பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / பயிர்கள் தொடர்பானவை / பிரதமரின் விவசாயச் செல்வம் திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பிரதமரின் விவசாயச் செல்வம் திட்டம்

பிரதமரின் விவசாயச் செல்வம் திட்டம் (பிரதான் மந்திரி கிஸான் சம்பதா யோஜனா) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

வேளாண் கடல்சார் பதனப்படுத்தல் மற்றும் வேளாண் பதப்படுத்துதல் மையங்களை மேம்படுத்துதலுக்கான திட்டம் 'சம்பதா' என்று அழைக்கப்படுகிறது. (SAMPADA- Scheme for Agro-marine Processing and Development of Agro processing clusters). 2017 ஆம் ஆண்டு மே மாதம் மத்திய அமைச்சரவை ஏற்பளித்த இந்தத் திட்டம்,  14 ஆவது நிதி ஆணையச் சுழற்சி முடிவடையும் 2020 ஆம் ஆண்டில் நிறைவு பெறும்.

மத்திய அரசு தற்போது செயல்படுத்திவரும் பிரம்மாண்ட உணவு பூங்காத்  திட்டம்., ஒருங்கிணைந்த குளிர்பதன மற்றும் மதிப்புக் கூட்டுக் கட்டமைப்பு,  உணவுப் பாதுகாப்பு மற்றும் தர உத்தரவாதக் கட்டமைப்பு போன்ற திட்டங்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்துள்ள ஏற்பாடுதான் பிரதான் மந்திரி கிஸான் சம்பதா யோஜனா ஆகும். மேலும், வேளாண் பதப்படுத்தும் மையங்களுக்கான கூட்டமைப்புகளை ஏற்படுத்துதல்,  அவற்றுக்கு முன்னும் பின்னுமான இணைப்பு வசதிகளை உருவாக்குதல்,  உணவுப் பதனம் மற்றும் சேமிப்பிற்கான புதிய வசதிகளை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள வசதிகளை விரிவாக்குதல் போன்ற புதிய திட்டங்களும் இத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன.

நோக்கமும் திட்டங்களும்

வேளாண் துறையின் துணைத் தொழில்களை வலுப்படுத்துவதும், வேளாண் சரக்குகளைப் பதனப்படுத்துவதை நவீனமயமாக்குவதும், வேளாண் கழிவுகளைக் குறைப்பதும் இத்திட்டத்தின் நோக்கங்களில் முக்கியமானவை ஆகும். அதன்படி கீழ்கண்டவாறு இத்திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.

 • பிரம்மாண்ட உணவு பூங்காக்களை உருவாக்குதல்.
 • ஒருங்கிணைந்த குளிர்பதனம் மற்றும் மதிப்புகூட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல்
 • உணவுப் பதனம் / சேமிப்புக்கான திறன் வசதிகளைப் புதிதாக உருவாக்குதல் ஏற்கனவே உள்ளவற்றை விரிவாக்குதல்.
 • உணவுப்பதிப்படுத்தும் தொழில்கள் செறிந்துள்ள பகுதிகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்குதல்.
 • உணவுப் பதத்தை தொழில்களுக்கு முன்னும் பின்னுமாகத் தேவையாக உள்ள இணைப்பு வசதிகளை உருவாக்குதல்.
 • உணவுப் பாதுகாப்பு மற்றும் தர உத்தரவாதத்திற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துதல்.
 • இத்துறைக்கு வேண்டிய மனிதவளத்தை உருவாக்குவதும் அதற்கான நிறுவனங்களை ஏற்படுத்துவதும்.

நிதி ஒதுக்கீடும் ஏற்படும் பயன்களும்

பிரதான் மந்திரி கிஸான் சம்பதா யோஜனாவுக்கு ரூ.6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இத்துறையில் சுமார் ரூ.31,400 கோடி அளவிற்கு முதலீடுகள் செய்யப்படும். இந்த முதலீட்டினால் ஏற்படக்கூடிய வசதிகளைக் கொண்டு,  ரூ.1,04,125 கோடி  மதிப்புள்ள,  334 லட்சம் டன் எடை கொண்ட வேளான் பொருட்கள் உணவுப்பதனத் துறையில் கையாளப்படும். இதனால் சுமார் 20 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர். இத்துறையில் வரும் 2019-20 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக சுமார் 5,30,500 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தாக்கம்

 • பண்ணையின் வாயிலில் இருந்து, சில்லறை விற்பனை நிலையம் வரை சீரான சரக்கு விநியோகத்திற்கான நவீன கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
 • நம்நாட்டின் உணவுப் பதப்படுத்தும் தொழில் துறையின் வளர்ச்சிக்குப் பெரிய உத்வேகம் கிடைக்கும்.
 • விவசயிகளின் உற்பத்திச் சரக்குகளுக்கு மேலான விலைகிடைக்க உதவும். அது விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும் நோக்கத்தின் தொடக்கப்புள்ளியாக விளங்கும்.
 • கிராமப்புறங்களில் பெருமளவிற்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
 • விவசாய உற்பத்திச் சரக்குகள் வீணாவது குறையும். பதனப்படுத்தும் அளவுகள் பெருகுவதால், சௌகரியமான பதனப்பொருட்கள் மலிவு விலையில் நுகர்வோருக்குக் கிடைக்கும். மேலும், பதனப் பொருள்களின் ஏற்றுமதியும் பெருகும்.

ஆதாரம் : http://mofpi.nic.in/

2.95762711864
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top