுள்ள 30 சதவிகிதம் நகர்ப்புறம், தொழில்சாலை, காடுகள் மற்றும் பொதுத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இப்பூச்சிக் கொல்லிகள், வேளாண் விளைப்பொருள் உற்பத்தியை அதிகரிக்கவும், வேலையாட்களை குறைக்கவும் உபயோகிக்கப்படுகிறது. ஆயினும், தவறான வழிமுறையினால், மனித உடல் நலக் கேடும், வனவிலங்கு இழப்பும், தண்ணீரின் தரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இரசாயனத்தில் (முக்கிய குழுக்களான) பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மற்றும் பூஞ்சாணக்கொள்ளி ஆகியவை கருதப்படுகிறது. களைக்கொல்லிகளே வேளாண்மையில் அதிகமாக உபயோகிக்கப்படும் இரசாயனப் பொருளாகும், அதே சமயத்தில் நிலத்தடி நீரிலும் அதிகம் காணப்படும் நச்சுப் பொருளாகும். இருந்த போதிலும் மிகவும் துல்லியமாகக் கண்டறியும் முறைகள் மூலம் மிகக் குறைந்த அளவு நச்சுக்களே நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீரில் காணப்படுவதற்கு வாய்ப்புள்ளது. நகர்ப்புற வாசிகள் இந்நீரை பயன்படுத்துவதால், வேளாண் தொழில் செய்பவர்கள், நச்சுக் கலக்காத வண்ணம் தொழில் செயல்முறையை அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.

பண்ணை செயல்முறைக்கு பூச்சிக்கொல்லிகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகையால் மாசுபட்ட நிலத்தடி நீரை சுத்தம் செய்வது மிகக்கடினம், உற்பத்தியாளர் பூச்சிக்கொல்லி உபயோக முறையினை மதிப்பறிந்து நன்னெறி மேலாண்மை முறையைக் கையாளவேண்டும்.

பூசிக்கொல்லி உபயோக முறைகள்

வேளாண் செயல்முறைகள் பூச்சிக்கொல்லி உபயோகிப்பது ஒரு இன்றியமையாததாக இருந்த போதிலும், அநேக விவசாயிகள் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை கையாளுகின்றனர். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பூச்சிக்கொல்லி உபயோகத்தை வெகுவாக குறைத்து தரமான உணவுப் பொருள் உற்பத்தி செய்யவும், அதே சமயத்தில் அதிக இலாபமும் பெறலாம்.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்பது இராசயன பூச்சிக்கொல்லியுடன் கைவினை முறையும் உயிரி முறை கட்டுப்பாட்டையும் ஒருங்கிணைத்து பூச்சி மேலாண்மை செய்வதாகும். இம்முறையில் பொருளாதார சேதநிலையின் கீழ் பூச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்க, குறைந்த அளவு பூச்சிக்கொல்லியை உபயோகிக்க வலியுறுத்தப்படுகிறது. சரியான பூச்சிக்கொல்லியினை பூச்சித் தாக்குதல் அதிகம் காணப்படும் சமயத்தில் உபயோகிப்பதே சிறந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையாகும்.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையே நன்னெறி மேலாண்மை முறையின் முக்கியப் பூச்சி மேலாண்மை முறையாகும். அம்முறையின் சில செயல்முறைகள்

பூச்சி மற்றும் பூச்சி தின்னிகளின் தொகையை கண்காணித்தல்.

பூச்சித்தாக்குதலை தாங்கி வளரக்கூடிய பயிர் மற்றும் இரகங்களை தேர்ந்தெடுத்தல்.

நடவு மற்றும் அறுவடை தேதிகளை பூச்சித் தாக்காத வண்ணம் நியமித்தல்,

பயிர் சுழற்சி செய்தல்.

நன்மை தரும் பூச்சிகளையும், உயிரி கட்டுப்பாட்டு முறையையும் உபயோகித்தல்.

பூச்சிக் கட்டுப்பாட்டு முறையை மாற்றி ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையை செய்வதற்கு, பண்ணை வழிமுறைகளில் குறிப்பாக, உழவு முறை உரமிடுதல், பயிர்சுழற்சி முறை மற்றும் சுத்திகரிப்பு முறை ஆகியவற்றில் மாற்றம் தேவை. இவ்வாறு நடைமுறைப்படுத்த சில பரிசோதனைகளும், ஆராய்ச்சியாளர்களின் ஒத்துழைப்பும் தேவைப்படும்.

பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் முறைகள்

பூச்சிக் கட்டுப்பாடு செய்ய பூச்சிக்கொல்லி உபயோகிக்கும் போது, நீரின் தரம் பாதிப்படையாமல் பயன்படுத்தும் முறையைக் கையாளுவது மிகவும் முக்கியமாகும். பூச்சி மேலாண்மையில் சான்றிதழ்

பெற்றவராகவும், புதிய யுத்திகளை அறிந்தவராகவும் இருக்கவேண்டும். பூச்சிக்கொல்லிகளை தகுந்த நேரத்தில் சிறந்த கட்டுப்பாட்டு திறன் கிடைக்கும் சமயத்தில் உபயோகிக்க வேண்டும். பூச்சியின் பருவ சுழற்சி வெப்பத்தினாலும், ஈரப்பதத்திலும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அநேக நேரங்களில், பூச்சிகள் நடமாட்டமில்லாத / செயலற்ற நிலையில் இருக்கும் போது பூச்சிக்கொல்லி உபயோகம் நல்ல பலன் தராது.

நச்சுத்தன்மை குறைவாக உள்ள பூச்சிக்கொல்லிகளை பூச்சிக்கட்டுப்பாடு ஏற்படும் வகையில் உபயோகிக்க வேண்டும். இவ்வகை பூச்சிக்கொல்லிகள், சுற்றுச்சூழலில் சேரும் நச்சுத் தன்மையின் அளவு குறைகிறது. பூச்சிகளில் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்காமலிருக்க ஒரே வகுப்பைச் சார்ந்த பூச்சிக்கொல்லியின் உபயோகத்தை தவிர்க்கவேண்டும். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை ஒரே வகுப்பு அல்லது ஒரே வகை பூச்சிக்கொல்லியை சார்ந்திராது. எதிர் மறையான கால சூழ்நிலைகளில் அதாவது வேகமான காற்று, ஈரப்பதம் அதிகமுள்ள சமயத்தில் பூச்சிக்கொல்லி உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும். எளிதில் ஆவியாகக்கூடிய இரசயானப் பொருட்களான, 2, 4-டி எஸ்டர், மெதைல் பாரத்தியான் ஆகியவற்றை அதிக வெப்பமுள் சமயத்தில் உபயோகிக்கக்கூடாது.

வழிமுறை கொள்கைகள்

தேவையான சமயத்தில் பூச்சிக்கொல்லியினை சரியானப் பகுதிகளில் மட்டும் உபயோகிக்கவேண்டும்.

உபயோகிக்கும் முன்பு நல்ல பயிற்சி பெறவேண்டும்.

இராசயனக் கலவை செய்யும முன்பு பரிந்துரை / விதிமுறைத் தகவல்களை படித்து அறியவேண்டும்.

சரியான பூச்சிக்கொல்லியை பரிந்துரை செய்யப்பட்ட பயிறுக்கு மட்டும் உபயோகிக்கவேண்டும்.

பூச்சிக்கொல்லி உபயோகத்தை பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும்.

இரசாயன பூச்சிக்கொல்லி உபயோகிப்போர், அதை பயன்படுத்தும் முன், அந்நிலத்தின், பண்புகளை அதாவது மண்ணின் தன்மை, அங்ககப் பொருட்கள், நிலச்சரிவு மற்றும் நிலத்தடி நீர் போன்றவற்றின் தகவல் அறியவேண்டும்.

பூச்சிக்கொல்லி உபயோகத்தில் நன்னெறி மேலாண்மை முறைகள்

பூச்சிக்கொல்லி பிரயோகிக்கும் கருவிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும். பழுதான பாகங்களை அவ்வப்போது பழுது பார்த்து மாற்றவேண்டும்.

பூச்சிக்கொல்லி தெளிப்பவர்கள், முன்னரே தெளிக்கப்பட்ட இடங்களை அடையாளமிடவேண்டும்.

குறைந்த அளவு இரசாயனத்தைப் பயன்படுத்தி அதிகக் கட்டுப்பாட்டுத் திறனை தரும் முறைகளைக் கையாளவேண்டும்.

குறிப்பிட்ட / தேவையான இடத்தில் மட்டும் தெளிப்பதினால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதைத் தவிர்க்கலாம்.

தேவையற்ற நேரங்களில் உபயோகிப்பதை தவிர்க்கவும், மட்டுமல்லாது சரியான அளவை சரியான நேரத்தில், சரியான இடத்தில் தெளிக்கும் போது, மறுபடியும் உபயோகிக்க வேண்டிய அவசியமாகிறது.

மேற்பரப்பில் நீர் உள்ள இடங்களில், உபயோகிக்கும் போது, அதிக அளவும் காற்று அடித்துச் செல்லும் வகையிலும் இல்லாமல் கவனமாக உபயோகிக்க வேண்டும்.

