பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / கால்நடைப் பண்ணையாளர்களுக்கான தகவல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கால்நடைப் பண்ணையாளர்களுக்கான தகவல்

கால்நடைப் பண்ணையாளர்களுக்கான சில தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்டுள்ள தகவல் மாற்றம் தொலைத் தொடர்புத் துறையின் வளர்ச்சி காரணமாகவும் அதிவேக இணையதளச் சேவை மற்றும் மலிவான ஸ்மார்ட் போன் தொழில்நுட்பங்கள் வாயிலாகவும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களிடையேயான தகவல் பரவலாக்கம் மேம்பட்டுள்ளது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்ட தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை ஆய்வு மதிப்பீட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் தேசிய அளவில் 38 ஆவது இடத்தையும் மாநில அளவில் 4 ஆவது இடத்தையும் பெற்று முதல் 50 பல்கலைக்கழகப் பட்டியலில் இடம் பிடித்துப் பெருமை சேர்த்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள 12 கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் முதல் இடத்தை பெற்றுள்ளது.

பல்கலைக்கழகம் தன்னுடைய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் ஆராய்ச்சி நிலையங்கள் கல்லூரிகள் ஆகியவற்றின் மூலம் வேளாண் சமூகத்தினருக்கு வேண்டிய பயிற்சி ஆலோசனை  மற்றும் இதர விரிவாக்கப் பணிகளை அளித்து வருகிறது. 20 கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்ச்சி மையங்கள் 3 உழவர் பயிற்சி மையங்கள் 3 வேளாண் ஆராய்ச்சி மையங்கள் ஒரு பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையம் 4 கல்லூரிகள் ஆகியவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.  இவை விஞ்ஞானிகளுக்கும் பயனாளிகளுக்கும் இடையே தொழில்நுட்ப பரிமாற்றங்களுக்கான நிலையான தொடர்பை உண்டாக்கியுள்ளன. மேலும் வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பத்திரிக்கைச் செய்தி வெளியீடுகள், மடிப்பிதழ்கள், துண்டறிக்கைகள், நூல்கள், இதழ்கள், செய்தி மடல்கள் ஆகியவை மூலமும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வழிமுறை நாள்தோறும் பரவலாக்கப்பட்டு வருகின்றது.

தொலைத் தொடர்பு வளர்ச்சியின் ஒரு அங்கமாகப் புதிய அலைபேசி செயலித் தொழில்நுட்பச் சேவைகள் கல்வி, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கலாச்சாரம், மனித நலன், தொழில்துறை என அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி அனைவரும் பயனடையும் வகையில் அந்தந்த மாநில மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சேவைகள் குறிப்பாக வேளாண்மை, கால்நடை வளர்ப்பில் நல்லதொரு புதிய பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் இந்தப் புதிய தகவல் பரிமாற்றச் செயலிகளைப் பயன்படுத்திடும் பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் மூலம் இத்தகைய அலைபேசிச் செயலிகளின் சேவைக்கான தேவையையும் அவசியத்தையும் நாம் நன்கு அறிய முடிகிறது.  இதுமட்டுமின்றி அதிகப் பயனாளிகள் குறைந்த முதலீட்டில் பயனடையும் வகையில் இத்தகைய செயலிகள் உதவுகின்றன. இக்கருத்தைக் கவனத்தில் கொண்டு கால்நடைப் பண்ணையாளர்களும் விவசாயச் பெருமக்களும் பயன்பெரும் வகையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் புதிய எளிமையாகப் பயன்படுத்திடும் வகையில் கால்நடை பண்ணை வளர்ப்பு மற்றும் மேலாண்மை ஆலோசனைகள் மற்றும் வியாபார வழிகாட்டுதல்கள் போன்ற சேவைகளை உள்ளடக்கிய அலைபேசிச் செயலிகளை உருவாக்கி வருகிறது..

இச்சேவையின் முதற்கட்டமாகப் பண்ணையாளர்கள் தேவைக்காக பல்கலைக்கழகத்தின் பல்வேறு மையங்கள் மூலம் அளிக்கப்படும் நிலையப் பயிற்சிகள் / புறநிலையப் பயிற்சிகளின் விவரங்கள் மாவட்ட அளவில் எந்தெந்தப் பயிற்சி மையங்கள் வாயிலாக எந்த நாள்களில் வழங்கப்படுகின்றன என்பதை இளைஞர்கள் தொழில்முனைவோர் விவசாயிகள் உடனுக்குடன் அறியும் வண்ணம் தனுவாஸ் பயிற்சி அட்டவணை செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி ஆண்டிராய்ட் போன்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து TANUVAS Calendar எனக் குறிப்பிட்டுப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் செயலியில் உள்ள வழிகாட்டுதலின்படி தங்கள் தொலைபேசி எண் மற்றும் பிற விவரங்களைப் பதிவு செய்து செயலியைப் பயன்படுத்தலாம்.  இச்செயலியில் ஒரு மாதத்தை  தேர்ந்தெடுத்து அதில் உள்ள ஒரு தேதியைத் தேர்ந்தெடுத்தால் அச்சமயத்தில் நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளின் தலைப்பும் தேதியும் தோன்றும். குறிப்பிட்ட தலைப்பைத் தேர்ந்தெடுத்தால் அது நடைபெறும் இடம் குறித்த விவரம் தோன்றும். பயிற்சி நெருங்கும் தேதியில் நினைவூட்டல் செய்யக்கூடிய வசதியும் இதில் உள்ளது.

மேலும் தனுவாஸ் – தீவனக் கணக்கீடு செயலி அதாவது கால்நடைகளின் உடல் எடைத் தேவைக்கு ஏற்ப எந்த அளவில் பசுந்தீவனம் உலர் தீவனம் மற்றும் அடர்தீவனம் அளிக்கப்பட வேண்டும். அதன் மூலம் எந்த அளவில் பால் உற்பத்தி போன்ற உற்பத்திப் பெருக்கத்தை நாம் பெற முடியும் என்ற தீவனக் கணக்கீட்டு வழிகாட்டிச் செயலியும் உருவாக்கப்பட்டுத் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இதனையும் மேற்கண்டவாறு பதிவிறக்கம் செய்து அதில் உள்ள வழிமுறைகளின்படி பயன்படுத்தி விவரம் அறியலாம்.

பண்ணைத் தொழிலின் எதிர்காலத்திற்கும் வளர்ச்சிக்கும் இத்தகைய மின் ஊடக விரிவாக்கச் சேவைகள் அதாவது அலைபேசி செயலிகள் நல்லதொரு பயனையும் வளர்ச்சியும் பண்ணையாளர்களுக்கு எதிர்வரும் காலங்களில் வழங்கிடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

ஆசிரியர் : முனைவர் சு. திலகர்

ஆதாரம் : கால்நடைக் கதிர்

2.99224806202
இளங்கோ Nov 01, 2019 08:09 AM

கோழி மற்றும் முயல், காடை வளர்ப்புக்கான செயலி (Play Store ல் app) இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன் 74*****00

ராஜசேகர் Dec 12, 2017 09:28 PM

எருமை கன்று தவிடு கஞ்சி தண்ணி குடிக்க என்ன செய்யவேண்டும் தயவு செய்து உதவுங்கள் சார்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top