பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / வண்ண இறைச்சி கோழி வளர்ப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வண்ண இறைச்சி கோழி வளர்ப்பு

வண்ண இறைச்சி கோழி வளர்ப்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

  • இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் இறைச்சிக் கோழி வளர்ப்புத் தொழில் அதிக அளவில் வளர்ந்து வருகின்றது. இருந்தும் தற்பொழுது இறைச்சிக்கோழிக்கு 5 விலை கிடைத்தபோதிலும் தீவனத்திற்காகப் பயன்படும் மூலப்பொருள்களின் விலையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. ஆதலால், சிறு விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் இறைச்சிக் கோழி உற்பத்திச் செலவும் அதிகரிக்கின்றது. இத்தகைய சூழ்நிலைகளில் சிறு விவசாயிகள் குறைந்த முதலீட்டில் வண்ண இறைச்சிக் கோழிகள் அல்லது நாட்டுக்கோழிகளை வளர்க்கும்போது தங்களுக்கென்று நிலையான வருமானத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
  • நந்தனம் இறைச்சிக்கோழி-2 மற்றும் நந்தனம் இறைச்சி கோழி-3 என்ற வண்ண இறைச்சிக்கோழி இரகம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தினுடைய அங்கமான கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • நாட்டுக்கோழியைப் போன்றே வண்ண இறகுடைய இறைச்சிக் கோழியை விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வண்ணம் இந்த இரகம் அமைந்துள்ளது.
  • இந்த இரக இறைச்சிக் கோழிகள் எட்டு வார வயதில் 1400 கிராம் எடையை அடைகின்றன. தீவன மாற்றுத் திறன் கிலோவிற்கு 2.2 ஆகவும், உயிர்வாழும் விகிதம் 97 விழுக்காடாகவும் உள்ளன. இந்தப் புதிய இரக இறைச்சிக் கோழிகள் புறக்கடைக் கோழி வளர்ப்பிற்கும் ஏற்றவை. ஆறு மாத கால வயதில் முட்டையிடத் தொடங்கும். இவற்றினுடைய முட்டைகளும் நாட்டுக்கோழி முட்டையைப் போன்றே பழுப்பு நிறத்துடன் இருக்கும். முட்டையிடத் தொடங்கிய ஒரு வருட காலத்தில் சுமார் 140-160 முட்டைகள் வரை இடும்.

வளர்ப்பு முறை

  • வண்ண இரக இறைச்சிக் கோழி வளர்ப்பு
  • பிற வீரிய இரக இறைச்சிக் கோழி வளர்ப்பு

கடலைத் தூள் அல்லது மரத்தூள் கூளமாகப் பயன்படுத்தப்படலாம். இரண்டு வார வயதில் 5 செ.மீ. உயரத்திற்கும் ஐந்து வார வயது முதல் 10 செ.மீ உயரத்திற்கும் இதனைப் பரப்பிவிடுதல் வேண்டும். இரு வார காலத்திற்குப் பிறகு விற்பனை வரை, தினமும் காலையில் முதல் வேலையாகக் குடிநீர் அளிக்கும் முன்பாகக் கூளத்தைக் கிளறி விட்டு வருவது சிறந்தது. அம்மோனியா நாற்றமடிக்கும் கூளத்தில் 100 சதுர அடிக்கு 2 கிலோ வீதம் சூப்பர் பாஸ்பேட் தூள் கலந்து கிளறிவிடுவது பயனளிக்கும். வார வயதிற்குப் பிறகு கூரை மட்டத்தில் விளக்குப் பொருத்தி, தினம் சில மணி நேரம் மட்டும் இரவில் விளக்கு அளித்தால் போதுமானது.

தீவனப் பராமரிப்பு

  • தேவையான இடவசதி - ஒரு சதுர அடி ஆகும். முதல் இரண்டு வயது தொடக்கத் தீனியும், பின் முதல் மூன்று வாரங்கள் வரை முடிவுத் தீனியும் வழிமுறை செய்யப்படுதல் வேண்டும். எரிசக்தி தகடுகளை வட்டமாகப் பொருத்தி, மத்தியில் பல்புகளைப் பயன்படுத்தி வெப்பம் அளிக்கப்படுதல் வேண்டும். தொடக்கத் தீனியில் புரதம் 24 விழுக்காடு அளித்து வருதல் வேண்டும்.
  • ஈகோலைப் பாதிப்பு, கொரைசா, காலரா, சுவாச நோய், வெள்ளைக் கழிச்சல், குதச்சுரப்பி அழற்சி நோய் (ஐபிடி), இரத்தக் கழிச்சல் போன்றவை இறைச்சிக் கோழிகளைத் தாக்கக் கூடிய சில வகை நோய்களாகும். சில வகை வீரியமான நச்சுயிரி நோய்ப் பாதிப்பைத் தவிர்க்கக் கீழ்க்காணும் தடுப்பூசிகளை அளிக்க வேண்டியது அவசியம்.

தீவனக் கலவைப் பட்டியல்

ஆதாரம் : கால்நடைக்கதிர்

2.98101265823
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top