பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / பாலை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பாலை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

பாலை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

பாலைப் பதப்படுத்துதல் என்பது பாலை 63°செ வெப்பநிலையில் 30 நிமிடங்கள் அல்லது 72°செ. வெப்பநிலையில் 15 வினாடிகள் சூடுபடுத்தி உடனடியாக குளிர்வித்துப் பாதுகாப்பான முறையில் பதப்படுத்துதல் ஆகும். இவ்வாறு இந்தக் குறிப்பிட்ட வெப்பநிலைகளில் குறிப்பிடப்பட்ட கால அளவுகளுக்குச் சூடுபடுத்துவதனால் பாலிலுள்ள அனைத்து நுண்கிருமிகளையும் குறிப்பாக அதிக வெப்பத்தினைத் தாங்கி உயிர் வாழக்கூடிய மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோஸிஸ் என்ற காசநோயை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் காக்ஸில்லா பர்னட்டி போன்ற நுண்கிருமிகளை அழித்துப் பாலைப் பாதுகாப்பானதாக்க இயலும்.

சுத்தமான பால்

  • பொதுவாகக் கறந்த பால் அறை வெப்பநிலையில் மூன்று முதல் ஐந்து மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். எனவே, ஐந்து மணி நேரத்திற்குள் பால் உற்பத்தி செய்யப்படும் இடங்களிலிருந்து பால் பதனிடும் நிலையங்களை அடைந்து பதப்படுத்தப்படுதல் வேண்டும். "சுத்தம் சுகம் தரும்" என்ற பழமொழிக்கேற்பச் சுகாதாரமான முறையில் சுத்தமான பாலை உற்பத்தி செய்ய ஆவன செய்தல் வேண்டும். கறந்த பால் சுத்தமாக இருந்தால்தான் அதனைப் பருகும் நாமும் ஆரோக்கியமாக வாழ முடியும். அத்தகைய பாலிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு பால் பொருள்களும் தரமானதாக இருக்க இயலும்.
  • பால் பார்ப்பதற்குத் தூசிகளற்று இருந்தால் மட்டும் போதாது, சுத்தமான பால் என்பது சுகாதாரமான, நோயற்ற, ஆரோக்கியமான கறவை மாடுகளிலிருந்து சுகாதாரமான முறையில் பெறப்பட்ட பாலாகும். பாலைப் பதப்படுத்துவதன் மூலம் அதில் நோய்க்கிருமிகள் ஏதேனும் இருப்பின் அவற்றை அழித்துப் பாதுகாப்பானதாக மாற்ற இயலும் என்றாலும், அதுவே தரமானதாக, சுத்தமானதாக உற்பத்தி செய்யப்படும் பட்சத்தில் பதப்படுத்துதல் மூலம் அவற்றின் தரம் இன்னும் அதிகரிக்கப்படும்.

பாலின் தரம்

  • பொதுவாகப் பண்ணைகளிலோ அல்லது பால் பதப்படுத்தும் நிலையங்களிலோ பால் கேன் வந்தவுடன் மூடியைத் திறந்து பாலின் நிறம், மணம் மற்றும் சுவையில் மாற்றம் ஏதும் உள்ளதா என்றும், பாலின் வெப்பநிலையைப் பார்த்தும், பாலின் மேற்பரப்பில் முகர்ந்து பார்த்தும், பாலில் தூசி ஏதும் உள்ளதா என்று வடிகட்டிப்பார்த்தும் பரிசோதனை செய்து தரம் குறைந்த பாலை ஒதுக்கி விடுதல் வேண்டும். மேலும் சுடு சோதனை, பாலின் ஒப்படர்த்தி, பாலின் அமிலத்தன்மை, பாலின் கொழுப்பு (FAT %) மற்றும் கொழுப்பல்லாத திடப்பொருள்களின் (SNF) அளவு போன்ற சில முக்கியத் தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகளை மேற்கொண்டு பாலின் தரத்தை ஆராய்தல் வேண்டும்.
  • "கொள்வதும் மிகை கொளாது, கொடுப்பதும் குறை கொடாது' என்ற பண்டைத் தமிழர் நாகரிகம் பேசும் நாம் பாலை விற்கும்போது விலை குறைக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
  • அதே சமயம் வாங்குவோர் மனம் மகிழுமாறு நல்ல தரமான பாலை விற்றல் வேண்டும். எனவே இருசாராரும் பாலின் தரத்தை அறிந்துகொள்வது அவசியமாகும். பால் உற்பத்தி செய்யப்பட்ட இடங்களிலிருந்து பதப்படும் இடங்களை அடைந்தவுடன் உடனடியாகக் குளிர்விக்கப்படுதல் வேண்டும். பால் பதனிடும் நிலையங்களுக்கு பால் அனைத்தும் வந்ததும்தான் பதப்படுத்துதல் தொடங்கப்படுதல் வேண்டும். அதுவரை அவை குளிர் அறைகளிலேயே 5°செ.வெப்பநிலையில் வைத்திருத்தல் வேண்டும்.

பாலைப் பதப்படுத்துதல்

பாலை 63°செ வெப்பநிலையில் 30 நிமிடங்கள் அல்லது 720G.F. வெப்பநிலையில் 15 வினாடிகள் சூடுபடுத்தி உடனடியாக 5°செ.க்குக் குளிர்வித்து உறையிலிடும் முறையையே பாலைப் பதப்படுத்துதல் அல்லது பாஸ்டுரைசேஷன் (SNFPasteurization) என்கிறோம். இவ்வாறு பாலைப் பதப்படுத்துவதனால் பாலிலுள்ள நோய் உண்டாக்கும் பெரும்பாலான கிருமிகளை முக்கியமாகக் காசநோய்க் கிருமிகளை அழித்துவிடுவதுடன் நீண்ட நேரம் பாலைக் கெடாமலும் பாதுகாக்கலாம்.

