பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கள அனுபவங்கள் - நீடித்த விவசாயம்

நிலையான பயிர் சாகுபடியில் மேற்கொள்ளும் பல்வேறு சிறந்த நடைமுறைகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

சமூகத்தால் மேலாண்மை செய்யப்படும் உணவு காடு

காடுகள் மற்றும் பிற சுற்றுப்புற அமைப்புகள் குறைவுபட தொடங்கியதால் ஏழை குடும்பகளின் வருமானத்திற்கான வாய்ப்புகள் குறைவு பட ஆரம்பித்து அதிகபட்சமான உணவு பற்றாக்குறை மற்றும் ஊட்டச்சத்து குறைவிற்கு வழி வகுத்தது. இவர்களுடைய குறைவுகளை கூட்டும் வகையில், கிராமப்புற மக்களுக்கு உணவு மற்றும் பழ வகைகளையும் (கிழங்கு, வேர், பல விதமான களைகள் மற்றும் பழச்சாறு) கால்நடைகளுக்கு தீவன பயிர்களையும் கொடுத்து வந்த பாரம்பரிய ரக அரிய மரங்கள் அழிய தொடங்கின. இத்தகைய இயற்கை சேதாரங்களுக்கு பிறகு நிலமற்ற ஏழை மக்களின் நிலையானது மிகவும் நலிவற்று உதவியற்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இயற்கை அழிவுகளினால் ஏற்படுகிற சேதாரங்களிலிருந்து விடுபடுவதற்கு ஏற்ற பணபலமும் சமூக பலமும் இல்லாத ஒரு பெரும் இக்கட்டில் இம்மக்கள் உள்ளனர்.

சமூகத்தால் மேலாண்மை செய்யப்படும் உணவு காடுகளில், நிலமற்ற வேலையாட்கள் மற்றும் வேலையற்ற கிராம மக்களும் குழுக்களாக இணைந்து சாகுபடி செய்யப்படாத நிலங்களை பொதுவாக குறுகிய கால குத்தகைக்கு எடுத்து சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற பல்வேறு வித உபயோகம் உள்ள மரங்கள் அதாவது மரங்கள், புதர்கள், கொடிகள், புற்கள், கிழங்குகள் போன்ற பலபயிர்கள் கலந்த கலவையாக பயிரிடுகின்றனர். இவை ஒரு பெரிய உணவு கிடங்காக இருந்து இயற்கை சேதாரங்களினால் ஏற்படுகிற பாதிப்புகளை தாங்கி நின்று உணவு, எரிபொருள் மற்றும் தீவனம் போன்றவற்றை வழங்குவதோடு நல்ல தரமான வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பதற்க்கேற்ற வகையில் காலத்திற்கேற்ற உற்பத்தியை தருகின்றன. தண்ணீர் வசதிகள் இருந்தால் மீன் வளர்ப்பு மற்றும் வாத்து வளர்ப்பு போன்றவை கூடுதல் வருவாய் தருகிற மாற்று முறைகள் ஆகும். இந்த முறையானது இயற்கை சேதாரங்களினால் ஏற்படுகிற பாதிப்புகளை களைகின்ற ஒன்றாக உள்ளது. கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடுகிற மக்களுக்கு கூடுதல் வருமானம் பெற வழி வகுக்கின்ற ஒன்றாகவும் உள்ளது. அது மட்டுமல்லாமல் அதிக அளவில் கலப்பு பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் காடுகள் அழிவதை தடுத்து, உலகம் வெப்பமயமாதலை தடுப்பதோடு, நிலமற்ற மக்களுக்கு ஒரு சொத்தாக உள்ளது.

இந்த சமூகத்தால் மேலாண்மை செய்யப்படும் உணவு காடுகளானது முதன்முதலாக கோஸ்கடம்பூர் (கன்காலிடாலா கிராம பஞ்சாயத்து, போல்பூர் ஸ்ரீநிகேதன், பீர்பூம் மாவட்டம், மேற்கு வங்காளம்) கிராமத்தில் உள்ள ஏழை மற்றும் நிலமற்ற மக்களின் மத்தியில் 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. DRCSC என்ற நிறுவனம் இந்த சமூகத்திலிருந்த நிலமற்ற ஏழைகளை பி.ஆர்.ஐ. என்ற நிறுவனத்தோடு கலந்துரையாட செய்து, நிலங்களை பெற வைத்ததோடு மட்டுமல்லாமல், கிடைக்கும் வருமானத்தில் அரசாங்கத்துக்கும் இவர்களுக்கும் 25:75 என்ற விகிதத்தில் பங்கு என்ற வழிமுறையையும் வகுத்தது. இதை உபயோகப்படுத்தும் சமூகங்கள் நடப்பட வேண்டிய பயிர்களை தேர்வு செய்வது, வளர்ப்பது, இளஞ்செடிகளை நடுவது, அவைகளை பாதுகாப்பது, அறுவடை செய்வது மற்றும் அவைகளை பகிர்ந்தளிப்பது போன்ற அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். பல வருடங்களாக குழு அங்கத்தினர்களால் இக்காடுகள் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இயற்கை சேதாரங்களினால் பாதிப்புகள் ஏற்படுகிற போது, இக்காடுகளிலிருந்து கிடைக்கும் பழங்கள் மற்றும் மற்ற பொருட்கள் அனைத்து குழு அங்கத்தினராலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. காய்கறி பயிர்கள், பயறு வகை பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்கள் போன்றவை தற்காலிக பயிர்களாக பயிரிடப்பட்டு, மக்களின் அன்றாட உணவு தேவைகளை சந்திப்பதற்காக மாத்திரம் அல்லாமல் கால்நடைகளின் தீவன தேவைளும் சந்திக்கப்படுகின்றன. இவை நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும் பொருட்டாக, கோழி வளர்ப்பு மற்றும் வாத்து வளர்ப்பு போன்றவற்றோடு ஒருகிணைக்கப்பட்டுள்ளது.

தகவல் : செய்தி மடல், எண் 6

உள்ளூர் பொதுமக்களால் பாதுகாக்கப்படும் சாகுபடி செய்யப்படாத உணவு பயிர்வகைகள்

டெக்கான் மேட்டு நிலத்திலிருப்பது, ஆந்திராவைச் சேர்ந்த மேதக் மாவட்டத்திலுள்ள சஹீராபாத் மண்டலம். அங்கிருக்கும் நிலங்களின் மண்-கருமண் வகை. இதனுடன் சிறிய பரப்பில் மணசாரி நிலங்களும், பருத்தி சாகுபடிக்குகந்த கருமண் நிலங்களும் அங்கிருக்கின்றன. 700 முதல் 850 மி.மீ சராசரி மழையளவு என்றாலும், அம்மழை எப்போது கிடைக்கும் என்ற ஏக்கநிலையே உள்ளது. சிகப்பு மண் வகை நிலங்களில், மண் கண்டம் 6-8 அங்குலம் ஆழம் மட்டுமே உள்ளது. இதுபோன்ற நிலையற்ற தட்பவெப்பநிலையை சமாளிக்க விவசாயிகள் பல்வேறு மாற்று முறைகளை உருவாக்கி இருப்பதில், பல பயிர் சாகுபடி ஒன்றாகும்.

டெக்கான் வளர்ச்சி சங்கம் (DDS) என்பது மேதக்மாவட்டத்தின் கிராமப்புறங்களில் பணிபுரியும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். கடந்த 15 ஆண்டுகளாக சாகுபடி செய்யப்படாத உணவு வகைகளைப் பற்றி இந்நிறுவனம் ஆய்வு செய்து கிராமப்புற ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஒரு சில முடிவுகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம், சுமார் 80 வகையான சாகுபடி செய்யப்படாத காய்கறிகள், கீரைகள், பழங்களைக் கண்டுபிடித்து வகைப்படுத்தியுள்ளது.

பெரும்பாலான இப்பயிர்களை, தலீத் பெண்கள் மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் பயிரிட்டு வருகின்றனர். இவர்கள் கூலிப்பணியாளர்களாக வயல்களில் வேலை செய்து காலத்தை கழிப்பவர்கள். தட்ப வெப்பநிலையில் மாற்றம் இருந்தாலும், இதுபோன்ற மாற்றுபயிர்களை சாகுபடி செய்வதால், அவர்களுக்கு அதிக விளைச்சல் கிடைத்து வருகிறது. குறைந்தபட்சம் 8 முதல் 12 பயிர்களை ஒரே நேரத்தில் சாகுபடி செய்து வருகின்றனர்.

கீரைகள்- ஊட்டச் சத்துக்களின் ஆதாரம்

அனைவராலும் சாகுபடி செய்யப்படாத கீரை வகைகளே, பொதுவாக கிராமப்புற மக்களுக்கு, ஏழை எளியோர்க்கு, முக்கிய உணவாகின்றன. இது தவிர அதிக சத்துக்கள் செறிந்த உணவாகவும் இது அமைகிறது. காய்கறிகளாக நாம் உட்கொள்ளும் பல வகையான கீரைகளில், சுண்ணாம்பு, இரும்பு, புரோட்டீன், வைட்டமின்-சி, ஃபோலிக் அமிலம் ஆகியவை அதிகளவில் உள்ளன. கீரை வகைகளின் விற்பனை விலையும் குறைவுதான். ஆனால் சத்துக்கள் அதிகமுள்ளவை. அன்றாட உணவில் கட்டாயம் சேர்க்கப்படவேண்டியவை கீரைகள். இவற்றை கர்ப்பிணிப் பெண்களும், தாய்மார்களும், குழந்தைகளும் அதிகளவில் உட்கொண்டு வருகிறார்கள்.

ஒரு சில குழந்தை வளர்ப்பு மையங்களில், பள்ளிப் பருவமடையாத குழந்தைகளுக்கு தினமும் பலவகையான கீரைகள், உணவோடு சேர்த்து வழங்கப்பட்டு வருகின்றன. ஆக சிறு குழந்தை முதலே, அவர்களது சிறு வயதிலிருந்தே உள்ளுரில் கிடைக்கக்கூடிய சத்துக்கள் செறிந்த சுவை மிகுந்த உணவுகள் கொடுக்கப்படுகின்றன. இவ்வகையான கீகள் சரியான அளவில் தினமும் வயல்களிலிருந்து, வரப்பு ஓரங்களிலிருந்து, வீடுகளின் பின்புற பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படுகின்றன. வயல்களில் களை எடுக்கும் பணியில் ஈடுபடும் பெண்கள், தங்களுக்கு தேவையான சமைக்கக்கூடிய கீரை வகைகளை இப்பணிகளுனூடே சேகரித்து பயன்படுத்துக் கொள்கிறார்கள்.

ஏழை மக்களின் வளமான வாழ்வில், சாகுபடி செய்யப்படாத பச்சைக் கீரை வகைகள் மற்றும் காய்கறி வகைகள் பங்கு குறித்து தெரிந்து கொள்வதற்காக, இவை விஞ்ஞானபூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இந்தக்கீரை வகைகள் பெண் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு நேரடியாக சேகரிக்கப்பட்டன. ஹைதராபாத்திலுள்ள தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி நிலையத்தில் இவை சத்துக்கள் ஆய்வுக்கு ஆட்படுத்தப்பட்டன. ஜொன்னசாம்செலி (JONNACHAMCHELI) ஒரு முக்கிய, சாகுபடி செய்யப்படாத கீரை வகை. இதில் 100 கிராம் கிரைக்கு, 3237மி.கிராம் சுண்ணாம்பு சத்தும், 111.3 மி.கிராம் இரும்பு சத்தும் இருந்தன.

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய, அடாவி புல்லகூரா (ADAVI PULLAKURA) ௭ன்ற கீரையில் 139 மி.கி இரும்பு சத்தும், 331 மி.கிராம் சுண்ணாம்பு சத்தும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நிறைய குடும்பங்களால் பக்திபெருமிதத்துடன் சாப்பிடக்கூடிய டும்மிக்கூரா (TUMMIKURA), ௭ன்ற கீரையில் 100 கிராம் கீரைக்கு, 81.6 மி.கிராம் இரும்புச் சத்து இருக்கிறது என கண்டறிந்துள்ளனர். நமது பெண்களின் அறிவும், விழிப்புணர்வும் அதிகம் என்பதை இம்முடிவுகள் அனைத்தும் ஊர்ஜிதம் செய்கின்றன.

பல பயிர் சாகுபடியின் மேன்மை

விவசாயிகள் தங்களுடைய பண்ணையில் இது போன்ற அறிய பயிர்களை சாகுபடி செய்யும்போது, நடைமுறையில் சாகுபடியில் இல்லாத கீரை வகைகளையும் தங்கள் பண்ணையில் சேர்த்து சாகுபடி செய்வதை மிக பெருமையாக கருதுகின்றனர். இதற்கோர் உதாரணம்: ‘சூன்யம் பண்டுகா’ -(SHOONYAM PANDUGA) கொண்டாட்டம். இது காரிப், ரபி பருவ பயிர்களின் முதிர்ச்சி பருவமான டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். விவசாயம் செய்வோர் தங்களது பூமித்தாயை வயல்களில் சுற்றி நடந்து வழிபடுவர். திருவிழாவையொட்டிய பாடல்களைப்பாடுவர். மேலும் அந்த சமயத்தில் கிடைக்கும் சாகுபடி செய்யப்படாத கீரை வகைகளைக் கொண்டு தயார் செய்யப்பட்ட உணவு வகைகளையும் படைத்து வணங்குவர்.

நடைமுறை சாகுபடியில் இல்லாத பயிர்வகைகள் சஹீராபாத் மண்டலத்தின் உணவு முறையில் ஒன்றிணைந்து இருக்கின்றன. வேளாண் சூழலை பாதுகாப்பதிலும், கலப்பு பண்ணையம், பல பயிர்சாகுபடி, களைக்கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லிகளைத் தவிர்த்தல் போன்ற வேளாண் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதன் மூலம் சாதாரண சாகுபடி முறையில் இவ்வகைப் பயிர்களும் சேர்க்கப்படுகின்றன. மேலும் இவை கிராமப்புற ஏழை எளியோரின் மேல் ஒரு அக்கறையை ஏற்படுத்துவதோடு, அவர்களுக்கு ஒரு முக்கியத்துவத்தையும் அளிக்கிறது. நமது உணவுப்பழக்க வழக்கத்திலும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. பீட்டா கேராட்டின், புரோட்டீன், வைட்டமின் சி, சுண்ணாம்பு, இரும்பு ஆகிய சத்துக்களின் உறைவிடமாக இவ்வகை கீரைகள் விளங்குகின்றன. எனவே இந்த வகை கீரைகளை அதிகளவில் பிரபல்யப்படுத்த வேண்டும். அனைவரும் இவற்றை தங்களது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூலம்: LEISA India, Vol 6-1

சிறியது அழகு

போல்பூர் நகரில் உள்ள புறகணிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் ராக்கி தூரி என்பவர் ஒரு நல்ல வீட்டை பராமரிக்கும் பெண்மணியாக மட்டுமல்லாமல், போலாபுக்கூர் சுய உதவி குழுவின் அங்கத்தினராகவும் உள்ளார். இவரின் கணவர் பிகாஸ் தூரி, ரிக்ஷா ஓட்டுனர். அவருடைய மாத வருமனம் ரூபாய் 1650/-. அது, ஐந்து அங்கத்தினரையுடைய அவருடைய குடும்பத்திற்கு போதுமானது அல்ல. இந்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த குடும்பமானது அரசாங்கத்தால் பட்டியியலிடப்பட்டுள்ள வறுமை கோட்டிற்கு கீழான குடும்பங்கள் பட்டியியலிலும் இடம் பெற்றுள்ளது. ராக்கி வேலை தேடி கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அப்பொழுதுதான் கே.யு.எஸ்.பி. யின் “நவீன சவால்களின் நிதி” யின் உதவி கொண்டு DRCSC யானது மண் புழு உரம் தயாரிக்கும் தொழிலை அறிமுகபடுத்தியது. ராக்கி துரியும் அவரது குழுவினரும் இந்த தொழிலை தொடங்க ஆர்வம் காட்டினர்.

இந்த திட்டத்தில் குழுவிற்கு பதினைந்து பெண் உறுப்பினர் கொண்ட ஐந்து குழுக்கள் அமைக்க நோக்கமிடப்பட்டது. இந்த குழுக்கள் போல்பூர் விற்பனை கூடங்களிலிருந்து காய்கறி கழிவுகளை கொண்டு மண் புழு உரத்தை தயாரிக்கும் தொழிலை தொடங்கினர். போலாபுக்கூர் – 1 குழுவினர் ஜமுபோனியிலுள்ள நிறுவனமாகிய “ஸப்போர்ட்” என்ற நிறுவனத்தின் நிலப்பரப்பில் மண்புழு உரம் தயாரிப்பதற்கான குழிகளை உருவாக்க தீர்மானித்தனர். குழு உறுப்பினர்கள் மண்புழு உரம் தயாரிப்பதற்கான பயிற்சியினையும் பெற்றனர். குடும்பத்தில் உள்ள ஆண்களும் விற்பனை கூடங்களிலிருந்து காய்கறி கழிவுகளை கொண்டு வருவதற்கு உதவினர். பெண்கள் வைக்கோல் மற்றும் மாட்டு சாணம் போன்றவற்றையும் சேகரிக்க தொடங்கினர். நல்ல தரமான மண்புழு கொண்டு மண்புழுஉரம் தயாரிக்க தொடங்கினர். அதற்கு “பசுந்தார மண்புழு உரம்” என்று பெயரிடவும் திட்டமிட்டனர். இரண்டு தொட்டிகளிலிருந்து ஒரு மாதத்தில் மட்டும் 400 கிலோ உரம் உற்பத்தி செய்தனர். இப்பொழுது உற்பத்தி செய்த உரத்தை விற்பதற்கான வேளை வந்து விட்டது. ஒரு கிலோ உரமானது ரூபாய் 10/ ற்கு விற்பது என்று முடிவு செய்யப்பட்டது. விற்பனை செய்த பின்பு ரூபய் 1000/- குழிகளை தோண்டுவதற்காக சேமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மீதம் உள்ள தொகையானது குழு உறுப்பினர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படுவது என்று முடிவு செய்யப்பட்டது.

ராக்கி தூரி, தன்னுடைய வழக்கமான வீட்டு வேலைக்கு பிறகு ஒர் நாளைக்கு 1-2 மணி நேரம் இதற்காக வேலை செய்தார். அவருடைய கணவரும் தன்னுடைய ரிக்ஷாவை தேவையான பொருட்களை கொண்டு வருவதற்கும் விளம்பரம் செய்வதற்கும் பயன்படுத்துவதன் மூலம் சிறிது வருமானத்தை பெற்று வந்தார். ராக்கி தூரி, தனக்கு கிடைக்கும் நேரத்தில் ஒரு தொழிலை செய்வதன் மூலம் தனக்கு கிடைக்கும் வருமானத்தை குறித்து மகிழ்ச்சியாக உள்ளார். எதிர்காலத்தில் இந்த தொழிலை பெரிய அளவில் செய்ய உள்ளதாகவும் கூறுகிறார்.

தகவல்: DRCSC newsletter, Issue 6

ஊடுப்பயிர் முறை - மானாவாரி விவசாயிகளின் நம்பிக்கை

சித்ரதுர்கா, பெல்லாரி மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளான சின்னகக்ரி, உப்பாரகல்லா ஆகியவை, கர்நாடகா மாநிலத்தின் வறட்சியான பகுதிகள் ஆகும். இந்த பகுதிகள் அடிக்கடி வறட்சியால் பாதிக்கப்படும். ஆழமில்லா மண்கண்டம், இயற்கை எருக்கள் குறைந்த மண், குறைந்த நீர்பிடிப்புத்தன்மை ஆகிய காரணங்களால் நிலக்கடலையைத்தவிர வேறு பயிர்கள் சாகுபடி செய்ய முடிவதில்லை. வருடம் முழுக்க நிலக்கடலைதான் சாகுபடியாகிறது. சுமார் 80% விவசாயிகள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு நிலக்கடலையை நம்பி இருக்கின்றனர். விவசாயக் கூலி மற்றும் கிராமம்விட்டு நகரங்களை நோக்கி செல்லுதலை விட்டால் வேறு வழியுமில்லை. கடந்த 30 வருடங்களாக நிலக்கடலைப்பயிர் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. முக்கிய காலகட்டங்களில் கிடைக்கும் 300 மி.மீ மழையைக்கொண்டு ஒரளவுக்கு மதிப்புமிக்க விளைச்சல் நிலக்கடலைப்பயிரில் எடுக்கப்படுகிறது. கால்நடைகளுக்கு தீவனமும் கிடைக்கிறது. சரியான அளவு மழை கிடைக்கும் காலங்களில் ஒரு ஏக்கரில் கிடைக்கும் நிகர வருமானம் 2000 முதல் 3000 ரூபாய் ஆகும்.

2002-க்கும் 2005-க்கும் இடைப்பட்ட காலத்தில், விவசாயிகளின் உணவு உற்பத்தியையும், வருமான பாதுகாப்பையும் மனதில்கொண்டு, கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டமானது (KAWAD), வறட்சிப் பகுதிகளில் துவக்கப்பட்டது. கரை அமைத்தல், நீரோட்ட பாதையில் நீர் சேமிப்பு, நீர் ஆதாரங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இத்திட்டத்தின் மூலம் நிறைய பணிகள் செய்யப்பட்டன. விவசாயம் மனிதன் உயிர்ச்சூழல் நிறுவனம் (AMEF) இத்திட்டத்தின் கூட்டாளி என்ற முறையில், செயல்பாடுகளை வழிநடத்தினர்.

மண்னை மேம்படுத்துல், மண் ஈரம் பாதுகாப்பு, மண்ணிலுள்ள சத்துக்களை அதிகப்படுத்துல் தவிர, AME நிறுவனம், நிலக்கடலை மட்டுமே சாகுபடி செய்வதைத் தவிர்த்து மற்ற பயிர்களையும் விவசாயிகளின் நினைவுக்கு கொண்டு வந்தது. ஆனால் நிலக்கடலை ஒரு பணப்பயிராக இருந்ததால் அதைத் தவிர்த்து தானியப்பயிர்களுக்கு மாறுவதை விவசாயிகள் விரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் தானியப்பயிர்களுக்கு மாற்றுப்பயிராக ஒரு பயிரைக் கொண்டு வருவது குறித்து யோசிக்கப்பட்டது. ஏழைகளுக்கேற்ற பயிர் என்றழைக்கப்படும் சிறுதானியங்கள், வறட்சியினை தாங்கி வளரகூடியவை. இவைகளுக்கு, முளைப்பதற்கு மட்டும் ஈரம் தேவைப்படுகிறது. முளைத்து வந்த பிறகு கண்டிப்பாக ஒரு கணிசமான விளைச்சலை சிறுதானியங்கள் அளிக்கும். இந்த தானியப்பயிர்களை, நிலக்கடலையின் நடுவே ஊடுபயிராக வரிசையில் பயிரிட விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுட்பமே அகன்ற வரிசை ஊடுப்பயிர் முறை என்றழைக்கப்பட்டது.

அகன்ற வரிசையில் ஊடுப்பயிர் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர்

அகன்ற வரிசை ஊடுப்பயிர் சாகுபடி தொழில் நுட்பம் விவசாயிகளுக்கு புதிதானது. விவசாயிகளுக்கு இந்த நுட்பத்தில் மனதளவில் ஒரு பயம் இருந்தது. தானியப்பயிர்களின் நிழல் விழுவதால் ஏற்படும் பாதிப்பு பற்றிய அபாயத்தையும் விவசாயிகள் சந்திக்க தயாராகினர். நிலக்கடலையில் ஊடுபயிராக கம்போ அல்லது கேழ்வரகோ சாகுபடி செய்தால் வருமானம் குறைந்துவிடுமோ என்றும் பயந்தனர். கேழ்வரகோ அல்லது கம்போ, ஊடுபயிர்களாகக் கூறப்பட்டாலும் கேழ்வரகே நிலக்கடலையில், சேர்த்து சாகுபடி செய்யப்பட்டது.

நடைமுறைக்கஷ்டங்கள்

இந்த நுட்பத்தை கடைபிடிப்பதில் சில நடைமுறைக் கஷ்டங்கள் இருப்பதை விவசாயிகள் உணர்ந்தனர். நிலக்கடலை விதைகளை விதைப்பதற்கு காளைமாடு கொண்டு இயக்கப்படும் 3 விதைகளை விதைக்கும் கருவி பயன்படுத்தப்பட்டது. விவசாயிகள் 9 நிலக்கடலை வரிசைக்கு 6 வரிசை கேழ்வரகு விதைக்க ஒத்துக் கொண்டனர். விதையின் அளவில் மாற்றம் இருந்ததால் வேலையாட்களை உபயோகித்து ஊடுப்பயிர்களை சரியான ஆழத்தில் விதைக்க முயற்சி எடுத்தனர். சரியாக விதைகளை விதைத்தாலும் சில விவசாயிகளின் வயல்களில் முளைப்புதிறன் எதிர்பார்த்த அளவு இல்லை. கேழ்வரகில் வெட்டுக்கிளியின் தாக்கம் இருந்ததால் பயிரின் வளர்ச்சி சுமாராகவே இருந்தது. இதன் காரணமாக சில விவசாயிகள் மீண்டும் நிலக்கடலை சாகுபடிக்கு சென்றனர். தெற்கு வடக்கில் நிலக்கடலை விதைப்பு மேற்கொண்டபோது, கேழ்வரகு வளர்ந்து நிழல் உண்டாகியதால் நிலக்கடலை சரியாக வளரவில்லை. இருந்தும் கடைசிவரை 27 விவசாயிகள் இந்த வரிசை மாற்றுப் பயிர் முறையை தொடர்ந்து கடைபிடித்தனர்./p>

வருமானத்திற்கும் மேல்

வரிசையில் மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு நிலக்கடலை 276 கிலோ சராசரியாக கிடைத்தது. தனிப்பயிர் என்றால் 362 கிலோ கிடைத்துள்ளது (அட்டவணை). இது பார்ப்பதற்கு குறைவு என்றாலும் குறுகிய கால மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தில் சேர்ந்து விதைக்கப்படும் சிறுதானியங்கள் 125 கிலோ விளைச்சல் கொடுத்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மொத்தத்தில் விவசாயிகள் 5507/-ரூபாய் வருமானம் பார்த்துள்ளனர். அதாவது நிலக்கடலை, சிறுதானியங்களையும், அதன் கழிவுகளை கால்நடைத் தீவனமாக விற்பனை செய்ததிலும், தங்களுடைய குடும்ப அங்கத்தினர்கள் உணவாக உட்கொண்டதையும் சேர்த்து இவ்வளவு வருமானம் கிடைத்திருக்கிறது.

