பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / காட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை

காட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறைகள் பற்றிய குறிப்புகள்

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகள்

  • காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முதன்மையான காரணமாகக் கருதப்படுவது காட்டுப் பன்றியினை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும் விலங்குகளான ஓநாய், சிறுத்தை, காட்டு நாய், நரி, புலி போன்றவைகளின் எண்ணிக்கை நாள்படக் குறைந்து வருவதே ஆகும்.
  • இதுமட்டுமின்றி ஒரு காட்டுப் பன்றி ஒரு முறை குட்டி ஈனும்போது கிட்டத்தட்ட 6 முதல் 12 குட்டிகளை ஈனுகிறது.  மேலும், காட்டின் இயற்கை வளங்கள் மனிதர்களால் அதிகமாகச் சுரண்டப்படுவதால் காட்டுப் பன்றிகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களைச் சார்ந்து வாழத் தொடங்குகின்றன. வேளாண் பயிர்களான நெல், சோளம், தானியங்கள் மட்டுமல்லாமல் காட்டுப் பன்றிகள் நிலத் தாவரங்கள், பழத்தோட்டங்களைப் பாதிப்படையச் செய்கின்றன. மேலும், சில நோய்களைப் பரப்பும் காரணிகளாகவும் செயல்படுகின்றன.
  • காட்டுப் பன்றி மனித மோதல் மற்ற விளைநிலங்களைக் காட்டிலும் காட்டுப் பகுதிகளைச் சுற்றியுள்ள நிலங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்தியாவில் காட்டுப் பன்றிகளால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் மாநிலங்கள் இராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகும்.  தமிழகத்தில் கிட்டதட்ட 150க்கு மேற்பட்ட காட்டுப்பன்றி மனித மோதல் நிகழ்வுகள் வருடந்தோறும் நிகழ்கின்றன.  தமிழகத்தில் கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, சேலம் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் காட்டுப் பன்றி மனித மோதல்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • இந்தச் சிக்கலைச் சமாளிக்கப் பல வகையான வழிமுறைகளை விவசாயிகள் கடைப்பிடித்து வருகின்றனர்.  ஒரு இடத்தில் கடைப்பிடிக்கப்படும் முறை மற்றொரு இடத்தில் தெளிய வாய்ப்பில்லாததால், இந்தியாவில் பெருவாரியான விவசாய மக்கள் காட்டுக் பன்றி மனித மோதலைத் தடுக்கக் கடைப்படித்து வரும் பாரம்பரிய வழிமுறை இங்கே அளிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய வழிமுறை

  • பொதுவாகக் காட்டுப் பன்றிகளுககுப் பார்வை மற்றும் செவித்திறன் மிகவும் குறைவு.
  • இதை ஈடுசெய்யும் வகையில் அவற்றிற்கு மோப்பத்திறன் அதிகமாகும்.  ஆகவேதான் இது நெடுநேரம் தலைகுனிந்தே நீண்ட மூக்கினைத் தரையில் முகர்ந்து தான் விரும்பும் திசையில் பயணிக்கும்.
  • இந்தக் குணத்தினைக் கருத்தில் கொண்டு, காட்டுப் பன்றிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முடிதிருத்தும் கடையிலிருந்து மனித முடிகளைப் பெற்று விவசாயப் பயிர்களைச் சுற்றி வேலிப் போல் மெலிதான கோடுபோல் பரப்பி வருகின்றனர்.
  • இந்த முடி பரப்பப்பட்ட இடங்களில் காட்டுப்பன்றி வரும்போது, அவை தன் மூக்கினால் அவ்விடத்தை நுகரும் போது இந்த மனித முடிகள் பன்றிகளின் நாசித் துவராங்களில் சென்றடைந்து எரிச்சலை உருவாக்கும்.  இதன் மூலம் அவை பாதிப்புக்குள்ளாகி, அபாயக் குரல் ஏற்படுத்தும்.  அது மற்ற காட்டுப் பன்றிகளையும் சேர்த்து விரட்டும்.  பல்வேறு விவசாயிகள் இந்த முறையைப் பயன்படுத்தி வருகின்றனர்.  இது காட்டுப்பன்றிகளை 40 – 50 விழுக்காடு வரை கட்டுப்படுத்துகின்றது.
  • மேலை நாடுகளில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதன் மூலம் காட்டுப்பன்றி மனித மோதல்களைச் சமாளித்து வருகின்றனர். மற்ற ஆசிய நாடுகளான பாகிஸ்தான், பூடான் ஆகிய நாடுகளில் விவசாயிகள் காட்டுப் பன்றியை விஷம் வைத்துக் கொள்கின்றனர்.  இவற்றில் எந்த முறையையும் இந்தியாவில் பின்பற்ற முடியாது.  அவ்வாறு பின்பற்றினால் “வனவிலங்குப் பாதுகாப்பு சட்டம் - 1972”  கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.  ஆகவே விவசாயிகள் இந்தப் பாரம்பரிய வழிமுறையைக் கடைப்படிப்பதன் மூலம் மனித – காட்டுப்பன்றி மோதல்கள் ஏற்படாதவாறு தடுக்கலாம்.

ஆதாரம் : கால்நடைக்கதிர்

2.95402298851
Sugumar Feb 08, 2019 06:04 PM

Good information

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top