பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இனப்பெருக்கம்

இனப்பெருக்கம் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

செயற்கை முறைக் கருவூட்டல்

  1. சாதாரணமாக ஆண் வான்கோழிகள் அதிக எடை இருப்பதாலும், இனச்சேர்க்கையில் அதிக நாட்டம் இல்லாமல் இருப்பதாலும் பெரும்பாலான சமயங்களில் முறையான இனச்சேர்க்கை நடைபெறுவதில்லை. நல்ல முறையில் இனச்சேர்க்கை நடைபெறாத சமயத்தில் இடும் முட்டைகள் கருவுற்ற முட்டைகளாக இருக்காது. எனவே இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக செயற்கை முறைக் கருவூட்டலைக் கையாளலாம்.
  2. ஆண் கோழிகள் 9 மாத வயதானவுடன் அவைகளைப் பிடித்து மடி மீது உட்கார வைத்து ஒரு கையால் அவற்றின் வயிற்றுப் பகுதியையும் தேய்த்து விட்டால் ஆண் விந்து வெளிப்படும். இவ்வாறு தொடர்ந்து பழக்கப்படுத்தி வந்தால் ஒரு மாதக் காலத்தில் ஆண் கோழிகள் நல்ல முறையில் செயற்கையாக விந்தினை அளிக்கத் தொடங்கிவிடும்.
  3. விந்துவுடன் எச்சம், சிறுநீர், தூசி, இரத்தம் ஆகியவை கலந்திருப்பதாலும் அதனைச் செயற்கைக் கண்ணாடிக் குவளையில் சேகரித்து, உடனடியாக 10 முதல் 15 நிமிடத்திற்குள் ஊசியாக செலுத்தப்படும் குழாயின் மூலம் பெட்டைக் கோழியின் கருப்பையினுள் செலுத்திவிடவேண்டும்.
  4. முட்டையிடும் பருவக் காலத்தில் வாரம் ஒரு முறை மாலை வேளைகளில் முட்டையிட்ட பிறகு, செயற்கை முறைக் கருவூட்டல் செய்தால், கிடைக்கும் முட்டைகள் அனைத்தும் கருவுற்று இருக்கும்.
  5. ஒவ்வொரு முறையும் ஒரு ஆண் வான்கோழியிலிருந்து செயற்கையாகக் கால் முதல் முக்கால் மில்லரி வரை விந்தினைப் பெற முடியும். இதைக் கொண்டு 10 முதல் 12 கோழிகளுக்கு செயற்கை முறைக் கருவூட்டல் செய்யலாம்.
  6. மேலும் செயற்கை முறைக் கருவூட்டல் செய்யும் பொழுது அனைத்து வான்கோழிகளுக்கும் ஒரே நாளில் செய்யாமல் சுழற்சி முறையில், குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் செய்வது நல்லது.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

3.03333333333
Thanuseekan Jan 12, 2020 10:05 AM

தயவு செய்து இதனை சற்ரு விரிவான விளக்கம் அல்லது பட உதவியுடன் கூறவும் செயற்க்கை முறை இனப் பெருக்கமுறையில் கருப்பையை எவ்வாறு இனம் கண்டு விந்தை செலுத்துவது பின் பகுதியில் வாசலில் செலுத்தினால் சரியா

Muhamed Feb 27, 2017 04:52 PM

சேவல் இல்லாமல் கோழி கருவாவது எப்படி?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top