பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள்

தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நடவு செய்யும் முறை

நன்கு உழுது நடவுக்குத் தயாரிக்கப்பட்ட நிலத்தில் 5 x 5 அடி இடைவெளியில் 1 x 1 x 1 அடி அளவுகளில் குழி எடுக்க வேண்டும். இவ்வாறு எடுக்கப்பட்டுள்ள குழிகளில் நன்கு மக்கிய தொழு உரத்தை மண்ணுடன் கலந்து குழியின் பாதியளவு வரை நிரப்ப வேண்டும். வேர் குப்பிகளில் அல்லது பைக்களில் உள்ள நாற்றுகளை பாதுகாப்பாக எடுத்து குழியின் நடுவில் நேராக வைத்து மண்ணை நிரப்ப வேண்டும், நடவு செய்யப்பட்ட மரங்களுக்கு தொடர்ந்து நீர்ப்பாய்ச்சினால் மரங்கள் நல்ல முறையில் வேகமாக வளரும்.

நீர்ப்பாசனம்

நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களுக்கு நாட்டுச் சவுக்கு (Casuarina equisetifolia) மற்றும் ஜூங்கினியானா சவுக்கு (Casuarina junghuhniana) இரண்டுமே உகந்தவை. மேலும் வாரம் ஒருமுறை நீர்ப்பாசனம் செய்தால் சவுக்குத் தோட்டத்தின் வளர்ச்சி மிக நன்றாக இருக்கும்.

உர நிர்வாகம்

  • ஒரு ஏக்கருக்கு 50 கிலோ சூப்பர்பாஸ்பேட்,
  • 25 கிலோ மியூரியேட்ஆப் பொட்டாஷ், 25 கிலோ யூரியா உரத்தைத் கலந்து வருடத்திற்கு இருமுறை இடவேண்டும்.

களை கட்டுப்பாடு

நடவு செய்த பின்பு 3 முதல் 6 மாதம் வரை களையெடுத்தல் வேண்டும். மேலும் மண்ணை கொத்திவிடுதலும் வேண்டும்.

கவாத்து செய்தல்

மரத்தின் மூன்றில் ஒரு பகுதிக்கு கீழ் உள்ள பக்கக்கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். முதல் வருட முடிவிற்க்குள்ளும், இரண்டாம் வருட முடிவிற்க்குள்ளும் இரண்டு முறை கவாத்து செய்வது அவசியம்.  கவாத்து செய்யும் போது மரமோ, பட்டையோ சேதம் அடையாமல் கவனமாக செய்ய வேண்டும். கவாத்து செய்வதால் மரத்தின் வளர்ச்சி வேகப்படும்.

ஊடுபயிர்

சவுக்கு ஓராண்டுப்பயிராக இருக்கும்போது வேளாண்மைப் பயிர்களில் குறிப்பாக நிலக்கடலையை ஊடுபயிராக வளர்க்கலாம். மணற்பாங்கான நிலங்களில் தர்பூசணியும், செம்மண்ணில் எண்ணெய் வித்து பயிரான எள்ளும், கடின மண்ணில் பயறு வகைகளையும் ஊடுபயிராகப் பயிரிடலாம். பசுந்தாள் பயிர்களாகிய அகத்தி, கொழுஞ்சி, சணப்பு ஆகிய பயிர்களை விளைவித்து, மடித்து நிலத்தில் உழுவதால் களைகளைக் கட்டுப்படுத்துவதுடன் மண்ணின் வளத்திற்கும் ஊட்டமேற்றப்படுகிறது.

பூச்சிக் கட்டுப்பாடு

தண்டுக்களைத் துளைக்கும் புழு சவுக்கு மரத்தின் கிளைகளில் உருளை வடிவ ஓட்டைகளை ஏற்படுத்தும். இதனைக் கட்டுப்படுத்துவது கடினம், எனினும் இப்புழு ஏற்படுத்திய ஓட்டைகளில் மரம் ஒன்றுக்கு 1 முதல் 2 மி.லி. மண்ணெண்ணையை ஊற்றுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

செம்மண் நிலங்களில் கரையான் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த குளோரோபைரிபாஸ் 0.2 சதவிகிதம் மண்ணுடன் கலந்து நாற்றுகளைப் பாதுகாக்கலாம், மாவுப்பூச்சி தாக்குதல் தென்பட்டால் 3மி.லி. மோனோகுரோட்டோபாஸ் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

நோய்கள் கட்டுப்படுத்தும் முறைகள்

சவுக்கு தோப்புகளைத் தாக்கும் முக்கிய நோய்களில் வேர் அழுகல் (Root Infection), கருகல் நோய் (dieback) குறிப்பிடத்தக்கனவாகும்.

