பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கிராமின் பந்தரன் யோஜனா

கிராமின் பந்தரன் யோஜனா (கிராமப்புறக் கிடங்குகள் திட்டம்) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன

கிராமப்புறக் கிடங்குகளுக்கான தேவைகள்

கிராமப் புறங்களில் உள்ள சிறு-குறு விவசாயிகள் தமது வினைபொருள்களுக்கு ஏற்ற விலை கிடைக்கும் வரை சேமித்து வைக்க கூடிய பொருதார பலம் அற்றவர்கள்.  எனவே கிராமப்புறங்களில் அவர்களது விளைப்பொருள்களைச் சேமித்து வைக்கக் கிடங்குகள் இருந்தால் அங்கே சேமித்துவைத்து, நல்ல விலை வரும்போது அவர்கள் தம்பொருள்களை விற்றுக்கொள்ளலாம்.  இந்த நோக்கத்தில்தான் மத்திய அரசு 2001 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து கிராமின் பந்தரன் யோஜனா என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

திட்டத்தின் நோக்கம்

விவசாய விளைபொருள்கள், பதப்படுத்தப்பட்ட விளைபொருள்கள், விவசாய இடுபொருள்கள், போன்றவற்றை விஞ்ஞான முறையில் சேதம் ஏற்படாமல் பாதுகாப்பாக வைத்திருந்து அவற்றை அடமானமாகக் கொடுத்துக் கடன் பெற உதவுவதும் நல்ல விலை வரும்போது விற்று கொள்ள உதவுவதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

சிறப்பம்சங்கள்

யார் யார் கிடங்குகளை கட்டலாம்?

கிராமப் புறங்களில் கிடங்குகளைக் கடடும் பணியை தனிமனிதர்கள் விவசாயிகள், விவசாயிகளின் குழுக்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், அரசு சாராத அமைப்புகள், சுய உதவிக்குழுக்கள், நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், மாநகராட்சி அல்லாத ஏனைய உள்ளாட்சி அமைப்புகள், வேளாண் வினைபொருள் விற்பனைக் குழுக்கள், வேளாண் பதப்படுத்தும் கழகங்கள், ஆகிய எவர் வேண்டுமானாலும் கிடங்குகளைக் கட்டலாம்.  இதற்கான நிதி உதவி இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இது தவிர கூட்டுறவு அமைப்புகள் ஏற்கனவே கட்டியுள்ள கிடங்குகளைப் புதுப்பிக்கவும் நிதிஉதவி அளிக்கப்படும்.

கிடங்குகள் அமைவிடம்

மாநகராட்சிகளின் எல்லைக்கு வெளியே எந்த இடத்தில் வேண்டுமானாலும் கிடங்குகளைக் கட்டலாம். மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில் அமைச்சகம் ஏற்படுத்தும் உணவுப் பூங்காக்களை கட்டப்படும் இடங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதிஉதவி கிடைக்கும்.

கிடங்குகளின் அளவு

கிடங்கினைக் கட்டுபவரே அதனுடைய அளவைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். எனினும் குறைந்தபட்சம் 100 டன் முதல் அதிகபட்சம் 10,000 டன் வரை கொள்ளவு கொண்ட கிடங்குகளுக்கு மட்டுமே நிதி உதவு அளிக்கப்டும். தேசியக்கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் உதவியோடு கூட்டுறவு அமைப்புகள் கட்டுகிற கிடங்குகளுக்கு மானிய உதவி பெற கொள்ளவில் உச்சபட்ச வரம்பு ஏதுமில்லை.

எனினும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியம் அல்லது மாநிலத்தின் இருப்பிடச் சுழலைப் பொறுத்து ஐம்பது டன் வரை கொள்ளவு கொண்ட கிடங்குகளுக்கும் மானிய உதவிகிடைக்கும். கடல் மட்டத்தில் இருந்த ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பிரதேசங்களில் 25 டன் வரை கொள்ளவு கொண்ட சிறியரக கிடங்குகளுக்கும் மானிய உதவி வழங்கப்படும்.