சின்னகக்ரி, உட்பாரகல்யா ஆகிய இரண்டு நிர்ப்பிடிப்பு பகுதிகளில் வரிசையில் மாற்றுப்பயிராக நிலக்கடலை உப்பாரகல்லாவில் நிறைய விளைச்சலை அளித்துள்ளது. இதிலிருந்து, சராசரி மழை குறைவாக இருந்தபோதிலும் வரிசையில் மாற்றுப்பயிர்த் திட்டம் வறட்சிப்பகுதிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் எனத் தெரியவருகிறது

அட்டவணை: பல்வேறு பயிர்சாகுபடி திட்டங்களில் நிலக்கடலையின் விளைச்சல்

சாகுபடித் திட்டம்

தனிப்பயிர் (நிலக்கடலை )

தனிப்பயிர்+வரிசையில் மாற்றுப்பயிர்திட்டம் (நிலக்கடலை + கேழ்வரகு)

(நிலக்கடலை)

நிலக்கடலை

கேழ்வரகு

விளைச்சல் (கிலோ/ஏக்கர்)

 

 

 

பருப்பு/ தானியம்

362

276

125

தீவனம்

636

624

467

நிகரவருமானம் (ரூபாயில்)

 

 

 

பருப்பு/ தானியம்

5784.00

4416.00

தீவனம்

636.00

624.00

467.00

 

 

5040.00

467.00

மொத்தம் (ரூபாயில்)

6420.00

5507.00 + குடும்பத்திற்கு உணவாக பயன்படுத்தப்படும் தானியம்

நிலக்கடலையும் கேழ்வரகையும் இணைந்து சாகுபடி செய்வது பூச்சித்தாக்குதலைக் குறைக்கிறது. சாறு உறிஞ்சும் பூச்சியான இலைப்பேனுக்கு (இது ஒரு வைரஸ் நோயையும் பரப்பக்கூடியது) இது ஒரு தடுப்பானாகவும் விளங்குகிறது. மண்ணிலிருந்து பரவக்கூடிய நோய்களும், பயிர்களை மாற்றி மாற்றி சாகுபடி செய்வதால், அதன் முழு பாதிப்பை வெளிப்படுத்த முடியவில்லை

கேழ்வரகை இந்த திட்டத்தில் கொண்டு வந்தது, பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, காரணம் குடும்ப அங்கத்தினர்கள் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதால்! பெண்களும், கீரை வகைகளையும், குறுகிய காலப் பயறுவகைகளையும் வயல்வரப்புகளில் சாகுபடி செய்து, உள்ளூரில் விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் வருமானமும் அவர்களுக்கு கிடைக்கிறது இருந்தாலும் இந்தப் புதியதிட்டம் அவர்களுடைய அன்றாடப் வேலைப்பளுவில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

சாதாரண முறை சாகுபடியில், விவசாயிகள் நிலக்கடலை அறுவடையின் போது, பயிர் முழுவதையும் மண்ணிலிருந்து பிடுங்கி எடுத்து விடுவார்கள், மண்ணில் எதுவும் இருக்காது. ஆனால் தானியப்பயிர்களை சேர்த்து சாகுபடி செய்யும்போது, அவற்றின் அறுவடைக்குப்பின் இலை தழைகள், வேருடன்கூடிய தட்டைகளை மண்ணிலேயே விட்டுவிடுவதால், அவை இயற்கையாக மக்கி மண்வளத்தை அதிகரிக்கிறது.

நிலக்கடலை சாகுபடியாளர்கள் வைக்கோலை வெளியிலிருந்து வாங்கி, நிலக்கடலையை அறுவடை செய்து சேமிக்க பயன்படுத்துவர். இப்போது சோளத்தின் தட்டைகளை, நிலக்கடலை குவியல்கள் மேல் போட்டு அவற்றை மூடி பாதுகாக்க பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் வைக்கோல் வாங்கும் செலவு மிச்சப்படுத்தப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு,
விவசாயம் மனிதம் உயிர்ச்சூழல் நிறுவனம்,
204, 100அடி வளைவுசாலை, 3வது பகுதி, பனசங்கரி,
2வது வட்டம், 3வது நிறுத்தம், பெங்களுரு 560 085.

மூலம்: LEISA India, Vol 7-2

மெண்டப்பள்ளியில் பருப்பு மில் மூலம் ஊட்டச்சத்து பாதுகாப்பு

ஆந்திராவின் மெஹபூப்நகர் மாவட்டத்தின், மெண்டப்பள்ளி கிராமம், வறண்ட கிராமம் ஆகும். ஒரு ஆண்டில் ஜீன் முதல் செப்டம்பர் வரை 650 மி.மீட்டர் மழைபெறும் ஒரு சாதாரண பகுதி இது. இக்கிராமத்தில் சிறு நில, குறு நில விவசாயிகளே அதிகம். ஒரு ஆண்டில் ஒரு பருவத்தில் மட்டுமே பயிர் சாகுபடியை மேற்கொள்கின்றனர். வறட்சி நிலவும் காலங்களில் வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் வேலை தேடி செல்கின்றனர்

சோளம், மக்காச்சோளத்துடன் துவரை முக்கியப் பயிராக விவசாயிகள் இப்பகுதியில் சாகுபடி செய்கின்றனர். மண் மூலம் பரவும் பேக்டீரியல் வாடல் நோய் ஒரு முக்கிய நோய். இதனால் விளைச்சல் இழப்பு அதிகம் ஏற்படும். ஹைத்ராபாத் இக்ரிசாட் மையத்தின் உதவியுடன், இப்போது விவசாயிகள் வாடல் நோயைத் தாங்கி வளரக்கூடிய ‘ஆஷா’ என்ற துவரை இரகத்தை சாகுபடி செய்து அதிக விளைச்சல் எடுத்து வருகின்றனர். உள்ளுர் இரகங்களைக் காட்டிலும் இந்த இரகம் 20-30 சதம் அதிக விளைச்சல் கொடுத்துள்ளதாம்.

துவரை அறுவடை செய்த பிறகு, கையால் இயக்கப்படும் கல் இயந்திரத்தின் மூலம், ஆண்கள் பருப்பை உடைப்பார்கள். ஆனால் ஆண்கள் கிராமங்களிலிருந்து நகர்புறங்களை நோக்கி வேலைக்காக செல்லத்துவங்கியபின் இப்பணி செய்யப்படாமலே போய்விட்டது. எனவே, மெண்டப்பள்ளி கிராமத்தில் உற்பத்தி செய்யப்பட்ட துவரை சந்தையில் ஒரு கிலோ 12-14 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு, அவர்கள் உபயோகத்திற்கு, உடைத்த பருப்பை ஒரு கிலோ 22 ரூபாய்க்கு வாங்கி வருவார்கள்.

குறைந்த விலைக்கு விற்று, அதிக விலைக்கு வாங்குவதைத் தடுத்து நிறுத்த மெண்டப்பள்ளி கிராம மக்களுடன் இக்ரிசாட் மையத்தின் நீர்வடிப்பகுதி உறுப்பினர்கள் கலந்துரையாடல் செய்தனர். கிராம மக்களும் நீர்வடிப்பகுதி உறுப்பினர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்தனர். அதாவது தங்களுடைய சொந்த தேவைக்கான துவரை உடைத்து பயன்படுத்த சம்மதித்தனர். SDDPA என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் இதற்கு உறுதுணையாக இருந்தது. மெண்டபள்ளி கிராம மகளிர் சுய உதவிக் குழுவினரை ஊக்குவித்து இப்பணியை மேற்கொள்ள இந்நிறுவனம் உறுதுணையாக இருக்கிறது. இந்த கிராமத்தில் ஒரு சிறிய சாதரண பருப்பு மில் ஆலை நிறுவப்பட்டுள்ளது. நிறுவப்பட்டபின் அந்த இயந்திரங்களை இயக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது.

மகளிர் சுய உதவிக்குழு மின்சார செலவிற்குத் தேவையான பணத்தை சேகரித்து வழங்கியது. ஒரு கிலோ பருப்பை உடைக்க எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதையும் நிர்ணயம் செய்தது. இப்படியாக கிராம மக்கள் தங்களது துவரம் பருப்பை நியாயமான விலையில உடைத்து பயன்படுத்தினர். உடைத்த பிறகு கிடைக்கும் கழிவு கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டது.

கிராமத்தில் அமைக்கப்பட்ட இந்த சிறிய பருப்பு ஆலைகளில் உடைக்கப்பட்ட துவரம்பருப்பு சாதாரணமாகவே இருந்தது. நல்ல பளபளப்பா இல்லை. இதனால் உள்ளூரில் மட்டுமே இந்த துவரம்பருப்பு பயன்படுத்தப்பட்டது. “ஆஷா ”- துவரை இரகம் மொழு மொழுப்பான பருப்பாகவும் சமைப்பதற்கு ஏற்றதாகவும் இருந்ததால் கிராமப்புற பெண்டிர் இதையே பயன்படுத்தினர்.

தற்போது இந்த பருப்பு ஆலை நல்ல முறையில் இயங்கி வருகிறது. மெண்டபள்ளி துவரையை, பயன்படுத்துவதற்கு உகந்த பருப்பாக மாற்றப்படுவதால் (சுமார் 90 சதம் பருப்பு கிடைக்கிறதாம்) கிராமவாசிகளின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். அதாவது அவர்கள் தனது குடும்பத்தினர் சாகுபடி செய்த துவரையையே சமைக்கிறோம், சாப்பிடுகிறோம் என்பதால் மகிழ்ச்சி அடைகின்றனர். பருப்பு ஒன்றே புரதச்சத்துக்கு முக்கிய ஆதாரமாக இருப்பதால் அந்த கிராம மக்கள் சத்துக்கள் செறிந்த உணவு தங்களுக்கு எளிதில் கிடைப்பது சந்தோஷத்தை அளிக்கிறது என்கின்றனர்.

வெற்றியும், விரிவாக்கமும்

சிறிய பருப்பு ஆலை வெற்றிகரமாக இயங்க மூன்று காரணிகள் முக்கியமானவை. முதலில் ஆலை இயக்குதல் என்பது மிக எளிதாக இருக்கிறது. இரண்டாவது துவரையை பிரித்தெடுப்பது- கிராம வாசிகள் செய்வது போலவே இருந்தது (அதாவது துவரையை ஓரிரவு தண்ணீரில் ஊற வைத்து 2-3 நாட்கள் வெயிலில் காய வைத்து பின் உடைப்பது). மூன்றாவது சாதாரண வீட்டு மின் இணைப்பிலேயே இந்த பருப்பு ஆலையை இயக்குவது என்பது எளிமையாக இருக்கிறது.

மெண்டப்பள்ளி கிராமத்தில் வெற்றிகரமாக இயக்கப்படும் பருப்பு ஆலை மற்ற கிராமங்களுக்கும் வேகமாக பரவிவருகிறது. மற்ற கிராம மக்களும் தங்களது துவரையை மெண்டபள்ளி கிராமத்தில் உடைத்து பருப்பாக்கி பயன்படுத்துகின்றனர்.

அகில உலக வெப்பமண்டல பயிர் ஆராய்ச்சி நிலையத்தினர் திட்ட செலவில் நிறுவியுள்ள ஆலையை வேறு கிராமத்திற்கு மாற்ற இருப்பதால், மெண்டப்பள்ளி மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்களது கிராமத்திற்கு ஒரு பருப்பு ஆலை வாங்க திட்டமிட்டுள்ளனர். இத்திட்டம் வெற்றி அடைந்துள்ளதால் இந்த பருப்பு ஆலைத்திட்டம், துவரை அதிகம் சாகுபடியாகும் கர்னூல் மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் விரைவாக பரவி வருகிறது.

மூலம் : LEISA India, Vol 6-3

இயற்கை வேளாண்மை – முக்கிய கோட்பாடுகளும், செயல்பாடுகளும்

இயற்கை வேளாண்மையின் முக்கிய கோட்பாடுகள்

பன்னாட்டு அளவிலான இயற்கை வேளாண்மை இயக்கம் (International federation for organic agriculture movement) இயற்கை வேளாண்மையை, கீழ்க்கண்ட முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது.

1. ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு
இயற்கை வேளாண்மையானது மண், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் நலத்தினை மொத்தமாக கணக்கில் கொண்டு அவற்றை நீடித்த நிலைத்த முறையில் மேம்படுத்தும் வகையில் செயல்படவேண்டும்.

2. உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு
காணப்படும் உயிர்ச்சூழல் நிலைகளின் முறைகள் மற்றும் சுழற்சிக்கேற்ப இயற்கை வேளாண்மை இயைந்து செயல்பட்டு, சுற்றுப்புறசூழலின் வாழ்வியலுக்கு உதவிட வேண்டும்

3. நடுநிலையாக செயல்படுதல் பற்றிய கோட்பாடு
வாழ்வியல் வாய்ப்புகளுக்கேற்பவும், பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் அவற்றுடன் இயற்கை வேளாண்மை உறவுகளை ஏற்படுத்தி நடுநிலையாக செயல்படவேண்டும்.

4. பராமரிப்பு பற்றிய கோட்பாடு
தற்பொழுது வாழும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் ஏற்றவாறு இயற்கை வேளாண்மை கவனமான மற்றும் பொறுப்பான முறையில் செயல்படவேண்டும்.

மேற்கூறப்பட்ட கோட்பாடுகள் அனைத்தும் ஒருசேர கடைபிடிக்கப்படவேண்டும்.

இயற்கை வேளாண்மையின் முக்கியமான குணங்கள்
 • ஒரு பகுதியில் கிடைக்கும் புதுப்பிக்கவல்ல மூலாதாரங்களை உபயோகப்படுத்துதல்
 • உயிராதாரங்களின் உற்பத்தித் திறன் மற்றும் சூரிய ஒளியினை முறையாகப் பயன்படுத்துதல்
 • மண்ணின் வளத்தினை பராமரித்தல்
 • தாவர மற்றும் கரிம சத்துகளை அதிகபட்சமாக மறுசுழற்சி செய்தல்
 • இயற்கைக்கு மாறான பொருட்களையோ அல்லது உயிரினங்களையோ உபயோகப்படுத்தாமல் இருத்தல் (உதாரணமாக வேதியில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை உபயோகித்தல்)
 • விவசாய நில உபயோகம் மற்றும் உற்பத்தி முறையில் பல்லுயிர் பெருக்க முறைகளை உபயோகித்தல்
 • பண்ணை விலங்குகளை அவற்றின் சுற்றுப்புற வேலைகளுக்கேற்ப அவற்றினை பராமரித்தல் மற்றும் அவற்றின் இயற்கையான குணநலன்களை அனுமதித்தல்

இயற்கை வேளாண்மையானது சுற்றுப்புற சூழ்நிலையுடன் இயைந்த உற்பத்தி முறையாகும். இம்முறை வேளாண்மையானது சிறிய விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை தரவல்லது. இயற்கை வேளாண்மை மூலம் வறுமையினை ஒழிக்கவும், உணவுப்பாதுகாப்பினையும் கீழ்க்கண்ட செயல்முறைகளின் மூலம் உதவுகிறது.

 • குறைந்த வேளாண் இடுபொருள் உபயோகப்படுத்தும் இடங்களில் விளைச்சலை அதிகப்படுத்துதல்
 • புவியில் வாழும் பல்வேறு உயிர்களை பாதுகாக்கவும், பண்ணையிலுள்ள மற்றும் அதனை சுற்றியுள்ள இயற்கை மூலாதாரங்களை பாதுகாத்தல்
 • உற்பத்தி செலவினை குறைத்து வருமானத்தினை அதிகப்படுத்துதல்
 • பாதுகாப்பான, பல்வேறு விதமான உணவுகளை உற்பத்தி செய்தல்
 • நீண்ட நாட்களுக்கு வேளாண் உற்பத்தியினை பராமரித்தல்
இயற்கை மேலாண்மை- ஒரு ஒருங்கிணைந்த செயல்முறை

தத்துவம்

 • இயற்கை வேளாண்மை பண்ணையிலுள்ள அனைத்து உற்பத்தி முறைகளும் ஒன்றோடொன்று இணைத்து, ஒரு உற்பத்தி முறைக்கு மற்ற உற்பத்தி முறை உதவும்  வகையில்  செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த முறையாகும்.
 • பயிர்களின் சத்தின் ஆதாரமாகவும், பல்வேறுபட்ட உயிராதாரங்களின் மூலம் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், சுழல் முறையில் பயிரிடுதல், பல்வேறு பயிர்களை ஒருசேர  பயிரிடுவதன் மூலம் மண்ணின் வளத்தினை பாதுகாத்தல், மாடுகளின் மூலம் பண்ணையிலுள்ள ஆதாரங்கள் மேலாண்மை மற்றும் உற்பத்தியினை அதிகப்படுத்துதல் போன்ற அனைத்திற்கும் நலமான உயிர் ஓட்டமுள்ள மண் அவசியம்.
 • இயற்கை முறை மேலாண்மையின் மூலம் தேவைக்கு அதிகமாக மூலாதாரங்களை பயன்படுத்தி அதிக விளைச்சலை ஏற்படுத்தாமல், தேவைக்கேற்ப மூலதாரங்களை உபயோகித்து உற்பத்தியினை பெருக்குவதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை மூலாதாரங்களை சேமித்து வைத்தல்
முக்கியமான படிகள்
 • மண்வளத்தினை அதிகப்படுத்துதல்
 • வெப்பநிலையினை மேலாண்மை செய்தல்
 • மழைநீரை சேமித்தல்
 • சூரிய ஆற்றலை அதிகபட்சமாக சேமித்தல்
 • இடுபொருட்கள் தேவை பூர்த்தி செயவதில் தன்னிறைவு
 • இயற்கை சுழற்சி முறைகள் மற்றும் உயிர்வாழ் முறைகளை பராமரித்தல்
 • விலங்குகளை ஒருங்கிணைத்தல்
 • புதுப்பிக்கவல்ல ஆற்றல்களை அதிகமாக சார்ந்திருத்தல் (உதாரணமாக விலங்கின ஆற்றல்)
எப்படி அடைவது

1. மண்வளத்தினை அதிகப்படுத்துதல்
வேதியியல் பொருட்களை வேளாண் உற்பத்திக்கு உபயோகப்படுத்தாமல் இருத்தல், பயிர் உப பொருட்களை உபயோகப்படுத்துதல், கரிம மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்துதல், பயிற்சுழற்சி முறை மற்றும் பல்வேறு பயிர்களை பயிரிடுதல்,  அதிகமாக மண்ணினை தோண்டாமல், மண்ணின் மீது பசுந்தாழ் உரங்கள் மற்றும் உயிர் பொருட்களை இடுதல்

2. வெப்பநிலை மேலாண்மை செய்தல்
மண்ணின் மீது பசுந்தாழ் உரங்களை போட்டு மூடி வைத்தல் மற்றும் வரப்புகளில் மரங்கள் மற்றும் புதர் வகை தாவரங்களை நடுதல்

3. மண் மற்றும் மழைநீரினை சேகரித்தல்
மழைநீரினை சேகரிக்க சேகரிப்பு தொட்டிகளை கட்டுதல், சரிவான நிலங்களில் மழை நீரினை சேகரிக்க வரப்பு போன்ற அமைப்புகளை நிறுவதல், சரிவான இடங்களில் வரிசையாக மரங்களை நடுதல், பண்ணைக்குட்டைகளை தோண்டுதல், குறைந்த உயரமுடைய செடிகளை வரப்புகளில் நடுதல்

4. சூரிய ஆற்றலை சேகரித்தல்
பல்வேறு வகை பயிர்களை நடுவதன் மூலம் வருடம் முழுவதும் பசுமையினை வயல்களில் பராமரித்தல்

5. இடுபொருட்கள் தேவை பூர்த்தி செயவதில் தன்னிறைவு

உற்பத்தி செய்த விதைகளை உபயோகித்தல், பண்ணையிலேயே உரத்தினை உற்பத்தி செய்தல், மண்புழு உரம், திரவ உரம், தாவர கழிவுகளை உபயோகித்தல்

6. உயிராதாரங்களை பராமரித்தல்
உயிரினங்கள் வாழ்வதற்கு போதுமான, தகுந்த வாழ்விடங்களை உருவாக்குதல், பூச்சிக்கொல்லிகளை எப்பொழுதும் உபயோகிக்காமல் இருத்தல், பல்வேறு பட்ட உயிரனங்களை பெருக்குதல்

7. விலங்குகளை ஒருங்கிணைத்தல்
இயற்கை வேளாண்மையின் மிக முக்கியமான அம்சம் கால்நடைகளாகும். இவை அவற்றின் உற்பத்தி பொருட்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல், சாணம், மற்றும் சிறுநீர் போன்ற மண் உரங்களையும் அளிக்கின்றன.

8. புதுப்பிக்கவல்ல ஆற்றலை உபயோகித்தல்
சூரிய ஆற்றல், சாண எரிவாயு, காளைகளின் மூலம் நீர் இறைக்கும் பம்புகள், ஜெனரேட்டர் மற்ற இதர இயந்திரங்களை உபயோகித்தல்.

இயற்கை வேளாண் பண்ணையினை உருவாக்குதல்

இயற்கை முறை வேளாண்மை மேலாண்மை ஒரு ஒருங்கிணைந்த முறையாகும். சில இயற்கை வேளாண்மை வழி முறைகளை பின்பற்றினால் மட்டும் குறிப்பிடத்தக்க விளைச்சலை பெற இயலாது. வேளாண் உற்பத்தியினை அதிகரிக்க தேவையான எல்லா அம்சங்களும் முறையாக செயல்படுத்தப்படவேண்டும். இந்த வழிமுறைகளாவன. 1.வாழ்விடத்தினை உருவாக்குதல் 2. வேளாண் இடுபொருட்களை தயாரிக்க பண்ணையில் வசதிகளை ஏற்படுத்திடல் 3. பயிற்சுழற்சி மற்றும் பல பயிர் சாகுபடிக்கு திட்டமிடுதல் 4. 3-4 வருட அளவிலான பயிற்சுழற்சி முறை 5. புவி அமைப்பு, மண், சீதோஷ்ண நிலைக்கேற்றவாறு பயிரிடுதல்

இயற்கை வேளாண் பண்ணையினை உருவாக்குதல்

இயற்கை முறை வேளாண்மை மேலாண்மை ஒரு ஒருங்கிணைந்த முறையாகும். சில இயற்கை வேளாண்மை வழி முறைகளை பின்பற்றினால் மட்டும் குறிப்பிடத்தக்க விளைச்சலை பெற இயலாது. வேளாண் உற்பத்தியினை அதிகரிக்க தேவையான எல்லா அம்சங்களும் முறையாக செயல்படுத்தப்படவேண்டும். இந்த வழிமுறைகளாவன. 1.வாழ்விடத்தினை உருவாக்குதல் 2. வேளாண் இடுபொருட்களை தயாரிக்க பண்ணையில் வசதிகளை ஏற்படுத்திடல் 3. பயிற்சுழற்சி மற்றும் பல பயிர் சாகுபடிக்கு திட்டமிடுதல் 4. 3-4 வருட அளவிலான பயிற்சுழற்சி முறை 5. புவி அமைப்பு, மண், சீதோஷ்ண நிலைக்கேற்றவாறு பயிரிடுதல்

i. உள்கட்டமைப்பு
 • பண்ணையில் 3-5% சதவிகித இடத்தினை, மாடுகள், மண்புழு உரத்தயாரிப்பு, உர உற்பத்தி கிடங்கு, போன்றவற்றிற்கேற்றவாறு ஒதுக்கிடவேண்டும்
 • மழைநீரினை சேமிக்க, 7X3X3 மீட்டர் அளவிற்கு குழிகளை வெட்டி மழைநீரினை சேகரிக்க வேண்டும். இவ்வாறான குழிகளை ஒரு ஹெக்டேருக்கு ஒரு குழி என்ற விகிதத்தில் சறுக்கலாக அதிக மழைநீர் சேகரிக்கும் இடங்களில் தோண்டவும்.
 • முடியுமானால், 20 மீட்டருக்கு 10 மீட்டர் என்ற அளவிலான பண்ணைக்குட்டையினை நிறுவலாம்
 • திரவ உரத்தினை தயாரிக்க ஒரு ஏக்கருக்கு ஒரு 200 லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டியினை நிறுவ வேண்டும். மற்றும் சில தொட்டிகள் தாவர கழிவுகளை போடுவதற்கும் நிறுவ வேண்டும்.
 • 5 ஏக்கர் அளவுள்ள நிலத்திற்கு 1-2 மண்புழு தயாரிப்பு படுக்கைகள், NADEP  கம்போஸ்ட் தொட்டி, 2-3 உரத்தொட்டிகள் போன்றவற்றை நிறுவ வேண்டும்.
 • இவ்விடங்களில், தண்ணீர் பாய்ச்ச கிணறு மற்றும் பம்ப் போன்றவற்றையும் நிறுவலாம்.
ii. வாழ்விடம்
 • கிளைரிசிடியா, மர அகத்தி, சுபாபுல், கேசியா டோரா மற்றும் இதர மண்ணில் உயிர் நைட்ரஜன் தக்க செய்யும் மரங்களை வரப்புகளில் நடவ வேண்டும் (5 ஏக்கர் நில அளவுள்ள பண்ணைக்கு, 1.5 மீட்டர் அகலத்திற்கு, 800-1000மீ நீலம் அளவுக்கு மர வளர்ப்பு தேவை)
 • சில இடங்களில் கீழ்க்கண்ட மரங்கள் அல்லது புதர்செடிகளை நட வேண்டும். எடுத்துக்காட்டாக, வேம்பு -3-4 மரங்கள், புளிய மரம் –ஒன்று, அத்தி மரம் 1-2, இலந்தை புதர்கள் 8-10, நெல்லி -1-2, சீதாப்பழ மரம் அல்லது முருங்கை 2-3 மற்றும் 2-3 பழ மரங்கள்
 • கிளைரிசிடியா மர வரிசைகளுக்கு இடையில் பூச்சிக்கொல்லித்திறன் வாய்ந்த அடொதோடா, நொச்சி, எருக்கு, நெய்வேலி காட்டமணி, ஊமத்தை போன்ற தாவரங்களை நடவும்.
 • பொது உபயோக இடத்திலுள்ள மரங்களை முழுவதும் வளர்வதற்கு அனுமதிக்கவேண்டும். பண்ணை வரப்பிலுள்ள மரங்களையும், புதர் செடிகளையும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு நடுதல் வேண்டும். பின்பு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை வெட்டிவிட வேண்டும்.
 • கிளைரிசிடியா மரக்கன்றுகளை பெரிய வரப்புகளில் நெருக்கமாக பண்ணையினை சுற்றிலும் நடவேண்டும். இவை உயிர் வேலியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மண்ணில் நைட்ரஜன் சத்தினை நிலைநிறுத்தவும் பயன்படுகின்றன.
 • 400 மீட்டர் நீளமுள்ள கிளைரிசிடியா செடிகள், மானாவாரி சூழ்நிலையில், நட்ட மூன்றாம் வருடத்திற்கு பின்பு ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 22.5 கிலோ நைட்ரஜனை ஒரு வருடத்திற்கு தரவல்லது. நட்ட 7 வருடத்திற்கு பின்பு, ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 77 கிலோ நைட்ரஜனைத் தரவல்லவை. நீர்பாய்ச்சும் நிலங்களில் இந்த நைட்ரஜன் அளவு 75-100 சதவிகிதம் அதிகரிக்கும். நீர் பாய்ச்சும் தருணங்களில் வருடத்திற்கு 3-4 முறையும், நீர் பாய்ச்சாத தருணங்களில் 2 முறையும் அறுவடை செய்யலாம். கிளைரிசிடியா செடிகளை 5.5 அடி உயரத்திற்கு மேல் வளரவிடக் கூடாது, ஏனெனில் இந்த உயரத்திற்கு மேல் அவை வளர்ந்தால் நிலத்தில் நிழல் அதிகம் விழும். இதன் இலைகளை பசுந்தாழ் இலை உரமாக பயன்படுத்தலாம் இவற்றை அறுவடை செய்து மண்ணுடன் கலந்து விதை விதைப்பதற்கு முன்பு உரமாக பயன்படுத்தலாம்
இயற்கை வேளாண்மைக்கு மண்ணை தயாரித்தல்

