பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நாட்டுமாடு

நாட்டுமாடுகளின் மகத்துவம் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்?

அந்நாளில் நாட்டு மாட்டின் தயிரையோ, பாலையோ கலயத்தில் கட்டிக் கொண்டு அமாவாசை போன்ற தினங்களில் கோவிலுக்கு செல்வார்கள். சென்னிமலையில் அந்த அபிசேக தயிரை பெரிய வெள்ளை துணியில் கட்டி வைப்பார்கள். அதில் உள்ள திரவங்கள் வடிந்து திட பால் பொருள் கிடைக்கும். அந்த மாவினை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தினர்.

நாட்டு மாட்டு பாலில் நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் இல்லை. கலப்பின மாட்டில்தான் A1 புரதம் இருக்கிறது.

கலப்பின மாட்டு பாலில் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், ஹார்மோன்-மரபின நோய் கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. பால் மிக அதிகமாக கிடைக்கும் என்பது மட்டுமே இதன் பலன். இந்த அதிக பால் சுரப்புக்கு பெண்மை ஹார்மோன் அதன் மரபணுவிலேயே அதிகமாக உள்ளது.

கலப்பின மாடுகள் பொதுவாக மந்த பாலியல் செயல்பாடு உடையது. அதன் உடற்கூறும் வெளிநாட்டுக்குரியது. இவற்றின் காரணமாக ஆண்களுக்கு மந்தமான பாலியல் ஹார்மோனும், செயல்பாடும், விந்து வீரிய குறைவும், வீர வீரியக் குறைவும் ஏற்படுகிறது. பெண்களுக்கு சீரற்ற ஹார்மோன் சுரப்பு, மாதவிடாய், பால்சுரப்பு, உணர்ச்சி பெருக்கு என பல விசயங்களில் பெண்களை பாதிக்கிறது. இதன் காரணமாக தாம்பத்திய பிரச்சனைகளை விதைத்து விவாகரத்தில் கொண்டு விடுகிறது.

ஆரம்பத்தில் நாட்டு மாடுகள் சரி விகிதத்தில் கலப்பு செய்யப்பட்டபோது நாட்டு மாட்டு மரபு ஆதிக்கம் செலுத்தியது. இன்று பல அடுக்குகள் கடந்து வெளிநாட்டு பன்றிகளின் மரபணு ஆதிக்கம் செலுத்துகிறது. தற்கால குடும்ப சீரழிவுக்கு நாம் காணாமல் விட்ட ஒரு மிக பெரிய ஓட்டை நாட்டு மாட்டு இழப்பு. இது வெறும் நாட்டு மாட்டு விளம்பரம் அல்ல. கூகிள் ஸ்காலரில் தேடி படிக்கவும் (Read Google Scholars).

நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை. இன்று தமிழகம் மற்றும் பாரதம் முழுக்கவே பெரும்பணக்காரர்கள் நூற்று கணக்கில் நாட்டு மாடுகளை வளர்த்து வருவது எத்தனை பேருக்கு தெரியும்?

நாட்டு மாடுகள் நமக்கு தரும் உணவு சாத்வீகமானது. அதை தொடர்ந்து உட்கொள்வதால் நமது மனமும், குணமும், கட்டுப்பாடும், ஒழுக்கமும் உடைய இறை தன்மையாக மாறுகிறது. இயற்கையாகவே நாம் ஊக்கம், ஆரோக்கியம், மன உறுதி, நோய் எதிர்ப்பு போன்றவற்றை பெறுகிறோம்.

கலப்பின பசுக்களின் பால் மன நலனுக்கு மிக கேடானது. ஒரு ஸ்லோ பாய்சன் போல.

இவற்றை உணர்ந்த பல வெளிநாடுகள் A1 பால் A2 பால் என பிரித்து விற்க துவங்கியுள்ளன. இன்று திருநீறு என்னும் பெயரில் விற்கப்படும் பேப்பர் எரித்த சாம்பலை விடுத்து நாட்டு மாட்டின் சாணத்தில் இருந்து எடுத்த திருநீறை பயன்படுத்தி பாருங்கள்.

சிந்தையும் உடலும் நல்ல மாற்றம் காணும். உடலின் பித்தத்தை அப்படியே உரியும். நாட்டு மாட்டு கோசாலை, மாதேஸ்வரன் மலை போன்ற இடங்களில் கிடைக்கும். 
முற்காலத்தில் நாம் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இடம் பெயர்ந்து சென்ற காலங்களில் நமது சொத்தாக எடுத்து சென்றது நமது ஆத்மார்த்த லிங்கமும், நாட்டு மாடுகளும் தான்.

