பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / ஒருங்கிணைந்த பண்ணை முறை / ஒருங்கிணைந்த மீன் மற்றும் பன்றி வளர்ப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒருங்கிணைந்த மீன் மற்றும் பன்றி வளர்ப்பு

ஒருங்கிணைந்த மீன் மற்றும் பன்றி வளர்ப்பு பற்றிய குறிப்புகள்.

மீன் – பன்றி பண்ணை மூலப்பொருள் ஆய்வு

மீன் குட்டை அருகில் அல்லது மீன் குளத்தின் மேல் பன்றி கொட்டகை அமைத்து பன்றி வளர்ப்பதால் அதன் கழிவுகளை உலர்ந்த நிலையில் நேரடியாக குளத்தில் கலக்கலாம். இந்த முறை மிகுந்த நன்மையளிக்கும்.

  • பன்றி சாணம் சிறந்த உரமாக குளத்திற்கு பயன்படுகிறது மற்றும் உயிரியல் உற்பத்தியை குளத்தில் ஏற்படுத்துகிறது இதனால் மீன் உற்பத்தியும் அதிகரிக்கிறது.
  • பன்றியின் எச்சங்களில் 70 சதவீதம் எளிதில் செரிமானத்திற்கு உகந்த உணவாக இருப்பதால் சில மீன்கள் நேரடியாக உணவாக எடுத்துக் கொள்கின்றன.
  • இணை உணவு எதுவும் தேவையில்லை. பொதுவாக வழக்கமாக மீன் வளர்ப்பில் ஏற்படும் செலவில் 60% உள்ளீடு செலவு தேவைப்படுகிறது.
  • குளத்தின் அகழிகளில் உள்ள இடம் பன்றிக்கான கொட்டகை நிறுவுவதற்கு போதுமானதாக இருக்கும்.
  • குளத்தின் நீரை பன்றிகளை சுத்தம் செய்ய மற்றும் குளிக்க பயன்படுத்தலாம்.
  • பொருளாதாரத்தில் பலவீனமாக உள்ள கிராமப்புற சமூகங்களை மேம்படுத்தவும், குறிப்பாக பாரம்பரியமாக பன்றிகளை வளர்க்கும் பழங்குடியின மக்களிடையே மீன்- பன்றி வளர்ப்பு பண்ணையை எளிதில் ஆரம்பிக்கலாம்.

வளர்ப்பு முறைகள்

1000 சதுர மீட்டர் அளவில் குளத்தை நம் வீட்டிற்கு அருகில் இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மீன் மற்றும் பன்றிகள் திருடு போகாமல் பார்த்துக் கொள்ள முடியும். அகழிகளை சரிபார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். குளத்தின் ஆழம் அதிகமாக இருந்தால் தான் வறட்சி காலத்தில் குளத்தின் ஆழம் 1 மீட்டர்க்கு குறையாமல் தண்ணீர் இருக்குமாறு பார்த்து கொள்ள முடியும்.

குளம் அமைத்தல்

அனைத்து களைகள் மற்றும் மீதமுள்ள மீன் வகைகளை குளத்திலிருந்து நீக்கிவிட்டு குளம் மற்றும் வாய்க்காலை நன்கு காய விட வேண்டும். குளத்தை காய விடுவது சாத்தியம் இல்லையென்றால், 1000 சதுர மீட்டர் குளத்திற்கு பிளிச்சிங் பவுடர் மற்றும் யூரியா கலந்த கலவை 15 கிலோவை குளத்தில் இட்டு அனைத்து மீன்களையும் அழித்துவிட வேண்டும். மாற்றாக, 250 கிலோ இலுப்பை பிண்ணாக்கை குளத்திற்கு  கொடுப்பதன் மூலம் அனைத்து மீன்கள் இறந்துவிடுவதுடன் இவை குளத்திற்கு கரிம உரமாகவும் செயல்படும். பன்றிகள் வாங்கும் முன்னே மீன் குளத்தில் மீனை இருப்பு வைக்க வேண்டும். இதனால் குளத்திற்கு அடியுரம் தேவை.