மகசூழ்

ஒரு ஏக்கருக்கு சராசரியாகக்  40 டன்கள் வரை 3 ஆண்டுகளில் மகசூல் பெறலாம், இந்த விளைச்சலை சிறந்த நீர் மற்றும் உர நிர்வாகம் மூலம் மேம்படுத்தலாம், இது மண்ணின் தன்மையும், பராமரிப்பு முறைகளையும் பொறுத்து இடத்துக்கு இடம் மாறுபடும்.

(iii)  தீக்குச்சி மரம் சாகுபடி முறை

பெரு மரம் :  Ailanthus excelsa

பெருமரத்தின் தாயகம் ஆஸ்திரேலிய கண்டமாகும்,  இது சைமருபேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது,   மொலூட்கஸ் தீவில் இதே இனத்தைச் சார்ந்த மற்றொரு மரத்திற்கு இடப்பட்ட பெயரான அய்லாந்தஸ் இம்மரத்திற்கும் சூட்டப்பட்டுள்ளது.  எக்ஸெல்ஸா என்பது மரத்தின் ஓங்கி வளரும் தன்மையைக் குறிப்பதாகும்,  இம்மரம் வறண்ட பகுதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும், நம் நாட்டில் குஜராத், இராஜஸ்தான், பஞ்சாப் ஒரிசா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில்  வறண்ட பகுதிகளில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் இம்மரத்தை வளர்த்துப் பயன் பெறலாம், இந்த பெரு மரத்தை ஒப்பந்த முறைசாகுபடி முறையின் மூலம் வளர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சாகுபடிக்கேற்றமண் வகைகள்

தமிழகத்தில் இம்மரத்தை கடற்கரைப் பகுதிகளிலிருந்து மேற்கு மலைத் தொடர்சியின் அடிவாரத்திற்கு இடைப்பட்ட எல்லாப்  பகுதிகளிலும் வளர்க்கலாம்,  மானாவாரிப் பகுதிகளில் செம்மண், சரளைப்பகுதிகளிலும் சுண்ணாம்பு நிலங்கள், கடற்கரை மற்றும் ஆற்றோரப் பகுதிகளிலும், இம்மரத்தை வளர்க்கலாம்,  மானாவாரி விவசாய நிலங்களில்  வரப்பு ஓரங்களிலும் தோட்டங்களின் வேலி ஓரங்களிலும் இம்மரத்தை வளர்க்கலாம்.

விதை  சேகரிப்பு

மாசி, பங்குனி (பிப்ரவரி, ஏப்ரல்) மாதங்களில் நெற்றுக்களை முற்றிய நிலையில் மரத்திலிருந்தே பறித்திட வேண்டும்.  பின் நெற்றுக்களை நன்கு உலர்த்தி தடிகொண்டு அடித்து விதைகளைச் சேகரிக்க வேண்டும். ஒரு கிலோ எடையில் சுமார் 15000 விதைகள் கிடைக்கும்.  விதையின் மேல் தோலை நீக்கி விதையை உடனே ஊன்றும் பொழுது முளைப்புத்திறன் அதிகமாக இருக்கும்.