இரசாயனப் பொருட்கள் உபயோகிக்கும் நேரத்தை சரியாக தெரிவு செய்யவேண்டும். மழைக்காலங்களிலோ, நீர்க்கசிவு ஏற்படும் போதோ, நீர் வழிந்தோடல் சமயத்திலோ தெளித்தல் நிலத்தடி நீரில் / தேவையற்ற பகுதிகளில் நச்சுத் தன்மை கலக்க வாய்ப்பு அதிகமாகும்.

பாதுகாப்பு வளையம் கிணறுகள், மேற்பரப்பில் உள்ள நீர் நிலைகளிலிருந்து 50 -100 அடி இடைவெளி விட்டு, இராசயனங்களை உபயோகிக்கவேண்டும்.

பாசன வாய்க்கால்களில் பின் நோக்கி பாய்வதைத் தடுக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதா என உறுதி செய்யவேண்டும்.

இரசாயனப் பொருட்களை பாதுகாக்க நன்னெறி வேளாண் முறைகள்

இராசயனப் பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை சரியாகப் படித்து அதைக் கடைப்பிடிக்கவேண்டும்.

வேலையாட்களின் உடல் பாகத்தில் படாதவாறு பாதுகாப்பு கவசங்கள் அணியவேண்டும்.

தற்செயலாக வேலையாட்களில் கைகளிலோ, கண்ணிலோ இரசாயனங்கள் பட்டால் உடனடியாக அதைக் கழுவவும். அவசர சிகிச்சை அளிக்கும் தகவல் மற்றும் பொருட்களை தயார் நிலையில் வைக்கவேண்டும்.

எதிர்பாராத விதமாக பூச்சிக்கொல்லி குடித்துவிட்டால், அவசர சிகிச்சை அளிக்க அருகில் உள்ள சிகிச்சை மையங்களில் தகவல்களை அறிதல் அவசியமாகும்

அதிக விளைச்சலில் நன்னெறி மேலாண்மை முறைகள்

தேவைக்கதிகமான வைக்கோல் அறுவடை செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறி மேலாண்மை முறைகள்

மண்அரிப்பதைத் தடுக்க, நிலத்தில் தேவையான அளவுப் பயிர் கழிவுகளை (அறுவடையின்போது நீளமான தாள்) விட்டு அறுவடை செய்வதாகும்.

நிலத்தில் அங்ககப் பொருட்கள் அதிகம் சேர்க்கும் வகையில் நிலத்தில் பயிர்க்கழிவுகளை சேர்க்கவேண்டும்.

மண் பரிசோதனை பரிந்துரையின் படி பயிருக்கு, தேவையான அளவு உரமிடவேண்டும்.

மண் அரிப்பைத் தடுக்கத் தேவையான தாளின் உயரமும், பயிர்க் கழிவுகளின் அளவும்.

உயரமான தாள்கள், காற்று மற்றும் நீரினால் ஏற்படும் மண் அரிப்பை தடுப்பதோடு பணியை உறிந்து, ஆவியாதலைத் தடுத்து மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. உயரமான தாள்கள், மண்ணில் ஈரப்பதத்தை அதிகரிப்பதால் விதைப் படுக்கையின் தன்மையை மேம்படுத்துகிறது. ஆகையால் விதைக்கும் கருவி சிக்காமல் இருக்குமாறு நீண்ட தாள்விட்டு அறுவடை செய்யலாம்.

பொதுவாக தாளின் உயரம் விதைக்கும் கருவியின் பார் இடைவெளியும் ஒன்றாக இருக்கலாம். விதைப்புக் கருவியின் பார் இடைவெளி 8-12 அங்குலமாக இருக்கும். ஆகையால், தாளின் உயரம் 12 அங்குலம் இருக்கலாம். நான்கு வரிசை கத்திகள் உள்ள நேரடி விதைப்புக் கருவியின் மூலம் அதன் பார் இடைவெளியில் ஒன்றரை மடங்கு உயரத் தாள்களிலும் விதைக்க முடியும். புதிய நேரடி விதைப்புக் கருவிகள் மூலம் மண்ணில் சிக்காமல் விதைக்க முடியும். அநேக வருடங்களில், மேலோட்டமான விதைப்பினால் சிறந்தப் பயிர் அடர்த்தியும், சீரான பயிர் வளர்ச்சியும் காணப்படுகிறது.

மெதுவாக விதைக்கும் கருவியை இயக்கும் போது மேலோட்டமாக மண்ணைகிளரி, குறைந்த பயிர் கழிவை மண்ணில் புதைக்கும். மண்ணில் ஊன்றி நிற்கும் தாள்கள் மண் அரிப்பைத் தடுக்க மிகவும் உதவும்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top