அ. குறைந்த இடுபொருளுக்கான மாற்று வழிமுறை

அ. குறைந்த இடுபொருளுக்கான மாற்று வழிமுறை (

 • முதல் வருடத்தில், ஒரே சமயத்தில் பல்வேறு வயதுடைய பயறு வகை பயிர்களை - அதாவது, முதல் 60 நாட்கள் பயிர், பின் 90-120 நாட்கள் பயிர், பின்பு 120 நாட்கள் பயிர் ஆகியவற்றை,  வரிசையாக பயிரிடலாம். தானியங்களை/பச்சை காய்களை உருவி எடுத்து விட்டு, பின் எல்லா செடிகளையும் களைச்செடிகளுடன் சேர்த்து பசுந்தாழ் உரமாகப் பயன்படுத்தலாம்.
 • இரண்டாம் பருவத்தில் ஒரு ஹெக்டேருக்கு 2.5 டன் என்ற விகிதத்தில் இயற்கை உரத்தினை நிலத்தில் இடவும். பின்பு தானியங்களுடன் பயறு வகைகளையும் ஒன்றாக, ஊடுபயிர் அல்லது தொடர் பயிராகவோ பயிரிடலாம். அறுவடைக்குப்பின் இந்த செடிகளை பசுந்தாழ் உரமாகப் பயன்படுத்த வேண்டும்
 • தண்ணீர் பாய்ச்சும் வசதிகள் இருந்தால் வெயில் காலத்தில் வளரும் பயறு வகை பயிரினை, காய்கறிகளுடன் சேர்த்து பயரிடலாம். அறுவடைக்கு பின்பு இந்த இரண்டு செடிகளையும் சேர்த்து பசுந்தாழ் உரமாகப் பயன்படுத்தலாம்.
 • ஒவ்வொரு பயிரிடும் தருணத்திலும் திரவ உரத்தினை வயல்களில் 3-4 முறை இடவும்

ஆ. அதிக இடுபொருளுக்கான மாற்று முறை

 • மண்ணில் 2.5 டன் தொழுஉரம் அல்லது மண்புழு உரம், 500 கிலோ எண்ணெய் பிண்ணாக்கு, 500 கிலோ ராக் பாஸ்பேட், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 5 கிலோ பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் போன்றவற்றை இடவும்
 • 3-4 வகையான வேறுபட்ட பயிர்களை வரிசையாக விதைக்கவும். இதில் 40 சதவிகிதம் பயறு வகைகளாக இருக்கவேண்டும். அறுவடைக்குப்பின் அடுத்த விதைப்புக்கு முன் எல்லா செடிகளையும் பசுந்தாழ் உரமாக பயன்படுத்தவும். இரண்டாம் விதைப்பு பருவத்திலும் இதே போன்று உரங்களைப் பயன்படுத்தவும்
 • திரவ உரத்தினை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவுக்கு 3-4 முறை பயிரிடும் தருணத்தில் நீருடன் கலந்து வயல்களுக்குப் பாய்ச்சவும்.

12-18 மாதங்களுக்குப் பிறகு இந்த மண் இயற்கை முறை வேளாண்மைக்கு எந்த பயிர்களையும் இணைத்து பயிரிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். அடுத்த 2-3 வருடங்களுக்கு எந்த பயிரிடுடனும் பயறு வகைப் பயிர்களை ஊடு பயிராகவோ அல்லது இணைப்பயிராகவோ பயிரிடலாம். பயறு வகைப் பயிர்களுக்கு குறைந்தது 30 சதவிகிதம் வரை பயிர்க்கழிவுகளாக இருக்கமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். பின்பு இப்பயிர்க்கழிவுகளுடன் திரவ உரத்தினை சேர்த்து அடி உரமாக மண்ணில் இடலாம்.

iv. பலவகையான பயிர்களை பயிரிடுதல் அல்லது சுழற்சி முறையில் பயிரிடுதல்
 • இயற்கை முறை வேளாண்மையில், ஒரு தனிப்பட்ட பயிர் பயிரிடும் முறை பயன்படுத்தப்படமாட்டாது.
 • முழுப்பண்ணையிலும் 8-10 பயிர்கள் எல்லா சமயத்திலும் கண்டிப்பாக பயிரிடப்பட்டிருக்கவேண்டும்
 • ஒவ்வொரு வயலிலும் குறைந்தது 2-4 வகையிலான பயிர்கள் பயிரிடப்பட்டிருக்கவேண்டும். அவற்றுள் ஒன்று கட்டாயாமாக பயறு வகை தாவரமாக இருக்கவேண்டும்
 • சில சமயத்தில் ஒரு வயலில் ஒரு விதமான பயிர் மட்டுமே பயிரிடப்பட்டு இருப்பின், அடுத்த வயலில் வெவ்வேறு விதமான பயிர்களை பயிரிடவேண்டும்
 • மூன்று அல்லது நான்கு வருட பயிற்சுழற்சி முறையினை பின்பற்ற வேண்டும்
 • அதிக சத்துகள் தேவைப்படும் தாவரத்திற்கு முதலில் பயிரிட்டு பின்பு பயறு வகை பயிர்களை பயிரிடவேண்டும்.
 • பல்வேறு விதமான தாவரங்களைப் பயிரிடுவதற்கும், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும், 50-150 காய்கறி செடிகளை தோராயமாக வீட்டு உபயோகத்திற்காகவும், கேந்தி  எனப்படும் துளுக்க சாமந் தி செடிகளை நூறு செடிகள் ஒரு ஏக்கருக்கு என்ற விகிதத்திலும் பயிரடவேண்டும்.
 • பயறு வகை மற்றும் காய்கறி பயிர்களுடன் அதிக சத்துகள் தேவைப்படும் கரும்பு போன்ற பயிர்களையும் போதுமான உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.
v. 5. உயிருள்ள அதிக சத்து மிகுந்த இயற்கை மண்
 • வளமுள்ள, உயிர்ச்சத்து மிகுந்த மண்ணில் கரிம கார்பனின் அளவு, குறைந்தது 0.8-1.5% சதவிகிதம் இருக்கவேண்டும்
 • நுண்ணிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்ளின் உபயோகத்திற்காக எந்த சமயத்திலும் போதுமான அளவு உலர்ந்த, பாதி மக்கிய அல்லது முழுவதும் மக்கிய கரிமபொருள் மண்ணில் இருக்கவேண்டும்
 • ஒரு கிராம் மண்ணில் 1 x 108 என்ற எண்ணிக்கையில் நுண்ணுயிர்களான பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஆக்டினோமைசிட்டிஸ் போன்றவை கட்டாயமாக இருக்கவேண்டும்
 • சிறிய உயிரனங்களும், பூச்சிகளும், எறும்புகளும் கட்டாயமாக போதுமான எண்ணிக்கையில் இருக்கவேண்டும்
vi. மண்ணில் உரமிடுதல் மற்றும் மண்ணை வளப்படுத்துதல்
 • கிளைரிசிடியா மற்றும் இதர வரப்புகளில் வளர்த்தப்பட்ட மரங்களின் கிளைகள், பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட தொழுஉரம், மண்புழு உரம், சாணம் மற்றும் சிறுநீர், பயிர்க்கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி மண்ணின் சத்தினை அதிகப்படுத்தலாம்
 • உயிர்உரங்கள் மற்றும் அடர்த்தியான உரங்களான தூளாக்கப்பட்ட எண்ணெய் பிண்ணாக்குகள், கோழி எரு, காய்கறிகழிவுகள், மற்ற இதர தயாரிக்கப்பட்ட உரங்களை தகுந்த விகிதத்தில் கலந்து போதுமான அளவுகளில் உபயோகிக்கவேண்டும்
 • அதிக அளவிலான தொழுஉரத்தினை உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும்
 • பயிற்சுழற்சி முறையினை மாற்றியமைத்தல், பல்வேறு விதமான பயிர்களைப் பயிரிடுதல் போன்ற யுக்திகளைப் பயன்படுத்தி இடுபொருட்களை நன்றாக உபயோகப்படுத்தவேண்டும்
 • பயிரின் வகை மற்றும் பயிருக்குத் தேவைப்படும் சத்துகளின் தேவைக்கேற்ப பண்ணையின் வெளியில் இருந்து வாங்கி உபயோகப்படுத்தப்படும் இடுபொருட்களின் தேவையினை அறியலாம்
 • மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் மற்றும் இதர உயிர்ப்பொருட்களின் செயல்திறனை பராமரிக்க திரவ உரங்களை மண்ணில் இடுவது அவசியமாகும். எல்லா விதமான பயிர்களுக்கும் 3-4 முறை திரவ உரத்தினை இடலாம்
 • மண்புழு உரம், கம்போஸ்ட் டீ, மாட்டின் சிறுநீர் போன்றவை தெளிப்பாக உபயோகப்படுத்தப்படும் போது பயிர்களின் வளர்ச்சியினை அதிகரிக்கும் தன்மையுடையவை. பயிரினை விதைத்து 25-30 நாட்கள் கழித்து 3-5 முறை இவற்றை தெளிப்பதால் பயிர் உற்பத்தி அதிகரிக்கும்.
 • வெரிமிவாஷ், பசுமாட்டு சிறுநீர் மற்றும் இயற்கை எருக்களின் கரைசல் ஆகியவை மண்ணின் உயிரினங்கள் வளர பெரிதும் உதவுகிறது. விதைத்த 25 - 30 நாட்கள் கழித்து, 3-5 முறை இவற்றை தெளித்தல் அதிக விளைச்சலை கொடுக்கும்.
 • இயற்கை முறை வேளாண் மேலாண்மை ஒரு ஒருங்கிணைந்த செயல் முறையாகும். எல்லா அம்சங்களும் ஒன்றிணைக்கப்பட்ட, தனியாக செயல்படும் திறன் வாய்ந்தவை. ஒரு தனிப்பயிர் ஒரு சமயத்தில் வளர்க்கப்படாததால், ஒரு பயிருக்கான சத்து மேலாண்மையினை  கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாகும். சத்து மேலாண்மை முறையின் ஒரு உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தானிய மற்றும் பயறுவகை பயிர்களை ஒன்றாக பயிரிடல்

ஆடி பருவத்தில் சோளம், கம்பு அல்லது மக்காச்சோளம் அல்லது பருத்தி போன்றவற்றை பயறு வகைகளுடன் சேர்த்து பயிரிடலாம். தானிய வகை செடிகள் மொத்த பயிரிடும் இடத்தில் 60 சதவிகித இடத்தையும், பயறு வகை செடிகள் மொத்த பயிரிடும் இடத்தில் 40 சதவிகித இடத்திலும் வரிசையாக பயிர் செய்யப்படவேண்டும். இந்நிலத்தில் 1.5-2 டன் தொழுஉரம், 500 கிலோ மண்புழு உரம், 100 கிலோ ராக் பாஸ்பேட் போன்றவற்றை ஒன்றாக கலந்து அடியுரமாக இடவேண்டும்.  உயிர் உரங்கள் விதை மற்றும் மண் நேர்த்திக்கு பயன்படுத்தலாம். முன்பு பயிர் செய்யப்பட்ட பயிர்களின் கழிவுகளை திரவ உரத்துடன் சேர்த்து மண்ணின் மேற்பரப்பு முழுவதும் விதைப்புக்கு பின் உடனே இடவேண்டும். களைகளை கையால் எடுக்கவேண்டும். களைகளையும் உரமாக பயன்படுத்திடலாம். 200 லிட்டர் திரவ உரத்தினை ஒரு ஏக்கர் என்ற விகிதத்தில் 3-4 முறை நீர் பாய்ச்சும்போது கலந்து உபயோகிக்கலாம் அல்லது ஒரு ஏக்கர் நிலம் முழுவதிலும் சமமாக மழை பெய்யும்போது தெளிக்கவேண்டும். உயிர் டைனமிக் தயாரிப்புகளான மண் சாண குழி அல்லது இ.எம் தயாரிப்புகள் போன்றவற்றையும் தொழு உரத்திற்கு பதிலாக உபயோகிக்கலாம். மண்புழு உர திரவ கழிவு அல்லது மாட்டின் சிறுநீர் போன்றவற்றை அல்லது இவை இரண்டும் 1:1 என்ற விகிதத்தில் கலந்த கலவையினை 2-3 முறை தெளிப்பதால் பயிர் உற்பத்தியினை அதிகரிக்கலாம்.

மார்கழி பட்டத்தில், முதலில் வேகமாக வளரக்கூடிய கீரை வகைகளான பசலைக்கீரை அல்லது பாலக்கீரை போன்றவற்றை பயிரிட்டு பின், தானிய வகை பயிரினை பயிரடலாம். காய்கறிகளையும், பயறு வகைகளுடன் சேர்ந்து பயிர் செய்யலாம். தானிய பயிருக்கேற்றவாரு உரங்களை இந்தப்பருவத்திலும் உபயோகப்படுத்தலாம். காய்கறி பயிர்களுக்கு 500 கிலோ தூளாக்கப்பட்ட எண்ணெய் பிண்ணாக்கு, 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 50 கிலோ ராக் பாஸ்பேட் போன்றவற்றை ஒரு ஏக்கர் நிலத்திற்கு உரமாக உபயோகப்படுத்தலாம்.  மண் நன்றாக உரமேற்றப்பட்டபின், இயற்கை வேளாண்மை முறை பின்பற்ற ஆரம்பித்து 3-4 ஆண்டுகளுக்குப் பின்பு உபயோகிக்கும் உரங்களின் அளவினை 50 சதவிகிதமாக குறைத்துக்கொள்ளலாம்.

vii. விதை நேர்த்தி

இயற்கை முறை மேலாண்மையில், கட்டுப்பாடு முறைகள் அதிக  பிரச்சனைகள் காணப்படும் போது மட்டுமே கையாளவேண்டும். நோயில்லாத விதையினையும், நோய் எதிர்ப்பு ரகங்களையும் உபயோகிப்பது சாலச்சிறந்தது. விதை நேர்த்தி செய்ய ஒரு தரமான முறை தற்பொழுது இல்லை. எனவே விவசாயிகள் பல்வேறு முறைளை உபயோகிக்கலாம். அத்தகைய முதன்மையான விவசாயிகள் கண்டுபிடித்த விதை நேர்த்தி முறைகள் கீழ்வருமாறு.

 • 530 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையுள்ள நீரில் விதைகளை 20-30 நிமிடங்களுக்கு ஊறவைத்தல்
 • மாட்டின் சிறுநீர் அல்லது மாட்டின் சிறுநீர் மற்றும் கரையான் புற்று மண் கலந்த பசையினை விதையுடன் கலத்தல்
 • பீஜாஅம்ருத் கரைசல் - 50 கிராம் மாட்டு சாணம், 50 மிலி மாட்டு சிறுநீர், 10 மிலி பால், 2-3 கிராம் நீர்த்த சுண்ணாம்பு போன்றவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் (பீஜ்ராநட்) கலந்து விதைகளை அதை 12 மணிநேரம் வைத்திருத்தல்
 • 250 கிராம் பெருங்காயத்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 10 கிலோ விதை நேர்த்தி செய்யலாம்.
 • மஞ்சள் தூள், மாட்டு சிறுநீருடன் கலத்தல்
 • பஞ்சகாவிய சாறு
 • டிரைக்கோடெர்மா விரிடி (4 மில்லி கிராம் ஒரு கிலோ விதைக்கு) அல்லது சூடோமோனாஸ் புளோரோஸன்ஸ் (10 கிராம் ஒரு கிலோ விதைக்கு)
 • உயிர் உரங்கள் (ரைசோபியம் அல்லது அசோபாக்டர் +பிஎஸ்பி)
viii. திரவ உரத்தினை தயாரித்தல்

பல விதமான திரவ உரங்கள் பல மாநிலங்களிலுள்ள விவசாயிகளால் தயாரிக்கப்படுகின்றன. சில முக்கியமான பரவலாக உபயோகப்படுத்தப்படும் திரவ உரத்தயாரிப்பு முறைகள் பின்வருமாறு

சஞ்சீவாக்
நூறு கிலோ மாட்டு சாணத்துடன், 100 லிட்டர் மாட்டு சிறுநீர்,  500 கிராம் வெல்லம் போன்றவற்றை  300 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு 500 லிட்டர் மூடப்பட்ட டிரம்மில் ஊற்றிவைக்கவும். இதனை 10 நாட்களுக்கு நொதிக்கவைக்கவும். இதனுடன் 20 மடங்கு தண்ணீர் கலந்து அதனை ஒரு ஏக்கர் மண்ணில் தெளிக்கலாம் அல்லது நிலத்திற்கு பாய்ச்சும் நீரில் கலந்து வயல்களுக்கு பாய்ச்சலாம்.

ஜீவாம்ருதம்
பத்து கிலோ மாட்டு சாணத்துடன் 10 கிலோ மாட்டு சிறுநீர், 2 கிலோ வெல்லம் எதாவது ஒரு தானியத்தின் மாவு 2 கிலோ, உயிர் மண் 1 கிலோ  ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரைக் கலந்து இதனை 5-7 நாட்களுக்கு நொதிக்கவிடவும். இந்த நாட்களில் இக்கரைசலை ஒரு நாளைக்கு 3 முறை கலக்கி விடவும். இதனை ஒரு ஏக்கர் நிலத்திற்கு நீருடன் கலந்து பாய்ச்சலாம்.

பஞ்சகாவ்யா
சாண எரிவாயு கழிவு 4 கிலோ, புதிய மாட்டு சாணம் 1 கிலோ , மாட்டு சிறுநீர் 3 லிட்டர், மாட்டுபால் 2 லிட்டர், மாட்டு தயிர் 2 லிட்டர், மாட்டு நெய் 1கிலோ ஆகியவற்றை ஒன்றாக கலக்கி 7 நாட்களுக்கு நொதிக்கவைக்கவேண்டும். இந்த ஏழு நாட்களும் ஒரு நாளைக்கு இரண்டு முறை இக்கரைசலை கலக்கி விடவேண்டும். 3 லிட்டர் பஞ்சகாவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் தெளிக்கவும். ஒரு ஏக்கர் மண்ணில் தெளிப்பதற்கு அல்லது நீருடன் பாய்ச்சுவதற்கு 20 லிட்டர்  பஞ்சகாவ்யா தேவை.

ஊட்டமேற்றிய பஞ்சகாவ்யா
ஒரு கிலோ புதிய மாட்டு சாணத்துடன், மாட்டு சிறுநீர் 3 லிட்டர், மாட்டுப்பால் 2 லிட்டரும், தயிர் 2 லிட்டரும், நெய் ஒரு கிலோவும், கரும்புச்சாறு 3 லிட்டர், தேங்காய் தண்ணீர் 3 லிட்டர், மசித்த வாழைப்பழம் 12 கலந்த கலவையினை 7 நாட்களுக்கு நொதிக்க விடவும். மேற்கூறிய பஞ்சகாவ்யா கரைசலை நிலத்திற்கு பாய்ச்சுவது போலவே இதனையும் உபயோகிக்கவும்.

ix. பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் மேலாண்மை

இயற்கை வேளாண் பண்ணை மேலாண்மையில் வேதியியல் பொருட்கள் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை கீழ்க்கண்ட முறைகளில் கட்டுப்படுத்தலாம்.

 1. உழவியல் முறை
 2. இயந்திரவியல் முறை
 3. உயிரியல் முறை
 4. இயற்கை முறையில் ஒத்துக்கொள்ளப்பட்ட வேதியியல் மாற்றுப்பொருட்களை உபயோகிப்பது
 • உழவியல் முறை

நோயற்ற விதைகளை உபயோகித்தல் அல்லது நோய் எதிர்ப்புத்திறன் வாய்ந்த பயிரினங்களை உபயோகிப்பது, இயற்கை வேளாண் முறையில் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தும் மேலாண்மை முறையாகும். பண்ணையில் பல்வேறு உயிரினத்தன்மையினை பராமரித்தல், முறையான பயிற்சுழற்சி முறை, பல்வேறு பயிர்களை பயிரிடுதல், வாழ்விடங்களை மாற்றியமைத்தல், பூச்சிகளை பிடிக்கும் பொறிப் பயிர்களை உபயோகித்தல் போன்ற முறைகளை பின்பற்றுவதன் மூலம் பூச்சிகளால் ஏற்படும் பொருளாதார இழப்பினை கட்டுக்குள் வைக்கலாம்

 • இயந்திரவியல் மாற்றுமுறை

பாதிக்கப்பட்ட செடிகள் அல்லது தாவரங்களையும் அவற்றின் பாகங்களை பண்ணையிலிருந்து அகற்றுதல், பூச்சிகளின் முட்டைகளையும் மற்றும் புழுக்களையும் சேகரித்து அழித்தல், விளக்குப் பொறிகளை உபயோகித்தல், ஒட்டும் வண்ண தட்டுகளை உபயோகித்தல் மற்றும் இனக்கவற்ச்சி பொறிகளை உபயோகித்தல் போன்றவை பூச்சிகளை கட்டுப்படுத்த நன்கு செயல்படும் இயந்திரவியல் மாற்று முறைகளாகும்.

 • உயிரியில் மாற்றுமுறைகள்

பூச்சிகளை பிடிக்கும் விலங்குகளையும், நுண்கிருமிகளையும் உபயோகிப்பதன் மூலம் பயிர்களை பூச்சித்தாக்குதலிருந்து காத்து பூச்சிகளை பொருளாதார இழப்பு ஏற்படுத்தாமல் கட்டுப்படுத்துகிறது. டிரைக்கோகிரம்மா முட்டைகள் 40000-50000/ஒரு ஹெக்டேர் நிலத்தில் மெதுவாக வெளியிடுதல், கிலோநஸ் பிளாக்பர்னி 15000-20000 /ஒரு ஹெக்டேர், அபான்டெலஸ் 15000-20000 /ஒரு ஹெக்டேர், கிரைசோபர்லா 5000 /ஒரு ஹெக்டேர் போன்றவற்றை மெதுவாக நிலத்தில் விதை விதைத்து 15 நாட்கள் கழித்து வெளியிடுமாறு செய்து விட்டு,  பின்பு விதை விதைத்து 30 நாட்கள் கழித்து மற்ற ஒட்டுண்ணிகளையும், வெளியிடுதல் மூலம் இயற்கை வேளாண்மை பண்ணையில் பூச்சிகளின் தாக்கத்தினை எளிதில் கட்டுப்படுத்திடலாம்

 • உயிர்பூச்சிக்கொல்லிகளை உபயோகித்தல்

டிரைக்கோடெர்மா விரிடி அல்லது டி.ஹாராஷியானம் அல்லது சூடோமோனாஸ் புளூரெசன்ஸ் போன்றவற்றை தனியாகவோ அல்லது இவற்றை கலந்தோ 4 மில்லி கிராமினை ஒரு கிலோ விதையில் கலந்து உபயோகிப்பதன் மூலம் விதையின் மூலமும், மண்ணின் மூலமும் பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம். இது தவிர பிவேரியா பேசியானா, மெட்டாரைசியம் அனிசோபைலே, நியுமெரியா ரைலேயி, வெர்ட்டிசிலியம் போன்ற சந்தையில் கிடைக்கும் இதர உயிர் பூச்சிக்கொல்லிகளையும் உபயோகித்து ஒரு குறிப்பிட்ட பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும். பேசில்லஸ் துரின்ஜென்ஸ், ஸ்டீனீபிரியோனிஸ் மற்றும் பே. துரின்ஜென்ஸ் சாண்டிகோ போன்றவை வண்டு வகை பூச்சியினை நன்கு கட்டுப்படுத்தவும் மற்றும் இதர சில பூச்சிகளை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. பி.டி. எனப்படும் மேற்கூறிய பூஞ்சை டயமன்ட் கருப்பு மோத் எனப்படும் காய்கறிகளை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 0.5-1 கிலோ என்ற அளவில் உபயோகிக்கலாம்.

