பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒருங்கிணைந்த மீன் உடனான பசு வளர்ப்பு

ஒருங்கிணைந்த மீன் உடனான பசு வளர்ப்பு பற்றிய குறிப்புகள்.

மீனுடனான பசு வளர்ப்பு நெடுங்காலமாக நம் நாட்டில் செயல்முறையில் உள்ளது. இவை மீன் உடனான பசு வளர்ப்பை ஒருங்கிணைக்கும் ஒரு பொதுவான ஒருங்கிணைப்பு வடிவமாகும்.

பசுவளர்ப்பு அதிக அளவு உரத்தை சேமிக்கவும், மீனின் உணவு பயன்பாட்டை பூர்த்தி செய்யவும் மற்றும் பால் உற்பத்தி மூலம் வருமானத்தை அதிகரிக்கவும் செய்கிறது.

ஒரு மீன் விவசாயி பணத்தை மட்டும் ஈட்டுவதில்லை மாறாக பால், மீன் மற்றும் மாடு இறைச்சி ஆகியவற்றையும் விநியோகிக்கிறார்.

குள மேலாண்மை செயல்முறைகள்

  • பசு சாணமானது மீன்களின் வளா்ச்சிக்கு உரமாக பயன்படுகிறது. சராசரியாக 5000 முதல் 10,000 கி.கி என்ற அளவில் 1 ஹெக்டேருக்கு தகுந்த இடைவெளியில் குளத்திற்கு அளிக்கப்படுகிறது.
  • பசு கொட்டகையை சுத்தம் செய்த பிறகு சாணம் கலந்த கழிவு நீர் சிறுநீர் மற்றும் பயன்படுத்தப்படாத மீதமான உணவு பொருட்கள் குளத்தில் சேர்த்து விடலாம்.
  • மாட்டுச் சாணமானது மிதவைகள் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இவை மீனுக்கு உணவாகப் பயன்படுகிறது.

கால்நடை வளர்ப்பு முறைகள்

  • மாட்டுக் கொட்டகை மீன்குளத்தின் அருகிலோ அல்லது அதன் கரை பகுதியிலே கட்ட வேண்டும்.
  • உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மாட்டுக் கொட்டகையை கட்டலாம். தரையானது சிமெண்டினால் பூசப்பட்டிருக்க வேண்டும்.
  • மாட்டுக் கொட்டகையின் கழிவுகள் மீன்குளத்தை அடையும் வண்ணம் அதன் வெளிபுறகுழாய் (அ) கால்வாய் குளத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
  • பசுவின் சாகுபடி வகைகள்: கருப்பு மற்றும் வெள்ளை (பால்), குறுகிய கொம்பு (இறைச்சி), சிம்மென்தல் (பால் மற்றும் இறைச்சி), ஹியர்போர்டு (இறைச்சி), சாரோலை (இறைச்சி), மற்றும் குயின்குவான் (இறசை்சி).

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

2.95145631068
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top