பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பயிர் காப்பீடு திட்டம்

பயிர் காப்பீடு திட்டம் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்த விவசாயி தன் வயலில் அறுவடை செய்து களத்தில் வைத்திருந்த பயிர், புயல் அல்லது மழை காரணமாக அழிய நேரிட்டால் அடுத்த 48 மணி நேரத்துக்குள் பயிர் காப்பீட்டு அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏற்பட்ட சேதத்துக்கு ஏற்ப இழப்பீடு கிடைக்கும்.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள ஒரு விவசாயி, தன் வயலில் சாகுபடி பணிகளைத் தொடங்கிய பிறகு, போதுமான மழை இல்லாதது அல்லது அதிக மழை காரணமாக விதைப்பு அல்லது நடவுப் பணியைத் தொடர முடியாமல் போனால், பயிர் காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகை வழங்கும்.

அதிக மழை அல்லது அதிக வறட்சி அல்லது பிற இயற்கை சீற்றங்களால் பயிர் சாகுபடி பாதித்து, மகசூல் பாதிப்பு 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கும் என தெரிய வந்தால், 25 சதவீத காப்பீட்டுத் தொகை முதலில் வழங்கப்படும். மகசூல் இழப்பீடு பற்றி துல்லியமாக இறுதி மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு மீதி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

இதற்கு முன்னர் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. அந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வந்தன.

இந்த ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் மேம்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகை முழுவதையும் தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனமே வழங்கிட வேண்டும்.

ஆதாரம் : வணிகம் (தி இந்து)

2.94805194805
Arun Jul 31, 2020 01:43 AM

ஒவ்வொரு திட்டத்தின் கீழும் அதற்கான படிவத்தை பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும்

பாண்டியன். DNJ Jul 29, 2020 03:43 PM

நிங்கள் ஒருவர் பாதித்தாலும் இழப்பிடு வழங்கலாம் என்று சொல்கின்றனர்கள் ஆனால் நாங்கள் வேளாண்மை துறையே தொடர்பு கொண்டு சொன்னால் மொத்த பீர்கா விலும் அழிவு இருந்தால் தான் இழப்பிடு தனி நபரின் வயலுக்கு கிடையாது என்று சொல்கின்றனர்கள் ஆக பாதிப்பது விவசாயி தான்..

ந.அசோக்குமார் Jun 24, 2020 07:08 PM

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் ராஐபுளியேந்தல் கிராமம் எங்கள் தகப்பனார் இல்லை இறந்து விட்டார் அம்மா பெயரில் இதுவரை விவசாய இலப்பீடு காப்பீடு தொகை பெற்று வந்தோம் 2019 கான இலப்பீடு எங்கள் ஊரில் அனைவரும் பெற்று விட்டனர் ஆனால் எங்களுக்கு இன்னும் வரவில்லை என்கிறார்கள் நான் அதற்க்கான காரணம் எப்படி அறிவது

K.Durai Raj Mar 31, 2020 10:28 AM

பயிர் காப்பீட்டுத் திட்டம் மூலம் பயனடைய வேண்டும்

Anonymous Nov 11, 2019 11:23 AM

என்னுடைய நிலத்தில் சாகுபடியாக மக்காசோளம் பயிரிட்டுள்ளேன். அதில் காட்டுப்பன்றி & மான்களின் வருகையால் 2 ஏக்கர் பயிர்கள் நாசம் ஆகிவிட்டது. என்ன செய்வது புரியவில்லை. இதுபோல எங்கள் ஊரில் பாதிக்கப்பட்டோர் அதிகம்பேர். நாங்கள் என்ன செய்ய

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top