 • தாவர பூச்சிக்கொல்லிகள்

நிறைய தாவரங்களுக்கு பூச்சிக்கொல்லி பண்புகள் உள்ளன. இத்தாவரங்களின் சாறுகள் மற்றும் இதர பண்படுத்தப்பட்ட பாகங்கள் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்திட உதவுகின்றன. இவ்வாறு உபயோகப்படும் தாவரங்களில் வேம்பு நன்கு செயல்படுகிறது.

வேம்பு
தோராயமாக வேம்பு 200 வகையான பூச்சிகள், வண்டுகள் மற்றும் புழுக்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வெட்டுக்கிளிகள், இலையினை உண்ணும் பூச்சிகள், செடிப்பூச்சிகள், அசுவனி, பச்சை தத்துப்பூச்சி,  புழுக்கள் மற்றும் அந்து பூச்சி போன்றவற்றை நன்கு கட்டுப்படுத்த வேம்பு உதவுகிறது. வேம்பின் பாகங்களிலிருந்து எடுக்கப்படும் சாறுகள் வண்டுகளின் புழுக்கள், பட்டாம்பூச்சி மற்றும் இதர புழுக்கள் கட்டுப்படுத்த உதவும். இலை சுருட்டுப்புழு, தத்து பூச்சிகள், இலைப்புழு,  போன்றவற்றை நன்கு கட்டுப்படுத்த உதவுகின்றது. வண்டுகள், அபிட்ஸ், வெள்ளை பூச்சிகள், மாவுப்பூச்சி, வளர்ந்த பூச்சிகள், பழ வண்டுகள், சிலந்தி மைட்கள் போன்றவற்றையும் கட்டுப்படுத்த பயன்படுகிறது.

இதர பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்
பெரும்பாலான இயற்கை விவசாயிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிறைய புதுமையாக பூச்சித்தாக்குதலை பயிர்களில் கட்டுப்படுத்தும் முறைகளை கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த முறைகளில் அறிவியல் பூர்வமாக பரிசோதித்து பார்க்கப்படவில்லை எனினும் அவை பெரும்பாலான விவசாயிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவற்றின் உபயோகத்தினை பற்றி விவசாயிகளின் பேசுவதை கேட்க முடிகிறது. விவசாயிகள் இக்கண்டுபிடிப்புகளை வெளியில் பொருட்களை வாங்காமல் அவர்கள் பண்ணையில் தயாரித்து உபயோகிக்க முயற்சிக்கலாம். பிரபலமடைந்த தயாரிப்பு முறைகளை கீழே காணலாம்.

மாட்டு சிறுநீர்
மாட்டு சிறுநீரினை தண்ணீரில் 1:20 என்ற விகிதத்தில் கலந்து இதனை பயிர்களில் தெளிப்பதன் மூலம் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளையும் பூச்சிகளையும் கட்டுப்படுத்துவதோடு மட்டுமன்றி பயிர்களின் வளர்ச்சி ஊக்கியாகவும் இது செயல்படுகிறது.

நொதிக்கவைக்கப்பட்ட தயிர்
மத்திய இந்தியாவின் சில பாகங்களில் மோர் (நொதிக்கவைக்கப்பட்ட தயிரினை0 வெள்ளை ஈ, தத்து பூச்சி மற்றும் அசுவினி போன்றவற்றை கட்டுப்படுத்த உபயோகிக்கப்படுகிறது

தஸ்பர்ணி சாறு
அரைக்கப்பட்ட வேப்பிலை 5 கிலோ, நொச்சி இலைகள் 2 கிலோ, ஆடுதிண்ணா பாலை இலைகள் 2 கிலோ, பப்பாளி 2 கிலோ, டினோஸ்போரா கார்டிபோலியா இலைகள் 2 கோலோ, சீதாப்பழ மரம்  இலைகள் 2 கிலோ, புங்க இலைகள் 2 கிலோ, ஆமணக்கு இலைகள் 2 கிலோ, அரளி 2 கிலோ, எருக்கு இலைகள் 2 கிலோ, பச்சை மிளகாய் அரைத்தது 2 கிலோ, பூண்டு நசுக்கியது 250 கிராம், மாட்டு சாணம் 3 கிலோ மற்றும் மாட்டு சிறுநீர் 5 லிட்டர் போன்றவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மாதத்திற்கு நொதிக்கவைக்கவேண்டும். இக்கலவையினை தினமும் மூன்று முறை ஒழுங்காக கலக்கிவிடவும். நன்கு நசுக்கி பின்பு சாறு எடுக்கவும். இதனை ஆறு மாதத்திற்கு சேமித்து வைக்கலாம். இச்சாறு ஒரு ஏக்கருக்கு பாய்ச்சுவதற்கு போதுமானது.

நீம்அஸ்ட்டிரா
வேப்பிலை தண்ணீருடன் கலந்து அரைத்தது 5 கிலோ,  இதனுடன் 5 லிட்டர் மாட்டு சிறுநீர், 2 கிலோ மாட்டு சாணம் போன்றவற்றை கலந்து 24 மணி நேரத்திற்கு நொதிக்கவிடவும். இந்த நொதித்தலின் போது இடையிடையில் கலக்கிவிடவும். பின்பு நன்கு பிழிந்து வடிகட்டி தண்ணீருடன் கலந்து 100 லிட்டராக தயாரிக்கவும். இதனை ஒரு ஏக்கர் நிலத்திற்கு தெளிக்க உபயோகிக்கலாம். உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் மாவுப்பூச்சிகளின் தாக்குதலையும் கட்டுப்படுத்த இந்த கரைசல் உதவுகிறது.

பிரம்மாஸ்டிரா
மூன்று கிலோ அரைத்த வேப்பிலையுடன் 10 லிட்டர் மாட்டு சிறுநீர் கலக்கவும். பின் 2 கிலோ அரைத்த சீதாப்பழ மர இலைகள், 2 கிலோ பப்பாளி மர இலைகள், 2 கிலோ மாதுளை இலைகள், 2 கிலோ கொய்யா மர இலைகள், போன்றவற்றை தண்ணீருடன் கலக்கவும். மேற்கூறிய இரண்டையும் கலக்கி 5 முறை இக்கரைசல் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவும். பின்பு 24 நேரம் கழித்து வடிகட்டவும். இதனை பாட்டில்களில் 6 மாதம் வரை சேமித்துவைக்கலாம். 2-2.5 லிட்டர் கரைசலை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கர் நிலத்திற்கு உபயோகிக்கலாம். இது உறிஞ்சும் பூச்சிகள், பழ ஒட்டைபோடும் பூச்சிகள் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் உபயோகிக்கலாம்.

அக்னியாஸ்டிரா
ஒரு கிலோ அரைக்கப்பட்ட நெய்வேலி காட்டாமணி இலைகள், 500 கிராம் மிளகாய்,  500 கிராம் பூண்டு, 5 கிலோ வேப்பிலை போன்றவற்றை 10 லிட்டர் மாட்டு சிறுநீரில் கலக்கவும். இதனை 5 முறை அதன் அளவில் பாதியாகும் வரை  கொதிக்கவைக்கவும்.  பின்பு இக்கரைசலை வடிகட்டி கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் சேமித்து வைக்கலாம். 2-3 லிட்டர் கரைசலை தண்ணீருடன் கலந்து 100 லிட்டராக்கி ஒரு ஏக்கருக்கு உபயோகிக்கலாம். இது இலை சுருட்டுப்புழு, தண்டு, பழ ஒட்டை போடும் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.

மூலம் : தேசிய இயற்கை வேளாண்மைக்கான மையம், காசியாபாத்

வேளாண்மையில் பூச்சித்தாக்குதலை சமாளிப்பதற்கு மாற்றியமைக்கப்பட்ட உத்திகள்

ஜி.வி.இராம ஆஞ்சநேயலு மற்றும் ஜாகீர் உசேன்

ஆந்திரபிரதேசத்தின் கம்மம் மாவட்டத்திலுள்ள புன்குலா கிராம வாசிகள் ஐந்து ஆண்டுகளாக (1999-2003) முயற்சி மேற்கொண்டு அவர்கள் கிராமத்தினை பூச்சிக்கொல்லிகளிலிருந்து விடுவித்துக்கொண்டுள்ளார்கள். தற்பொழுது அக்கிராம மக்கள் இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதில்லை. இதன் மூலம் அம்மாவட்டத்திலுள்ள இதர விவசாயிகளுக்கு புன்குலா விவசாயிகள் முன்னோடிகளாக செயல்படுகின்றனர். புன்குலா கிராம பஞ்சாயத்து அந்த கிராமத்தினை பூச்சிக்கொல்லி இல்லாத கிராமமாக இருக்க உறுதி பூண்டுள்ளது.

புன்குலா

கடந்த சில காலங்களாக, புன்குலா கிராமத்தின் முக்கிய பயிர் பருத்தியாகும். பருத்தி தனிப்பயிராகப் பயிரிடப்பட்டு வந்ததால் பூச்சிகளின் தாக்குதலிருந்து பருத்தியினை பாதுகாக்க அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிக்க வேண்டியிருந்தது. இவ்வாறு அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லிகளை உபயோகித்ததால் அளவுக்கு அதிகமான விஷத் தாக்குதலுக்கு மக்கள் உள்ளாவது, மக்கள் அவர்களது எஞ்சிய வாழ்நாளில் வேலை செய்ய முடியாமல் போவது, அதிகமான மருத்துவ செலவு போன்ற சிக்கல்கள் ஏற்பட்டன.

அதிக பூச்சிக்கொல்லிகள் உபயோகிப்பதால் ஏற்பட்ட இன்னொரு சிக்கல் என்னவென்றால் பூச்சிக்கொல்லிகளை வாங்குவதற்கு மக்கள் பணத்தினை மற்றவரிடம் கடனாக பெறுகின்றனர். அதிக கடன் சுமையும், விவசாயத்தினால் ஏற்படும் நஷ்டம் போன்றவற்றாலும் விவசாயிகள் நலிவடையலாயினர்.

மாற்றத்தின் துவக்கம்

செக்யூர் (SECURE) எனப்படும் அரசு சாராத தொண்டு நிறுவனம் 1999-ஆம் ஆண்டு புன்குலா கிராம மக்களின் வாழ்க்கை முறையினைப் பற்றி ஆராய்ந்தது. இத்தொண்டுநிறுவனம், இந்த ஆராய்ச்சியின் மூலம் முதலீட்டுக்கு தேவையான பண உதவி மக்களுக்கு கிடைக்காதது, ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு ஆகும் செலவு, விவசாயப்பொருட்களை விற்பனை செய்வதற்கு உதவி இல்லாமை, விவசாயிகளுக்கு ஏற்படும் கடன் தொல்லை போன்ற விசயங்களை கண்டறிந்தது. மேற்கண்ட சிக்கல்கள் யாவும் அதிகமான பூச்சிக்கொல்லிகள் உபயோகிப்பதால் என்பதை அந்த தொண்டு நிறுவனம் கண்டறிந்தது. எனவே இத்தொண்டு நிறுவனம் மக்களை பூச்சிக்கொல்லியில்லாத விவசாயத்தில் ஈடுபடுத்த முடிவு செய்தது. இத்திட்டம், ஹைதராபாத்தில் இருக்கும் நிலையான விவசாய முறைகளுக்கான மையத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை பெற்று செயல்படுத்தப்பட்டது.

தொடக்க தயக்கம்

செக்யூர் (SECURE) தொண்டு நிறுவனத்தினர் பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்காத விவசாய முறைகளை புன்குலா கிராம விவசாயிகளிடம் சொன்ன போது அவ்விவசாயிகள் ‘விஷத்தன்மையுடைய பூச்சிக்கொல்லிகளாலும் கொல்லப்படாத பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை தினமும் நாங்கள் பல்துலக்கப் பயன்படுத்தும் வேம்பினை உபயோகப்படுத்தி எப்படி கொல்ல முடியும்? என்று தயக்கம் காட்டியதாக திரு. ஹேமலா நாயக் அவர்கள் நினைவு கூறுகிறார். ஆனால் படிப்படியாக விவசாயிகள் வித்தியாசத்தினை உணரத்தொடங்கினர்.

வெற்றிக்கனியின் இனிப்பு

முதலாம் வருட இறுதியில் பூச்சிக்கொல்லிகளற்ற (NPM) பூச்சிகள் மேலாண்மை முறைக்கான நல்ல முடிவுகள் தெரிய வந்தன. 2001-02ஆம் ஆண்டில் NPM 6.4 ஹெக்டேர் நிலத்தில் பருத்தி பயிரிடும் எட்டு விவசாயிகளையும், 7 ஹெக்டேரில் துவரை பயிர் செய்யும் 3 விவசாயிகளை தேர்வு செய்து பூச்சிக்கொல்லிகளற்ற பூச்சிகள் மேலாண்மை முறையினை செயல்படுத்தவைத்தன. முதல் வருடம் NPM பூச்சிகள் மேலாண்மையினை பின்பற்றிய விவசாயிகளின் வயல்களில் ஏற்பட்ட நல்ல முடிவுகளைக் கண்டு இரண்டாம் வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இந்த முறையினைப் பின்பற்ற முன்வந்தனர். இது மட்டுமன்றி விவசாயிகள் மற்ற மாவட்டங்களுக்கும் கற்றுக்கொள்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் புன்குலா கிராமத்தில் விவசாயிகளுக்கு NPM பூச்சிகள் மேலாண்மை பற்றிய பயிற்சி பட்டறைகளும் நடத்தப்பட்டன. இதனால் மெதுவாக விவசாயிகளிடையே இரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்க்க உறுதி ஏற்பட்டு அவற்றின் உபயோகம் நிறுத்தப்பட்டது.

2002-03 ஆம் ஆண்டு வாக்கில் NPM பூச்சிகள் மேலாண்மை முறை இதர பயிர்களான நெல், துவரை, பருத்தி, மிளகாய் போன்றவற்றிலும் பின்பற்றப்பட்டது. இம்முறையினை பின்பற்றும் விவசாயிகளின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்து. அவர்களின் பயிரிடும் பரப்பளவு 58 ஹெக்டேர்களாக அதிகரித்தது. இம்முறையினை பின்பற்றுவதால் அதிகரிக்கும் அறுவடையும் விவசாயிகளை திருப்தி அடையவைத்தது. 2003-04ம் ஆண்டில் NPM பூச்சிகள் மேலாண்மையினை பின்பற்றி பருத்தி பயிரிடும் நில அளவு புன்குலா கிராமத்தில் பருத்தி பயிரிடும் எல்லா நிலங்களை உள்ளடக்கி மற்றும் புல்லைகுடேம் கிராமங்களில் 480 ஹெக்டேர்களாக அதிகரித்தது. மிளகாய் பயிரிடும் போது இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் இருப்பதால் மிளகாயின் தரம் அதிகரித்து அதனால் மிளகாய் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு அவர்கள் விற்கும் மிளகாய்க்கு சந்தையில் அதிக விலை கிடைத்தது அவர்களை திருப்தி அடைய செய்தது.

விளைவுகள்

NPM பூச்சிகள் மேலாண்மையினை பின்பற்ற ஆரம்பித்த இரண்டாம் ஆண்டில் (2004-05 ஆண்டில்) அக்கிராமத்திலுள்ள எந்தவொரு விவசாயியும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளரிடம் செல்லவில்லை. புன்குலா கிராமப் பஞ்சாயத்து இனி பூச்சிக்கொல்லி மருந்தற்ற கிராமம் என்று அக்கிராமத்தினை அறிவித்து பின் எப்பொழுதும் பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிப்பதில்லை என்று முடிவு எடுத்தது. இரண்டு வருடங்களில் கிராமத்திலுள்ள விவசாயிகள் பயிர்களில் பூச்சித்தாக்குதலிலிருந்து விடுதலை அடைந்தனர். மேலும் அவர்கள் கடன்களையும் அடைத்து விட்டு பின் இதர சூழல் சார்ந்த முறைகளை வேறு பயிர்களில் பின்பற்றத் தொடங்கினர். வயலில் சுற்றுப்புற சமநிலையும் திரும்ப பெறப்பட்டது. விவசாயிகளின் உடல் நலனும் மேம்பட்டது. புன்குலாவில் மகளிர் குழுக்கள் வேம்பு விதை அரைக்கும் சிறிய தொழில் அமைப்பையும் 2004ல் துவங்கினர். இது அக்கிராம பஞ்சாயத்தால் உலக திறன் அமைப்பின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டது. இதில் இரண்டு மகளிருக்கு முழுநேர வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.

விரைவாக பரவிய இயற்கை பூச்சி மேலாண்மை முறை

புன்குலாவிலுள்ள 174 விவசாயிகளும். புல்லைகுடேம் கிராமத்திலுள்ள 120 விவசாயிகளும் இந்த இயற்கை பூச்சி மேலாண்மை முறைகளை பற்றியும், அதனால் தாங்கள் அடைந்த பயன்களைப் பற்றியும் விளக்கம் தரும் அளவுக்கு தயாராகிவிட்டனர்.

கிராமம்

ஏக்கர்

சராசரி அறுவடை

ஒரு ஹெக்டேர் பயிர் செய்வதற்கான செலவு

ஒரு வருடத்தில் ஒரு ஏக்கரில் கிடைக்கும் நிகர வருமானம்
Income per ha

புன்குலா மற்றும் புல்லைகுடேம்

480 ஹெக்டேர்

30 குவிண்டால்/ ஹெக்டேர்

ரூபாய். 21408/ ஹெக்டேர்

ரூபாய். 52593/ ஹெக்டேர்

முனைவர்.ஜி.வி.இராம ஆஞ்சநேயலு மற்றும் ஜாகீர் உசேன்
நிலைத்த விவசாயத்திற்கான மையம், 12-13-445, தெரு எண்.1 தார்னாகா, செகந்திராபாத்-500 017, ஆந்திரப்பிரதேசம், இந்தியா

ஆதாரம் : LEISA India, Vol 8-2

அதிக மகசூல் மற்றும் வருமானத்தை அளிக்கும் மண்புழு உரம் - ஒரு சிறு விவசாயி காட்டும் வழி

வறண்ட பூமியில், வாழ்க்கையை அமைத்துக் கொள்ள  போராடும் விவசாயிகளுக்கிடையே, மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்த ஒரு விவசாயின் எடுத்துகாட்டு இது.

சந்திரண்ணா என்பவர் மூன்று வருடத்திற்கு முன்னர், “நாற்றங்கால் சந்திரண்ணா” என்றும், இப்பொழுது “மண்புழு உர சந்திரண்ணா”, என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறார். மூன்று வருடங்களில் மண்புழு மற்றும் மண்புழு உரம் விற்றதில் ரூபாய் 1.4 இலட்சம் சம்பாதித்துள்ளார். இங்கு சராசரியாக ஒரு சிறு விவசாயி ஆண்டிற்கு, 15,000 ரூபாய் வருமானத்தை தாண்டாத நிலையில், அனைவருக்கும், இவர் செயல் ஒரு கற்பனை கதையாகி விட்டது.

சித்ரதுர்கா மாவட்டத்தில், மூலகல்முறு தாலுக்காவில், 650 குடும்பங்கள் உள்ள தும்கூரஹல்லி என்னும் கிராமத்தில், சந்திரண்ணா வசிக்கிறார். இக்கிராமத்தின் பெரும் பகுதியினர் பின்தங்கிய வகுப்பினை சேர்ந்தவர்கள். கிராமத்தின் நிலப்பரப்பில், பெரும்பாலானது, மானாவரி ஆகும். 500 மிமீ மழையை நம்பி, கடலை சாகுபடியை வருடா வருடம் செய்து வந்தனர். கடந்த 30 வருடங்களாக கடலையை மட்டுமே,  தனிப்பயிராக சாகுபடி செய்ததால், 8 குவிண்டாலேயே, ஒரு ஹெக்டேருக்கு மகசூலாக பெற்று வந்தனர். விவசாயம், ஒரு இலாபகரமான தொழிலாக இல்லையென்றாலும் பலர் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு விவசாயத்தையே நம்பியிருந்தனர். இதனால், பல ஆண்கள், வருடத்தில் பல நாள் வெளியூருக்கு வேலைக்கு செல்வர்.

பெரிய நம்பிக்கைகளுடன், சிறு விவசாயி

சந்திரண்ணாவின் ஆர்வமும், தன்னம்பிக்கையும், விவசாயத்தை ஒரு நம்பிக்கையூட்டும் தொழிலாக மாற்றியுள்ளது. ஆனால், அவருடைய வெற்றி, ஒரே நாளில் கிடைத்ததல்ல. முறையான முயற்சி மற்றும் வெவ்வேறு நிறுவனங்கள் அளித்த சந்தர்பத்தை முறையாக பயன்படுத்தியதால் கிடைத்த வெற்றி.

ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த சந்திரண்ணாவிற்கு சொத்தாக 3 ஏக்கர் நிலம் இருந்தது. இதில் ஒரு ஏக்கர் விவசாயத்திற்கு  பயன்படாத தரிசு நிலம். இதனால், இந்த குடும்பத்தின் வாழ்க்கையை, 2 ஏக்கர் விவசாயமும் கூலி வேலையும் நிர்ணயித்தது. இவருடைய பெற்றோர்கள்,  சந்திரண்ணா படிக்க வேண்டும் என்று நினைத்தனர். இருப்பினும், குடும்ப வறுமைக் காரணமாக, கல்லூரிக்கு செல்ல இயலவில்லை. பள்ளி படிப்புடன் திரும்பி, தனது பெற்றோருடன் விவசாயத்தில் ஈடுபட்டார். கர்நாடக நீர்பிடிப்பு மேம்பாட்டு திட்டம் (KAWAD) மற்றும் AME நிறுவனத்தின் மூலம், சுய உதவி குழுவில் சேர்ந்தார்.

திருப்பு முனை

திப்தூரில் உள்ள, BAIF நிறுவனத்தின் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தில், நாற்றங்கால் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சியில், 2000ல் சந்திரண்ணா பங்கு கொண்டார்.

இப்பயிற்சி முடிந்தவுடன், இவருடைய குழுவுக்கு 15,000 நாற்றுக்களை உற்பத்தி செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டது. சந்திரண்னா, 2000லிருந்து தொடர்ச்சியாக மூன்று வருடம் நாற்றங்கால் உற்பத்தியில் ஈடுபட்டார். இவருடைய நாற்றங்காலே சிறந்த நாற்றங்கால் என்று 2003ல் நீர்ப்பிடிப்பு மேம்பாட்டு திட்டத்தில் அங்கிகரிக்கப்பட்டது. இதிலிருந்து இவர் நாற்றங்கால் சந்திரண்ணா என்ற பெயர் பெற்றார்.

இவருடைய மண்புழு வளர்ப்பு ஆர்வம் குறையவில்லை. பயிற்சியில் பெற்ற அறிவைக் கொண்டு, தேங்காய் ஓடுகளைக் கொண்டு, வட்டார மண்புழுக்களை வளர்க்க முயற்சித்தார். ஆனால் இது தோல்வியடைந்தது. 2003-ல் சந்திரண்ணா, KAWAD திட்டத்தின் துணையுடன் 6 x 3 x 3 குயூபிக் அடி கொண்ட மூன்று மண்புழு குழிகளை அமைத்தார். GUARD-ல் இருந்து ஒரு ஊழியர், 300 ரூபாய்க்கு, 2 கிலோ மண்புழுவை கொண்டு வந்தார். இந்த 2 கிலோ மண்புழுவில் இருந்து 20 குவிண்டால் மண்புழுவுரத்தை தயாரித்து அதனை தன்னுடைய 2 ஏக்கர் கேழ்வரகு வயலுக்கு இட்டார். கேழ்வரகு வழக்கத்திற்கு மாறான பயிராக இருந்தாலும், 2 ஏக்கரிலிருந்து, 14 குவிண்டால் மகசூல் பெற்றார். 2004-ல், 2 ஏக்கர் நிலத்திற்கு 2 கிலோ DAP-வுடன், நல்ல தரமான மண்புழுவுரம் 6 குவிண்டாலையும், 2 மாட்டுவண்டி (2டன்) தொழுஉரத்தையும், அளித்தார். இம்முறை கடலை சாகுபடி செய்து, 20 மூட்டை (9 குவிண்டால்) மகசூலை பெற்றார்.

2005-ல் சந்திரண்ணா தன்னுடைய ஒரு ஏக்கர் பரிசோதனை  நிலத்திற்கு 6 குவிண்டால் மண்புழுவுரம் அளித்து மேலும், கோடை உழவு, ரைசோபியம் மற்றும் ட்ரைகோடெர்மா விதை நேர்த்தி, ஜிப்சம் அளித்தல், போதுமான விதை உளவு (45 கிலோ)  மற்றும் வரப்பு மற்றும் ஊடுபயிர் விளைவித்தல் ஆகியவற்றை கையாண்டார். இதனால் ஒரு ஏக்கரில் மகசூல் 13 மூட்டை (6.5 குவிண்டால்) கடலையாக உயர்ந்தது. இதில் குறிப்பிட வேண்டிய செய்தி என்னவென்றால், ஒரு மூட்டை 50-60 கிலோ எடை இருந்தது. சந்திரண்ணாவின் 25 மூட்டை 13 குவிண்டால் இருந்த போது, அவருடைய பக்கத்து விவசாயி திப்பேசுவாமியின் 40 மூட்டைகள், 13 குவிண்டாலே இருந்தது. வியாபரிகளால் இதை நம்ப முடியவில்லை. சிலர் சந்திரண்னா மூட்டையில் வேறு ஏதேனும் வைத்திருக்கிறாரா என்று பரிசோதித்தனர்.