நாட்டு மாடுகளின், உழைப்பு, பால், சாணம் சிறுநீர் கொண்டுதான் கொங்கு நாட்டையே கட்டமைத்தோம். திருடர் பயம் இருந்த நாட்களில் கூட மாட்டை வீட்டுக்குள் வைத்து நாம் வாசலில் படுத்திருந்தோம். மாட்டை அவ்வளவு முக்கியமாக பார்த்தோம் நாம். இன்று அதை இழந்தது பல்வேறு சீரழிவிற்கு வழிவகை செய்து விட்டது. நாமும் சீரழிந்து மாடுகளையும் சீரழியச் செய்கிறோம்.

நாட்டு மாடுகள் இருந்த வரை நாம் பொருளாதாரத்தில் சுய சார்பு பெற்றிருந்தோம். ஆனால் இன்று வெளிநாட்டின் அடிமையாகி போனோம். நாட்டு மாடுகள் நம் ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியம் தேவை! வீட்டில் வளர்க்க இயலவில்லையெனினும், கொஞ்சம் பணம் அதிகம் செலவு செய்தேனும் நாட்டு மாட்டு பொருட்களை பயன்படுத்துங்கள். நகரத்தில் வசதியுள்ளவர்கள், கிராமத்தில் தங்கள் பண்ணையில் கூட்டாக சேர்ந்து இருபது, முப்பது மாடுகள் வாங்கி தினமும் பிரித்து கொள்ளுங்கள்.

மரபணு மாற்றப்பட்ட கலப்பின பசுக்கள் இந்தியாவுக்குள் திணிக்கப்பட்டன. இந்திய நாட்டு ரகத்தில் காங்கேயம், சிகப்பசக்கி, கார்பார்கர், சாகிவால் என பல வகைகள் உள்ளன. ஆனால், ஜெர்சி, பிரிசியன் ரெட்டேன், சிவிஸ் பிரவுன் போன்ற அயல்நாட்டு இன மாடுகளைத்தான் சமீபகாலமா விவசாயிகள் விரும்பி வளர்க்கிறார்கள். நாட்டு மாடுகள் நாள் ஒன்றுக்கு 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை குறைந்த அளவு பாலைத் தருவதாலும், பால் பற்றாக்குறை ஏற்படுவதாலும் சில மிருக இனத்திலிருந்து ஜீன் மாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டுப் பசுக்களில் இருந்து பால் உற்பத்தி செய்ய விவசாயிகளை அரசே ஊக்குவித்துக் கொண்டு வருகிறது. ஜெர்சி இன மாடுகளில் வேர்வை நாளங்களும், திமில்களும் இல்லாததால், அதன் வெப்பம் பால், சிறுநீர் மூலமாகத்தான் வெளியேறுகிறது.

மேலும் இம் மாடுகளின் கன்றுகள் 6 முதல் 8 மாதத்திற்குள் பருவமடைகின்றன. அதுமட்டுமில்லாமல் அயல்நாட்டு இன மாடுகளின் சாணமும், சிறுநீரும் மண்ணுக்கும் மக்களுக்கும் எந்த நன்மையையும் கொடுப்பதில்லை. நம்ம நாட்டு மாடுகளில் வேர்வை நாளமும், திமிலும் இருப்பது மட்டுமில்லாமல், சிறுநீர், சாணத்திலிருந்து இயற்கை உரம் போன்றவற்றைத் தயாரிக்கலாம். இவ்வளவு சிறப்புகள் நாட்டு மாடுகளில் இருந்தாலும் பால் அதிகமாக கொடுக்கிற ஒரே பேராசை காரணத்தினாலேயே அயல்நாட்டு இனங்களை இந்தியாவில் வளர்த்து வருகிறார்கள்.

தற்போது தமிழகத்தில் காங்கேய மாடுகள் 80 சதவிகிதம் வரை அழிந்து விட்டது. இதனாலேயே பல நன்மைகள் கொண்ட நாட்டு மாடுகளில் அதிகப் பால் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி நம் இனங்களைக் காக்கலாம் என்ற எண்ணம் மனதிற்குள் எல்லோருக்கும் வர வேண்டும். மாட்டு வர்க்கத்தில் நல்ல வம்சங்களைக் கண்டுபிடித்து பால் அதிகம் கொடுக்கும் காங்கேயம் பசுவின் கன்றை, அதே அளவில் பால் கறக்கும் வேறு பசுவின் காளையுடன் இனப்பெருக்கம் செய்ய வைப்பதன் மூலம் அதிகப் பால் உற்பத்தி செய்யலாம்.

முஸ்லிம் அரசர்கள்

முகலாய சாம்ராஜ்யத்தில் - பாபர் முதல் அகமத் ஷா வரை பசுவதை முற்றிலும் தடை செய்யப்பட்டு இருந்தது.

இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவதில் பெயர் போன பாபர், தனது புத்தகத்தில் முகலாய அரசர் யாரும் பசுவதையை ஆதரிக்க கூடாது என்று கடுமையாக வலியுருத்தி இருந்தார்.

மைசூர் சுல்தான்களான ஹைதரும், திப்புவும் கூட பசுக்கள் கொல்வதை தடை செய்திருந்தார்கள். மீறிபவர்களுக்கு கைகளை வெட்டும் கடும் தண்டனையும் விதித்திருந்தார்கள்!

ராபர்ட் கிளைவ்
இந்தியாவின் விவசாயத்தை ஆராய்ந்த கிளைவ், மாடுகள் தான் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து விவசாயத்தை அழிக்க முதன்முதலில் பசுவதை கூடங்களை உருவாக்கினான்.

காந்தி
பசுவதையை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தினார்.

வேளாண் ஞானி நம்மாழ்வார்

பசுக்கள் நடமாடும் இயற்கை உர தொழிற்சாலைகள் என்பதை வலியுறுத்தி வந்தார். விலைமதிப்பில்லா பஞ்சகவ்யம் மற்றும் இயற்கை உரங்களை தரும், மரபு பசுக்கள் நமது சொத்து, அவற்றை காக்க வேண்டிய அவசியம் குறித்தும் வலியுருத்தி வந்தார்.

இன்றைய நிலை

பணத்துக்காக இன்று மரபின பசுக்கள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. 
பசுவதை என்பது வெளிநாட்டு சூழ்ச்சி என்பது தெரியாமல் அதற்கு ஆன்மீக சாயம் பூசி, ஆன்மீகத்தை எதிர்க்கிறேன் என்று நம்மவர்களே பசுக்களை அழிக்கிறார்கள்.

மனிதர்களை விட மாடுகள் அதிகம் இருந்த பங்களாதேசில் மாடுகள் அழிந்து இன்று குழந்தை பால் பவுடருக்கும், உரத்துக்கும், பூச்சி மருந்துக்கும் வெளிநாட்டவரை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

நாட்டு மாடுகள் மற்றவர் கைகளில்..

  • பிரேசிலில் நம் நாட்டு மாடுகள் லட்ச கணக்கில் வளர்க்கபடுகின்றன.
  • கேரளாவிலும் தமிழ்நாட்டு நாட்டுமாடுகளை கொண்டு சீரோ பட்ஜெட் பார்மிங் செய்ய கிசான் கேரளா மூலம் பயிற்றுவிக்கிரார்கள்.
  • இவை மட்டும் இல்லாது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் நாட்டு மாடுகளை கொண்டு கலப்பினம் செய்து பயன்படுத்துகிறார்கள்.
  • ஆஸ்திரேலியா, நியுசிலாந்து நாடுகளில் நாட்டு மாடுகளில் கிடைக்கும் பாலுக்கென்று தனி சந்தையே உள்ளது!

இந்திய நாட்டில் விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் நாட்டு மாடுகள் தான் முதுகெலும்பு. அதன் மூலம் இந்திய மக்களின் ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அடித்தளமாக இருந்தது நம் மரபு பசுவினங்கள். நாட்டு மாடுகள் இல்லையேல் ‘இயற்கை வேளாண்மை, ஜீரோ பட்ஜெட் பார்மிங், நம்மாழ்வார், பஞ்சகவ்யம், சித்த/ஆயுர்வேத மருத்துவம்’ போன்ற வார்த்தைகளுக்கு வேலையே இல்லை.


நாட்டு மாடுகள் வளர்ப்பு
3.15882352941
ரமேஷ் Dec 17, 2017 09:05 PM

இது போன்ற கருத்துக்கள் இன்னும் அனுப்பவும்

அன்பரசன் Oct 01, 2017 08:42 PM

அருமையான பதிவு

Jainulabudeen Feb 03, 2017 05:50 PM

Reality life is belongs to our cultural &sprectualy to improve agricultural and keramam sarntha veealannmai to evergreen and long life for further generation

ஆ. வசந்த முருகேஷ். Jan 30, 2017 03:02 PM

அருமையான கட்டுரை இந்திய குடிமகன்கள் அனைவரும் இதை படிக்க வேண்டும், இதை அனைவருக்கும் நான் எடுத்து செல்ல நினைக்கிறேன்

சுசிந்தரன் Jan 18, 2017 12:35 PM

இது போன்ற தகவல்கள் வெளியே வாரமல் தேவைஇல்லாத விசயங்களை வெளிவிடும் தமிழக வேசி ஊடகங்களை நினைத்தால் ஆத்திரம் தான் வருகிறது நாட்டு மாடுகளை பாதுகாப்போம் பசுவதை தடை சட்டத்தை கொண்டு வருவோம் பாரத மக்களை காப்பற்றுவோம்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top