நாற்றங்கால்

10 மீட்டர் நீளம் 1 மீட்டர் அகலம் மற்றும் 15 செ. மீட்டர் உயரமுள்ள தாய்பாத்தியில் விதைகளை பரப்பி முளைக்கச் செய்ய வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 15 கிராம் அளவில் விதைகளை விதைக்க வேண்டும்,  விதைத்த 10 -12 நாட்களில்  விதைகள் முளைக்க துவங்கி 50 நாட்கள் வரை முளைப்பு நீடிக்கும். விதையின் முளைப்புத்திறன் சுமார் 10-30  சதவிதமாகும் விதைகள் முளைத்து சுமார் 2 அங்குலம் உயரம் வரை வளர்ந்த நாற்றுக்களை சரிவிகிதத்தில் மண்கலவை நிரப்பப்பட்ட பாலீதின் பைகளில் நட வேண்டும். விதைகளை நேரடியாகவும் பாலிதீன் பைகளிலும் ஊன்றலாம். இம்மரக்கன்றுகளை எடுத்த வெட்டிய மரங்களின் பக்கவாட்டிலிருந்து கணுக்குகளைக் கொண்டும் நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம்.

நடவு

சுமார் ஆறுமாதம் வளர்ந்த மரக்கன்றுகளை நிலங்களில் நடவு செய்யலாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் விவசாய நிலங்களின் வரப்பு ஓரங்களிலும் தேவைப்பட்டால் தனித் தோட்டமாகவும் சாகுபடி செய்யலாம். தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் வருடத்தின் எக் காலத்திலும் இம்மரக்கன்றுகளை நடவுசெய்யலாம். தரிசு மற்றும் மானாவரி நிலங்களில்  பருவ மழைக்காலங்களின் ஆரம்பத்தில் நடவு செய்வது நன்று 60 செ,மீ, கன அளவுள்ள  குழிகளை மானாவரிப்பகுதியில்  4 x 4  மீட்டர் மற்றும்   3 x 3 மீட்டர் இடைவெளியில் மரக்கன்றுகளை நடவு செய்யலாம்.  குழிகளில் சுமார்  அரை கிலோ மண்புழு உரம் 25 கிராம் வேர் வளர்ச்சி பூசணம், 20 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை பாதியளவு நல்ல மண் மற்றும் தொழு உரங்களால் நிரப்பிய பின்  நாற்றுகளை நட்டால் மரங்கள் நல்ல வளர்ச்சியைப் பெறும்.

மகசூல்

மரங்கள் நடவு செய்த சுமார் 6 ஆண்டுகளில் மரங்களை அறுவடை செய்யலாம். தரிசு நிலத்தில்  வளர்க்கப்பட்ட ஒரு மரத்திலிருந்து சுமார் 0.5 டன் எடை மரமும், நீர்வளமிக்க நிலத்தில் வளர்க்கப்பட்ட மரத்திலிருந்து சமார் 0.75 டன் எடை மரமும் சுமார் 6 வருடங்கள் கழித்து கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு டன் எடை மரத்தை சராசரியாக ரூ.1800 லிருந்து ரூ. 2100 வரை தீப்பெட்டித் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு விற்கலாம்.

ஓப்பந்த முறை சாகுபடி

வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொழிற்ச்சார்ந்த நிறுவனங்களுடன் குறிப்பாக காகிதம் மற்றும் தீக்குச்சித் தொழிற்சாலைகளுடன் இணைந்து ஒப்பந்த மரச் சாகுபடி முறையை அறிமுகப்படுத்தி விவசாயிகளின் நலனுக்காக பிரபலப்படுத்தி வருகிறது. இவ்வாறு மரப்பயிர்களில் ஒப்பந்த முறைச்சாகுபடிக்கு கீழ்க்கண்ட நிறுவனங்களை நேரடியாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாகவே தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இந்த மூன்று நிறுவனத்தினரும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து தேசிய  வேளாண்மை புதுமைத்திட்டத்தின் கீழ் ஒரு கூட்டுமுயற்ச்சியாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றன. மேலும் இந்த ஒப்பந்த முறைசாகுபடி திட்டத்ததை பல்வேறு மரம் சார்ந்த தொழில் நிறுவனங்களான எரிபொருள், எரிசக்தி, பென்சில், பிளைவுட் முதலிய தொழிற்சாலைகளுக்கும் செயல்படுத்துவதற்கான திட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மரம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் மரம் சார்ந்த ஒப்பந்தமுறைத் திட்டத்திற்கு கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

ஆதாரம் : வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

3.03125
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top