சந்திரண்ணா மண்புழு உரம் தயாரித்து, தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்திற்கு இட்டதோடு மட்டுமில்லாமல், மண்புழு மற்றும் உரத்தை, 2004-ல் இருந்து விற்பனை செய்தார். 2004-ல், 124 கிலோ மண்புழு ஒரு கிலோ 150 ரூபாய் என்ற விலையில் விற்றதில், ரூபாய் 18,600-ஐ வருமானமாக பெற்றார். மேலும் மண்புழு உரத்தை, ஒரு குவிண்டால் ரூ.500 என்று விற்றதில், 7500 ரூபாய் பெற்றார்.

கடலையில் இருந்து வந்த வருமானத்தை விட மண்புழு வளர்ப்பில் கிடைத்த வருமானம் அதிகமாக காணப்பட்டதால், மண்புழு உரம் தயாரிப்பை 2005-ல் தீவிரப்படுத்தினார். இந்த முயற்சியில், சில கடினங்களையும் சந்தித்தார். ஒரு முறை 30 கிலோ மண்புழுவை மணலுடன் பேக் செய்ததால், வியாபாரம் முடிவதற்குள்ளேயே மண்புழுக்கள் இறந்தன. பின்னர், மண்புழுக்களை சாணத்துடன் பேக் செய்யத் தொடங்கினார். விவசாயிகள் அதிகமாக மண்புழு உர தொட்டிகள் அமைக்க தொடங்கியதால், மண்புழுக்கான தேவை அதிகமானது. இதனால், மண்புழுவில் அதிகம் சம்பாதித்தார். இதனால் மொத்தமாக, 2005-ஆம் வருடத்தில், ரூபாய் 53,200-ஐ வருமானமாக அடைந்தார். மேலும் மண்புழு குழிகளை அதிகரித்தார். இதனால் அதிக பயிர் கழிவுகள் மற்றும் வேளாண் கழிவுகள் அவருக்கு தேவைப்பட்டது. தன் நிலத்தில் உள்ள 4 புங்கை மரம், வாய்க்காலில் இருந்து கிடைக்கும் செத்தை மற்றும் காய்ந்த தைலமர இலைகள், மண்புழு வளர்ப்பிற்கு இடுபொருளாக பயன்பட்டது. மண்புழு வளர்ப்பில், மாட்டு சாணத்தின் முக்கியத்தை உணர்ந்து, சந்திரண்னா இரண்டு ஜோடி எருதுகள், ஒரு மாடு மற்றும் 20 கோழிகளை வளர்த்தார். இதனால் மண்புழு வளர்ப்பில், வருமானம் அதிகரிக்க தொடங்கியது. ஐம்பது வருடங்கள் காணாத வறட்சியைக் கண்ட 2006-ம் வருடமும் சந்திரண்ணா, 285 கிலோ மண்புழு மற்றும் 32 குவிண்டால் மண்புழுவுரம் விற்றதன் மூலம், ரூபாய் 58,750-ஐ வருமானமாக அடைந்தார். 2003-ல் இருந்து அவருடைய மொத்த வருமானம் ரூபாய் 1,38,050. சரியான வருமானம், இதைவிட அதிகமாகவும் இருக்கலாம். அவருடைய இரசீது படி ரூபாய் 1.4 இலட்சமாகும். பொதுவாக இவருடைய வாடிக்கையாளர்கள், இரசீது பெறும் சுயவுதவி குழு உறுப்பினர்களும் மேலும் பெல்லாரி, சித்ரதுர்கா, பாகலகோட் மற்றும் பீஜாபூர் போன்ற மாவட்டங்களில் உள்ள அரசுசாரா இயக்கத்தில் உள்ளவர்கள். இரசீதை எதிர்ப்பார்க்காமல் சில விவசாயிகள் தங்களுடைய சொந்த உபயோகத்திற்கு வாங்கியவர்களும் உள்ளனர். இவை கணக்கில் வராதவை. இப்பொழுது சுயஉதவி குழுக்காக, சிறப்பு சலுகையாக, ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு அளிக்கிறார். ஆனால் மற்றவர்கள் கிலோவுக்கு ரூபாய் 150 கொடுக்க வேண்டும். அருகில் உள்ள விவசாயிகளின் பண்ணைகளுக்கு சந்திரண்னா சென்று, மண்புழு இறக்க தொடங்கினால், அந்த பண்ணைகளுக்கு, இலவசமாக மண் புழுவினை அளித்து வந்தார்.

நம்பிக்கை இழந்தவர்களுக்கு, நம்பிக்கையூட்டும் வழிகாட்டி

‘நாற்றங்கால் சந்திரண்னா’ என்று அழைக்கப்பட்டவர், இப்பொழுது ‘மண்புழு வளர்ப்பு சந்திரண்ணா’ என்று அழைக்கப்படுகிறார். அவருடைய சுமாரான மண் வீடு, இப்பொழுது, மண்புழு உரக்குழிகள் அதிகமாவதுடன், சிமெண்டு சுவர்கள் கொண்ட வீடாக மாறுகிறது. மாற்று சாகுபடி முறைகளை முயற்சிப்பது குறிப்பாக மண்புழு வளர்ப்பு செய்வதற்கு உதாரணமாக இருக்கிறார்.

மூலம் : ஏ.எம்.இ. நிறுவனம்

விற்பனையில் விவசாயிகளின் கூட்டு முயற்சி

தமிழ்நாட்டின் பெரம்பலுர் மாவட்டத்தில், மானாவரி பகுதிகளில் மக்காச்சோளம் அதிகமாக காணப்படும். பாரம்பரியமாக, பருத்தி மற்றும் கடலை சாகுபடி செய்த பகுதியில், பல காரணிகளால், விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடிக்கு மாறியுள்ளனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மே 2005-ல் திருச்சியின் AME நிறுவனம், குன்னம் தாலுக்காவில், 4 கிராமத்தில் விவசாயிகளுடன் சேர்ந்து செயல்பட தொடங்கியது. இதன் முக்கிய நோக்கமானது, மக்காச்சோளத்தில் மகசூலை மேம்படுத்துவது மற்றும் உற்பத்தி செலவை குறைப்பது ஆகும். இருப்பினும், விவசாயிகளிடம் கலந்துரையாடியதில், உற்பத்தி செலவு அதிகமாவதும், பொருளை சந்தையில் விற்கும் பொழுது ஏற்படும் நஷ்டமும் விவசாயிகளின் நிகர வரமானத்தை குறைக்கும் காரணங்களாக கருதப்பட்டது. எனவே, மக்காச்சோளத்தை விற்பதில் கவனம் செலுத்தப்பட்டது.

நடைமுறையில் உள்ள விற்பனை செயல் முறைகள்

விவசாயிகள், தங்களது மக்காச்சோளத்தைக் கிராமத்திலேயே வணிகரிடம் விற்று விடுவர். அறுவடை காலத்தில், வணிகர்கள் பொருளை வாங்குவதற்காக, கிராமங்களில் காணப்படுவர். எடை போடும் இயந்திரம், சாக்கு மற்றும் போக்குவரத்து ஆகிய அனைத்தும் வியாபாரிகளின் பொருப்பு. வியாபாரிகள் மக்காச்சோளத்தை எடையிட்டு, 100 கிலோ மூட்டைகளாக கட்டி லாரிகளில் ஏற்றி, விற்பனைக்கு எடுத்துச் செல்வர்.
உற்பத்தி குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் விற்பனை செயல்பாடுகள் இப்படியே காணப்படும். காலத்தை பொருத்து, விலைகள் வேறுபடும். அறுவடை காலமான, பிப்ரவரி மற்றும் மார்ச்சில் விலை குறைவாக இருக்கும். விவசாயிகள் அறுவடையின் போதே, பொருளை விற்பதால் அவர்களுக்கு குறைந்த விலையே கிடைக்கும். இருப்பினும், சரியான சேமிப்பு வசதி இல்லாததால், குறைந்த விலை விற்பனைக்கே, விவசாயிகள் தள்ளப்படுகின்றன. இதற்கு நேர்மாறாக, மக்காச்சோளத்தினால் செய்த தீவனத்தை, கால்நடைகளுக்கு வாங்கும் போது, அதிகமான விலையை கொடுக்கின்றனர். இந்த செயல்முறையில், முக்கியமான ஒன்று எடைபோடுவதில் நடக்கும் கள்ளத்தனங்கள். இக்கள்ளதனங்கள், சில விவசாயிகளுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது, ஆனால், பல சமயங்களில் விவசாயிகள் தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல என்பது விவசாயிகளின் கருத்து. இப்படிப்பட்ட கள்ளத்தனங்களால், ஒரு லாரி லோட் மக்காச்சோளத்திற்கு, மத்திய தரகர்கள் 1000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். இதை தடுக்க, விவசாயிகள் முன்பே எடையிட்ட மூட்டைகளை எடுத்து வர தொடங்கினர். ஆனால் இப்படிப்பட்ட கிராமங்களுக்கு வணிகர்கள் வருவதை நிறுத்தி கொண்டனர். மக்காச்சோளத்தை எடையிடுவதில் உள்ள பொதுவான கள்ளத்தனங்கள்

வட்டார வணிகர்கள் கொடுக்கும், சாக்கு மற்றும் விலைக்கு, விவசாயிகள் அடிபணிந்து போவார்கள். சிறு விவசாயிகள் குறைவாக பொருள் வைத்திருப்பதால் அவர்களால் பேரம் பேச இயலாது. மேலும் உடனடி பணத்தேவை, சூழ்நிலையை, இன்னமும் மோசமாக்கும்.

முன்னேற்றப் பாதையில் முதல் அடி.

குழு மற்றும் AMEF உதவியுடன், பெருமத்துக்குடிகாடு கிராமத்தின் விநாயகா குழுவின் விவசாயிகள், தங்கள் மக்காச்சோளத்தை நாமக்கல்லில் உள்ள கோழிதீவன தயாரிப்பு நிறுவனத்திற்கு நேரடியாக விற்பனைச் செய்ய முடிவு செய்தனர். இந்த நிறுவனம், கிராமத்திலிருந்து 160 கிமீ தொலைவில் உள்ளது. முதலாவது, இரு விவசாயிகள் ஒரு லோடு (14 டன்) மக்காச்சோளத்தை எடுத்துச் சென்றனர். இது விற்பனையில் முதல் அனுபவம் ஆதலால், நிறைய கடினங்களை எதிர் கொண்டனர். முதலாவதாக, மூட்டைகளை ஏற்றும் கூலிஆட்கள், ஒரு மூட்டைக்கு இரண்டு மடங்கு கூலி கேட்டார்கள் (அதாவது ரூ.5 லிருந்து, ரூ.10). இரண்டாவதாக, அதிக தேவையினால், லாரிகளின் வாடகை 25% அதிகமானது. ஆனால் தீவன நிறுவனங்கள், மிகக் குறைந்த விலைக்கு பொருட்களை கேட்டனர். தீவன நிறுவனங்களும், மக்காச்சோளத்தின் ஈரப்பதம்  அதிகம் இருப்பதாக கூறி, மிகக் குறைந்த விலையை நிர்ணயம் செய்தனர். சாக்குகளுக்கு அதிக கிராக்கி இருப்பதால், அவைகளின் விலையும் 50% அதிகமானது.
தீவன நிறுவனத்தின் உரிமையாளர், விவசாயிகளுக்கு உதவுவதற்கு தனிப்பட்ட அக்கரை காட்டியதால், இவைகள் எல்லாம்,  தகர்த்தப்பட்டது. மேலும், மழையினால் சேதம், வெளி மாநிலங்களிலிருந்து குறைந்த விலைக்கு பொருள்கள் கிடைப்பதாக கூறி, விவசாயிகளின் பொருளை வாங்க மறுத்தல், விபத்து, லாரி பழுது ஆகுதல் ஆகியவைகளும், விவசாயிகள் சந்தித்த பிரச்சனைகளாக இருந்தன. ஆனால், விவசாயிகளின் உறுதியே, அவர்களை இப்படிப்பட்ட இன்னல்களை தாண்டி செல்ல உதவியது.

இன்னல்கள் பல இருந்தாலும், விவசாயிகள், பயன்களை உணர்ந்தனர். எடை விசயத்திலேயே, ஒரு லோடுக்கு (14 டன்) கூடுதலாக, 610 கிலோ கிடைத்தது. இது கூடுதலாக ரூபாய் 3385-ஐ கொடுத்தது. மேலும், விலையில் பயன் இருந்தது. இவர்கள் ஒரு குவிண்டால் ரூ.555-க்கு விற்றனர். ஆனால் வணிகர்கள் ரூ. 500-ஐயே கொடுத்தனர். நேரடியாக விற்பனை புரிவதில், சில கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும், நிகர வருமானத்தில் 3.2% அதிகம் கிடைத்தது. இதனால் விவசாயிகள், ஒரு மூட்டைக்கு, கூடுதலாக ரூபாய் 13.30-ஐ பெற்றனர். சாக்குகளை கிராக்கி இல்லாத சமயங்களில் வாங்குவது, கூலி ஆட்களுக்கு முன்கூட்டியே திட்டமிடுதல் போன்றவைகளால், கண்டிப்பாக 50% வரை நிகர வருமானம் அதிகமாக கிடைக்கும். பணமாக மட்டுமில்லாமல், அனுபவம் மற்றும் நிறைய விசயங்களை விவசாயிகள் இந்த முயற்சியினால் கற்றுக் கொண்டனர்.

வழித்தடங்களைப் பின்பற்றி

இரு விவசாயிகளின் முயற்சியைப்பார்த்து, பிற விவசாயிகளும், இதனை தொடர்வதற்கு முடிவு செய்தனர். துரதிஷ்டவசமாக நாமக்கல்லில் பல கோழி தீவண தயாரிப்பு நிறுவனங்கள், பறவைக் காய்ச்சல் நோயால் மூடப்பட்டது. இதனால் மக்காச்சோளத்தின் விலை வீழ்ச்சியடைந்தது. எனினும், நம்பிக்கையை கைவிடாமல், மாற்று வழிகளை யோசிக்கத் தொடங்கினர்.

விவசாயிகள் தங்கள் குழு கூட்டத்தில், விலை நிலையான நிலையை அடையும் வரை காத்திருக்க முடிவு செய்தனர். சுமாராக 50 விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் வரை காத்திருந்தனர். இரண்டு மாதங்கள் விற்பனை செய்யாமல் இருந்து, பின்னர் வியாபாரிகளிடமே விற்றனர். இது ஒவ்வொரு விவசாயிக்கும் மூட்டைக்கு 10 ரூபாய் அதிகமாக அதிக வருமானம் கிடைக்கச் செய்தது. கூட்டாக விற்பனை செய்ததில், எடையில் கையாண்ட சீர்கேடுகள், குறைக்கப்பட்டன. கால்நடைகளை வைத்திருந்த விவசாயிகள் தங்களது பொருளை, கால்நடை தீவனம் தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தினர். மக்காச்சோளம் மற்றும் சோளம், கடலை, எள் ஆகியவற்றிலிருந்து தீவனம் செய்வதற்கான பயிற்சி விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டது. இதனால், 30 விவசாயிகள், தாங்களே தீவனம் தயாரிக்க ஆரம்பித்தனர். ஒரு கிலோ தீவனம் உற்பத்தி செய்ய ஆகும் செலவு ரூ.8 ஆகும். ஆனால் சந்தையில் தீவனத்தின் விலை ரூ 13 ஆகும். இந்த முயற்சியால் சராசரியாக ஒரு விவசாயி, தீவன செலவில், ரூபாய் 200, ஒரு மாதத்திற்கு, ஒரு கால்நடைக்கு குறைக்க முடிந்தது. மேலும் பாலில் அதிக கொழுப்பு சதவீகதத்தால், பால் தரம் அதிகரித்தது.

செலவும் வருமானமும் - நேரடி விற்பனையில் (ரூபாயில்)

வரிசை எண்

செயல்முறை

முந்தைய விலை

நேரடி விற்பனை

வித்தியாசம் (%)

1

மக்காச்சோள எடை (கிலோ)

14000

14,610

4.3

 

செலவு

 

 

 

 

பொருள்கள் (சாக்கு)

 

1667.50

 

 

ஏற்றுக் கூலி

 

1450.00

 

 

போக்குவரத்து

 

5440.00

 

 

பிற

 

266.00

 

2

மொத்த  செலவு

 

8823.00

 

3

மொத்த வருமானம்

70,000

81,085.00

15.8

4

நிகர வருமானம்

70,000

72,262.00

3.2

மூலம் : AME நிறுவனம்

தன்பதி ஸப்கோட்டா – சிக்கிம் மாநிலத்தில் பரிசு பெற்ற விவசாயி

கேங்க்டாக்கில் நடைப்பெற்ற அகில உலக மலர் விழாவில் காய்கறிகள் சாகுபடி செய்யும் போட்டியில் தன்பதி ஸப்கோட்டா என்ற விவசாயி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பரிசாக வென்றார். பத்து வேறுபட்ட தோட்டப்ப்யிர் இரகங்களை சாகுபடி செய்ததற்காக கிழக்கு சிக்கிம் மாநிலத்தில் அஸாம் லின்ஸியில் உள்ள சோட்டா ஸின்கடம் பகுதியில் இருந்து வந்த முன்னோடி விவசாயிக்கு முதல் அமைச்சர் அவர்கள் பரிசு தொகையுடன் ஒரு வாழ்த்து அறிக்கையையும் வழங்கினார். மார்சக் பகுதியில் மூன்று நாட்கள் பயிற்சி பெற்ற பிறகு ஸப்கோட்டா, வீட்டு உபயோகத்திற்கு தேவையான நெல் மற்றும் மக்காச்சோளம் போன்ற பாரம்பரிய பயிர்களை சாகுபடி செய்வதில் இருந்து வேறுபட்டு அவருடைய சொந்த நிலத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் தோட்டப்பயிர்களை பயிரிட்டார். அது மட்டுமல்லாமல் உத்தராஞ்சல் மாநிலத்தில் மாநில தோட்டக்கலைத் துறை மூலம் நடைப்பெற்ற இயற்கை வேளாண்மை குறித்த 11 நாட்கள் பயிற்சியிலும் கலந்து கொண்டார்.

ஸப்கோட்டா பெற்ற பயிற்சியும் அவருடைய தன்னம்பிக்கையும் மிக நல்ல முடிவுகளை கொண்டு வந்தன. இதனால் அதே வருடத்தில் அவரால் 1900 எண்ணிக்கையுள்ள விதைகளை கொண்டு ஒரு லட்சத்து ஐம்பாதியிரத்து இரண்டு ரூபாய் மதிப்புள்ள 19 குவிண்டால் செர்றி மிளகை உற்பத்தி செய்ய முடிந்தது. இது அவரை தோட்டக்கலை பயிர்களை தீவிரமாக சாகுபடி செய்ய உதவியது. அவர் தொடர்ந்து காலிபிளவர், தக்காளி, முட்டைகோஸ் மற்றும் புரோகோளி போன்ற பயிர்களை சாகுபடி செய்ய உதவியது.

ஸப்கோட்டா, அவருடைய சொந்த நிலத்தில் பாதுகாப்பான சூழ்நிலையில் ஒரு செடியிலிருந்து 40 கிலோ எடையுள்ள தக்காளியை அறுவடை செய்தார். மேலும், இவர், மாநில தோட்டக்கலைத் துறையின் தொழில்நுட்ப குழுமத்தின் மூலம் ரோமியோ ரக தக்காளி விதைகளை வாங்கி, இந்த வருடத்தில் பட்டம் இல்லாத நேரத்தில் தக்காளியை உற்பத்தி செய்தார். அதனால் ஒரு லட்சத்து தொன்னூற்று நான்காயிரம் மதிப்புள்ள 97 குவிண்டால் தக்காளியை விற்றார். அது மட்டுமல்லாமல் ரூபாய் 64,000 மதிப்புள்ள 8 குவிண்டால் காளிபிளவர் மற்றும் ரூபாய் 96,000 மதிப்புள்ள 12 குவிண்டால் செர்றி மிளகையும் விற்றார். ஸப்கோட்டா சொல்லும் போது, “ நான் தோட்டக்கலை பயிர்கள் மூலமாக, வேலையாட்கள் கூலி மற்றும் மற்ற செலவுகள் போக ரூபாய் 2.5 இலட்சம் லாபத்தை ஈட்டுகிறேன்” என்கிறார். அது மட்டுமல்லாமல் தொழில்நுட்ப குழுமத்தின் மூலம் தோட்டக்கலை துறையின் காய்கறி பயிர்களின் பரப்பளவை அதிகரிக்கும் திட்டத்தில் கலப்பு பயிராக காய்கறிகளை பயிரிட்டார். அவர் தோட்டக்கலை துறையிலிருந்து விதை, இயற்கை உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் மற்ற உதவிகளையும் பெற்று வருகிறார்.
அது மட்டுமல்லாமல், சிக்கிம் மாநிலத்தில் வெள்ளரிக்காய் வடிவில் உள்ள “ஜூக்னி பார்சி” என்ற பூசணிக்காய் இரகத்தை அறிமுகபடுத்தியுள்ளார். இவர் முதன் முதலாக இந்த ரக பூசணிக்காயை அறிமுகபடுத்தியதால் அஸாம் லின்ஸியின் உள்ளூர் மக்கள் இதற்கு “ஸப்கோட்டா பூசணிக்காய்” என்று பெயரிட்டுள்ளனர். அவர் சொல்லும் போது, இந்த ரக பூசணிக்காயை முதன் முதலாக பக்தாபூரில் உள்ள ராணா பண்ணையில் பார்த்ததாக கூறுகிறார். ஸப்கோட்டா, “ஜூக்னி பார்சி” என்ற பூசணிக்காய் இரகத்தை சாகுபடி செய்ததன் மூலம் ரூபாய் 90,000/- வரை வருமானம் ஈட்டியுள்ளார்.

இந்த முன்னோடி விவசாயியை பொருத்த மட்டில், இவர் இயற்கை வழி விவசாயம் மட்டும் செய்வதில்லை. இவர் ஜோர்தந்கில் உள்ள கார்பேக்டர் என்னும் இடத்தில் பயிற்சி பெற்று கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இப்பொழுது இவரிடம் ஐந்து பசுக்கள் உள்ளன. இவற்றில் மூன்று கறவை நிலையில் உள்ளன. இவர் ஓவ்வொரு நாளும் 20 லிட்டர் பாலை, ஓரு லிட்டர் ரூபாய் 20/- என்ற விலைக்கு விற்கிறார். ஸப்கோட்டா, இந்த மாடுகளிலிருந்து தன்னுடைய பண்ணைக்கு தேவையான சாண உரத்தை பெற்றுக் கொள்வதோடு தோட்டக்கலை துறையின் உதவியுடன் ஒரு மண்புழு உர யூனிட்டையும் நிறுவியுள்ளார்.

உற்பத்தியாகும் பொருட்களின் விற்பனை குறித்து சொல்லும் போது, ஸப்கோட்டா, கூறுகிறார் “ பெரும்பாலான விவசாயிகள் பொருட்களின் விற்பனையின் போது அதிக கஷ்டங்களை அனுபவிக்கின்றனர் என்பது உண்மை. சிக்கிமில் உள்ள விவசாயிகள் அனைவரும் போதுமான அளவு உற்பத்தி செய்து சந்தை தேவையை சந்திக்கும் அளவு வரையிலும் இந்த பிரச்சனை தீராது.

முன்னோடிதனமான இவரது வேலையை பார்த்து, விளை பொருட்களை விற்பனை செய்வதற்கேற்ப மாநில தோட்டக்கலை துறையானது தொழில்நுட்ப குழுமத்தின் கீழ் ஒரு பண்ணை பொருட்களை விற்கும் யூனிட்டை நிறுவியுள்ளது. இப்பொழுது இவர் தன்னுடைய பொருட்களை விற்க விற்பனை கூடங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. இந்த யூனிட்டிலேயே தன்னுடைய பொருட்களை விற்கலாம்.

தகவல் : isikkim.com

மகளீர்க்கான விவசாய வயல்வெளிப்பள்ளி (FFS) - தக்காளியில் ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு அனுபவம்

தர்மபுரி மாவட்டத்தின், கோட்டூர், சிறியம்பட்டி மற்றும் இச்சாம்பள்ளம் கிராமங்களில், தக்காளி ஒரு முக்கிய பணப்பயிராகும். இங்குள்ள விவசாயிகள், விலை அதிகமான இடுபொருள்களைக் கொண்டு, தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகள் அதிகமாக உபயோகிப்பதால் சாகுபடிச் செலவு அதிகமானது. விவசாயிகளுக்கு மாற்று விவசாய சாகுபடி முறைகள் பற்றி கூறுவதன் மூலம், சூழ்நிலை பாதுகாக்கப்படும் மற்றும் முதலீட்டுச்செலவும் குறையும். இந்த நோக்கத்துக்காக, தாங்களாகவே கண்டுபிடித்து கற்கும் முறையின் அடிப்படையில் காணப்படும் விவசாயி வயல்வெளிப்பள்ளி, இதற்கு உகந்த முறையாக கருதப்பட்டது.

செயல் பாடுகள்

வயல் சூழல் ஆய்வு
பங்குபெறும் விவசாயிகளின் அனுபவத்திற்கும் மற்றும் கற்றுக் கொள்வதற்காகவும், 0.64 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. விவசாயிகளின் முறைகள், பரிந்துரைக்கப்பட்ட முறை, வயல்வெளி ஆராய்ச்சி, IPM-யின் மாற்று முறைகள் ஆகியவற்றிக்காக நிலங்கள் ஒதுக்கப்பட்டன. ஊடுபயிராக தட்டைபயிரையும், பாதுகாப்பு பயிராக மக்காச் சோளம், துளக்க சாமந்தி மற்றும் கம்பு ஆகியவை கூடுதல் வருமானத்திற்காக வளர்த்தனர்.
வாரந்தோறும் வயல் சூழல் ஆய்வு (AESA) மூலம் வயலில் காணப்பட்ட அனுபவங்களை, சிறு குழுவில் பகிந்து கலந்துரையாடப்பட்டு, முடிவுகள் எடுக்கப்படும். ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சி காட்சியகம், மண்ணின் ஈரப்பாதுகாப்பு போன்ற சிறு சிறு ஆய்வுகள் நடத்தப்பட்டு, குழுவில் இருப்பவர்களுக்கு அனுபவம் பெற வழிவகுத்தது.

