பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / கால்நடை மற்றும் எருமை வளர்ப்பு / கால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத்தளம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத்தளம்

கால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத்தளம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

கால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத்தளமானது ஆய்வகத்தில் கண்டறியப்படும் ஆராய்ச்சி முடிவுகளை விவசாயிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக மைய அரசின் உயிர்த் தொழில் நுட்பவியல் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.

இந்த பயன்பாடுசார் பரிமாற்றத் தளத்தின் தொலைநோக்குக் குறிக்கோள் மற்றும் ஆணைகள் கீழே வரையறுக்கப்பட்டுள்ளன.

தொலைநோக்கு

தற்போது தனித்தனியாக இயங்கும் கல்வி ஆராய்ச்சித் தொழில்துறை மற்றும் வரையறுக்கப்பட்ட நெறிமுறை இயக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கால்நடை உயிரியல் சார்ந்த பொருள்களைச் சந்தைப்படுத்துதல்.

குறிக்கோள்

கால்நடைகளுக்கான தடுப்பூசி நோய்ப் பரிசோதனை முறைகள் மற்றும் பிற உயிரியல் பொருள்களைச் சந்தைப்படுத்தல் மூலம் கால்நடைகளின் நலனையும் உற்பத்தித் திறனையும் அதிகரிப்பதால் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தல்.

ஆணைகள்

• சந்தைப்படுத்தக்கூடிய உத்திகளை நெறிமுறைகளுக்குட்பட்ட உற்பத்தி மற்றும் சரிபார்க்கும் முறைமைகள் மூலம் சந்தைப்படுத்த ஏதுவாக்குதல்.

• நெறிமுறைகளுக்குட்பட்ட உயிர்த் தொழில்நுட்பச் சேவைகள் மற்றும் உதவிகளைத் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்குதல்.

• கால்நடை உயிரியல் துறையில் அறிவு மற்றும் தகவல் மையமாக விளங்குதல்

மேற்கூறிய குறிக்கோள் மற்றும் ஆணைகளை நிறைவேற்றும் பொருட்டும் தொழில்நுட்பங்களை மக்களிடம் சேர்ப்பதற்காக ஆறு வகையான வழிமுறைகளை இப்பரிமாற்றத்தளம் உருவாக்கியுள்ளது.

1. ரீலே முறை : ஆராய்சசி முடிவுகளைச் சமர்ப்பதித்தால் அந்த முடிவுகளை ஒழுங்குமுறை இயக்கத்தின் தேவைக்கேற்பச் சரிபார்த்துத் தொழில்நுடபப் பரிமாற்றம் செய்யப்படும்.

2. கட்டணச் சேவைமுறை : தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப அவர்களின் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட உயிரியல் தயாரிப்புகளை ஒழுங்குமுறை இயக்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட தரப் பிரிசோதனை செய்து தரப்படும்.

3. கூட்டு முயற்சி : நிறுவனங்கள் மற்றும ஆராய்ச்சிக் கூடம் ஒன்றிணைந்து ஆராய்ச்சி மேற்கொள்வது.

4. நேரடி விற்பனை : ஆராய்ச்சிப் பொருள்களைப் பண்ணையாளர்கள் மற்றும் சிறிய தொழில்முனைவோர்களுக்கு விற்பது.

5. தொழில் நுட்ப காப்பு முறை : ஆராய்ச்சிக் கூடத்தில் இடமிளத்து உபகரணங்களை உபயோகிக்க அனுமதிப்பது.

6. உயிர்த் தொழில்நுட்பச் சேவை : நுகர்வோரின் தேவைக்கேற்ப உயிர்த்தொழில் நுட்பச் சேவைகள் வழங்குதல்.

இவ்வாறு பலமுனை முயற்சியோடு ஆராய்ச்சிப் பலனை விவசாயிகளுக்கு அளிப்பதில் இந்தப் பயன்பாடுசார் பரிமாற்றத்தளம் முன்னோடியாகச் செயல்பட்டு வருகிறது.

இத்தளத்தில் உருவாக்கப்பட்ட பொருள்களின் பட்டியல்

1. எ.பி.டி சாய்ஸ் : இது மடிவீக்க நோய்ச் சிகிச்சைக்கான சரியான ஆன்டிபயாடிக். இதைக் களத்திலேயே உபயோகிக்க முடியும். மேலும் இது கால்நடை மற்றும் மனிதர்களில் ஏற்படும் ஆண்டிபயாடிக் எதிர்ப்புப் பிரச்சனையைத் தடுக்க உதவும்.

2. எண்டோமெட் - பி : இந்த இனப்பெருக்கப் புரோபயாட்டிக். கண்டறிய இயலாத கால்நடைகளின் கருப்பை அழற்சிகைக் குணப்படுத்த உதவும். மேலும் இதனால் ஆன்டிபயாடிக் எதிர்ப்புப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

3. கால்நடை மற்றும் காட்டுவிலங்கின காச நோய் கண்டறியும் கலன் : இது பக்கவாட்டு ஒழுக்கமுறையிலான கலன் ஆகும். இது நவீன  இனக்கலப்பு முறைமையிலான புரதங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது காச நோயை மாடுகளில் கண்டறிய உதவும்.