மானிய உதவியின் அளவு

வட கிழக்கு மாநிலங்கிளிலும், மலைப்பிரதேசங்களிலும் அமைக்கப்டும் கிடங்குகளுக்கும் விவசாயம் செய்யும் பெண்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஆதிதிராவிடர்/  பழங்குடியினர் மற்றும் அவர்களால் ஆன சுயஉதவிக்குழுவினர் ஆகியோர் அமைக்கும் கிடங்குகளுக்கும் மொத்தச் செலவில் மூன்றில் ஒரு பங்கு (33.33 சதவீதம்) மானியம் வழங்கப்படும்.  எனினும் இந்த இனத்தில் மானியத்தின் மொத்த அளவு ரூ.62.5 லட்சம் என்ற உச்ச வரம்பைத் தாண்டாது. தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் உதவியுடன் கூட்டுறவு அமைப்புகள் கட்டும் கிடங்குகளுக்கு மானியத்திற்கு உச்சவரம்பு கிடையாது. மொத்த செலவில் மூன்றில் ஒரு பங்கு மானியமாகத் தரப்பட்டுவிடும்.

பெண்கள் தவிர்த்த மற்ற விவசாயிகள் வேளாண் பட்டதாரிகள், கூட்டுறவு அமைப்புகள் மத்திய / மாநில கிடங்குக் கழகங்கள் போன்றவை மேற்கொள்ளும் கிடங்கு கட்டுமானத்திள் மூலதனச் செலவில் 25 சதவீதம் மானியம் தரப்படும்.  இந்த இனத்தில் மொத்த மானிய அளவிற்கு உச்சவரம்பு ரூ.46.87 லட்சம்.

மேற்குறிப்பிட்ட இரண்டு வகையினரைத் தவிர்த்து மற்ற தனிநபர்கள், நிறவனங்கள் போன்றவற்றுக்குக் கிராமப்புறங்களில் கிடங்குகள் கட்ட மூலதனச் செலவில் 15 சதவீதம் மானியம் அளிக்கப்படும்.

கூட்டுறவு அமைப்புகளில் கிடங்குகளையும் புதுப்பிப்பதற்கு 25 சதவீதம் மானிய உதவி தரப்படும்.

  • மானிய உதவியைக் கணக்கிடுதல்
  • 1000 டன்கள் வரை கொள்ளளவு கொண்ட கிடங்குகளுக்கு, நிதி உதவி அளிக்கின்ற வங்கி மதிப்பிட்டுள்ள படி அல்லது உள்ளபடியே ஆன செலவுகணக்கில் எடுத்துக் கொள்ளப்டும்.  இல்லையெனில் ஒரு டன் கொள்ளளவுக்கு ரூ.2500 என்று செலவு கணக்கிடப்படும்.  இந்த மூன்றில் எது குறைவோ அதன்படி மானியம் தரப்படும்.
  • 1000 டன்களுக்கு அதிகமான கொள்ளளவு கொண்ட கிடங்குகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ.1875 என்று செலவு கணக்கிடப்படும். எனினும் 10,000 டன்களுக்கு மேற்பட்ட கொள்ளளவு கொண்ட கிடங்குகளுக்கு உச்சவரம்பு அளவான பத்தாயிரம் டன் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
  • தேசியக் கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் உதவியுடன் கூட்டுறவு அமைப்புகள் மேற்கொள்ளும் கிடங்கு புதுப்பிப்புப்பணிகளுக்கு ஒரு டன் கொள்ளளவிற்கு ரூ. 625 செலவாகும் என்று வைத்துக் கொண்டு மானிய உதவி தரப்படும்.
  • எந்த ஒரு கிடங்கு கட்டுவதற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் இருந்து மானியம் பெற முடியாது.
  • ஒரு கன மீட்டர் கொள்ளளவு 0.4 டன் என்று கணக்கிடப்படும்.

ஆதாரம் : AGMARKET இணையதளம், வேளாண்துறை அமைச்சகம்

3.03883495146
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top