குழு இயக்கநிலை
குழுவில் உள்ளவர்களுக்கு பிரச்சினை தீர்க்கும் திறன் மற்றும் குழு மேம்பாட்டு திறன் ஆகியவற்றை வளர்ப்பதற்கு, குழு இயக்க நிலை செயல்கள் ஒரு முக்கிய பங்கு வகித்தது. ஒரு குழுவில் உள்ளவர்கள் மற்ற குழுவிடமிருந்து அனுபவங்களை பகிர்ந்து கற்றுக் கொண்டனர். FFS ன் முடிவில் வயல் தினம் கொண்டாடப்பட்டு, அருகிலுள்ள ஐந்து கிராமத்து விவசாயிகளும் கூடி, தக்காளி சாகுபடியில், அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

பயிற்சிகள்

நாற்றங்கால் உற்பத்தி; மேட்டுபாத்தி முறையில் தக்காளியில் நாற்றுகளை வளர்ப்பது, விவசாயிகளுக்கு மண்வழி நோய் கிருமிகளிடமிருந்து கன்றுகளை பாதுகாத்து, தரமான நாற்றுகளை உற்பத்தி செய்யும் முறையை உணர செய்த்து. நாற்றங்காலில், வரியில் விதைப்பது, முறையாக களையெடுப்பதற்கு உதவியதையும் உணர முடிந்தது.

தடுப்பு பயிர் மற்றும் பொறி பயிர் உபயோகம்
தக்காளி பொதுவாக தனிப்பயிராக பயிரிடப்படுகிறது. வயல்வெளிப்பள்ளி பங்கேற்புக்கு முன், விவசாயிகள் ஊடுபயிர் செய்தால், அவை, தக்காளியுடன் போட்டியும் மற்றும் பூச்சிகளை கவரவும் செய்யும் என்று நினைத்து வந்தனர். வயல்வெளிப்பள்ளியில் பங்கேற்றதன் மூலம், இந்த எண்ணங்கள் தவறு என்று உணர்ந்தனர். பாதுகாப்பு பயிரான மக்காச் சோளம் மற்றும் கம்பு, வெள்ளை ஈக்கு ஒரு தடுப்பாக அமைந்தது. துளக்க சாமந்தி, கனி துளைப்பான் முட்டை இடுவதற்கும், தட்டை பயிர், நன்மை செய்யும் உயிரினங்களுக்கு உணவாகவும் அமைந்தது.

பல்பயன் தரும் மூடாக்கு
முக்கியமாக மண் ஈரப்பதம் காத்தலின் பயன்களை கற்றுக் கொடுத்தனர். பண்னை கழிவுகளான கரும்பு தோகை, பயன்படாத வைக்கோல், மற்றும் தென்னை மட்டைகளை, தக்காளி சாகுபடியில் ஈரப்பதத்தை காக்கும் பொருள்களாக உபயோகப்படுத்தப்பட்டது. ஈரப்பதத்தை பராமரித்தால், பின்வரும் பயன்களை தங்கள் கண்களால் விவாசயிகளே பார்த்தனர்.

 • பயிரை அதிகமாக சேதப்படுத்தும், சிகப்பு சிலந்தியின் தாக்கம் குறைவாக இருத்தல்.
 • பாசன எண்ணிக்கையைக் குறைத்தல் (3-4 நாளுக்கு ஒரு முறையில் இருந்து 7 நாட்களுக்கு ஒரு முறை அளித்தல்)
 • இலையின் எண்ணிக்கை, செடியின் உயரம் போன்ற உற்பத்தி காரணிகளை 30% அதிகமாதல்
 • களை வளர்ச்சியைக் கட்டுபடுத்துதல்

ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு
பயிர் பாதுகாப்பில், மஞ்சள் நிற ஒட்டும் பொறி, இனக்கவர்ச்சி பொறி, குழி பொறி உபயோகம் பற்றியும், முட்டை ஒட்டுண்ணி ட்ரைகோகிராமா, நன்மை செய்யும் பூச்சி கிரைசோபெர்லா பற்றியும், மிளகாய் -பூண்டு சாறு தெளிப்பு, லேன்டனா இலைசாறு, பஞ்சகாவியம், NPV, சுடோமோனாஸ் ப்ளோரோசன்ஸ் பற்றியும் புதிதாக தெரிந்துக் கொண்டனர்.

ஒட்டும் வகை மஞ்சள் நிற பொறி
விவசாயிகள், ஒட்டும் வகை மஞ்சள் நிற பொறிக் கொண்டு சார் உறிஞ்சும் பூச்சிகளை கட்டுபடுத்துவதை கற்றனர். வெவ்வேறு நிறங்களை மற்றும் பொறியின் உயரத்தையும் மாற்றி சோதித்ததில், வண்ணமும், உயரமும் பூச்சிகளை கவருவதற்கு முக்கியமானவை என்பதை உணர்ந்தனர்.

முக்கிய பலன்கள்

செலவு குறைத்தல்
சில வெளி இடுபொருள்களை குறைப்பதன் மூலம், உற்பத்தி செலவை ஏக்ககுக்கு, ரூ.13,000 வரி குறைத்தனர். நாற்றங்காலை தானாகவே உற்பத்தி செய்வதால், செலவை 68% குறைத்தனர். முந்தைய சாகுபடி முறையில் உபயோகித்த இரசாயனங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை குறைத்ததால் உற்பத்தி செலவை 75% குறைத்தனர். பாத்தியில் களையெடுப்பு தேவையில்லையாதலால், செலவை 16% குறைத்தனர். எனவே மொத்தத்தில் 29%, உற்பத்திச் செலவு குறைக்கப்பட்டது.

IPM-ல் முடிவுகள் - மகளிரால் ஏற்படும் வித்தியாசம்
சாகுபடியில் முக்கிய முடிவுகளை, பொதுவாக கோட்டுரில் ஆண்கள் தான் எடுப்பர். ஆனால் இம்முறை, FFS ல் பங்குபெற்ற பெண்கள், மாற்று சாகுபடி முறையை பயன்படுத்தி சிவப்பு சிலந்தி தாக்கத்தை குறைத்தனர். இந்த பயன்களை கண்ட பின்னர், முதலில் பெண்களின் ஆலோசனைகளை ஏற்க தயக்கம் காட்டிய ஆண்கள், இப்பொழுது ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இன்னொரு வகையில், விலை அதிகமான இரசாயனங்கள் இல்லை என்பதில் மகிழ்ச்சியடைகின்றனர். ஆண்கள், பெண்களை FFS ல் கலந்துகொள்ள ஊக்கப் படுத்துகின்றனர். இப்பொழுது பெண்கள் பண்னை உற்பத்தியில், தாங்கள் பங்களிப்பதை நினைத்து பெருமிதம் அடைகின்றனர்.

செலவு மற்றம் வருமானம் ஒப்பீடு (ஒரு ஏக்கருக்கு)

வரிசை எண்

செயல்முறை

சாதாரண
சாகுபடி

FFS
பாத்தி

வித்தியாசம்    (%)

1

உற்பத்தி செலவு

 

நிலம் தயாரித்தல்

2200

2200

-

 

பொருள்கள்

12,000

12,000

 

 

இடு பொருள்கள் (நாற்று, தொழுஉரம், உரம், பூச்சிக்கொல்லி)

15,590

5125

67

 

வேலையாட்கள்

15,860

13,260

16

 

மொத்தம்

45,650

32,585

29

2

மகசூல்

18,420

17,800

-3

3

மொத்த வருமானம்

2,30,250

2,22,500

-3

4

நிகர வருமானம்

1,84,600

1,89,915

3

அதிகமான வருமானம்

உற்பத்திச் செலவு குறைவால், ஒரு ஏக்கருக்கு, ரூ.5,315 அதிக நிகர வருமானம் கிடைப்பதை விவசாயிகள் உணர்ந்தனர். 3% அதிகமானது. இரசாயனச் சாகுபடியிலிருந்து LEISA செயல்முறைக்கு மாறிய முதல் வருடத்திலேயே கிடைத்ததாகும்.

விவசாயின் கண்டுபிடிப்பு - ஒட்டும் வகை மஞ்சள் பொறிக்கு ஒரு வட்டார மாற்று பொறி

குழுவில் பங்கு கொண்டவர்கள் ஒட்டும் வகை மஞ்சள் பொறிக்கு ஒரு மாற்றினை கண்டுபிடித்தனர். தேங்காய் ஓடு மற்றும் மட்டைகளை சேகரித்து, மஞ்சள் நிறம் பூசி வெளிபுறத்தை விளக்கெண்னை தடவி, பூச்சிகளை கவர உபயோகப்படுத்தினர். 3 - 4 நாட்களுக்கு ஒரு முறை, என்ணெய் தடவ வேண்டும்.

குழந்தைகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி அறிய செய்தல்

இது குழந்தைகள் சுற்று சூழுல் பற்றி அறிய ஒரு சிறந்த வாய்ப்பு. குழந்தைகள் தங்கள் ஓய்வு நேரத்தில் FFS-ன் சில செயல்முறைகளில் ஈடுபட்டனர். அவர்கள் வயல் சூழல் ஆய்வு, விளக்கப் படம் வரைதல் அவற்றை விளக்குதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டனர். பயிர், பூச்சி மற்றும் அதன் உறவு ஆகியவற்றை புரிந்துக் கொண்டு அதை அவர்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

மூலம் : AME நிறுவனம்

பருத்தியிலிருந்து, சோளத்திற்கான மாற்று சாகுபடி வழிமுறைகள்

இராய்ச்சூர் மாவட்டத்தில், 140 குடும்பங்களைக் கொண்டது நகலாபூர் எனும் கிராமம். பெரும்பாலோனார் லிங்காய்த்து, ஆதிதிராவிடர் மற்றும் மடிவாலா சமூகத்தை சேர்ந்த சிறு விவசாயிகள். துங்கபத்ரா கால்வாய் திட்டத்தின், கடைமடை பகுதியில் இருக்கும் இவர்களின், சிலரால் மட்டுமே, பாசனத்தை பெற முடியும். இருப்பினும் கடந்த ஐந்து வருடங்களாக நீர் பாசனத்திற்கு வழியில்லாமல், இங்கே இருக்கும் நிலம், மானாவரி பூமியாக மாறியது. சோளம், பருத்தி மற்றும் சூரியகாந்தி போன்றவைகளே முக்கிய பயிர்களாகும். இங்குள்ள கரிசல் மண், பருத்தி சாகுபடிக்கே உகந்ததாக அமைந்தது. எனவே, பருத்தி ஒரே பயிராக சாகுபடி செய்யப்பட்டது. விலை கொடுத்து வாங்கும் இடுபொருட்களின் உபயோகம் பெருகியதால், பருத்தி, குறைந்த லாபகரமான பயிராக மாறியது.

பசவராஜப்பா, 38 வயதுடைய ஒரு சிறு விவசாயி. இவர் நான்காம் வகுப்பு வரை படித்தவர். இவர் 12 நபர்களைக் கொண்ட கூட்டு குடும்பத்தில் வாழ்பவர். தங்களுடைய சொந்த நிலத்தில் வேலை செய்வதோடு மட்டுமில்லாமல், தங்களுடைய வீட்டுத் தேவைக்காக, கூலி வேலைக்கும் செல்வார்கள். வேலையற்ற காலங்களில், ஆண் நபர்கள் அருகிலுள்ள நகரங்களுக்கு வேலைக்காக செல்வர். பசவராஜப்பா, 4 ஏக்கர் மானாவரி பூமியை வைத்துள்ளார். இவர் பருத்தி, சோளம் மற்றம் சூரியகாந்தி சாகுபடி செய்பவர். பொதுவாக இந்த பகுதியில், தொழுஉரத்தை மூன்று வருடத்திற்கு ஓரு முறையும், யூரியா, மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை ஒவ்வொரு பயிருக்கும், ஒரு ஏக்கருக்கு 50 கிலோ என்ற விகிதத்தில் அளித்து சாகுபடி செய்து வந்தார்கள். விதைகளை கடைகளில் வாங்கி விதைத்து வந்தனர். மோனோகுரோட்டோபாஸ், என்டோசல்பான், குயினால்பாஸ் போன்ற மருந்துகளை, 5-6 முறை தெளிப்பதும் வழக்கமாக இருந்தது. அம்முறையில், சாகுபடி செய்து ஒரு ஏக்கருக்கு, சுமாராக 5 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.

மாற்று சாகுபடி முறையை நோக்கி

பசவராஜப்பா குழுவின் மிகத் துடிப்பானவர். AME நிறுவனம் நடத்திய வயல்வெளிப்பள்ளியில் பங்குக் கொண்டார். ஒரு ஏக்கர் நிலத்தை, மாற்று சாகுபடி முறைக்கு ஒதுக்கினார். வயல்வெளிப்பள்ளிக்காக ஒதுக்கிய நிலத்தை கோடை உழவு செய்து, முன்பருவ மழை நீரை சேமித்தார். இதனை தொடர்ந்து, விதைப்பதற்கு முன், மூன்று முறை உழுதார். பண்னை வரப்புகளை சீர்செய்து, மண்னின் நீரை சேமிப்பதற்கு, குறுக்கு வரப்புகள் அமைத்தார். ஜட்ரோப்பா மற்றும் கிளைரிசிடியா போத்துகளை, வரப்பை காப்பதற்காகவும், கூடுதலான தழை உற்பத்திக்காகவும் நட்டார். மண் வளத்தை மேம்படுத்த ஆட்டுக்கிடை அடைத்தார்.

பருத்தி மட்டுமே சாகுபடி செய்யாமல், அதனுடன் துவரை, வெண்டை மற்றும் தட்டைபயிர் போன்றவற்றையும் சேர்த்து சாகுபடி செய்தார். துவரையை ஓரப் பயிராகவும், வெண்டை, தட்டைபயிரை பொறிபயிராகவும் வளர்த்தார். பூச்சி கட்டுப்பாடு செயலை, விதை நேர்த்தியிலிருந்தே, தொடங்கினார். விதைப்பதற்கு முன்பு, விதையினை டிரைக்கோடர்மா மற்றும் பாஸ்போபாக்டீரியாவுடன் கலந்தார். 15-20 நாட்கள் இடைவெளியில், மூன்று முறை வேப்பம் இலை சாற்றினை தெளித்தார். இதனால், இரசாயன பூச்சி கொள்ளி தெளிப்பதை, இரண்டு முறைக்கு குறைத்தார். செப்டம்பர் மாதம் காய் புழுவின் தாக்கம் அதிகமாக தென்படும்போது இரசாயன பூச்சிகொல்லியை தெளித்தார்.

இவ்வாறு சுற்றுச்சூழுலை பாதுகாக்கும் முறையில் அமைந்த மாற்று சாகுபடி முறையின் மூலம் பசவராஜப்பா, ஒரு ஏக்கருக்கு, 8 குவிண்டால் மகசூலை பருத்தியில் கண்டார். இந்த மகசூல் சாதாரண மகசூலை விட 6.25% அதிகம். இருப்பினும், குறைந்த இரசாயன பூச்சிக்கொல்லி உபயோகிப்பதால், இவருக்கு உற்பத்தி செலவு அதிகமாக குறைந்தது. இரசாயன உரங்கள் உபயோகிப்பில் 60% குறைவாகவும், பூச்சிகொல்லி உபயோகிப்பு, 6 முறையிலிருந்து  2 முறையாகவும் குறைந்தது. இரசாயனங்களின் உபயோகிப்பு கம்மியானதால், உற்பத்தி செலவும் வெகுவாக குறைந்தது.

இவரது நிலத்தில் விதைக்கப்பட்டப் பிற பயிர்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்பட்டது. ஒரு குவிண்டால் துவரை மற்றும் வெண்டை,  30-35 கிலோ தட்டை பயிர் ஆகியவை வீட்டு உபயோகத்திற்கு பயன்பட்டது. மேலும் பசவராஜப்பாவிற்கு, பூச்சி கட்டுப்பாட்டு முறை பற்றி மிகத் தெளிவாக தெரிய வந்தது. பயிற்சிகள் மூலம், இவர் கிரைஸோப்பா மற்றும் பொறி வண்டுகளை எளிதாக கண்டறியக்கூடிய அனுபவத்தைப் பெற்றார்.

பருத்தியில் செலவு மற்றம் வருமானம் (ரூபாயில்/ஏக்கருக்கு)

வரிசை எண்

செயல்முறை

சாதாரண
பாத்தி

சோதனை பாத்தி

வித்தியாசம் (%)

1

உற்பத்தி செலவு

 

நிலம் தயாரித்தல்

600

600

-

 

தொழுஉரம் மற்றும் உரம்

1650

1000

-39.4

 

விதை மற்றும் விதை நேர்த்தி

700

715

-

 

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

2380

550

-76.9

 

வேலையாட்கள்

1050

1050

-

 

மொத்தம்

6380

3915

-38.6

2

மகசூல் (கிலோ)

750

800

6.25

3

மொத்த வருமானம் (ரூபாய்)

16500

17600

6.66

4

நிகர வருமானம்

10120

13685

35.22

பருத்தி சாகுபடியில் கற்றவைகளை, சோள சாகுபடியில் கையாலுதல்

மாற்று சாகுபடி வழிமுறைகளை பருத்தியில் கடைபிடித்து பயன் கண்ட குழு உறுப்பினர்கள், இம்மாற்று சாகுபடி முறையினை சோளத்திலும் முயற்சித்தனர். வீட்டு உபயோகத்திற்காக சோளம் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. சோள சாகுபடியில், மண் வளத்தை பாதுகாப்பு மற்றும் பூச்சி நிர்வாகத்திற்கு சிறிதளவும் அக்கறை செலுத்தப்படுவதில்லை. AMEF-ன் வழிகாட்டுதல் மூலம் பசவராஜப்பா, சோள சாகுபடியிலும் சில மாற்று சாகுபடி முறைகளை கையாண்டார். மண் ஈரத்தன்மையை பாதுகாக்க நிலத்தை, சரிவுக்கு குறுக்காக உழுதார். Êசுமார் 20 மாட்டுவண்டி தொழுஉரத்தை இட்டார். கால்நடை மேய்ச்சலிலிருந்து சோளத்தை பாதுகாக்க, சாப்பளவர் பாதுகாப்பு பயிராகவும், கொண்டகடலை ஊடுபயிராகவும் சாகுபடி செய்தார். சோளம் மற்றும் கொண்டகடலை விதைகளை விதைப்பதற்கு முன்பு பாஸ்போபாக்டீரியா கொண்டு நேர்த்தி செய்தார். போதுமான இடைவெளி பராமரிக்கப்பட்டது.  எனவே, 3 கிலோ விதையிலிருந்து 2 கிலோ விதையாக  குறைத்தனர். மேலும், இது செடியின் வளர்ச்சியை அதிகபடுத்துவதுடன், பெரிய கதிரினை கொடுத்தது. சாதாரண முறையை விட செடியின் தண்டு மற்றும் இலைகள் 2 மடங்கு பெரியதாக காணப்பட்டது. வேப்ப இலை சாற்றை 2 முறை தத்து பூச்சிகளை கட்டுபடுத்துவதற்காக தெளித்தார். தொடக்கத்தில், கூடுதலான நிலம் உழுதல் மற்றும் தொழுஉரம் வாங்கி உபயோகிப்பதால் சாகுபடி செலவு அதிகமானது. இருப்பினும், பின்வரும் காலங்களில், தன் பண்ணையிலேயே தொழுஉரம் தயாரிக்க இருப்பதால், சாகுபடி செலவு குறைய வாய்ப்புள்ளது. அதிக சாகுபடி செலவு இருப்பினும் பசவராஜப்பாவிற்கு, நிகர வருமானம் அதிகமாக இருந்தது. முன்பு விட 2 மடங்கு அதிகமாக, அதாவது 9 குவிண்டால் சோளத்தை மகசூல் செய்தார். தீவண மகசூலும் 2 மடங்கானது, அதாவது 2  டன்னிலிருந்து 4 டன் ஆனது. கூடுதலாக 60 கிலோ கொண்டைக்கடலை, 60 கிலோ சாபிளவர் மகசூலையும் பெற்றார்.

சோள சாகுபடியில் வருமானம் (ரூபாயில் ஒரு ஏக்கருக்கு) 2005

வரிசை எண்

செயல்முறை

சாதாரன
முறை

மாற்று சாகுபடி முறை

வித்தியாசம் (%)

 

உழவு

400

2000

400

 

தொழுஉரம்

-

900

-

 

விதை மற்றம் விதை நேர்த்தி

94

65

-30

 

வேலையாட்கள் கூலி

880

880

-

1

உற்பத்தி செலவு

1374

3845

179

2

மகசூல் (கிலோவில்)

400

2900

125

3

மொத்த வருமானம் (ரூபாய்)

2400

7410

208

4

நிகர வருமானம்

1026

3565

247

மூலம் : AME நிறுவனம்

மானாவாரி பருத்தி சாகுபடியை இலாபகரமாக மாற்றும், மாற்று சாகுபடி முறைகள்

இராய்ச்சூர் தாலுக்காவில் 450 குடும்பங்களை கொண்ட காதர் என்னும் கிராமத்தில், பருத்தி ஒரு முக்கிய பணப்பயிராகும். பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வாழ்க்கைக்கு மானாவாரி பூமியையே நம்பியுள்ளனர். இந்த கிராமத்தில் மட்டுமில்லாமல், இந்த பகுதியே ஒரு பயிர் சாகுபடியை செய்து வருகிறது. பருத்தி, ஒரு காலத்தில் இலாபகரமான பயிராக இருந்தபோதிலும், இந்நாளில் அதிகமான விலை கொண்ட வெளி இடுபொருட்கள் சாகுபடிக்கு தேவைப்படுவதால், குறைந்த நிகர இலாபத்தையே கொடுக்கிறது. இடுபொருள் விற்பனையாளர்கள் அளிக்கும் ஆலோசனைகளின்படி, விவசாயிகள், பயிருக்கு இடுபொருளினை அளிக்கின்றனர். மேலும், விவசாயிகள், நிலத்தில் விதைப்பதற்கு வியாபாரிகளிடமிருந்து உதிரியில் விதைகளை வாங்குகின்றனர். காலப்போக்கில், சாகுபடி செலவு அதிகமாகவும், மண் வளம் குறைந்தும் மற்றும் மகசூல் குறையவும் தொடங்கியது.

மாற்றத்தை நோக்கி

இந்த பகுதியில் விவசாய குடும்பங்களின் அள்ளல்களை கருத்தில் கொண்டு, AME நிறுவனத்தின் இராய்ச்சூர் வட்டார மையம், இந்த கிராமத்தை தேர்வு செய்தது. இங்குள்ள விவசாயிகள் மாற்று விவசாய முறைகளை கையாண்டு இடுபொருளின் அளவை குறைத்து, ஒரு நிலையான பயிர் சாகுபடி புரிவதற்கு வழி வகுத்தது.

விவசாயிகளுடன் கலந்துரையாடுவதன் மூலம், பருத்தியின் மகசூலின் குறைவிற்கு பூச்சிகளே, முக்கியமாக சார் உறிஞ்சும் பூச்சி மற்றும் காய் புழுக்கள் காரணம் என்று தெரியவந்தது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த சராசரியாக, பயிருக்கு ஒன்பது தடவை பூச்சிக்கொல்லியை தெளிக்கிறார்கள். இதில் பச்சைக்காய்ப்புழுவைக் கட்டுப்படுத்த ஐந்து தடவையும், சார் உறிஞ்சும் பூச்சியைக் கட்டுப்படுத்த நான்கு தடவையும் பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்துகிறார்கள். சராசரியாக, ஒரு ஏக்கருக்கு 6 குவிண்டால் மகசூல் எடுப்பதற்கு பதில், 3.5 குவிண்டாலே பெறுகிறார்கள். மேலும், தரமற்ற விதைகள், காலம் தவறிய விதைப்பு, ஒழுங்கற்ற மண் மற்றம் நீர் மேலாண்மை மற்றும் குறைவான இயற்கை எரு ஆகியவற்றாலும் மகசூல் குறைவு ஏற்படுகிறது.

விவசாயிகள், தங்களுடைய பயிரை மட்டும் பார்க்காமல், பயிர் சூழலையும் கருத்தில் கொண்டு விவசாயம் செய்ய வேண்டும் என்பதை உணர, விவசாய வயல்வெளிப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இதனால், இங்கு இவ்வழிமுறையை, 2005ல் ஜூன் - டிசம்பர் மாதங்களில் (பயிர் காலத்தில்) நடத்தினர்.

இங்கு, AMEF-ன் முயற்சியினால், பிரதாப் ரெட்டி என்பவரின் உதாரணம் கொண்டு, பொதுவான வளர்ச்சி மற்றும் குறிப்பாக பருத்தியில் ஏற்பட்ட மாற்றங்களை காணலாம். தனி ஒரு விவசாயி மற்ற சாகுபடி முறையை கையாள எடுத்துக் கொண்ட முயற்சியையும், மேலும் பிறருடன் பகிர்ந்து கொண்ட அனுபவத்தையும் இது குறிப்பிடும்.