4. கோலாஜன் அடிப்படையிலான காயங்களைக் குணப்படுத்தும் களிம்பு: இது கொலாஜன் - குர்குமின் ஜெல்லை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பம் சிஹில் பார்மா சென்னை நிறுவனத்தாருக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் களிம்பு நாட்டில் உள்ள எல்லாச் செல்லப் பிராணிகளுக்கான கடைகளிலும் கிடைக்கிறது.

5. பயோமெடிக்கல் கருவிகள் : கீழ்க்கண்ட பயோமெடிக்கல் கருவிகள் டி.ஆர்.பி.வி.பியில் உருவாக்கப்பட்டுள்ளன.

• சிறிய நிலைக்காப்பகம் (ஏபிடி சாய்ஸ்க்கானது)

• சிறிய லாம்ப் சோதனை முறைக்கான கருவிகளப் பயன்பாட்டிற்கானது

• சிறிய ஒற்றை அலைநீளம்கொண்ட ஒளிச்சிதைவுக் கருவி

6. நானோ தடுப்பு மருந்து : ஒரு நானோ தொழில்நுட்பத்தாலான வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்பு மருந்து மையத் தொழில்நுட்பவியல் துறையின் ஆராய்ச்சி நிதி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை உரிமம் ஹெஸ்டெர் பார்மசூடிகல்ஸ் லிட் அகமதாபாத் நிறுவனத்தாரால்  பெறப்பட்டுக் களப் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.

உரிமம் பெறப்பட்டவுடன்  இது இந்தியாவிலேயே முதல் நானோ தொழில்நுட்பத் தடுப்பு மருந்தாக அமையும். இது பாரம்பரியமான தடுப்பு மருந்தை விட 100 மடங்கு குறைவான மருந்துப் பொருள்களைக் கொண்டு அதிக ஆற்றல் மிக்கதாய் விளங்கும்.

7. கோழிகளுக்கான வாய்வழி விநியோகத் தடுப்பு மருந்து :  களத்தில் தயார் செய்யக்கூடிய கொலாஜென் மணிகளாலான வெள்ளைக் கழிச்சல்  நோய்த் தடுப்பு மருந்து முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் தற்போதுள்ள தடுப்பு மருந்துகளுடன் உபயோகிக்க முடியும்.

8. மடிவீக்க நோய்ச்சிகிச்சை : இரத்தச் செல்களிலிருந்து வகைப்படுத்தப்படும் வளர்ச்சிக் காரணிகளைக் கொண்டு மடி வீக்க நோய்  சிகிச்சைக்கான ஒரு புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளது. இது மடி வீக்க நோயால் தூண்டப்பட்ட ஃபைப்ரோஸிஸின்  ஆரம்ப கட்டங்களில் சிகிச்சைக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தப் பயன்பாடுசார் பரிமாற்றத்தளத்தில் தேவையான நெறிமுறைகளுக்குப்பட்ட ஜி.எல்.பி. சுத்த அறை ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. இது  இந்தியாவிலே முதல் முறையாக மைய அரசின் உயிர்த் தொழில்நுட்பவியல் துறையின் நிதியுதவியோடு தானுவாஸில் நிறுவப்பட்டுள்ளது.

இந்தச் சுத்த அறை ஆய்வகத்தால் கீழ்க்காணும் தேவைகளை நிறைவேற்ற முடியும்.

• தொழில்நுட்பங்களைத் தானுவாஸிலிருந்து தொழில் நிறுவனங்களுக்குத் தடையின்றிப் பரிமாற்றம் செய்ய இயலும்.

• தடப்பூசி மூலக்கூறுகளையும் திசு கல்சர்களையும் தேசிய அளவிலான வரைமுறைகளின்படி தயார் செய்யலாம்.

• சோதனை அளவிலான செயல்முறைகளைப் பரிசோதிக்கலாம்.

• அவசரகாலத் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யலாம்

• புதிய தலைமுறைத் தடுப்பு மருந்து மற்றும் துணைத்தடுப்பூசிகளையும் பரிசோதிக்கலாம்.

• சி.ஜி.எம்.பி. தரத் தடுப்பூசி மூலம் கூறுகளுக்கான களஞ்சியமாக விளங்கலாம். இது இந்தியாவில் உள்ள எந்த மாநில விவசாய கால்நடைப் பல்கலைக்கழகங்களிலும் இல்லாத தனித்துவமான வசதியாகும்.

தொழில்முனைவோர் மற்றும் பண்ணையாளர்கள் தானுவாஸ் நிறுவியுள்ள இந்த தளத்தைப் பயன்படுத்தித் தொழில் முன்னேற்றம் அடையலாம்.

ஆதாரம் : சிறப்பாசிரியர் முனைவர் சு.திலகர், கால்நடைக்கதிர்

2.99145299145
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top