பொதுவாக பசுப்பாலில் 3 முதல் 5 விழுக்காடும், எருமை பாலில் 5 முதல் 8 விழுக்காடும் கொழுப்புச் சத்து உள்ளது. இதனை அப்படியே பதப்படுத்தி விற்பனை செய்தால் வியாபாரம் இலாபமாக இருக்காது. அதே சமயம் அதிகக் கொழுப்புச்சத்து உடல்நலத்திற்கும் உகந்ததல்ல. எனவே, இலாபகரமான முறையில் தொழில் நடத்தவும், அதே சமயம் உடல் நலம் பாதிக்காத வகையில் உணவு கலப்படத் தடுப்புச் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டும் பாலில் உள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற திடப் பொருள்களின் அளவைத் தகுந்த அளவு சரிசெய்து நிலைப்படுத்தப்பட்ட பால், 3 விழுக்காடு அளவுக்குக் குறைக்கப்பட்ட பால் மற்றும் 1.5 விழுக்காடு அளவுக்குக் கொழுப்பு குறைக்கப்பட்ட பால் ஆகியன விற்பனையில் உள்ளன.

இந்தத் தொழில்நுட்பங்களில், பொதுவாகப் பாலிலுள்ள அதிகப்படியான கொழுப்பைப் பிரித்துவிட்டு எஞ்சியுள்ள கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் கொழுப்பு நீக்கப்படாத பாலுடன் சேர்த்துத் தண்ணிர் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடரையும் சேர்த்து நமக்குத் தேவையான கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற சத்து உள்ள பாலைத் தயார்செய்து, பதப்படுத்தி, ஹோமோஜினைஸ் செய்து உறையிலிட்டு விற்பனை செய்யலாம்.

பாலை உறையிலிடுதல்

  • பாலைப் பதப்படுத்திய பின்பு கண்ணாடிப் பாட்டில்களில் அடைத்து மூடியிட்டுக் குளிர்பதன அறையில் வைத்திருந்து விற்பனை செய்வது முன்பு வழக்கத்திலிருந்தது. அதன் பின்பு காகிதகார்டன் உறை அல்லது பாலித்தீன் பைகளில் உறையிலிட்டு விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை செய்யப்படும் வரை பதப்படுத்திய பாலை 50செ. அல்லது அதனை விடக் குறைவான வெப்பநிலையில் வைத்திருத்தல் அவசியம் ஆகும். மிக உயர்ந்த வெப்பநிலையில் (UHT) பதப்படுத்தும் பாலை டெட்ராபேக் எனப்படும் பிரத்தியேக உறையிலிட்டுதான் விற்பனை செய்தல் வேண்டும். இந்த டெட்ராபேக்குகளை அறை வெப்பநிலையிலேயே ஆறு மாதங்கள் வரை வைத்திருந்து விற்பனை செய்யலாம்.
  • மேலும் பால் உற்பத்தி செய்யப்படும் மற்றும் பதப்படுத்தப்படும் நிலையங்களிலுள்ள அனைத்துப் பாத்திரங்களையும் இயந்திரங்களையும் சுத்தமாகக் கழுவிப் பின் சுடுநீர் அல்லது நீராவி அல்லது குளோரின் / அயோடோஃபோர் போன்ற வேதிப் பொருள்கள் கொண்டு உலர்த்திச் சுத்தம் செய்தல் வேண்டும்.
  • இவ்வாறு மேற்கூறிய பல்வேறு தொழில்நுட்பங்களில் பாலைப் பதனிட்டு உறையிலிட்டு விற்பனை செய்வதன் மூலம் நல்ல சுத்தமான பாலைப் பொது மக்களுக்கு வழங்க முடியும்.


பால் குளிர்விக்கும் பிரிவு

கேள்வி பதில்கள்

1. பால் பதனிடும் சமயத்தில் வைட்டமின் இழப்பு ஏற்படுவது உண்மையா?

இல்லை. பொதுவாக பால் 70 முதல் 75 டிகிரி செல்சியஸ் 15 விநாடி பதப்படுத்துவதன் மூலம் நுண்ணுயிரிகள் செயலிழக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.

2. தொற்று நீக்கம் செய்த பால் யாது?

பால் சுட வைக்கும் போது வெப்ப நிலையை அதிகப்படுத்தி 162 டிகிரி பாரன்ஹீட்டிற்கு 15 விநாடிகள் வைப்பதால் அனைத்து நுண்ணுயிர்களான பாக்டீரியா மற்றும் நொதிகளை அழித்துவிடுகிறது.

3. உலர் பால் என்றால் என்ன?

தொற்று நீக்கம் செய்யப்பட்ட பாலிலிருந்து தண்ணீரை முழுமையாக நீக்குவதே உலர் பாலாகும்.

4. ஒருபடித்தான பால் என்றால் என்ன?

பாலை இயந்திரத்தின் சிறு துளைகளில் செலுத்தி கொழுப்பு பொருட்களின் அளவை குறைப்பதே ஒருபடித்தான பாலாகும்.

ஆதாரம் : கால்நடைக்கதிர்

2.97619047619
வெங்கட் ராமன் Apr 22, 2019 01:46 PM

பாதாம் பால், ரோஸ் மில்க், கெடாமல் வைப்பது எப்படி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top