பிரதாப் ரெட்டி என்பவர், பத்தாம் வகுப்பு வரை படித்த 35 வயது இளைஞர். லிங்காயத்து என்னும் சமூகத்தை சேர்ந்தவர், மணமாகி இரண்டு குழந்தைகளை உடையவர். இவர் தனது 16 ஏக்கர் நிலத்தை, கூலியாட்களைக் கொண்டு சாகுபடி செய்து வருகிறார். இவர், விதைகளை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கியும் பயிரில் பூச்சி தென்பட்டால், உடனே பூச்சிக் கொல்லிகளை தெளித்தும் உரங்களை இட்டும் பருத்தி சாகுபடியை செய்து வந்தார். பருத்தி வயல்வெளிப்பள்ளியில், பிரதாப் ஆர்வத்துடன் பங்கு பெறுபவர். செயல்முறைக்காக 0.75 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தினார். இதில் 0.50 ஏக்கரில் பரிந்துரைப்படி சாகுபடியையும், 0.25 ஏக்கரில் அவரின் வழக்கமான முறையில் சாகுபடியையும் செய்தார்.  வயல்வெளிப்பள்ளி மூலம் பருத்தியில் மாற்று சாகுபடி முறைகளைக் கற்றுக் கொண்டார்.

கையாண்ட மாற்று சாகுபடி வழிமுறைகள்

துவரையை எல்லை பயிராகவும், சாமந்தி விதைகளை நிலத்தில் ஆங்காங்கே தூவியும், வெண்டை விதைகளை 1:10 விகிதத்தில் நிலத்தில் விதைக்கவும் செய்தார். எல்லா விதைகளையும், விதைப்பதற்கு முன் உயிர்உர விதை நேர்த்தி செய்தார்.

விதை<நேர்த்தி :
பாஸ்போபாக்டீரியா மற்றும் அசோஸ்பைரில்லம் கொண்டு விதைகளை, பின்வருமாறு விதை நேர்த்தி செய்தார்.
750 கிராம் பருத்தி விதைக்கு, தேவைப்படுவது,

 • 20 கிராம் வெல்லம்
 • 50 கிராம் பாஸ்போபாக்டீரியா
 • 50 கிராம் அசோஸ்பைரில்லம்

விதைகளை, சாக்கு அல்லது பேப்பரில் பரப்பி, இதன் மேல் வெல்லபாகை ஊற்றி, இதன் மேல் உயிர்உரங்களை தூவ வேண்டும். இதனை அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி, நேரடியாக விதைக்க வேண்டும். (பரிந்துரைப்படி, ஒரு ஏக்கர் விதைக்கு, 200 கிராம் உயிர் உரங்கள் தேவைப்பட்டாலும், விவசாயிகள் 50 கிராமே போதுமானது என்று கருதுகின்றனர்)

பூச்சி<மேலாண்மை:
துவரை, சாமந்தி மற்றும் வெண்டைப் போன்ற பொறிப்பயிர்கள் காய்புழு மற்றும் புள்ளிகாய் புழு போன்றவைகளைக் கட்டுப்படுத்த உபயோகப்படுத்தப்பட்டது. டிரைக்கோகிராமா போன்ற காய்புழு முட்டை உண்ணி போன்ற நனமை தரும் பூச்சிகளைப் பற்றி அறிந்து கொண்டார். NPV மற்றும் ஓரு இரசாயணப் பூச்சிக்கொல்லி தெளிப்பு பூச்சி மேலாண்மையில் தடுப்பு முறையாக பயன்படுத்தப்பட்டது. ஆனால், சாதாரண சாகுபடி முறையில், ஒரு புழுவைப் பார்த்தவுடனேயே பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டது. இந்த புதிய முறை மூலம், 9 முறை தெளிப்பதிலிருந்து 4 முறையாகவும், இரண்டாவது வருடத்தில் 4லிருந்து ஒன்றாகவும் பூச்சிக்கொல்லி தெளிப்பது குறைந்துள்ளது. இதனால் பூச்சிக்கொல்லி உபயோகிப்பு 75 சதவீதம் குறைக்கப்பட்டு, பருத்தி சாகுபடியில் செலவை குறைக்க உதவியது.

உர மேலாண்மை
முன்பெல்லாம், போட்டி போட்டுக்கொண்டு, விவசாயிகள் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி இடுவது வழக்கம். முதல் பருவத்தில், பிரதாப் உர அளவை குறைக்கவில்லை. ஆனால், தொழுஉர அளவை 2 டன்/ஏக்கர் அளவிலிருந்து 3 டன்/ஏக்கராகவும், கூடுதலாக 2 குவிண்டால் மண்புழு உரத்தையும் இட்டார். தற்போது தானாகவே உற்பத்தி செய்த கம்போஸ்ட் இட ஆரம்பித்துள்ளார்.

இம்முறைகளால், திரும்பவும், பருத்தி ஒரு இலாபகரமான பயிராக மாறியது. மாற்று சாகுபடி முறைகள், முதல் வருடத்திலேயே பருத்தி மகசூலை 20% அதிகமாகவும், நிகர வருமானத்தை 44% அதிகமாகவும் கொடுத்தது. தொழுஉரம் அளிப்பதால் சாகுபடி செலவு அதிகமானது. ஆனால், பிரதாப் தானாகவே தொழுஉரத்தை உற்பத்தி செய்வதால், பின் வரும் வருடங்களில், சாகுபடி செலவு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

செலவு மற்றம் வருமானம் (ஒரு ஏக்கருக்கு, ரூபாயில்)

வரிசை
எண்

பொருள்

விவசாயின் நிலம்

FFS நிலம்

வித்தியாசம் (%)

இடுபொருள் செலவு

 

விதை மற்றும் விதை நேர்த்தி

280

290

-

 

இயற்கை உரங்கள்

1500

2650

76.6

 

உரங்கள்

555

555

-

 

பூச்சி கொல்லிகள்

1030

240

-75.2

 

தாவர வகை பூச்சி கொல்லிகள்

-

304

-

 

மொத்தம்

2365

4039

70<.<7

ஆட் செலவு

2475

2250

- 9.0

1

உற்பத்தி செலவு

5840

6289

7.6

2

மகசூல் (கிலோ)

500

600

20.6

3

மொத்த வருமானம்

9800

12000

22.4

4

நிகர வருமானம்

3960

5711

44.2

முழுமையான ஒருங்கிணைந்த பண்ணையத்தை நோக்கி..

முறையான வழிநடத்துதல் மற்றும் குழுவின் ஆலோசனைகளாளும், பிரதாப் இயற்கை வளம் மேலாண்மை மற்றும் பண்ணை கழிவுகளை சுழற்சி செய்து உபயோகிப்பது போன்றவைகளில் கவனம் செலுத்தினார். தான் சென்ற கல்விச்சுற்றுலாவின் மூலம், கூடுதலான தொழுஉரம் தயாரிப்பதற்கு, கூடுதல் தழை அவசியம் என்பதை உணர்ந்தார். இதனால் 10000 பல்உபயோக செடி கன்றுகளை தன் பண்ணையில் நட்டார். இவைகளை வரப்புகளிலும் குட்டை ஓரங்களிலும் நட்டார். மேலும், மா, புளி மற்றும் சப்போட்டா போன்ற பழப்மரங்களையும் நட்டார். பயிர் கழிவுகளின் அவசியத்தை அறிந்த பின்னர் சூரியகாந்தி குச்சிகளை எரிப்பதை நிறுத்திவிட்டு, அதனை மண்ணுக்குள் மடக்கிவிடுவார்.

மேலும், பிரதாப் கூடுதலாக மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் வீட்டுத் தோட்டம் போன்றவற்றையும் தொடங்கினார். கத்திரி, வெள்ளரி, தக்காளி, பீர்க்கன்காய் போன்றவற்றை வீட்டிலும், வெண்டையை பருத்தி நிலத்திலும் சாகுபடி செய்தார். இதனால், வீட்டுக்கு போதுமான காய்கறிகள் கிடைக்கிறது. நீரை சேமிக்க 12 அடி ஆழம் உள்ள குட்டையை தோண்டினார். குட்டையில் நீர் இருப்பதைப் பொறுத்து, மீன் வளர்க்கவும் திட்டமிட்டுள்ளார்.

மூலம் : AME நிறுவனம்

கூட்டு முயற்சி பலன் கொடுத்தது

மேற்கு வங்காள, பூரிலியா பகுதியின் காஷிபூர் வட்டத்தில் அமைந்திருக்கும் கிராமம் பாலுக்கஜார். இப்பகுதியின் மண், பாறை அதிகம் கொண்ட, நீர் பிடிப்புத் தன்மை குறைந்து காணப்படும் சரளை வகையைச் சேர்ந்தது. இப்பகுதியின் மழை அளவு 1200 - 1400 மி.மீ, இரண்டே மாதங்களில் கொட்டித் தீர்த்துவிடும். மானாவாரியாக ஒரு பயிர் மட்டுமே விளையும் பகுதியாக காணப்படுகிறது. அந்த ஒரே பயிரும் தவறுகின்ற மழையால், சரியாக சாகுபடி செய்ய இயலுவதில்லை. இதனால் பெரும்பாலான நிலங்கள் சாகுபடி செய்யாமலேயே, தரிசாக நீண்ட காலமாக விடப்பட்டன. உணவு பற்றாக்குறையால், ஆண்கள் மற்றும் பெண்கள் பக்கத்தில் உள்ள வளமிக்க மாவட்டங்களுக்கு, வேலைதேடி செல்ல நேரிடுகிறது.

ஆனால் பாலுக்காஜர் விவசாயிகள் குழு, 300-350 பிகா (1 பிகா = 0.33 ஏக்கர்) நிலங்களை ஒரு பயிர் சாகுபடியிலிருந்து இரண்டு அல்லது மூன்று முறை சாகுபடிக்கு மாற்றியது. இந்த கிராமத்தின் அருகாமையில் துவாரகேஷ்வர் என்னும் நதி ஒடுகின்றது. நதியின் அருகாமையில் கிணறு வெட்டி, நதியையும் கிணற்றையும் இணைக்கும் வாய்க்கால் கட்டினர். மழை காலத்தில், நதியின் உபரி நீர், வாய்க்கால் வழியாக கிணற்றை நிரப்பியது. வறட்சி காலத்தில் இந்த நீரைக் கொண்டு அருகாமையில் உள்ள வயல்களுக்கு பாசனம் செய்ய திட்டமிட்டனர்.

இதை தோண்டும் போது இவர்கள் பல இடர்களை சந்தித்தனர். பல இன்னல்களை தான்டி 15 அடி அழமும், 16 அடி விட்டமும் உடைய கினற்றை அமைத்தனர். 10 எச்.பி. மோட்டர் பம்பு மூலம், சுற்றியுள்ள 300-350 பிகா நிலத்திற்கு பாசனம் அளித்தனர். மானாவரி நெல்லுடன், இப்பாசன உதவியுடன, மேலும் இரண்டு பயிர்களை சாகுபடி செய்ய முடிந்தது.

இந்த குழுவில் பெரும்பாலானோர் நிலமற்ற விவசாயக் கூலிகள். நில சொந்தக்காரர்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மழைக் காலத்தின் போது உரிமையாளர்கள் நெல் சாகுபடி செய்வர். மற்ற காலங்களில் குழு உறுப்பினர்கள் நிலத்தை சாகுபடி செய்ய அனுமதிப்பர். கடந்த வருடம், கோதுமை, பட்டானி, தக்காளி, பூசனி, கத்தரிக்காய், உருளை,

வெங்காயம் முதலிய பயிர்களை உறுப்பினர்கள் விளைவித்தனர். இதனால் 110 குவிண்டால் கோதுமை, 700 கிலோ கடுகு, 35 கிலோ லெண்டில், 10 கிலோ லதைரஸ், 55 கிலோ கொண்டைக்கடலை, 5 கிலோ லின்சீட், 210 கிலோ தக்காளி, 22 கிலோ பீர்க்கன்காய், 400 கிலோ பூசனி ஆகிய மகசூல் எடுத்தனர். இதனால் ரூபாய் 1,20,000 வருமானமாக அடைந்தனர். அடுத்த 2-3 ஆண்டுகளில், எந்த விவசாயிக்கும் இடம்பெயர்ந்து செல்லும் அவசியம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம் : DRCSC நீயூஸ்லெட்டர், வெளீயீடு எண் 1, ஏப்ரல் - ஆகஸ்ட், 2008.

பானமாளி தாஸ் - ஒரு ஒருங்கிணைந்த விவசாயி

மேற்கு வங்காளம், தெற்கு 24 பர்கானாஸ் காயதம் கிராமத்தில் வசிப்பவர், பானமாளி தாஸ். அவருடைய ஒருங்கிணைந்த பண்ணையத்தில் 5 உறுப்பினர்களைக் கொண்டுள்ளார். ஒரு குட்டை மற்றும் சிறிய வீட்டுத்தோட்டத்துடன் கூடிய 0.25 ஏக்கர் நிலம், 0.33 ஏக்கர் வயல் சார்ந்த நிலம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை பானமாளிதாஸ் தொடங்கினார்.

இந்த நிலங்கள் சுந்தர்பன் டெல்டா பிரதேசத்தில் அமைந்துள்ளன. களிவாகு மண், உவர் தன்மையும் கொண்டது. ஆற்றோரம் இவருடைய நிலமிருப்பதால், அவ்வப்போது தண்ணீர் தேங்கும். காரிஃப் பருவத்தில் வயலில் நெல் சாகுபடியும், ரபி பருவத்தில் உருளை, லத்தைரஸ் (அவரை வகை), சாகுபடியும் மேற்கொள்வார். வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தில், காய்கறி பயிர்கள், கீரைவகைகள், பழமரப் பயிர்களை சாகுபடி செய்துள்ளார். இதனால் இவர் மார்க்கெட் செல்வது குறையவில்லை. குட்டையில் மீனும் வளர்க்கிறார். ஆனால் இதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கவில்லை. மண்வளத்திற்காக சாணி, குப்பை, போன்றவற்றை பயன்படுத்துகிறார்.

கையாண்ட யுக்திகள்

நிலத்தின் ஒரு மூலையில் சிறிய குளம் வெட்டினார். கிடைத்த மண்ணை, பரிசோதனை நிலத்தில் பரப்பி, உயரத்தை அதிகரித்தார். வயலைச்சுற்றிலும் சிறிய வாய்க்கால் அமைத்து வருடம் முழுவதும் பாசனம் கிடைக்க வழி செய்துள்ளார். நிலத்தின் பெரிய வரப்புகளில் உயரமான மரங்கள் உள்ளன.

தைலமரம், வேம்பு, சூபாபுல், தூங்கு மூஞ்சி மரம், மூங்கில் போன்றவை உள்ளன. வீட்டுத்தோட்டத்தில் வாழை, கொய்யா, சப்போட்டா, பேரிக்காய், எலுமிச்சை, மா, தென்னை போன்ற பயன்தரும் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. வருடம் முழுவதும் 25-30 காய்கறி பயிர் வகைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து பலமுறைகளில் சாகுபடி மேற்கொள்கிறார். தாஸ் அவரது வீட்டின் பின்புறம் புதிதாக சாண எரிவாயுக்கலன் ஒன்றை அமைத்துள்ளார். அதிலிருந்து அவருக்கு எரிவாயுவும், மக்கியசாணி, எருவும் கிடைக்கின்றன.

பானமாளி தாஸ், பசு, வாத்து, கோழி போன்ற கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். ஒருங்கிணைந்த பண்ணையாக, நெல்வயல், மீன், வாத்து, அசோலா ஆகியவற்றை காரிஃப் பருவத்தில் மேற்கொள்கிறார். அவருடைய பரிசோதனைத் நிலத்தில் எவ்வித ரசாயன கலப்பும் கிடையாது. குளத்தில் ரோகு, கட்லா, மிர்கால், புல்கெண்டை போன்ற மீன் இனங்களை வளர்த்து, ஒரளவிற்கு லாபமும் பார்க்கிறார்.

மீனுக்கு உணவாக, கால்நடைத் தீவன கழிவுகள், பண்ணைக்கழிவு, சாணி, எள்புண்ணாக்கு ஆகியவற்றை போடுகிறார். 5 பசுக்கள், 8 வாத்துகுஞ்சுகள், 4 கோழிகள் மற்றும் 14 கோழிக் குஞ்சுகள் அவரிடம் உள்ளன.வைக்கோல், புல், பயிர்க் கழிவுகள் தீவனமாக உபயோகப்படுத்தப்படுகின்றன. அரிசிக் குருணைகள், தவிடு, நெல்கழிவுகள் குளத்திலிருந்து கிடைக்கும் சிறிய நத்தைகள், கோழிகளுக்கும், வாத்துகளுக்கும் உணவாகின்றன.

தாஸ் சொந்தமான மண்புழு உரம், கம்போஸ்ட்உரம் ஆகியவற்றை தயார் செய்கிறார். எள்புண்ணாக்கு, சாண எரிவாயுக் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்துகிறார். வேம்பு சார்ந்த பொருட்கள், பூண்டை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தி பூச்சி விரட்டி பயன்படுத்துகிறார். முந்தைய பருவத்தில் சாகுபடி செய்த பயிர்களிலிருந்து அடுத்த பருவத்திற்கு தேவையான விதைகளை சேமித்து வைத்துக் கொள்கிறார். பருவகால பணப்பயிர்களான, நூல்கோல், கோஸ், காலிஃப்ளவர், போன்றவற்றின் விதைகளை மட்டும் வெளியில் வாங்கிக் கொள்கிறார்.

ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பிறகு அவரிடமிருக்கும் விதைகளையும் மாற்றிக் கொள்கிறார். தாஸ் அவர்களுடைய பரிசோதனை நிலத்திலும், வீட்டுத்தோட்டமும் நல்லமுறையில் பராமரிக்கப்படுகின்றன. கலப்பு பண்ணையம் அதாவது கத்தரியுடன், முள்ளங்கி, பாலக் கீரை, உருளையுடன் பரங்கி, வெங்காயத்துடன் பசீல்லா ஆகியவற்றை சாகுபடி செய்துவருகிறார். மண்புழு தயாரிப்புக்கூடம் வைத்திருப்பதால், அதிலிருந்து கிடைக்கும் மண்புழு உரத்தை தனது வயலுக்கும், தோட்டத்துக்கும் பயன்படுத்திக் கொள்கிறார். அவர் வளர்க்கும் வாத்துகளை நெல்வயலில் மேயவிடுகிறார். இதன்மூலம் நெற்பயிர் வேர்களுக்கிடையே காற்றோட்டம் ஏற்படுகிறது. கோழிகள் பூச்சிகளை, புழுக்களை தோட்டத்திலிருந்து பொறுக்கி சாப்பிடுகின்றன. நெல்வயலில் தண்ணீர் நிற்கும்போது மீன் குஞ்சுகளை அதில் விட்டு வளர்க்கிறார் தாஸ்.

காரிஃப் 2004 ல் ஒரு பயிர் சாகுபடி செய்த தாஸ், காரிஃப் 2005 ல், 9 பயிர்கள் சாகுபடி செய்கிறார். குளத்தின் மேல் இருக்குமாரு கோழிக்கூண்டுகளை வைத்துவிட்டார். கோழி எச்சங்கள் குளத்தில் விழுந்து, மீன்களுக்கு உணவாகின்றது. மேலும் கோழிக்கழிவுகள் குளத்திலுள்ள பாசிகள், மற்றும் பிற உயிரினங்களுக்கும் உணவாகி, அவை வளர உதவுகிறது.

குளக்கரையில் கீரை வகை காய்கறிகளை வளர்க்கின்றார்.  தாஸ் செய்துள்ள மொத்த செலவான ரூ.12,235.75 (சொந்த வேலையாட்கள் கூலி இல்லாமல்), தன் வயலில் தயாரிக்கப்பட்ட  சொந்த இடுபொருட்களின் மதிப்பு, ரூ.9497.75.  அதாவது, மொத்த இடுபொருள் தேவையில் சுமார் 77.62% அவர் பண்ணைக் கழிவுகளிலிருந்தே கிடைத்திருக்கிறது.  கடந்த சில வருடங்களில் அவரது நிலத்தின் அங்கக் கரிமத்தின் அளவு அதிகரித்திருக்கிறது.  பானமாளி தாஸ் அவர்களது வயல், மற்ற தோட்டங்களோடு ஒப்பிடும் போது, பெட்ரோல் போன்ற எரிபொருள் தேவை மிகவும் குறைவே. காரணம் முழுக்க அவர் இயற்கை இடுபொருட்கள், அவரது தோட்டத்தில் கிடைத்தவற்றையே பயன்படுத்தியுள்ளது தான். பயிர்சாகுபடிக்கும், அவரது தோட்டத்தில் உள்ள வேலைக்கும், அவருடைய சொந்த வேலையாட்களே பயன்படுத்தப் பட்டதால், வேலைகளும் விரைவாக, காலத்தே செய்யப்பட்டுள்ளன.  தாஸ் சரியாக திட்டமிட்டு, அவரது பண்ணை வேலைகள் அனைத்தும் தாமதமில்லாமல் வேகமாக நடக்கும் வகையில் பார்த்துக்கொண்டார்.  இன்று பானமாளி தாஸ், தன்னுடைய  பண்ணையை தானே பராமரித்துக்கொள்வதோடு, சமூக பொருளாதார அளவிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முதன்மையாகத் திகழ்கிறார்.  இவரது பண்ணையை பார்வையிட்ட பலரும், இப்போது ஒருங்கிணைந்த பண்ணையத்திற்கு மாறி வருகின்றனர்.  பானமாளி தனது சொந்த இடுபொருட்களை பயன்படுத்தி, வெளியிடத்து பொருட்களை நிறுத்தி இருக்கிறார்.  தனது விளைபொருட்களை விற்பனை செய்ததன்மூலம் வருமானமும் பார்க்கிறார்.  தனது குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்கிறார்.

ஒருங்கிணைந்த பண்ணையத்தில், இயற்கை வேளாண்மை நுட்பங்களையும் சேர்த்து கடைபிடிப்பதால், அதிகவிளைச்சல் கிடைத்து, அவரது குடும்பத்திற்கு உணவு பாதுகாப்பு கிடைத்திருக்கிறது.  ஒருங்கிணைந்த பண்ணையமாக மாற்றி இருப்பதால் பண்ணைக்குத் தேவைப்படும் இடுபொருட்களுக்காக வெளியிடத்துக்கு செல்வதை தடுத்திருக்கிறார்.  அவருடைய பண்ணையில் கிடைக்கும் கழிவுகளையே இயற்கை உரமாக மாற்றி பயன்படுத்தி இருக்கிறார்.

மூலம் :DRCSC, கொல்கத்தா

சமுதாயத்தினால் உருவாக்கப்பட்ட அடுக்கு முறை படிக்கட்டு குளங்கள் மூலம் மழைநீர் சேமிப்பு

பிரச்சனை

சோட்டாநாக்பூர் மலைப்பகுதி மேற்குவங்கத்தின் மேற்கு பகுதியில் செல்கிறது. நிலவாகு மேடுபள்ளமானது. நிலத்தின் மேற்பரப்பில் எவ்வித பயிர்களும் இல்லை. நிலத்தின் மண்வகை சரளை பாங்காக, குறைவான  தண்ணீரை பிடித்து வைக்கும் திறனைக் கொண்டது. இப்பகுதியின் சராசரி வருடாந்திர மழைஅளவு 1200 முதல் 1400 மி.மீ. ஆனால், இவ்வளவு மழையும் வருடத்தின் இரண்டு மாதங்களில் பெய்து விடுகிறது.  மீதி இருக்கும் பத்துமாதங்களும் கடுமையான வெப்பத்துடனே இருக்கும்.  மழையை நம்பி இப்பகுதியில் ஒரே ஒரு பயிர் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.  தண்ணீர் பஞ்சம் இருப்பதால் மீதியுள்ள 8-9 மாதங்களில் பயிர்சாகுபடி மேற்கொள்ள இயலாது  சமீபத்திய தட்பவெப்பநிலை மாற்றம் காரணமாக மானாவாரியாக, பயிரிடப்படும் இந்த ஒரு  பயிருக்கு கூட ஆபத்து உள்ளது.

பெரும்பாலான நிலங்கள், பயிர்சாகுபடி இல்லாமல் தரிசாகவே பல மாதங்கள் இருக்கின்றன.  உணவுப்பற்றாக்குறை காரணமாக, வேலை செய்யக் கூடிய ஆண் பெண் இருபாலரும் பக்கத்துமாவட்டங்களுக்கு குடிபெயர்ந்து செல்கிறார்கள்.

குளம் வெட்டுவது சற்று அதிகம் செலவு செய்ய வேண்டிய ஒரு பணி. காரணம், கற்களும், பாறைகளும் அதிகமிருக்கும் இடங்களில் குளம் வெட்டுவது சிரமம்தான்.  இதனால் குளத்தின் ஆழம் குறைவாகவே இருக்கும்,  அதில் சேமிக்கப்படும் நீரின் அளவும் குறைவே.  கோடைகாலங்களில் கிணறுகளும் வற்றிவிடும். சில நதிகளில் 10-12 மாதங்கள் வரை நீர் காணப்படும். ஆனால், கிராம வாசிகளுக்கு இதை வறண்ட நேரங்களில் பயன்படுத்தும் நுட்பம் தெரியாமல் இருந்தது.