இருப்பு வைத்தல்

மீன்குஞசுகளை 7 நாட்களுக்கு பிறகு தான் குளத்தில் விட வேண்டும் பிளீச்சிங் பவுடர் நச்சு நீங்குவதற்காக இந்த நாட்கள். மீன் குஞ்சுகளை இருப்பு வைப்பதற்கான விகிதம்:

உள்ளூர் தேவைகளை பொறுத்து,  இருப்பு வைக்கப்படும் இனங்களின் விகதம் அமைய வேண்டும். புற்கெண்டை என்ற மீன் தொடர்ந்து குளத்தில் விடுவதால் அவை குளத்தில் உள்ள  பாசிகளை உணவாகக் கொள்ளும். சரியான கால இடைவெளியில் சுண்ணாம்பு கலவை தெளிக்க வேண்டும். இதன்  மூலம் கரிமப்பொருள் நிலைப்பாட்டை உறுதிசெய்யலாம். ஒரு வருடத்திற்கு சுமார் 25 கிலோ சுண்ணாம்பு தேவைப்படுகிறது. அறுவடை பன்றிகளினால் மீன் குளத்திற்கு இயற்கை உணவு மிகுதியாக கிடைக்கும் காரணத்தினால், மீன் சில மாதங்களுக்குள்ளேயே சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற அளவை அடைகிறது. பகுதி அறுவடை மீன் வளர்ச்சியை பொறுத்து மூன்று முறை செய்ய வேண்டும். இறுதி அறுவடை 10 - 12 மாதங்களுக்கு பிறகு செய்ய வேண்டும்

பன்றி வளர்ப்பு

குளத்திற்கு தேவையான எண்ணிக்கையில் பன்றிகளை வளர்க்க வேண்டும். 1000 சதுர மீட்டர் குளத்திற்கு உரமாக மூன்று பன்றிகளின் சாணம் போதுமானதாக இருக்கும். எனவே மூன்று பன்றிகள் 0.1 ஹெக்டேர் குளத்திற்கு வளர்க்கலாம். 5-6 மாதங்களான பிறகு இறைச்சிக்காக பன்றிகளை வெட்டும் அளவிற்கு வந்துவிடும் மற்றும் இந்திய கவர்ச்சியான கெண்டை மீன் 10-12 மாதங்களில் வளர்ந்துவிடும், ஒரு பங்கு மீனிற்கு இரண்டு பன்றிகள் வளர்க்கலாம். பன்றிக் கொட்டிலை குளத்தின் கரையோரமாகவும், கொட்டிலின் கழிவு நீர் முழுவதும் குளத்தை வந்தடையுமாறும் வாய்க்கால் அமைக்க வேண்டும். மற்றொரு வாய்க்கால் தேவையற்ற கழவுகள், பாசிகள் இவற்றை கொண்டு செல்ல அமைக்க வேண்டும். பன்றிக் கொட்டிலை கழுவும் நீரை குளத்தில் சூரிய உதயத்திற்கு பிறகு விடுவதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தவிர்க்கலாம். பன்றிக்கொட்டிலை மலிவாக கிடைக்கும் பொருட்களை கொண்டு அமைக்கலாம், ஆனால் தரைதளம் சிமெண்ட் கொண்டும் அதை சற்று சாய்வாக குளம் நோக்கியும் அமைக்க வேண்டும். ஒவ்வொரு பன்றிக்கும் 1-1.5 சதுர மீட்டர் தரைதளம் ஒதுக்க வேண்டும்.

மீன் பன்றி வளர்ப்பு நடவடிக்கைகள் அட்டவணை

ஆகஸ்ட்

குளம் அமைத்தல், கொட்டில் அமைத்தல், பன்றிகள் வளர்த்தல்

செப்டம்பர்

மீன்குஞ்சுகளை இருப்புவைத்தல், பன்றிகளை நன்றாக பாதுகாத்தல்

அக்டோபர்

பன்றிகள் மற்றும் மீன் வளர்ப்பை பாதுகாத்தல்

நவம்பர்

பன்றிகள் மற்றும் மீன் வளர்ப்பை பாதுகாத்தல்

டிசம்பர்

முதல் பகுதி மீன் அறுவடை

ஜனவரி

முதல் பகுதி பன்றிகள் அறுவடை

பிப்ரவரி

இரண்டாம் பகுதி பன்றிகள் பருமனாக்குதல்

மார்ச்

இரண்டாம் பகுதி மீன்கள் அறுவடை

ஏப்ரல்

பன்றிகள் மற்றும் மீன்கள் நன்கு பருமனாக்குதல்

மே

மூன்றாம் பகுதி மீன்கள் அறுவடை

ஜீன்

பன்றிகள் மற்றும் மீனை இறுதி அறுவடைக்கு தயார் செய்தல்

ஜீலை

இறுதியாக மீன் மற்றும் இரண்டாம் தொகுப்பு பன்றிகளை அறுவடை செய்தல்

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

3.05940594059
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top