கையாண்ட முயற்சிகள்
 • சிறு மற்றும் குறுநில விவசாயிகள் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டு, புதுக்குளங்கள் வெட்டப்படவும், பழைய குளங்களில் தூர்வாரவும் ஊக்கப்படுத்தப்பட்டனர். குளங்கள் மூன்று அல்லது நான்கு அடுக்குளில் உருவாக்கப்படுகின்றன. மூன்று அல்லது நான்கு படிகள், 4 பக்கமும் அமைக்கப்படுவது, குளத்தின் மையப்பகுதிக்கு செல்ல ஏதுவாகிறது.  மழைகாலங்களில் இந்தபடிகள் மூழ்கி இருக்கும்.  மழைநீர் நேரடியாக குளத்தில் விழுவதோடு, அக்கம் பக்கங்களில் விழும் மழைநீரும் குளத்திற்கு வந்து சேரும் வகையில் கால்வாய்கள் உருவாக்கப்பட்டன. குளத்தின் நான்கு பக்கங்களிலும் குச்சிகள் நடப்பட்டு, படரும் தாவரங்களை கரையில் விதைத்ததால், இக்குச்சிகளில் பரவி, காய்கறிகள் கிடைத்தன.  கோடை மாதங்களில் தண்ணீரின் அளவு குறையும்போது 4 படிகளும் தெரியும்.  அதில் காய்கறிகளை பயிரிட்டனர். குளக்கரையில், காய்கறிகள், பயறுவகைப் பயிர்கள், மரப்பயிர்களை சாகுபடி செய்யப்பட்டன. குளத்தில் மீன் வளர்ப்பதன்மூலம் கூடுதல் வருமானமும் கிடைத்தது. குளத்திலுள்ள தண்ணீர் பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டது. குளத்தின் படிகள், குளக்கரை, நிலங்களில் இயற்கை சாகுபடி முறையே பின்பற்றப்பட்டது. மொத்த விளைச்சல் கணக்கிடப்பட்டு, விவசாய குழுவினர் தங்களுக்குள் பங்கிட்டு எடுத்துக் கொள்வர். மீதி இருக்கும் விளைச்சலை விற்பனை செய்து, விவசாயிகள் குழு துவக்கியுள்ள வங்கிக்கணக்கில் சேமித்தனர்.
 • நிலத்தின் சொந்தக்காரர், மானாவாரியாக ஒரு பயிர் சாகுபடி செய்வார். கோடைகாலத்தில், அந்நிலத்தை சிறு குறுநில விவசாய குழு பயன்படுத்தும்வகையில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  ஆற்றிலிருந்து தண்ணீரை எடுப்பதற்கு குறைந்த செலவிலான ஒரு நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • குளத்தின் பரப்பு 1.3 ஏக்கர். 180 அடி X 160அடி X 10 அடி.
 • குளம் எடுக்கப்பட்டுள்ள நிலம், 5 நபர்களுக்கு சொந்தமானது. இதனை இவர்கள் 30 விவசாயிகளுக்கு குத்தகைக்கு அளித்துள்ளனர்.  குத்தகை காலத்திற்கு பிறகு, குளம் உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்கப்படும்.  அதிலுள்ள தண்ணீரை விவசாயிகள் குழுவினர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெற்ற நண்மைகள்
 • இதுவரை பயன்படுத்தபடாமல் இருந்த இயற்கை வளம் (தரிசு), உணவு, தீவனம், எரிபொருள் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது.
 • அதிகமான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு, மக்கள் குடிபெயர்தல், தடுக்கப்படுகிறது. குளம் வெட்டுவதற்கு 2979 மனிதநாட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.  தரிசு நிலத்தில் கலப்பு பயிர்சாகுபடியின் மூலம் 831 மனித வேலை நாட்கள் கிடைத்துள்ளது.
 • மண்வளம் மேம்படுகிறது.
 • வருடம் முழுக்க குடும்பத்தினருக்கு தேவையான உணவும், சத்துக்களும், கிடைக்க உறுதி செய்யப்படுகிறது.  குளக்கரையில் மேற்கொள்ளப்படும் சாகுபடியை தவிர பத்து ஏக்கர் தரிசு நிலம், பாசனமும் பெறுகிறது.  2006ல் கலப்பு பயிர் சாகுபடி முறையில் 40 வகையான காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டன.
 • சொந்த தேவைக்குபோக மீதமுள்ளவற்றை விற்பனை செய்து, அதன்மூலம் ஒரு வருமானம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மூலம் : DRCSC,கொல்கத்தா

கிராமத்தை மாற்றிய குழந்தைகளால் உருவாக்கப்பட்ட தோட்டம்

மேற்கு வங்காள மாநிலத்தில், மேற்கு மேடினிபூரில் உள்ளது பாலியகாட்டி என்னும் ஒரு மலைக்கிராமம். இங்கு குறைந்த வருமானம் உள்ள மக்களே வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்திற்கான அடிப்படை வசதிகளே கிடையாது. இந்த ஊரில் பணிபுரியும் நிறுவனமான NPMS, நீண்ட காலமாக இந்த சூழ்நிலைய மாற்ற முனைந்து வருகிறது. 2006-ல் இருந்து DRCSC, NPMS- உடன் இணைந்து, 12-15 உட்பட்ட குழந்தைகளை, சுற்றுப்புற சூழல் மற்றும் இயற்கை வளம் சம்மந்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் சோதனை செயல்பாடுகளில் ஈடுபடுத்தி வருகிறது.

இந்த கிராமத்தில் வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய இயற்கையின் இரு சீற்றங்கள் அடிக்கடி வந்து போகும். இங்கு வாழும் மக்கள் வேறு வழியின்றி இதனை ஏற்றுக் கொண்டு, வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தங்கள் அன்றாட உணவில் காய்கறி என்பது இருந்ததே இல்லை. ஜூன் 2008ல், 200 பாக்கெட் காய்கறி விதைகள், 30 குந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதில் 18 குழந்தைகள் தங்கள் வீட்டிலேயே இதனை வளர்த்தனர்.

மற்றவர்களது தோட்டப் பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது முட்டைகோஸ், புடலங்காய், பீர்க்கங்காய், சுரக்காய், சக்கரவள்ளி கிழங்கு, தட்டைப்பயிர், பீன்ஸ், சோயாபீன்ஸ், வெள்ளரி, பாகற்காய், வெண்டை, பாலக்கீரை போன்ற காய்கறிகளின் விதைகள் அந்த பாக்கெட்டில் கொடுக்கப்பட்டது. சில காய்கறிகளை பார்த்ததேயில்லை என்பதால் சிலர் அதனை சாப்பிட மறுத்தனர். இதனால் NPMS, இந்த அறியப்படாத காய்கறிகளை எப்படி சமைப்பது என்று கற்றுக் கொடுத்தது. குழந்தைகளால் தயாரிக்கப்பட்ட தொழுஉரம் மற்றும் மண்புழு உரங்களே, மண்வளத்தை மேம்படுத்த உபயோகப்படுத்தப்பட்டது.3-4 வாரங்களுக்குள் ஒங்வொருவரும், சராசரியாக 150 கிலோ காய்கறிகளை அறுவடை செய்தனர். குழந்தைகள், அவர்கள் ஆற்றிய செயல்பாடுகள், ஏற்பட்ட மாற்றங்கள், பூச்சி தாக்குதல், செடியின் வளர்ச்சி, முளைப்புத்திறன், உற்பத்தி திறன், உற்பத்தியான பொருளின் அளவு மற்றும் தரம் ஆகியவற்றை விரிவாக பதிவு செய்து வந்தனர். இது குழந்தைகளுக்கு இந்த நடவடிக்கையின் பின் உள்ள அறிவியலைக் கற்றுத் தந்தது. இவர்களின் பெற்றோர்களும் இந்த செயல்பாட்டுக்கு, ஆர்வம் காட்டினர்.

அறுவடை செய்ததில், மிஞ்சி இருக்கும் காய்கறிகளை மற்ற கிராம் வாசிகளுக்கும் கொடுத்து, அவர்களும் வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பதின் நன்மைகள் பற்றி அறிய விழிப்புனர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த செயல்பாட்டிற்கு உதவி புரிந்து இந்தியன் ஹில்பி

மூலம : DRCSC செய்திகள், வெளியீடு எண், 3

நம்பிக்கையூட்டும் காடுகள்

மேற்கு வங்காளத்தின், பிர்பமின், இராஜ்நகர் பிளாக்கில் உள்ள கிராமம் நாராயணபூர், ஆகும். இங்கு வெயில் காலங்களில், நாய்கள் கூட நீண்ட பயனம் செய்ய அஞ்சும். ஏனென்றால், நிழலில் நிற்பதற்கு, ஒரு மரம் கூட இங்கில்லை. ஜனவரி 2008ல், நாரயணபூர் சிஷு சமித்தி (NSS), தொடங்கப்பட்டது.

இது, 40 ஏக்கர் செம்மண் வகை கொண்ட தரிசு நிலத்தை, தன் கீழ் கொண்டு வந்தது. இதற்கு முன்னர் கால்நடைகளை மேய விடும், புல் நிலமாக உபயோகிக்க பட்டு வந்தது. சமித்தி, 12 நிலமற்ற மற்றம் 4 குறுநில மலைவாழ் விவசாயிகளைக் கொண்டு ஒரு குழுவை அமைத்தது. இந்நிலத்தை கிராமத்திற்கு உதவும் சொத்தாக மாற்றுவதற்கு, இந்த நிலத்தில் பழ மரங்கள், தீவன பயிர்கள், விறகுக்கு பயன்படும் மரங்களை நட்டனர். இம்மரங்களுக்கு இடையில், குறுகிய கால பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்தனர். இந்த நிலத்தில் வளரும் மரங்களிலிருந்து வரும் வருமானத்தில், 50 % தரிசு நிலத்தின் சொந்தகாரர்களக்கும், மேலும் 50 %, இந்நிலத்தை பாதுகாக்கும் குழுவுக்கும் கொடுக்கப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்கள் ஊடுபயிர் வருமானத்தை தங்களுக்குள் சமமாக பகிர்ந்து கொள்வார்கள். ஏப்ரல் 2008ல் நாற்றங்காலில், செடியை உற்பத்தி செய்வதை, இந்த குழு ஆரம்பித்தது. சமுதாய பங்கேற்புடன் 36 மரவகைகள் தேர்ந்து எடுக்கப்பட்டது. உற்பத்தி செய்த 26,000 மரக்கன்றுகளில் 19150 கன்றுகளை நட்டனர். 4000 மரக்கன்றுகளை விற்பனை செய்தனர். மீதமுள்ளதை, வட்டார மக்களுக்கு பகிர்ந்து அளித்தனர்.

மண் மற்றும் நீர் பாதுகாப்பு முறையினால் அடுத்த மழைகாலத்திற்குள் மண்வளம் முன்னேற்றம் ஏற்பட்டது. புல் மற்றும் களைகள் தானாகவே முளைக்க தொடங்கின. இப்பகுதியைச் சுற்றி 4 பக்கமும் வரப்புடன் கூடிய நீர் தேக்க குழிகள், 50 அரைவட்ட வரப்புகள்  மற்றும் 5 கல் வரப்புகள் அமைக்கப்பட்டது. இதனால் 1342 ஆள் தின அளவுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது. மக்காச் சோளம், சுரக்காய், கிட்னி பீன்ஸ் போன்ற நடுத்தர வயது  பயிர்களும் மற்றும் துவரை, சபைபுல் ரொசல் போன்ற அதிக நாள் பயிரையும் நடட வேலை ஆரம்பிக்கப்பட்டது.  வண்டல் மண், தொழுஉரம் மற்றம் வேப்பம் புண்ணாக்கு போன்றவைகள் உரமாக இடப்பட்டது. பாதுகாப்பிற்காக, பனை, பேரிச்சை, துவரை, ரோசல் போன்ற உயிர் அரண்கள் எழுப்பப்பட்டது.  குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பொறுப்பு எடுத்து, சமுதாய பாதுகாப்பிற்கும் வேலை செய்தனர். கரீஃப் கால இறுதியில், 150 கிலோ காய்கறி, 15 கிலோ மக்காச் சோளம், 200 கிலோ ரோசல் மற்றும் 250 கிலோ தீவணப்புள் ஆகியன அறுவடை செய்யப்பட்டது. அங்குள்ள குடும்பங்களே பெரும்பாலானவைகளை பயன்படுத்தின. சில புல் மற்றும் களைகள், கைவினைப் பொருள்கள் மற்றும் மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கு இடு பொருளாக அமைந்தன.  இதனால் கொஞ்சம் அதிகப்படியான வருமானமும் கிடைத்தது.

ஆரம்ப முதலீடு, ரூபாய் 2.5 இலட்சமாகும். இதில் 30% அங்குள்ள மக்களே வேலையாட்களாக முதலீட்டில் பங்களித்தனர். 16 குடும்பங்களுக்கு சராசரியாக 155 தினங்கள் வேலைக் கிடைத்தது.

பருவகாலப் பயிர்கள், அடிப்படை காய்கறி தேவையை பூர்த்தி செய்தது. தரமான தீவணப்பயிர் உற்பத்தி செய்யப்பட்டது. அழியும் தருவாயில் இருந்த மரங்கள் உருவாக்கப்பட்டு பல்லுயிர் பெருக்கத்தை அதிகப்படுத்தியது. துடப்பம் தயாரித்தல், ரோசல் ஜாம் தயாரிப்பு போன்றவை வருமானத்தை கொடுத்தது. அருகாமையில் உள்ள 3-4 கிராமங்களில் உள்ள மக்கள், இதைப் போன்ற செயல்பாட்டை தங்கள் கிராமத்தில் புரிவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த செயல்பாட்டுக்கு, உதவி புரிந்தது, கிருஸ்டியன் எய்டு ஆகும்.

மூலம் : DRCSC செய்திகள், வெளியீடு எண், 3

கொக்கரணி

- வறட்சி மேளாண்மைக்கு பயன்படும் பராம்பரிய நுட்பம்

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தின், எரிமையூர் கிராமத்தின் படையெட்டி என்னும் குக்கிராமத்தில், நெல் ஒரு முக்கிய பயிராகும். இந்த குக்கிராமத்தில், 69 குடும்பங்களும், சுமார் 100 ஏக்கர் நெல்வயல்களும் உள்ளது. போன வருடம், ஆகஸ்ட் மாதத்தில், கேரளா மாநில பல்லுயிர் குழுமம் மற்றும் தானல் என்கிற திருவனந்தபுரத்திலுள்ள அரசு சாரா நிறுவனம் இணைந்து, வேளாண் பல்லுயிர் மீட்பு மற்றும் இயற்கை கிராமம் என்னும் மூன்று வருட திட்டத்தை தொடங்கியது.

வழக்கமான வறட்சி

மானாவாரி விவசாயத்தில், இங்குள்ள விவசாயிகள், வருடத்திற்கு, இரு பயிரை  சாகுபடி செய்கின்றனர்.  இரண்டாவது பயிரின் பெரும்பகுதி காலம், வறட்சி நிலையிலேயே வளரும். மலபுழா அணைகட்டிலிருந்து நீர், கிராமத்து அருகாமையில் வாய்க்காலில் செல்லும். ஜனவரி மாத கடைசியில், இந்த நீர் வரப்பும் நின்றுவிடும. வாய்க்காலின் அருகாமையில் உள்ள விவசாயிகள் மற்றும் தாழ்வு பகுதியில் காணப்படும் சுமார் 25 ஏக்கருக்கு, வாய்க்காலின் நீரைக் கொண்டு மிகவும் அவசியமான பயிர் பருவத்தில், தேவையான பாசனத்தை செய்வர்.

ஆனால் இந்த நீரை மிகத் தொலைவுக்கு எடுத்துச் செல்ல இயலாது..  இதனால், மேடான நிலப்பகுதி விவசாயிகள், 2-3 வார வறட்சியால் பயிரை இழப்பது சகஜமானது. இக்கிராமம் குடிநீருக்கு திறந்த கிணற்றையே நம்பியுள்ளது. இங்கே சில பொது மற்றும் தனியார் கிணறுகள் உள்ளது.  திறந்த கிணறுகள், பிப்ரவரி- மார்ச் மாதங்களில் வறண்டு போவது இயல்பானதாகும்.  சுமார் 10 வீடுகளில் போர் தோன்டியுள்ளனர்.

மலையின் பெரும்பகுதி பாறைகள். மேல்மண் சரியாக இல்லாத  நிலங்களில், பயிர் கருகிவிடுதல் மிக விரைவில் நடக்கிறது.  இங்குள்ள விவசாயிகள் தம் வயல்களிலேயே, கொக்கரணி என்னும் சிறு குட்டையை வைத்துள்ளனர்.  அந்த குட்டையானது,  ஒன்று அல்லது இரண்டு, பயிரைப் பாதுகாக்ககூடிய, பாசனத்திற்கு வழிவகுக்கிறது.  யார் யார் கொக்கரணி வைத்துள்ளார்களோ, அவர்கள் வாடகைக்கு பம்ப் செட்டை எடுத்து, ஒன்று அல்லது இரண்டு பாசனம் அளித்து, பயிரைப் பாதுகாக்கின்றனர்.

பாரம்பரிய நீர் அமைப்பு

கொக்கரணி, என்பது பண்னை குட்டை அல்லது நீரை சேமிக்கும்  குட்டையாகும்.  இது குளத்தைவிட சிறியதாகவும்,  கிணற்றைவிட  பெரியதாகவும் இருக்கும். இதன் செயல்பாட்டில், இது தலகுளத்திற்கு ஒத்ததாகும்.  வயதான, ஜப்பர் என்னும் விவசாயி, கூறுகையில், அவருடைய மூதாதையர்கள், இதுபோல் டஜனுக்கும் மேற்பட்ட கொக்கரணிகளை, உயரமான பகுதிகளில் அமைத்து இருந்தனர்.  இந்த அமைப்புகள், மலபுழா அணைக்கட்டு, கட்டுவதற்கு முன்னரே, அவரின் முன்னோர்களால் அமைக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

கோடைக் காலங்களிலும், இவைகள் வற்றாது.  பிப்ரவரி-மார்ச் மாதத்தில், இரண்டாவது பயிர் அறுவடைக்கு பின்னர், இவைகள் குளிப்பதற்கு பயன்படுத்தப்படும்.  வயல்நிலங்களில் ஈரப்பதத்தை காக்கவும் இவை உதவும். குடும்பங்கள் பிரிவினைக்கு உள்ளாகும்போது, நிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்பொழுது சாகுபடிக்கு நிலத் தேவை மற்றும் மரவல்லி கிழங்கு சாகுபடி போன்றவைகளால் இப்படிப்பட்ட நீர் அமைப்பு குறையத்தொடங்கியது. இக்குட்டைகள் தூர் அடைந்து, இப்பொழுது இப்படிப்பட்ட அமைப்புகள் இருந்ததற்கான தடையங்களும் கிடைப்பது அரிது.

பத்து வருடங்களுக்கு முன், வறட்சி அதிகமான சூழ்நிலையில், இங்குள்ள விவசாய சமுதாயம், தங்களுடைய கொக்கரணியை நினைவுகூர்ந்தனர். ஒரு டஜன் விவசாயிகள், தங்கள் நிலத்தில் பொக்கலையன் கொண்டு கொக்கரணி தோண்ட தொடங்கினர். ஜப்பரே, இரண்டு தோண்டியுள்ளார்.  ஒன்றுக்கு,  செலவானது.  இங்குள்ள மண், அதிக பொலப்பொலப்புடன் இருப்பதால், வருடா வருடம் இவை குட்டையை நிரப்பி விடுகிறது. அதனால், கல்வைத்து பக்கவாட்டில் கட்டினால் 10 வருடம் உழைக்கும்.  ஆனால், இதற்கு செலவு அதிகமாகும் என்று ஜப்பர் கூறிகிறார். 3-4 விவசாயிகள், கல்லினால் கட்டியுள்ளார்கள். கல்லுக்கு பதில், வெட்டிவேரை நட்டால்,  செலவு கம்மியாகும், அரிமானத்தையும் தடுக்கும்.

எங்கெல்லாம், மலபுழா நீர் வரவில்லையோ, அங்கெல்லாம் கொக்கரணி உள்ளது. எரிமையூர் பஞ்சாயத்தின், குலிசேரியா கிராமத்திலும் கொக்கரணி காணப்படுகிறது. இதேபோல், கூத்தனூர் பஞ்சாயத்தின் மருதம்தடம் கிராமத்திலும் அதிக கொக்கரணிகள் உண்டு.

கொக்கரணியின் மூலம் உட்கசிவு ஏற்படுவதால், மேல்நிலை மண்ணின் ஈரம் மற்றும் நிலத்தடி நீரை மேம்பட செய்கிறது.  இவைகளை, உயர்மட்ட நீர்பிடிப்பு பகுதியில் அமைத்தல் மிகுந்த பயனை அளிக்கும்.  இதைப்போன்று, அமைப்புகள் கர்நாடக மாநிலத்தின் கொடகு மாவட்டத்திலும், வயல்களில் காணப்படுகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதி, பாறையாக இருப்பின், இந்த அமைப்புகளை மேல்பகுதியில் அமைத்தால், அவை மூலம் நீர் கசிவதால் கீழ் உள்ள வயல்களுக்கு பயனளிக்கும்.  எல்லா விவசாயிகளும், இதைப்போன்ற அமைப்பை தோண்டினால், இரண்டாவது நெல் பயிரை அறுவடைச்செய்த பின்னர், கொள்ளு  மற்றும் உளுந்து போன்ற பயறு வகைகளை விதைக்க முடியும்.

5% மாதிரி

பீகாரின், அரசு சாரா நிறுவனம் பிராதான், இதே போல் ஒரு அமைப்பை பிரபலபடுத்தியுள்ளது.  இதன்பெயர் 5% மாதிரி. இந்த திட்டத்தைப்பற்றி, தினபந்து கர்மாகர், பிராதான் திட்ட இயக்குனர் கூறுகையில், முதலில் இந்த திட்டமானது, பூருளீயா மாவட்டத்தில், செப்டம்பர் மாதத்தில் நிலவும் ஹாத்தியா என்னும் வறட்சியை, நெல் பயிர் தாக்குபிடிக்க, தொடங்கப்பட்டது.  இந்த 5% மாதிரி திட்டத்தின் முக்கிய நோக்கமானது, ஒவ்வொரு வயலும், இப்படிப்பட்ட, நீர் பிடிப்பு அமைப்பை வைத்திருக்க வேண்டும்.  இவை, பயிரின் தாவர வளர்ச்சி பருவத்தில், நிலத்திலிருந்து வழிந்தோடும் மழை நீரை, வீணடிக்காமல், நிலத்திலேயே சேமித்து வைக்க உதவுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் நீர், வறட்சி காலத்தில் உபயோகப்படுதப்படும்.  மேலும் குட்டையிலிருந்து, நீர் கசிவால், கீழ் உள்ள நிலங்களுக்கும் உதவும்.

கேரள படையெட்டி கிராமத்தில், பாரம்பரிய 120 நாள் நெல் பயரை, இரண்டாவது பயிராக சாகுபடி செய்கிறார்கள்.  இதற்கு பதில், குறுகிய கால நெல்லையோ அல்லது செம்மைநெல் சாகுபடி முறையையோ பின்பற்றினால், வறட்சியிலிருந்து தாக்குபிடிக்க முடியும்.  இப்பகுதியில், தனல் ஏற்கனவே, செம்மைநெல் சாகுபடி முறையை குத்தகை நிலத்தில், வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியுள்ளனர்.

இப்பொழுது சில விழிப்புணர்வு கருத்தரங்குகளுக்கு பின் பல விவசாயிகள் கொக்கரணி தோண்டுவது மற்றும் பல வறட்சி மேளாண்மை யுக்திகளை கையாள தொடங்கியுள்ளார்.  தனலின், உஷா, 50% விவசாயிகள் 100% இயற்கை விவசாயத்தை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளனர் என்று கூறுகிறார். கிட்டத்தட்ட 12 வீடுகள் இரசாயன உரம் இடாமல், வீட்டு காய்கறி தோட்டம் மூலம் காய்கறி சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர். மெதுவாக, ஆனால் தடுமாற்றம் இல்லாமல் படையெட்டி கிராமம், இரண்டாவது சுதந்திரத்தை நோக்கி செல்கிறது.  பாலகாட்டின் நெல்வயலுக்கு, படையெட்டி, பல புதிய பாடங்களை வறட்சி மேளாண்மையில், விவசாய சமுதாயத்திற்கு அளிக்கலாம்.  எப்படி இருப்பினும், இந்த பாடங்களில் பல நம் பாரம்பரிய நுட்பங்களை புதுப்பித்தலே ஆகும்.

மூலம்: ஸ்ரீ பந்ரே, வாட்டர் ஜர்னலிஸ்ட், வாணிநகர், கேரளா, 671 552

தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகித்து நாற்றங்கால் தயாரித்தல்

- திரு. சஞ்சய் பயேல்,ஜவகர் தல், தானே

 1. காலியான தேவையற்ற 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டிலை, நீள் வாட்டத்தில் வெட்டி, நெல் நாற்றை வளர்பதற்கு உபயோகப்படுத்தலாம்.
 2. பாட்டிலின் இந்த பாதி பகுதியை, வண்டல் மண், மண்புழு உரம் மற்றும் நெல் உமியை 3:2:1 விகித கலவையை கொண்டு நிரப்ப வேண்டும்.  தோராயமாக, ஒரு பாதி பாட்டிலுக்கு, 300 கிராம் கலவை தேவைப்படும்.
 3. அமிர்தபாணி/பிஜாம்ரூத்துடன் (இயற்கை உரங்கள்) நேர்த்தி செய்யப்பட்ட விதையை இந்த பாட்டிலில் உள்ள படுக்கையில் விதைக்க வேண்டும்.  ஒவ்வொரு படுக்கையிலும், 10 கிராம் விதையை விதைக்க வேண்டும்.
 4. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, நீர் ஊற்றி விதை படுக்கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும்.
 5. நாற்றுகள், பத்து தினங்களில், நடுவதற்கு தயாராகிவிடும். ஒரு ஹெக்கடரில் நடுவதற்கு, பின்வருபவை தேவையானவை;

- காலிபாட்டில் எண்ணிக்கை
(பாதியாக வெட்டப்பட்டவை)  -  625
- விதை                     -   6.3 கிலோ
- வண்டல் மண்             -  93.8 கிலோ
- மண்புழுஉரம்              -  62.5 கிலோ
- சாம்பல்                   -   31 கிலோ
- தயாராகும் நாற்றுகள்      -  2,00,000

இந்த முறையை, நகரத்தின் அருகாமையில் உள்ள கிராமங்களில் இடம் மற்றும் வேலையாட்கள் நெருக்கடியான தருணத்தில் உபயோகிக்கலாம்.

மூலம்
இயற்கை சாகுபடி முறைகள்,
தொழில்நுட்ப கூட்டுறவு திட்டம்,FAO, நியுடெல்லி மற்றும் NCOF  , காசியாபாத்.
தயாரித்தது
மகாராஷ்டிர இயற்கை விவசாய குழு (MOFF)

2.96
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top